• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
தென்றல் - 11


தென்றலின் வீட்டின் முன்னே காரை நிறுத்திய ருத்ரன், வழக்கமான வேகநடை போட்டு உள்ளே செல்ல…


அங்கு தென்றலின் வருகைக்காக ஹாலில் இருந்த மலரோ, அவனைப் பார்த்து திகைத்தவர், சில நொடிகளில் சுதாரித்து, " வாப்பா… என்ன விஷயம். சங்கீதாவை கூப்பிடவா." என்றார்.


ருத்ரனோ, " அத்தை… நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். அது வந்து… நான் தென்றலை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்." என்று பட்டென தான் வந்த விஷயத்தை உடைத்தான்.


'எப்படியும் மறுப்பார், எப்படி அவரை பேசி சம்மதிக்க வைப்பது.' என்று எண்ணியவாறே அவரைப் பார்க்க.


அவரோ கீழே மடங்கி உட்கார்ந்து கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார்.


" ஐயோ! அத்தை. என்ன இது? எதுக்கு இப்படி அழறீங்க. முதல்ல எழுந்திருங்க." என்று அவரது கையைப் பிடித்து எழுப்ப.


மலரோ, ருத்ரன் பிடித்த கைகளை இறுக பற்றிக் கொண்டார். " தம்பி… தென்றல் ஏற்கனவே மனசு நொந்து போயிருக்கா… அதுல என்ன செய்றதுன்னு தெரியாம அடிச்சுட்டா. அதை மனசுல வச்சுக்காதீங்க தம்பி." என்று அழு குரலில் கூற…


" அத்தை. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க.. என்ன பத்தி உங்களுக்கு தெரியாதா? நான் என்ன அவ்வளவு மோசமான ஆளா? நான் தென்றலை மனசார விரும்புறேன் தெரியுமா?" என்று அடிபட்ட வலியுடன் ருத்ரன் கூற.


" பின்னே என்ன தம்பி. அவ உங்கள அடிச்சதும், கோவத்துல நீங்க கிளம்பி போயிட்டீங்க. அப்புறம் சங்கீதாவும் உங்க வீட்டுக்கு வந்துட்டா. பின்னாடி என் பையனும் கிளம்பிட்டான். அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியலை. அவங்க வந்துட்டாங்க. ஆளாளுக்கு மூஞ்சியை தூக்கி வச்சுட்டு வந்தாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை. இதுல இந்த பொண்ணு வேற எப்பவோ வெளியில போனா. அவளை வேற காணோம். இதுல நீங்க வேற வந்து ஏதேதோ சொல்றீங்க.நான் என்ன பண்றது. எனக்கு ஒண்ணுமே புரியல. அவர் போயிட்டாரு இந்த பொண்ணுக்காக நான் என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கேன்." என்று மீண்டும் அழு குரலில் கூற‌.


அவரது சத்தத்தில் வீட்டில் உள்ள எல்லோரும் வந்து விட்டனர்.


அமுதன் தான் முதலில் மலரின் முன்னே வந்து, அவரை அணைத்து ருத்ரனை பார்த்து முறைதான்.


ருத்திரனோ, பதிலுக்கு அவனைப் பார்த்து கேலியாக சிரித்தான்.


அவனது கேலியை கண்டுக் கொண்டவனுக்கு, கட்டுக்கடங்காமல் சினம் பெருகினாலும், தன் தாயை முதலில் கவனிக்க வேண்டிய அவசியத்தை கருதி, அவரிடம் திரும்பினான்.


" என்னமா பிரச்சினை? ஏன் அழறீங்க?" என்று அமுதன் வினவ.


"அது…" என்று இழுத்த மலர் சுற்றிலும் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, இறுதியாக சங்கீதாவிடம் நிலைத்தவர், " நம்ம தென்றலை ருத்ரன் தம்பி பொண்ணு கேட்டு வந்திருக்கார்." என்று கூற.


சங்கீதாவின் முகத்திலோ எந்த அதிர்ச்சியும் தெரியவில்லை. அவள் இயல்பாக இருக்க.


மற்ற எல்லோர் முகத்திலும் அதிர்ச்சியோ, கோபமோ ஏதோ ஒன்று வந்து போனது.


