• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராதோ என் தேடல் - 2

Viba visha

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
90
அத்தியாயம் - 2

பளபளக்கும் விழிகளில் பயம் கலந்து அம்பரி அவனையே பார்த்தபடி இருக்க, கீழே நின்றிருந்த அவனும் எதேச்சையாக அவளைப் பார்க்க.. இருவரின் விழகளும் கலந்த அந்தத் தருணத்தில் உலகம் தனது சுழற்சியை ஒரு கணம் நிறுத்தியது அவர்களுக்கு மட்டுமே.

எவ்வளவோ தைரியமான பெண் தான் அம்பரியும். ஆனால் இப்போதோ.. இதோ இந்தப் பனைமரத்தால் என்ன பிரச்சனை வருமோ என்ற கிலி பிறந்தது அவளுக்கு.

இருந்தாலும் மடியில் கனமில்லாததால் அவளின் பயத்தின் வீரியம் கூடக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது தான். வருவது வரட்டும் என்ற விட்டேற்றியான நிலைக்கு இவளும் வந்துவிட்டாள் தான்.

ஆனாலும் கூட அந்த நெட்டைப் பனைமரம் யார்? அவனுக்கும் கரஸுக்கும் என்ன சம்மந்தம் என்ற குழப்பம் அம்பரியின் தலையைக் குடைந்தபடயே இருந்தது.

இப்படியாய் இவளது விழிகளில் தெரிந்த முதல் பயத்தையும்.. பிறகான மிதப்பையும் தெளிவாக அளவெடுத்தது அவனது விழிகள்.

அவளிடம் பதித்த பார்வையை விலக்காதே சற்று தலையைக் குனிந்து, அந்தக் கரஸ்பாண்டன்ட் நித்யகல்யாணியின் காதில் எதையோ ஓதினான் அவன்.

அதை அம்பரியுடன் கூடவே சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்த புகழியோ.. "போச்சு.. போச்சு.. அவன் உன்ன பத்தி தான் நம்ம கரஸ் கிட்ட என்னமோ வத்தி வைக்கறான்” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூற, அம்பரியோ முழங்கையால் புகழியை இடித்தாள்.

அன்றைய பொழுது முழுவதுமே அவர்களுக்கு இப்படி ஒருவகையான பயத்திலேயே கழிய, மாலை கல்லூரி முடியும் முன்பாக இன்னுமொரு முக்கியத் தகவல் அவர்களுக்குக் கிடைத்தது.

அவர்களது வகுப்புத் தோழி இனியா தான் அந்தத் தகவலை அவர்களுக்குச் சொன்னது. அம்பரி அவனிடம் காலையில் வம்பிழுத்த விஷயம் அதற்குள்ளாக அவர்களது வகுப்பில் பரவிவிட்டிருந்தது.

அதுநாள் வரை அந்த வகுப்பிற்கு மட்டுமல்லாது, ஒட்டு மொத்த கல்லூரிக்கே ரௌடியாகத் திகழ்ந்தவள் இப்பொழுது ஒரு சின்ன விஷயத்தில் மாட்டிக் கொண்டதை அறிந்து அனைவருமே அம்பரியை கேலி பேசினர்.

கல்லூரிக் காலம் என்றாலே இது போலத் தானே.. எந்த ஒரு விஷயத்திற்கும் பயம் கொள்ளவே தோன்றாது அல்லவா? ஆனால்.. என்ன தான் அம்பரியை அனைவரும் கிண்டலடித்தாலும் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாதே என்று தான் மனதார எண்ணினர் அவளது தோழிகள். அப்படி இந்த விஷயம் ஏதேனும் பிரச்சனைக்கு வழி வகுத்தாலும்.. அம்பரிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்பதிலும் அனைவரும் உறுதியாய் இருந்தனர். அதனாலேயே அவர்களது வகுப்புத் தலைவி இனியா, ஏதோ ஒரு காரணத்தை எடுத்துக் கொண்டு அவர்களது ஸ்டாப் ரூமிற்குச் சென்றாள்.

