• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஜானு முருகன் - கோவிட்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
கோவிட்


அடைமழை வெளுத்துக் வாங்க, வெளியே எட்டிப் பார்த்த கனகம், "மேகலா, ரொம்ப மழை பெய்யுது டி‌‌. நீ கண்டிப்பா போகணுமா?" என வினவ, "ம்மா.. ரொம்ப அவசரம். போயே ஆகணும்மா.." என பதில் கூறிக் கொண்டே, தன் குழந்தையின் நெற்றியில் ஒரு முத்தத்தைப் பதித்தவள், "குழந்தை ரொம்ப அழுதா மட்டும் எனக்கு போன் பண்ணுங்க மா." என கூறிவிட்டு, குடையுடன் பேருந்து நிலையத்தை அடைந்தாள்.


பலத்த மழை காரணமாக ஒன்று இரண்டு பேருந்துகளே வர, தனக்கான பேருந்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் மட்டுமே அந்த பேருந்து நிலையத்தில் தனியாளாக நிற்க, ஆட்டோ ஓட்டுநர் வந்து, "இன்னா மேடம். வாங்க நான் ட்ராப் பண்றேன்..." என கூறும் போதே, அவன் வாயில் குற்றாலத்தை விட அதிகமாக ஒழுக, அதில் எரிச்சல் முகத்தில் படர்ந்தாலும், அவனை பார்க்காது, பேருந்தை எதிர்நோக்கியே அவள் நிற்க, அவனும் அப்படியே நின்று இருந்தான். அவளை மேலும் சோதிக்க விரும்பாது, ஒரு பேருந்து வர, ஆசுவாசமாக மூச்சை இழுத்து விடப் போனவள், அப்படியே நின்று விட்டாள்.


பேருந்தில் படிகள் வரையுமே ஆட்கள் நின்று இருக்க, பார்த்ததுமே, 'இதில் தான் செல்ல வேண்டுமா?' என அலுப்பு ஏற்பட்டாலும், அதில் தான் ஏறினாள்.


"ஏம்மா... உள்ள வாம்மா. ஏற்கனவே ஆளு இவ்வளோ பேரு.. நீயுமா?" என அவர் கடிய, முகம் விழுந்துவிட்டது அவளுக்கு.


அதை பார்த்து சற்றே தணிந்தவர், "சரி, சரி. உள்ள வாம்மா, கீழே விழுந்துடப் போற..." என்றவர், "எங்க போகணும்மா...?" என்க, தன் கைப்பையில் கையை விட்டு துலாவிய மேகலா தேவையான சில்லரை கிடைத்ததும், ஒரு நிம்மதி எழ, "கே.எம் ஹாஸ்பிடல் ண்ணா.." என பயணச்சீட்டை வாங்கினாள். ஏதோ ஒரு அசௌகரியத்தை உணர்ந்தவள், திரும்பி பார்க்க, அவள் தகப்பன் வயதில் ஒருவர் அவளை வேண்டும் என்றே இடிக்க, சற்றே கோபம் வந்தது. பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என அவள் ஒதுங்கி நிற்க, அவளது நிறுத்தம் சில நொடிகளில் வந்து விட்டது.


விறுவிறுவென மருத்துவமனை உள்ளே நுழைந்தவள், தனது சேலையை களைந்து விட்டு, செவிலியர் உடைக்கு மாறிவிட்டு, உடல் முழுவதும் கொரோனா பாதுகாப்பிற்காக மறைத்துவிட்டு வர, "ஏய் மேகலா, என்னப்பா லேட்டா? டாக்டர் வேற செம்ம கடுப்புல இருக்காரு..." என்று தோழி கூறுவதை கேட்டு, விரைவாக அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்தாள்.


அவளது நல்ல நேரம், மருத்துவர் புற நோயாளிகளைப் பார்க்கப் போய் விட, அன்றைய திட்டிலிருந்து தப்பித்து விட்டோம் என நினைத்தவளை, "மேகி, வந்துட்டீயா? அந்த 4 நம்பர் பேஷண்ட்டை பாரு பா. ரொம்ப நேரமா ஆளே இல்லை. இன்னைக்கு ஹெவி கேஸ்..." என தனது தோழி கூறியதை கேட்டுக் கொண்டே, அந்த நோயாளியிடம் விரைந்தவள், அவரை பரிசோதித்து, செயற்கை சுவாசத்தைப் பொருத்த, அவரால் இப்போது சீராக மூச்சு விட முடிந்தது.

அடுத்தடுத்து என ஒவ்வொரு நோயாளியாக பார்க்க என நேரம் சிட்டாய் பறந்துவிட்டது.


தொலைபேசியை மேகலா எடுத்துப் பார்த்தாள். கனகத்திடமிருந்து அழைப்பு இருக்க, அவருக்கு அழைத்தவள், "ம்மா.." என்க, "அம்மா.." என அவளது குழந்தையின் குரல் செவியை அடைய, "சொல்லுங்க செல்லகுட்டி.." என புன்னகையுடன் வினவினாள்.


"ம்மா.‌.. எப்ப வருவ?" என குழந்தை வினவ,


"அம்மா சாயங்காலம் வந்துடுவேன் குட்டி. வரும் போது உங்களுக்கு பிடிச்ச சாக்கி வாங்கிட்டு வருவேனாம். அதுவரைக்கும் நீங்க சமத்தா பாட்டிக்கிட்ட இருக்கணும்.." என கூற, தலையசைத்தது குழந்தை.


கனகம், "உன்னைப் பார்க்கணும்னு ஒரே அழுகை.. உடம்பு சரியில்லாத குழந்தையை விட்டுட்டு, அப்டி அவசியம் போகணுமா வேலைக்கு..?" என அவர் கடிய,


"ம்மா... அதான் அவ நல்லாகிட்டாளே! அதனால தான் நான் வந்தேன். என் குழந்தையை பார்த்துக்க நீ இருக்க. இங்க உடம்பு சரியில்லாதவங்களை யாரு பார்த்துப்பா சொல்லு.. எனக்கு வேலை இருக்கு மா. வீட்டுக்கு வந்து பேசுறேன்.." என தன்மையான குரலில் அழைப்பை துண்டித்தவள் திரும்ப எத்தனிக்க, "நர்ஸ் அக்கா, என் அப்பாக்கு மூச்சு இப்ப நல்லா விட முடியுது..." என பத்து வயது குழந்தை புன்னகையுடன் கூற, அவளது கன்னத்தை தட்டியவள், "அப்பாக்கு ஒன்னும் இல்லை டா. சீக்கிரமா சரியாகிடுவாறு.." என்று அவள் பதில் மொழிய, புன்னகையுடன் அந்த குழந்தை சென்றாள். அந்த புன்னகையில் தான் எந்த அளவுக்கு உயிர்ப்பு உள்ளது. காலையில் தான் வரும் போது ஏற்பட்ட துன்பம் எல்லாம் காற்றில் கரைந்து போய் விட்டது அவளுக்கு.



சுபம் ❤️
 
Top