• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். தணலாக வீசும் பூந்தென்றலே கதையின் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே.

தென்றல் - 2

தென்றல் ஓங்கி ஒரு அறை விட்டாள். ருத்ரனுக்கோ ஏதோ பூங்கரம் தடவியது போல தான் இருந்தது.

ஆனால்????

தன்னை ஒரு பெண் அடிப்பதா? அதுவும் காரணமே இல்லாமல்…

ருத்ரனின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாட, நொடிப்பொழுதில் எந்த பெண்ணையும் தீண்டாதவன், மணமான அந்நிய பெண்ணின் கழுத்தை பிடித்து விட்டான்.

சங்கீதாவோ தனது தம்பியை தென்றல் அடித்த அதிர்ச்சியிலே நின்று விட்டாள்.

அவனது கோபத்தில் அவள் ஸ்தம்பித்து நின்றதெல்லாம் ஒரு நொடியே…

பிறகு வேகமாக அவனது கையைத் தட்டிவிட்டு அவனைப் பார்த்து முறைத்தாள்.

அங்கு நடந்த கலாட்டாவில், மாடியிலிருந்த கதிரவனும் இறங்கி வந்து விட்டான்.

" என்ன? என்ன நடக்குது இங்கே?" என்று கதிரவன் பதற…

" ஷிட்…" என்ற ருத்ரன் விறுவிறுவென வெளியே கிளம்பிச் சென்று விட்டான்.

" மாமா…" என்றழைத்த பட்டு என்கிற பல்லவிக் குட்டியின் குரல் கூட அவனின் செவியை சென்றடையவில்லை.

அவனது லம்போர்கினி காரில் விர்ரென புறப்படும் சத்தம் இங்கே உள்ளவர்களை அதிர செய்தது‌.

அந்த அதிர்ச்சியில் சங்கீதா என்ற சிலைக்கு உயிர் வந்தது.

வேகமாக தென்றல் அருகே வந்தவள், " ஹேய் அவன் யார் தெரியுமா? என் தம்பி… அதுவும் எவ்வளவு பெரிய பிஸ்னஸ்மேன். அவனைப் பார்த்தாலே எல்லாரும் மிரளுவாங்க. அவன் மேலேயே கை வைக்கிறீன்னா, உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும்." என்று அங்கிருந்த எல்லோரையும் பார்த்து விட்டு பொறிந்தாள்.

அவளுக்கு தன் தம்பியை இப்படி எல்லோர் முன்னாடியும் தென்றல் அடித்ததை தாங்க முடியவில்லை.

தனது அண்ணியை நிதானமாக பார்த்த தென்றல், " நான் ஒன்னும் தப்பு செய்யலை." என்றாள்.

" ஒன்ன விட எவ்வளவு பெரியவன் கை நீட்டி அடிக்கலாமா?" என்று ஆக்ரோஷமாக சங்கீதா வினவ.

" அவர் செஞ்ச காரியம் அப்படி…"

" அப்படி என்னடி என் தம்பி செஞ்சுட்டான். அவன் எந்த பொண்ணையும் நிமிர்ந்துக் கூட பார்க்க மாட்டான். போயும், போயும் உன் கிட்டயா வம்பு பண்ண போறான்." எகத்தாளமாக வினவினாள் சங்கீதா.

அவளது கேலியை அலட்சியமாக ஒதுக்கி விட்ட தென்றல் கூலாக, " ஹவ் டேர் ஹீ. என்னை கட்டி பிடிச்சான். அதான் அறைஞ்சேன்."

ஏதோ தெருவில் போகும் ரோக்கை அடித்தது மாதிரி சொல்ல…

சங்கீதாவால் பேச முடியவில்லை.
உடம்பெல்லாம் ஆத்திரத்தால் நடுங்கியது.

இப்பொழுது கதிரவன் அவளுக்கு உதவியாக வந்தான்.

" பாப்பா… ருத்ரா அப்படிபட்டவன் இல்லையே மா? என்ன நடந்தது." என்று தங்கையைப் பார்த்து மென்மையாக வினவ.

