• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்..... (பாகம் 12)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
அதிகாலை ஐந்து மணி இருக்கும். காவியன்பட்டை நோக்கிச் சீறிக் காெண்டிருந்தது மித்ரனின் கார். ஏனைய குடும்பங்கள் அவரவர் வீட்டை அடைந்திருந்தனர். யன்னலோர இருக்கையில் அமர்ந்து வானத்தை வெறித்த படி இருந்தாள் ஆதிரா. அவள் முகம் போலவே வானமும் வெளிறிப் போய் இருந்தது. ஒரே ஒரு நிமிடத்தில் எப்படி மாறி விட்டது அவள் வாழ்க்கை? ஆசைப்பட்டவன் கைகூடவில்லை என்பதே பெரிய வேதனையாக இருக்க வாழ்க்கைப் பட்டதோ அவன் நண்பனுக்கு என்பது இன்னும் வலித்தது. அகரன் எப்படித் தாங்குவான் இதை? அவனும் அவளுமாக ஒரு குட்டிக் குடும்பத்தையே கற்பனை செய்து வைத்திருந்தார்கள். எல்லாமே சுக்குநூறாகப் போயிற்று. ஒவ்வொரு தடவை அவன் மித்ரனைப் பார்க்கும் போதும்.... 'என்னோட ஆதிரா இனி எனக்கில்லையே என நினைக்கும் போது....' எவ்வாறெல்லாம் வேதனையுறுவான் என நினைக்க நினைக்கச் செத்து விடலாம் போல இருந்தது ஆதிராவுக்கு. சாகக் கூட அந்தப் பிசாசு விடுமோ என்னமோ?

எல்லாவற்றையும் விட.... என்றும் அவளை தன் செல்லக்குழந்தையாக நினைத்து அவளை அரவணைத்த அவளின் அம்மா கூட கை நீட்டி அவளை அடித்ததும்.... 'உன்னைக் கொல்லாம விடமாட்டன்டி' என்று அவர் அதரங்கள் உதிர்த்த அவ் வார்த்தையையும் நினைக்க இதயம் ரணமாக வலித்தது. இந்த உலகத்தில் அவளுக்காக இனி யாருமில்லை. அவளை எந்நேரமும் குழந்தையாகப் பார்த்த அவள் அண்ணன் கூட ஒரு வார்த்தையும் கூறாது பேசாமடந்தையாக அல்லவா நின்றான்? இனி அவளுக்கென்று யாருமே இல்லை. அவளுக்கு யாரும் தேவையுமில்லை. அவள் தனியாகவே வாழ்ந்து விடுவாள். இவ்வாறெல்லாம் தான் அவளின் எண்ணவோட்டம் இருந்தது. கண்கள் அவளையும் அறியாமல் பனித்தன. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள். அதனால் தந்தை பாசம் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவளில்லை. ஏனெனில் அதை ஒரு குறையாக எண்ண என்றுமே இனியன் விட்டதில்லை. ஆனால் இன்று???.... அப்பா இருந்திருந்தால் அவளுக்காக அவர் இருந்திருப்பார். எல்லாவற்றையும் நினைக்க நினைக்க கண்கள் ஆறாய்ப் பெருகியது.

இதைக் கண்ணாடியில் கண்ட மித்ரனுக்கும் வேதனை தாளவில்லை. அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது. 'என்ன ஆனாலும் பரவாயில்லை; உனக்கு நான் இருக்கன்' என்று அவள் கைகளைப் பிடித்து சொல்ல வேண்டும் போல் இருந்தது. (அது ஒரு விதமான உணர்வு... நாம ரொம்பக் கஷ்டத்தில இருக்கும் போது 'உனக்கு நான் இருக்கன்'னு சொல்ற மாதிரி ஒரு உறவு இருக்கிறது. எங்களோட கஷ்டம் அதனால தீர்ந்திடும்னு இல்ல. ஆனா எங்க பிரச்சினைல ஆதரவா எங்களுக்குனும் ஒராள் இருக்கிற ஒரு ஃபீல் வரும். ஒரு வேளை உங்களுக்கு முக்கியமான யாரும் அப்பிடி கவலையில இருந்தா அவங்களுக்கு ஆதரவா நீங்க இருக்கீங்க எண்ட நம்பிக்கையைக் குடுங்க ஃபிரண்ட்ஸ். உங்க உறவுக்கு நீங்க குடுக்கிற ரொம்பப் பெரிய support ஆ இருக்கும்.)
ஆனாலும் என்ன பயன்? அவள் அவன் கை பட்டாலே 'ச்சீ' என்றல்லவா உதறுவாள்? அப்படி நினைக்கவும் வலித்தது அவனுக்கு. அவன் ஒன்றும் அவளை விரும்பி மணம் புரியவில்லைத் தான். ஆனாலும் தாலி கட்டிய பின் அவள் அவனுடைய மனைவியல்லவா? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல அழைத்தான்.

