• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாட்சாயணி தேவி..5

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
71
28
Karur
அத்தியாயம் ..5


தாட்சாயணி மனமோ குமறிக் கொண்டிருந்தது.. அப்பாவும் சக்தியும் இருவரும் சேர்ந்து என்னை இவர்கள் ஆட்டி வைக்கும் தலையாட்டிப் பொம்மையா நினைச்சிட்டாங்க போல.. எனக்கென ஒரு சுதந்திரமான பேச்சை கூட பேச இயலாமல் இருவரும் தன்னைக் கட்டிப் போட்டு இருப்பதாக எண்ணியவள் சீற்றத்துடனே அவனுடன் காரில் பயணித்தாள்..


சக்தியோ அவளின் மௌனத்தைக் கவனித்தப்படி வந்தவன், ''ஏய் கோபக்காரக் கிளியே,.. இன்னும் கோபம் தீரலயா'', என்று கேட்க…


அவளோ திரும்பி அவனை முறைக்க, ''ஹேய் பேபி காரில் ஏஸி ஓடும் போதே எவ்வளவு அனல் அடிக்கது பாரு'', என்று கிண்டல் பண்ணியவனை எதைக் கொண்டு அடிக்கலாம் என்றே தோன்றியது தாட்சாயணிக்கு..


இப்படியே ஒவ்வொரு முறையும் கிண்டலும் கேலியுமாக தன் மனத்தை திசை திருப்பி விடுவதே வேலையா செஞ்சுகிட்டு இருக்கான் என்று சக்தியை மனதில் வறுத்து எடுத்தாள் தாட்சாயணி ..


''ஏய், இப்ப என்னை எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்து எடுக்கிற தானே '', என்று சொல்லியவனை, சிறு ஆச்சரியம் கலந்த பார்வையோடு பார்த்தவளை நோக்கிக் கண் சிமிட்டியவன், ''அதே தான் நினைச்சியா'', என்று கேட்டு சிரிக்க…


அவனின் சிரிப்பை தன்னை மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, இவன் மனம் விட்டு சிரித்த சிரிப்பு எல்லாம் யாரோ களவாடிச் சென்று விட்டார்களே என்று எண்ணியவள், கண் சிமிட்டாமல் அவனைப் பார்த்தாள் தாட்சாயணி.


அவளின் பார்வையில் எதையோ அறிந்தவன் போல, ''ஹேய் என்ன மாமனின் சிரிப்பில் பிரீஸ் ஆயிட்டப் போல'', என்று சக்தி நக்கலடிக்க..


''ஆமாம் அத்தான் அப்படியே உறைஞ்சு பனிச் சிலையாக மாறிட்டேன்'', என்று சொல்லியவளைக் கண்டு,


''நான் ஆதவனாக மாறி உன்னை உருகச் செய்திருவேன் யட்சணி'', என்று சொல்லியவனின் குரலிலிருந்த காதலில் பேசற்றுப் போனால் மங்கை அவள்.


சில நொடிகள் இருவருக்குள் ஏதோ ஒன்று தடம் மாறிய போக மனத்தின் ஆசைகளோ கடலை விட விரிந்து படர்ந்து கிடக்க அதற்குள் மூழ்கிவிடவே எண்ணியவர்களின் பார்வை கட்டுண்டு கிடந்தது ..


யார் யாருக்குள் கட்டுண்டு இருந்தார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை ..


பின்னால் வந்த வாகனத்தின் ஹார்ன் ஒலியில் தன்னிலை திரும்பியவன் , தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவளைப் பார்க்க ..


அவளின் முகமும் மாறிவிட்டது … இவனுடன் இருக்கும்போது நான் நானாகவே இல்லை என்ற தோன்றியவுடன், ''என்னை நீ ஏதோ வசியம் செய்து வச்சிருக்க அத்தான்'',.. என்று மென்மையான குரலில் சொல்லியவளின் பேச்சில் இருக்கும் அன்பு மனத்தில் இருந்து வந்தது என்பதை அறியாதவனா அவன்..


''ம்ம்.. நீயும் தான் எனனை வசியம் பண்ணி வச்சிருக்க யட்சணி'', என்று சொல்லிவிட்டு, காரை மிதமான வேகத்தில் செலுத்தினான்..


அவனுடன் கிளம்பும் போது எவ்வளவு கோபமாகக் கிளம்பியவளை சில மணித்துளிகளிலே மனத்தை மாற்றி விட்டானே.. இப்படி பேச நினைச்சதை மறக்க வைக்கும் தந்திரசாலி தான் இவன்! என்று நினைத்தவள், ஆனால் கேட்க வந்ததை கேட்காமல் இருக்க முடியாதே.. ''ஏன் சக்தி அங்கே இருந்து அவ்வாறு வேகமாக அப்பாவும் நீயும் அவ்விடத்தில் என்னைப் பேச விடாமல் பேச்சை மாற்றி வெளியே அழைச்சிட்டு வந்துட்டே?'',.. என்று கேட்டவளை உற்று நோக்கியவன்..