" ஹாங்… அண்ணா அது வந்து… மாடிக்கு வந்து பட்டுக்கும், உங்களுக்கும் ஸ்வீட் கொடுத்து விட்டு கீழே ஓடி வந்தேனா… அப்ப அவரு மேல வந்தார். திடீர்னு வந்ததை கவனிக்கவில்லை.

எங்க மேல மோதிடுவாரோன்னு நகர்ந்தேன். ஆனால் அவர் என் கையை பிடிச்சு இழுத்து கட்டிப்பிடிச்சாரு அதான் அடிச்சேன். நான் கீழே விழுந்தா… இவருக்கு என்ன வந்தது." என.

மொத்த குடும்பமும் அவளை என்ன செய்வது என்பது போல் பார்க்க…

அவளருகே அடித்து விடுவது போல் வந்தாள் சங்கீதா. வேகமாக தங்கையை தனது அருகே மறைத்துக் கொண்டான் கதிரவன்.

" சங்கீதா கொஞ்சம் பொறுமையா இரு…" என்று அவளது கோபத்தை தடுக்கப் பார்த்தான்.

" என்னங்க பொறுமையாக இருன்னு சொல்றீங்க? அவ என்ன காரியம் பண்ணியிருக்கா பார்த்தீங்களா? கீழே விழாமல் காப்பத்துனதுக்கு நன்றிக்கடனா என் தம்பியை அடிச்சு இருக்கா? யாராவது அவளை கேள்வி கேட்கிறீங்களா? மொத்த குடும்பமும் வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்குறீங்க. எல்லாரும் செல்லம் கொடுத்துக் கொடுத்து தான் தறுதலையா வாழ்க்கையை தொலைச்சிட்டு இங்கே வந்து நிக்குறா?" ஊமைக்கோட்டான் மாதிரி இருந்துக் கிட்டு பண்ற வேலையை பாரு. அதான் புருஷன்காரன் வாழ முடியாதுன்னு தொரத்தி விட்டுட்டான். " என இவ்வளவு நாள் மனதில் வைத்திருந்த வன்மத்தையெல்லாம் வார்த்தைகளாக கொட்டினாள்.

" சங்கீதா… வாயை மூடுறியா? இல்லையா?" என கதிரவன் கத்த.

" அண்ணா நீங்க சும்மா இருங்க. நான் பார்த்துக்கொள்கிறேன்." என்றவள்
நிதானமாக தன் அண்ணியை பார்த்து, " ஈஸி அண்ணி. எதுக்கு இவ்வளவு டென்ஷனாகுறீங்க. நீங்க தான அண்ணி இதே மாதிரி முன்பு ஒரு முறை உங்க தம்பி என்னை கீழே விழாமல் தடுப்பதற்காக பிடித்ததற்கு சொன்னீங்க. பொண்ணுங்கண்ணா நெருப்பா இருக்கணும்னு… மறந்திருச்சா அண்ணி.

தென். நான் அப்போ சின்ன பொண்ணு. அப்பவே எப்படி இருக்கணும்னு நிறைய அறிவுரை கூறியிருக்கீங்க. இப்போ நான் டைவர்ஸி. சோ இன்னும் கேர்ஃபுலா இருக்க வேண்டாமா?" என சங்கீதாவைப் பார்த்து புருவத்தை உயர்த்த…

அதிர்ந்து நின்றாள் சங்கீதா.

அவள் மட்டும் அல்ல… இப்பொழுது மொத்த குடும்பமும் சேர்ந்து தான் அதிர்ந்து நின்றது.

சங்கீதாவுக்கு சர்வமும் நடுங்கியது. 'அவள் இத்தனை நாளாக இந்த குடும்பத்தில் அவளுக்கென பெற்று வைத்திருந்த நல்ல மருமகள் என்ற பட்டத்தை ஒரே நாளில் காலி பண்ணி விடுவாளோ,' என்று எண்ணி மிரண்டு தென்றலை பார்க்க…

அவளோ, " என்ன சரி தானே அண்ணி?" என்பது போல் பார்த்து புருவத்தை உயர்த்தி கேலியாக சிரித்து விட்டு, அவளது அறைக்குச் சென்று விட்டாள்.

