• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
தென்றல் - 5

ருத்ரன்," ஏய் பார்த்து நடக்கத் தெரியாதா? எதுக்கு இப்படி ஓடி வந்து, என் மேல விழற? அப்புறம் நான் கீழே விழாமல் பிடிச்சா அடிக்க வேண்டியது. தென் ஒரு சாரிக் கூட கேட்கிறது கிடையாது." என்று நக்கலாக தென்றலைப் பார்த்து வினவ.

ஓரக்கண்ணால் அவனைப் பார்த்த தென்றல், " அல்ரெடி நான் அதுக்கான விளக்கம் சொல்லிட்டேன். அப்புறம் ஏன் திரும்பத் திரும்ப அதைப் பத்தியை பேசுறீங்க." என்றாள்.

" இட்ஸ் ஓகே. என்ன அடிச்சதுக்குத் தான் விளக்கம் கொடுத்த. பட் இப்போ கீழே விழாமல் காப்பத்துனதுக்கு ஒரு தேங்ஸ் சொல்லலாம்ல" என்று கேலியாக வினவ.

" நான் ஒன்னும் என்னை கீழே விழாமல் பிடிக்க சொல்லலையே. நானே சமாளிச்சிருப்பேன். அப்படியே நான் கீழே விழுந்தாலும் உங்களுக்கு என்ன வந்துச்சு?" என்று புருவத்தை உயர்த்தி கிண்டல் செய்தாள் தென்றல்.

" நீ விழுந்து வாரி அடிப்பட்டா, அப்புறம் ஹாஸ்பிடல் அங்கே, இங்கேனு கஷ்டப்படுறது எங்க மாமா தான்." என்று அவளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே கூறினான் உதயதேவ்.

ஒரு நிமிடம் முகம் கசங்க நின்ற தென்றல், பிறகு நிமிர்வாக அவனைப் பார்த்தவள், " அதுவும் சரி தான். உங்க மாமாவுக்கு செலவாகிடும். அப்புறம் நீங்க ரொம்ப கவலைப்பட வேண்டாம் சார். நான் சீக்கிரமே ஒரு வேலைத் தேடிக்கிறேன்." என்றாள்.

" ஓ… நான் வேணும்னா எங்க கடையில ஒரு வேலைப் போட்டுத் தரட்டுமா?"

" ஓ… அவ்வளவு நக்கலா? "

" நான் என்ன நக்கல் பண்ணிட்டேன். சீரியஸ்ஸா தான் கேட்குறேன். எங்க கடையில வேலை செஞ்சா உன் கௌரவம் குறைஞ்சிடுமா?" என்று இறுகிய குரலில் வினவினான்.

" துணிக்கடையில் நான் படிச்ச படிப்புக்கு என்ன வேலை இருக்கு? சேல்ஸ் கேர்ள் வேலை தான இருக்கு. அந்த அளவுக்கு என்னுடைய திறமையை எடை போடாதீங்க."

" யூ நோ. சேல்ஸ் கேர்ள் வேலை ஒன்னும் கேவலம் கிடையாது." இறுகிய குரலில் ருத்ரன் கூற.

"...."

"என்ன ஒன்னும் பதிலே காணோம் .சரி விடு உன் அதிர்ஷ்டம் அவ்வளவு தான்." என்றுத் தோளைக் குலுக்கி நமுட்டு சிரிப்பு சிரித்தான் ருத்ரன்.

தென்றலோ, "கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்க கடை வேலை எனக்குத் தேவையில்லை. " என்றாள்.

" ஓஹோ… ஒரு வேளை உன் பேர்ல கடையை எழுதி வச்சாலும் அந்த கடையை பார்த்துக்க மாட்டியா?" என்று கேலியாக சிரிக்க…

அவளால் முறைக்க மட்டும் தான் முடிந்தது.

" சரி விடு தென்றல். நோ டென்ஷன். ஜஸ்ட் ரிலாக்ஸ். ஆமாம் வேகமாக இங்கே இருந்து கிளம்பி போன, இப்ப எதுக்கு திரும்ப ஓடி வந்த?" என்று அவளை கூர்மையாக பார்த்தபடி வினவினான்.

" ….. "

அவளோ ஒன்றும் கூறாமல் அனிச்சை செயலாக பார்வையை சுழற்ற.

அவளது விழியசைவில் கவனத்தை வைத்திருந்த ருத்ரன், அங்கே இருந்தவர்களை கண்டுக் கொண்டான்.