யாருமற்ற சாலையில் மரத்தடியில் காரை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்துத் திரும்பி அமர்ந்தான் சக்திவேந்தன்.


அப்போது அவனிடமிருந்த இலகுதன்மை குறைந்து ஒரு கடினம் குடியேற.. அவளிடம் எந்த மாதிரி சொன்னாள் ஏற்றுக் கொள்வாள் என்று எண்ணத்தோடு பேச்சைத் தொடங்கியவனை நோக்கிக் கையை நீட்டி தடுத்தவள் ''பேச வேண்டாம் அத்தான், நான் பேசணும்'', என்று அழுத்தமாக உரைத்தவள்,


''கட்சிக்குள் இவ்வளவு பெரிய பொறுப்பைத் தூக்கிக் கொடுக்கும் போதே என்னைப் பற்றியும் என் திறமை பற்றி உங்க இருவருக்கும் தெரியாதா.. பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இப்படி உங்க பின்னால் ஒளிந்து கொள்வதற்கு எனக்கு எதற்கு இந்தப் பதவி கொடுத்தீங்க.. இதை நான் கேட்டனா.. இந்தப் பதவியைக் கொடுங்க'', என்று சிறு சீற்றத்துடன் பேசியவளின் வதனமோ சிவந்து போய் கிடந்தது.


அவளின் கோபம் புரியாமல் இல்லை சக்திக்கு … ஆனால் கட்சியின் வரும்போது அங்கே பலரின் சுயரூபம் எப்படி? என்பதை எத்தனை வருடங்கள் ஆனாலும் கண்டு பிடிக்க முடியாதே. ..


கூடவே இருந்து குழி பறிக்கும் ஆட்களும் உண்டு என்பதை தாட்சாயணிக்கும் தெரியும்.. ஆனால் பொறுப்பை கையில் ஏந்தியுடன் எல்லாமே நடக்கணும் என்று நினைத்தால் அது அவளின் வீழ்ச்சிக்கு அடிக்கோலாக அமைந்து விடும் என்று தோன்றியதால் தானே அவளை அங்கிருந்து அழைச்சிட்டு வந்தேன் என்று நினைத்தவன்… அதை அவளிடம் விளக்கிச் சொல்வதைவிட அவளே புரிந்து கொள்ளட்டும் .. சில விடயங்களை அவரவர் உணர்ந்து தெளிந்தால் தான் உண்டு என்று நினைத்தவன், அவள் பேசியதற்கு மேற்கொண்டு வாதாடாமல் ,


''இங்கே பாரு செல்லக்கிளி.. உனக்குத் திறமை இல்லை என்று நானோ உன் அப்பாவோ நினைச்சிருந்தால் உன்னை அரசியலில் வர வச்சிருப்பமா சொல்லு",.. என்றவன், "தேவைற்ற விவாதங்களால் உன் அடிப்படையான குணாதிசயங்களே மாறிவிடும் டா … இங்கே படிப்பால் வந்த அறிவாலோ, அதிகாரமாகவோ எதுவும் சொல்லிச் செயல்படுத்த முடியாது .. சில விஷயங்களை அவர்களில் சென்று விவேகமான முறையில் மாற்றி அமைக்க வேண்டுமே தவிர, இங்கே பிரச்சாரம் மாதிரி பேசவும் அறிவுரை சொன்னாலோ எடுபடாது… நீ இன்னும் பேசினால் வீண் விவாதங்களால் மேலும் மேலும் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்பிருந்தால் தான்'' .. என்று சொல்லிவிட்டு, ''இனி நீ பேசும் ஒவ்வொரு சொல்லும், செயலும் விலை மதிப்பில்லாத ஒன்றாக இருக்கணும் .. இனி உனக்குள் பொக்கிஷமான புதையலான சொற்களைப் பூட்டி வைச்சுக்கோ.. அந்தந்த இடத்தின் தேவைக்கேற்ப பேசினால் ,உன் சாதனையை இந்த நாடே கொண்டாடும்'', என்று அழுத்தமாகச் சொல்லியவன்,


''இதைப் பற்றி இனி பேச வேண்டாம்'',.. என்று சொல்லிவிட்டு காரை எடுத்தவனின் தீட்சண்யமான பார்வையில் தன் கோபம் தணிந்தவளோ.. அதன்பின் எதுவும் பேசாமல் அமைதியாக சீட்டில் சாய்ந்து அமர்ந்து விட்டாள் தாட்சாயணி …


