• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
தென்றல் - 8

ஞாயிறு தினமன்று தாமதமாக எழுந்திருக்கும் மகள் வழக்கத்திற்கு மாறாக, அதிகாலையிலே எழுந்து குளித்து விட்டு வந்திருக்க…

மலர் யோசனையாக தென்றலைப் பார்த்தாள்.

" என்னடா தென்றல்… இவ்வளவு சீக்கிரமா எந்திரிச்சிருக்க? புதுசா வாக்கிங் போலாம்னு நினைச்சியா? ஆனாலும் அதுக்கு குளிச்சிட்டா போவாங்க?" என்று தன் சந்தேகத்தை மலர் கேட்க.

" மா… நேத்தே சொன்னேனே. காலேஜ் கல்ச்சுரல் நிகழ்ச்சிக்காக ட்ரஸ், அக்ஸசரிஸ் எல்லாம் பர்ச்சேஸ் பண்ண போகிறோம்னு..‌." என்றுக் கூறிய தென்றல், அவளது அம்மாவின் புரியாத பாவனையில் வாயை மூடிக் கொண்டாள்.

" மணியைப் பார்த்தியா? " என.

அப்பொழுது தான் ஹாலில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். அதுவோ ஐந்து என காட்டியது.

தன் தலையில் தட்டியவள், அசடு வழிய தன் தாயை நிமிர்ந்து பார்க்க…

மலரோ, தென்றலை தான் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

" என்னமோ நீ சரியில்லை."என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தார் மலர்.

தென்றலோ, அம்மாவை தாஜா செய்ய பின்னாலே சென்றவள், " நீ நகரு மா. நான் வாசல் பெருக்குறேன்." என்றாள்.

அவளை வாஞ்சையாக பார்த்த மலர்," நான் வாசல் பெருக்கி, தண்ணி தொளிச்சிட்டேன். நீ கோலம் போட்டுட்டு உள்ளே வா." என்று விட்டு கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டார்.

தென்றலோ உற்சாகமாக, மெல்லிய குரலில் பாடிக் கொண்டே கோலம் போட்டாள். அது அவளுக்கு மிகவும் பிடித்த விஷயமல்லவா? உற்சாகம் பொங்கி பெருகியது.

கோலம் போட்டு முடித்தவள், " மா… காஃபி." என்றவாறே கிச்சனுக்குள் நுழைய‌.

அவள் முன்னே ஆவி பறக்க காஃபியை நீட்டினார் மலர்.

"வாவ் சூப்பர் மா." என்றவள் கொதிக்க கொதிக்க அந்த காஃபியை குடிக்கும் வரை வேறு எதுவும் பேசவில்லை.

' என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.' என்று, குளிச்சு முடிச்சு, துளி அலங்காரம் இல்லாமல், நைட்டியில் அன்றலர்ந்த மலர் போலிருக்கும் மகளை வைத்தக் கண் வாங்காமல், பார்த்துக் கொண்டிருந்த மலர் மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்தார்.

" என்னம்மா யோசனை?" என்றாள் தென்றல்.

" ஹாங்… என்ன டிஃபன் செய்யலாம்னு யோசிட்டு இருந்தேன்." என்று சமாளிப்பாக மலர் கூற.

" மா… நான் லஞ்சுக்கு வரமாட்டேன். நீ வேற சண்டே மட்டும் தான் நான் வீட்ல சூடா சாப்பிடுவேனு ஏகப்பட்ட ஐட்டம் செய்து, பெருசா வேலைய இழுத்துக்காதே."

" நீ சாப்டலனா சரி தான். ஆனால் என் சின்ன மருமக இருக்கா. அவளுக்கு பிடிச்சதா சமைச்சுட்டு போறேன்." என்ற மலரைப் பார்த்து பொய்யாக முறைத்தாள் தென்றல்.

" புதுமருமக வரவும், என்னைய டீல்ல விட்டுட்ட பார்த்தீயா?"

" போடிக் கழுதை. வெளியே படிப்பு, வேலைன்னு போற உங்களை மட்டும் கவனிச்சா போதுமா? இங்கே இருக்குற எங்க மருமகளையும் நா பார்த்துக்கணும்." என்றார் மலர்.