அங்குச் சென்று ஆசிரியர்களிடம் விசாரித்ததில் பல முக்கிய விஷயங்களைக் கரந்து கொண்டும் வந்தாள்.

மீண்டும் அவர்களது வகுப்பறைக்கு வந்து அவள் கூறிய விஷயம் எதுவும் அம்பரிக்கு உவப்பானதாக இல்லை.

பின்னே என்னவாம்.. அம்பரியால் பனைமரம் என்று நாமகரணம் செய்யப்பட்டவனுக்கு அவனது பெற்றோர் வைத்த பெயர் சத்ய விக்ரமாம். அவன் அந்தக் கல்லூரியின் கரஸுக்கு நெருங்கிய சொந்தமாம்.

இந்தத் தகவலிலேயே அம்பரியின் தலை தொங்கிவிட, இனியா கூறிய இறுதி செய்தியில் அவளது இதயம் கிட்டத்தட்ட நின்றேவிட்டது.

ஏனென்றால் ஏதோ ரோடு சைட் ரோமியோவாக்கும் என்று அம்பரி எண்ணியிருந்த அந்தச் சத்யா இனி அவர்களது கல்லூரியின் முக்கிய நிர்வாகப் பொறுப்பில் இருக்கப் போகிறானாம். அதிலும் தினமுமே கல்லூரிக்கு வந்து அதனைச் சுற்றிப் பார்த்து, கல்லூரியில் இன்னும் எதையெதை எல்லாம் மேம்படுத்தலாம் என்று விவரமறியப் போகிறானாம். என்று விவரம் கூறிய இனியா, இறுதியாக.. "ஆக மக்களே, நம்ம காலேஜ் டானுக்கு இன்னைக்கு இல்லாட்டியும் ஏதோ ஒரு நாள் நல்லதொரு சம்பவம் நடக்கப் போகுது. நாமளும் அதை நல்லாப் பார்த்துக் குதுகளிக்கப் போறோம்.. சோ.. என்ஜாய் எஞ்சாமிங்களா..” என்று பொதுக்கூட்ட மேடையில் அறிவிப்பு கூறுவதைப் போலக் கூற, கொலை வெறியான அம்பரி அவளை அடிப்பதற்காகத் துரத்தத் துவங்கினாள்.

அம்பரிக்கு புகழியைப் போலவே இனியாவும் நெருங்கிய தோழியே. அதனால் அவளது கலாய்ப்பு, கலகலப்புடன் முடிந்தது.

அந்த மாணவிகளெல்லாம் இப்படியாய் கூத்தடித்துக் கொண்டிருக்க, கல்லூரியின் தலைவரான நித்யகல்யாணியோ அவரது அறையில் மிகுந்த குழப்பத்தில் இருந்தார்.

அவர் முன்பு அமர்ந்திருந்த சத்யாவோ, " ஆன்ட்டி நீங்க எதுக்கும் கவலையே படாதீங்க. இப்போதைக்கு நீங்க மனசளவுல ரொம்ப டிஸ்ட்ரப்டா இருக்கீங்க. அதுவே உங்களுக்கு மனசுல பயத்தைக் கொடுக்குது. அதையும் விட உங்க ரெக்வஸ்ட்டுக்காகத் தானே நானே நேரடியா இங்க வந்திருக்கேன். உங்கள சுத்தி பாதுகாப்பு வளையமா நான் இருப்பேன்.” என்று அவன் திடமாகக் கூற, சட்டென அவனை நிமிர்ந்து பார்த்த நித்யகல்யாணியின் பார்வையில் சூடு இருந்தது. அந்தப் பார்வையைக் கண்டு புருவம் சுருக்கியபடி சத்யா பார்க்க..

"சத்யா.. இங்க பிரச்சனை எனக்கு மட்டும் தான்னு நினைக்கறியா?” என்று நேரடியாகவே கேட்டார்.

அவர் கூறியதைக் கேட்டு ஒரு கணம் அமைதி காத்த சத்யாவோ.. "ஆன்ட்டி எனக்கு உங்க சந்தேகமும், பயமும் நல்லாவே புரியுது. உங்களுக்கும், உங்க காலேஜுக்கும் எந்தப் பிரச்சனையும் வராது. எந்தச் சேதாரமும் வராது. என்ன நம்புங்க.” என்று உறுதி கூறினான்.

