• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்

டீசர்………….

மதுரையின் உயர்நீதிமன்றம் அந்த காலை நேரத்திலும் பரப்பரப்பாக இருந்தது…… எங்கும் கருப்பு கோட் போட்ட வக்கீல்கள் தான் சுற்றிக்கொண்டிருந்தனர் சுறுசுறுப்பாக…….. அதும் பெட்டி கேஸில் இருந்து கொலை கேஸ் வரையிலான கைதிகள் அவர் அவர்களுக்கென்று வாதாட இருக்கும் வக்கீல்களிடம் கார சாரமாக விவாதித்துக்கொண்டிருந்தனர்……..

நீதிமன்றத்தின் ஒரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனும் ஜெகஜோதியாக இருந்தது……..

சுற்றி எங்கிலும் நல்ல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து அந்த இடத்தினையே பச்சல் பசேல் என்று காட்டிக்கொண்டிருந்தது……. இப்படியாக வளர்ந்த மரங்களுக்கு கீழ் அங்கு அங்கு கோர்ட்டிற்கு வருவோர் போவோர் அனைவரும் உட்காரவென்று போடப்பட்டு இருந்த கல் மேடையில் தான் உட்கார்ந்திருந்தாள் அவள்……….

முகம் சோர்ந்து போய்…….. கண்களுக்கு கீழ் கருவளையம் விழுந்து போய்……… கன்னங்கள் வற்றிப்போய்……. உதடுகள் ஈரப்பசையே இல்லாமல் காய்ந்து போய்…… ஏன் கன்னத்தில் கூட யாரோ அறைந்ததற்கான அடையாளமாய்….. நன்றாக கன்னி சிவந்து போய் இருந்தது…… அவள் முகம்……. தலை முடிகள் அனைத்தும் காற்றில் களைந்து போய்…… கலைந்த ஓவியமாக உட்கார்ந்திருந்தாள் அவள்……….




அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கன்னத்தில் இறங்கி அவளது வறண்ட கன்னத்தினை குளிர்விக்க முயல…… ஆனால் அதனை செய்ய அந்த ஒரு துளி கண்ணீரால் முடியவில்லை……..

வாழ்க்கையே முடிந்தது போல அவள் உட்கார்ந்திருக்கும் நிலையை அங்கு யாரும் கவனிக்காமல் இல்லை……. கிட்ட தட்ட 2மணி நேரமாக அவள் அங்கு உட்கார்ந்திருக்கிறாள் தான்…….. ஆனால் ஏன் என்று அவளிடம் போய் கேட்க அவளுக்கு யாரும் இல்லை என்ற அவல நிலையை அவள் அடைந்து இப்போது தான் ஒருவாரம் ஆகியது………

அதும் அவளை நன்றாக பார்த்தால் நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது……. ஏன் என்றால் அவளின் வயிற்றுப்பகுதி நன்றாக மேடிடப்பட்டு இருந்தது….. எப்படியும் அவளுக்கு 7மாதம் இருக்கும்……… கைகளில் முழுதும் கண்ணாடி வளையல்கள் அடுக்கப்பட்டு இருந்தது………

அனைத்து வளையல்களுமே இப்போது தான் போடப்பட்டது போல புத்தம் புதிதாக இருந்தது……..

இப்போது தான் ஒரு வாரம் முன் தான் அவளுக்கு வளை பூட்டு விழா கொண்டாடப்பட்டது…….. ஆனால் அந்த நாளே அவளுக்கு மிகப்பெரிய துக்க நாளாகவும், வாழ்வின் பெரிய அதிர்ச்சியை அன்று அவள் தாங்கிதான் ஆக வேண்டும் என்ற அவளின் தலை எழுத்தை எப்போதோ பிரம்மன் எழுதிவிட்டான் போல……..

இல்லை என்றால் வாய் கூட திறக்காத அந்த புள்ள பூச்சிக்கு போய் இப்படிப்பட்ட நிலை வந்திருக்குமா………

அவள் ருதர்ஷினி நல்ல சிவந்த நிறத்தை உடையவள்……. அமைதியிலும் அப்படி ஒரு அமைதி அவள்……… அவளது சுபாவமே அப்படிதான்……….

