அபிநயா வீடு...
தோழிகள் இருவர் முகத்திலும் அப்பட்டமான பயம் தொற்றி இருந்தது. "இது இவ்ளோ பெரிய விஷயமா இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல அபி" என்ற ஆதிராவின் வார்த்தைகளிடையே விசும்பலும் எழுந்தது. அவளை ஆதரவாகத் தோள் சாய்த்து ஆசுவாசப்படுத்தினாள் அபி. "பேசாம நீ இனியன் அண்ணாக்கு ஃபோன் பண்ணி இங்க வரச் சொல்லு ஆரா.... நாம அவங்க கூடக் கதைச்சு ஒரு முடிவெடுக்கலாம்." அபி கூறியது ஆராவுக்கும் சரி என்றே தோன்றியது. அவள் இனியனை அழைக்க விரைந்தாள்.
ஆதிராவுக்கு சில காலமாகவே விசித்திரமான சில கனவுகள் தோன்றுவதுண்டு. முதலில் ஒரு சிறு ஓட்டு வீடு. அதன் அருகே ஓர் ஒற்றைப்பனை மரம். மற்றொரு புறம் ஒரு சிறு கிணறு. முற்புறம் ஒரு சிறு தோட்டம். அந்தத் தோட்டத்தில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தது குழந்தையொன்று. தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய மாமரத்தில் ஓர் அழகிய குருவிக் கூடு. அதைக் கண்ட குழந்தை சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. அந்த அருமைக் காட்சியைத் தாயாருக்குக் காண்பிக்க.... "அம்மா அம்மா இஞ்ச ஓடியாம்மா.... இங்க பாரேன்" என தன் மழலைக்குரலில் கத்தியது. அதன் சத்தத்தைக் கேட்டு "என்னடா கண்ணா" என்ற படி வீட்டினுள் இருந்து வெளியே வந்தவள் ஆதிரா....
அடுத்த முறை.... அதே வீட்டுத் தோட்டம். பயிற்றை, பாவல், புடோல், கத்தரி, வெண்டி என அவர்களது தேவைக்கு அதிகமாகவே காய்த்துத் தொங்கின. மறுபுறம் பூ மரங்களும் அவற்றின் பங்குக்கு பூத்துக் குலுங்கின. பூக்களுக்கு நோகாமல் தன் பட்டுக் கரங்களால் அவற்றைக் கொய்து சிறிய கூடையில் போட்டுக் கொண்டிருந்தது குழந்தை. மறுபுறம் காய்கறிகளை பிடுங்கிக் கொண்டிருந்தாள் ஆதிரா. முன்னையது போல அழகான ஒரு கனவு.
இன்னொரு முறை..... அதே வீடு. அதே சூழல்.... இந்த முறை.... வீட்டினுள் பெரிய ஓலம்..... ஒரு பெண் கதறி அழும் சத்தமே கேட்டது. இடையிடையே சிரிப்புச் சத்தமும் இடையிடையே ஏதேதோ பேச்சுக்குரல்களும் கேட்டன. அந்த அழகான குருவிக்கூடு கூட களையிழந்து போய் இருந்தது. குருவிக்கூட்டிலுருந்த குருவி ஒன்று பெருங்குரலெடுத்து அழுத படி அங்குமிங்கும் பறந்தபடி இருந்தது. முன்னையதைப்போல அழகான கனவு அல்ல அது.
இன்னொரு முறை.... அதே சூழல். அந்தச் சிறு வீட்டில் அந்த மழலை அழும் சத்தம் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.
மற்றொரு முறை அந்தச் சிறு வீட்டைக் காணோம். ஆனால் அந்த வீடு இருந்ததற்கான இடிபாடுகள் மட்டும் ஆங்காங்கே காணப்பட்டன. அந்தச் சிறு கிணறு கூட பாழடைந்து போய் இருந்தது. ஒற்றைப் பனைமரம் இப்போது பல பனை மரங்களாக விஸ்வரூபம் எடுத்திருந்தது. அந்தத் தோட்டம் கூட சிதைந்து போய் ஆங்காங்கே வடலிகள் உருவெடுத்திருந்தன. ஆனால் அந்த மாமரம் மட்டும் பல கிளைகள் எறிந்து பூவும் பிஞ்சுமாக இருந்தது. ஆனால் அதிலிருந்த குருவிக் கூட்டை இப்போ காணோம். எங்கிலும் மயான அமைதி. கனவிலேயே பயங்கரமாக இருந்தது. அந்தச் சூழலில் அழகெனச் சொல்வதற்கிருந்தது அந்த மாமரம் மட்டும் தான். ஆனால் அது கூட அந்தச் சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் மாறுபாடாக இருந்தது ஒரு வித அமானுஷ்யத்தைத் தந்தது. இது போன்ற எத்தனையோ கனவுகள் மாறி மாறி வந்து கொண்டே இருந்தன. முதலில் வெறும் கனவென ஒதுக்கியவள் தொடர்ந்தும், அதுவும் ஒரே சூழலைச் சூழவுள்ள கனவுகளாக வருவது கண்டு சற்றுப் பயந்து தான் போனாள். இதை வீட்டில் சொல்லி அவர்களைக் குழப்ப வேண்டாமென நினைத்தவள் அதன் பின் நின்றது அபிநயா வீட்டில் தான்.