அதைக் கேட்ட நித்ய கல்யாணியும் குனிந்த தலையுடன், "என் வாழ்க்கைல நான் நிறையத் தவறான முடிவெடுத்திருக்கேன். அதனால என்ன நிறையப் பிரச்சனைகள் துரத்துது. அதிலிருந்து தப்பிக்கத் தான் நான் இவ்வளவும் செய்யறேன்.

ஹ்ம்ம்.. ஆனா, இனியும் இந்த வாழ்க்கை எனக்கு என்ன கொடுக்கக் காத்திருக்கோ..” என்று தன் போக்கில் பேசிக் கொண்டே கிளம்பிவிட்டார் அவர்.

செல்லும் அவரையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த சத்யாவும் வெளியே கிளம்பினான்.

கல்லூரி முடிந்து மாணவிகளும், ஆசிரிய ஆசிரியர்களும், கிளம்பிவிட்டிருந்தனர். அம்பரியும், புகழியும் தங்களது பேருந்து நிறுத்தத்திற்கு நடக்கத் துவங்கினால், கல்லூரியின் வெளி வாயிலின் அருகே.. காலையில் தான் இருந்த அதே போஸில் இப்பொழுதும் தனது பைக்கில் அமர்ந்திருந்தான் சத்ய விக்ரம். அதைப் பார்த்த அம்பரி எதுவும் பேசாது தலையைக் குனிந்து கொள்ள.. கூடவே இருந்த புகழியோ, "போங்க மேடம் அங்க யாரோ ஒருத்தன் நம்ம காலேஜ் பொண்ணுங்களை எல்லாம் சைட் அடிச்சுட்டு இருக்கான்.. சிங்கமொன்னு புறப்பட்டதேன்ற மாதிரி நீங்க போய்த் தட்டி கேட்க வேணாமா?" என்று படு நக்கலாகக் கேட்க மானசீகமாய்த் தலையில் அடித்துக் கொண்டாள் அம்பரி.

"என் நேர கிரகம்.. புள்ள பூச்சி எல்லாம் என்ன கிண்டல் பண்ணுது.." என்று தனக்குள்ளாக அவள் முணுமுணுத்த சமயத்தில், ஒரு விசில் சத்தம் அவர்களுக்குக் கேட்டது. அது கண்டிப்பாய் சத்ய விக்ரம் தான்.. அதிலும் அவன் விசிலடித்து அம்பரியைப் பார்த்து தான் என்பது யாருக்குப் புரிந்ததோ இல்லையோ.. கண்டிப்பாய் அம்பரிக்கும் கூடவே புகழிக்குமே தெளிவாக விளங்கியது.

ஆனாலும் அதைக் காதில் வாங்காதவளாக அம்பரி தனது வழியில் நடக்கவும், புகழியும் அவளைப் பின் தொடர்ந்தாள். ஆனால் மறுகணமே.. "ஹேய் நீலாம்பரி.." என்று ஒரு குரல் படு சத்தமாக அழைக்கவும், அம்பரியின் கால்கள் சட்டெனப் பிரேக் போட்டது போல் நின்றன. புகழிக்கோ அம்பரியைப் பாத்து பீறிடும் சிரிப்பு தான்.

அந்தச் சிரிப்புடனே.. "ஹேய்.. போய் என்னனு கேட்டுட்டு வந்துடு டி.. இல்லைனா இன்னும் என்னென்னவெல்லாமோ பேர் வச்சுக் கூப்பிடுவான் போல.." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. சர்ரென்ற சத்தத்துடன் ஒரு பைக் அதிவேகமாக வந்து அவர்களுக்கு அருகே நின்றது. அவர்கள் இருவரும் திடுக்கிட்டு சற்று தடுமாறியபடியே நிமிர்ந்து பார்க்க அந்தப் பைக்கில் இருந்தது.. சாட்சாத் சத்யாவே தான்.