' ஓங்கி ஒரு அறை விட்டாள்.'என்ன என்று தோன்றியது. ஆனால் கண்களில் கனலை வீசிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து அடக்கிக் கொண்டாள்.

கதிரவனோ அவளை முறைத்து விட்டு பல்லவியை தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்று விட்டான்.

அவர்களது அறைக்குச் செல்லும் தைரியமில்லாமல் தோட்டத்திலே தஞ்சம் புகுந்தாள்.

அவள் பின்னேயே வந்த அபர்ணா, " என்ன கா…" என்று கையைப் பிடிக்க…

" ப்ச்…" என்று விட்டு அங்கிருந்த மேடையில் அமர்ந்து கண் மூடினாள்.

தோளைத் குலுக்கிய அபர்ணா உள்ளே சென்று விட்டாள்.

கண்களை மூடிய சங்கீதாவின் முன்னே நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்தது வந்து சென்றது.

' கல்யாணமான புதிது மாடியில் சங்கீதாவும், கதிரவனும் கலகலவென்று பேசிக்கொண்டு சிரிக்க… துணி காயப்போட வந்த தென்றலோ அவர்களின் பேச்சு காதில் விழ… வெட்கப்பட்டுக் கொண்டு ஓடினாள்.

அவள் வந்து சென்ற சத்தம் கேட்ட சங்கீதா முகம் இறுக… யாராக இருக்கும் என்று தெரிந்தாலும், வெளியே வந்து பார்த்தாள்.

அங்கு ஓடிக் கொண்டிருந்தது தென்றல். " ச்சே… பிரைவைசியே இல்ல." என்று கடுப்புடன் முனுமுனுத்தாள்.

அவள் பின்னாலேயே வந்து தோளில் கை போட்ட கதிரவன், " என்ன கீத்... " என்று கேட்க…

முகத்தை மாற்றியவள்," ஒன்றும் இல்லை கதிர். யாரோ வந்தது போல் இருந்தது. அதான் வந்தேன்." என்று முழுவதும் கூறாமல், பார்வையாலே இறங்கிக் கொண்டிருக்கும் தென்றலைப் பார்த்துக் கொண்டே கூறினாள்.

" ஓ… தென்றல் வந்தாளா? துணி காயப்போட வந்திருப்பா… எதுக்கு வேகமாக ஓடுற…" என்றவனுக்கு சற்று முன் நடந்தது நினைவுக்கு வர…

வெட்கமாக இருந்தது. " ப்ச்… எல்லாம் உன்னால தான் சங்கீதா. காலையிலே வம்பு பண்ற…" என்று அவளைக் கடிந்து கொண்டவன், விருட்டென்று அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

அது அவள் மனதை காயப்படுத்தியது. ' சற்றுமுன் இனிமையாக இருந்தது, இப்பொழுது தவறாக மாறிப் போனது யாரால… எல்லாம் இந்த தென்றலால தான்.' என்று எண்ணியவள், தன் நாத்தானாரின் மேல் வன்மத்தை வளர்த்தாள்.

கீழே இறங்கிய சங்கீதா கண்ட காட்சியோ அவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.

கீழே இறங்கிய தென்றல், ருத்ரனின் மேல் மோதி அவன் மேல் சாய்ந்தாள்.

அவனோ, அவளை கீழே விழாமல் இருக்க, இறுக தன்னோடு சேர்த்து பிடித்திருந்தான்.

இருவரது முகமும் சற்று முன்பு மாடியில், இருந்த தங்கள் இருவரின் முகத்தை ஒத்து இருப்பதை உணர்ந்து தான் அதிர்ந்து நின்றிருந்தாள் சங்கீதா.

