• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320
வினோதினி காதலிக்கிறேன் என நெருங்கி வரும் போதெல்லாம், விலகி சென்று நல்லவனாகத் தன்னைக் காட்ட சொன்னது.

அவளைச் சீண்டி காதல் சொல்ல வைத்து, அவளது தந்தையையும் மீறி வீட்டை விட்டு வர வைக்கச் செய்தது.

" உங்க பேர், மரியாதை, கவுரவம் முன்ன என் காதல் ஒன்னும் இல்லைங்க சர். உங்க பொண்ண உங்ககிட்டே ஒப்படைக்கிறேன். இன்னும் அவ உங்க பொண்ணா மட்டும் தான் இருக்கா. அவளை மன்னிச்சு ஏத்துக்கோங்க சர் ஏதோ என் மேல இருக்க லவ் ல உங்களை மீறிட்டா மன்னிச்சிடுங்க சர்"

வினோதினி தந்தையிடமே நேரில் சென்று பேசி அவர் நன்மதிப்பையும் பெற வைத்தது.

"உன்னை விட நல்லவனை நான் எங்கன்னு தேடிப்பா கட்டி வெப்பேன். உன்னைக் கட்டிக்கப் போற என் பொண்ணு ரொம்ப லக்கி"

அவர் வாயாலே அவள் கரம் பிடிக்கச் சொல்லி சொல்ல வைத்து என, இருக்கும் அத்தனை ததுங்கிணத்தோம் வேலைகளையும் பார்க்க சொன்னது.

இப்பொது அனைத்தும் கலைந்து போனதில், வேஷம் வெளுத்துப் போனதில், வினோதினி என்ன முடிவை எடுப்பாள், யோசிக்கவே முடியவில்லை அவனால்.

அங்கேயே இவன் சட்டையைப் பிடித்து, கேள்வி கேட்டு, கோவத்தில் நான்கு அடிகள் அடித்திருந்தாலோ, அல்லது இவனைப் பார்த்த பின் காரை நிறுத்தி இருந்தாலோ, இந்தக் குழப்பத்திற்கு இடமிருந்திருக்காது.

ஆனால்? அவள் நிற்காமல், இவன் வேகத்தைக் கூட்டுவதற்குச் சற்றும் சளைக்காமல் அவளும் வாகனத்தின் வேகத்தைக் கூட்டுகிறாளே? தன்னைத் தவிர்க்கறாள் என்று புரிகிறது. அது வாழ்க்கை முழுக்குமா என்பது தான் கேள்வி.

கிட்டத்தட்ட பத்து நிமிடமாக நெருங்க முயன்று, தோற்று என அந்தச் சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்குச் செல்லும் ஹை வேயிலிருந்து, விலகி போகும் கிளை சாலையை மைதானமாக்கி, ஒரு சின்னக் கார் பந்தயமே நடந்துகொண்டிருந்தது அவர்களுக்குள்.

மேடும் பள்ளமுமாக இருக்கும் இந்தச் சாலையிலேயே இந்த ஆட்டம் காட்டுகிறாள். இன்னும் ஐந்து நிமிடம் இதே வேகத்தில் சென்றால் முதன்மை சாலை வந்து விடும். அதற்குள் அவளைப் பிடித்து விட வேண்டுமென்று அவன் க்ரூசரை டாப் கியரில் செலுத்தவும் வாகனம் குழந்தை பார்வைக்குச் சிக்கியது.

அவ்வளவே தான், துள்ளி குதித்து
"டாடா.. டாடா" என அழைத்துக் குதூகளித்தான் நிகேதன்.

தகப்பன் வெளியே போய்விட்டு வரும் போதெல்லாம், தன்னை அமர்த்தி, அழைத்துச் சென்று மகிழ்விக்க வைக்கும் அந்தக் காரை, பிள்ளைக்கு அடையாளம் தெரியாமல் போய் விடுமா என்ன?

