• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
தென்றல் - 17

" அப்பாடா! இனி நிம்மதியாக கல்யாண வேலையில் கவனம் செலுத்தலாம்." என்று ருத்ரன் நினைத்திருக்க. விதியானது இன்னும் சற்று விளையாடிப் பார்க்கலாம் என்று எண்ணியது.

ருத்ரன் தென்றலின் மனம் காயபடக்கூடாது என்பதற்காக சில விஷயங்களை அவாய்ட் செய்ய... அது தென்றலுக்கு சங்கடமாக இருந்தது.

'தான் புடவை எடுக்க, அவள் கூட சென்றால், அவளுக்கு பழைய நினைவுகள் எல்லாம் வரலாம்.' என்று எண்ணியே, அவன் வேலையை காரணம் காட்டி வர முடியாது என்று கூறினான். இல்லை என்றால் புடவை எடுப்பதை இன்னொரு நாள் மாற்ற சொல்லி இருப்பான்.

தென்றலோ, ருத்ரன் வரப்போவதில்லை என்பதை அறிந்ததும் உள்ளுக்குள் உடைந்து போனாள்.

காலையில் எழுந்தவள், " அண்ணி… எனக்கு தலைவலிக்குது. நான் வரலை." என்றாள்.

" என்ன தென்றல்? முகூர்த்த புடவை எடுக்குறது வாழ்க்கையில் ஒரு தடவை நடக்குற நிகழ்ச்சி. அதுக்கு வரலைன்னா எப்படி? ருத்ரன் வேற உனக்குப் பிடிச்ச மாதிரி தான் எடுக்கணும்னு சொல்லியிருக்கான்." என்று அவள் பாட்டுக்கு வாய்க்கு வந்ததை கூற.

கதிரவனோ, " சங்கீதா…" என்று அதட்ட.

அப்போது தான் அவள் சொன்ன வார்த்தையின் வீரியம் புரிந்தது. அவள் வேண்டும் என்று சொல்லவில்லை.
"சாரி தென்றல்… ரியலி சாரி. நான் ஏதோ ஞாபகத்துல சொல்லிட்டேன்." என்று பதற.

" இட்ஸ் ஓகே அண்ணி. நீங்களே எனக்கு பிடிச்ச மாதிரி வாங்கிட்டு வந்துடுங்க." என்றவள் ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்‌.

" கதிர் நான் வேணும்னு எதுவும் சொல்லலை." என்று கூற.

அவனோ ஒன்றும் கூறாமல் அவளை முறைத்து விட்டு கீழே சென்றான்.

கண் கலங்கிய சங்கீதா, ருத்ரனுக்கு அழைத்து நடந்த எல்லாவற்றையும் சொல்ல.

" விடு கா… இதெல்லாம் கொஞ்ச நாள்தான். அதுக்கப்புறம் நாங்க வாழுற வாழ்க்கையைப் பார்த்து, அவளுடைய கடந்த காலத்தை எல்லோரும் மறந்துடுவீங்க. அவ வரலைன்னா விடு.நீயே அவளுக்கு பிடிச்ச மாதிரி வாங்கிடு." என்று கூற.

" ரொம்ப சந்தோஷம் ருத்ரா. ஆனால் புடவை எடுக்க நீயும் வரலைன்னுட்ட, அவளும் வரலைன்னா எப்படி?" என்று கேட்க.

" அப்படின்னா ஓண்ணு செய்யலாம் கா. நீ அவளுக்கு பிடிச்ச மாதிரி புடவையை செலக்ட் பண்ணிட்டு, எனக்கு வாட்ஸ்அப்ல அனுப்பு. நான் அதுலருந்து செலக்ட் பண்றேன்."

இப்பொழுது சங்கீதாவின் முகம் மலர்ந்தது. " டன்." என்றவள் கீழே இறங்க.

சங்கீதா பேசியதை மட்டும் அவளது அறையிலிருந்து கேட்ட தென்றலோ, ' இது எனக்குஇரண்டாவது திருமணம் என்பதால் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதுவே வேறு ஒரு பொண்ணா இருந்தா இப்படி வர மாட்டேன்னு சொன்னா, சும்மா விடுவாங்களா. வற்புறுத்தி கூட்டிட்டு போயிருக்க மாட்டாங்களா.' என்று மனதிற்குள் எண்ணினாள்.

