• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
தனது ஹோட்டலின் மேல் புகார் கொடுத்த பிற ஹோட்டல் முதலாளிகளை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்துக் கொண்டிருந்த ரோஹனின் பேச்சை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் தன் இதழ் கொண்டு அவன் இதழ் மூடி நின்றாள் மஹி...

மின்சாரம் தாக்கியது போல் முதலில் அதிர்ச்சியுற்றவன், இது கனவா! நிஜமா! என்று ஸ்தம்பித்து நின்றான். தனக்கு கிடைத்த விடையை எடை தராசில் வைத்துப் பார்க்க இருபக்கமும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அவனது மனமும் அந்த எடை தராசைப் போல் ஊசலாடியது.

மஹியிடமிருந்து இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை அவன் துளியும் எதிர்பார்த்திடவில்லை. அவள்பால் கொண்ட நம்பிக்கை தான் அவன் நம்பகமின்மைக்கும் முதல் காரணம் என்றே சொல்லாம்.

இறுதியில் இதழ் ஒற்றல் நிஜம் தான் என்று புரிந்திட… இத்தனை நாள் கனவு, இன்று எதிர்பாரா விதமாக நிஜமாகிவிட்டது என்று உறுதி செய்த நொடி பெண்ணவள் அவனை விட்டுப் பிரிந்து போக, இந்த முறை இதழ் கொய்யும் பணியை அவன் எடுத்துக் கொண்டான். இடைவளைத்து தன்னோடு சேர்த்தணைத்து நகர முடியாமல் பிடித்துக் கொண்டான்.

இவ்வளவு நேரம் இருந்த தன் மனக்கவலையை அகற்றிய அவள் இதழ்களுக்கு பரிசு கொடுக்க நினைத்தானோ!!! அல்லது கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று நினைத்தானோ என்னவோ!!! வெகுநேரம் நீடித்தது அவனது இதழ் தீண்டல்...

அதில் ஒன்றை மட்டும் நன்றாகவே உணர்ந்திருந்தான்‌. அவளது வார்த்தைகள் மட்டுமல்ல இதழ்களும் கூட தீயைத் தீண்டிய வெம்மை போல் தகித்துக் கொண்டிருந்ததை. அதன் தீஞ்சுவையில் லயித்திருந்தானே ஒழிய பெண்களின் உணர்வுகளை அறிய மறந்தான்.

மஹியின் நிலையோ தான் செய்த போது தவறாகத் தெரியாத ஒரு காரியம் அவன் செய்யும் போது மாபெரும் குற்றமாகத் தோன்றிட, தன் பலம் கொண்டு அவனை நகர்த்தி, முகத்தில் அறுவறுப்புக் காட்டி "ச்சீ…." என்று கூறி விலகிச் சென்றாள். அது ஆடவனை மேலும் சீண்டி விட்டது போல் ஆகிவிட, அவளது இடது புஜத்தை பிடித்து இழுத்து தனக்கு நெருக்கமாக நிற்க வைத்து, "ஆரம்பிச்சு வைக்கிறதையும் ஆரம்பிச்சுட்டு இப்போ என்னடி ச்சீ!!! நானாடி உன்னை நெருங்கினேன்.. ஹாங்" என்று உறுமினான்.

இளம்பிடியாளிடம் இந்த கேள்விக்கு பதில் இல்லை. ஆனாலும் அதனை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல், "இப்போ தான் உன் வக்கிர புத்தி புரியுது… தனியா இருக்குற பொண்ணை எப்படி உன் வழிக்கு கொண்டு வரனுங்குற வித்தைய நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்குறே! புலம்புற மாதிரி புலம்பி என்னை உன் வலையில சிக்க வச்சுட்டேல!"

ஏற்கனவே மன உழைச்சலுக்கு உள்ளாகி இருந்தவன், "ஓஓஓ… நான் தந்திரமா உன்னை அடைய பாக்குறேன்… அதானே உன் குற்றச்சாட்டு…. உன் எதிர்பார்ப்பை ஏன் கெடுக்கனும்!!!" என்று அதீத கோபத்தில் தன்னையும் தன் ஒழுக்கத்தையும் நிறுபிக்க வேண்டிய இடம் இது என்பதை மறந்து, 'ஆம், நான் அப்படித்தான்' என்று காட்டிடத் துடித்தான்.