அம்பரியும், புகழியும் சற்று பயந்தபடியே இரண்டெட்டுக்கள் பின்னோக்கி எடுத்து வைக்க, பைக்கை விட்டு கீழிறங்கிய சத்யாவோ, "என்ன நீலாம்பரி.. கூப்படறது காதுல விழுதா இல்லையா?" என்றான் அதிகாரமாக.

அதற்கு அவனை நோக்கி அம்பரி தீப்பார்வை பார்க்க, அவனது கண்களில் தெரிந்த குறும்பை மனம் தன்னை மீறி ரசிக்கத் துவங்க, அந்த ரசனையில் தன்னையே கடிந்து கொண்டவள், சட்டென விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள். கூடவே.. "என் பேர் ஒன்னும் நீலாம்பரி இல்ல. வெறும் அம்பரி தான்." என்றாள் மெல்லிய குரலில் கூடவே ரோஷத்தையும் சேர்த்து.

அவளது அந்தக் குரலையும் அதில் தெரிந்த கோபத்தையும் கண்டவனது உதடுகள், அதுவரை சிரமப்பட்டு அடக்கி வைத்திருந்த புன்னகையைச் சிறு கீற்றாய்ச் சிதறவிட்டன.

அம்பரியின் பதிலையும், அதற்குச் சத்யாவின் முகபாவத்தையும் ஆச்சர்யத்துடன் "ஆ"வென்று பார்த்துக் கொண்டிருந்தாள் புகழி. அவளை அப்பொழுது தான் கவனித்தவனாக.. "ஓய்.. புகழி.. இங்க நின்னுட்டு அப்படி எத ஆன்னு பார்த்துட்டு இருக்க. போ.. போய்ப் பஸ் ஸ்டாப்ல் நில்லு. பஸ் வரதுக்குள்ள உன் பிரண்டை அனுப்பி வச்சுடறேன்.." என்று அவன் கூறவும் சற்று தயங்கினாள் புகழி.

"இல்ல சார்.. நான்.." என்று அவள் ஏதோ கூற வரும் முன்.. "ஏன் மா உனக்குக் காது என்ன டமாறமா? போன்னா போகமாட்டியா?" என்று சற்று அதட்டலாக அவன் கூரவும், அம்பரியே.. "நீ அங்க போ புகழ்.. நான் வரேன்." என்று கூறிவிட்டு அவள் மட்டும் தனியாகச் சத்யாவின் முன்னே நின்றாள்.

குனிந்த தலையுடன் அவள் நின்றிருந்தாலும், அவளது கண்களின் கடுமையும், அந்தக் கடுமை உரைத்த.. "நீ யாரா வேணாலும் இருந்துக்கோ.. உன்னால என்ன எதுவும் செய்துட முடியாது.." என்ற திமிரும் சத்யாவிற்கு நன்றாகவே விளங்கிற்று. அந்தத் திமிர் அவனை ஒரு வகையில் கவர்ந்தது. மறுவகையில் கோபம் கொள்ளச் செய்தது.

முதலில் அந்தத் திமிர் அவனைக் கவர்ந்ததற்கான காரணம் எதுவென்றால்.. "அந்தத் திமிருடன் ஜொலித்த நிமிர்வு. ஆம்.. தவறு செய்யாதவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு இருக்குமே அப்படியான நிமிர்வு. அதை அவன் ரொம்பவுமே ரசித்தான்.

அவன் இந்தக் கல்லூரியை.. அதன் நிர்வாகத்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்தும் கூட, காலையில் நடந்த விசயத்திற்கு மழுப்பலான பதில் எதுவும் கூறாது.. அதே சமயத்தில் நான் தவறொன்றும் செய்யவில்லையே என்று திடமாக இருக்கும் அம்பரியை சத்யாவிற்குமே பிடித்திருக்கிறது தான்.

ஆனாலும் அந்தத் திமிரே இவனுக்குக் கோபமும் விளைவிக்கிறது என்றால்.. "என் கிட்ட ஏன் இடந்த திமிரும்.. ஈகோவும் இவளுக்கு? நான் கூப்பிட்டதும் நேரடியா வந்து பேசியிருக்கலாமே? ஏன் என்கிட்டே இருந்து விலகிப் போறா?" என்ற எண்ணம் தான்.