அங்கும் தொடர் கனவுகளின் தொல்லை இருந்தது தான். இருப்பினும் வேறு பல விடயங்களில் அவள் கவனம் சென்றதால் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் வீட்டிலிருந்து விடை பெற நினைத்த சாமியார் அவளிடம் அவளைத் தேற்றக்கூறிய அந்த வார்த்தைகள் நிச்சயம் அந்தக்கனவுடன் சம்பந்தப்பட்டது தானெனப் புரிந்து போயிற்று அவளுக்கு. அதனால் தான் அபியையும் அழைத்துக் கொண்டு சாமியாரைப் பார்க்கச் சென்றது. அவர் சொன்னது பேரிடியாக இருந்தது அவளுக்கு. "உனக்கு நிச்சயமான கல்யாணம் நடக்காதும்மா.... நீயாவே அதை நிறுத்திடுறது நல்லது. இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாதுனு உயிர்ச்சேதத்தை விளைவிக்கக் கூடிய அளவுக்கு கெட்டது இல்லை அது. ஆனால் ஆன்மாவை நம்ப முடியாதில்லையா? தன்னோட தேவையை நிறைவேத்த எந்த எல்லைக்கும் போகும்" என்று அவர் கூறியதும்.... 'ஆன்மாவா???' என்று வாயைப் பிளந்தனர் அபியும் ஆதிராவும்.
"ஆமாம்மா.... இப்போதைக்கு எனக்குத் தெரிந்தது இவ்வளவு தான். ஆனால் நாங்கள் இந்த விஷயம் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதை எப்படித் தெரிந்து கொள்வது? ஒன்றும் புரியவில்லையே அம்மா"
"ஐயா! நான் சொல்லுவது தங்களுக்கு உதவியாக இருக்குமா தெரியவில்லை.... ஆனால் தங்களிடம் சொல்வதால் என் மனதுக்கு ஆறுதலாக இருக்குமென எண்ணிக்கூறுகிறேன்" என்று தொடங்கி தன்னுடைய அத்தனை கனவுகளையும் ஒன்று விடாமல் கூறினாள் ஆதிரா.
ஆச்சரியம் மேலிட அவளைப் பார்த்தவர்.... "அந்தக் கனவுகள் எப்போதிருந்து வருகின்றன?" என வினவினார். "கடந்த இரண்டு மாதங்களாகவே வருகின்றன ஐயா. மிகச் சரியாகச் சொன்னால் கடந்த மாதத்திற்கு முதல் மாதம் ஐந்தாம் திகதியிலிருந்து இதே கனவுகள் தாம்."
அதெப்படியம்மா மிகச்சரியாக திகதி கூறுகிறாய்?"
" ஏனெனில் அன்று காலை தான் எனக்கும் அகரனுக்கும் நிச்சயம் நடைபெற்றது." சொல்லும் போதே ஆராவுக்குப் புரிந்து போயிற்று. ஆம் இது தனக்கு நிச்சயமான நாளிலிருந்தே தொடங்கி இருக்கிறது. அவளது நிச்சயதார்த்தமே 'அதற்கு' பிடிக்கவில்லை. அன்றிலிருந்து ஏதோ உணர்த்த முயன்றிருக்கிறது. அதனால் தான் அவ்வாறு கனவு வந்திருக்கிறது.
"உன்னுடைய திருமணத்தை நிறுத்த நினைப்பதன் நோக்கம் தெரியவில்லையம்மா..... ஆனால் உன் கனவுகளுக்கும் உன் பூர்வ ஜென்மத்துக்கும் தொடர்பிருப்பதாகத் தோன்றுகிறது. இது வெறும் அனுமானம் மட்டும் தான். அந்தக் கனவில் வரும் பெண்ணுக்கு என்னாயிற்று? அவள் குழந்தை எங்கே? அவர்கள் ஏன் உன் கனவில் வருகிறார்கள்? உன் திருமணத்தைத் தடுக்க நினைப்பது ஏன்? இவ்வாறு ஏராளமான கேள்விகள் உள்ளன. அவற்றுக்கு நாம் விடை காண வேண்டும் அம்மா... சிறிது காலம் பொறுத்திரு. இந்தப் பிரச்சினையை என்னிடம் விட்டு விடம்மா. ஆனால் உன் திருமணம்..... அது இப்போது வேண்டாம். நிச்சயதார்த்தம் தானே முடிந்திருக்கிறது. மற்றையதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறி வழியனுப்பி வைத்தார்.
'எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டார்.... நிச்சயதார்த்தம் தானே முடிந்திருக்கிறது. கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி.... நிச்சயதார்த்தம் என்பது பாதிக் கல்யாணம்னு இவ்வளவு வருட அனுபவத்தில் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?'
நிச்சயதார்த்தத்தில் இருந்து இன்று வரை தன் கணவனாகவே நினைத்து வாழ்ந்த அகரனின் முகம் நினைவு வந்தது அவளுக்கு. அவனுடன் வாழ்வதற்கு எப்படியெல்லாம் கனவு கண்டாள்? அவனை இழப்பதாக நினைக்கவே உயிர் பிரிவதாகத் தோன்றியது ஆதிராவுக்கு.
"ஒன்றை நினைவில் கொள் ஆரா.... அவர் திருமணம் வேண்டாமென்று கூறவில்லை. இப்போது வேண்டாமென்று தான் கூறினார்" என வழியெங்கும் புலம்பிய படி வந்த ஆராவைத் தேற்றினாள் அபி.
"இல்ல அபி.... அவர் அகரைனத் திருமணம் செய்ய வேண்டாமென உறுதியாக இருக்கிற மாதிரித்தான் தோணுது. முதலில் அப்படித்தான் கூறினார்.... பின்பு தான், அதுவும் நான் சங்கடப்படக் கூடாதென்பதற்காக இப்போதைக்கு வேண்டாமென்றார்"
இவ்வாறு உரையாடிய படியே இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். அதன் பின்னரும் இதே நிலை நீடித்ததால் தான் இனியனுக்கு விபரம் சொல்லுமாறு அபி ஆலோசனை கூறியது.
ஆரா ஃபோனைக் கையில் எடுக்கவும் இனியனின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது. அண்ணா எனத் தொடங்கி நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள் ஆதிரா.... பொறுமையாக அனைத்தையும் கேட்டு அவளை ஆசுவாசப் படுத்தியவன் அடுத்த நொடி அபி வீட்டில் இருந்தான்.
"எனக்கும் இவ்வாறு சில கனவுகள் வருவதுண்டு ஆரா... ஆனால் அது இவ்வளவு பெரிய விவகாரம் என்று நினைக்கவில்லையே" என நெற்றியைத் தேய்த்தான் இனியன்.
"உங்களுக்கும் கனவா?" என அதிசயித்தாள் அபி.
'ஆமாம்' என தன் அனுபவத்தைக் கூறினான் இனியன்.
அந்த நேரத்தில் வீட்டு வாசலில் நிழலாடியது. யாரென அறிய விரைந்தாள் அபி. வாசலில் அவளுடைய ஒன்று விட்ட தமையன் மித்திரனும் அவனது நண்பனான அகரனும் நின்றிருந்தனர்.
"அண்ணா! அகரன் அண்ணா! ரெண்டு பேரும் உள்ள வாங்க.... ஆராவும் இங்க தான் இருக்கா.... " என இன்முகத்துடன் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள்.
மித்திரனைக் கண்டு புன்னகையில் விரிந்த ஆராவின் இதழ்கள்... அகரனைக் கண்டதும் வாடின. சாமியார் சொன்னது மட்டுமே அவள் எண்ணத்தில் விரிந்தது. தனக்கு என்னவானாலும் பரவாயில்லை என்றிருந்த ஆராவுக்கு அகரனுக்கு ஒன்றென்றால் தாங்கவே முடியாதென்பது நிதர்சனமாயிற்று. அவளுடைய மாற்றத்தை அகரனும் கவனிக்கத் தவறவில்லை. அவனைக் கண்டதும் தாயைக் கண்ட சேயாய் மாறும் தன்னவளின் முகம் சோகத்தையே பிரதிபலித்தது அவனுக்கு வலியைத் தந்தது. அருகே இருந்த இனியனின் முகமும் நிலைமை சரியில்லை என்பதைப் பறை சாற்றிற்று. மித்திரனுக்கும் அதைப் புரிந்து கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை.