இன்று அவளுக்கான விவாகரத்து வழக்கு தான் இங்கு நடக்க இருக்கிறது…….. அதற்கு தான் இப்படிப்பட்ட நிலையில் வந்து அவள் உட்கார்ந்திருக்கிறாள்………

அதும் அவள் இந்த ஒரு வாரத்தில் வாங்கிய சுடு சொற்கள் அனைத்தும் ஏராளம்….. அதுவே அவளை இந்நேரம் கொன்றிருக்க வேண்டியது…….. ஆனால் அவள் வயிற்றில் வளரும் குழந்தை இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தப்பின் அதனை யாரால் தடுக்க முடியும்……….

“ருதர்ஷினி……….. ருதர்ஷினி………. ருதர்ஷினி………..”என்று அவளது பேரை மூன்று தடவை கூப்பிட……….

அப்போது தான் இவ்வளவு நேரம் அவளது அசையா கருமணிகள் கூட அசைய ஆரம்பித்தது………

“ஏன்மா…… உன்னதான் கூப்டுறாங்க……… வா……..”என்று அந்த கோர்ட் ஊழிய பெண்மணி ஒருத்தி கத்த……..

அதில் முற்றும் தெளிந்தவள்………. தன் வயிற்றை பிடித்துக்கொண்டு மெல்ல எழ….. அவளின் இந்த நிலையை பார்த்த அந்த கடின பெண்மனிக்கே பாவமாகி போனது……..

“பரவாலமா……. மெதுவா வா…….”என்று அவர் பரிவுடன் கூற

ஆனால் அதனை காதில் வாங்க தான் அவளுக்கு விருப்பம் இல்லை……… தன் வயிற்றை ஒற்றை கையால் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்தவள்………. யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை……..

“போறா பாரு……. சரியான அம்மாஞ்சி மாறி முகத்த வச்சிட்டு……. இது செஞ்சிருக்க வேலை எல்லாம் டாப்பு கணக்கு தான்………...”என்று ஒருத்தி கூற…….

“யாருடி அது கோர்ட்டுக்கு புதுசா இருக்கு……...”என்று ஒரு வக்கீல் தன் ஜூனியரிடம் கேட்க

“இதான் மேடம் அந்த புருஷன பாரின் அனுப்பிட்டு……… ஒரே வாரத்துல புருஷனால கர்ப்பம் ஆன கேஸு……….”என்று அந்த வக்கீலின் ஜூனியர் கூற

“ஓஓ……. ஆமா…… இப்போ ஒரு வாரத்துக்கு முன்ன பைல் ஆனதே அந்த கேஸா…….”என்று அவர் கேட்க……..

“ஆமா….. மேடம்….. ஒரே வாரத்துல மியூட்வல கேஸ முடிக்கனும்னு ஜட்ஸ் ரூல்ஸ் போட்ட கேஸு…...”என்று அந்த ஜூனியர் கூற

“பார்த்தா தப்பான பொண்ணு மாறி இல்லையப்பா……...”என்று அவளை ஆழ்ந்து நோக்கியவாறே அவர் கூற

“ம்ச்…… என்ன மேடம் ஒரு நாளைக்கு இது மாறி எத்தன கேஸு பாக்குறோம்……… அம்மாஞ்சி மாறி முகத்த வச்சிட்டு இப்போலாம் கொலை கூட பண்ணுதுங்க……. புருஷன ஏமாத்தி புள்ள பெத்துக்க தெரியாதா……...”என்று நாராசமாக அந்த ஜூனியர் கூற……

“ம்ம்ம்…. அதும் சரிதான்…… இப்போலாம் பொண்ணுங்க தான் அதிகமான தப்பு செய்றாங்க…….. அதுல இதும் ஒன்னா எடுத்துக்க வேண்டியது தான்………. ஆனா….. முகத்த பாரு அப்டியே பால் குடிக்கற பாப்பா மாறி வச்சிருக்குறத…….”என்று அந்த வக்கீலும் ருதர்ஷினியை பற்றி பேச………

“ம்ம்ம்…. ம்ம்ம்…..”என்று அவரது ஜூனியரும் அவருக்கு ஒத்து ஊதினான்……….