பிடித்திருந்த அவளது புஜத்தை இழுத்து குளிர்சாதனப்பெட்டியின் மேல் அவளை சாய்த்து நிறுத்தி மீண்டும் அதரங்கள் கொய்திட நொடிக்கும் குறைவான நேரத்தில் அவனைத் தள்ளிவிட்டு கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள் மஹி…

கோபத்தில் முஸ்டியை மடக்கி உணவுமேசையில் ஆங்கிரம் கொண்டு குத்தி நின்றான். மேசை அதிர்ந்து பாத்திரங்கள் கீழே உருண்டிட எதையும் சட்டை செய்யாமல் அடுத்த நொடியே அவள் இல்லத்திலிருந்து வெளியேறிச் சென்றான். மஹிக்கும் கோபம் கண்ணை மறைக்க அவனைத் திட்டித் தீர்த்தபடியே பாத்திரங்களை ஒதுங்க வைத்து, இடத்தை சுத்தம் செய்தாள்.

இருவருக்கும் இருந்த அலுப்பிற்கும், அன்றைய அலைச்சலுக்கும் படுத்தவுடனேயே உறக்கம் வந்திருக்க வேண்டும்… ஆனால் தங்களைப் பற்றிய, தங்களுக்குள்ளாக இருக்கும் மறைமுக திரை பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கியவர்களுக்கு தூக்கம் துளியும் இல்லை...

மஹிக்கு தன் தவறும் புரியத் தொடங்கியது. 'பேச்சை நிறுத்த ஆயிரம் வழிக்கள் இருந்திருக்கலாம், நான் ஏன் அப்படி ஒரு வழியை செயல்படுத்த நினைத்தேன்?' என்று தன்னைத் தானே பலமுறை கேட்டுக்கொண்டாள். அவளுக்கு கிடைத்த பதிலின் விளைவாக ஒரு முடிவோடு மறுநாள் காலை பணிக்குத் தயாராகினாள்.

ஆனால் அங்கே ரோஹன் வேறு ஒரு முடிவோடு அவளை எதிர்கொள்ள காத்திருந்தான். மஹி எப்போதும் தயாராகும் நேரத்திற்கு முன்தாகவே புறப்பட்டுவிட, மின்தூக்கியில் ரோஹனைச் சந்தித்தாள். அதில் அவளது அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்ததது…

மின்தூக்கியில் அவன் மட்டுமே நிற்பதால் தயங்குகிறாள் என்று நினைத்தவன், மறுநொடியே 'அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது' என்று நினைத்துக் கொண்டு திமிராக முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்டும் காணாதது போல் ஒதுங்கி நின்றுகொண்டான்.

கதவு மூடப்படும் நேரம் பார்த்து உள்ளே நுழைந்தவள், தடுக்கி கீழே சரியப் போகிறோம் என்று உணர்ந்து அவன் கையை பிடிக்கச் சென்றாள். ஆனால் தரையில் கால்மடித்து அமர்ந்தபின் தான் அவன் விலகிக் கொண்டான் என்பதையே அறிந்து கொண்டாள்.

அதற்கும் அவனை முறைத்தபடியே எழுந்து நின்றவள், அவன் முன்னால் விழுந்ததில் சற்று அவமானமாகக் கருதி, முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு, "விளப்போறேன்னு தெரிஞ்சும் ஒதுங்கி நிக்கிறிங்கலே… பிடிச்சிருக்கலாம்ல?" என்றாள்.

"ஒருமுறை உன்னை தொட்டு ஏமார்ந்ததே போதும்…." என்றான் விட்டேந்தியாக

அவனது பதிலில் கால்களை தரையில் உதைத்துக் கொண்டு உதடு சுழித்து மறுபுறம் திரும்பி நின்றாள். தரைதளம் வரப்போகும் நேரத்தில் "நீங்க எப்படி இங்கே? எத்தனையாவது ஃப்லோர்?"

"16" என்று கூறி முடிக்க தரைதளத்தில் கதவு திறந்ததும் ரோஹன் தனது காரை நோக்கி விரைந்தான்.

'ச்சே… நேத்து நைட் அவன் வீட்டுக்கு போறதுக்கு தான் காரைவிட்டு இறங்கி வந்திருக்கிறான்… நான் தான் லூசு மாதிரி என் வீட்டுக்கு வர நினைக்கிறான்னு நெனச்சுட்டான்… அதான் டின்னர் சமைக்கிறேன்னு சொன்னதும் ஒரு மாதிரி பாத்தானா! அப்போ ஆரம்பத்துல இருந்தே தப்பு என் மேல தான்…' என்று நினைத்து தனக்குத் தானே தலையில் அடித்துக் கொண்டு கேப்-ல் ஏறி அமர்ந்தாள்.