'ஆதிரா'

'ம்ம்'

'ஏதாவது ஹோட்டல் போய் ஃபிரஷ் ஆகிட்டுக் கிளம்புவமா? இல்ல காவியன்பட்டை அடைய இன்னும் மூணு மணி நேரமாகும். நேத்து வெளிக்கிட்டதில இருந்து ஒண்ணுமே சாப்பிடல.... சரியா தூங்கல.... டயர்டா (tired) இருக்கு. கொஞ்சம் றெஸ்ட் (rest) எடுத்திட்டுப் போவமா?'

'ம்ம்'

'இன்னும் கால்மணி நேரத்தில "திரிபுவனம்"னு ஒரு ஹோட்டல் வரும். அங்க நிறுத்தவா?'

'ம்ம்'

'ஹோட்டல் திரிபுவனம் உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற பெயர்ப் பலகையைக் கடந்து உள்ளே சென்று நின்றது கார். காரின் பின்னிருக்கையிலிருந்து அமைதியாக இறங்கினாள் ஆதிரா. மித்திரனும் கார் பாக்கிங்கில் காரை நிறுத்தி விட்டு வந்தான். ஆதிராவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். ரிசப்ஷனிஸ்ட் சிரித்தபடி அழகாக வரவேற்றாள்.'

'இங்க ரூம் எடுக்க முடியுமா? நானும் என் மனைவியும் தங்கணும். முன்னாடியே அரேஞ் பண்ணல. அதான்' கேட்டான் மித்ரன்.

அவன் மனைவி என்று சொன்னதைக் கேட்டதும் ஆதிராவுக்கு அப்பிடி ஒரு கோபம்... மித்ரனை நோக்கி எரிக்கும் பார்வை ஒன்றை வீசினாள். மித்ரனுக்குத் "திக்" என்றது. 'மனைவினு சொன்னதுக்கே இந்தப் பார்வையா? வௌங்கிடும்' அவரோட மைண்ட்வொய்ஸ்.

'முன்னாடியே சொல்லணும்னு அவசியமில்லை. எவ்ளோ றஷ் ஆனாலும் சில ரூம்ஸ் ஃப்ரீயா வெச்சிருப்போம். திடீர்னு அவசரத்துக்குனு வாறவங்களுக்காக. சோ பிரச்சினை இல்ல. உங்களுக்கு செகண்ட் ஃப்ளோர்ல G-41 ரூம் அரேஞ் பண்ணி இருக்கு. இந்தாங்க கீ' என்றாள் ரிஷப்சனிஸ்ட்.
கீயை வாங்கிக் கொண்டு ஆதிராவுடன் அறையை அடைந்தான் மித்ரன். அவளை அறையில் விட்டவன் சிறிது நேரத்தில் வருவதாகக் கூறிச் சென்றான். ஆதிராவுக்கும் அந்தத் தனிமை தேவையென்றே தோன்றியது. தனது வாழ்வில் நடந்த அனைத்தையும் அசை போட்டபடியே கட்டிலில் படுத்திருந்தாள். வெளியே சென்ற மித்ரன் வர அரை மணி நேரமானது.

