• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாட்சாயணி தேவி.. 1

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
தாட்சாயணி தேவி


நாயகன் .. சக்தி வேந்தன்


நாயகி..தாட்சாயணி தேவி


அத்தியாயம் .. 1



வீதியெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது…


பத்திரிகையாளர்களும் செய்தித் தொகுப்பாளர்களும் மைக்கைக் கைலேயந்திக் கொண்டு அங்கே நின்றிருக்கும் மக்களிடம் விவாதித்துக் கொண்டிருக்க, மக்களோ தாங்கள் டிவியில் வருகிற செய்தியில் தெரியப் போகிறோம் என்ற ஆர்வத்தில் வீர ஆவேசமாகப் பலர் பேசுவதும் வாழ்த்துகளைப் பகிர்வதுமாக இருக்க அங்கே இருந்த போலீஸ்காரர்களால் அக்கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை.


தடுப்புகள் வைத்தும் அதைத் தள்ளிக் கொண்டு வரும் கூட்டத்தைக் கண்டவர்கள் தங்களுடைய பெரிய அதிகாரியை அழைத்து நிலவரத்தைச் சொல்ல முயன்றனர் ..


ஆனால் மக்கள் சக்தியை எவராலும் தடுக்க முடியாதே … அதற்கு அங்கே வர வேண்டியவர்கள் வந்தால் தானகவே கூட்டம் சாந்தமாகி அமைதியாகக் கலைந்து சென்று விடும்…


அவர் சொல்லும் வார்த்தைகளில் இருக்கும் அழுத்தமும் ஆளுமை நிறைந்த குரலும் ஒற்றை தீக்குச்சிப் பார்வையில் அன்பும் கண்டிப்பும் கலந்த கலவையில் கட்டுண்டு நின்றுவிடுவார்கள்.. அது அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பு விசுவாசம் அதீத வெறியாகக் கூட மாறிவிடும் சில நேரங்களில் ..


அத்தகைய நேரத்தை அவர் கையாளும் முறையில் எவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூட ஒரு நிமிடம் திகைத்துத் திணறிப் போய்விடுவார்கள் ..


அந்தளவுக்கு மொழி ஆளுமையும் பேச்சின் அழுத்தத்தில் சொல்கிற வார்த்தைகளுக்கு 'ஆமாம் ,சரி' என்கிற பதிலைத் தவிர வேறு வார்த்தை எவரிடமும் வராது.. அப்படிப்பட்டவர் இன்று தலைமை செயலகத்தில் அகில இந்திய ஆளுமை கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்கப் போகும் போது பார்ப்பதற்காகக் காத்திருக்கும் மக்கள் கூட்டமும்..


அங்கே வீட்டின் முன் போர்ட்டிக்கோவில் வெள்ளை வேட்டி சட்டையில்.. ராம்ராஜ் விளம்பரத்திற்கு வந்துப் போல விரைப்பாகப் பளபளவென்று வந்தவர்களிடம் சிலரின் முகத்தில் சிரிப்பின் பின்னே ஒளிந்திருக்கும் நயவஞ்சகமும், நரி முகங்களுமே அதிகமே .. அவரைச் சுற்றி பலர் இப்படி இருந்தாலும் அவர் அதை எல்லாம் தூசிப் போல ஊதிச் செல்லும் பேராண்மையின் பேரரசி தான் தாட்சாயணி தேவி..


பெண் என்றால் சக்தியின் மறு உருவமாக இருந்தாலும் உலகத்தை ஆளும் சக்தி பெண்ணிடம் தான் என்பதை இன்று வரை யாராலும் புரிந்து கொள்ள முடியாமல் கோழையாகச் செயல்படுத்தவர்களின் முன் பெண் சிங்கமாகக் கர்ஜித்துக் கொண்டும் நிமிர்ந்த நடையுடன் கம்பீரமாக ஆட்களை விழியாலே எடைப் போட்டுக் கொண்டு நடக்கும் பெண், மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் தன் அன்பின் பேச்சால் கட்டிப் போட்டுவிடும் அன்புக்கரசி தான் தாட்சாயணி தேவி ..


