• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
தென்றல் - 9

" அக்கா!" என அதிர்ச்சியாக ருத்ரன் அழைக்க.

" என்ன அக்கா? முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. தென்றல் உனக்கு ஃபோன் போட்டாளா?" என்று படபடப்புடன் சங்கீதா வினவினாள்.

"கா… நம்ம மேனேஜர் தான் கால் பண்ணார். என்ன ஆச்சு கா? ஏன் இப்படி எல்லாம் பேசுற? தென்றல் எனக்கு போன் பண்ணுனா தான் என்ன?" என்று வினவ.

" அது… உன் நம்பர் எப்படி அவளுக்கு தெரியும். அதான் கேட்டேன்." என்று ஏதோ சமாளிப்பாகக் கூறினாள் சங்கீதா.

" கா… வாட் கோயிங் ஆன். உன் மனசுல என்ன இருக்கு. ஏன் இப்படி எல்லாம் ரியாக்ட் பண்ற? எதா இருந்தாலும் மனசு விட்டு சொல்லு." என்று அவளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே ருத்ரன் வினவ.

" அது…" என்று திணறினாள் சங்கீதா. அவளை காப்பாற்றுவது போல், " மிஸஸ் சங்கீதா. நெக்ஸ்ட் நீங்க உள்ள போங்க." என்ற அழைப்பு காதில் விழ…

" வா… டாக்டர பார்த்துட்டு வரலாம்." என்ற சங்கீதா வேகமாக செல்ல. ருத்ரனும் ஒன்றும் கூறாமல் அமைதியாக எழுந்து அவளுடன் டாக்டரை பாராப்பதற்காக உள்ளே சென்றான்.

டாக்டர் சங்கீதாவை பார்த்து புன்னகைத்தார்.

" என்ன சங்கீதா. உங்க அம்மா வரலையா? எதுவும் கேம்புக்கு போயிருக்காங்களா?" என்று வினவினார் அவர்களது ஃபேமிலி டாக்டர்.

" நோ ஆன்ட்டி. ஒரு பங்ஷன் அதுக்காக அம்மாவும், அப்பாவும் போயிருக்காங்க. கேம்ப் எதுவும் இருந்தால் உங்களுக்கு தெரியாதா?" என்றாள் சங்கீதா.

" எனக்கு மெடிக்கல் சம்பந்தமான கேம்ப் பத்தி மட்டும் தான் தெரியும். உங்க அம்மா சமூகசேவகியாச்சே. வேற ஏதாவது கேம்புக்கு போயிருப்பாங்கனு விசாரிச்சேன் சங்கீதா. தென் உங்க அம்மா இருந்தா, உனக்கு இந்த அலைச்சல் இருந்திருக்காது. இது சாதாரணமான சூட்டுவலின்னு அவங்களே சொல்லியிருப்பாங்க. பேபி வெயிட் நார்மலா இருக்கு. இன்னும் பிரசவத்துக்கு தான் ஒன் மன்த் இருக்கே. லாஸ்ட் வீக் கொடுத்த டேப்ளட்லாம் இருக்குமே. அதையே கண்ட்னியூ பண்ணு சங்கீதா. நெக்ஸ்ட் வீக் வாங்க. இடையில பனிக்குடம் உடைஞ்சாலா, பெயின் அதிகமா இருந்தாலா வந்துடுங்க. " என்றவர் இருவரையும் பார்த்து புன்னகைக்க.

" ஓகே ஆன்ட்டி." என்ற சங்கீதாவும் புன்னகைத்தாள்.

முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் தனக்குள் யோசனையாக இருந்தான் ருத்ரன்.

" என்ன ருத்ரன்? எப்படி இருக்க. பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது. என்ன யோசனை. இன்னும் பிஸ்னஸை எப்படி டெவலப் பண்ணலாம்னு யோசிட்டு இருக்கீயா? " என்றார் டாக்டர்.

" நத்திங் ஆன்ட்டி. அக்காவுக்கு பெயின் வரவும் கொஞ்சம் பயமா போயிடுச்சு. அம்மா வேற இல்லையா… அதான்…" என்றான் ருத்ரன்.

" ஈஸி மேன். ஷீ இஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட். "

" ஓகே. பை ஆன்ட்டி." என்ற இருவரும் ஹாஸ்பிடலிலிருந்து வெளியேறினர்.