" அதுவும் சரி தான் மா. நீங்க என்ன செய்யலாம்னு யோசிச்சு வைங்க. நான் ட்ரெஸ்ஸை மாத்திட்டு வந்து ஹெல்ப் பண்றேன்." என்றவள் அவளது அறைக்குள் நுழைந்தாள்.' இன்னைக்கு என்ன டிரஸ் போட்டுக்கலாம்.' என்று தனக்குள் யோசித்துக் கொண்டே அலமாரியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு சுடிதாராக எடுத்து தன்மேல் வைத்து கண்ணாடியில் பார்த்தவள்,' தனக்கு பொருத்தமாக இருக்கிறதா? இந்த ட்ரஸ்ஸில் அழகாகக இருப்பேனா?' என்று யோசித்து, யோசித்து ஒவ்வொன்றையும் வேண்டாமென்று களைத்து போட்டவள், ஒருவழியாக ஸாண்டல் கலர் சுடிதாரை அணிந்து கொண்டாள்.

தலையில் கொஞ்சமாக முடி எடுத்து சென்டர் க்ளிப் குத்தியவள், மீதி முடியை பின்னாமல் அப்படியே விட்டிருந்தாள். முகத்திற்கு லைட்டாக மேக்கப் போட்டவள், ஒரு வழியாக வெளியே வர..‌.

அபர்ணா, கிச்சனிலிருந்து சமைத்து வைத்ததை எடுத்து வந்தாள்.

" ஹாய் அண்ணி. குட்மார்னிங்." என்ற தென்றல், அவள் கையில் இருந்ததைப் பார்த்து, " டிஃபன் செஞ்சாச்சா? நான் தான் வரேன்னு சொன்னேனே." என்றவாரு கிச்சனுக்குள் சென்றாள்.

மலரோ மகளை முறைத்துக் கொண்டிருந்தாள்.

" என்னமா?"

" மணி என்னன்னு பாருடி. ஒன்பதாக போகுது. எங்கேயோ வெளியே போகணும்னு சொன்னீயே. அதான் அவசர அவசரமா செஞ்சுட்டேன். டிரஸ் மாத்திட்டு வரேன்னு போன? அதுக்கு இவ்வளவு நேரமா? நானும் கூப்பிட்டுட்டே இருக்கேன். ஒரு சத்தத்தையும் காணோம். அப்படி என்ன பண்ணிக்கிட்டு இருந்த?"

" அது மா… " என்ற தென்றலோ தயக்கத்தோடும், கலக்கத்தோடும் மலரை பார்த்தாள். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ' இவ்வளவு நேரமா என்ன ட்ரெஸ் போடுவது என்று எடுத்து வைத்து, கற்பனை உலகத்தில் இருந்ததை எப்படி அம்மாவிடம் சொல்வது.' என்று தவிக்க.

" சரி விடுங்க அத்தை. அவளுக்கு நேரமாயிடுச்சு. அப்புறம் சாப்பிடாமல் போயிடப் போறா?" என்று அங்கு வந்த அபர்ணா, தன் நாத்தனாரை காப்பாற்றினாள்.

' தேங்க் காட்.' என்று மனதிற்குள் கடவுளுக்கு நன்றி செலுத்தினாள். இன்னும் சற்று நேரத்தில், தன் கற்பனை நிறைவேறவில்லை என்று கடவுளிடம் முறையிடப்போவதை அறியவில்லை.

காலை உணவை முடித்தவள், கிளம்புவதற்குள், ஒவ்வொரு தோழிக்கும் ஃபோன் போட.

" இருடீ ஞாயிற்றுக்கிழமை அதுவுமா அதுக்குள்ள எழுப்புற? " என்றாள் ஒருத்தி.

" குளிச்சிட்டு இருக்கேன் ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுவேன்." என்றாள் ஒருத்தி.

" ஆன் தி வே." என்றாள் ஒருத்தி.

எல்லோரையும் அவசரப்படுத்தி, ஒரு வழியாக பத்துமணிக்கு சதாசில்க்ஸ்& ஜுவல்ஸ் கடைக்கு சென்றனர்.

