• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320
"என்ன அக்கறை ரொம்பத் தான் வருது! எப்பத்துலருந்து?" வார்த்தையை விட்டவள் சுதாரித்து,

"ம்ம்ப்ச் அது எங்களுக்குள்ள இருக்க விஷயம்! அது எதுக்கு உங்களுக்கு! எதுக்குத் தேவை இல்லாத பேச்சு! ஏதோ விசாரிக்கணும் சொன்னீங்கள்ல? என்ன கேக்கணும்? அதை மட்டும் கேளுங்க" என்றாள்.

அவளது எள்ளல் பார்வையிலும் எடுத்தெரிந்த பேச்சிலும் கவனம் சிதறி முற் பாதி அப்படியே புதையுண்டது.

'எது டி உங்களுக்குள்ள? என்ன உங்களுக்குள்ள? சொல்லு டி '

கழுத்தை நெரித்துக் கொல்லும் வேகம் அவனிடம். என்ன உரிமையில் கேட்பாய்? அரற்றிய உள்ளம் அமைதி படுத்தியது.

"ஆஹான்! அவுனா? என்றவன், அதோடுமா விட்டான்?

அவர்கள் இருவரை நோக்கியும் விரல் நீட்டி காட்டி "ரெண்டு பேருக்கும் சம்பந்தம் லேதா?" நிறுத்தி நிதானமாகக் கேட்டே விட்டான்.

துணையாக, அவன் கண்கள் அவள் கழுத்தை தொட்டு மெதுவாக ஊர்வலம் போனதில்,

உணர்ந்தவளின் உடல் சிலிர்ப்பதற்குப் பதில், நொடியில் விறைத்துப் போனது. படப் படவென அடித்துக் கொள்ள வேண்டிய மனது, மரத்து போய் அமைதியாகவே இருந்தது.

வாழ்வே பாரமாகி போனவளுக்கு இந்த உணர்வெல்லாம் எங்கிருந்து உயிர் பெறும். மறித்துத் தான் போயிருந்தது.

அவள் நிலையில் வேறொருத்தி இருந்தால் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். அப்படி ஒன்றும் சந்தோஷமான வாழ்வில்லை. ஆனால் முடிந்த வரை நிம்மதியாக இருந்தாள்.

உதவப் போய் அடுக்கடுக்காக ஒருத்திக்குச் சோதனை வருமா? அவளுக்கு அப்படித் தான் வந்தது.

கிடைப்பதற்கரிது நினைத்த உறவு, கை பற்றி உடனே உதறி போனதே அதை நினைத்து அழுவாளா!

கூடவேயிருந்த உறவை பறிகொடுத்து, உயிரோடு இருக்கிறானா? தெரியாமல் நிற்கிறாளே அதற்கு அழுவாளா!

அது மட்டுமா! எல்லாவற்றிற்கும் முடிவாய் பேரிடி அல்லவா தலையில் ஒன்று விழுந்ததே எவ்வளவு அசிங்கம்.

எல்லாவற்றையும் ஒதுக்கி, இப்போது ஓரளவேணும் உயிர்ப்பு அவளிடம் ஒட்டிக்கொண்டுள்ளதென்றால், அது நிகேதனால் என்றால் மிகையில்லை.

அறிவானா இவன்! ஏற்கனவே கேவல பிறவியாய் பார்ப்பவன் அறிந்த பின் புழுவிற்கும் கீழாய் என்னைப் பார்ப்பானே! தாங்கி கொள்ள முடியுமா என்னால்? புதிதாக எதையும் புதுப்பிக்கும் ஆசையில்லை! வெறுமையான பார்வையால் அவனைத் தொட்டு மீண்டவள் வேறு பக்கம் பார்த்தாள்.

