• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தினம் ஒரு புரோட்டீன் 2(முட்டை சுக்கா)

Pandiselvi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 30, 2021
Messages
33
முட்டையின் பலன்கள்:

முட்டையில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. அவை,

புரதச்சத்து: ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.
வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.

முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்..

முட்டை சுக்கா:

தேவையான பொருட்கள்:


முட்டை - 4
மிளகுதூள் - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2( மீடியம் சைஸ்)
குழம்பு மசாலா தூள் - 2 ஸ்பூன்
அல்லது
சீரகத்தூள் -1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
கரம்மசாலா - 1/4 ஸ்பூன்
கடுகு, உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலைகள்

செய்முறை:

1. ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஸ்பூனால் நன்றாக அடித்து கலக்கி விடவும்.

2. ஒரு சமமான டிபன் பாக்ஸில் எல்லா புறமும் எண்ணெய் தடவி கலக்கி வைத்த முட்டையை ஊற்றி அதை மூடவும்.

3. பின் கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் ஸ்டான்ட் வைத்து அதன் மேல் முட்டைக் கலவை உள்ள டிபன் பாக்ஸை வைத்து மிதமான தீயில் பதினைந்து நிமிடம் வேக வைக்கவும். கடாயிக்கு பதில் இட்லி பாத்திரத்திலும் வேக வைக்கலாம்.

4. வேக வைத்த முட்டைக் கலவையை நன்றாக ஆறிய பிறகு டிபன் பாக்ஸின் ஓரங்களை ஸ்பூனால் எடுத்து விட்டு பின் சிறு சிறு சதுர வடிவமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

5. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு பொறியவும் கறிவேப்பிலை மற்றும் பொடி பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொண்ணிறமாகும் வரை வதக்கவும்.

6. பின் அதில் இரண்டு மீடியம் சைஸ் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.

7. பின் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

8. பின் அதனுடன் குழம்பு மசால் தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்து வதக்கவும். வீட்டில் அரைத்த குழம்பு மசால் தூள் இல்லையெனில் 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் மல்லி தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து பதினைந்து செகன்ட்ஸ் வதக்கவும்.

9. மசாலா வதங்கவும் அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

10. கிரேவி கொதித்தவுடன் வேகவைத்த முட்டைகளை அதனுடன் சேர்த்து நன்றாக மசாலா முட்டைகளுடன் சேரும் வரை வதக்கி அதனுடன் அரை ஸ்பூன் கரம்மசாலா சேர்த்து பதினைந்து வினாடிகள் வதக்கி கொத்தமல்லி இலையைத் தூவி கலக்கி விட்டு இறக்கினாள் சுவையான முட்டை சுக்கா ரெடி..!!


தொடரும்..
 

Attachments

  • 20211122_190512.jpg
    20211122_190512.jpg
    69.8 KB · Views: 18
Top