பிரம்மாண்டமாக இருந்த ஐந்து அடுக்கு கட்டிடத்தின் உள்ளே நுழைந்தவள்," மே ஐ ஹெல்ப் யூ." என்று வினவிய பெண்மணியிடம், " நான் மிஸ்டர் ருத்ரனை பார்க்கணும்." என.

" சார் இன்னும் வரவில்லை." என்று புன்னகை முகமாக பதிலளித்தாள்.

" ஓ…" என்ற தென்றலின் முகமோ வாடிப் போனது.

அவளுக்கு என்ன தோன்றியதோ, " மேம். இந்த ப்ளோர் மேனேஜர் கிட்ட வேணும்னா விசாரிங்க." என்றவள், அவரிடமும் அழைத்துச் சென்றாள்.

" சார். இவங்க ருத்ரன் சாரை பார்க்கணுமாம்." என்று கூற.

அவரோ யோசனையாக அவளைப் பார்த்து, " சார் இன்னிக்கு லேட்டா தான் வருவேன்னு மெசேஜ் பண்ணியிருக்கார்." என்றுக் கூற.

தென்றலின் வதனமோ வாடி போனது. அதற்குள் அவள் கூட வந்திருந்த தோழிகள், " என்னடி உங்க மாமா இங்கே இல்லையா? ஏற்கனவே நாம வர்றதை இன்ஃபார்ம் பண்ண தானே?" என்று ஆளாளுக்கு கேட்க.

அவளோ கண்கள் கலங்க தலையை ஆட்டினாள்.

" சரி விடுடி. நாம போய் பட்ஜெட்டுக்கு கிடைக்குமான்னு பார்ப்போம். இல்லைன்னா வேற கடைக்குப் போகலாம்." என்று அவளை சமாதானம் படுத்தினார்கள்.

கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு," ஒன் மினிட் டி. அண்ணிக்கு ஃபோன் பண்ணி பார்க்குறேன்." என்று தோழிகளிடம் கூறியவள், ஃபோனை எடுத்து சங்கீதாவிற்கு அடித்துக் கொண்டிருக்க. அவளோ எடுக்கவே இல்லை.

அவர்கள் பேசியதைக் கேட்ட மேனேஜரோ, ருத்ரனுக்கு நெருங்கிய உறவு என்பதை புரிந்துக் கொண்டு, " நான் வேணும்னா ருத்ரன்சாருக்கு கால் பண்ணி நீங்க வந்துருக்கிறதா சொல்லவா?" என்று வினவ.

" சரி." என்று தலையாட்டினாள்.

" யுவர் குட் நேம் ப்ளீஸ்." என்று கேட்க.

" தென்றல்." என்றாள்.

மனதிற்குள்ளோ, 'என்னோட நேம் தெரியுமா? இல்லையா?' என்று எண்ணியவள், ' ச்சே ச்சே. அதெல்லாம் என்னை நன்றாகத் தெரியும்னு நினைக்கிறேன். இருந்தாலும் அவருடைய சிஸ்டரோட சிஸ்டர் இன் லா என்று சொல்லிடுவோம்.' என்று தனக்குள் நினைத்ததை செயல்படுத்தினாள்.

" ஓகே மேடம் …" என்றவர் அவர்களுக்கு ஒரு நாற்காலி எடுத்து போட சொல்ல.

" நீ பேசிட்டு வா டி. நாங்க அது வரைக்கும் சும்மா ஒரு ரவுண்ட் போயிட்டு வரோம்." என்று மற்றவர்கள் நாசுக்காக நகர்ந்து சென்றனர்.

மேனேஜர் உடனடியாக ருத்ரனை தொடர்பு கொள்ள.

ருத்ரன் ஹாஸ்பிடல் காரிடாரில் அமர்ந்து இருந்தான். மேனேஜரின் ஃபோன் கால் வர. அதை எடுத்து அட்டெண்ட் செய்தான்.

" என்ன சந்தோஷ்? எனி இம்பார்ட்டெண்ட்?" என்று வினவ.

" நம்ம மேடமோட ரிலேட்டிவ் உங்களைப் பார்க்க வந்துருக்காங்க."

" யாரு… பேர் எதுவும் சொன்னாங்களா?" என்று ஆச்சரியமாக வினவ.

