• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீயாய் சுடும் என் நிலவு 21:

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
தீயாய் சுடும் என் நிலவு 21

மிகவும் அதிர்ச்சியாக அமுதனை பார்த்த தீரன்.

“என்ன சொல்றிங்க நீங்க? நான் அடிச்சேனா? அதுவும் மிருதிய? சான்ஸே இல்ல..” என்றான் மிகவும் சாந்தமான அடக்கிய கோபத்தோடு.

“அப்படியா?” என்று அவனை நம்பாத தோரணையில் நெஞ்சிற்கு குறுக்கே கரங்களை கட்டிக்கொண்டு நின்றான் அமுதன்.

“ஹ்ம்.. அப்படின்னா தி எதுக்கு உங்களை விட்டு போனா தெரியுமா?” என்றான்.

‘இல்லை’ என்று தீரன் தளர்வாக தலையாட்ட.

“இதுவும் ஒரு முக்கிய காரணம்” என்றான் அமுதன்.

“இல்ல. அப்படி நடக்க வாய்ப்பே இல்ல. மனசால கூட நாம பேசுற வார்த்தையால யாரும் பாதிக்க கூடாதுன்னு நினைக்கிறவன். அதனால தான் என் சோகத்தை கூட வெளிய காட்டாம மிருதிய விட்டு விலகி போனேன். பொண்ணுங்க நம்மளைவிட உடலவலிமை குறைஞ்சவங்களா இருந்தாலும் மனசால நம்மளைவிட நூறு மடங்கு தைரியம் நிறைஞ்சவங்கன்னு நம்புறவன் நான். ஆண்களை படைச்சதே பெண்களை பாதுகாக்க தான்னு ஆழமா நம்புறேன். அபப்டி இருக்கும்போது நான் என் மிருதிய காயப்படுத்துவேணா?” என்றான் தீரன் என்ன சொல்வதென்று தெரியாமல் உணர்ச்சி பெருக்கில்.

அவனின் பேச்சில் வாயடைத்து போய் நின்ற அமுதன்.

“சரி. உங்களுக்கு நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைன்னா இப்போவே தியை வர சொல்லி கேளுங்க?” என்றான் அமுதன்.

சிறிதுநேரம் அமைதியாக இருந்த அமுதன் அமைதி பெருமூச்சுவிட்டபடி தனக்குள் உடைந்து போய் துளிர்க்கும் கண்ணீரை துடைக்காமல் அமர்ந்திருக்கும் தீரனை பார்த்தான்.

“இங்க பாருங்க தீரன். உங்ககிட்ட பொய் சொல்லி எனக்கென்ன ஆகபோகுது? என் தி உங்கக்கூட சந்தோஷமா இருக்கணும் எனக்கு அவ்ளோதான்” என்றான் அமுதன்.

கண்ணீரை துடைத்த தீரன் “இப்போ நான் என்ன செய்யனும்?” என்றான்.

“நீங்க நேரா வீட்டுக்கு போங்க. தி உங்களை உள்ள விடமாட்டா. ஏன்னா உங்கமேல கோபமா இருக்கேன்னு சொல்றதெல்லாம் கண்துடைப்பு. உண்மை என்னன்னா கொஞ்சம் நேரம் உங்ககூட இருந்தாக்கூட எங்க தன் மனசு மாறி உங்ககூட சேர்ந்து வாழ சம்மதிச்சிடுவாளோன்னு அவமேலயே அவளுக்கு பயம்.” என்று சிரித்தான் அமுதன்.

விழிகள் விரிய தீரன் ஆச்சர்யமாய் அமுதனை நோக்க, “என்ன அப்படி பார்க்கறிங்க? அவ ஸ்கூல்ல அடிஎடுத்து வெச்ச நாள்ல இருந்து எனக்கு ஃப்ரெண்ட். அவளை பத்தி நல்லா தெரியும் எனக்கு” என்று சிரித்தான்.

“சோ, நீங்க நான் என் பொண்ணுக்காக வந்துருக்கேன்னு சொல்லுங்க. தேவைபட்டா என் டார்லிங்க ஹெல்ப்புகு கூப்பிட்டுக்கோங்க பிச்சி உதறுவா. இங்க தான் கொஞ்ச நாள் தங்க போறதா சொல்லுங்க” என்றான் அமுதன்.

“முடியுமா?” என்றான் தீரன்.

“கண்டிப்பா முடியும். ஆனா நாங்க உங்ககிட்ட பேசினதை திகிட்ட எந்த காரணத்துக்காவும் சொல்ல கூடாது.” என்றான் அமுதன்.

“சரி சொல்லமாட்டேன்” என்றான் தீரன்.