"பிள்ளையை வெச்சிக்கிட்டு எவ்வளவு வேகமா ஓட்டுறா திமிர் பிடிச்சவ. இவள யார் இங்க வர சொன்னது"

ஆத்திரம் வர கார் கண்ணாடியை இறக்கி வண்டியை நிறுத்துமாறு கை காட்டினான். கவனித்தவள் அதற்கெல்லாம் அசருபவளா? முறைத்துவிட்டு நிற்காமல் செலுத்தினாள்.

"இவள" முறைத்தவன் பற்களை நற நறத்த
ஸ்ரீபிரசாத்தும் அவளுக்குச் சற்றும் சளைத்தவனில்லையே?

வேகத்தைக் கட்டுப்படுத்தி, பின் தங்கி, அவள் இருக்கை பக்கமாகக் காரை கொண்டு வந்திருந்தான் நிமிடத்தில். தகப்பன் கண்ணாமூச்சி விளையாடுகிறானோவென நினைத்து விட்டான் நிகேதன்.

"டாடா.. மம்மா.. டாடா.. டாடா.."

பிள்ளைக்கு இன்னும் கொண்டாட்டமாகப் போய் விட்டது. வினோதினியிடம் கொழுந்து கரத்தை நீட்டி, தகப்பனை காட்டி, இரு கைகளால் கை தட்டி முன் பல் இரண்டு தெரிய சிரித்தான்.

ஸ்ரீபிரசாத்தும், போதாததற்குக் கண்ணாடியை இறக்கி விட்டுக் கை காட்டி, மகனை இங்கு வருமாறு ஆசை காட்டி விட, நிகேதனுக்கு அதொன்றே போதுமாய் இருந்தது.

அது வரை சமத்து குட்டியாய் அமர்ந்த படியே சந்தோஷித்தவனுக்கு,
தகப்பனிடம் தாவ தோன்றி விட, இங்கிருந்தே தூக்குமாறு கைகளை நீட்டிக்கொண்டு, காலை உதைத்துக்கொண்டு, குரலை உயர்த்தி, கத்தி கூச்சலிட்டு சீட்டிலிருந்து இறங்க திமிற ஆரம்பித்தான்.

"நிக்கி என்ன செய்ற, ஸ்டே தேர் விழுந்திட போற " பெற்றவள் கத்தியதெல்லாம் பிஞ்சின் காதில் விழவே இல்லை.

"ஓஹ் காட்" ஒற்றைக் கையால் வினோதினி அவனைப் பிடித்தும் அடக்கியுமென எவ்வளவு நேரம் சமாளிப்பது?

ஏற்கனவே மனதளவில் நிலை குலைந்து கிடந்தவள் உடலிலும் தெம்பில்லை. 'அப்படியென்ன செய்து விடுவான் அதையும் தான் ஒரு கை பார்த்து விடுகிறேன்' ஆத்திரத்துடன் பிரேக்கில் கால் வைத்தவள். காரை ஒரு குலுக்குக் குலுக்கி நிறுத்தி இருந்தாள்.

அது தான் தாமதம், எப்போது இறங்கி, எப்போது அவர்களை நெருங்கினான் யோசிக்கும் முன்னே வந்திருந்த ஸ்ரீபிரசாத்,

"ஏய் அறிவிருக்கா டி உனக்கு. குழந்தையைக் கூட வெச்சுகிட்டு என்ன வேகமா ஓட்டுற. பிள்ளைக்கு எதனா ஆகியிருந்தா"

கார் கதவை திறந்து வினோதினி கையைப் பிடித்து வெளியே இழுத்து நிறுத்தியவன், கையோடு குழந்தையையும் தூக்கி கொண்டான்.

"ச்சீ என்னைத் தொடாத" வலு கொண்ட மட்டும் கரங்களை இழுத்து கொண்டவள் "ஹவ் டேர் யூ டச் மீ. குடு அவனை" வார்த்தைகளைத் துப்பி, குழந்தையையும் பிடுங்கி கொண்டு, ஏதோ அசிங்கத்தைப் பார்ப்பது போல் முகத்தை வைத்து, அருவருப்பை உடல் மொழியில் காட்டி, முறைத்து நகர, அவனைச் சீண்டி விட்டிருந்தது அச்செயல்.