'மன்னிச்சுக்கோ ஆதிரா. எனக்கு முன்ன பின்ன இதெல்லாம் செய்து பழக்கமில்ல. அது தான் லேட் ஆகிட்டு. எதிர்பாக்காம வெளிக்கிட்டதால லக்கேஜ்னு எதையும் எடுக்கல. இதில கொஞ்சம் உடுப்பு இருக்கு. கீழேயே கடை இருந்ததால போய் வாங்கீட்டு வர சிரமமா இருக்கல. ஆனா அளவெல்லாம் சரியா இருக்கா தெரியல. உன்னோட ரேஸ்ட் பற்றியும் எனக்குத் தெரியாது. இப்போ குளிச்சிட்டு இதை அஜஸ்ட் பண்ணிப் போட்டுக்கோ. போகும் போது உனக்கு ஏத்தத நீயே வாங்கிக்கோ. இப்போ கொஞ்சம் டயர்டா இருப்பியேனு தான் உன்னைக் கூட்டிப் போகல. போய்ப் ஃபிரஷ் ஆகிட்டு வாம்மா'

ஆதிராவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. இருந்தாலும் அந்நேரத்தில் எதையும் வெளிப்படுத்தாது உடையை எடுத்துக் கொண்டு பாத்ரூமினுள் தஞ்சம் புகுந்தாள். பதினைந்து நிமிடங்கள் அலுப்புத் தீர நன்கு குளித்தவள் உடை மாற்றப் போகும் போது தான் அதைக் கவனித்தாள். அந்தப் பையினுள் அவளுக்கான உள்ளாடைகளும் இருந்தன. அத்துடன் ஒரு நப்கின் பைக்கட்டும் கூட. அவளுக்கு கோபம் தலைக்கேறியது. அவன் என்ன புருஷனா கண்ட உடுப்பெல்லாம் வாங்கிக் குடுக்கிறதுக்கு. ஆமாம்ல புருஷன் தான்ல. இருந்தாலும் என்ன? ஒரு பொண்ணுக்கு என்ன வாங்கிக் குடுக்கணும்னு சென்ஸ் இல்லாதவன். மனதுக்குள்ளேயே அவனைத் திட்டிக் கொண்டு உடைகளை அணிந்து கொண்டாள். மஜந்தா நிறத்தில் ஒரு சுடிதார். அவளது மாநிறதுக்குத் தூக்கலாக இருந்தது. அது அவளோட பேவரிட் கலர். ஆனாலும் அன்று ஏதோ கசப்பாக இருந்தது. அகரன் அந் நிறத்தில் உடை எடுத்துக் கொடுக்கும் போது எவ்ளோ நல்லாருக்கும். பத்துத் தரமல்லவா போட்டுப் பார்ப்பாள்? 'ச்சை சுடிதாரா இது... சும்மா மசமசனு. சரியான பெருசா வேற இருக்கு. அப்புறம் எதுக்கிந்த நப்கின். நான் சொன்னனா எனக்கு உடம்புக்கு முடியலனு? முதல்ல கொண்டு பாேய் அவன் முகத்துல வீசி எறியணும்' என மனதுள் அவனை வசைபாடிக் கொண்டே வெளிவந்தாள் ஆதிரா.