ருதர்ஷினியோ இதை எல்லாம் காதில் விழுந்தாலும் பொம்மை போல தன்னை அழைத்த அந்த ஹாலுக்குள் நுழைய………. அதன் வாயிலிலோ……….

குடும்ப நல நீதிமன்றம் மதுரை கிளை…………. என்ற பலகை பெரிதாக மாட்டப்பட்டு இருக்க……… அதன் உள் தான் ருதர்ஷினி நுழைந்தாள்………….

அவளை ஒரு பக்கம் நிற்க சொன்ன கோர்ட் ஊழியர்……… அவரை பாவமாக பார்க்க……… அவளோ அதை எதும் உணரும் நிலையில் இல்லவே இல்லை………

“ஏன்மா…….. உன் வயித்துல வளர குழந்தை இவருக்கு சொந்தம் இல்லனு சொல்றாறே அது உண்மையா……...”என்று ஜட்ஜ் எடுத்ததும் கடுப்புடன் கேட்க…….

அதனை கேட்டு உணர்வற்ற நிலையில் நிமிர்ந்து தன் எதிரில் பார்க்க…….. அங்கு நின்றிருந்தான்…….. ருதர்ஷினியின் கணவன் விஜய்……….

அதும் சரியாக 8மாதங்களுக்கு முன்னால் தான் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் இப்போது அவள் 7மாதம் கர்ப்பமாக இருக்க…….. அதனை தன் குழந்தையே இல்லை……. என்று அடித்து கூறியவாறே விவாகரத்து வழக்கு போடப்பட்ட தன் அருமை கணவனை தான்……….

அவளோ அவனை உணர்வற்ற பார்வை பார்க்க………. விஜயோ……. அவளை நக்கலாக ஒரு பார்வை பார்த்தான்………

அதில் அவள் இன்னும் துவண்டு போக………

“ஏன்மா கேட்குறேன்ல……… உன் புருஷன் உன் மேல குடுத்த வழக்கு உண்மையா……...”என்று ஜட்ஜ் அவளை பார்த்து குற்றம் சுமத்தும் பார்வையுடன் கேட்க…..

அதில் நாக்கு உலற……. பேச வாய் வராமல் நின்றிருந்தாள் பாவை அவள்……..

“சார்……. அவள என்ன கேட்டுட்டு……. எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகி 8மாசம் தான் ஆகுது…….. கல்யாணம் ஆன அடுத்த வாரத்துலையே நான் பாரின் போய்ட்டேன்………. 7மாசம் கழிச்சி வந்து பார்த்தா அவ இந்த நிலையில இருக்கா……. எங்களுக்கு கல்யாணம் ஆன உடனே நம்ம லைஃப இப்போ ஸ்டார்ட் பண்ண வேணாம்……. நான் ப்ராஜக்ட் ஒன்னுல மாட்டிக்கிட்டேன் அத முடிச்சிட்டு வந்து நம்ம லைஃப ஸ்டார் பண்லாம்னு சொல்லிட்டு போனேன்…… வந்து பாத்தா அவ இந்த நிலையில இருக்கா………. நான் ஒன்னும் தியாக செம்மல் இல்லங்க…. யாரோ விதைச்ச செடிக்கு நான் இனிஷியல் குடுக்க…….. அவ ஒரு நடத்த கெட்டவ…….. அது இந்த ஒரு வாரத்துல ப்ரூஃப் பண்ணியாச்சி………… இனி என்னங்க அவ கிட்ட விசாரிச்சிக்கிட்டு…….. கேஸ முடிச்சிவிடுங்க……….”என்று விஜய் கனிவான குரலில் அழுதவாறே கூற………

அதில் அந்த கோர்ட்டில் இருக்கும் அனைவரது மனமும் அவன் பக்கம் எளிதாக சாய்ந்துவிட்டது……… ஏன் ஜட்ஜ் கூட அவன் சமிட் செய்த அனைத்து ஆதாரத்தையும் பார்த்தவர்……… ருதர்ஷினியை தவறானவளாக தான் சித்தரித்திருந்தது……….