திரும்ப வரும்போது காரில் எந்த வித பேச்சுவார்த்தையும் இருவருக்கிடையே அமையவில்லை.

ருத்ரன் அமைதியாக காரை ஓட்ட… சங்கீதாவோ, 'நல்லதாக போச்சு.' என்று எண்ணியவள், கண்களை மூடிக்கொண்டாள்.

' ச்சே… கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ? வார்த்தைகளை வேறு விட்டு விட்டோம். ருத்ரனுக்கு எதுவும் டவுட் வந்திருக்குமோ? இருக்காது… அவனுக்கு மட்டும் சந்தேகம் வந்துடுச்சுன்னா அவ்வளவு தான். எல்லாத்தையும் அக்குவேறா, ஆணிவேரா ஆராய்ச்சி பண்ணிடுவான். அப்புறம் எல்லாம் கை மீறி போய்டும். அதுக்கு முதல்ல தென்றலுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்ல வேண்டும்.' என்று தனக்குள்ளே கேள்விக் கேட்டுக் கொண்டும், தானே பதிலும் சொல்லிக் கொண்டும், ஏதேதோ யோசித்து திட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் சங்கீதா.

வரும் போது மெதுவாக காரை ஓட்டிக் கொண்டு வந்தவனோ, இப்பொழுது வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றான். அவனுக்கு எப்படியாவது தென்றலை கடையிலிருந்து செல்வதற்குள் சென்று பார்க்க வேண்டும்.

அதற்காக தான் காரை வேகமாக ஓட்டினான். வேகமாக சென்றாலும் தன் அக்காவின் உடல் நிலையையும் கருத்தில் வைத்துத் தான் ஓட்டினான்.

கண்களை மூடி சாய்ந்திருந்த சங்கீதாவிற்கு அவன் எதற்காக இப்படி பறக்கிறான் என்பது புரிந்து தான் போனது. எப்படி அவன் கடைக்கு செல்வதை தாமதப்படுத்துவது என்று யோசிக்கலானாள்.

' தென்றலும், அவளது தோழிகளும் எப்படியும் சீக்கிரமாக துணியை தேர்வு செய்து விடுவார்கள். அதற்கு பிறகு சும்மா எங்காவது சுத்திப் பார்த்துட்டு தான் வருவாங்க. ருத்ரா அங்க போகறதுக்குள்ள அவ கிளம்பி போயிடுவா. இருந்தாலும் எதற்கு ரிஸ்க். ருத்ரனை சாப்பிட்டு போக சொல்லுவோம். அதுக்குள்ள அவங்க எல்லோரும் கிளம்பி இருப்பாங்க.' என்று எண்ணிக் கொண்டு இருந்தாள் சங்கீதா. அவள் இவ்வளவு கஷ்டப்பட்டு யோசித்துக் கொண்டிருக்க, அவளுக்கு உதவியாக அவளது பெற்றோரே வந்தனர்.

விசேஷ வீட்டிற்கு போய்ட்டு வந்தவர்கள் வீட்டில் சங்கீதாவை காணவில்லை எனவும் பதறி வேலையாட்களிடம் விசாரிக்க…

சங்கீதாவும், ருத்ரனும் ஹாஸ்பிடலுக்கு சென்றதாக மட்டுமே தகவல் கொடுத்தனர். வேறு எந்த தகவலும் வேலையாட்களுக்கு தெரியவில்லை.

சாரதாவோ, தான் டென்ஷனோதோடு மட்டுமல்லாமல் அவரது கணவரையும் போட்டு படுத்தினார்.

" எல்லாம் உங்களாலால தான்."

" நான் என்ன பண்ணேன் சாரு." என்று பம்மினார் சென்னையின் பெரிய பிஸ்னஸ்மேனான சதாசிவம்.

" பின்ன என்ன? நீங்க மட்டும் பங்ஷனுக்கு போயிட்டு வாங்கனு சொன்னா‌, கேட்டீங்களா?"

" சாரு… நாம போனது என் தங்கச்சி வீட்டு விஷேசம். இன்னும் சொல்லப் போனால் குடும்பத்தோட போகணும். சங்கீதாவுக்காக தானே ருத்ரனைக் கூட விட்டுட்டு போனோம்."

ருத்ரன் பேரைக் கேட்டதும், ' அட! ருத்ரனை மறந்துட்டோமே. சங்கீதா தான் ஃபோனை எடுக்கலை. சரி அவனுக்கு போடுவோம்.' என்று முணுமுணுத்த சாரதா தனது மகனுக்கு அழைத்தார்.