அணிந்திருப்பவளுக்கு அந்நிலை என்றால், அணிவித்தவனுக்கு வேறு நிலை. கொந்தளித்த உணர்வை அடக்கக் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

'ஏன்? டி எந்துக்கு டி என்கிட்டே வரலே நீ? ஏண்டி என்னைத் தள்ளி வெச்சு போனே? என்ன டி தப்பு பண்ணேன்?' அவளைப் பற்றி உலுக்கி போட்டுவிடும் ஆவேசம் அவனுள்.

அவ்வளவு சீக்கிரம் அடங்குவேனாவெனக் கொதித்தது உள்ளே.
கட்டினவளை பற்றி ஒன்றும் தெரியவில்லை! வாயை திறக்க வேண்டியவளும் மௌனியாக இருக்கிறாள்! எவ்வளவு வெட்க கேடானா விஷயம்! பொறுத்து பொறுத்து பார்த்தவன், பொறுக்க முடியாமல் அவள் முன் வந்தவன்,

"சரி அது போவட்டும், உனக்கும் செத்து போன ஸ்ரீபிரசாத் க்கும் என்ன சம்பந்தம் செப்பு"

"நீ எப்டி இங்க வந்தே? இங்க உன்ன சுத்தி என்ன நடக்குது?"

குடைந்து கொண்டிருந்ததைத் தெளிவாக்கி கொள்ள நினைத்து கேட்க, அவள் விட்டால் தானே.

விடுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள் சரியாய் குறிப்பை பிடித்திருந்தாள்.

"உங்க கற்பனைக்கு நான் ஆளில்லை! நிக்கி எழுந்தா தேடுவான்! நான் போகணும்" விலகப் பார்த்தாள் ஜதி,
தணிந்திருந்த தணலுக்கு எண்ணெய் வார்த்து.

"கற்பனை யா? எது கற்பனை? உனக்குச் சம்பந்தம் இல்லாமலா மேரேஜ் அனோன்ஸ் பண்ணினான் அவன் "

"அது நீங்க சொன்னவங்கள தான் கேக்கணும்! என்னை இல்ல!"

"என்ன டி நக்கலா? பல் ல பேத்துருவேன்" அவன் ஒரு எட்டு முன் நெருங்கி வந்தான்,
அனல் தாங்கிய மூச்சு காற்று அவள் மேல் படும் அளவு. தாங்குவாளா பெண்?

"ம்ம்ப்ச் கேஸ் பத்தி பேசணும்னு சொன்னீங்க! இப்ப என்னென்னவோ பேசுறீங்க! இது தான் உங்க விசாரணை னா சாரி! ப்ளீஸ்! எனக்கு வேலை இருக்கு"
நகரப் போனவளை கை வைத்துத் தடுத்தான்.

"கேஸுக்குச் சம்பந்தம் இருக்கா! இல்லையா! உனக்கு அனாவசியம்! கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்" உயர் அதிகாரியாய் அவன் நிமிர,

சலித்து வந்தது. பின் ஒரு முடிவுக்கு வந்தவள், சற்று நிதானித்துப் பேசி இருக்கலாம்! அவள் பதிலில், தன் நிதானத்தை இழந்து, அவன் பேச போவதில் காயப்படப் போகிறாள் அறியாமலே,

"உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை. மீறி விசாரிக்கணும்னா லேடி போலீஸோட வந்து விசாரிங்க. பதில் சொல்றேன்."

அவள் அவனை விட்டு நகர்ந்து போவதிலே குறியாய் இருந்தாள். கண்களில் விரவியிருந்த ஆத்திரம், ஆவேசமாக உரு மாறியிருந்தது.