அமுதன், "ஓஹோ சார் என் தங்கச்சி மேல பரிதாபப்பட்டு வந்திருக்காரா? ஏற்கனவே நம்ம பொண்ணு கேட்டப்ப, அதெல்லாம் சரி வராது. பொண்ணு குடுத்து, பொண்ணு எடுத்தா பிரச்சினை வரும்னு சொன்னாங்களே. அது இப்போ என்னாச்சு? " என்று எகத்தாளமாக வினவ.


கதிரவன், தனது மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஏதோ கூற வர…

" மச்சான்…" என்று ருத்ரன் கூற.


கதிரவன் அமைதியாக… அமுதனோ 'தன்னைத் தான் கூப்பிட்டானோ.' என்று எண்ணி மகிழ்ச்சியாக நிமிர்ந்தவன், ருத்ரனின் பார்வை கதிரவனிடம் இருக்க… மீண்டும் விழிகளில் கோபத்தை பூசிக்கொண்டு அவனை முறைத்துக் கொண்டிருந்தான் .


அமுதனை ஒரு பொருட்டாக எண்ணாமல், மலரிடம் திரும்பிய ருத்ரன், " அத்தை… இங்கே பாருங்க. அது ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். நான் ஒரு பொண்ணை விரும்புறேன்னு அக்கா கிட்ட சொல்லி இருந்தேன். ஆனால் அது நம்ம தென்றல் தான்றதை சொல்லல. எல்லாம் அதனால நடந்த பிரச்சனை தான். அப்ப தென்றலை எனக்கு தானே கட்டிக் கொடுக்கணும் நினைச்சீங்க. இப்போ அதையே தானே நானும் கேட்குறேன். நான் இப்பவும் அதே ருத்ரன் தான். நான் தென்றலை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேன்." என்று சொல்ல.


அமுதனோ, " நீங்க அதே ருத்ரன் தான். பட் என் தங்கச்சி அதே தென்றல் கிடையாது. நீங்க கட்டிக்கிறேன்னு சொல்லவும், தலையாட்டிட்டு வந்து நிக்க மாட்டா." என்றான்.


" ஐ நோ. பட் அது என் கவலை. நான் அதையெல்லாம் பார்த்துக்கிறேன்.." என்று அமுதன் என்னவோ அவனை நினைத்து கவலைப்பட்டு பேசியது போலவும், அதற்கு சமாதானமாக கூறுவது போல ருத்ரன் பதில் கூறினான்.


அமுதன் அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அவனால் முடிந்தது ருத்ரனை முறைப்பது. அதை செவ்வனே செய்தான்.


அதைக் கண்ட ருத்ரன் தனக்குள் புன்னகைத்தவன் மலரிடம், " அத்தை… நீங்க எல்லோரிடமும் கலந்து பேசி, நல்லா முடிவா எடுங்க. அப்புறம் அவளுக்கு ஸ்பேஸ் கொடுக்குறேன்னு அவளை லூஸ்ல விட்டீங்கன்னா, அப்புறம் அவ இன்னொரு கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா... யோசிக்க டைம் கொடுக்காமல், சீக்கிரமா ஸ்டெப் எடுத்தா தான் உண்டு. நீங்க யோசிங்க... யோசிச்சு நல்ல பதிலா சொல்லுங்க… அதுவரைக்கும் நான் மாடியில் குட்டி பாப்பாவோட இருக்கேன். டேக் யுவர் ஓன் டைம்." என்று விட்டு அவன் மாடிக்குச் செல்ல…


"அடப்பாவி… யோசிங்க… யோசிங்கன்னு சொல்லிட்டு உடனே பதில் சொல்ல சொல்றானே." என்று அமுதன் வாய் விட்டு புலம்ப… மற்றவர்கள் வெளியே சொல்லவில்லை. அவ்வளவு தான். எல்லோருடைய மனதிலும் அமுதன் கூறியதே ஓடியது .


ருத்ரன் மாடிக்கு செல்லவும் அவன் பின்னேயே வந்த சங்கீதாவோ, "ருத்ரா…" என்று அழைக்க.