"ருத்ரா…" என்று கத்த…

" அக்கா…" என்றவன் லேசான வெட்கச்சிரிப்புடன் தலைக் குலுக்கி கொண்டு, தனது அணைப்பிலிருந்த தென்றலை நகர்த்தி விட்டே வேகமாக படியேறினான்.

அக்காவை பார்ப்பதற்காக தான் வந்திருந்தான்‌.

கதிரவன், சங்கீதாவின் திருமணம் முடிந்ததும் வெளிநாட்டுக்கு டூர் சென்றிருந்தவன் இப்போது தான் இந்தியாவிற்கு திரும்பியிருந்தான்.

அதான் அக்காவை பார்க்க, அவளுக்கு வாங்கி வந்திருந்த பரிசுகளோடு வந்திருந்தான்.

அதை நீட்டவும் கொஞ்சம் சமாதானம் ஆனது.

அதற்கு பிறகு, அவளது பிறந்த வீட்டு பெருமையை எல்லோரிடமும் காட்டி விட்டு, தனது தம்பியை கவனிப்பதாக பேர் பண்ணி, எல்லோரையும் நன்கு வேலை வாங்கினாள்.

ஒரு வழியாக ருத்ரன் வீட்டிற்கு கிளம்பியதும் மலர், " அப்பாடா… " என்று பெருமூச்சு விட்டவர் ஓய்வெடுக்க அவளது அறைப்பக்கம் ரெண்டெட்டு எடுத்து வைத்தார்.

அதற்குள் சங்கீதா, " தென்றல் மா…" என்று அன்பாக அழைத்தாள்.

" என்ன சங்கீதா? என்ன வேணும் சொல்லு. அத்தை செய்றேன். பாப்பா காலைல இருந்து நிறைய வேலைப் பார்த்துட்டா… கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டும்." என்றார் மலர்.

" ஐயோ! அத்தை… நான் வேலைக்காவா அவளை கூப்பிட போறேன். அவ நல்லதுக்கு தான் கூப்பிடுறேன் அத்தை. என்னை ஏன் அத்தை தப்பாவே நினைச்சிட்டு இருக்கீங்க. எங்க வீட்ல நான் எந்த வேலையும் செஞ்சதில்லை. சொல்லிக் கொடுங்க, கத்துக்குறேனு சொன்னேன். நீங்க தான் எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டு, இப்போ சொல்லி காண்பிக்கிறீங்க." என்று கண்ணை கசக்க.

" மலர்… மருமக என்ன சொல்றானு பொறுமையா தான் கேளேன். என்ன அவசரம்." என்று சுகுமாரன் கடிந்துக் கொண்டார்.

" சரிங்க…" என்ற ஒத்த வார்த்தையுடன் வாயை மூடிக் கொண்டார் மலர்.

' பதில் பேசினால் அவர் இப்போதைக்கு வாயை மூட மாட்டார்.' என்பதை இத்தனை வருட திருமண வாழ்க்கையில் நன்கு அறிந்தவராயிற்றே…

" என்ன அண்ணி…" என்று அவரை காப்பாற்ற தென்றல் உதவிக்கு வந்தாள்.

" இல்லடா… நான் காலையில பார்க்கும் போது, என் தம்பியும், நீயும் இப்படி கட்டிப் பிடிச்சிட்டு நிப்பீங்கன்னு எதிர்ப்பார்க்கலை." என்றாள் சங்கீதா.

" அது அண்ணி… கீழே விழ இருந்தேனு பிடிச்சார். வேறொன்னுமில்லை அண்ணி." என்று புன்னகைக்க.

" எதா இருந்தாலும் சரி. அடுத்த ஆண் மகன் கைப்பட்டா, யாரு என்னென்னு பார்க்காம ஓங்கி ஒரு அறை விட்ருக்கணும். அது தான் நமக்கு சேஃப். நம்ம நெருப்பு மாதிரி இருக்கணும். புரியுதா? உன் நல்லதுக்கு தான் சொல்றேன்." என்று கூற…

" அது சரி தான் …" என மொத்தக் குடும்பத்திற்கும் தோன்றியது.