"கிரிமினல் டி நுவ்வு! எவ்வளவு தைரியமா என்கிட்டயே சட்டம் பேசுற? நான் நினச்சா, எங்க வேணாலும் உன்னைக் கூட்டிட்டு போய் விசாரிக்க முடியும் தெரியுமில்லே "
கேட்ட உடன் அப்படியொரு நிமிர்வு அவளிடம்,

"உங்களால சுண்டு விரல் கூட என் முன்ன அசைக்க முடியாது. நான் எந்தத் தப்பும் செய்யலை. எதுக்குப் பயப்படணும். ஒன்னு மரியாதையா கேஸ் சம்பந்தமா பேசவேன்னா பேசுங்க. இல்லைனா நீங்க போகலாம்"

"அப்புடு, சொல்ல மாட்டே"

'மாட்டேன்' எனத் தலையை மட்டுமே இட வலமாக அசைத்தவள் அவனைக் கடந்து நடக்க,

"ஏன் சம்பளக்காரன் பத்தலே, அதனால ஒரு புள்ளைக்கு அப்பன் ன்னாலும் பரவால்லன்னு வசதியா இருக்கவனைப் புடிச்சிட்டேன் ன்னு, செய்யும் போது கூசாதது என்கிட்ட சொல்ல வரும் போது கூசுதோ"

இப்படியொரு வார்த்தை கங்குகளை அள்ளி வீசுவானெனச் சற்றும் எதிர்பார்த்தாளில்லை போல. துடி துடித்துப் போனாள் ஜதி. அவளையும் மீறி கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. வலுவெல்லாம் வடிந்தது போல் ஆகி விட, அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அப்படியே தடுமாறப் போனவவளை,

"ம்மீ.. எங்க போன ம்மீ.. எழுந்தா உன்ன தேடுவேன் தெரியும் ல" இவ்வளவு நாட்கள் எந்தக் குரல் அவளை இறுக்கி பிடித்ததோ அதே குரல் இப்போதும்.

திறந்த கதவை பிடித்தபடி, கவனம் மொத்தத்தையும் ஜதி மேல் மட்டுமே வைத்தபடி நின்றிருந்த நிகேதன் மேல் பார்வை படிய,

சட்டெனத் திரும்பி கண்ணைத் துடைத்து கொண்டாள். தெரிந்தால் பிள்ளையும் அழுவானே! லேசாக முகம் சுணங்கினாலும் நாடி பிடித்துக் கேட்கும் பிள்ளை. கொள்ளை பாசம் இவள் மேல்.

'இதெல்லாம் நினைத்தது தானே, இவனிடம் வேறு என்ன எதிர்பார்த்திருந்தாய் நீ'

மனம் கடிய கண்ணீரோடு அவனையும் துடைத்து போட்டவளின் முகத்தில் இவ்வளவு நேரம் இருந்த சோர்வென்ன? இப்பொது அதிலிருக்கும் தெளிவென்ன? நினைக்குமளவு சட்டென ஒரு மாற்றம். முகத்தில் ஒரு பளிச்சிடல்.

அதே நேரம் "ஜதி என்னடா" என ஓடி வந்திருந்தான் ப்ரியேஷ்.

தெளிவாக இன்னதென வார்த்தைகள் கேட்கவில்லை என்றாலும், புகழிடம் வெளிப்பட்ட பாவனைகள் ஏதோ பிரச்சனை எனப் புரிய வைத்திருந்தது ப்ரியேஷிற்கு.

இருக்கவும் முடியாமல், அங்கே செல்லவும் முடியாமல், கஸ்தூரிக்குப் பதில் சொல்லவும் முடியாமல், திணறியது அவன் மட்டுமல்லவா அறிந்த விடயம்.

"என்ன ப்ரியேஷ்! எல்லாம் புதுசா இருக்கு. அவளுக்குச் சப்போர்ட்டா என்கிட்டயே பேசுற! என்ன நடக்குது இங்க"

"பிரசாத் அவ பின்னாடி சுத்தி என்ன ஆனான் பார்த்தல்ல, அவ்வளவு தான் சொல்லுவேன் உனக்கு" எச்சரித்து விட்டு அகன்றிருந்தாலும் அவனால் அப்படி விட்டுவிட்டு இருக்க முடியாது.

