• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தூது விடு தேன் கவியே

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
இதுவும் ஓர் உண்மை சம்பவங்களுடன் கலக்கவிட்ட கற்பனை தாவல்கள்.


கொஞ்சம் அழுத்தம். நிறையக் காதல்... ஒரு வித்தியாசமாக கோணத்தில் புது முயற்சி....


நம்பி வாங்க நிறவோட போங்க.


முழு நிள பாவடையை கணுக்காலுக்கு சற்றே உயரமாக தூக்கிக்கொண்டு, நீண்டோடுய வாய்க்காலின் நடுவே ஓடியவள் சிரிப்பொலியானது, நீரின் சல சலப்பையும் தாண்டி அழகாக ஒலித்தது.



"டேய் வேண்டாம்டா.... ஈர உடுப்போட வீட்டுக்கு போனா அம்மா திட்டும்டா..." என சிரிப்பொலிக்கு நடுவே கதறியவள் பேச்சை பின்னால் வந்த வானரங்கள் கேட்க வேண்டுமே...



"ஓ... உனக்கு மட்டும் தான் வீட்டில திட்டு விழுமோ? இதை எங்கள தண்ணியில முக்கி எடுக்க முன்னம் யோசிச்சிருக்கணும்..." என அவளை விட குரலை உயர்த்தி கூறிய அந்த சிறுவர்களோ விடாது விரட்டினார்கள்.



ஆம் அது ஒரு கிராமம். பாடசாலை இல்லாத, வாரத்தின் இறுதி இரண்டும் நாட்களும் அந்த கிராமமே அவர்கள் வசம் என்பது போல் ஊரையே இரண்டாக்கி விடுவார்கள். யார் சொல்லுக்கும் அடங்காத சேட்டைக்கார கூட்டம் அது...



இதற்கெல்லாம் தலமை தாங்குவது இருபது வயது நங்கை என்றால் யாரவது நம்புவார்களா?



ஆனால் உண்மை அது தான். அவள் மிருதுளா... பெயருக்கேற்றது போல் மிருதுவானவள். பெண்ணுக்கு எடுத்துக்காட்டு நிலவென்றால், அந்த நிலவுக்கு எடுத்துக்கிட்டு, அவள் ஒருவளாகத்தான் இருக்க முடியும்.



அத்தனை அழகி... ஆனால் அந்த அழகில் சற்றும் கர்வமில்லாதவள். அதை ஆராதிக்கவும் தெரியாதவள். கிராமத்தில் பிறந்தவளுக்கு இதுவெல்லாம் இருந்தால் தான் அதிசயம்.



"ஓடாதக்கா.. டேய் பளிங்கு... அக்கா மேல ஏறுறாங்க.. காலை புடிச்சு இழுடா!" அவன் சொல்லி வாயினை மூடவில்லை. அவனால் பளிங்கு என்று பட்டப்பெயர் சொல்லி அழைத்தவன் மிருதுளா காலினை பிடித்திழுத்து தண்ணீரினுள் வீழ்த்தியிருந்தான்.



"ஏய்...." என அனைவரும் தண்ணீரின் உள்ளேயே நின்று அவளை வீழ்த்தி விட்டோம் என்ற சந்தோஷத்தில் துள்ள...



சோகமாய் உதடு பிதுக்கியவள், "என்னங்கடா இப்பிடி பண்ணீட்டிங்க... கிழவி அப்பவும் சொல்லிச்சு... தும்பை பூ பறிக்க போனா, தும்ப பூவ மட்டும் பறிச்சிட்டு வா! அந்த குட்டி பிசாசுங்களோட ஊரை மேயாத.... புள்ளைங்காளா அதுங்க.. ஒவ்வொன்னும் பத்து காட்டொருமைக்கு சமானம்ன்னு. கேட்டனா நானு.."



"ஆ... உன் வீட்டில எங்கள காட்டெருமன்னு மட்டும் தான் சொல்லுறாங்க.. ஆனா எங்க வீட்டில உன்னை அதை விட கேவலமா திட்டுறாங்க தெரியுமா?" என்றான் ஒருவன்.



"என்னமோ போடா...!



ஏன் தான் இவங்க இப்பிடி இருக்காங்களோ! சலித்தவாறு தண்ணீரில் இருந்து எழுந்தாள்.



"அதெல்லாம் நம்ம தப்பில்லக்கா... பெரியவங்க எல்லாரையும் ஒரே டிசைன்ல படைச்ச அந்த கடவுளோட தப்பு!



ஆமாக்கா உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணுமே!"



"என்னடா கேக்கணும்...? கேளு!"



"நீ ஏன் இன்னும் இந்த பாவாட தாவணியோட சுத்திட்டிருக்க...? உனக்கு தான் கல்யாணமாகி ரெண்டு வருசம் ஆச்சில்ல.. மத்தவங்கள போல புடவை கட்டினா என்ன?"



ஆம்.. அவள் வயது இருபது தான்.. ஆனால் அவள் வாழ்விலும் திருமணம் என்ற ஒன்று நிகழ்ந்து இரண்டு வருடங்களை கடந்தாயிற்று.



அப்பா குமரிமுத்து... அம்மா கலையரசிக்கும் பிறந்த முதல் மகள். அவளுக்கு பின் இரண்டிரண்டு வருடங்கள் கடந்த மூன்று தங்கைகள்.