சரியாக ஃபோன் ரிங் அடிக்கும் முன்னே கார் போர்டிகோவில் வந்து நின்றது.

கார் சத்தத்தைக் கேட்டதும்,வேகமாக வெளியே வந்த சாராதா காரிலிருந்து இறங்கி வந்த மகளை உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தாள்.

" மா." என்றாள் சங்கீதா.

" என்னடா பண்ணுது. ஏன் ஹாஸ்பிடல் போனீங்க?" என்று சாரதா பதற.

" ஒண்ணுமில்லம்மா லேசா வலிக்குற மாதிரி இருந்தது. அதான் ஹாஸ்பிடலுக்கு போனோம்." என்று சங்கீதா சொல்ல…

" அதானடா. வேற ஒன்னும் இல்லையே." என்று மகளிடம் கனிவாக வினவிய சாரதா மகனிடம், " டேய்… ஏதா இருந்தாலும் அம்மாவுக்கு ஃபோன் பண்ணுனு படிச்சு படிச்சு சொல்லிட்டு தானே போனேன்." என்று கடிந்துக் கொள்ள.

" மா…" என்று ஏதோ சொல்ல முயன்றான் ருத்ரன்.

அதற்குள் சங்கீதாவோ, " மா… தம்பிய எதுவும் திட்டாதீங்க. வலிக்குதுனு நான் சொல்லவும் பயந்துட்டான். அதான்." என்றவள், ருத்ரனைப் பார்த்து லேசாக கண் சிமிட்டினாள்.

'அடிப்பாவி அக்கா… அம்மா கிட்ட சொல்லலாம்னு சொன்னதை மறுத்துட்டு, இப்போ எனக்கு சப்போர்ட்டுக்கு நீ வர்றியா? ' என்று எண்ணியவன் அவளைப் பார்த்து முறைத்தான்.

" நீயே முடிவு எடுக்கிற அளவுக்கு பெரிய மனுஷன் ஆகிட்ட. பிஸ்னஸ் ஃபுல்லா உன் கண்ட்ரோல் தான். அதுக்காக உனக்கு எல்லாமே தெரியும்னு ஆகிடுமா? அதுவும் உனக்கு பிரசவத்தைப் பத்தி என்ன தெரியும்? என் கிட்ட ஃபோன்ல பேசியிருந்தா, தேவையில்லாமல் ஹாஸ்பிடலுக்கு அலைய விட்டுருக்க மாட்டேன். ஒரு கஷாயம் வைச்சுக் கொடுக்க சொல்லி இருப்பேன். அதுல பொய் வலியா இருந்தா குறைஞ்சிருக்கும்." என்று டாக்டர் கூறிய அதே விஷயத்தை கூறி சாரதா குறைபட.

தமக்கையை ஒரு பார்வை பார்த்த ருத்ரன், சாரதாவிடம் திரும்பி, " சரிமா… விடுங்க… இனி இந்த தப்பை செய்ய மாட்டேன். இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன்." என்ற ருத்ரன் அப்படியே கிளம்ப பார்க்க.

சங்கீதாவோ, " டேய் நீ சாப்பிடவே இல்ல. முதல்ல உள்ள வா. வந்து சாப்பிடு போ." என்றாள்.

" கா… இப்போ சாப்பிட்டா லஞ்ச் எப்ப சாப்பிடுறது. மணியை பாரு. " என்று கேலியாக சொன்னவன், " பை மா.
பை பா." என்று விட்டு காரை
கிளம்பினான்.
**************************
தென்றலே கலங்கித் தவித்தவள், மேனேஜரின் அழைப்பில் சுயநினைவுக்கு வந்தாள்.

" ஹான்…"

" வாங்க மேடம். என்ன பார்க்குறீங்க. " என்று மேனேஜர் வினவ.

"லெஹங்கா பார்க்கணும்." என்றவள் அவரோடு தோழிகள் இருக்குமிடம் சென்றாள்.

அங்கு ஏற்கனவே சில டிசைன்களை தோழிகள் தேர்ந்தெடுத்து வைத்திருக்க… அதில் எல்லோருக்கும் பிடித்த மாதிரியான லெஹங்காவை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.

