• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீயாய் சுடும் என் நிலவு 25

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
"நிகரா தன் நிகரா... " என்று தன் மொபைல் அடிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தவன் சுற்றி முற்றி பார்த்து அப்பொழுது தான் உணர்ந்தான்.

'ச்செ! எல்லாமே கனவா? ... அப்போ மிருதிக்கு நான் எதுவும் செய்து கொடுக்கலையா சாப்பிட? மிதிஷா முத்தம் கேட்கலையா? எல்லாம் நிஜமா நடந்த மாதிரியே இருந்ததே? நிஜத்துல நடந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?' என்று எண்ணிக்கொண்டவன் மணியை பார்த்தான் ஒன்பது என்று காட்டியது.

"நைட் மிரு தூங்குறாளான்னு அடிக்கடி எழுந்து பார்த்ததுல தூக்கம் வராம காலைல நாலு மணிக்கு தான் தூக்கம் வந்துச்சு" என்று தனக்கு தானே கூறி கொண்டவன் காலை கடன்களை முடித்து நேராக சமையலறை சென்றான்.

"பாவம் பசிக்கும். எங்க இவளை காணமே?' என்று அங்கும் இங்கும் நோட்டமிட மிருதி இல்லாததால், 'சரி சமைச்சாவது வைப்போம்' என்று உள்ளே சென்றான். நாசியில் சமையலின் மனம் நுழைந்தது. அனைத்து சமையலும் முடித்திருந்தது.

"எல்லாத்தையும் செஞ்சிட்டு இருக்காளே? இவளை யாரு இதெல்லாம் செய்ய சொன்னது?" என்று புலம்பிக்கொண்டே அவளை தேடினான்.

"அங்கயும் இல்லையே?" என்றவன் விழிகளில் டி.வி ஸ்டாண்டில் இருந்த காகிதம் பட்டது. அதில், "நான் கடைக்கு கிளம்புறேன். நீங்க சாப்பிடுங்க. ஹிம் சொல்ல மறந்துட்டேன். நேத்து அமுதன் தேவையில்லாம அவன் வேலையை விட்டுட்டு என்கூட இருக்க கூடாதுன்னு தான் நீங்க பார்த்துப்பிங்கன்னு சொன்னேன். ஸோ, நீங்க வேற எதுவும் நினைச்சுக்காதீங்க. உங்களை மன்னிக்கிற எண்ணம் இப்போதைக்கு இல்ல. உங்க வேலையை போயி பாருங்க" என்று இருந்தது.

'ரொம்ப அழுத்தகாரி தான் நீ. எங்க இங்க எங்கூட இருந்தா மனசு மாத்த ட்ரை பண்ணுவேன்னு ஓடிட்டியா? இருந்தாலும் விடமாட்டேன் மிரு டார்லிங்' என்று சிரித்து கொண்டு தான் வேலையை கவனிக்க சென்றான்.

நேரம் கடந்துகொண்டே இருந்தது. தீரனுக்கும் அவன் வேலைகள் சரியாக இருக்க மதிய உணவை மறந்து போனான்.

வீடு திரும்ப மணி ஏழு ஆயிற்று. உள்ளே நுழையும் போதே மிருதியின் சிரிப்பொலி அவன் காதில் தேனாய் பாய்ந்தது.

"தி. பிளீஸ் எனக்காக இந்த ஒரு தடவை மட்டும். செல்லம் இல்ல." என்ற அமுதனின் குரல் கேட்டவுடன் திடுக்கிட்டாலும் அவனின் வார்த்தைகளில் தீ பற்றியது தீரனுக்கு.

"நோ வே அமு. பிளீஸ் நகர்ந்து போ அந்த பக்கம்" என்றாள் மிருதி விளையாட்டு தனம் கலந்த கண்டிப்புடன்.

"பிளீஸ் தி" என்றான் கொஞ்சலாய் அமுதன் 'இதுக்கு மேல நிற்க முடியாது' என்று நுழைந்த தீரனின் விழிகள் அவர்களை தேட.

"அப்பா!" என்று வேகமாய் ஓடி வந்து அவன் கால்களை கட்டி கொண்ட மிதிஷாவால் அவர்களின் கவனம் தீரனிடம் திரும்பியது.

"வாங்க தீரன். இங்க பாருங்க" என்று கையில் வைத்திருந்த ஐஸ்கிரீம் கப்பை காட்டினான்.

"உலகத்துலயே ஐஸ்க்ரீம் வேணாம்னு சொல்ற ஒரே ஆள் உங்க பொண்டாட்டி தான். படிக்கும் போதுலர்ந்து இப்போ வரைக்கும் இவளுக்கு ஐஸ்கிரீம் மட்டும் பிடிக்க மாட்டேங்குது. எவ்ளோ நேரம் நானும் டார்லிங்கும் கெஞ்சுறோம். அழுத்தக்காரி ஒரு வாய்க்கூட வேணாம்ன்றா" என்றான் அமுதன்.

நிம்மதி பெருமூச்கு விட்டான் தீரன்.

"சரி கிளம்புறேன். எனக்கு நேரம் ஆகுது. நீங்க சாப்பிடுங்க" என்றவன் "இன்னொரு ஐஸ் கிரீம் பிரிஜ்ல இருக்கு" என்று கிளம்ப தயாரானான் அமுதன்.

"ஸ்ரீ பேசினாளாடா?' என்றாள் மிருதி.

