• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
டீனாவின் வாக்குமூலப்படி நீத்துவின் பின்னால் ஏதோ ஒரு உண்மை மறைந்திருக்கிறது என்பது புரிந்திட, ரோஹன் மீதான வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

ரோஹனை காவலர்கள் அழைத்துச் செல்ல எதிரே வந்த அவனது வழக்கறிஞர் செந்தில்நாதன் “போலீஸ் விசாரணைல சொல்லாத உண்மைய கோர்ட்டுல எல்லார் முன்னாடியும் உன் கிட்ட இருந்தும் என்னால வாங்க முடியும். தேவைப்பட்டால் அதையும் செய்வேன். அடுத்த ஹியரிங்ல என்னனாலும் நடக்கலாம்… எல்லாத்துக்கும் ரெடியாவே வா” என்று கண்களில் சிரிப்பைத் தவழவிட்டு, இதழ் மொழிகளில் மிரட்டலை விடுத்து நின்றார்.

அப்போதும் ரோஹன் என்ற அழுத்தக்காரன் அசைந்தான் இல்லை. அதே அசட்டைப் பார்வையும், விரக்தி புன்னகையும் சிந்திவிட்டு காவலர் வாகனம் நோக்கிச் சென்றான்.

செந்தில்நாதன் தன் பங்கிற்கு ரோஹனை ஜாமின் எடுக்க முயற்சி செய்ய, இப்போதும் அதனை மறுத்துவிட்டான் அவன். ரோஹன் தான் குற்றமிழைத்தவன் என்று நினைத்து சிறையில் இது நாள் வரை அவனை புழுவினும் இழிவாக நினைத்து நடத்தியவர்கள் கூட சற்றே மரியாதை தரத் தொடங்கினர்.

அடுத்த ஹியரிங் அன்று செந்தில்நாதன் மற்றொரு முக்கிய ஆதாரத்தை நீதிமன்றத்தில் அனைவரும் பார்வைக்கும் சமர்ப்பித்தார்.

மருத்துவமனையில் ரோஹனிடம் அடி வாங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ராக்கி என்பவனுக்கு, சிகிச்சை தாமதமாகத் தான் தொடங்கியிருக்கின்றர். அதன் காரணத்தை அறிந்துகொள்ள சிகிச்சை அளித்து மருத்துவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

அதில் செந்தில்நாதனின் குறுக்குக் கேள்விகளில் உண்மை வெளிவரத் தொடங்கியது.

“ராக்கேஷ் அனுமதிக்கப்பட்டு மூன்று மணிநேரம் கழிச்சு தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சு இருக்கிங்க… அது ஏன்?” என்ற செந்தில்நாதனின் கேள்விக்கு பலவிதமான பதில்கள் கிடைத்தது மருத்துவமனையின் தரப்பிலிருந்து.

“ஒரு மனிதன் அடிச்சு இரண்டு வாரமா கண்திறக்க முடியாமல் போகுமா?”

“போகும்… உடல் பலவீனமா இருந்தால் கண்டிப்பா அவர் கண் திறக்க நாட்கள் ஆகும்”

“ராக்கேஷ் ஒரு ஸ்போர்ட்ஸ் ப்ளேயரும் கூட… அவர் பூட் பால்ல ஜெயிச்சு கப் வாங்கின ஃபோட்டோ… இதில் இருக்கிற ராக்கேஷ்-ஐப் பார்த்தா நல்லா திடகார்த்தமா தானே இருக்கார். எப்படி பலவீனமானவரா ஆனார்?”

“அது அவங்க பூட் ஹாபிட்னால கூட இருக்கலாம்…”

“பூட் ஹேபிட்னா? சின்ன வயசுல இருந்து சாப்பிட்டத சொல்றிங்களா? இல்லே அந்த நேரத்துல சாப்பிட்டத சொல்றிங்களா?”

“ரெண்டும் தான்... ஆனா ட்ரீட்மென்ட் லேட்டா ஸ்டார்ட் பண்றது, பெரும்பாலும் அவங்க அன்னேரம் என்ன மாதிரி பூட் எடுத்துக்கிட்டாங்கன்றதப் பொருத்து தான்.”