வரிசையாக பெத்துப்போடும் அளவுக்கு வசதியான குடும்பம் ஒன்றும் இல்லை அவளது. வயிற்றை காயப்போடாது மூன்று வேளையும் கஞ்சிக்கு சிரமமல்லாது விவசாயம் அரிசி போடுகிறது. ஆனால் பெற்றுப் போட்ட பிள்ளைகளுக்கு போட்டனுப்ப, குருவியின் இரை சேமிப்பு போதுமா என கேட்டால் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.



என்ன செய்ய.. ஆண் பிள்ளைக்கு ஆசைப்பட, இறைவன் கொடுத்தனுப்பியது நான்கும் பெண் பிள்ளைகளே!
அதில் முத்தவள் அழகோடு மிளிரும் குறும்புக்காரி.
கோவில் திருவிழாவில் அவளது சேட்டைகளை ரசித்த ஊரின் பண்ணை குடும்பத்தவருக்கு அவளை பிடித்து போக, பாரினில் இருக்கும் தமது ஒரே மகனுக்கு பெண் கேட்டதும், மறுக்காமல் கட்டி வைத்து விட்டார்கள்.


கரும்பு திண்ண கசக்குமா என்ன? பெரிய இடத்து சம்மந்தம். மாப்பிள்ளை வெளிநாடு. அதற்கு மேலாக மூன்று தங்கைகளையும் அவர்களே படிக்க வைப்பதாக பொறுப்பை ஏற்கும் போது மாட்டேன் என்பார்களா? உடனே சம்மதித்து விட்டார்கள்.


உண்மையில் சம்மந்தி வீட்டார் சுத்த தங்கம். அவர்களை போல் மாப்பிள்ளை வீடு அமைவதற்கு யாராக இருந்ததாலும் தவம் செய்திருக்க வேண்டும்.

கல்யாணம் முடிந்த ஒரே வாரத்தில் மனைவியை தன்னுடன் அழைப்பதாக கூறிவிட்டு சென்ற மாப்பிள்ளை, அதற்கான ஏற்பாட்டில் மும்மரமாக இறங்கி விட்டான். என்ன காரணமே அந்த நாட்டு சட்டம் இழுத்தடிக்கின்றது.






"நான் என்ன மாட்டேன்னாடா சொல்லுறன்... அந்த சனியன் தான் இடுப்பில நிக்க மாட்டேன் என்குதே! அதான் இதையே போட்டுட்டு திரியுறேன். ஏன்டா அத்தையே ஒன்னும் சொல்லல... நீ ஏன் கவலை படுற?"

"உன் அத்தை ஒன்னும் சொல்லல தான்.. ஆனா ஊரில கொலை குத்த ரேஞ்சுக்கே பேசிக்கிறாங்க... இங்கயே இந்த ஆட்டம் ஆடுறியாம்... அங்க போயிட்ட குழாயும் பன்னியனோடயும் சுத்துவியாமே! ஏன்க்கா அதெல்லாம் நீ போடுவ..."

"நீ வேற போடா... எனக்கெல்லாம் அங்க போக இஷ்டமில்ல... கூழோ கஞ்சியோ இங்கயே இருந்திடணும்டா..." உதட்டை பிதுக்கி சோகமானாள்.

"ஏன்க்கா...! அங்க இங்க மாதிரில்லாம் வெயில் இல்லக்கா.. அழகா இருக்கும். குளிர் நாடு வேற.. நீ இப்பவே அழகு இன்னமும் அழகா வந்திடுவ.. ஊரே ஏசி போட்டா மாதிரி இருக்கும்" என்றான் கண்கள் மின்ன ஆசையாய்.

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா...?" பாடவே ஆரம்பித்து விட்டாள் அந்த ஊர் இனி தனதில்லை என்ற கவலையில்.

"ஏன்டா உன்னை அக்கா ஏதாவது கேட்டாங்களா..? இப்ப பாரு சௌவு கிளியிற மாதிரி பாடவே ஆரம்பிச்சிட்டாங்க.. விட்ட கோரஸ் பாட நம்மளையும் கூப்பிட போறாங்க. மரியாதையா... ரூட்ட மாத்து" என்றான் பக்கத்தில் நின்றவன் அவன் காதை கடிப்பதாய்.

"விடுக்கா விடுக்கா... நம்ப வாங்கி வந்த வரம் அப்புடி! நீ ஏதோ தும்ப பூ பறிக்கணும்ன்னு சொன்னல்ல... ஆமா ஏன் இப்போ அது?"


"பக்கத்து விட்டு பையனுக்கு காதில சீல் வடியுதாம்... கை வைத்தியம் பண்ணணும் ஆஞ்சு வர சொல்லிச்சு கிழவி சொல்லிச்சு. இன்னமும் அதை கொண்டு போகலன்னா என்னை கொன்டு போயிடும்.. வாங்டா போவம்" என்றாள்.

வெற்றிகரமாக பேச்சை திசை திருப்பிய மகிழ்ச்சியில் அவர்களும் அவள் பின்னால் சென்றனர்.
 
Last edited:

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
All the very best dear
Idaila odama eluthi mudikka vazthukkal
 
Top