தான் அவளை உரிமையாய் எண்ணுவதைப் போல, அவள் தன்னை அப்படி உரிமையாய் எண்ணவில்லையே என்று ஆதங்கம் விளைவித்த கோபம் அது.

அதிலும், தான் இந்தக் கல்லூரிக்கு வந்திருக்கும் காரியம் மிகவும் முக்கியமானது என்று சத்யாவிற்குமே நன்றாகத் தெரியும் தான். அவனும் எவ்வளவோ மனக்கட்டுப்பாடு உடையவன் தான். இத்தனை வருட அனுபவத்தில் எந்தப் பெண்ணிடமும் தோன்றாத உணர்ச்சி இவளிடமாக மட்டும் ஏன் தோன்றுகிறதாம் இவனுக்கு?

ஆனால் அதற்குப் பிரதிபலிப்பாக அவளிடம் ஏன் எதுவுமே தோன்றவில்லையே?

ஐயோ.. ஏன் இப்படிப் புத்தி பேதலிக்குது எனக்கு.." என்று மனத்திற்குள்ளாகப் புலம்பினான்,

இப்படியெல்லாம் மனதிற்குள் கடுப்படித்துக் கொண்டிருந்தாலும், மீண்டுமாகத் தன் மனா உணர்வுகளைக் கட்டுப்படுத்தாது விட, அந்த உணர்வுகள் அவனைக் கட்டுப்படுத்திக் கட்டளையிட, மறுகணம்.."நீலாம்பரி" என்றான் கிசு கிசுத்த குரலில்.

அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவள் அடி வயிற்றைக் காலியாகிவிட்டது.. பின் முதுகுத் தண்டில் குளிர் பரப்பியது.. காரணமே இன்றிக் காது மடல்களைச் சிவக்கச் செய்தது.. இதயத் துடிப்பை அதிகரித்தது.. கோபத்துடன் நிமிர்ந்து பார்க்க வேண்டிய விழிகளை நாணச் செய்து இன்னமுமே தரை நோக்கும்படி பண்ணியது.

இத்தனைக்கும் காரணம்.. அவனது அந்த ஒற்றை அழைப்பு. அதில் இருந்த கிறக்கம். அவள் பெயரை உச்சரிப்பதற்கென்றே அவன் பிறப்பெடுத்ததைப் போன்ற பாவம். இன்னொரு முறை இதே குரலில் அவளை அவன் இப்படியாய் அழைத்தான் என்றால்.. இன்னமும் அவனைக் காலடியில் தலைகுப்புற கவிழ்ந்துவிட வேண்டியது தான்.. என்ற எண்ணம் அம்பரிக்குத் தோன்றியதும், சட்டென அவளைச் சுற்றியிருந்த மாய வலைகள் அனைத்தும் மட்டுப்பட இப்பொழுது நிமிர்ந்தாள் அவள்.

குரலில் முயன்று வருவித்துக் கொண்ட கடுமையுடன், "சொல்லுங்க சார்.. என்ன வேணும் உங்களுக்கு? என்று தலை நிமிர்ந்தாலும், அவனது கண்களைச் சந்திக்காது, வேறெங்கோ பார்வையைப் பதித்தபடி கேட்டாள்.

அவளது அவஸ்தை சத்யாவுக்குமே புரிந்தது தான். அதனாலே அவனும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு.. "ஹ்ம்ம்.. காலையில இங்க உட்கார்ந்திருந்தப்போ நீயே வந்து அத்தனை கேள்வி கேட்ட? இப்போ நான் கூப்பிட்டா கூடத் திரும்பி பார்க்க மாட்டிங்கற?" என்றான் கேள்வியை அமைதியான குரலில் குழைத்து.