"என்ன டி வாய் ரொம்பத் தான் நீளுது. நான் உன் புருஷன் நியாபகம் வெச்சுக்க" அவனும் உறுத்துக் கொண்டு வந்தவன் வழி மறித்தான்.

"யூ சீட்.. ஸ்கவுண்ட்ரல்.. ஒரு பொண்ண விட்டு வெக்காம பின்னாலே போறவன் நீ என் புருஷனா? இன்னும் நினைச்சுட்டு இருக்கியா?"

செய்வதை எல்லாம் மனசாட்சியே இல்லாமல் செய்து விட்டு, கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் வந்து நிற்கும் இவன் முன்பு நிற்க கூட அவளுக்குக் கூசியது.

"வழியை விடு நான் போகணும். இல்லை இங்க நடக்குறதே வேற" என்றும் வேறு கூற,

"ஏய் என்னடி" எகிறியவன் சட்டெனத் தணிந்து,

"வினோ ப்ளீஸ். என்னைக் கொஞ்சம் பேச விடு. நான் சொல்றத கோவப்படாம கேட்டுட்டு அப்பறம் போ. நான் தடுக்க மாட்டேன். இப்டி எதையும் பேசாம, என் பக்க விவரத்தை கேட்காம, நீயா ஒன்ன நெனச்சுக்கிட்டு கோவப்பட்டா என்ன அர்த்தம்"

அவனிடம் தாவ வரும் பிள்ளையை வாங்க முயற்சித்தப்படியே, அவன் கொஞ்சம் தணிந்து பேச,

"என்ன அடிக்கப் போறவன் மாதிரி தொறத்திகிட்டு வந்துட்டு, இப்ப பம்மற. என்ன விஷயம். வரும் போதே உன் அக்கா தூபம் போட்டுட்டாளா" வினோதினி எகத்தாளம் பேச, அவளை அழுத்தமாகப் பார்த்தான் ஸ்ரீபிரசாத்.

"இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா எனக்கும் பேச வேண்டி இருக்கு. இன்னும் நீ என் பொண்டாட்டி தானே.எனக்கு ரைட்ஸ் இருக்கு"

"உன்னைப் பார்க்கவே பிடிக்கல. இதுல உன் பேச்சை வேற கேட்கணுமா. அப்டி என்ன பேச போற. நீ யார் யார்கிட்ட போன எத்தனை பேரோட ரிலேஷன்ஷிப் வெச்சிருக்கன்னு உன் சாகசத்தைப் பெருமை பேச போறியா. பொண்டாட்டியாம். உரிமை இருக்காம். இந்த மாதிரி சொல்ல அசிங்கமா இல்லை உனக்கு. என்ன தைரியத்துல என் முன்ன நிக்கற நீ "

அவன் முகம் கூடப் பார்க்க பிடிக்காமல் பார்வையைத் திருப்பிக்கொண்டவளை பார்க்க, அப்படியே ஓங்கி கொண்டு நான்கு வைத்து விடலாமா போல வந்தது. இருந்தாலும் அடக்கி கொண்டான் ஸ்ரீபிரசாத்.

இப்போதைக்கு வேகத்தை விட விவேகம் முக்கியம் எனப் பொறுமை காத்தான்.

"சீ வினோ, தப்பு தான், நான் செய்தது ரொம்பப் பெரிய தப்பு தான். அது எந்த விளக்கமும் என்கிட்ட இல்லை. ஆனா இனிமே செய்ய மாட்டேன்னு உத்திரவாதம் தர முடியும். முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். இனி ஒழுங்கா உன் புருஷனா மட்டும் இருக்கேன். இந்த ஒரு முறை நம்பு என்னை ப்ளீஸ்"

