• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீயாய் சுடும் என் நிலவு 16:

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
16.

எதுவும் பேசாமல் அவளின் வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடினான் மிருதியின் விழிகளில்.

"நான் பொய் சொல்லமாட்டேன்" என்றான் அமுதன்.

எதுவும் பேசாமல் அவனின் விழிகளையே பார்த்துக்கொண்டிருக்க.

"சரி அமுதா. அப்போ நான் நாளைக்கு உண்மையை சொல்லிட்றேன்" என்று தன்னறைக்கு சென்றாள்.

மிருதியின் பின்னே சென்ற அமுதன்.

"என்ன உண்மை தி?" என்றான்.

"அவர் மனசுல இப்போ என்னை பத்தி என்ன அபிப்ராயம் இருக்குன்னு எனக்கு தெரியல. அதுவுமில்லாம மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்துக்கு இன்னும் எந்த விளக்கமும் இல்ல. அதுக்குள்ள நேரா வந்து என்கூட வான்னா போய்டனுமா? நான் ஒண்ணும் கடைல கிடைக்கிற பொம்மை இல்லை. ரத்தம் சதை உள்ள ஒரு மனுஷி. எனக்கு ஆசைகள், கனவு எல்லாம் இருக்கு " என்றாள் அமுதனை பார்த்து.

"அதுக்கு முதல்ல நீ அவர்கிட்ட பேசணும் தி" என்றான் அமுதன் அவளை சமாதானபடுத்த .

"என்னோட ஹெலத்தை பத்தி உனக்கு தெரியும். சோ தேவையில்லாம அவருக்கு நம்பிக்கை வார்த்தை கொடுக்க முடியாது. அதோட நீ ஏன் வரமாட்டன்னு சொல்ட்றேன்னு எனக்கு தெரியும்" என்று முறைத்தாள் மிருதி.

அமுதன் எதுவும் பேசாமல் இருக்க, "நாளைக்கு நான் ஒருவேளை அவர்கூட சேர்ந்துட்டேன்னா அப்போ இது எனக்கு பிரச்சனையா வரும்னு நினைக்கிற? " என்றாள் மிருதி.

எதுவும் கூறாமல் தன் மனதில் இருப்பதை கூறும் தோழியை பார்த்து புன்முறுவல் பூத்தான்.

"தெரிஞ்சிகிட்டே என்னை நடிக்க சொல்ற தி?" என்றான் அமுதன்.

"இந்த பேச்சை மாற்றும் வேலைல்லாம் வேணாம். நாளைக்கு நீ வர அவ்ளோ தான்." என்றாள் மிருதி இறுதியாக.

"சரி வரேன். உன் பிடிவாதத்துக்கு முன் நான் தோர்த்துட்டேன் போதுமா?" என்றான் அமுதன்.

“நீ வேற நான் என் வாழ்க்கைலயே முதல் தடவை தோர்த்துட்டேன். இப்போ ரெண்டாவது தடவையும் தோர்தித்துடுவேன் போல இருக்கு.” என்றாள் விழிகளில் வழியும் கண்ணீரை சுண்டி விட்டு.

“தி” என்றான் அமுதன்.

“இல்ல அமுதா. நான் கொஞ்சம் தனியா இருக்கணும். ரொம்ப தாங்க்ஸ் வரேன்னு சொன்னதுக்கு” என்றாள் மிருதி.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினான் அமுதன்.

“என்ன சொல்றாங்க அக்கா?” என்றாள் ஸ்ரீ.

அவளை சில நொடிகள் கூர்ந்து பார்த்தவன்.

“உனக்கு தி மேல கோபம் வரலையா ஸ்ரீ?” என்றான் அமுதன் அன்பாய்.

“கோபமா? எதுக்கு?” என்றாள் ஸ்ரீ ஒன்றும் புரியாமல்.

“என்னடி இப்படி கேக்குற? நான் நீ கட்டிக்க போறவன். என்னை அவளுக்கு வருங்கால புருஷனா நடிக்க சொல்றா. உனக்கு அவமேல கோபம் வரலையா?” என்றான் அமுதன் ஆழமாய் நோக்கி.

“அமுதா அக்கா நம்மகூட வந்து மூணு வருஷமாச்சு. இந்தனை நாள்ல ஒரு நாள் கூட உன் மேல ஃப்ரெண்ட்டுன்ற எல்லை தாண்டி ஒரு பார்வை பார்த்தது கிடையாது. நீயும் அப்படி தான். அப்படி பட்டவங்க இன்னைக்கு திடீர்ன்னு நடிக்க சொல்றாங்க. அதான் ஏன்னு எனக்கு புரியலை?” என்றாள் ஸ்ரீ.