“ராக்கேஷ் என்ன மாதிரி பூட் எடுத்திருப்பார்னு நீங்க நினைக்கிறிங்க? சரியா உங்களால கணிச்சு சொல்ல முடியுமா?”

இப்போது தலைமை மருத்துவர் சற்றே தடுமாறினார். “அது…. ஆல்கஹால் மாதிரி ஏதாவது…” என்று இழுக்க,

“சோ… ராக்கேஷ் ட்ரிங்க் பண்ணிருக்கார்?”

இப்போது தலைமை மருத்துவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. மறுபடியும் செந்தில்நாதனே தொடர்ந்தார்.

“அப்படி அவர் ஆல்கஹாலிக் ட்ரிங்க் அருந்தியிருந்தா அதை ரிப்போர்ட்ல ஏன் மென்ஷன் பண்ணாமவிட்டிங்க? இந்த மாதிரியான ட்ரிங்க் எடுத்திருந்தார், அதனால தான் ட்ரீட்மென்ட் தாமதமாக எடுக்கப்பட்டதுனு நீங்க ரிப்போர்ட் கொடுத்திருக்கனும் தானே!” என்ற குற்றச்சாட்டை முன்னால் நிறுத்தி நீதிபதியின் புறம் திரும்பி,

“சோ… பர்பஸ்ஸாகவே தான் உண்மை மறைக்கப்பட்டிருக்கு யுவர் ஆனார். ராக்கேஷ் உடல்நலம் பற்றிய முழு உண்மையும் வெளிவர வேண்டும் என்றால் ராக்கேஷ் அரசு மருத்துவர் கண்காணிப்புக்கு கீழ சிகிச்சை எடுக்கனும்னு நான் விரும்புறேன்.” என்று கூறி தன் இடம் சென்று அமர்ந்து கொண்டார்.

வழக்கறிஞர் செந்தில்நாதனின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசு தரப்பில் இருந்து ஒரு மருத்துவர் நியமிக்கப்பட்டு, ராக்கேஷ் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவமுறை, அத்தோடு இணைந்த கோப்புகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும், இதற்கு மேல் ராக்கேஷ்-ன் சிகிச்சை அரசு தரப்பில் தான் நடத்தப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ராக்கேஷின் மருத்துவ அறிக்கை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில் அவன் போதை மருந்து எடுத்திருந்தது வெளிவந்தது. அது இறந்த சயந்தனின் தந்தையிடம் இருந்தும் மறைக்கப்பட்டிருக்க, தந்தைமார்கள் மூவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கை கலப்பும் நிகழ்ந்தது.

இதனை அறிந்து கொண்ட செந்தில்நாதன் மேலும் கொஞ்சம் தீவிரமாக இறங்கி தன் தேடலைத் தொடங்கினார். அதில் அவர் அறிந்து கொண்ட உண்மைகள் அவரையும் சற்று அதிகமாகவே மிரல வைத்திருந்தது.

அதன்பிறகு ராக்கேஷ் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் இருவரையும், நேரில் சென்று தினமும் பார்த்து வந்தார் செந்தில்நாதன். இருவரையும் கவனித்துக்கொள்ள நம்பக நபர் ஒருவரை அவரே ஏற்பாடு செய்து உடல்நலம் தேறி வரும்வரை இருவரையும் கவனித்துக் கொள்ளும்படி கூறினார்.

அவர் எதிர்பார்த்தது போலவே ராக்கேஷ் விரைவாக உடல்நலம் தேறி வர, அடுத்த சாட்சியாக அவனே நீதிமன்றம் அழைத்துவரப்பட்டான். ராக்கேஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் மரணத்திற்கான நொடிகளை எண்ணிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்த ரோஹனுக்கு அவனை உயிருடன் கண்டதும் காவல் தடைகளையும், காவலர்களையும் தாண்டிச் சென்று பிழைத்தவனை மீண்டும் ஒருமுறை கொல்லத் துணியும் வெறி தான் மூண்டது. ராக்கேஷை நோக்கி அடி எடுத்து வைத்தவனின் கால்கள் செந்தில்நாதனின் மிரட்டல் பார்வையில் பின்னடைந்தது.