என்ன என்பது போல் பார்த்தான் ருத்ரன்.


" கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம் இல்ல ருத்ரா. நானே பேசிக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருப்பேன்.‌ தென்றல் ஒத்துக்க மாட்டா. அவ்வளவு சீக்கிரம் அந்த கல்யாணத்திலிருந்து வெளியே வர அவளால முடியாது டா." என்று கவலையாக தம்பியைப் பார்த்து கூறினாள் சங்கீதா.


" ஓ… உன்னால் மட்டும் என்ன செய்ய முடியும்" என்று எதிர்கேள்வி கேட்டான் ருத்ரன்.


" அதுக்கான வேலை எல்லாம் நான் பண்ணிட்டு இருக்கேன்."


" என்ன வேலை கா பார்க்குற?" என்று ஒரு மாதிரி குரலில் கேட்டான் ருத்ரன்.


அதை கவனிக்கும் நிலையில் சங்கீதா இல்லை.


" அது வந்து… இங்கே எல்லாரும் தென்றலை தாங்குறாங்க. அப்படி இருக்கும் போது, இங்க இருந்து போகணும், இன்னொரு வாழ்க்கையை அமைச்சுக்கணும்னு அவ நினைச்சுக் கூட பார்க்க மாட்டா. அதுவே இங்கு இருக்கிறது சிரமமாக இருந்தா, அவ கொஞ்சமாவது இங்கிருந்து போகணும்னு நினைப்பா. சோ நான் அவ கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்றேன். கொஞ்சம் அவ மனசு ஹர்ட் ஆகுற போல பேசிட்டு இருக்கேன்." என்று கூற.


" ஒஹோ …" என்றான் ருத்ரன்.


அவனது தலையீட்டில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் சங்கீதா.


" ம்… அப்புறம்…" என்று நக்கலாக ருத்ரன் வினவ.


சங்கீதாவோ, தம்பியின் கேலியில் பதில் சொல்லாமல் அயர்ந்து நின்றாள்.


" ஏன் கா? ஒன்னும் சொல்லாமல் அமைதியா இருக்க. அறிவில்லையா கா. நீ ஒரு ஆள் மட்டும் அவக் கிட்ட பேசாமல், ரூடா பிகேவ் பண்ணா எல்லாம் சரியாயிடுமா?" என்று கடுமையாக ருத்ரன் பேச.


" டேய் நான் உனக்கு அக்கா. அதுக் கூட எனக்கு தெரியாதா? அதுக்கு தான் அபர்ணாவையும், டெலிவரிக்கு அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு பண்ணிட்டேன். அபர்னாவுக்கும் இங்கே தென்றலுக்கும் ஒரு சின்ன பிரச்சனையை கிரியேட் பண்ணியிருக்கேன். அபர்ணாவும் கொஞ்சம் தென்றலை விட்டு விலகி தான் இருக்கா. இன்னும் கொஞ்ச நாள் போனா, தென்றலுக்கும் இங்கே இருந்து கிளம்பினா போதும்னு ஆயிடும். " என்றாள்.


" ஐயோ! கா… ஏன் கா இப்படி இருக்கீங்க ஒருத்தவங்களைப் பத்தி யோசிச்சா இன்னொருத்தவங்களை யோசிக்க மாட்டீங்களா? முன்னாடி என்னை யோசிச்சு, உங்க நாத்தனாரை கஷ்டப் படுத்துனீங்க. இப்போ உங்க நாத்தனாருக்காக அபர்ணாவை கஷ்டப்படுத்துறீங்க. இப்படி அவ மனசுல குழப்பத்தை உண்டு பண்ணா டெலிவரி டைம்ல அவளுக்கு ப்ராப்ளம் வராதா?" என்று ஆற்றாமையாக ருத்ரன் வினவ.