"ஏதோ பணம் இருக்கத் திமிர்லயும், புத்தி கெட்டு போனதுலயும் தெரியாமல் செய்துட்டேன். இனிமேல் உன்னைத் தவிர்த்து என் பார்வை வேற எந்தப் பொண்ணு மேலயும் போகாது. நான் திருந்திட்டேன்டி என்னை நம்புடி கொஞ்சம் கொஞ்சமா என்னை மாத்திக்கறேன்"அவள் அமைதியாக இருக்கவும்,

"டி.. வினோ.. ஒரு சான்ஸ் குடு டி"

அவன் உயரத்திற்குக் கொஞ்சமும் பொருந்தாமல் கெஞ்சி, கொஞ்சி
இறங்கி பேச, அவன் முன் பேச்சை நிறுத்துமாறு கையைக் காட்டிய வினோதினி அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

"அரைமணி நேரத்திற்கு முன்ன வராத புத்தி இப்ப எனக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சு போச்சுன்னதும் வந்துருச்சா? அதையும் என்னை நம்பச் சொல்றியா? என்னைப் பார்த்தா இன்னும் உன்னை நம்பி ஏமாறுறவ போலவா தெரியுது. அவ்வளவு ஈஸியா போய்ட்டேன் ல உனக்கு" சொன்னவளுக்குக் கண்கள் கலங்குவது போலிருந்தது.

பலகீனத்தைக் காட்ட பிடிக்காமல் கண்ணீரை கட்டுப்படுத்தினாள்.

"உன்னைச் சொல்லி தப்பில்ல. எல்லாம் என்னைச் சொல்லணும். ஊர் உலகத்துல இவனைப் போல உண்டான்னு உன் பின்னால வந்து சுத்தினேன் ல. உனக்கு அப்படிதான் தெரியும்" குரல் தழு தழுத்தது.

இது தான் சாக்கென "வினோ" அழைத்து அவன் அருகில் வர,

"கிட்ட வராத" கை நீட்டி தடுத்தாள் வினோதினி.

"உன்னை எவ்வளவு நம்பினேன் டா ப்ளேடி சீட், மெண்டல் மாதிரி உன்னை உயிரா நினைச்சு, கல்யாணம் செய்து, நீயெல்லாம் ஒரு ஆம்பள ன்னு உன்கிட்ட ஒரு பிள்ளையும் பெத்து, ச்சை என்ன பயித்தியக்காரதனம் செய்திருக்கேன். எல்லாத்துலயும் ஜெயிச்சேன். உன்னைக் கட்டி வாழ்க்கைலே தோத்துட்டேன். என்னைப் பார்த்தா எனக்கே பிடிக்கல"

"அப்போ சொல்லுவ, உன் தராதரம் வேற என் தராதரம் வேறன்னு. நியாபகம் இருக்கா? நீ சொல்லும் போதெல்லாம் தெரியலடா. ஆனா இப்ப அரைமணி நேரம் முன்ன உன் குடும்பத் தராதரத்தை ரொம்ப நல்லா தெரிஞ்சுகிட்டேன். பணத்துக்காகக் காதலை வெச்சு ஏமாத்தின தம்பி அதே பணத்துக்காக என்னவேணாலும் செய்யத் தயங்காத உன் அக்கா. எல்லாத்துக்கும் மேல வயசு வித்யாசம் அடுத்தவப் புருஷன்னு எதையும் பார்க்காமல் வந்தாளே உன்"

மேலும் என்ன சொல்லி இருப்பாளோ? தலை சுற்றிக்கொண்டு வந்ததில் நிலை தடுமாறி விழ போனவள், குழந்தையைப் பிடித்து நிறுத்தி கொண்ட பிறகு, கன்னம் பற்றி எறிந்ததில் உணர்ந்தாள் ஸ்ரீ பிரசாத் தன்னை அடித்து விட்டான் என்றது.

"ஏய் என்ன தைரியம் டா உனக்கு, என்னை அடிக்கற அளவுக்குத் துணிச்சல் வந்துருச்சா, யார் கொடுத்த தைரியம் இது" கண்ணில் தீ பறக்க அவன் சட்டை காலரை பிடித்திழுத்து அவள் சண்டையிட,

பிள்ளை ஏற்கனவே இருவரின் குரல் அதிகரிப்பில் அரண்டு போயிருந்தது, அவள் அடிவாங்கியதில் மேலும் பயந்து அழுதது.