அவன் நினைத்திருந்தால் இப்பொழுது வேறு ஒரு பெண்ணையே அவன் திருமணம் செய்திருக்கலாம். அவன் ஏன் செய்துக் கொள்ளவில்லை என்பதை அந்த பேதை பெண் அறியவில்லை.

ருத்ரன் தென்றலை தொந்தரவு செய்யாதீங்க என்று சொல்லியிருக்க. வீட்டிலுள்ளவர்களும், அவளை தொந்தரவு செய்யாமல் கல்யாண வேலையை பரபரப்பாக செய்துக் கொண்டிருந்தனர்.'

திருமண நாளும் நெருங்கிக் கொண்டிருக்க. எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்த தென்றலுக்கு எரிச்சலாக வந்தது.

" அம்மா… கோவிலுக்கு போயிட்டு வரேன்." என்றாள் தென்றல்.

"கல்யாணத்துக்கு ரெண்டு நாள் கூட இல்லை. இப்போ எதுக்கு டா, வெளியே அலையுற…" என்றார் மலர்.

" மா… ப்ளீஸ் மா."என்று தென்றல் கெஞ்ச.

" சரி துணைக்கு யாரையாச்சும் கூட்டிட்டு போ."

" இல்லை மா. சங்கீதா அண்ணி, ஏதோ நகை கடைக்கு போகணும்னு சொன்னாங்க. அபர்ணா அண்ணியோட
கால் வீங்கிருக்கு. அவங்களை கஷ்டபபடுத்த வேண்டாம். பக்கத்துல உள்ள கோவில் தானே. நானே போயிட்டு வர்றேன் மா."

" சரி பார்த்து பத்திரமா போயிட்டு வா. கொஞ்சம் சீக்கிரமா வந்துடு." என்றார் மலர்.

" சரி." என தலையாட்டிய தென்றல் உற்சாகமாக கோவிலுக்கு கிளம்பினாள்.

அங்கு சென்ற பிறகோ,
' ப்ச்…. அம்மா சொன்னதைக் கேட்டு, அண்ணிங்க கூட வந்திருக்கலாம்.' என்று நொந்து போனாள்.

கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பிரகாரத்தில் சுற்றி வந்த தென்றல் ஒரு தூண் அருகே உட்கார.

"அண்ணி…" என்ற குரல் ஒலிக்க.

திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். அங்கு ராம்சரனின் தங்கை நின்றிருந்தாள்.

திடீரென்று அவளைப் பார்த்ததும் அதிர்ந்த தென்றல், பிறகு தன்னை சமாளித்துக் கொண்டாள்.

அதற்குள் வேகமாக அவளருகே வந்த சுபா," எப்படி இருக்கீங்க அண்ணி. உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா? வேண்டாமானு யோசிட்டுத் தான் இந்த கோயிலுக்கே வந்தேன். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி உங்களை இங்கேயே பார்த்துட்டேன்." என்றவள், மெகந்தி போட்டு சிவந்திருந்த தென்றலின் கையை பற்றினாள்.

" அதுக்கென்ன சுபா, வீட்டுக்கு வர வேண்டியது தானே." என்று புன்னகையுடன் கூறினாள்.

" அது வந்து அண்ணா இப்படி பண்ணியிருக்கக் கூடாது. இப்போ கேட்டாலும் என்ன பிரச்சனைனு சொல்ல மாட்டேங்குறான். உங்க லைஃபையே ஸ்பாயில் பண்ணிட்டான். நான் எப்படி அங்க வர்றது அண்ணி." என்று நா தழுதழுக்க கூறினாள்.

" ஆமாம் சுபா. நீ எப்போ வெளிநாட்டிலிருந்து வந்த?" என்று வேறு பேச்சுக்கு தாவினாள் தென்றல்.

