• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441
உலகெங்கும் உண்டு பலமொழி அவற்றில்
உவகை அளிக்கும் மொழி தமிழ்மொழி
கற்காலம் முதல் கணிணி காலம் வரை
களிப்புடன் பேசும் மொழி தமிழ் மொழி

பாமர மக்கள் முதல் பண்டிதர் வரை
பிறப்பு முதல் இறப்பு வரை
பல்லாண்டு தொடர்ந்து வரும் தமிழ்மொழி
கிராமம் முதல் நகரம் எனத்தொடங்கி
கடல்கள் கடந்தும் கலப்பில்லாமொழி தமிழ்மொழி

சங்கத்துச் சான்றோர்கள் சங்கம் வைத்து
சந்தோஷத்துடன் வளர்த்த தமிழ்மொழி
சங்கமருவிய காலத்திலும் சற்றும்
சளைக்காது வளர்ந்தமொழி தமிழ்மொழி

பல்லவர்கள் பக்தியுடன் பரப்பிய மொழி
பல நாட்டவர்களை ஈர்த்த மொழி
சோழ நாட்டினிலும் நறுஞ்சோலையிடத்திலும் சக தோழர்கள் பரஸ்பரம் புரிந்திடும் தமிழ்மொழி

நாயக்கர் அவைதனிலே நயமுடன் தவழ்ந்தமொழி
இனிமைச் சுவையுள்ள தமிழ்மொழி
கபிலரும் பரணரும் கருத்துடன் போற்றிய தமிழ்மொழி
புகழ்பெற்ற புகழேந்தி புகழ்ந்து போற்றிய மொழி
கவிச்சக்கரவர்த்தி கம்பனும் களிப்புடனே
கவி புனைந்த மொழியே தமிழ்மொழி

குழந்தைகள் மழலையிலும் குமரியின் பேச்சிலும்
குளிர்மையாய் இருக்கும் மொழி
ஆடவர் நாவில் வந்திடும் அன்பு மொழி
அனைத்திலும் சிறந்த தமிழ்மொழி

பிறமொழிக் கவிஞர்களும் பிரியமுடன்
கற்கும் பெரும்மொழி தமிழ்மொழி
தசாப்தங்கள் பல கடந்த போதும்
தரணியிலே தலை நிமிர்ந்து நிற்கும் மொழி
தற்பெருமையற்ற தமிழ்மொழி

ஏழு கண்டங்களிலும் எண்ணற்ற நாடுகளிலும்
எள்ளளவும் இழப்பு ஏதுமன்றி
செழிப்புடனே வளரும் மொழி
செம்மைச் சிறப்புமிக்க செம்மொழியே
எங்கள் தமிழ்மொழி.......
 
Top