ஆனாலும் அவளால் எதுவுமே பேச முடியாது போயிற்று. காரணம் மித்ரன் அங்கிருந்த சோஃபாவில் படுத்து உறங்கி இருந்தான். அவனது கலைந்த கேசமும் சோர்ந்த முகமும் களைப்பை வெளிப்படுத்தியது. அவனை நினைக்க கொஞ்சம் பாவமாகவும் இருந்தது. அவனுக்கும் இது விரும்பி நடந்த திருமணமில்லையே. அவனும் தானே தன் மனைவியுடன் எப்படி எப்படியெல்லாம் வாழ வேண்டுமென்று கனவு கண்டிருப்பான்? அவனும் அவள் மேல் கோபப்படலாம் தானே. அவனும் யாரையும் விரும்பி இருந்தானோ என்னவோ? இந்நேரத்தில் அவனும் சிடு சிடு என்றிருந்தால் அதை அவளால் தாங்க முடியுமா? இயலாது தானே? அவனுடன் சந்தோசமாக இருப்பது இயலாத காரியம். ஆனாலும் முடிந்தளவுக்கு அவனைப் புண்படுத்தாது நடந்து கொள்ள முடிவு செய்தாள் ஆதிரா.
நேற்று இரவிலிருந்து வண்டி ஓட்டுகிறான். இடையில் வண்டி பிழைப்பட்டு நின்றுவிட அதைத் திருத்துவதற்கு வேறு மிகச் சிரமப்பட்டான். அதிலேயே ஓரிரு மணித்தியாலங்கள் செலவாகி விட அந்ந இடைவெளியிலேயே காரினுள் நன்கு தூங்கி விட்டாள் ஆதிரா. அவனும் சாதாரண மனுஷன் தானே; சோர்வு இருக்கத்தானே செய்யும்? தூங்கட்டும் என அவனை விட்டு விட்டு அங்கே டீபாயில் இருந்த புத்தகமொன்றை எடுத்து வாசிக்கலானாள் ஆதிரா.
ஒருமணி நேரம் கழித்தே எழுந்தான் மித்ரன். உடலும், உள்ளமும் சோர்ந்து போய் இருந்தது. அப்போதுதான் நேற்று இரவிலிருந்தே ஒன்றும் சாப்பிடவில்லை என்ற நினைவு வந்தது. வெகு வேகமாக குளியலறையில் நுழைந்தவன் ஐந்தே நிமிடங்களில் குளித்துவிட்டு ரெடியாகி வந்தான். வந்தவன் அப்போதுதான் ஆதிராவைக் கவனித்தான். அவன் கொடுத்த உடையில் அழகு தேவதையாய் அமர்ந்திருந்தாள் ஆதிரா. சிறிது நேரம் அவளறியாமல் அவளை ரசித்தவன் அவள்,அவனை நோக்கித் திரும்பவும் தன்னிலை பெற்றான்.
'நேற்றைல இருந்து ஒண்ணுமே சாப்பிடலமா. ரொம்பப் பசிக்குது. கீழ கடை இருக்கு; போய் சாப்பிட்டு வருவமா?'

'ம்ம்'

'அப்பிடியே கடைக்குப் போய் துணிமணியும் வாங்கிட்டே வந்திட்டோம்னா... வந்ததுமே புறப்பட்டிடலாம்.'

'ம்ம்'

அவளையும் அழைத்துக் கொண்டு கீழே இருந்த கன்டீனுக்கு சென்றான். நினைத்தால் மேலேயே உணவை ஓடர் பண்ணிப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அவர்களுக்கு சில துணிமணிகளும் எடுக்க வேண்டி இருந்தது. அதோடு வெறும் அறையிலேயே அடைந்து கிடக்காமல் வெளியே செல்லுவது நல்லதென்றும் தோன்றியதாலேயே மித்ரன் அவ்வாறு செய்தான்.