அவளை கேலியாக பார்த்து, " இது தான் உன்னோட பி.டி உஷா ஓட்டத்திற்கு காரணமா? உன்னோட தைரியம் எல்லாம் என் கிட்ட மட்டும் தானா? என்னமோ உன்னைத் தெரியாமல் பிடிச்சதுக்கு, அவ்வளவு கோவத்தோட அப்படி அடிச்ச? இங்க அவன் முன்னால நின்னு தைரியமா பேஸ் பண்ண தெரியாதா? உன்னோட எக்ஸ் ஹஸ்பண்டை பார்த்துட்டு இப்படி மறைஞ்சு வர?" என்று வினவ.

தலையில் கையை வைத்து அங்கேயே அமர்ந்து கொண்டாள் தென்றல்.

லேசாக விழியை உயர்த்தி, "எதுவும் தெரியாமல் தெரிந்த மாதிரி பேசாதீங்க." என்றாள் தென்றல்.

"என்ன தெரியல? அதோ அந்த காஃபி ஷாப்புக்கு முன்னால தான அவன் நிக்கிறான். அவனைப் பாத்துட்டு நீ ஓடி வந்தது, நல்லா கண்ணு தெரியற எல்லாருக்கும் நல்லாத் தெரியும்."

" ப்ச்… அவனைப் பார்த்தும், அவனை ஒன்னும் பண்ணாம வரோமேன்னு எனக்கே கடுப்பா இருக்கு‌. இதுல நீங்க வேற. அதான் அந்த லூசு தனியா வந்திருந்தா, அவன் கன்னம் பழுத்திருக்கும்." என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள் தென்றல்.

" நம்பிட்டேன்... நம்பிட்டேன்…" என்று ருத்ரன் நக்கலடிக்க.

" நீங்க நம்பணும்னு ஒன்னும் நான் நினைக்கலை." என்றவள் ஃபோனில் கவனத்தை செலுத்த.

" சரி எப்படியும் அவன் போக மாட்டேன்னு நினைக்கிறேன். இரு நான் உனக்கு உன்னோட ஃபேவரைட் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன்." என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.

அவள் விருப்பப்பட்ட அந்த சாக்லேட் ஐஸ்கிரீம் வாங்கியதோடு, வேறு ஒரு வேலையும் செய்து முடித்து விட்டு வந்தான். அவனுக்கு இன்னும் தென்றலின் மனதின் உறுதியை பற்றி அறிய வேண்டி இருந்தது.

அதற்காக அங்கு வேலைப் பார்க்கும் ஒருவரிடம் பணத்தை கொடுத்து ஒரு வேலை செய்ய சொல்லி விட்டு வந்திருந்தான்.

அமைதியாக ஐஸ்கிரீமை அவளிடம் நீட்ட…

வேறு வழியின்றி தென்றல் அதை சாப்பிடத் தொடங்கினாள்.

ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டே ருத்ரனையும் கவனித்தாள் தென்றல்.

அவனோ, அங்கு தான் ஏற்பாடு செய்த ஆள், சொன்ன வேலையை கச்சிதமாக செய்கிறாரானா என்று பார்க்க…

இவளும் திரும்பிப் பார்த்தாள். 'எதுக்கு இவர் அங்கே பாத்துட்டு இருக்காருனு தெரியலையே?' என்று நினைத்துக் கொண்டே அவளது ஃபேவரைட் ஐஸ்கிரீமை ரசித்து உண்டுக் கொண்டிருந்தவளின், கண்கள் திடீரென விரிந்தது.

அவள் பார்ப்பதை உணர்ந்த ருத்ரன், "இப்போ ஓகேவா தென்றல். உனக்காக பாவம் யாருன்னே தெரியாத, அந்த அப்பாவி மேலே காஃபியை லேசா ஊத்த சொல்லி இருந்தேன். ஆனால் பாவம் நல்லா ஊத்திட்டான் போல. துடிச்சி போய்ட்டார். எப்படியும் அவர் வாஷ் பண்ண ரெஸ்ட் ரூமுக்கு போயிடுவாரு. இப்ப உன் எக்ஸ் ஹஸ்பண்ட் தனியா தான் இருப்பான். நீ என்ன பண்ணப் போறேன்னு நான் பார்க்கிறேன்." என்று ருத்ரன் சொல்லிக் கூட முடிக்கவில்லை.