அங்கே வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் சிலர் வயதிலும் அனுபவத்திலும் முன்னோடியாக இருந்தாலும் தங்கள் கட்சிக்காக உழைக்கும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு ஒரு பெண்ணின் தலைமையின் கீழே இருப்பதா என்று மறைமுகக் கோபம் அவருகளுக்குள் கனன்று கொண்டு இருந்தது.


அதிலும் அமைச்சர்களிடையே சிறு கூச்சலும் குழப்பத்தை விளைவிக்க அங்கே முன்னோடியாக இருந்த அமைச்சர் மயில்வாகனம் சிறு வயது முதல் தொண்டனாக இருந்து இன்று கட்சியின் முதன்மையான இடத்தில் இருக்கும்போது அடுத்த முதல் அமைச்சர் தான் என்று கனவில் இருந்தவர்க்கு பெரும் அடியாக விழுகவும் அதைத் தாங்கிக் கொள்ளாமல் உள்ளுக்குள் பொருமிக் கொண்டும் வெளியே வஞ்சகச் சிரிப்போடு தாட்சாயணியை புகழ்ந்து கொண்டிருந்தார்..


''நம் அய்யாவின் பெண் அறிவிலும் குணத்திலும் தங்கம் , அய்யாவின் மறுபிம்பமாக இருக்கிறார் அவரின் பெண்'', என்று தாட்சாயணியின் அப்பா மகேஸ்வரன் சக்ரவர்த்தி பெயரைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு 'அய்யா', என்று அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார் தன்னருகில் அமர்ந்திருக்கும் கல்வி துறை அமைச்சரிடம்… இப்படி பலதரப்பட்ட மனிதர்கள் நிறைந்த இடத்தில் தாட்சாயணி செயல் எவ்விதமாக இருக்கும்.. அவளின் துணிவும் செயலின் வீரமும் அவளை எந்தப் புதைக்குழியிலும் தள்ளாமல் காப்பாற்றபட அவள் எத்தனை போராட்டங்களை தாங்கிட வேண்டும் ..


குள்ளநரிக் கூட்டத்தில் சிறு ஆடு என்று நினைத்தவர்களிடையே சிறுத்தையாகச் சீறிப் பாயும் பெண்ணயவளின் அவதாரம் தான் தாட்சாயணி தேவி ..


இத்தனை குழப்பங்களும் பேச்சுகளும் கீழே நடக்க அவ்வீட்டின் பெரிய ஹாலில் பல அமைச்சர்கள் அமர்ந்திருந்திருக்க, அவர்களுக்குக் கொடுக்கும் பானங்கள் உணவு வகைகள் என்று பலர் கேட்பதைக் கொடுக்க ஆட்களை நியமித்திருருந்தார் அவ்வீட்டின் ராணி உமாதேவி.. மகேஸ்வரனின் தர்மபத்தினி..


ஹாலைத் தாண்டி யாரும் அடுத்த இடத்திற்கு நுழைய அனுமதில்லை.. அதற்குத் தகுந்தபடி ஆட்களை அனுப்பி விட்டுத் தன் கணவனைத் தேடிப் போனவள் அவர் சாமியறையில் இருப்பதைக் கண்டு அங்கே சென்றார் உமா தேவி.


''என்னங்க இன்னும் உங்கள் மகளுக்காக வைத்திருக்கும் வேண்டுதல்கள் முடியவில்லையா'', என்று கேட்டபடி வந்தவளிடம் பதிலளிக்காமல் தீப ஆர்த்தியைக் கடவுளுக்குக் காட்டிவிட்டு அவள் முன் நீட்ட அதிலிருந்து திருநீறை எடுத்துப் பூசியவளின் நெற்றிலும் வகிடுயிலும் குங்குமம்த்தை வைத்து விட்டவர் தனக்கும் திருநீறைப் பூசிக் கொண்டு தன் கதர் வேட்டியும் இடுப்பில்

அணிந்திருந்த துண்டை எடுத்து உதறித் தோளில் போட்டவர், தன் மனைவியின் பேச்சிலும் அவளின் மாசுமருவற்ற முகத்தில் எந்தவித ஆரவாரமோ எதிர்ப்பார்ப்போ இல்லாத சாந்த முகத்தைக் கண்டு முறுவலித்தார் மகேஷ்வரன் சக்ரவர்த்தி ..


