• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
தென்றல் - 3

சங்கீதாவோ, அறைக்குச் செல்ல பயந்து தோட்டத்திலே இருந்தவள், ' சரி தான் தம்பியையாவது சமாதானம் செய்யலாம்.' என்று எண்ணினாள்…

கிச்சனுக்கு சென்றாள் சங்கீதா.

" அத்தை…" என்று மெதுவாக அழைக்க…

மருமகளின் கலங்கிய குரலில், " ஏன் சங்கீதா… என்னாச்சு… "என்று பதறினார் மலர்.

" நான் என் தம்பியை போய் பார்த்துட்டு வரேன்." என.

சங்கடத்துடன், " போயிட்டு வா மா. ருத்ரன் தம்பிக் கிட்ட மன்னிப்பு கேட்டனு சொல்லு." என.

அதைக் கேட்டதும் இறுகி போனாள் சங்கீதா. " சரி." என தலையாட்டியவள், " பட்டுவ பார்த்துக்கோங்க. வந்துடுறேன்." என்றாள்‌.

மலரும், ' பாவம்… அவன் தம்பியை பார்த்துட்டு வரட்டும்.' என்று எண்ணியவர், ' உன் புருஷன்ட்ட சொல்லிட்டீயா?' என்று கேட்க மறந்து விட்டார்.

சங்கீதாவுக்காக காத்திருந்த கதிரவன், அவள் வரவில்லை எனவும் கீழே இறங்கி வந்தான்.

" என்ன அத்தான்? பசிக்குதா? சாப்பாடு எடுத்து வைக்கவா?" என்று அபர்ணா வினவ.

" இல்லை மா. கொஞ்ச நேரமாகட்டும். ஆமாம் அம்மா எங்கே?"

" இதோ கூப்பிடுறேன்." என்றவள் கிச்சனுக்குள் நுழைந்தாள்.

ஏதோ யோசனையிலே இருக்கும் மலரிடம் சென்றவள், " அத்தை… அத்தான் கூப்பிடுறாங்க."என.

வேகமாக ஹாலுக்கு சென்றவள், " ஏன் பா பட்டு அழறாளா? எங்கே?" என்று வினவ.

" பட்டு, தென்றலோட இருக்கா?"

" அப்புறம் என்ன பா?" என்று புரியாமல் மலர் வினவ.

" அவ எங்க மா?" என்றான் கதிரவன்.

" சங்கீதாவை கேட்குறீயா? அவ அவங்கம்மா வீட்டுக்கு போய்ட்டு வரேன்னா? உன் கிட்ட சொல்லலையா?" என்று மலர் வினவ.

அவரது கேள்வியை புறந்தள்ளியவன், "எப்படி போனா?" என்று பதற்றத்துடன் கேட்டான்.

" நான் கவனிக்கலையே பா." என.

" சரி மா… நான் என்னன்னு பார்க்குறேன்." என்ற கதிரவன் வெளியே சென்று பார்க்க…

ஸ்கூட்டி அங்கே நின்று கொண்டிருந்தது.

' நல்லவேளை ஸ்கூட்டி எடுத்துட்டு போகலை. இல்லைன்னா பதட்டத்துல எங்கேயாவது இடிச்சிட்டு நிப்பா. கால் டாக்சில போயிருப்பா. ஒரு வார்த்தை சொல்லிட்டு போகக் கூடாதா‌.' என்று மனதிற்குள் புலம்பியவன், அவளது செல்ஃபோனுக்கு அழைக்க…

அதுவோ,அங்கேயே இசைத்தது.

' ஃபோனையே வச்சுட்டு போய்ட்டா… பர்ஸாவது எடுத்துட்டு போனாளான்னு தெரியலையே.' என்று பதறியவன், ருத்ரனுக்கு அழைக்க…

அவனோ அந்த அழைப்பை எடுக்கவில்லை.

' இவன் ஒருத்தன். தேவையில்லாத நேரத்தில கோபத்தை காண்பிச்சிட்டு இருப்பான்.' என்று எரிச்சல் பட்ட கதிரவன், " அம்மா… " என்று அழைக்க.

" என்ன பா." என்றார் மலர்.