ஹோட்டல் வந்து இறங்கியதும் நேரே அவனது அறைக்குச் சென்று அவன் முன்னால் நின்றவள், முதல்முறையாக தன் வாழ்க்கையில் பெரிய தவறிழைத்து அதற்கு மன்னிப்பு கேட்கப் போகிறோம் என்ற குற்றவுணர்வில் தனக்குத்தானே பலமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டாள்.

அவன் தன்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை என்றதும் தொண்டையைக் கணைத்து தன் இருப்பை காண்பிக்க முயற்சித்தாள். அவனிடம் எந்த மாற்றமும் இல்லை என்றவுடன், தன் குரலை உயர்த்தி, தலைநிமிர்த்தி, கர்வமாக திமிரோடு மன்னிப்பு யாசித்து நின்றாள்.

"சாரி சர்…. நேத்து நடந்த எல்லாமே என்னோட மிஸ்டேக்னால தான்… நான் உங்ககிட்ட அப்படி நடந்திருக்கக் கூடாது… இந்த குற்ற உணர்வோட என்னால இனி உங்களுக்கு கீழ வேலை செய்ய முடியாது… நான் என் வேலைய ரிஸைன் பண்றேன் சர்…"

அவளது முடிவு இதுவாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தவன் அவளது மன்னிப்பை தான் நம்ப முடியாமல் பார்த்தான். 'உன்னை போன்ற பொறுக்கியின் கீழ் என்னால் வேலை செய்ய முடியாது' என்று தான் கூறுவாள் என்று நினைத்திருந்தான்.

"வேலைக்கும், வேலை நேரத்திற்கும் அப்பார்பட்டு நடந்த நிகழ்வை வெச்சு உங்க வேலையை குறை சொல்லி வெளியே அனுப்ப எனக்கு விருப்பம் இல்லே. உங்களுக்கு AGM போஸ்ட் அப்கிரேட் பண்ணிருக்கேன்… மதியம் என்னோட பி.ஏ மிஸ் ஶ்ரீநிதா ஜாப்ல ஜாயின் பண்ணிடுவாங்க… சோ ஒன் வீக் மட்டும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு நீங்க உங்க வேலையை கண்டினியூ பண்ணலாம்…" என்ற அவனது முடிவில் ஆடிப்போனாள்.

அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றவுடன், அவனே தொடர்ந்தான், "என்னால இந்த பொறுக்கிக்கு கீழே வேலை பாக்க முடியாதுனு நீங்க நெனச்சிங்கன்னா கண்டிப்பா உங்க ரெஸிங்னேஷனை ஏத்துக்கிறேன்" என்று தன் சுழல் நாற்காலியை சற்றே இடவலமாக அசைத்தபடி அவளைப் பார்த்து உரைத்தான்.

'பொறுக்கியாமே பொறுக்கி… யார் சொன்னா இவன் பொறுக்கினு!!' என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு குண்டுவிழியை உருட்டி அவனை முறைத்துவிட்டு தன் பணியைத் தொடரச் சென்றாள்.

அவளது இருப்பிடம் சென்று அமர்வதைக் கண்டவனது முகத்தில் ஏதோ சாதித்துவிட்ட நிறைவு, மகிழ்ச்சி….. 'எதுக்கும் இப்படி தள்ளி இருந்தே மெய்ன்டெய்ண் பண்ணுவோம்… திடீர்னு வேதாளம் மரம் ஏறினாலும் ஏறிடும்…' என்று நினைத்துக்கொண்டு அவனது வேலையைத் தொடர்ந்தான்.

அங்கே மஹியோ 'நான் எப்போதிருந்து இருப்படி ஆனேன்… நான் தான் அவனை ஒரு த்தர்ட் க்லாஸ் போல ட்ரீட் பண்ணினேன், அதனால தான் அவன் தன்னை தானே பொறுக்கினு சொல்லிக்கிறான்…. அதுக்கு ஏன் எனக்கு கோபம் வரனும்…" என்று தன்னை ஆராயும் பணியிலேயே அரைநாளை கடத்தினாள்.
----தீயாய் தொடர்ந்தாள்....
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
Aen intha ponnu ippadi irukka
 
Top