மாநிலத்தின் முதல் அமைச்சரின் மனைவி, அடுத்து கட்சியின் பொது செயலாளராக மகள் பொறுப்பேற்க்கும் போதும் கூட அலட்டல் இல்லாத அவளின் குணத்தைக் கண்டு மெய் சிலிர்த்தாலும்.. ''என் மகளுக்கான வேண்டுதல் என்றும் நான் இருக்கும் வரை இருக்கும் உமா.. என் மகா பெரிய சக்தியே என் மகள் தான்.. நாளை இந்நாட்டை ஆள போகிறவள்... ஊர் உலகமே போற்றுமளவுக்குப் பெயரை வாங்கித் தரும் வீரலட்சுமி நம் மகள்'', என்று முகத்தில் மந்தகாசத்துடன் சொல்வதைக் கேட்டு உமாதேவி மகிழ்ந்தாலும் எவ்வளவு பெரிய பதவிக்குப் போனாலும் நாளை அவளுக்கான ஒரு வாழ்க்கையில் அழகிய கூட்டை உருவாக்கி அங்கே ராணியாகக் கோலோச்சி வாழ வேண்டும் என்பதே பெற்றவளின் எண்ணம்.


ஆனால் அவளோ தந்தையின் மறுபிம்பமே என்று நினைச்சு பெருமூச்சு விட்டவர், ''உங்கள் மகள் புராணத்தை வெளியே கேட்க ஒரு பெருங் கூட்டமே காத்திருக்கு… அங்கே போய் மூச்சு விடாமல் பேசுங்க… இங்கே வீட்டில் நீங்கள் குடும்பத்தின் தலைவர், நான் உங்க மனைவி அவள் உங்கள் பெண்.. அந்த நினைப்பை எப்போதும் மறக்காமல் இருந்தால் போதும்'', என்று சொல்லிய உமாதேவி..


'' நீங்க ரெடியாகி வந்தால் சாப்பிடலாம்.. மாத்திரை எடுக்கணும் ஞாபகம் இருக்கல'' என்று சொல்லியவரைக் கண்டு கம்பீரமாகச் சிரித்த மகேஷ்வரன்…'' என்ன தான் ஊருக்கே ராஜா ஆனாலும் பொண்டாட்டிக்குக் கூஜாவாகத் தான் தெரிகிறோம்'', என்று சொல்லிச் சிரிக்க ..


அதில் முகத்தைச் சுருக்கியவர் ''வீடு வேறு அரசியல் வேறு… இரண்டும் ஒன்றாக நினைச்சு எதும் பேசாதீங்க'', என்று கொஞ்சம் கோபத்துடன் சொல்லிய உமாதேவியைக் கண்டவர்..


''அம்மா பரதேவதை மலையிறங்கு தாயீ'', என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு ''தாட்சு மா இன்னும் கீழே வரலயா'',.. என்று கேட்டவர்.. ''நம்ம சக்தி எங்கே இந்நேரம் வந்திருக்கணுமே.. அவன் வந்தால் தான் பாப்பா மாடியிலிருந்து இறங்குவாள்.. இன்னுமா வரல'' என்று கேட்டபடி அறைக்குள் தன் கஞ்சிப் போட்டு விரைப்பாக இருக்கும் கதர் சட்டையை அணிந்தபடி கேட்டவர்க்குக் கட்சித் துண்டை எடுத்துக் கொடுத்த உமாதேவி,


"வந்துக்கொண்டே இருக்கிறார் துரை.. கூட்டத்திலே சிக்கிச் சின்னப் பிண்ணாமாகித் தானே உள்ளே வரணும்.. அவர் வந்தால் தான் நம்ம வீட்டு மகாராணி கீழே வருவாங்க.. ஆனால் இந்த வீட்டில் எல்லாரும் என்னை பம்பரமாகச் சுத்த வைப்பதில் கில்லாடிங்க", என்று சொல்லியவர்..