ஏதோ ஒரு பாசம்! இன்னதெனப் பெயரிடப்படா அன்பு! அவள் மீது பார்த்ததிலிருந்தே. பெரிதாகக் காட்டி கொள்ள மாட்டானென்றாலும், நான் இருக்கிறேன் என உணர்த்தி விடுவான். கஸ்தூரி முன்பை விட ஓரளவு அடக்கி வாசிக்கிறார் என்றால் அவனால் தான்.

தள்ளி நின்று இருவர் மேல் கவனம் வைத்தவன், ஜதி எங்கே விழுந்து விடப் போகிறாளோ உணர்ந்த நொடி, இதோ ஓடி வந்துவிட, ஜதி தான் கண்டு கொண்டாளில்லை. அவ்வளவு ஏன் அப்படி ஒருவன் இருப்பதைக் கூட உணரவில்லை எனலாம். இப்பொது மட்டுமல்ல எப்போதும் அப்படித் தான்.

"ம்மீ குக் பண்ண வேண்டாமா? அப்றம் நிக்கி எப்டி புவா சாப்பிடுவானாம்?" புன்னகை முகமாக நிக்கியை நெருங்கிவள் பிள்ளையைத் தூக்கி கொள்ள, அறிவாளி பிள்ளை அவனின் "ம்மீ " யை கண்டு கொண்டான்.

"க்ரய் பண்ணியா ம்மீ, கண்ணு ரெட்டிஷா இருக்கு. என்னாச்சு ம்மீ" வாஞ்சையோடு கேட்க, பதிலேதும் சொல்லாமல் பிள்ளையை அணைத்து உச்சி முகர்ந்தாள்.

"சொல்லு ம்மீ, க்ரய் பண்ணியா, அத்த திட்டுச்சா? அப்பாட்ட சொல்லலாமா?" கோலி குண்டு கண்களை உருட்டி, எள்ளு பூ நாசி விடைக்க, மழலை மொழி பேசும் குரலில் தான் எவ்வளவு கோவம்.

"இல்லையே! நிக்கியோட ம்மீ எதுக்கு அழணும். குக் பண்ண ஆனியன் கட் பண்ணனா, கண்ல பட்டுருச்சு! அதான் வேற ஒண்ணுமில்ல டா கண்ணா"

அவள் சமாதானம் குழந்தைக்குப் போதவில்லை போல!

"இல்லையே நேத்தும் தானே பண்ணினே! ஆனா வரலையே! இரு திங்க் பண்றேன்" மோட்டு வாயை தட்டி தட்டி யோசித்துப் பேசும் பிள்ளையைக் கொஞ்சாமல் எப்படி இருக்க முடியும்?

"அச்சோ என் அறிவு கொழுந்தே" நெற்றி முட்டியவள் "சமத்து குட்டி, வர வர பிக் பாய் ஆகாறாங்களே" எனக் கொஞ்சி கன்னத்தைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டதில், அனைத்தும் மறந்து போய், வெட்கம் வந்து ஒட்டி கொள்ளக் களுக்கென்று சிரித்தான் நிகேதன்.

ரசித்துக் கிடந்தவள் "சரி சாப்பிட போலாமா? இன்னைக்கு உங்களுக்குப் பிடிச்ச லன்ச்! ம்மீ யும் உங்களோட சாப்பிட போறேனாம்! ரூம்க்குள்ளே சாப்பிடலாமா"

"பசிக்கலையே " சொப்பு இதழை பிதுக்கினான் பிஞ்சு. கை வலித்ததில் வாகாக இடுப்பில் அமர வைத்து க்கொண்டவள்,

"அச்சோ! நிக்கி க்கு பசிக்கலையா? அப்றம் வயிறு சத்தம் போடும். பசிச்சா நிக்கி குட்டி அழுவானே! அப்றம் ம்மீ க்கும் அழுகை வருமே! ம்மீ அழுதா நிக்கிக்கு பரவாயில்லையா?