" நீ யோசிக்கிற அளவுக்கு நானும் யோசிக்க மாட்டேனா? அப்ப நான் உங்க அவங்க ரெண்டு பேருக்காகவும் யோசிச்சு தான் அவ்வளவு பெரிய முடிவெடுத்தேன்.அது உனக்கு புரியலை. சரி அதை விடு. இப்ப கூட அபர்ணா, அவங்க அம்மா வீட்டுக்கு போனா, நான் அடிக்கடி போயி அவளோட பேசி மைண்ட் டைவர்ட் பண்ணலாம் தான் இருந்தேன். என்னோட அவ எப்பவுமே மிங்கிள் ஆக மாட்டா… அதையும் சரி பண்ண மாதிரி இருக்கும்னு யோசிச்சேன்."


சரியாக அந்த நேரத்தில் வந்து எல்லாத்தையும் கேட்டு விட்ட அபர்ணா, " அக்கா… சாரி கா. நான் உங்களை தப்பா நினைத்து விட்டேன்‌. நீங்க சொன்னதைக் கேட்டு முதலில் மனம் குழம்பி இருந்தாலும், கொஞ்ச நேரத்திலே நீங்கள் வேண்டும் என்று தான் தென்றலையும் என்னையும் பிரிக்க பார்க்குறீங்கனு நினைச்சுட்டேன். ஆனால் நீங்க நம்ம குடும்பநல்லதுக்காகத் தான் எல்லாம் செய்துருக்கீங்க. ரியலி சாரி கா." என்று அவள் மேல் சாய்ந்து கண் கலங்கினாள்.


" ஓஹோ… சிஸ்டர்ஸ் ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தாச்சு போல." ருத்ரன் கூற.


" இதுல உங்களுக்கு என்ன பொறாமை அண்ணா." என்றாள் அபர்ணா.


" ஓஹோ… மேடமுக்கு இவ்ளோ நாளா இந்த அண்ணனை கண்ணுக்கு தெரியலையா?" என்று கேலியாக ருத்ரன் வினவ.


" அது வந்து அண்ணா.நீங்க தென்றலே வேணாம்னு சொன்னதை தப்பா நினைச்சிட்டேன். ஆனால் அக்கா தான் ஏதோ சொல்லியிருக்காங்க. ஆனால் ஏன்?" என்றவள் சங்கீதாவை பார்க்க.


" அது… என் கிட்ட காரணம் எதையும் கேட்காத அபர்ணா. ப்ளீஸ்…" என்க.


ருத்ரனோ, " இப்போ உங்க அக்கா மேல நம்பிக்கை இருக்குல்ல. அவங்க செஞ்ச ஏதாவது காரணம் இருக்கும். சரி விடு." என்றான்.


" ஆமாம்… ஆமாம்… சங்கீதா எது செய்தாலும் ஏதாவது காரணம் இருக்கும். ஆனா அந்த காரணம் மட்டும் சரியாக இல்லைன்னா, அன்னைக்கு இருக்கு உனக்கு. எத்தனை நாளைக்கு தான் பூனைக்குட்டி உள்ளேயே இருக்கும்னு பார்க்கிறேன்." என்றான் கதிரவன்.


அவனைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றாள் சங்கீதா.


நமட்டு புன்னகை பூத்த ருத்ரனோ,"அது உங்க பாடு." என்று கூற.


" சரி கீழே வா. அம்மா கூப்புடுறாங்க." என்று விட்டு கதிரவன் இறங்கினான்.


"அச்சோ அத்தை உங்களை கூப்பிட சொல்லி தான் என்னைய அனுப்புனாங்க. அதையே மறந்துட்டேன். வாங்க போகலாம்." என்ற அபர்ணாவும் கீழிறங்க…



சங்கீதா தன் தம்பியின் கையை பிடித்துக் கொண்டு கீழே இறங்கினாள்.


கீழே எல்லோரும் வரவும் மலரோ, " தம்பி எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் தம்பி." என்றார்.


" சரிங்க அத்தை. மச்சானுக்கு சம்மதமா?" " என்று கேட்ட படியே அமுதனை ஓரக்கண்ணால் பார்க்க.


அமுதனோ நெகிழ்ச்சியுடன் அவனை வந்து அணைத்துக் கொண்டான்.


அமுதனும் ருத்ரனும், அமுதனின் திருமணத்திற்குப் பிறகு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். தென்றல் திருமண பிரச்சனையில் விலகி இருந்தவர்கள், இப்பொழுது மீண்டும் தங்களது தயக்கத்தை விட்டு, நட்பை புதுப்பித்துக் கொண்டனர்.