'அவளுடைய தம்பியை விட, தன் தங்கை மேல் அக்கறையாக இருக்கிறாளே.' என கதிரவனுக்கோ, மனம் உற்சாக வானில் பறந்தது.

தென்றலும் வேறு ஒன்றும் கூறாமல்," சரி அண்ணி." என்றாள். '

அதைத்தான் இன்று எல்லோர் முன்பும் மீண்டும் நினைவு படுத்திக் கூறினாள்.

அதை நினைத்துப் பார்த்த சங்கீதாவோ, 'புள்ளைப்பூச்சினு சாதரணமா நினைச்சுட்டோமே.' என்று எண்ணியவள், கொதித்துக் கொண்டிருந்தாள்.

வீட்டிற்குச் சென்ற ருத்ரனோ, பயங்கர கோபத்தில் இருந்தான்.

" என்ன டா… அதுக்குள்ள வந்துட்ட… அக்கா வீட்ல யாரும் இல்லையா?" என அவனது அம்மா சாரதா வினவ.

"இல்லை." என்பது போல் தலையாட்டியவன், அவனது அறைக்குச் சென்று விட்டான்.

" ஏன் இவன் இப்படி இருக்கான்‌. " என்று புலம்பிய சாரதா அடுத்த வேலையை கவனிக்க சென்று விட்டார்.

அறைக்குள் சென்ற ருத்ரனோ,அவள் அடித்த கன்னத்தை வருடி கொண்டு, " தென்றல்… நீ பூ மாதிரி இருப்பேனு நினைச்சேன். ஆனா நீ அவ்வளவு மென்மையானவ இல்லைன்னு நிருபிச்சுட்ட. ஃபைன்… உன் வாழ்க்கையில என்ன பிரச்சினை. என்னாச்சு... ஏதாச்சுனு உன்னை பார்க்க வந்தேன். ஆனா நல்ல பரிசு கொடுத்திட்ட.

கல்யாணமான பொண்ணு கிட்ட தப்பா நடக்கிறவன் மாதிரியா என்னை தெரியுது.

எவ்வளவு டீசண்டா உனக்கு என்ன புடிக்கலைன்னு சொன்னதும் ஒதுங்கிப் போனேன். ஆனா நீ என்ன அப்படி ஒதுங்கிப் போக விடமாட்டேங்குறீயே.

இனி உன்னை சும்மா விடமாட்டேன். எல்லாத்துக்கும் பதில் சொல்லியாகணும். என்னை வேண்டாம் சொன்னதிலிருந்து, என்னை அடிச்சது வரைக்கும் எல்லாத்துக்குமே சொல்லியாகணும். என்னை உன் மனசுல எவ்வளவு கீழே நினைச்சிருந்தா, இப்படி பிகேவ் பண்ணியிருப்ப.

இனி உன்னை இந்த வீட்டுல என் பொண்டாட்டியா தான் பார்ப்பேன். வெயிட் அண்ட் வாட்ச் தென்றல்." என்றவனது அழுத்தமான குரல் அந்த அறை முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.

தொடரும்.....
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,940
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ஆத்தாடி அப்படின்னா ருத்ரன் தான் நம்ம கதை ஹீரோ வா சூப்பர் அப்போ இனிமேல் ஒரே அதிரடிதான் 😍😍😍😍😍😍😍😍😍
 
Last edited:

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ஆத்தாடி அப்படின்னா ருத்ரன் தான் நம்ம கதை ஹீரோ வா சூப்பர் அப்போ இனிமேல் ஒரே அதிரடிதான் 😍😍😍😍😍😍😍😍😍
ஆமாம் சிஸ்.நன்றி ❤️
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
606
ருத்ரன் எண்ணம் தெரிந்தால் சங்கீதா என்ன சொல்வாள்.🤔🤔🤔
 

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
ருத்ரன் எண்ணம் தெரிந்தால் சங்கீதா என்ன சொல்வாள்.🤔🤔🤔
Thank you so much sis 💕
 
Top