அதுமட்டுமல்லாமல் ராக்கேஷை கைத் தாங்கலாய் பிடித்து அழைத்து வந்த பெண்ணைப் பார்க்கையில் அவனுக்கு மேலும் கொஞ்சம் கொலைவெறி தான் ஏற்பட்டது. ஒருவழியாக தன்னை அடக்கி நீதிமன்றத்திற்கும், செந்தில்நாதனுக்கும் மதிப்பளித்து அமைதி காத்தான்.

நீதிபதியோ “ராக்கேஷிடம் குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறீர்களா?” என்று செந்தில்நாதனிடம் கேட்க, அவரோ எழுந்து நின்று ராக்கேஷ்-ஐ கூர் பார்வை பார்த்துவிட்டு, “நீதிமன்றமும் சிறைச்சாலையும் தப்பு செய்தவங்க தானே அதை உணர்ந்து தன்னைத் திருத்திக்கிறதுக்கான இடம்… அங்கே அவர்களுக்கு மறுவாய்ப்பு தரப்படுது… அதை தப்பு செய்கிறது யாரா இருந்தாலும் அவங்களே புரிந்து தடக்கனும்னு தான் நான் நினைக்கிறேன்.

தப்புக்கு துணை போறவங்களை உருட்டி மிரட்டி, குற்ற உணர்ச்சியைத் தூண்டி இப்படி ஏதாவது ஒரு வழியில உண்மையான வரைவழைக்கலாம். ஆனா தப்பு செய்றவங்க!!! தான் செய்த தப்பை உணர்ந்து அவர்களே உண்மைய சொல்லனும். ராக்கேஷ்-ம் அப்படி உணர்ந்து சொன்னா சந்தோஷம் தான். நான் அவரை எந்த கேள்வியும் கேட்டு குடைய விரும்பலே யுவர் ஆனர்.” என்று கூறி அமர்ந்து கொண்டார்.

ஆனால் எதிர் கூண்டில் நின்றிருந்த ரோஹனால் அப்படி விடமுடியவில்லை. “இப்போ மட்டும் இவன் உண்மையான சொல்லலேனா இவனும் சரி, என்னை இங்கே நிறுத்தின இவளும் சரி, ரெண்டு பேரையும் சும்மா விடமாட்டேன். என்னென்ன கம்ப்ளைண்ட்லாம் என் மேல போடப்பட்டதோ அதையெல்லாம் நடத்திட்டு தான் ஜெயிலுக்கு போவேன்.” என்று உணர்ச்சிப் பெருக்கில் உறுமினான்.

“இது நேரடி மிரட்டல் யுவர் ஆனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று எதிர்கட்சி வக்கீல் உரைக்க, நீதிபதியும் அதனையே வழிமொழிந்தார்.

“ரோஹன் உங்க மேல இருக்குற குற்றம் இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படலே! இப்படி கொலை மிரட்டல் விடுவது சட்ட பூர்வமாக தவறு. இதற்கு உங்களுக்கு அபராதம் விதிக்கப்படுது.” என்று கூறி அதனை தீர்ப்பில் எழுதிக் கொண்டு ராக்கேஷை உண்மையை உரைக்குமாறு கூறினார்.

“ராக்கேஷ் நீங்க ஏதாவது சொல்ல நெனச்சா இங்கே எல்லார் முன்னோடியும் சொல்லலாம். இல்லே இதனை மறைமுக வழக்கா இதனை தொடர நெனச்சாலும் நீங்க சொன்னா அதற்கு ஏற்பாடு பண்ணிடலாம்”

“எல்லார் முன்னோடியும் சொல்றதுல எனக்கு எந்த அசிங்கமும் இல்லை... சோ நான் இங்கேயே சொல்றேன்.” என்று கூறிய ராக்கேஷ்ஷின் முகத்தில் ஏதோ சாதித்துவிட்ட பெருமிதமும், அதற்குள் மாட்டிக்கொண்டோமோ என்ற ஏமாற்றமும் ஒருசேரத் தெரிந்தது.