" மா… நீங்க தென்றல், அபர்ணாவோட சாப்பிடுங்க. பட்டுவையும் பார்த்துக்கோங்க. நான் சங்கீதாவை கூட்டிட்டு வரேன். " என்று கிளம்பினான்.

" சரி பா. பார்த்து மெதுவா போ." என.

" சரி… " என்று தலையாட்டியவன் தனது பைக்கில் பறந்தான்.

******************

தனக்குள் யோசித்துக்கொண்டே வந்த சங்கீதா அண்ணாநகர் வந்ததையே கவனிக்கவில்லை.

டாக்சி டிரைவர் தான், " எங்கம்மா போகனும்?" என்று வினவ.

" அடுத்த கட்டிங்ல போங்க." என்று அவர்களின் வீட்டிற்கு வழிகாட்டிய சங்கீதா, பணம் கொடுப்பதற்காக கைப்பையைத் தேட…
அப்பொழுது தான் எதையும் எடுக்காமல் வந்தது புரிந்தது.

ஹாலில் உட்கார்ந்து, கால் டாக்ஸிக்கு ஃபோன் செய்தவள், வந்துவிட்டதாக மெசேஜ் வரவும், ஃபோனை அப்படியே வச்சிட்டு வந்து விட்டாள்.

இவள் யோசனையில் இருக்கும் போதே வீடு வந்து விட, அங்கு வண்டியை நிறுத்த சொன்னவள், " டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. இதோ வரேன். " என்றவள், வீட்டிற்குள்ளே சென்றாள்.

" அம்மா… " என்று கத்திக் கொண்டே அவரது ரூமிற்கு செல்ல…

" சங்கீதா… நான் இங்கே இருக்கேன்." என்று ஹாலில் அமர்ந்திருந்த சாரதா குரல் கொடுக்க.

அப்போது தான் அவர் இருப்பதைக் கவனித்த சங்கீதா, அங்கே வர‌…

" என்னடா… " என்று வினவ.

" மா… உன் ஹேண்ட்பேக் எங்க?" என்று வினவியவள், அவர் பதில் கூறுவதற்குள் அருகிலிருந்த பேகை பார்த்து, அதிலிருந்து பணத்தை எடுத்தவள், " இதோ வந்துடுறேன்." என்று விட்டு வேகமாக வெளியே சென்றாள்.

டாக்ஸி டிரைவர் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு உள்ளே வந்தாள்.

" என்ன ஆச்சு? மாப்பிள்ளையோட சண்டையா? பணம் கூட எடுக்காமல் இப்படி வந்துருக்க?" என்று சாரதா வினவ.

" ப்ச். அதெல்லாம் இல்லை. ஏதோ ஞாபகத்தில வந்துட்டேன்." என்று அலுப்பாகக் கூற.

" ஏன் டி. இவ்வளவு டயர்டா இருக்க. சாப்பிட்டியா? இல்லையா?"

" இன்னும் இல்லை மா."

" சரி வா. முதல்ல சாப்பிடு. அப்புறம் எதுவா இருந்தாலும் பேசலாம்."

" பசிக்கலை. ருத்ரா எங்க மா? சாப்பிட்டானா?"

" எங்க? உங்க வீட்டுக்கு வந்தவன், கோபமா மாடிக்குப் போயிட்டான். பசிச்சா வந்து சாப்பிட்டுக்குவான்‌. நான் நேரத்துக்கு மாத்திரை போடணும்னு சாப்பிட்டேன்‌."

" நீ வா வந்து உட்கார்."

" இல்லை மா. நான் தம்பியோட சாப்பிட்டுக்குறேன்."

" என்ன டி பிரச்சனை? அவன் ஏன் இவ்வளவு கோபமா வந்தான்? தென்றல் இப்போ எப்படி இருக்கா?" என்று வரிசையாக கேள்வி கேட்க.

" மா… நீ கேக்குற எந்த கேள்விக்கும் என் கிட்ட பதில் இல்லை. தென்றலுக்கும், தம்பிக்கும் ஒரு சின்ன பிரச்சனை. அதான் கோவமா வந்துட்டான்." என.