"அது வந்து அண்ணி. எங்க வீட்டுக்காரரோட ஒண்ணு விட்ட அண்ணன் ஒருத்தர் இருந்தாங்களே. நம்ம வீட்டுக்கு கூட அடிக்கடி வருவாரே. அஸ்வின். அவருக்கு தான் திடீரென ஆக்சிடென்ட் ஆயிடுச்சுனு ஃபோன் வந்துச்சு‌. பொழைக்குறதே பெரிய விஷயம்னு சொன்னாங்க. அதான் அவரைப் பார்க்க இங்க வந்தோம். சென்னையில தான் ஹாஸ்பிட்டல் சேர்த்திருக்காங்க. நேத்து தான் கண்ணு முழிச்சார். ஆக்ஸிடெண்ட்னு சொல்றார். ஆன அது மாதிரி தெரியலை. யாரோ நல்லா அடிச்சு போட்ட மாதிரி தெரியுது. காரணத்தை கேட்டா சொல்ல மாட்டேங்குறார். எங்க அத்தையும் அவர் மகனை தொந்தரவு செய்யாதீங்கனு சொல்லிட்டாங்க. சரி தான்னு நாங்களும் விட்டுட்டோம். நாமளும் ஒரு அளவுக்கு மேல தலையிட முடியாதில்லையா‌? இவர் தான் ஹாஸ்பிடல்ல இருக்கார். நான் தான் உங்கள பாக்கலாம்னு வந்தேன். மறுபடியும் சாரி அண்ணி
எங்க அண்ணன் பண்ணதுக்கு." என்று விடாமல் மீண்டும் அவளது அண்ணன் பேச்சை ஆரம்பிக்க.

" பரவால்ல விடு சுபா. நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம்." என்றாள் தென்றல்.

" காங்கிரட்ஸ் அண்ணி… " என்றவள் தயக்கத்துடன் அவளைப் பார்த்து," நான் உங்களை அண்ணினு சொல்லலாமா?" என்று வினவ.

" உண்மையை சொல்லட்டுமா சுபா. எனக்கு அண்ணினுகூப்பிடுறது பிடிக்கலை. அது முடிந்து போன ஷாப்டர். அது அப்படியே இருக்கட்டுமே. நான் உன்னை என் கல்யாணத்துல தான் பார்த்தேன். என் மேல அவ்வளவு பிரியமா இருந்த. அதுக்கப்புறம் நம்ம பேசினதெல்லாம் ஃபோன்ல தான். அதுக்கப்புறமும் நான் தான் உன்னை அவாய்ட் பண்ணிட்டு இருந்தேன். இப்பவும் என் கூட பிரியமா பேசுற. உன் மனச கஷ்டப்படுத்த கூடாதுன்னு தான் நினைக்கிறேன். எனக்கு நீ ஒரு நல்ல தோழி. அதனால பேர் சொல்லியே கூப்பிடேன் சுபா. ப்ளீஸ்…"

" முயற்சி செய்றேன் அண்ணி." என்றவள் தென்றலை பார்க்க.

" தட்ஸ் த ஸ்பிரிட்." என்ற தென்றலின் தெளிவையும், தைரியத்தையும் ஆச்சரியமாக பார்த்தாள் சுபா.

" கீப் இன் டச் சுபா." என்று விட்டு, ரெண்டு எட்டு எடுத்தவள் திரும்பி பார்க்க.

அவள் முகமோ, 'தன் அண்ணனுக்கும் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும்.' என்று எண்ணிக் கொண்டிருந்தது.

வேகமாக அவளருகே வந்த தென்றல்,
" என்ன சுபா?உங்க அண்ணனுக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு வேண்டிட்டு இருக்கிறீயா? அது ஒன்னும் தப்பில்லை. முதல்ல அவர்கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் தானானு விசாரிச்சுட்டு, அப்புறம் கல்யாணம் பண்ணுங்க. எதையா இருந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ண சொல்லு. தீர்க்க முடியாத பிரச்சனை எதுவுமில்லை. நம்மளோட தயக்கம்,பயம் அடுத்தவர்களுக்கு ஆயுதம். நான் இப்படி தான் அதுக்கென்னெனு நாம் போயிட்டு இருந்தா யாராலையும் ஒண்ணும் பண்ண முடியாது. நான் சொன்னேனு உங்க அண்ணன் கிட்ட சொல்லு. பை." என்றவள், நிமிர்ந்த நேர் கொண்ட பார்வையோடு அங்கிருந்து சென்றாள்.