"வாங்க வெளியே, சக்தி வேந்தன் துரையார் வந்தாச்சு போல … ஹாலில் பேசும் சத்தம் இங்கே வரைக்கும் ஒலிக்கது.. இன்னும் மைக்கில் பேசினால் அவ்வளவு தான்", என்று சக்தி வேந்தனையும் கலாய்த்த மனைவியை காதலுடன் பார்த்த மகேஷ்வரனின் பார்வையில் .. "ச்சூ என்ன இந்தப் பார்வை .. போய் உங்க கட்சி ஆட்களிடம் இந்தப் பார்வையால் பாருங்க.. அப்படியே மயங்கிப் போய்யிருவாங்க", என்று சிறு குரலில் சிவந்த முகத்தோடு சொல்லியவளைக் கண்டு கலகலத்தவர்,


"ஏய் இது உனக்கானத் தனிப்பட்டப் பார்வையடி.. இதைப் போய் அங்கே காட்டினால் எனக்கு வேறு பட்டம் கொடுத்துவிடுவார்கள்", என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது அங்கே நிதானமான நிமிர்ந்த நடையுடன் சக்தி வேந்தன் வந்து கொண்டிருந்தான். ..


லெனின் சட்டையும் காட்டன் பேண்ட் அணிந்த நெடிய உருவம் தன் நீண்ட கால்களை எடுத்து வைத்து அவர்களை நெருங்க…


அவனின் உயரமும் களையான முகவெட்டும், முகத்திலே அறிவுக்களையில் மிகுந்திருக்க… முகத்தில் அனுபவங்களின் அணிவரிசையும் அதனால் வந்த இறுக்கமும் முகத்தில் பரவி இருந்தாலும் அதை மறைத்துப் இதழ்களில் புன்னகையுடன் வருபவனின் அழுத்தத்தைக் கண்ட உமாதேவியோ இவனின் படிப்பும் ஆஸ்தியை விட உயர்ந்த பண்பினை கண்டு எப்போது அவர்களுக்கு அவன் செல்லப் பிள்ளை தான் ..


மகேஷ்வரனின் அக்கா மகன் தான் சக்தி வேந்தன். சோஷியாலஜி படித்து அதற்கான மேல் படிப்பை வெளிநாட்டில் படித்துவிட்டு இங்கே வந்தவனை இருகரங்களால் அணைத்துக் கொண்டார் மகேஷ்வரன் சக்ரவர்த்தி ..


மகேஷ்வரனின் அக்கா நீலவேணியின் தவப்புதல்வன்…


நீலவேணியின் கணவன் கந்தர்வன் ஒரு நிகழ்வில் இறந்து விட அதன் தாக்கத்தைத் தாங்க இயலாமல் இருந்த நீலவேணி அவரின் தொழில்களின் சாம்ராஜ்ஜயத்தை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு அனாதை இல்லத்தை நிறுவி அதை வழிநடத்திக் கொண்டு அதிலே தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்..


தந்தையும் இல்லாமல் தாயும் துக்கத்தில் தனித்துத் தனிமையை விரும்பி அவருடைய சேவையை தொடரச் சென்று விட அப்பாவின் தொழிலான அரசாங்கத்தின் சாலைகளின் டெண்டர் எடுப்பதும் கட்டிங்களை டெண்டர் என்று தரம் வாய்ந்த கம்பெனியை நடத்திக் கொண்டு பெரிய அளவில் எடுத்துச் செய்யும் ''சக்தி கன்ட்ரெக்ஷன்'' என்ற பெயரில் அவனின் அப்பா தொடங்கியதை இன்று சக்திவேந்தன் நடத்திக் கொண்டிருக்கிறான். தான் செய்யும் வேலைக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லாதத் தொழிலாக இருந்தாலும் அனுபவ பாதத்தால் கற்றுத் தேர்ந்து மற்ற கம்பெனிகளிடமிருந்து முன்னிலையில் இருப்பவன்