" தென்றல் அமைதியான பொண்ணு. உன் தம்பி தான் வம்பிழுத்திருப்பான். பாவம் அவளே எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சாளோ! இவன் வேற சும்மா இல்லாமல் என்ன பண்ணான்னு தெரியலை. இதுல சமாதானப்படுத்த நீ வேற வர்ற?" என்று சாரதா புலம்ப.

' ம்கூம்… நீங்க தான் தென்றலோட அமைதியை மெச்சுக்கணும்‌. நேர்ல பார்த்திருக்கணும் அவளோட ஆக்ரோஷத்தை… அம்மாடி.' என்று எண்ணித் தோளைக் குலுக்கியவள், " நான் போய் தம்பியைப் பார்த்துட்டு வரேன். நீ போய் படுக்குறதா இருந்தா படு மா. நான் சாயந்திரமா தான் போகலாம்னு இருக்கேன்."

" அப்ப செத்த இடுப்பை சாய்ச்சிட்டு வரேன்." என்றவர் மதிய நேர ஓய்வை எடுக்கச் சென்றார்.

மெல்ல படியேறிய சங்கீதாவின் மனதிற்குள்ளோ தம்பியை நினைத்து அச்சமும் ஏறிக் கொண்டே வந்தது.

அறைக்குள்ளோ கோபம் குறையாமல், ஏதோ யோசித்துக் கொண்டே ருத்ரன் நடந்துக் கொண்டிருந்தான்.

அவனது யோசனையைத் தடை செய்வது போல், அவனது அறைக் கதவை தட்ட.

ருத்ரனோ எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருக்க…

மீண்டும், மீண்டும் முயற்சி செய்தாள் சங்கீதா.

கடுப்பான ருத்ரன் கதவைத் திறந்து,
" இப்போ எதுக்கு இங்க வந்துருக்க?" என்று கேட்டான்.

" டேய் இது எங்க அப்பா வீடு. எனக்கும் இதுல சரிபாதி உரிமை இருக்கு. நான் வருவேன்." என்றாள் சங்கீதா.

" தாராளமா வந்துக்கோ. உன்னை யாரும் வர வேணாம்னு சொல்லல. ஆனால் இந்த ரூம்ல உனக்கு பங்கு இல்ல. இது என்னோட ரூம். உனக்குக்குனு அந்த பக்கம் ஒரு ரூம் இருக்கு. எவ்வளவு நேரம் வேணும்னாலும் போய் நின்னு கதவை தட்டிட்டு இரு. யாரும் ஏன் இங்க வந்தேன்னு கேட்க மாட்டாங்க." கடுப்படிக்க.

" சாரிடா…" என்று இறங்கி வந்தாள் சங்கீதா.

" எதுக்கு சாரி?" என்று சங்கீதாவை ஆழ்த்துப் பார்க்க.

" அது வந்து… தென்றல் தெரியாம அடிச்சிட்டா. அவளை மன்னிச்சிடு." என்று இறங்கிய குரலில் கூற.

" வாவ்… இது என்ன புதுசா இருக்கு. உன் நாத்தனாருக்கு சப்போர்ட்டுக்கு வந்திருக்க. அப்படியெல்லாம் நீ செய்ய மாட்டியே."

" டேய் அவ பாவம். அவ புருஷன் பண்ண டார்ச்சர்ல இருந்து இப்ப தான் வெளியில வந்து இருக்கா. அந்தக் கோபத்துல அடிச்சுட்டா. விட்டு டா." என்றாள் சங்கீதா.

" ஹோ… அவ ஊமைக்குறத்தி. திமிர் பிடிச்சவ… அப்படியெல்லாம் சொல்லுவியே அதெல்லாம் உண்மை இல்லையா." என்று ருத்ரன் வினவ.

" அது… ஆமாம் டா. சரி இதை பெரிசு பண்ணாத." என்று தம்பியை நன்கு அறிந்த சங்கீதா, சமாதானம் படுத்த.

" போதும் கா… நீ ஏன் இப்படி பண்றேன்னு எனக்கு தெரியாதுன்னு நினச்சிட்டு இருக்கியா? நீ இப்படி மாறுவேன்னு நினைக்கலை. யூவார் செல்ஃபிஷ்." என்று ஆற்றாமையாகக் கூற.

" டேய் என்ன சொல்ற?" என்று சங்கீதா பயத்துடன் ருத்ரனை பார்க்க.