வினோதினியின் கழுத்தை இறுக்கி பிடித்து, முகம் புதைத்து, கால்களை உதைந்து கொண்டு அழுதத்தில், பிடிமானம் நழுவ, இவளுக்கும் வலு குறைய, ஸ்ரீ பிரசாத் பிள்ளையைத் தூக்கிக்கொள்ள முன் வந்தான்.

எங்கிருந்து அத்தனை வீரியம் வந்ததோ? அவன் கையைத் தட்டி விட்டவள், நெஞ்சில் கை வைத்து தள்ளினாள்.

"என் பிள்ளையைத் தொடுற வேலை வெச்சுக்காத. தொலைச்சிருவேன்" இரு கரங்களாலும் அரவணைத்து அரண் போல்
நிகேதனை தன்னுடன் இறுக்கி கொண்டாள்.

"ஏய் அவன் என் பிள்ளையும் தான் டி. எனக்கில்லாத உரிமையா, இல்ல நான் இல்லாமல் பெத்துகிட்டியா, குடுடி அவனை" ஸ்ரீபிரசாத் மேலும் நெருங்கி வர,

"இல்லை ன்னு சொல்லி என்னை நானே அசிங்கப்படுத்திக்கிவேன்னு நினைச்சியா? நெவர். ஆமாம் உன் பிள்ளை தான். ஆனா, எப்போ உன்னைப் பத்தி தெரிஞ்சதோ, இனி ஒரு நொடி கூட உன்னை அவன்கிட்ட அனுமதிக்க மாட்டேன்"

"உனக்கும் எனக்குமான உறவு எப்பவோ முறிஞ்சு போச்சு புரிஞ்சுதா. இனி என் கண் முன்னாலே கூட வர கூடாது நீ. கம்பெனி, ஷேர்ஸ் எல்லாத்துல இருந்தும் நாளைக்கே ரிலீவ் ஆகிடணும். இல்லை அடுத்தவங்க பேச்சை கேட்டு ஏதாவது குறுக்கு புத்தியை யூஸ் செய்யலாம் நினைச்ச" அவள் விரல் நீட்டி மிரட்ட, அவன் புருவங்கள் உயர்ந்தது.

"என்னடி செய்வ, என்னை மீறி" கண்களைச் சுருக்கி அவனும் திமிராகவே கேட்டான்.

'அது உன்னால என்னை என்னடி செய்திட முடியும்' எனக் கேட்பதை போல் அலட்சியமாக இருந்தது.

அப்படியென்ன ஊர் உலகில் யாரும் செய்யாத தவறை செய்து விட்டேன். இந்தக் குதி குதிக்கிறாள் என்ற நினைப்பு தான் அவனுக்கு இப்போதும்.

ஒரு ஆண் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எதுவும் தவறில்லை. அவன் ஆண். அப்படித்தான் நடப்பான் என்ற சமுதாயத்தின் அர்த்தமற்ற அனர்த்தங்கள் அவனை அவ்வாறு சிந்திக்க வைத்தது.

அவனையே படிப்பவள், அவன் எண்ண ஓட்டத்தைப் படிக்க மாட்டாளா என்ன?

"அசிங்கத்திலே ஊறி போன உன்னை என்ன வேணாலும் செய்வேன்டா" சொன்னவளின் வார்த்தை வந்து விழுந்த வேகமே சொன்னது, சொன்னதைச் செய்வாள் என்று.

ஒரு நொடி திகைத்து, பின் சுதாரித்து, 'என்ன பேசி வழிக்குக் கொண்டு வரலாம் இவளை' என ஸ்ரீபிரசாத் யோசனைக்குப் போக, மௌனம் அவர்களிடயே இரண்டு நிமிடங்களுக்கு மேல் நிலைக்க,

இருந்த பொறுமையும் வினோதினிக்குப் பறந்தது. போதாததுக்கு நிகேத்தனும் படுத்தினான். இல்லத்திற்குச் சென்றால் போதும் என ஆகியிருந்தது.