விலையும் இவர்களுக்கு பேவராக இருக்க… ஆளாளுக்கு தென்றலிடம், " பரவால்ல டி. நமக்கு நல்லா அமைஞ்சிருச்சு. ஆமா இவ்வளவு நாளாக இப்படி ஒரு சொந்தக்காரங்க இருக்காங்கனு சொல்லவே இல்லை. நீ அன்னைக்கு சதா சில்க்ஸ் உனக்குத் தெரிஞ்சவங்க கடைன்னு சொல்லும் போது சும்மா சொல்றேன் நெனச்சேன். பட் சூப்பர் டி." என்று ஆளாளுக்கு அவளிடம் ஏதோ கூற.

அவளோ அமைதியாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அது இயல்பான புன்னகை இல்லை. வலுக்கட்டாயமாக புன்னகையை சிந்தினாள்.

ஆனால் அது அடுத்தவரின் கவனத்திற்கு வரவே இல்லை.

ஏனென்றால் அவள் எப்பொழுதுமே இப்படித்தான் இருப்பாள். அதனால் யாருக்கும் ஒன்றும் தோன்றவில்லை.

ஆனால் அவள் கண்களிலிருந்து வழிந்த ஏமாற்றத்தை கவனிப்பார் தான் அங்கு இல்லை.

ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பியவர்கள் முதலில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று முடிவெடுத்தனர்.

அருகில் எங்கே ஐபோக்கோ ஷாப் இருக்கும் என்று கூகுளில் தேடி அங்கே சென்றனர்.

மேனேஜரோ, அவர்கள் கிளம்பவும் ருத்ரனுக்கு அழைத்து விட்டார்.

காரை ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்தவனோ ப்ளூடூத் மூலமாக ஃபோனை ஆன் செய்து, " சொல்லுங்க சந்தோஷ்." என.

" சார்… மேடம் கிளம்பிட்டாங்க. நீங்க சொன்ன மாதிரியே டிஸ்கவுண்ட் போட்டுட்டேன் சார்." என்றான்.

" ஓகே… " என்றவன், கடையை பற்றிய மற்ற விவரங்களை கேட்டுவிட்டு, " ஒகே சந்தோஷ். நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவேன். நீங்க ஸ்டாக் லிஸ்ட் எடுத்து வைங்க."என்று கூறி விட்டு ஃபோனை வைத்தவனுக்கோ தென்றலைப் பார்க்காத ஏமாற்றத்தை ஸ்டீரியங்கில் காட்டினான்.

அவனது ஏமாற்றம் காருக்கா புரிய போகுது, முன்னால் சென்றுக் கொண்டிருந்த ஸ்கூட்டி மேல் மோத போக, கடைசி நொடியில் சுதாரித்துக் கொண்டான்.

சற்று காரை ஓரம் கட்டியவன், அருகே இருந்த ஐபோக்கோவை பார்க்கவும் அதில் நுழைந்தான். அவனுக்கு இப்போது சில்லென்று ஏதாவது உள்ளே செல்ல வேண்டும் என்று தோன்ற, ஏதோ வாய்க்கு வந்த ப்ளேவரில் ஐஸ்கிரீம் ஆர்டர் சொல்லிட்டு அமர்ந்தான்.

ஐஸ்க்ரீம் வந்து அவனது மனதை குளிர்விக்கும் முன்பு அவனது மனம் அமைதி அடைந்தது. காரணம் , அவன் யாரை பார்க்க வேண்டும் என்று வேகமாக வந்தானோ, அவள் அவனுக்கு பக்கவாட்டிலிருந்து டேபிளில் வீற்றிருந்தாள். அவளை தவிர மீதி மூவரும் சலசலவென பேசிக்கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்ததுமே அவன் கண்டு கொண்டான்.

" ஹேய் அனு… இது உனக்கில்லை. தென்றலோடது டி. அவளுக்கு டார்க் சாக்லேட் சீக்ரெட் தவிர வேறு எதுவும் பிடிக்காது." என்று கவிலயா கூறினாள்.

அவர்கள் பேசுவதைக் கூட கவனத்தில் வாங்காமல் இருந்தவள், ஏதோ உள்ளுணர்வு உணர்த்த பார்வையைத் திருப்பினாள்.

அங்கோ ருத்ரன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் விழிகளில் வழிந்த வர்ணஜாலத்தை ரசித்தாலும், அவனது உணர்வுகளை வெளிக் காட்டாமல் இருந்தான்.

தென்றலின் முகம் வாடி போனது.

தொடரும்.....
 
Top