என்ன சொல்வது என்று தெரியாமல் அவளை இறுக அணைத்துகொண்டான்.

“என்..ன.. அமு..தா..?” என்றாள் திக்கி திடீரென்ற அவனின் அணைப்பில் திணறியவள்.

ஸ்ரீயின் நெற்றியில் லேசாக தன் இதழை ஒற்றியெடுத்தவன் அவளை விடுவித்து.

“நான் அவளுக்காக பிரெண்ட்ன்ற முறைல என்ன வேணாலும் செய்ய தயாரா இருக்க என்னிடம் இதுவரைக்கும் எதுவுமே கேக்காதவ தி. அவ என் ஃப்ரெண்ட்னு தெரிஞ்சு அவமேல உனக்கு அக்கான்ற மரியாதை குறைஞ்சதே கிடையாது. எனக்கு நீங்க ரெண்டு பேரும் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும் ஸ்ரீ.” என்றான் அமுதன் நெகிழ்ச்சியில்.

“இருந்தாலும் தி க்கு போதும் இந்த வனவாசம். எப்படியாவது இந்த முறை அவர்கூட அவளை சேர்த்து வைக்க போறேன்.” என்றான் அமுதன்.

“எப்படி?” என்றாள் ஸ்ரீ.

“அது நாளைக்கு நானும் அவரை சந்திக்க போறேன். அதுக்கப்புறம்...” என்று தன் திட்டத்தை கூறிமுடித்தான்.

“இது சரியா வருமா அமுதா? அக்கா அவங்க மேல கோவமா இருக்காங்களே?” என்றாள் ஸ்ரீஷா.

“உண்மை தான். அவர்மேல அளவுகடந்த காதல்னால தான் அப்படி இருக்கா. ஆனா அவர் இப்போ முதல்ல மாதிரி இல்ல. தி அவரை விட்டுட்டு வந்ததுக்கப்புறம் ரொம்ப மாறிட்டார். தி அவரை சந்திக்க போறேன்னு சொன்னப்பயே என் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி அவரை பத்தி விசாரிச்சுட்டேன்.” என்றான் அமுதன் மெல்ல புன்னகைத்து.

“இது அக்காக்கு தெரியுமா?” என்று முறைத்தாள் ஸ்ரீ.

“தெரியாது. தெரிஞ்சா சாமியாடிடுவா” என்றான் அமுதன் மெதுவாய்.

“நான் அக்காகிட்ட சொல்ல போறேன்” என்று தியின் அறைப்பக்கம் திரும்பி “அக்கா..” என்று முடிக்கும் முன் அவளின் இதழை கைகளால் பொத்தியவன் வேகமாக ஸ்ரீயின் அறைக்குள் இழுத்து சென்று கதவை தாளிட்டான்.

“இப்போ எதுக்குடா கதவை சாத்தின திற” என்றாள் ஸ்ரீஷா.

“எய் நான் தான்டி உன் புருஷன். என்னையே காட்டி கொடுத்திடுவியா?” என்றான் குறும்பாக.

“நீ என் வருங்கால புருசன். சோ கல்யாணம் முடியர வரைக்கும் இந்தமாதிரி தனியா ஒரே ரூம்ல இருக்கிறதுல்லாம் தப்பு. முதல்ல கதவை திற.” என்றாள் ஸ்ரீ.

“ஹேய் ஸ்ரீ. அவ என் பிரெண்ட்டி அவளுக்கு போய் நான் கெட்டது நினைப்பேனா? அவ நல்லா இருக்கணும் அவ புருஷனோட. அதுக்கு தான் இதெல்லாம். வெளிய போய் எதுவும் சொல்ல கூடாது தி கிட்ட சரியா ?” என்றான் அமுதன்.

“நான் முடியாதுன்னா? ஏற்கனவே அந்த ஆளால அக்கா ரொம்ப கஷ்டப்பட்டு இப்போ தான் அதுல இருந்து வெளிய வந்துருக்காங்க. நீ ஏதாவது செய்றேன்னு சொதபிட்டா?” என்றாள் ஸ்ரீ.

“முடியாதுன்னு சொன்னா அப்புறம்...” என்று அவள் காதினில் கிசுகிசுத்து ஸ்ரீயை பார்த்து கண்ணடித்து புன்னகைக்க, விழிகள் விரிய அமுதனை பார்த்து சிணுங்கியவள் அவனின் நெஞ்சத்திலேயே தஞ்சம் கொண்டாள்.

“என்னை நம்பு ஸ்ரீ. நிச்சயமா தி நல்லா இருப்பா” என்றான் அமுதன்.
 
Top