"ஹூம். பண்ணா. போன் பண்ணாகூட என்னை பத்தியா கேக்குறா? உன்னையும் என் டார்லிங் பத்தி தான் பேசுறா. அவளுக்கென்ன ஜாலியா இருக்கா" என்று திரும்பினான்.

"பேபி" என்றது குழந்தை.

"யெஸ் பேபி" என்றான் இவனும்.

"நாதும் வதேன்" என்றது குழந்தை.

"ஹை. ஜாலி. அப்போ நைட் நாம கார்ட்டூன் படம் பார்க்கலாம்." என்று திரும்பியவன், "சரி! நாங்க லவர்ஸ் ரெண்டு பேரும் கிளம்புறோம்" என்றான் அமுதன்.

"அதெல்லாம் வேணாம். அவன் டைர்யர்டா இருப்பான். நீ அங்க போனா ரெண்டு பேரும் தூங்காம நைட் முழுக்க டி.வி பார்ப்பிங்க. ஒழுங்கு மரியாதையா ரெண்டு பேரும் போய் தூங்குங்க" என்றாள் மிருதி இடையில் கரம் வைத்து.

இவர்களின் இந்த செல்ல சண்டைகளையே ரசித்து சிரித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் தீரன்.

"இல்ல மா. பிளீது .. நா. போதேன்.." என்றது குழந்தை.

"நோ!" என்றாள் மிருதி.

"மா" என்றது குழந்தை கெஞ்சலாய்.

"தீ! இதெல்லாம் ரொம்ப ஓவர். என் டார்லிங் எவ்ளோ நேரமா கெஞ்சுறா? நீ முடியாதுன்னு சொல்ட்ற." என்று மிதிஷாவிடம் திரும்பியவன்.

"டார்லிங்! அம்மாகிட்ட நான் சொல்லிட்டேன். நாம போலாம்" என்று அவளை தூக்கி கொண்டு சென்றான்.

"டேய்! அமு.. நில்லு. ரெண்டுமே ஒண்ணா நம்பர் திருடுங்க. போக வேணாம்னு சொல்றேன். மீறி கூட்டிட்டு போனா என்ன அர்த்தம்?" என்றாள் மிருதி.

"ஹிம்.. உன்கிட்ட சொல்லியாச்சு எங்களுக்கு உன் பெர்மிஷன் தேவையில்லைன்னு அர்த்தம்" என்று வெளியேறினான் அமுதன்.

"வாங்க வாங்க. ரெண்டு பேரும் இங்க தானா வரணும். வாசப்படில காலை வைங்க. உடைச்சிட்றேன்" என்றாள் மிருதி.

வெளியே சென்ற அமுதன் மீண்டும், "போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சந்தேகம்?" என்றவன்.

"உனக்கு ஐஸ்கிரீம் பிடிக்காது. ஆனா, என் டார்லிங்கு ஐஸ் க்ரீம்னா உயிர். எப்படி?" என்றவுடன் அவளின் விழிகள் சடாரென தீரனிடம் நின்றது.

"ஒஹ்! ஒஹ்! .. அப்படி போகுதோ கதை. சரி எங்களுக்கு நிறைய இருக்கு பேச. பை." என்று வெளியேறினான்.

ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே மிருதியை நோக்கி நடந்தான் தீரன்.

"உடம்பு எப்படி இருக்கு மிரு?" என்றான் தீரன்.

"ஹ்ம். என்னை மிருதின்னு கூப்பிடுங்கன்னு ..." என்று முடிக்கும் முன் ஐஸ்க்ரீமுடன் அவள் இதழ்களை சிறைபிடிக்க, ஒரு நொடி விழிகள் விரிய அதிர்ந்தவள் மறுநொடி அவனை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளிவிட்டவள் இதழ்கள் ஐஸ்கிரீமின் சுவை தொண்டைக்குள் இறங்கியது.

தீரனே எதிர்பார்க்கா வண்ணம் மிருதியின் கரம் அவனின் கன்னத்தில் பதிந்திருந்தது.

"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? காணாம போன பொண்டாட்டி எதுக்கு போனான்னு கூட தெரியாம இத்தனை வருஷமா இருந்துட்டு இன்னைக்கு திடீர்னு வந்து என் கூட வாழுன்னு சொன்னா உடனே வந்துரனுமா? என் பொண்ணு... நம்ம பொண்ணு பிறந்ததைக்கூட உங்ககிட்ட சொல்லாம இருந்துருக்கேன்னா எவ்ளோ என்னை காயப்படுத்துருப்பிங்கன்னு யோசிச்சு பாருங்க. நீங்க செஞ்சதையும் உங்க வார்த்தைகளையும் என் உயிர் இருக்கிற வரைக்கும் மறக்கமுடியாது. ஆறாத ரணமாவே இருந்துட்டு இருக்கு" என்ற மிருதி அவன் பேசும் முன் விருட்டென்று தன் அறைக்குள் நுழைந்து கதவை படாரென்று சாத்தினாள்.

என்ன நடந்தது என்று அவன் புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் கடந்திருந்தது.

"சே... முட்டாளாடா நீ!" என்று சோபாவில் தலையில் கைவைத்து அமர்ந்தான்.

"இன்னும் நிறைய பொறுமை வேணும் உனக்கு அப்படி என்ன தான் நடந்திருக்கும்?" என்று தலையில் கைவைத்து கொண்டான்.

'அதான் தெரியலையே? ஆனா என்னவோ நடந்திருக்கு?' என்று உள் மனது கூற, 'போதும் ஏற்கனவே நான் நொந்து போயிருக்கேன்.' என்றான்.
 
Top