"இதோ பார், உனக்கு வேணும்னா இந்த இடமும், சூழ்நிலையும் பழகி போயிருக்கலாம். ஆனா எனக்கோ என் பிள்ளைக்கோ இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல. இனி என்ன பேசறதா இருந்தாலும் என் லாயர் கிட்ட பேசிக்க"

சொன்னதோடு அனைத்தும் முடிந்ததென, வினோதினி பிள்ளையைத் தூக்கிகொண்டு காருக்குள் அமர போக, அவன் ஒரே எட்டில் கார்கதவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

'இன்னும் என்ன' என்பதைப் போல் முறைத்தவள் " இத்தோட என்னைப் போக விட்டியன்னா, எனக்குத் தேவையானதை மட்டும் செய்துகிட்டு, சைலெண்டா உன்னை விட்டுடுவேன். இல்லைனா
என்னை ஏமாத்தினதை ஆதாரத்தோட நிரூபிச்சு உன் பேரை நாறடிப்பேன். நீ பழகுற சொசைட்டியே உன்னைக் காரி துப்ப வெப்பேன். நீ எங்க போனாலும் விரட்டி விரட்டி அடிப்பேன்"

"என்ன நினைச்ச என்னை. உன்னைப் பார்த்தாலே உருகி குழைஞ்சு நிப்பாளே அந்த வினோதினி ன்னா? நோ. அவ செத்துட்டா. இவ சத்திய மூர்த்திப் பொண்ணு வினோதினி காட் இட் "

"எந்தளவு உன் மேல பித்தா இருந்தேனோ இப்ப அந்தளவு உன்னை வெறுக்க வெச்சிட்ட,
தன்மானத்தோட வாழணும் ன்னு நினைச்சா இந்த ஊர விட்டே ஓடிடு, அது தான் உனக்கு நல்லது" கோபத்தில் பேசிகொண்டிருந்தவள் கையை ஆத்திரத்தோடு பிடித்தவன்,

"என்னடி ரொம்பத் தெனாவட்டவே வந்து விழுது வார்த்தையெல்லாம். அப்ப பிடிச்சு நானும் பாக்கறேன், நீ இல்லைனா நான் ஒண்ணுமே இல்லாதது போலவே பேசிட்டு இருக்க"

உண்மை அது தான் என்றாலும், ஆணின் தன்மானம் அடி வாங்கியதில் ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆவேசமாகப் பேசினான் ஸ்ரீபிரசாத்.

"ஏன் இல்லைன்னு மறுக்க முடியுமா உன்னால" நிதானமாக அவனை ஆழமாக ஊடுருவினாள் வினோதினி. அதில் எரிச்சலோடு அவன் பார்வையைத் திருப்பிக்கொள்ள,

"மார்க் மை வர்ட்ஸ், எப்பவும் என்னை வெச்சு தான் உன் இந்த நிலை. நான் இல்லைனா, என் பணம் இல்லைனா நீயெல்லாம் வெத்து வேட்டு, வேலைக்காகாத வெறும் பூஜ்யம், ஊர்ல இருக்கவன் என்ன? உன் கூடப் பிறந்தவக் கூட உன்னை மதிக்க மாட்டா" என்றது தான் தாமதம்.
ஏற்கனவே இறுக்கமான சூழ்நிலை விபரீதமாக மாறியது. அதற்கு அடுத்து நடந்ததெல்லாம் யூகிக்கவே முடியாதவை.

அப்படியே அவளை இழுத்து தன் நேருக்கு நேர் நிற்க வைத்தவன், பிள்ளையைப் பிடுங்கி உள்ளே வைத்து கதவை அறைந்து சாற்றினான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத நிகேதன் கண்ணாடியை தட்டிக்கொண்டு வீறிட்டு அழுக..