மலரோ திடீரென்று ," தென்றலை எப்படி ஒத்துக்க வைக்கிறதுன்னு தெரியலையே. சங்கீதா நீ பேசி பாரு. நீ சொன்னா அவ கேப்பா." என்று சங்கீதாவிடம் வினவ.


"அதெல்லாம் வேணாம்…" என்று ருத்திரனும், கதிரவனும் கத்தினர்.


மொத்த குடும்பமும் அவர்களைப் பார்த்தது.


" அது எதுவாக இருந்தாலும் நீங்களே பேசுங்க அத்தை. நீங்க சொன்னா தான் அவ கேட்பா. அவளை சமாளிக்க உங்களால் தான் முடியும். உங்களுடைய மன உணர்வுகளை அவளுக்கு புரிய வையுங்க அவ ஒத்துப்பா. இதுல வேற யார் நுழைந்தாலும் பிரச்சினை தான் வரும்." என்று ருத்ரன் கூற.


" சரி."என்று தலையாட்டிய மலர், 'உண்மையை தென்றலுக்கு சொல்லுவோமா?' என்று தனக்குள் எண்ணிக் கொண்டார்.


" சரிங்க அத்தை நான் வரேன்." என்ற ருத்ரன் கிளம்பி வெளியே வர.


அவனுக்கு எதிரே, அவனை முறைத்தப்படி உள்ளே வந்தாள் தென்றல்.


அவளைக் கண்டுக் கொள்ளாமல் வெளியேற முயல…


அவளோ, "ஹலோ… உனக்கு வேற வேலையே இல்லையா? அதுக்குள்ள வேற ஆள பாடிகார்டா வெச்சா எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டியா… அந்த அளவுக்கு நான் முட்டாளா? லுக் இது தான் ப்ர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங். இனி என் வழியில கிராஸ் பண்ணாத புரியுதா? " என்று திட்ட…


" ஓகே யுவர் விஷ். இனி யாரையும் பாடிகார்டா வைக்கலை. கொஞ்ச நாள் தான் பொறுத்துக்கோ. அதுக்கப்புறம் நான் தான் உனக்கு பாடிகார்டு வேலை பார்க்கப் போகிறேன். இருபத்தி நான்குமணி நேரம் என்னுடைய கண் பார்வையில் தான் நீ இருக்கப் போற? புரியலையா? நீ என்னுடைய திருமதி ஆகப் போற… " என்ற ருத்ரன் அவர்கள் வீட்டு வாசலில் இருந்த ரோஜா செடியிலிருந்து, சிவப்பு ரோஜா ஒன்றைப் பறித்து, " இந்தா செல்லம்… காலம் முழுவதும் நான் உனக்கு பாடிகார்ட் வேலை செய்வதற்கு சீக்கிரமே ஓகே சொல்லு…" என்று நீட்ட.


அவளோ அவன் சொன்ன விஷயத்தில் அதிர்ச்சியாக இருந்தாள்.


அவள் கையில் அந்த பூவை திணித்து விட்டு வெளியே சென்ற ருத்ரனோ விசிலடித்துக் கொண்டே, ' ஒரு வழியா நாமளும் காதலை ப்ரப்போஸ் பண்ணிட்டோம்.' என்று எண்ணி சிரித்துக் கொண்டே சென்றான்.


அதற்கு மாறாக தென்றல் கண்ணீர் வழிய, விசிலடித்துக் கொண்டே செல்லும் ருத்ரனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்...
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️ஆத்தி இந்த ருத்ரன் ரெண்டாவது தடவை படையெடுக்குறான் இந்த தென்றல் அவன் பேருல இருக்குற ருத்ர தாண்டவம் ஆடப்போறா 😲😲😲😲😲😲
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
606
சங்கீதா குணம் தெரிந்தவர்கள் கதிர், ருத்ரன் அதனால் தான் சங்கீதாவை பேச வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
 

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
சங்கீதா குணம் தெரிந்தவர்கள் கதிர், ருத்ரன் அதனால் தான் சங்கீதாவை பேச வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
Thank you so much sis 💕
 
Top