'பயந்து, பயந்து மென்மையாக பேசும் அண்ணி, எப்போதிலிருந்து இப்படி புயலாக மாறினாங்க.' ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

திருமணநாள் அன்று காலை பொழுது அழகாக விடிந்தது.

பட்டு வேஷ்டியில் தயாராகி வந்த ருத்ரன், அவனது காரில் ஏறினான்.
" சாரதா வா… ருத்ரன் வந்துட்டான் பாரு." என்ற சதாசிவத்தின் குரல் ஒலிக்க.

" இருங்க. எல்லாம் எடுத்து வச்சாச்சானு பார்க்கணும். ஒராளா என்னால முடியுதா. உங்க பொண்ணை உதவிக்கு வர சொன்னா, நான் பொண்ணு வீட்டுக்காரினு சொல்லிட்டா." என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்து ஏறினார்.

" பையன் கல்யாணம்னா சும்மாவா. சரி வா. கிளம்பலாம். முகூர்த்தத்துக்கு நேரமாகிடுச்சு." என்றார் சதாசிவம்.

அந்த கடவுளின் சந்நிதானத்தில் மனமுருக வேண்டிக் கொண்டு, தனதருகில் இறுக்கமாக நின்றிருந்த தென்றலின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தனது சரிபாதியாக்கிக் கொண்டான்.

மாலை மாற்றும் போதும், நெற்றியில் குங்குமம் வைக்கும் போது அவளைப் பார்க்க. அவளோ இறுகிப் போய் நின்றாள்.

'நல்ல வேளை கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்தோம். இல்லையென்றால் அந்த சடங்கு, இந்த சம்பிரதாயம் என்று ஏதாவது செய்ய சொல்லி, தென்றல் மனது வருந்தும் படி ஆகியிருக்கும்.' என்று எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

திருமணம் முடிந்து காலை சாப்பாடு அருகில் உள்ள ஹோட்டலிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு முடிந்ததும் நல்ல நேரத்தில், ருத்ரனின் வீட்டிற்கு பொண்ணு, மாப்பிள்ளையை அழைத்து வந்தனர்.

ஆலம் சுற்றி முடித்ததும், வலது காலை வைத்து இருவரும் உள்ளே நுழைந்தனர்.
வீட்டிற்குள் நுழைந்ததும், வேகவேகமாக அவனது அறைக்குள் சென்று விட்டான். 'எங்கே தான் இங்கே இருந்தால் அடுத்த சடங்கு என எதையாவது ஆரம்பித்து, அவள் மனதை காயப்படுத்தி விடுவார்களோ…' என்று எண்ணி தான் ருத்ரன் அங்கிருந்து சென்றான்.

ஆனால் தென்றலுக்கு அவனது செயல் முகத்திலே அடிப்பது போல் இருந்தது. கண்கள் கலங்கியது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு அவள் நிற்க.

" உட்காருமா தென்றல்." என்று அவளை சோஃபாவில் அமரவைத்து சாரதா, உடனே மகனுக்கு அழைத்தார்.

" டேய் கீழ வா." என்று கூற.

" மா…" என்று ருத்ரன் ஏதோ கூற வர.

" நீ எதுவும் பேச வேண்டாம். ரெண்டு பேரும் பூஜை அறையில் விளக்கு ஏத்தி சாமிக் கும்பிட்டு, பால், பழம் சாப்பிட்டுவிட்டு நீ என்ன வேணும்னாலும் செய்." என்று கண்டிப்புடன் கூற.

ஒன்றும் கூறாமல் அமைதியாக கீழே வந்தான்.

" சங்கீதா… ரெண்டு பேரையும் பூஜை அறைக்கு அழைத்து போ." என்றவர் கிச்சனுக்குச் சென்று பால் பழம் தயார் செய்தார்.

ருத்ரனுடன் சென்று விளக்கேற்றியவள் மனதார வேண்டிக் கொண்டாள். பிறகு சாரதா பால் பழம் தர. அதையும் இருவரும் சாப்பிட்டனர்.

அடுத்து என்பது போல் ருத்ரன் பார்க்க.