கீழே சென்று உணவருந்தியவர்கள், அருகே உள்ள உடுப்புக் கடையில் அவர்களுக்கென ஐந்தாறு உடைகளை எடுத்துக் கொண்டு வெளிவந்தனர். நல்ல வேளை அவர்கள் ஊரிலிருந்து புறப்படும் போது இனியன், அபி, கலைவாணி என அனைவரும் தம்மிடமிருந்த பணத்தை மித்ரனிடம் கொடுத்தே அனுப்பினர். சாமியார்கள் கூட அவர்களை ஆசிர்வதித்து அவர்களிடமிருந்த சிறிதளவு பணத்தைக் கொடுத்துத் தான் அனுப்பினர். ஆகக் கூடுதலாக பணம் கொடுத்து உதவியது அகரன் தான்.
"அகரன்" அவனை நினைக்கும் போது கண் கலங்கியது மித்ரனுக்கு. இறுதியாக வரும் போது எவ்வளவோ சொல்லியல்லவா அனுப்பினான்.
'ஆதிமா ரொம்ப நல்லவடா... அவ மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும். அவ, தான் நினைச்சது நடக்காத அதிர்ச்சியில ஏதாவது தப்பான முடிவெடுத்திடாமப் பாத்துக்கோடா. அவ நல்லா இருக்கணும். வேற யார்லயாவது இருக்கிற கோபத்தை உன்மேல காட்டினாக் கூட கொஞ்சம் பொறுத்துக்கோடா. பேஸிக்கா (basic) ரொம்ப நல்ல பொண்ணு அவ. ஆனாக் கோபத்தில கொஞ்சம் தடுமாறுவா. அவ உன்னோட மனைவி. நான் மூணாவது மனுஷன். உன்னோட மனைவியைப் பத்தி உன்கிட்ட சொல்லுறது தப்பு. ஒரு பொண்ண எப்பிடி நடத்தனும்னு என்னை விட நல்லாப் புரிஞ்சவன் நீ. எனக்கு இப்போ இருக்கிற ஒரே ஆறுதல். அவ என்னை விட்டு இன்னொருத்தனுக்கு மனைவியா அமைஞ்சிருந்தாலும் கூட , அந்த இன்னொருத்தன் நீயா இருக்கிறது தான். பத்திரமாப் போய்ட்டு வாங்க. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்க என் வாழ்த்துகள்'
என்னதான் வாழ்த்து சொன்னாலும் 'உன் மனைவி' என ஆதிராவைக் கூறும் போது அகரனின் குரல் உடையத்தான் செய்தது. அகரன் ஆதிராவை அப்படிக் காதலித்தான். அவளோட சந்தோஷம் தான் அவனோட வாழ்க்கை. ஆதிராவைப் பற்றி அடிக்கடி சொல்லுவான். இது பண்ணா சந்தோஷப்படுவாளா? அது பண்ணா சந்தோஷப்படுவாளா? என மித்ரனுடைய ஆலோசனையும் கேட்டு அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்வான். அப்படி இருந்த காதலில் பிரிவென்பது சாதாரணமல்லவே? அகரனை மாதிரித்தானே ஆதிராவும் ஒவ்வொன்றையும் அகரனுக்காக பார்த்துப் பார்த்துச் செய்திருப்பாள்... அவளும் பாவம் தானே? யாருக்காக கவலைப்படுவதெனத் தெரியவில்லை மித்ரனுக்கு. இந்த நினைப்பிலேயே அவர்கள் அறைக்கு வந்து சேர்ந்துவிட நினைவுகள் தற்காலிகமாகத் தடைபட்டுப் போயின.

உடுப்புக் கடையில் அவரவரவர்க்கென வாங்கிய தனித்தனி சூட்கேஸினுள் அவர்களுடைய துணிகளை வைத்துக் கொண்டனர். தான் வாங்கிக் கொடுத்த நப்கினை சூட்கேஸினுள் ஆதிரா வைப்பதைப் பார்த்த மித்ரன்..... 'Sorry ஆதிரா. பெண்களுக்கு இது ஒரு சங்கடமான நிலை தான். வெளிச் செல்லும் போது எதிர்பாராத விதமா உடம்பு முடியாமப் போறது. அதனால அவங்க முன்னெச்சரிக்கையா இருக்கிறது நல்லம்ல. உனக்கு முடியாதுங்கிறத என்கிட்ட சொல்றளவுக்கு நீ இடம் எடுத்துக்க மாட்ட. சொல்லவும் முடியாம என்ன செய்றதுனும் தெரியாம நிக்கிற நிலை உனக்கு வரக்கூடாதுனு தான் நானாவே வாங்கீட்டு வந்தன். தப்பா எடுத்துக்காத என்ன?'

வழக்கம் போல ஆதிராவிடமிருந்து வந்த பதில் வெறும் 'ம்ம்' தான் என்ற போதிலும்.... இம்முறை அவளுள் ஒரு நெகிழ்வு ஏற்படத்தான் செய்தது. சொல்லாமலே கஷ்டத்தைப் புரிஞ்சு செயற்பட்ற புருஷன் கிடைக்கிறது ஒரு வரம் தானே? அதுவும் பிரச்சினை வராமலே.... 'அவள் கஷ்டப்படக்கூடாது'னு யோசிக்கிறானேனு இருந்தது அவளுக்கு. ஆனாலும் அவ்வெண்ணம் வெறும் சொற்ப நேரம் தான். இதையே அவள் அகரனும் செய்திருப்பான் தானே? பெருமூச்செறிந்து விட்டுப் புறப்பட்டாள் ஆதிரா. ரிஷப்சனிஸ்ட்டிடம் கிளம்புவதாகக் கூறி பணத்தைக் கட்டிவிட்டு விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர். கார் மீண்டும் காவியன்பட்டை நோக்கிப் புறப்பட ஆரம்பித்தது.
 
Top