“அப்போ இந்த குழந்தை உங்களோட இல்ல……..”என்று ஜட்ஜ் கடைசியாக கேட்க

“நான் அவள தொட்டது கூட இல்லங்க சார்……….”என்றான் விஜய் கைகட்டியவாறே அடக்கமாக……..

அதில் ருதர்ஷினி உணர்வற்ற உடல் ஒருமுறை தூக்கி போட……….. தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு நின்றவள்…………

“ஆமா……… இது அவரோட குழந்தை இல்ல………..”என்றாள் அழுத்தமாக அதே நேரம் இற்கிய குரலில்………

அதில் அந்த கோர்ட் ஹாலே அதிர்ந்து போய் அவளை பார்க்க……….. அவளோ அங்கு இருக்கும் யாரையும் பார்க்காமல்,…….

விஜயுமே ஒரு நிமிடம் அதிர்ந்து போய் அவளை பார்த்தான்……….. ஆனால் அவளோ உடல் குறுகி நின்றவாறே

“இந்த குழந்த இவரோட இல்ல…….. இது என்னோட குழந்தை……… இதுக்கு அப்பானு யாரும் இல்ல…….. அதே போல எனக்கு புருஷனும் யாரும் இல்ல…….. எனக்கு இந்த விவாகரத்துல முழு சம்மதம்…….. “என்றவள் யாரையும் பார்க்காமல் நிற்க…….

அதை கேட்ட ஜட்ஜே அவளை இமைக்காமல் பார்த்தவர்……….. “சரி அப்போ இந்த கேஸ முடிச்சிக்கலாம்…….. ஹிந்து மேரேஜ் ஆக்ட் படி உங்க ரெண்டு பேருக்கும் இந்த கோர்ட் விவாகரத்து வழங்குகிறது……...”என்றவர்……..ஜட்ஜ்மென்டில் கையெழுத்து போட்டவர்…….. ஒரு பெருமூச்சியுடன் எழுந்து சென்றுவிட்டார்………

“அப்பா எவ்வளவு தைரியம் பாரு……. இவளுக்கு…… குழந்தையே அவனோட இல்லனு சொல்லிட்டா……..”என்று ஒரு பக்கம் அவளை பற்றி பேச………

“இந்த உலகம் ரொம்ப கெட்டு போச்சி……...”என்று ஒருபக்கமும் அனைவரும் பேச…… அதனை பற்றி எதுவும் காதில் வாங்கிக்கொள்ளாதவளோ……….. தன் வக்கீல் காட்டிய பேப்பரில் எல்லாம் சைன் போட்டுவிட்டு வேக வேகமாக நடந்தாள் கோர்ட்டை விட்டு…………

அதை விஜய் கண்களில் ஒரு குரூர சந்தோஷத்துடன் பார்க்க……… அவன் கைப்பேசி அழைக்க…….. எடுத்து காதில் வைத்தவன் உரைத்தது……….

“டிவோர்ஸ் கிடச்சிட்டு பேபி……. நவ் ஐ ம் ஃப்ரீ…….”என்ற குழைவான வார்த்தையை தான்……….

ருதர்ஷினியோ தன் முன்னால் நடக்கும் எதுவும் தெரியாமல் அதிவேகமான வாகனங்கள் போய்க்கொண்டிருக்கும் சாலையில் வேகமாக நடக்க………. அவளது மூளையோ மறத்து போனது போல் அங்கு நடக்கும் எதையும் உணராத அளவிற்கு மரிந்து போனது……….

நடந்தாள்……. நடந்தாள் நடந்துக்கொண்டே இருந்தாள்…….. மதுரையின் நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தவளை நோக்கி அதிவேகமாக வந்த லாரி மோதவர…… சரிந்து விழுந்தாள் ருதர்ஷினி………………







(டீசர் முற்றும்………….)
 

Durka Janani

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 23, 2022
Messages
60
Intersting start....
 
Top