இந்தப் போட்டி உலகத்தில் தொழிலில் ஜெயித்து முன்னிலையில் நிற்கும் சக்தி வேந்தன் மற்றவர்களுக்குச் சிம்ம சொப்பனம் தான்.. ஆனால் அவனை அவள் ஒருத்தி தவிர யாராலும் இலகுவாக்கவது முடியாத காரியம்.. அவளின் விழியசைவில் விசையாகச் செயல்படுவான்.


மகேஷ்வரனையும் உமாதேவியையும்

நெருங்கிய சக்தி அவருடைய பதவிக்கு மரியாதை தந்து ''அய்யா கிளம்பியாச்சா'', என்று கேட்க..


மகேஷ்வரன் பதிலளிக்கும் முன் உமாதேவி ''வெளியே தான் உனக்கு அய்யா.. இங்கே உனக்கு மாமா சக்தி அதை ஞாபகம் வைச்சுக்கோ'',..


''அங்கே இருக்கும் கதவைத் தாண்டி உள்ளே வந்தால் இது குடும்பம் இங்கே உறவு முறையோடு தான் பேசணும் அதன்படியே செயல்களும் இருக்கணும்'', என்று சொல்லியவரின் வார்த்தைகளில் இருக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளித்த சக்தி வேந்தன் ..


''அத்த நீங்க தான் பக்கா மாஸ்.. நாங்க எல்லாரும் வெளியே தான் ஹீரோ… வீட்டில் ஜீரோ தான்'',… என்று சொல்லிச் சிரிப்பவனை திருஷ்டி கழித்த உமா தேவி ''நீ எப்பவும் இதே சிரிப்போடு இருக்கணும் ராஜா'', என்று சொல்லிவிட்டு ''மாமாவை கூட்டிட்டு வா'', என்றவர்…


''அச்சோ உன் பச்சைக்கிளி அங்கே உனக்காகத் தவம் இருக்கா.. அவளைப் போய் மலையிறக்கிக் கீழே கூட்டிட்டு வா.. இந்த வீட்டுக்குள் நடக்கும் அப்பா பொண்ணின் அரசியலில் நான் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்… கொஞ்சம் காபாற்று ராஜா'', என்று உமாதேவியின் பேச்சில் கணவனும் சக்தியும் சிரிக்க…


''ம்ஹீம் என் நிலமை சிரிப்பா சிரிக்கது.. இதை எல்லாம் எங்கே போய் சொல்ல'', என்று புலம்ப அங்கே மீண்டும் ஒரு சிரிப்பலை எழுந்தது.


''அத்த அவ உங்க பொண்ணு.. அப்ப யார் மாதிரி இருப்பா சொல்லுங்க.. அப்படியே உங்க ஜெராக்ஸ் அவள்..

என்ன தான் என் மாமா ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் உங்க முன் கைக்கட்டி வாய் மூடி இருக்கவும் கழுத்தில் போர்டு மாற்றாதக் குறையாகத் தானே இருக்கிறார்'', என்று சொல்லிச் சிரிக்க..


மகேஷ்வரனோ ''அது தான் சக்தி உண்மை .. உங்க அத்தையின் கையில் பிரம்பு இல்லாத குறை தான் .. இல்லை என்றால் ஆடுடற ராமா ஆடு சொல்லி குரங்கு வித்தை குரளி வித்தை எல்லாம் காமிக்க வைச்சிருவா என்னை'', என்று சொல்லவும் .. சக்தியால் சிரிப்பை அடக்க முடியாமல் கலகலத்தவன்..அத்தையின் மின்சார பார்வையில் பஸ்பம் ஆகாமல் மாமாவிடம் 'நடக்கட்டும் நடக்கட்டும் கச்சேரி', என்று சைகை காமித்துவிட்டு மாடியேறினான் சக்தி வேந்தன்.


