• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்....

Sri Durga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 20, 2021
39
8
8
Jaffna, Sri Lanka
நேரம் நள்ளிரவைத் தொட்டுக் கொண்டிருந்தது. காவியன்பட்டு கிராமத்து பனங்காட்டுக்கு செல்லும் ஒற்றைப்பாதை நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. பகலிலேயே ஆளரவமற்று வெறிச்சோடிப் போய் ஒரு மயான பயத்தை ஏற்படுத்தும் அது, இரவு நேரத்தில் தன் பணியை இன்னும் கூட்டி இருந்தது. இடியும் மின்னலும் நீயா நானா எனப் போட்டி போட்டுக் கொண்டிருக்க..... திடீரெனத் தோன்றிய ஓர் மின்னல் ஔியில் ஒரு பெண் அந்த சாலை வழியே நடந்து செல்வது அப்பட்டமாகத் தெரிந்தது.

நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்த சேலையும், தளரப் பின்னி விடப்பட்டிருந்த கூந்தலும், அதில் கற்றையாகத் தொங்கி சுகந்த மணம் பரப்பிக் கொண்டிருந்த மல்லிகைச் சரமும், அவள் பாதங்களைத் தழுவிய தங்கக் கொலுசுகளும்..... அவள் நிச்சயம் ஒரு அழகி தான் என்பது முகத்தைப் பாராமலேயே சொல்லலாம் என்றன.
சிறிது தூரம் கடந்ததும் அவளைச் சற்று இடைவிட்டுத் தொடர்ந்தது அது. அதை அவளும் உணர்ந்திருக்க வேண்டும். தண்டுவடம் சிலிர்க்க மெல்லத் திரும்பிய அவளின் வதனம் இப்போது தோன்றிய மின்னல் ஔியில் தெளிவாகத் தெரிந்தது. அவள்... அவள்.... ஆதிரா ஆஆஆஆ எனக் கத்தியவாறே கட்டிலில் இருந்து கீழே விழுந்தான் இனியன்.

இது முதல் முறையல்ல. இந்த ஒரு மாத காலமாகவே அவனுக்கு இந்தக் கனவு வந்து கொண்டு தானிருக்கிறது. காரணம் புரியவில்லை. ஆதிரா அவனது ஒரே செல்லத் தங்கை. தகப்பனார் இறந்த பின் அம்மாவிற்கும் தங்கைக்கும் எல்லாமே அவன் தான். அதிலும் ஆதிராவிற்கு இன்னொரு தந்தையாகவே மாறிப்போனான். அப்படியிருக்க அவனுடைய தங்கையை ஒரு அமானுஷ்யம் தொடர்வது போன்ற கனவு உள்ளுக்குள் கிலியை ஏற்படுத்தி இருந்தது. முதலில் வெறும் கனவு தானே என்று ஒதுக்கி இருந்தவன் தொடர்ந்து இந்தக் கனவு வரவும் மிகவும் பயந்து போனான்.

பொதுவாகவே நமக்கு முக்கியமானவர்களுக்கு ஏதும் கூடாதது நடக்கப் போகிறதென்றால் நம்முடைய ஆழ் மனது சொல்லுமாம், அது சில சமயங்களில் கனவாகவும் வெளிப்படலாம். அப்படித்தான் தன் தங்கையையும் ஏதும் ஆபத்து எதிர் நோக்கி உள்ளதோ என உள்ளூரக் குழம்பிப் போனான். அந்த எண்ணத்திலேயே உழன்று கொண்டிருந்தவனை நித்திராதேவி ஆட்கொண்டாள்.

(என் கற்பனையில் உதித்த முதல் கதை இது. படித்துவிட்டுத் தமது கருத்துகளைக் கூறினால் மிகவும் உதவிகரமாக இருக்கும் ☺️🙏)