"ஏய், என்னடா செய்ற, விடுடா என்னை, நிக்கி.. அய்யோ.. என் பிள்ளை.. ஹெல்ப்.. ப்ளீஸ் ஹெல்ப்.. யாரவது வாங்களேன் "

குழந்தை பரிதவிப்பதை பாக்க சகியாமல் கத்தி, வினோதினி அவனிடமிருந்து விடுபடப் போராடியது எதுவுமே எடுபடவில்லை.

ஸ்ரீபிரசாத் எப்போதோ மிருகமாகி இருந்தான். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பதை நிரூபிக்கத் தொடங்கியிருந்தான் அவனோடு, வினோதினியின் விதியையும் மாற்றி இன்னும் சிலரின் விதியிலும் விளையாட ஆரம்பித்திருந்தான்.

"என்னடி சொன்ன? என்ன சொன்ன? என்னைப் பார்த்து என்ன சொன்ன? நான் பூஜியமா? நான் வெத்து வேட்டா? எவ்வளவு தைரியம் உனக்கு? ஒவ்வொரு வார்த்தைக்கும் கன்னம் கன்னமாக அறைந்து தள்ளினான்.

"போனா போகுது, பேசி புரிய வெச்சு வழிக்குக் கொண்டு வரலாம் பார்த்தா, என்னையே மிரட்டுறியா நீ? நீ உயிரோட வெச்சிருந்தா தான டி எல்லாம் செய்வ. உன்னை இல்லாம செய்துட்டா எப்டி செய்வ"

"கடைசிக் கடைசியா கேட்டுக்க, நான் உன்னை எப்போவும் விரும்பினதில்லை, உன் பணத்தைத் தான் விரும்பினேன், அதுக்காகத் தான் உன்கிட்ட நடிச்சேன், நாடகமாடினேன், சாகப் போற ல்ல எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டே போய்ச் சேரு"

அதே ஆத்திரத்தோடு, அவள் பின் கழுத்தில் கை வைத்தவன் பக்கத்திலிருந்த கிலோமீட்டர் காட்டும் கல்லில் வேகமாகத் தள்ளி விட்டிருந்தான்.

சற்றும் எதிர்பார்க்காது அவன் அடித்ததிலே, அந்தத் தாக்குதலில் நிலை குலைந்து, சுய நினைவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்த வினோதினி, ஸ்ரீபிரசாத் சொல்லிய வார்த்தைகளில் முற்றிலுமாக வழுவிழந்து போய்த் தடுமாறியவள், கல்லில் பலமாக மண்டையை மோதி கொண்டாள்.

தலைக்குள் ஒரு பிரளயமே நடக்க, நெற்றி நன்றாக உடைந்து ரத்தம் ஆறாக வழிந்தது. வலி விண்ணு விண்ணென்று தெறித்தது. பார்வை மங்கி தலை சுற்றிக்கொண்டு வருவதையும் பொருட்படுத்தாது, தட்டு தடுமாறி தரையில் இருந்தப்படியே நகர்ந்து காருக்கு அருகில் வந்தவள், கதவை திறக்க வலுவில்லாமல் தன்னைப் பார்த்தப்படியே முகம் சிவக்க வீறிட்டு, தேம்பி அழுது கொண்டிருந்த நிகேதனை கண்கள் முழுக்க நிரப்பிக்கொண்டு, அப்படியே மடங்கித் தரையில் சரிந்தாள்.

பூக்கும்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,926
😳😳😳😳😳😳😳😳😳😳அப்படியோவ் வினோதினி கதி அதோ கதிதான் போல என்ன நடக்கப்போகுதோ தெரியலையே 😧😧😧😧😧😧😧😧.கதை போலவே Writer பேரும் மர்மமா இருக்கு 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
என்ன ஆனாலுமம வினோ சாக கூடாது.. அந்த பரதேசி kku சரியான பாடம் சொல்லி குடுக்க அவ மீண்டு வரணும்.. சீக்கிரம் நெக்ஸ்ட் update குடுங்க
 
Top