" அக்கா… தென்றல் எப்படிப்பட்டவன்னு உன்னை விட நல்லா எனக்குத் தெரியும். உனக்கு ஏனோ அவளை நான் கல்யாணம் பண்றது பிடிக்கலை. அதான் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி எங்க கல்யாணத்தை நடத்த விடாமல் செய்த. நானும் உன்னோட விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்தேன். இருந்தாலும் தென்றல் கிட்டயும் பேச முயற்சி செய்தேன். அவள் பிடி கொடுக்கவில்லை. நானும் ஒதுங்கிப் போய் விட்டேன்."

" டேய்… எல்லாம் தெரிஞ்ச உனக்கு, எதுக்காக நான் இப்படி செஞ்சேன் தெரியாதா? நீயா, தென்றலானு வந்தா நான் என்ன பண்றது. எனக்கு என் தம்பி முக்கியம். போதுமா?" என்று சங்கீதா கத்த…

சரியாக அந்த நேரத்திற்கு இவளைத் தேடிக் கொண்டு மாடிக்கு வந்த கதிரவன் அனைத்தையும் கேட்டு விட முகம் முழுவதும் சிவந்து அய்யனார் போல் நின்றான்.

ருத்ரன் தான் முதலில் கதிரவனைப் பார்த்தான்‌. " மாமா…" என்று கூப்பிட.

அதிர்ந்து சங்கீதா திரும்பினாள்.

ஒன்றும் கூறாமல் அவன் மட்டும் வெளியே செல்ல…

சங்கீதாவோ, " கதிர்… " என்று கூப்பிட்டுக் கொண்டே அவன் பின்னால் வந்தாள்.

அவளது குரல் செவியில் விழ, திரும்பிய கதிரவன் அவளை கை நீட்டி எச்சரித்தான். " இனி ஒரு வார்த்தை பேசினால் அவ்வளவு தான். இனி நீ இங்கேயே இரு. டைவர்ஸ் நோட்டீஸ் வரும். கையெழுத்து போட ரெடியா இரு‌." என்று கூற…

ருத்ரன் வேகமாக சென்று கதிரவன் முன் நின்று, " மாமா… கொஞ்சம் பொறுமையாக இருங்க.' என்று சொல்ல…

அவன் கையை தட்டி விட்ட கதிரவன், " எப்படி பொறுமையாய் இருக்கிறது? அங்க கஷ்டப்பட்டு, துடிச்சிட்டு இருக்கிறது என் தங்கச்சி. அதுக்கு காரணம் உன் அக்கா‌. நான் அவளை மன்னிக்கவே மாட்டேன். அப்படி என்ன உங்க ஸ்டேட்டஸுக்கு தங்கச்சி குறைஞ்சு போய்ட்டாளா? அவள வேண்டாம்னு சொல்லிட்டீங்களே…" என்று கூற.

" மாமா… அதற்கு காரணம் இருக்கு. அது வந்து…" என்று ஏதோ சொல்ல வர…

"வேண்டாம்…" என்று சங்கீதா தடுத்து விட்டாள்.

" இப்ப கூட உனக்கு என் கிட்ட உண்மையா இருக்கணும்னு தோணலை." என்று கூற.

அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் சங்கீதா.

" மாமா தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை. நாங்க பண்ண தப்பை நாங்களே சரி பண்றோம். நான் தென்றலை கல்யாணம் பண்ணிக்க தயார்." என்று ருத்ரன் கூற.

" என்ன என் தங்கச்சி இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்குற தைரியத்தில வாக்கு கொடுக்கிறீங்களா மச்சான்." என்று கேலியாக வினவ.

" என் வாழ்க்கையில கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது தென்றலோட தான் போதுமா?" என்று அழுத்தமான குரலில் ருத்ரன் கூறினான்.

*******************

அங்கு தென்றலோ, அவளது கல்யாண ஆல்பத்தை எடுத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னை மீறி கண்களிலிருந்து கண்ணீர் பெருக… கண்களைத் துடைத்தவள், அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டவள், " இனி என் வாழ்க்கையில் யாருக்கும் இடம் கிடையாது." என்று ரௌத்திரமாகக் கூறினாள்.


தொடரும்...
 
Last edited:
Top