மூக்கொடு மூக்குரசி, மழலையோடு மழலை பேசி, அவன் நாடி பிடிக்க,

"நோ.. நோ.. நிக்கி நோ க்ரய்யிங்! ம்மீயும் நோ க்ரய்யிங்! அவளின் கழுத்தை சுற்றி கையைப் போட்டுக் கெட்டியாகப் பிடித்துப் பதறிப் போனான் அவளின் நிக்கி.

"அப்ப நிக்கி லஞ் சாப்பிட அடம் பண்ண மாட்டானா?"

"ம்ம்ஹும் நிக்கி குட் பாய்! யூநோ" தோளில் இருந்து முகத்தை நிமிர்த்திப் பதில் சொல்ல,

"ஹோ அப்டியா" புன்னகைத்தாள் ஜதி.

"ம்ம்.. யூ டோன்ட் நோ வா" கண்ணை உருட்டி சொன்ன மகனின் அழகில் சொக்கி தான் போனாள் அவனின் ம்மீ.

அன்பின் நீருற்று அங்கே பொங்கி வழிந்தது. இருவருக்குமான உலகத்தில் இருவர் மட்டும். அதற்குப் பின் புகழ் என்ற ஒருவனோ, ப்ரியேஷ் என்கிற ஒருவனோ, அங்கில்லை என்பது போல் தான் இருந்தது அவர்கள் பேச்சும் சிரிப்பும்,

"உள்ள போலாமா" என்றவள் அவனோடு நகரப் போக,

"ஏன் ம்மீ போலீஸ் வந்திருக்காங்க? மார்னிங் இருந்தாங்க? இப்பவும் இருக்காங்க?" புகழை நோக்கி கை நீட்டியப்படி கேட்க, அப்போது கூட அவனைத் திரும்பி பார்த்தாளில்லை.

"ம்ம் வேற வேலை இல்லையாம்! அதான் இங்கேயே இருக்காங்க"

"ஓஹ் அதுக்குத் தான் டாடிய பார்க்க வந்திருக்காங்களா"

"நிக்கி ஸ்மார்ட் பாய்! புரிஞ்சிகிட்டானே" கொஞ்சமும் சலிக்காது அவன் ஈடுக்குப் பதில் சொன்னவாறே ஜதி உள்ளே சென்று விட,

நொடியில் புரிய வைத்து விட்டாள் அவன் யாராகவும் அவள் மனதில் இல்லை என.
அவள் மேல் அப்படியொரு கோபம் ஏறியது. அவளிடம் இறக்கி வைக்க வழி இல்லையே!

"மறுக்கோ பட்டு என் விசாரணைக்கு நடுவுல வந்த, உன்ன விசாரிக்கிற விதமே வேற மாதிரி இருக்கும் ப்ரியேஷ்"

அருகில் நெருங்கினவன் அவன் கன்னத்தைத் தட்டி மிரட்டினதோடு அல்லாமல்

"அப்றம் பெரிய இடத்து பிள்ளைன்னு பார்க்க மாட்டேன் அவசியம் வர வெச்சிடாத" விரல் நீட்டி எச்சரித்துக் கோபத்தைக் காட்டிவிட்டுச் சென்றிருந்தான்.

காணொளி முடிந்தது.
புகழின் குழப்பம் ஆரம்பித்தது. ஏன் அப்படிச் சொன்னாள்? அவள் மீது எனக்கு அக்கறை இல்லையா? அக்கறை இல்லாமலா கண்ணுக்குள் வைத்துப் பார்த்தேன் அவளை? உணரவே இல்லையா? அல்லது நான் உணர்த்த தவறினேனா?

அப்போதே கவனிக்காது விட்டது அவன் மேலே கோபமாய்த் திரும்பியது.