" தென்றலாம்." என்று அவர் கூற, அவன் மனதிலோ புயல் வீசியது.

ஒரே பரபரப்பு மனதிற்குள்… ' பார்த்து எத்தனை நாளாச்சு. ச்சே அக்காவுக்கு மட்டும் உடம்பு நல்லாயிருந்திருந்தா, இன்னைக்கு அவளைப் பார்த்திருக்கலாம்.' என்று எண்ணியவன், இரண்டு மணி நேரத்திற்கு முன்பு நடந்ததை நினைத்துப் பார்த்தான்.

ருத்ரன் கடைக்கு செல்வதற்காக தயாராகி கீழே வர…

ஹாலில் அமர்ந்து இருந்த சங்கீதாவோ, " ருத்ரா… ஹாஸ்பிடலுக்கு என்னோடு வர்றியா?" என்று வினவினாள்.

" ஐயோ! என்னாச்சு கா." என்று பதற.

" ஒன்னும் இல்லடா. லைட்டா பெயினா இருக்கு. எதுக்கும் ஒரு தடவை ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு வரலாம்‌."

" இரு அம்மாவுக்கு கால் பண்றேன். அவசியம் அந்த விஷேஷத்துக்கு இரண்டு பேரும் போய் தான் ஆகணுமா? டெலிவரி டைம்ல இப்படி உன்னை தனியே விட்டுட்டு போகலாமா?" என்று கடிந்துக் கொண்டே, ஃபோனை எடுக்க.

" ப்ச். டேய் அப்பாவோட ஒன்னு விட்ட தங்கச்சியோட சம்மந்தி வீட்டு விஷேஷம். அம்மா போகலைன்னா நல்லா இருக்காது. இது சும்மா பொய் வலியா இருக்கலாம். டெலிவரிக்கு இன்னும் ஒன் மனத் இருக்கு. எதுக்கும் ஒன்ஸ் ஹாஸ்பிடல்ல செக் பண்ணிக்கலாம். நீ ஃபோன்ல சொன்னா அவங்க வேற பதட்டப்படுவாங்க." என்று ஏதேதோ சொல்லி, அவனை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றாள்.

காரில் போகும் போது, திரும்பித் திரும்பி சங்கீதாவை பார்க்க.

அவள் முகத்திலோ, வலிக்கான சிறு அறிகுறிக் கூட தெரியவில்லை.' என்று யோசித்துக் கொண்டிருந்தவனை,
" சார்… சார்… லைன்ல இருக்கீங்களா? அவங்க கிட்ட என்ன சொல்லட்டும்." என்று மேனேஜர் வினவ.

" ஃபோனை கொடுங்க சந்தோஷ்." என்றவன், படபடத்த மனதை அடக்கி கம்பீரமாக பேசினான்.

" ம்… என்ன விஷயம்?" என்றான் அழுத்தமாக.

அந்த குரலில் பயந்து போன தென்றலோ அமைதியை தத்தெடுத்தாள்.

" சொல்லு தென்றல்? என்ன விஷயமா கடைக்கு வந்த… எதுவும் பர்ச்சேஸா" என்றான் மென்மையாக…

அந்த குரலில் தயங்கித் தயங்கி வந்த விஷயத்தை கூறினாள் தென்றல்.

" ஓகே… இப்போ என்னால வர முடியாது. நான் மேனேஜர் கிட்ட சொல்றேன். நீ உங்க பட்ஜெட்ட சொன்னீங்கன்னா, அதுக்கு தகுந்த மாதிரி காண்பீக்க சொல்றேன். உனக்காக ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் போட சொல்றேன். " என்றான் மயக்கும் குரலில்.

" தேங்க்ஸ்." என்றாள் தென்றல்.

மேனேஜரிடம், "அவங்களை நல்லா கவனிச்சுக்கோங்க. ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் போட்டு கொடுங்க. நல்லா ஃப்ரெஷ் கலெக்ஷன் எடுத்து காட்டுங்க‌." என்று வரிசையாக ஆர்டர் போட்டான்.