அவளின் அமைதிக் கூட அவனை வருத்த, ''இங்கே என்னைப் பாரு தேவியராரே,.. அடுத்த வாரம் நமக்குக் கல்யாணமா, . .. அது தெரியும் தானே .. அன்று நமக்கே நமக்கான நாளில் நம் கனவுகளை பூர்த்தி செய்யும் நல்லாளைப் பற்றி நினைச்சு மாமனை எப்படி எல்லாம் சந்தோஷமாக வச்சுக்கலாம் என்று நினைச்சுக்கோ'', என்று சொல்லியவனை முறைக்க முயன்று தோற்றவளின் முகமோ செந்தாமரையாக சிவந்து மலர்ந்தது ..


''இது இதைத்தான் சொல்றேன்.. கல்யாணம் முடிகிற வரை என்னை மட்டுமே நினைக்கனும்'', என்று சக்தி சொல்ல..


''அப்போ அதுக்கு அப்பறம் உன்னை நினைக்க வேண்டாமா மாமா'', ..என்று சிறு குறும்புடன் கேட்டவளை….


''உன்னைப் பெரிய அறிவாளி நினைச்சது தப்போ தோனது'', என்று சொல்லியவனின் வார்த்தையிலிருக்கும் நக்கலில் … முறைத்தவளோ ..


''உன்கிட்ட பேசுவதை விட இந்தக் காரிலிருந்து இறக்கி விடு.. அப்படியே பொடிநடையா நடந்து வீட்டுக்குப் போறேன்'', என்று சொல்லிச் சிரிக்கக் கூடச் சேர்ந்து சக்தியும் சிரித்தான் ..


காரில் அவர்களின் சிரிப்பொலி மட்டுமே நிறைந்திருக்க, வீடு வந்ததுமே இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.


அங்கே ஆசிரமத்திலிருந்து வந்திருந்த நீலவேணி உமாதேவிடம் மும்மரமாகப் பேசிக் கொண்டிருந்தார் ..


எத்தனை வருடங்களுக்குப் பிறகு தன் அம்மா ஆசிரமத்திலிருந்து வீடு வந்தது நினைத்தபடி அவரிடம் நெருங்கினார்கள் தாட்சாயணியும் சக்தியும் …


கல்யாணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்த நீலவேணி, சக்தியும் தாட்சாயணி அருகில் வந்ததைக் கவனித்தவர், சிறு வாஞ்சை கலந்த பார்வையுடன் ஒருவருக்கு ஒருவர் பொறுத்தமான ஜோடியாக இருப்பதைக் கண்டு மனம் உவகை அடைந்தார்..


தன் மகனையும் மருமகளையும் இருபக்கமாக தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.


அதைக் கண்ட உமாதேவியோ.. தன் கண்கள் கலங்க அவர்களைப் பார்த்தவர், இப்படி குடும்பமாக மூவரும் இணைந்து இருந்தால் நல்லா இருக்கும் .. ஆனால் அதற்கு நீலவேணி ஒத்துக் கொள்ள மாட்டாரா என்று நினைத்தபடி அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, மகேஷ்வரனும் அப்போது வீட்டினுள் நுழைந்தனர் தன் அக்காவைக் கண்டதும் வேகமாக அவர் அருகில் செல்ல,


நீலவேணி தன் தம்பியைப் பார்க்க அங்கே அவ்விடத்தில் சிறிது நேரம் பாசமழை பொழிந்தது.. ''அக்கா, எவ்வளவு நாளாச்சு, நீங்க இங்கே வீட்டுக்கு வந்தது'',..என்று சொல்லிக் கண் கலங்கினார் மகேஷ்வரன்.


அதைக் கண்ட உமாதேவியோ.. ''இங்கே பாருய்யா பாசமலரைக் கண்டதும் அய்யா அப்படியே மெல்ட் ஆயிட்டாரு'', என்று சொல்ல…


அதைக் கேட்டு மனைவியை மகேஷ்வரன் முறைக்க, அதைப் பார்த்த மற்றவர்களோ சிரிப்பில் அவ்வீடே அதிர்ந்தது.


அதன்பின் கல்யாணத்திற்கு தேவையான பட்டு சேலை பட்டு வேஷ்டி எடுக்க, தாலிக் கொடி செய்ய என்று அடுத்த நாள் போக பெரியவர்கள் முடிவு செய்ய,


சக்தியோ ''நாளைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு''.. என்று சொல்லவும் தாட்சாயணி முகம் வாடியது.