உ‌ஷ்ணப் பார்வையுடன் இருந்த உமாதேவியை சமாளிப்பதுக்குள் முழிபிதுங்கிய மகேஷ்வரன்..'' ஊரில் உள்ள பிரச்சினைகளை எல்லாம் தூசி மாதிரி தட்டிவிட்டுச் சென்று விடுகிறேன்.. ஆனால் இங்கே வீட்டில் இருக்கும் அம்மணி என்னை டிரீல் வாங்குதே'', என்று புலம்ப,


''டைனிங் ஹாலுக்கு வாங்க'', என்று அதட்டிவிட்டு போகவும் ''உமா.. உமி'',.. என்று தொடங்கியவரை திரும்பிப் பார்த்த உமா ''உமி நெல் அரைக்கும் மில்லில் கேளுங்க மூட்டை மூட்டையாகக் கிடைக்கும்'', என்று உதடுகளில் வழிந்த புன்னகையை அடக்கியபடி போக…


மகேஷ்வரனோ ''இன்று பாயிண்ட்க்கு பாயிண்ட் வச்சு செய்யறாலே'', என்று புலம்பிக் கொண்டே அவள் பின்னே சென்றார் மகேஷ்வரன் சக்ரவர்த்தி ..


சக்தி வேந்தனோ மாடிக்கு ஏறிச் சென்று ஒரு அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல அங்கே முன்னால் ஒரு வரவேற்பு அறை நான்கு பேர் அமர்ந்த பேசும் அளவுக்கு சோபா செட் ஒன்றும் அதன் முன் கண்ணாடி டீபாய்யில் எம்பிராய்ரி வேலைபாடு செய்த கிளாத் அலங்கரிக்க அதன் மேல் பூச்சாடியில் அன்றைக்கு மலர்ந்த மலர்கள் வீற்றிருக்க.. அந்த அறையின் சுகந்தத்தை நாசியில் நிரப்பிக் கொண்டு மனத்தை இதமாக இருக்கமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது..


அதற்கு அடுத்தபகுதியில் அமைதியாக அமர்ந்து படிக்க மேசையும் நாற்காலியும் இருக்க.. அதன் மேல் பென் ஸ்டேண்ட்டில் சக்தி அவளுக்கு அளித்த பேனாக்களும், சில கையேடுகளும் நீட்டாக அடுக்கி வைத்திருக்க.. அலமாரியில் புத்தகங்களும், மியூசிக் சிஸ்டமும் குடிக்கொண்டிருக்கும்..


அதுக்கு அடுத்தது தான் அவளின் படுக்கையறை ….


முன் அறை தாண்டி யாரும் உள்ளே நுழைந்திட முடியாது அவளின் அனுமதின்றி.. ஆனால் அத்தனை கட்டுகளையும் உடைத்துச் செல்லும் ஒருவன் இருக்கிறான் என்றால் அது சக்தி வேந்தன் தான் …


தாய் தந்தைக்கே அனுமதி அங்கே இல்லாத போதும் தினமும் சுத்தம் படுத்தும் ரங்கம்மாவை தவிர யாருமே அவளை நெருங்காமல் அன்பால் சிறை வைத்திருக்கும் கிளியை அவனைத் தவிர யாரும் நெருங்க முடியாத அவளின் முள்வேலியும் அவனே..


அங்கே உடை மாற்றும் அறையிலிருந்து வெளியே வந்த தாட்சாயணி கண்ணை உறுத்தாத வண்ணத்தில் சேலையும் காதில் மூன்று வைரக்கல்லில் சிறு தோடும், நுதலில் சிறு துளியாக ஒரு பொட்டும் நீண்ட மூக்கில் ஒற்றை வைரக்கல் மூக்குத்தியும் கழுத்தில் ஒரு முத்து மாலை என எளிமையாகவும் பார்ப்பவர்களின் கண்களுக்கு ஆடம்பரமானதாகத் தெரியாத வகையில் இருக்கத் தன் நீள் கூந்தலை இறுக்கிப் பிண்ணி இடை வரை தொங்கியதை கழுத்தின் முன் பக்கம் போட்டு விட்டு கண்ணாடி முன் நின்றவளின் முகத்தின் கம்பீரத்தோடு இருந்த தோரணையில் அவள் அழகு பன்மடங்கு பெருகித் தெரிந்தது.