அதற்கு பிறகு அவளுக்கு ராஜமரியாதை தான்.இப்போது தான் அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இருந்தாலும் ருத்ரன் வராமலிருப்பது அவளுக்கு சற்று வலித்தது‌. 'ஒரு வேளை தன்னை பார்ப்பதை அவாய்ட் செய்ய தான் வெளியே சென்று விட்டாரோ.' என்று எண்ணி கலங்கித் தவித்தவள் அப்போது அறியவில்லை, அவளது அண்ணி தான் இருவரையும் சந்திக்க விடாமலிருக்க திட்டம் போட்டாள் என்று…

அங்கே தென்றல் கலங்கித் தவிக்க.
இங்கோ ருத்ரன் யோசனையில் ஆழ்ந்திருந்தான். ' அக்கா ஏன் தென்றல் கடைக்கு வரப்போறதை சொல்லலை?'

ஸ்கேனுக்கு சென்று இருந்த சங்கீதா, திரும்ப வந்து அவனது அருகில் அமர…

அப்போது கூட அவன் கவனிக்கவில்லை.

" ருத்ரா…" என்று அழைத்தாள் சங்கீதா. அவன் திரும்பவில்லை. மீண்டும் அழைத்துப் பார்த்தவள், அவன் திரும்பவில்லை எனவும் அவனை தோளில் கை வைத்து அசைக்க‌

அப்பொழுது தான் தனது அருகில் இருந்த சகோதரியை கவனித்தவன், "அக்கா… ஸ்கேன் எடுத்தாச்சா? என்ன சொன்னாங்க?" என்று பரபரக்க.

"ஸ்கேன் எடுத்துட்டு வந்து பத்து நிமிஷம் ஆகுது. ரிப்போர்ட் வரவும் டாக்டர் கிட்ட போகணும். ஆமாம் நீ என்ன யோசனையில் இருக்க." என்று தம்பியை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே வினவ.

" நீ ஏன் கா தென்றல் கடைக்கு வரப்போறதை என் கிட்ட சொல்லலை?" என்று, முன்பு மனதில் கேள்வி எழுப்பியவன், இப்பொழுது அவளிடமே கேட்டு விட்டான்.

" அது… " என்று சங்கீதா தடுமாற.

" நேத்து தென்றல் உனக்குப் ஃபோன் பண்ணும் போது கூட என்ன விஷயம்னு கேட்டேனே. நீ கூட ஒன்னும் இல்லை என்று சொன்னீயே."

" ப்ச். காலையில சொல்லுவோம்னு நினைச்சேன். காலையில் நடந்த களேபரத்தில் மறந்துட்டேன்." என்ற சங்கீதா, ' அடேய் காலையில நீ என்னைப் படுத்தின பாட்டுல மறந்துட்டேன். ஐயோ! பாவம். அவ பயந்து அழுதுருப்பா.' என்று எண்ணியவள் பதட்டத்துடன் ஃபோனை எடுத்தாள்‌.

ருத்ரனுக்கு அருகில் வைத்து விட்டுச் சென்ற கைப்பையிலிருந்து ஃபோனை எடுத்துப் பார்க்க… அதில் தென்றலிடமிருந்து பல மிஸ்டுகால் வந்திருந்தது. "ஓ..காட்…" என்று தன் தலையில் தட்டிக் கொண்டாள் சங்கீதா.

" அக்கா… டென்ஷன் ஆகாத. நான் தென்றல் கிட்ட பேசிட்டேன் ‌" என்று சங்கீதாவை அமைதிப் படுத்தினான்.

இவ்வளவு நேரம் குற்ற உணர்ச்சியில் தவித்த சங்கீதா, " தென்றல் உனக்கு ஃபோன் பண்ணாளா? எவ்வளவு நாளா இது நடக்குது." என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் வினவ.

ருத்ரனோ, அதிர்ச்சியாக தனது அக்காவை பார்த்தான்.

தொடரும்...
 

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அருமை அருமை சகி, ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️இந்த சதிகார சங்கிய என்ன பண்றது, வில்லி சங்கீ மங்கி 😡😡😡😡😡😡😡
Thank you so much sis. உங்க கமெண்ட்டை இவ்வளவு நாளா கவனிக்கலை . சாரி பார் த லேட் ரிப்ளை சிஸ்
 
Top