“இது என்னோட த்தர்ட் அட்டெம்ட்… ஏற்கனவே டெல்லி போனப்போ ரெண்டு பொண்ணுங்களை இதே மாதிரியே அணு அணுவா அனுபவிச்சு, அவங்களை டார்ச்சர் பண்ணி வலியும், வேதனையும் தாங்காம என் கிட்ட கெஞ்சவிட்டு, கொன்னு அப்பறமும் அவங்களை அனுபவிச்சேன். பொண்ணுங்க கெஞ்சும் போது இந்த ஆல்கஹால், ட்ரக்ஸ் இதெல்லாத்தையும் விட அப்படி ஒரு போதை… இதெல்லாம் என்ன போதை தருது, பொண்ணுங்க அவங்க கொஞ்சி பேசிய குரல்ல கெஞ்சி கதறி மண்டியிட்டு என் முன்னாடி நிக்கும் போது… ப்ப்பா… .. அப்படி இருக்கும்… . இன்னும் இன்னும் அவங்கள எடுத்துக்கனும் போல இருக்கும்.”

தன்னையும் மறந்து பெண்கள் மீதான போதையில் பேசியவனின் முகம் மின்னிய மிளிர்வில் நீதிமன்றமே அதிர்ந்து அமைதியானது. அவன் பேச ஆரம்பித்த நொடியே நீதிமன்றத்தில் ஈ ஆடவில்லை. ஒருவரும் அசையவில்லை. இந்த வழக்கில் இப்படி ஒரு மர்மம் மறைந்திருக்கும் என யாருமே எதிர்பார்த்திடவில்லை.

ரோஹன் மீது குற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று செந்தில்நாதன் இந்த வழக்கில் வாதம் செய்யத் துடங்கியவுடனேயே ஓரளவு அது அனைத்து செய்திகளிலும் வரத் தொடங்கியிருந்தது… அதனால் வெகு இயல்பாகவே தப்பு செய்தவன் ராக்கியாகத் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரும் மனதிலும் தோன்றியிருந்தாலும், இது மூன்றாவது அட்டெம்ப்ட் ரேப் அன்ட் மர்டர் என்பதனைத் தான் யாரும் நினைத்துக் கூட பார்த்திடவில்லை.

ராக்கியின் அருகில் நின்றிருந்த, இத்தனை நாள் மருத்துவமனையில் அவனுக்கு பணிவிடை புரிந்த மஹன்யாவுமே தன் காதுகளையே நம்ப முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படிப்பட்டவனிடமா செந்தில்நாதன் அவனை கவனித்துக் கொள்ளும்படி தன்னை அனுப்பிவைத்தார்! என்ற பிரம்மிப்பு ஒருபுறம் என்றால் தன் தோழியையே தன் சுகத்துக்காக பலி கொடுத்துவிட்டானே! இப்படி ஒரு பச்சோந்தி குணம் இவனிடம்! என்ற அதிர்ச்சி ஒருபுறம்.

நீதிபதியும் இதனைத் தான் எண்ணினார் போல. எவரும் ராக்கேஷை குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை என்பதனை அறிந்து அவரே வினா தொடுத்தார்.

“ஆனா நீ உன் ப்ரெண்ட் கிட்டேயே இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கேயே? அந்த பொண்ணு உன் ப்ரெண்டு தானே! உனக்கும் நீத்துவுக்கும் எதுவும் முன்பகை இருக்கா? இல்லே அவள் மீது உனக்கு எதுவும் வெறுப்பா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லே. சும்மா ப்ரெண்ட்ஸோட சுத்தி பார்க்க தான் மும்பை வந்தேன். வந்த இடத்துல பல லவ்வர்ஸ் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிறது பார்க்கும் போது எனக்குள்ள இருக்க இந்த குணம் என்னை கன்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சது.”