" இப்போ நீ போய் எதுவேண்டுமானாலும் செய்துக்கோ." என்ற சாரதா, தென்றலிடம் திரும்பி பேச்சுக் கொடுத்தார்.

" அப்பாடா." என்ற ருத்ரன் அங்கிருந்து நழுவினான்.

தென்றலை எதுவும் யோசிக்க விடாமல் சங்கீதாவும், சாரதாவும் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தனர்.

" அப்போ நாங்க கிளம்புறோம் சம்மந்தி." என்று மலர் கூற.

"என்ன அதுக்குள்ள கிளம்புறீங்க." என்று சாரதா அதட்ட.

" அது அபர்ணாவுக்கு டயர்டா இருக்கும். அங்கே போய் ஓய்வெடுக்க சொல்லலாம். கதிரும், சங்கீதாவும் இங்கே தான் இருப்பாங்க. நாளைக்கு பொண்ணு, மாப்பிள்ளையை மறுவீட்டுக்கு அழைச்சிட்டு வருவாங்க." என்று தயங்கியபடியே கூற.

" முன்னாடி தான் இது சம்மந்தி வீடு. இனிமே இது உங்க பொண்ணு வீடு. நீங்க எப்ப வேணாலும் வரலாம்,போகலாம். இங்கேயே எல்லோரும் இருங்க. நாளைக்கு போகலாம்." என்று கூறியவர், வேலையாட்களை அழைத்து அவர்கள் எல்லோருக்கும் அறையை தயார் செய்ய சொன்னார்.

" சங்கீதா… ரூம் ரெடியாகட்டும், அதுவரைக்கும் அபர்ணாவையும், தென்றலையும் உன்னோட ரூமுக்கு அழைச்சிட்டு போய் ரெஸ்ட் எடுக்க சொல்லு." என.

" சரி மா." என்ற சங்கீதா அவர்களை மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

" ஆமாம்… அபர்ணாவுக்கு எப்போ வளைகாப்பு?" என்று சாரதா வினவ.

" போடணும் அண்ணி. கல்யாணம் திடீர்னு ஏற்பாடு பண்ணதால ஏழுல பண்ணலை. ஒன்பதாம் மாசம் செய்யலாம்னு இருக்கோம். எப்போ செஞ்சா என்ன? அமுதன் சொல்லிட்டான் டெலிவரி இங்கே தான்னு. அதான் பொறுமையா செய்துக்கலாம்னு விட்டுட்டோம்.

" சந்தோஷம்." என்ற சாரதா, ரூம் தயாராகவும் அவரையும் ஓய்வெடுக்க அனுப்பினார்.

மாலை மயங்கி இரவு பொழுது ஆரம்பமாக. தென்றலுக்கு அலங்காரம் செய்துக் கொண்டிருந்தனர்.

எந்த உணர்வுகளையும் காட்டாமல் இறுகிப் போயிருந்தாள் தென்றல்‌.

சங்கீதாவிற்கோ, 'என்னாகுமோ? ஏதாகுமோ?. என்று உள்ளுக்குள் உதறல் எடுத்தது. இருவருக்கும் நல்லது என்று அன்று அவள் எடுத்த முடிவு தான் தென்றல் இன்றைக்கு இந்த அளவுக்கு வருத்தப்பட காரணம். 'கடவுளே! அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்.' என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டே, சந்தனமுல்லை பூவை தலையில் சூடியவள், அவளை வெளியே அழைத்து வந்தாள்.

பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்ய… அவளை மாடிக்கு அழைத்துச் சென்றாள்.
தென்றலது முகம் கடினமுறுவதற்கும் காரணம் இருக்கிறது.

'"ரூம் அலங்காரம் பண்ணனும்." என்று சங்கீதா சொல்ல.

ருத்ரன் ஒரு ருத்ர தாண்டவம் ஆடி விட்டான்.

" அக்கா… நாங்க குழந்தைங்க கிடையாது. நாங்க பார்த்துக்கிறோம்.ப்ளீஸ் இதுல நீ தலையிடாதே." என்று அவன் கத்த.

அதைத் தென்றல் கேட்டு விட்டாள். அதிலிருந்துதான் இப்படி இறுகிப் போயிருக்கிறாள்.