“அப்படி தெரிஞ்சுது. எங்ககிட்ட கூட சொல்லாம வெளிய போய்டுவா. அதனால கவனமா இருங்க” என்றன தீரன்.

“கண்டிப்பா. ரொம்ப நன்றி அமுதன்” என்று அமுதனை கட்டிக்கொண்டான் தீரன்.

“நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா போதும்.” என்று கிளம்பினான் அமுதன்.

இருவரும் வெவ்வேறு திசையில் பயணிக்க அவர்களின் எண்ணங்கள் மட்டும் ஒரே புள்ளியில் வந்து நின்றது அது... மிருதி.”

**

பேசியபடி மறுநாள் காலை மிருதியின் வீட்டு வாசலில் வந்து நின்றான் கையில் பெட்டியுடன் தீரன்.

வெளியே வந்த ஸ்ரீஷா அவனை கண்டு நகைத்தாலும் மிருதி வருவதை கண்டு, “யாரு சார் நீங்க? உங்களுக்கு யார் வேணும்?” என்றாள்.

‘என்னை மறந்துட்டாங்களா அதுக்குள்ள?’ என்று தீரன் யோசிக்க, அவளின் பின்னே வந்து நிற்கும் மிருதியை கண்டுகொண்டவன்.

‘ஒஹ்... நம்ம சிலுசிலு தான் நிக்குறாளா? சரி நாமளும் சேர்ந்து ஆக்டிங் கொடுப்போம்’ என்று உள்ளுக்குள் சிரித்தவன்.

“இங்க மிஸஸ். மிருதி இருக்காங்களா?” என்றான் தீரன்.

“நீங்க யாருங்க சார்?” என்றாள் ஸ்ரீஷா மீண்டும்.

அவளை பார்த்து கொண்டே வந்த மிருதி.

“யாரு வாசல்ல ஸ்ரீ? யாருக்கூட பேசிட்டு இருக்க?’ என்றாள் மிருதி.

“யாருன்னு தெரியலைக்கா உங்களை கேக்குறாங்க? அதான் யாருன்னு கேட்டுட்டு இருக்கேன்” என்றாள் ஸ்ரீ.

வாசலில் தீரணை பார்த்த மிருதி அதிர்ச்சியில் வாயடைத்து போய் நிற்க. இருவரின் விழிகள் மட்டும் வார்த்தைகள் இல்லாமல் போர் நடத்தி கொண்டிருந்தன.

“அப்பா” என்ற மழலையின் குரலில் இருவரின் சிந்தனையும் திசை திரும்ப இருவரும் ஒரு சேர மிதிஷாவை கண்டனர்.

“மிஷா குட்டி. வாங்க எப்டி இருக்கீங்க?’ என்றான் தீரன்.

“அப்பா... அப்பா” என்று குதித்தது குழந்தை.

“இங்க என்ன பண்றிங்க?” என்றாள் மிருதி கடுமையான குரலில்.

“நான் வந்த வேலை இன்னும் முடியலை. இன்னும் கொஞ்ச நாள் இழுக்கும் போல.. அதான் அதுவரைக்கும் எதுக்கு ஹோட்டல்ல இருக்கணும்? என் பொண்ணுகூட இருக்கலாம்னு வந்துட்டேன்.” என்றான் சாதாரணமாக.

“என்ன?” என்றாள் மிருதி அதிர்ச்சியாய்.

“என்ன என்ன? நான் ஒண்ணும் உன்கூட இருக்க வரலை என் பொண்ணுகூட இருக்க போறேன்” என்றான் தீரன் வெடுக்கென்று.

அவனின் வார்த்தைகள் சுருக்கென்று தைத்தாலும் உடனே மறைத்துகொண்டவள்.

“நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு இங்க வந்து இருக்க முடியாது.” என்றாள் மிருதி.

எதுவும் பேசாமல் அவளையே ஆழமாக பார்த்தவன். “உன் கழுத்துல இருக்க தாலிக்கு சொந்தக்காரன் நான் தானே? இந்த குட்டி தேவதையும் நமக்கு பிறந்தவ. வேறேன்ன வேணும் நான் இங்க தங்க?” என்றான் தீரன்.

அவனின் வார்த்தைகளில் ஒரு நொடி பின்வாங்கியவள் “இருக்கலாம் அதுக்காக எல்லாம் இங்க தங்க வைக்க முடியாது” என்றாள் மிருதி.

“அம்மா.. பிளீஸ்... அப்பா... வேணும்..” என்றது.

‘அப்படி சொல்றா என் செல்ல குட்டி’ என்று தனக்குள் சிரித்து கொண்டான் தீரன்.
 
Top