தன் உடையினை முன்னும் பின்னும் சரிப்பார்த்துக் கொண்டிருந்தவளைக் கதவின் அருகே நின்றபடி கண்ணாடி ஊடே பார்ப்பவனின் விழி வீச்சில் சிறு கணங்கள் வெட்கத்திலும் நாணத்திலும் சிவந்த முகத்தோடு தடுமாறியவளோ அதை வெளிக் காட்டாமல் ''என்ன அத்தான் கதவைத் திறந்து உள்ளே வந்து திருட்டுப் பூனைப் போல பார்த்துக்கொண்டு இருக்க'',.. என்று கேட்ட குரலின் ஆளுமையிலும் குழைவிலும் சிறு மயக்கமுமே ஆச்சரியமும் நிறைந்து இருந்தது சக்தி வேந்தனுக்கு.


உமாதேவியின் வளர்ப்பு வீட்டில் அரசியல் சாயம் பூசாமல் உறவுகளின் பிணைப்பு மட்டுமே நிறைந்திருக்க…


அவனோ ''நான் ஏன் திருட்டுப் பூனைப் போல வர போகிறேன் செல்லக்கிளி.. நேராக உன்னிடம் வந்து சேர எனக்கு எல்லா வித ரைட்ஸூம் இருக்கே'', என்று பேசிக் கொண்டே அவளிடம் நெருங்கியவன் தன் முன்னே இழுத்து நிறுத்தி அவளை மேலும் கீழும் ஆராய்ந்தான்..


அப்பழுக்கற்ற அவளை இந்த குள்ள நரிக் கூட்டத்தின் முன் நிறுத்தப் போவதை நினைத்து வருந்தியவன் அவளின் அறிவு இந்த அரசியலின் தந்தரங்களில் எந்தவிதச் சிக்கலிருந்து மீட்டுவிடுமா.. மன அளவில் அவள் உறுதியாக நிலைத்து இருப்பாளா..


அவளின் பதவியால் தன்னை அவளிடமிருந்து வெகுதொலைவில் தள்ளி வைத்துவிடுமா… என்று அச்சம் மனத்திற்குள் இருந்ததை வெளியே காட்டாமல் அவளிடம் ''கச்சிதமான அரசியல்வாதி ஆயிட்டே போல பச்சைக் கிளி'', என்று சொல்லியவனின் குரலிருந்தக் கேலியில்..


''அதற்கு தான் நீயும் உன்றன் மாமாவும் என்னை இதில் சிக்க வைத்திருக்கீங்க. உங்க ஆடு புலி ஆட்டத்திற்கு என்னைப் பகடைக் காயாகப் பயன்படுத்தப் போறீங்க'', என்று சொல்லியவளின் குரலிலிருந்த ஆதங்கத்தில் அவன் அவளை இழுத்துத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு முதுகைத் தட்டிக் கொடுத்தான் சக்தி வேந்தன்.


அவள் வெளியே வீரப் பெண்ணாகத் திகழ்ந்தாலும் தன்னவனிடமும் பெற்றோரிடமும் குழந்தை உள்ளம் கொண்டவள் தான் தாட்சாயணி தேவி ..

தொடரும்

ஹாய் மக்கா இது புதுக் கதையின் தொடக்கம்.. சீக்கிரம் இக்கதையை முடிக்கணும் கடவுளே என்று வேண்டிக் கொண்டு பதிவு போட்டு இருக்கிறேன்.. படித்துப் பாருங்கள் .. உங்கள் கருத்துகள் தான் எனக்கு எழுத வைக்கும் சக்தி.. முதல் கதைக்குக் கொடுத்த ஆதரவை இக்கதைக்குக்கும் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளும் சமித்ரா... 😍 😍 😍 😍 😍 😍
received_740239797338195.jpeg




.
 
Top