தென்றல் கையில் இருந்த ஐஸ்கிரீமை வைத்து விட்டு விழுந்து, விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

அவளது கண்களில் இருந்து நீர் வர ஆரம்பிக்க …

முதலில் அவளது சிரிப்பை ஆச்சரியமாக பார்த்த ருத்ரனுக்கு இப்போது சற்று எரிச்சல் வர ஆரம்பித்தது.

" தென்றல் எதுக்கு இப்படி சிரிச்சிட்டு இருக்க? நான் எதுக்கு இதெல்லாம் பண்ணுனேன் தெரியுமா? எல்லாம் உன் தைரியத்தை பார்க்க தான். இப்ப அவன் தனியா தான் இருக்கான். நீ என்ன செய்வேன்னு நான் பார்க்கிறேன்." என்றான்.

" ஹலோ… என் தைரியத்தை நீங்க எதுக்கு பார்க்கணும். என்ன பத்தி ஜட்ஜ் பண்ண நீங்க யாரு? உங்களுக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தா? எனக்கு உங்க மேல பயங்கர கோபம் தான் வருது. இருந்தாலும் எனக்கு ஒரு நல்லது செஞ்சிருக்கீங்க. தென் இனிமேல் என்ன ஏதுன்னு தெரியாமல் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுறதை நிறுத்துங்க‌. எல்லாம் தனக்கு தான் தெரியும்னு நினைப்பு." என்றவள், எழுந்து அங்கிருந்து நகர்ந்தாள்.

'அவளது முன்னாள் கணவர் இருக்கும் பக்கம் செல்வாள்.' என்று ருத்ரன் நினைத்திருக்க.

அவளோ வாஷ்ரூமுக்கு சென்றவனின் பின்னே சென்றாள்.

அவனுக்கு முன் சென்று சொடக்கிட்டு நிறுத்தினாள்.

அவனோ ஏற்கனவே படக்கூடாத இடத்தில் சூடான காஃபி பட்டு விடத் துடித்துக் கொண்டிருந்தான்.

இந்த நேரத்தில் யாருடா என்று பார்க்க… அங்கோ முகத்தில் ரௌத்திரத்துடன் தென்றல் நின்றுக் கொண்டிருந்தாள். " என்னடா சவுக்கியமா? " என்று கேலியாக வினவினாள்.

" என்ன பயம் விட்டுப் போச்சா? இந்த ஊர்ல தானே இருக்கிற? உன்னை சும்மா விடமாட்டேன்." என்று ஆணவத்துடன் அவன் கூற.

தென்றலோ வழக்கம் போல வாய மூடிட்டு இருக்காமல் ஓங்கி அறைந்தாள்.

அவன் திருப்பி அவளை அடிப்பதற்கு கையை ஓங்க… அவன் கையை பிடித்து முறுக்கினாள். " டேய் நாயே. ஒழுங்கு மரியாதையா அடக்கி வாசி. என் கண்ணு முன்னாடி நீ வரக்கூடாது. வந்தேனு வச்சுக்கோ உன் கதை முடிஞ்சது. ஏன் டா உயிரோட இருக்கோம்னு நீ நினைக்கிற அளவுக்கு நான் செய்வேன். என்னால் என்ன முடியும் நினைக்கிறியா? நான் பட்ட கஷ்டமெல்லாம் கொஞ்ச நஞ்சம் கிடையாது‌. எல்லாத்தையும் மனசுல வெச்சு இருக்கேன்." என்று அவளது கர்ஜனையை கேட்டவன், மிரண்டு ஓடி விட்டான்


'என்ன இவ, அந்த பொறுக்கியை விட்டுட்டு வேற ஒருத்தன்ட்ட என்ன பேசிட்டு இருக்கா?' என்று எண்ணிய ருத்ரனோ குழப்பத்துடன் அவளை ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.

தென்றல் அவனது அருகே வரவும், " என்ன பிரச்சனை தென்றல்? அவன் உன் வம்புக்கு வந்தானா? சொல்லு… எனக்கு தெரிஞ்ச போலீஸ் ஆபீஸர் மூலமாக மூவ் பண்ணலாம்." என்று கூற.

" ஹலோ… நன் ஆஃப் யுவர் பிசினஸ்." என்றாள் தென்றல்.

"உனக்கும், உன் வீட்டுக்காரருக்கு என்ன பிரச்சனை? " என்று மீண்டும் மூக்கை நுழைத்தான் ருத்ரன்.