'ச்சே மிஸ் ஆயிப்போயிந்தே' மண்ணைக் கால்களால் எத்தினான். எண்ணங்கள் ஒரு பக்கம் கொன்று தின்ன, அதை விட அவளது இந்தப் பாவனை அவனைக் குடைந்தது.

அவனுக்குத் தெரியும்! ஒரு பெண்ணாகத் தன் வார்த்தையின் வீரியம் அவளை எத்தகையதாகத் தாக்கி இருக்கும் என.

பேசின பிறகே உணர்ந்தான். இத்தனை நாள் நிராகரிப்பின் கோபத்தை, கொட்டி கவிழ்த்து விட்டான் என.

அவனுக்கே பிடிக்கவில்லை அவனை. மிகுந்த அவமானமாக உணர்ந்தான். உரைத்தவனையே அதன் தாக்கம் அவ்வளவு குறுக வைக்க, எவ்வளவு விரைவில் தன்னை மீட்டிருந்தாள். வியந்து போனான்.

அவளிடம் என்ன எதிர்பார்க்கிறான்? கண்ணீரையா?
கதறலையா அல்லது கோபத்தையா?

ஒன்றையுமே வெளிப்படுத்தவில்லையே! ஏன்?
ஏதோ ஒரு உணர்வை வெளிப்படுத்தி இருந்தால் இவனுக்கு ஆறி இருக்குமோ?

இவன் மட்டுமா காயப்படுத்தினான். கஸ்தூரியின் பேச்சுகள் அதை விட ஒவ்வொன்றும் விஷம் தோய்ந்த வார்த்தைகள் ஆகிற்றே. ஒன்றுமே இல்லாதது போல் கடந்தாளே.

அவனுக்கே துளி உவப்பை தரவில்லை. அவன் அறிந்த ஜதி இதையெல்லாம் பொறுப்பவள் இல்லை. எதிரொலி உடனுக்குடன் கொடுப்பவள். மிகுந்த தன்மானம் பார்ப்பவள். அவனிடமே அதற்காக மல்லுக்கு நின்று சண்டை பிடித்திருக்கிறாள்.

அப்படிப் பட்டவளை இப்படியொரு சூழ்நிலையில் சந்திப்பான் என நினைத்து பார்க்கவே இல்லை. இப்படி ஒரு சூழலை தாங்கி ஏன் இருக்கிறாள்?அவசியம் என்ன? குடைந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடிப்பனா?

விசாரித்த வரையில் குற்றம் சொல்லி எல்லாப் பாதையும் இவளை நோக்கி நீள்கிறதே அதைச் சரி செய்வானா?

போலீஸ் காரனாகச் சாதகப் பாதகங்கள் அலசி ஆராய்ந்தான். இது வரை டவுட் ஸோனில் தான் இருக்கிறாள். நிம்மதி பெரு மூச்சு அவனிடம். நிலைக்காதென்று தெரியும். சாட்சி கிடைக்கும் வரை தான். கிடைக்காமலும் போகலாம்.

இங்கே ஒருவன் ஜதியை நினைத்து மண்டையைப் பிய்த்துக் கொள்ள, இன்னும் பிடுங்கி கொள்ளவெனவே இளந்தீபன் அழைத்திருந்தான்.


வான் பூக்கும்..



சோரி வெரி சோரி மக்களே
இத்தன நாள் ud குடுக்காம தள்ளி போட்டதுக்கு அத்யாவஷியமான சில காரியங்கள் வந்துடுச்சு மாறி வெக்கான் பட்டில்லா ud தள்ளி போடாமே தரா நான் டிரை செய்றேன்

மக்கள் அனைவருக்கும் wish u all very happy new year
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,926
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️
எந்தா writer சோரி பரயினது நிங்களுக்கும் பர்சனல் ஜோலி உண்டல்லோ,
சும்மா try பன்னினேன் சகி 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
413
ஸிஸ்.. நெக்ஸ்ட் எபி எப்போ போடுவீங்க
 
Top