அதைப் பார்த்தவனோ "ஹேய், நாளைக்குக் கம்பெனியிலே மீட்டிங் இருக்குடா ஒரு டெண்டர் எடுப்பதைப் பற்றி முடிவு எடுக்கணும்", .. என்று சொல்ல,


அவளோ ''தினமும் வேலை மீட்டிங் எல்லாமே இருக்கத் தான் செய்யும், அதற்காக நம்முடைய கல்யாணத்திற்குத் துணி வாங்கக் கூட நேரமில்லை என்று சொன்னே அவ்வளவு தான்…, இதுல இவர்களே நான் நினைச்சுகிட்டு இருக்கணுமா… இவர் மட்டும் என்னை நினைக்க மாட்டாங்க'',… என்று புலம்பியவளோ அவனிடம் கண்டிப்பா நீ வரணும்,.. இல்லை நானும் போக மாட்டேன்'',... என்று சிறு கடுமை கலந்த குரலில் சொல்லியவள்,


நீலவேணியிடம் திரும்பிப் ''பாருங்க அத்த உங்க மகனை… நாளை அவர் இல்லாமல் நான் மட்டும் போக முடியுமா!.. நீங்களே போய் எடுத்து விடுங்கள் நா வரவில்லை", என்று சொல்லிவிட்டு.."நான் தூங்க போறேன்.. தலைவலி வந்திருச்சு", என்று நெற்றியை அழுத்திக் கொண்டே தன்னறைக்குச் சென்று விட்டாள் தாட்சாயணி..


"ஏன் சக்தி இப்படி அவளைக் கோபப்படுத்திற?",.. என்று நீலவேணி தன் மருமகளுக்காக பரிந்து பேச,


"அம்மா இது முக்கியமான மீட்டிங் மா.. கவுர்மென்ட் டெண்டர் எடுப்பது பற்றி பேச்சு வார்த்தை மா.. பல போடடி கம்பெனிகளுக்கிடையே நாம் போட்டிப் போட்டு எடுக்கிறது மா'',.. .. என்று சொல்லியவன், தன் தலையை கோதியபடி உமாவிடம் திரும்பி ''நாளைக்கு எத்தனை மணிக்கு அங்கே போகணும் அத்தை'', என்று கேட்டவனிடம் ,


''நாளைக்கு உனக்கு எந்த நேரம் சரி வரும் சொல்லு சக்தி அந்த நேரத்திற்குப் போகலாம்'',.. என்று உமாதேவி சொல்ல,


அவனோ'' நீங்க முதலில் போய்விடுங்கள் அதன்பின் நான் வருகிறேன்'', என்று சொல்லியவன் தன் தாயைப் பார்க்க..,


அவரோ ''நானும் கிளம்பறேன் சக்தி ஆசிரமம்த்திற்கு'', என்று சொல்லிவிட்டு அவன் கன்னத்தை வருடியவர், ''நீ போய் அவளைச் சமாதானப்படுத்தி விட்டு வீட்டுக்கு போ'', என்று சொல்லி தன் தம்பிடமும் அவன் மனைவியிடம் தலையசைத்தவர் தன் ஆசிரமத்திற்குக் கிளம்பினார் நீலவேணி.


தன் தாய் கிளம்பியதும் மாடிக்குச் சென்ற சக்தி அங்கே தாட்சாயணியோ உறக்கத்தின் பிடியிலிருக்க, இவ கோபமாக வந்தால் சமாதானப்படுத்தணும் என்று எண்ணி வந்தால் அம்மணி தூங்கிறாங்க.. இதுவும் நல்லது தான்.. இல்லையென்றால் இவளைச் சமாளிக்க நான் தலைகீழாக நின்னு தண்ணீ குடிக்கணும் .. என்று எண்ணியவன் கீழே வந்து தன் மாமாவிடமும் அத்தையிடம் சொல்லி விட்டு கிளம்பிவிட்டான் சக்தி..


மறுநாள் மகேஷ்வரனும் உமாதேவி மட்டுமே கடைக்குச் செல்லுவதாகச் சக்தியிடம் போன் பண்ணிச் சொல்லிவிட்டு செல்ல, சக்தியோ..

''மலையேறி விட்டாள் மங்கத்தா … இவளை மலையிறக்கி அதன்பின் கடைக்குப போய் இப்பவே கண்ணை கட்டுதே கடவுளே'', என்று தனியாகப் புலம்பியவனிடம் அவனுடைய மானேஜர் ''சார், மீட்டிங் எல்லாரும் வந்துட்டாங்க'', என்று சொல்லவும்…

அவன் கவனம் வேலையில் குவிய, திருமணத்திற்கு ஆடை வாங்கப் போவதை மறந்து போனான் சக்தி வேந்தன்.

தொடரும்..

கதை களம் எப்படி இருக்கு என்று உங்கள் கருத்துக்களை கூறுங்கள் மக்கா.. 😍 😍 😍 😍
IMG-20230202-WA0018.jpg













.