" ஒரு தடவை சொன்னா புரியாது.எனக்கு என்ன பிரச்சினையா இருந்தா உங்களுக்கு என்ன? நான் எதுக்கு அதை பத்தி உங்ககிட்ட சொல்லணும்னு நினைக்கிறீங்க‌. அது எனக்கு அநாவசியம். நீங்க உங்க வேலையை பார்த்திட்டு கிளம்புங்க." என்றவள், "சை… உங்கள மாதிரி ஆண்களைப் பார்த்தாலே பத்திகிட்டு வருது." என்று முனுமுனுக்க.

அவள் அருகே வந்த ருத்ரனோ, " நான் என்ன பண்ணேன்? வார்த்தைகளைப் பேசும்போது யோசிச்சு பேசு தென்றல்." என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூற.

"ஏன் நீங்களும் தான் என் வாழ்க்கை இப்படி முடிஞ்சு போறதுக்கு காரணம்." என்று விரல் நீட்டி தென்றல் கூற.

ருத்ரனோ, " வாட்… நானா? " என்று அதிர்ந்து வினவினான்.


" ஆமாம். ஃபர்ஸ்ட் டைம் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணனும்னு வீட்ல பேசும் போது, என்னென்ன சொல்லி வேணாம்னு மறுத்தீங்க. எங்க அம்மாவும், அப்பாவும் அதை நினைச்சு அழுதுட்டே இருந்தாங்க. உங்களுக்கு பிடிக்கலைன்னா டீசண்டா என் கிட்ட வேண்டாம்னு சொல்லியிருக்கலாம். அதை விட்டுட்டு அது இது என்று காரணம் சொல்லி எங்க வீட்டிலேயும் எல்லாரும் பயந்து அவசர அவசரமாக எனக்கு மாப்பிள்ளை பார்த்து அதனால் வந்த வினை தான்." என்று தென்றல் படபடக்க.

" அது… " என்று ருத்ரன் ஏதோ கூற வர.

"போதும். எதுவும் சொல்ல வேண்டாம். அது தான் முடிஞ்சு போச்சே. இப்போ எதுக்கு மறுபடியும் முற்றும் போட்டதை ஆரம்பிக்கிறீங்க." என்றாள்.

" நான் இப்போ என்ன பண்ணேன்." என்று ருத்ரன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு வினவ.

" ம் என்ன ஃபாலோ பண்றீங்க தானே.?"

" நான் தான் இல்லைன்னு சொன்னேனே. திரும்பவும் முதல்ல இருந்தா ?" என்றான் ருத்ரன்.

" இல்லை… எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன். கடையை விட்டுட்டு இவ்வளவு நேரம் இங்கே இருப்பீங்களா? அதான் சந்தேகமாகவே இருக்கு " என்றாள்.

' அட லூசே.' என்பது போல பார்த்தான் ருத்ரன்.

" இனிமேல் என்னை ஃபாலோ பண்ணாதீங்க. அன்னைக்கு வேண்டாம்னு சொன்ன அதே தென்றல் தான் நான் இப்பவும். இனி என் வாழ்க்கையில் அனாவசியமாக நுழையாதீங்க. " என்று விட்டு நகர முயன்றாள்.

" ஹலோ என்ன ஓவரா பேசிட்டு இருக்க.
நான் ஒரு முக்கியமான மீட்டிங்காக தான் இங்கே வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீ கிளம்பு. " என்று கடுப்புடன் கூறினான் ருத்ரன்.

சரியாக அப்பொழுது," ஹாய் பாஸ். கொஞ்சம் லேட்டாயிடுச்சு." என்று கையாட்டியபடியே ஒருத்தர் உள்ளே நுழைய.

அவனை நிமிர்ந்து பார்த்த தென்றல் ஒரு நிமிடம் முகம் சுருங்க யோசித்தவள், பிறகு கிடைத்த விடையில் கேலியாக ருந்ரனைப் பார்த்தாள்.

அவளது பார்வைக்கான அர்த்தம் தான் அவனுக்கு புரியவில்லை.

" இப்போ என்ன?" என்றான் ருத்ரன்.

" சார் யாரு?" என்று அருகில் இருந்தவனைக் காட்டி வினவினாள்.

"அது…" என்று தடுமாறினான் ருத்ரன்.

" என்னை ஃபாலோ பண்ணவர் தானே. எனக்குத் தெரியும்." என்று முடித்தாள் தென்றல்.

தொடரும்...
 
Last edited:
Top