மித்திரன் அபியின் ஒன்றுவிட்ட தமையன். அகரன் அவனுயிர்த் தோழன். மித்திரனும் அகரனும் அடிக்கடி அபி வீட்டுக்குச் செல்வதுண்டு. அபியின் தாயாருக்கு அபியைப் போலவே இருவரும் செல்லப்பிள்ளைகள். ஒரு தடவை இருவரும் அபி வீட்டுக்கு வரும்போது ஆதிராவும் அபியின் வீட்டிற்கு வந்திருந்தாள். அந்த ஒரு நாள் பழக்கம்.... இவர்களிடையே இணைபிரியாப் பந்தமாயிற்று. ஆதிராவின் அடக்க ஒடுக்கமான நடவடிக்கைகளும் [புது ஆக்களாச்சேனு அப்பிடிப் பழகிருக்கு.... பொடியும் நல்ல புள்ளனு நம்பிட்டு.... அம்புட்டும் வெசம்

], பண்பான பேச்சும், கூடவே கிராமத்து பெண் என்பதால் அதிகூடிய மரியாதையும் தோன்றி ஒரு நாள் பார்வையிலேயே காதலாக மாறியது. ஆராவுக்கு அகரனின் மென்மையான குணம், முக்கியமாக பெண்களுடன் நடந்து கொள்ளும் விதம் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் காதல் என்பதில்லை. அகரன் தான் முறைப்படி ஆரா வீடு சென்று அவளைப் பெண் கேட்டு நல்லதொரு நாளில் நிச்சயமும் செய்து கொண்டான்.
நிச்சயதார்த்தத்திற்கும் இன்றைக்கும் இடைப்பட்ட இந்த இரு மாதங்களில் அவர்களுடைய காதலும் வளர்ந்திருந்தது. அப்படி இருந்த இருவருக்குமிடையில் இந்த விரிசல் அகரனுக்கு வேதனை அளித்தது.
ஆதிரா, இனியன் இருவரையும் யோசனையோடு நோக்கியவன் நிதானமாகக் கேட்டான்.... "சொல்லுங்க... என்னாச்சு? எதுவுமில்லனு சமாளிக்க வேண்டாம்... ஆராவோட ஒவ்வொரு றியாக்ஷனுக்கும் எனக்கு அர்த்தம் தெரியும்"
அவன் கேட்ட விதத்தில் ஆதிரா உடைந்து அழ இனியன் தான் அவளை சமாதானப்படுத்தி நடந்ததெல்லாம் கூறினான். அதைக் கேட்ட அகரனின் முகமும் ஒரு நிமிடம் சோகத்திற்குள்ளாகியது. சட்டென சுதாகரித்துக் கொண்டு.... "பரவாயில்ல ஆரா, நம்மளால முடிஞ்ச அளவுக்கு முயற்சிப்போம். மிச்சத்துக்கு கடவுள் மேல பாரத்தைப் போட்டிட வேண்டிய தான். ஆனா நீ மட்டும் எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும் ஆதிமா.... உன்னோட சந்தோசம் எப்பவும் எனக்கு முக்கியம்." அவன் சொல்லச் சொல்லவே அவன் தலைக்கு மேலிருந்த சீலிங் ஃபான் கழன்று கீழே விழுந்தது.
'அகரன்ன்ன்ன்' எனக் கத்திய படி ஓடி வந்தாள் ஆதிரா. கொஞ்சமே கொஞ்சமென்றால் அகரன் தலையில் விழுந்திருக்க வேண்டியது. வேண்டுமென்றே தலையில் விழாதிருக்குமாறு தான் அறுக்கப் பட்டிருந்தது அதன் வயர். ஆதிராவுக்கு சாமியார் சொன்னது நினைவு வந்தது. "உயிர் பலி வாங்கிற அளவுக்கு அது கெட்டதில்லை. ஆனால் தனது தேவையை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லும்." இதுவும் அதன் எச்சரிக்கை தான் என்பது புரிந்தது ஆராவுக்கு. ஆனால் ஏன்? அது மட்டும் கேள்வியாகவே இருந்தது.
சூனியத்தை வெறித்துக் கத்தினாள் ஆதிரா. "யார் நீ? உனக்கு என்ன தான் வேணும்? இந்தக் கல்யாணம் வேணாம். அவ்ளோ தானே? என்னைக் கொன்னுடு. இந்தக் கல்யாணம் தன்னால நின்னிடும். மற்றவங்களக் கஷ்டப்படுத்தாத."
தங்களால் முடிந்தவரை அவளைச் சமாதானப்படுத்தினர் மற்றவர்கள். எல்லோர் மனதிலும் வேதனை மட்டுமே நிறைந்திருந்தது. அவளைப் பார்த்து இன்னுமிரு விழிகளும் கண்ணீர் சிந்தியது அங்கிருந்த யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.