"அது.. அது வந்து.." என்று சற்று திணறிய அம்பரி.. பின் ஒரு முடிவு எடுத்தவளாக நிதானமான குரலில்.. "இங்க பாருங்க சார்.. எங்க காலேஜ் முன்னாடி யாரும் வந்து இப்படி உட்கார்ந்துட்டு காலேஜுக்கு போற வரவங்களை எல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது. அப்படி யாராவது கண்ணுல பட்டாலே கண்டிப்பா இங்க போலீசே வந்துடும். அதான் நீங்க அப்படிப்பட்ட யாராவதோன்னு உங்கள வார்ன் பண்ணலாம்னு வந்தேன். இப்போ தான் நீங்க எங்க கரஸோட சொந்தம்.. இந்தக் காலேஜ் மேனேஜ்மென்ட்ல இருக்கீங்கன்னு தெரிஞ்சுடுச்சே.. இனி எதுக்காக நான் உங்க கிட்ட வந்து பேசணும்? எதுக்காக நீங்க கூப்பிட்ட குரலுக்கு வரணும்?" என்று அதட்டலாக, கூடவே உறுதியான குரலில் கேட்டவளைப் பார்த்துப் புருவம் உயர்த்தினான் அவன்.

அம்பரி அவனைக் கேள்வியாய்ப் பார்க்க.. "இல்ல, என்ன உன்ன காலேஜ்ல பார்த்ததுல இருந்து பயங்கர டென்ஷனா இருந்தியே.. இப்போ இவ்வளவு தைரியமா பேசறியேன்னு ஆச்சர்யமா இருந்துச்சு.." என்றான் அவன்.

அதற்கு அவளோ, அவனை ஏற இறங்க பார்த்தபடி.. "நீங்க கரஸ்பாண்டண்ட்டோட ரிலேட்டிவ்னு தெரிஞ்சதும் கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு. ஏன்னா நீங்க வேணும்னே அவங்க கிட்ட ஏதாவது எக்குத்தப்பா சொல்லிடுவீங்களோன்னு. அதனால எனக்கு ஏதாவது பிரச்னை வந்துடுமோன்னு. ஆனா நீங்க என்கிட்டே நேரடியா தான வந்து பேசறீங்க. என்மேல தப்பு இல்லைனு எனக்கு நல்லாவே தெரியும். அது உங்களுக்கும் தெரியும். அதனால எதுக்கு இனி பயம்?' என்று அவள் கேட்க, அவனோ சற்றே சற்றான குறும்பு சிரிப்புடன்.. "ஒருவேளை நான் இனி கரஸ்கிட்ட உன்ன பத்தி இல்லாததும், பொல்லாததும் சொல்லிட்டா.. என்ன பண்ணுவ?" என்று கேட்டான்.

இப்பொழுது அவனது இதழின் குறும்புச் சிரிப்பு, அம்பரியின் இதழுக்கு இடம் பெயர்ந்தது.

"முடிஞ்சா கம்பளைண்ட் செய்துக்கோங்க.." என்று அவனை நிமிர்வுடன் பார்த்து சொல்லியபடி திரும்பி நடக்கத் துவங்கினாள். அவளது அந்தத் தோரணையில் தன்னையும் மீறி புன்னகைத்தான் சத்யா.

ஆனால் திடுமெனத் தன்னிலை உறைத்துவிட.. சே இதென்ன டீன் ஏஜ் பையன் மாதிரி நடந்துக்கறோம் என்று தன்னை எண்ணி தானே உள்ளுக்குள் நகைத்தவனுக்கு, கண் முன்னிருக்கும் பிரச்னைக்கு மனம் சட்டெனத் தாவியது.

மீண்டும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லூரியை சுற்றிலும், அதற்கு அருகிலும் இருந்த சிறு காட்டுப் பகுதி போன்ற இடத்திலும் முற்றும் முழுமையாகச் சுற்றினான் அவன்.

பிறகு கல்லூரிக்குள் சென்று சில பல ஆட்களுடன் பேசியவன், அந்தக் கல்லூரியினூடே அமைக்கப் பட்டிருந்த ஆசிரியர்களுக்கான விடுதிக்குச் சென்றான்.
 

Krithika ravi

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
88
Super epi. antha collage la enna problem iruku. sathya nijamave management la irukum person ah illa police ah?
 
Top