என்ன தான் ராக்கேஷ் நீதிபதியைப் பார்த்து பேசினாலும், விக்கி மற்றும் டீனாவிற்கு அவன் தங்களைத் தான் குறிப்பிடுகிறான் என்பது நன்றாகவே புரிந்தது.

அருகில் நின்றிருந்தவளை சுட்டிக்காட்டி ராக்கி மீண்டும் பேசத் தொடங்கினான். “இதோ இவளை பலிவாங்க நீத்து போட்டுக் கொடுத்த ப்ளான் என்னை மொத்தமா இழக்க வெச்சது. மஹன்யா ரூமுக்கு வந்ததும், ப்ரெண்ட்ஸை எப்படியாச்சும் சரி கட்டி, நான் மத்த ரெண்டு பொண்ணுங்களை என்னெல்லாம் செய்தேனோ அதை அப்படியே இவகிட்டேயும் செஞ்சு எனக்குள்ள இருந்த மிருகத்துக்கு தீனி போட்டுக்கலாம்னு நெனச்சேன். ஆனா இவ ரூமுக்கு வரலேங்கவும் எனக்குள்ள எழுந்த கோபம் என்னை யோசிக்கவிடாம பண்ணிடுச்சு. அதான் அமைதியா இருந்தவனை உசுப்பேத்திவிட்ட ஸ்ரீநிதாவையே அபகரிச்சுகிட்டா தப்பில்லேனு மூளை சொல்லுச்சு. எடுத்துக்கிட்டேன்…. அவளோட பெண்மைய, உணர்ச்சிகள் நிறைந்த ஊன்பிண்டத்த, செத்தா மண்ணு கூடத் தின்னாத எலும்புகளை காயப்படுத்தி, என் ஆசை தீரும் வரை அவளை முழுசா எடுத்துக்கிட்டேன்.”

அவன் சொற்களில் வலியோ வேதனையோ குற்ற உணர்வோ எதுவுமே இல்லை. ஆனால் 'தவறு என்று அறிந்தே தான் செய்தேன்' என்ற ஸ்டேட்மெண்ட் தெளிவாகவே தெரிந்தது. அனைவரும் ராக்கியை குழப்பமாகப் பார்க்க அதன் அர்த்தம் உணர்ந்து அவனே தொடர்ந்தான்.

“நீத்து முரண்டு பிடிக்க முரண்டு பிடிக்க எனக்கு ரொம்ப கிக்கா இருந்தது. அவ என் ப்ரெண்டுனு தோனாமா ஒரு சராசரி பொண்ணா தான் தோனுச்சு… அவ அழுத அழுகையிலேயும், போட்ட சத்த்துலேயும், மருந்து வீரியத்துல தூங்கிட்டு இருந்த சயந்த் எழுந்து வந்து என்னை தடுக்க முயற்சி பண்ணினான். எனக்கும் அவனுக்கும் வாக்குவாதம் வந்துச்சு. அவனை சமாளிச்சு அவனுக்கும் ஆசையை தூண்ட நெனச்சு நான் பேசின எதுவும் அவன் காதுலயே விழல. கோபத்துல அவனை தலையில அடிச்சு தள்ளிட்டு நீத்துவ நான் நெனச்சிருந்த மாதிரி அனுபவிச்சேன். அவளை கொல்ல நெனச்சபோது தான் இவன் வந்தான். அதுக்கப்புறம் தான்…..” என்று இழுத்து நிறுத்தி தன் கை கட்டையும், வயிற்றில் சுற்றியிருந்த ப்ளாஸ்டரையும் கைகளால் வருடினான்.

“உன்னோட இந்த செயலுக்கு ஏதாவது மோட்டிவேஷன் இருக்கா?” என்ற நீதிபதியின் கேள்விக்கு ரோஹனிடம் இருந்து பதில் வந்தது.

“நான் கொஞ்சம் பேசலாமா?” என்று முதலில் நீதிபதியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவரின் சம்மதத்துடன் முதன் முதலாக இந்த வழக்கு பற்றி பேசிட வாய் திறந்தான் ரோஹன்.

தொடரும்.
 
Top