காலையில் அவளது ரூமில் வந்து மூவரும் பேசி கொட்டமடித்து கொஞ்சம் கொஞ்சமாக தென்றலின் மனநிலையை மாற்றி இருந்திருந்தாள்.'

அதையெல்லாம் நினைத்துப் பார்த்த சங்கீதா‍, என்னமோ அவளுக்குத் தான் முதலிரவு என்பது போல் வேர்த்து விறு விறுத்து, பயத்துடன் தனது தம்பி மனைவியை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்.

அறையில் நடை பயின்று கொண்டிருந்த ருத்ரனோ,மனதிற்குள்ளே நிறைய ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான்‌. ' தென்றலிடம் எப்படி பேச வேண்டும். அவளை கஷ்டப்படுத்தாமல் வார்த்தையை ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும்.' என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

மெல்லிய கொலுசொலியும்,வளையல் சத்தமும் வெளியே கேட்க. தென்றல் உள்ளே வருவதற்காக காத்திருந்தான்.

நிதானமாக உள்ளே வந்தாள் தென்றல்.
" ம்கூம்." என்று தொண்டையைக் கணைத்தான் ருத்ரன்.
ஒன்றும் சொல்லாமல் தென்றல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

" உட்காரு தென்றல்." என்று கட்டிலைக் காட்டியவன், டேபிளிலிருந்த பாலை இரண்டு கப்பில் ஊற்றி அவளிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு, மற்றொன்றை எடுத்து அவன் அருந்தினான்.

அவள் பாலைக் குடித்து முடித்ததும்," ரிலாக்ஸ் தென்றல். நீ எதுக்கும் பயப்பட வேண்டாம். நீ எப்பவும் போல இருக்கலாம். நீ இங்கே படுத்துக்கோ. அந்தப் பக்கம் என்னோட ஆஃபீஸ் ரூம் இருக்கு. அங்கே போய் நான் படுத்துக்குறேன்." என்றவன் திரும்பிச் செல்ல.

வேகமாக எழுந்த தென்றல், அவனருகே வந்து சட்டையைப் பிடித்து, " நான் சொன்னேனா. எனக்கு பயமா இருக்கு. என்னை தொந்தரவு பண்ணாதீங்கனு சொன்னேனா. உங்களுக்கு பிடிக்கலையா, பிடிக்கலைனு சொல்லுங்க. அதை விட்டுட்டு, எனக்காக பார்க்கிறீங்களாம்." என்று கத்த.

"ஷ்… மெதுவா பேசு." என்று தன் சட்டையிலிருந்து அவள் கைகளைப் பிரித்தப்படியே கூற.

" நான் அப்படித் தான் பேசுவேன். என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திட்டு, நீங்க பாட்டுக்கும் என்னை விட்டுட்டு போய்டுவீங்க. நாளைக்கு என்னைய தான் எல்லாரும் கேள்வி கேட்பாங்க." என்று ஏதேதோ உளற.

அவனது விழிகள் விரிந்தது." அப்போ இன்னைக்கு நைட் நான் உன் கூட இருந்தா ஓகே தானா." என்ற ருத்ரன் அவளை தன்னுடன் சேர்த்து இணைக்க.

அப்போது தான் அவளுக்கு தான் என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதே புரிய. அவனிடமிருந்து விலகி நின்றாள்.

"எதுக்கு நகருற தென்றல்?" என்று வினவியபடியே அவனும் நகர்ந்தான்.

அவளோ நடுங்கிக் கொண்டே நகர்ந்தவள் சுவர் முட்டவும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து விழிக்க.

அவளுக்கு இரு பக்கமும் கைகளை ஊன்றிய ருத்ரன்," எனக்கு பிடிக்கலைனு நான் சொல்லவே இல்லையே. உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று சொல்ல வா." என்று அவளது காதில் ரகசியம் பேசியவன், அவளது மறுப்பை லட்சியம் செய்யாமல் இருகைகளில் அவளை அள்ளினான்.

மெத்தையில் அவளை விட்டவன், அவளிடம் எதுவும் பேசவில்லை. அவளையும் பேசவிடவில்லை.
ஏன் வேறு எதையும் யோசிக்க விடாமல் வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றான்.

தொடரும்.....
 
Top