• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 21

"கண்டிப்பா போனுமா?" திக்ஷிதா வாசுவின் தாடையைப் பிடித்து கொஞ்சலாய் கேட்க,

"நீ எப்படி கேட்டாலும் போய் தான் ஆகணும் திக்ஷி!" என்றான் பலமுறை கேட்டவளை எண்ணி சிரித்து அவள் நெற்றி முட்டி.

"அப்ப எனக்கு போரடிக்குமே!" சட்டென திக்ஷிதா சொல்லிவிட,

"ஹப்பா! இதுக்காக தான் வெயிட்டிங்.. அத்தை, மாமா இங்க வாங்க.. திக்ஷிக்கு இங்க போரடிக்குதாம்.. நாங்க ஊருக்கு கிளம்புறோம்" சத்தமே இல்லாமல் சத்தமாய் சொல்வதாய் அவன் பாவனை செய்ய,

"ஷ்ஷ்!" என பதறியவள்,

"தெரியாம சொல்லிட்டேன் சாமி.. கிளம்புங்க!" என்றாள்.

திக்ஷிதா அன்னை வீட்டிற்கு இருவருமாய் முந்தைய நாள் மாலை வந்திருக்க, திக்ஷி முகத்தில் அத்தனை சந்தோசம்..

உமா கதிருக்கும் அதில் ஏக மகிழ்ச்சியாய் போக, அடுத்த நாள் வாசு கிளம்பும் நேரம் சட்டென வாடிவிட்டாள்.

"என் வீட்டுல நான் இருக்கவே இவ்வளவு பீல் பண்ண வேண்டியதிருக்கு" திக்ஷி புலம்ப,

"அப்ப வா! நெக்ஸ்ட் டைம் வந்து தங்கிக்கலாம்!" என்ற ஒற்றை சொல்லில் வாயை மூடிக் கொள்வாள்.

"ஜாலியா இரு! என்ஜோய் பண்ணு.. கூடவே கொஞ்சம் படி.. அப்புறம்.." என்று வாசு கூற வர,

"இந்த வருஷம் விட்டுட்டா அடுத்த வருஷம் நான் தான் கஷ்டப்படுவேன்.. அது தானே? படிக்குறேன்.. இப்பவே முடிக்குறேன்" போதுமா என்பாள்.

விடைபெறும் நேரம் இருவருமே தொண்டைக்குள் முள் சிக்கிய உணர்வில் நிற்க,

"கிளம்புறேன் திக்ஷி!" என்றவன் குரல் அவளை எட்டவே இல்லை.

மௌனமாய் தலையசைத்தவனுக்கு அவளுமே தலையசைத்து விடைகொடுத்தாள்.

பல நூறு முறைகள் இருவரும் மனமில்லாமல் சொல்லிக் கொண்டு கிளம்ப, வாசு கார் கண்ணாடியில் அவளைப் பார்த்தபடியே சென்றான்.

கார் கண்ணை விட்டு மறையும் வரை அவளுமே நின்றிருந்தாள்.

முதல் பிரிவு மனதிற்குள் ஒரு தாக்கத்தை இருவருக்குள்ளும் விதைத்திருக்க, கனத்த மனதுடன் தான் விடைபெற்றிருந்தனர்.

வாசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது தான் திக்ஷிதாவிற்காகவும் அவள் குடும்பத்திற்காகவும்.

அதனால் தான் காய்ச்சலின் போதும் இவ்வளவு தூரம் பயணம் செய்து முந்தைய நாளே வந்தது.

சென்று கொண்டிருக்கும் பொழுதே திரும்பி பக்கத்து இருக்கையைப் பார்க்க, திக்ஷிதா பார்த்து கண் சிமிட்டுவதை போன்ற பிரம்மையில் கைகளுக்குள் கார் சிறிதாய் இடறுவதை போல தெரியவுமே தலையை உலுக்கி பாதையில் கவனம் வைத்தான் வாசு.

வாசு கிளம்பிய அன்று உமா மகள் முக வாட்டத்தில் மகளையும் அவள் மனதினையும் அறிந்து சிரித்துக் கொண்டவர் அவளை தனியே விடவே இல்லை.

கதிரும் மகளுக்காக என அவளுக்கு பிடித்தவற்றை எல்லாம் வாங்கி வர, திக்ஷிதாவின் சுபவத்தால் அவள் பெற்றோருடன் இணைந்து மகிழ தான் செய்தாள்.

"ம்மா விடுங்க நான் சமைக்குறேன்!" என காலையில் ஆரம்பித்து வீட்டு வேலை அனைத்தையும் திக்ஷிதா தானே கேட்டு வாங்கி செய்பவள் அன்னையுடன் பேசியபடியும், மாலை வரும் தந்தையுடன் தேநீர் நேரத்தை போக்கியபடியுமாய் சென்றது அடுத்த நாள்.

அதிலும் தனியே நொடி நேரம் கிடைத்து விட்டாலும் வாசுவை தேடும் மனதை எண்ணி சிரிப்பவள் அவனுக்கு அழைத்து அழைத்து அலுத்து போனாள்.

"எங்க தான் டா போன?" என அலைபேசியைப் பார்த்து பேசிக் கொண்டும் அன்னையுடன் பேசியபடி அழைபேசி செய்தி வந்திருக்கிறதா என ஆராய்வதாயும் இருந்தாள்.

மாலை தந்தையுடன் பேசிவிட்டு அவர் செல்லவும் விஷ்வாவிற்கு அழைத்தாள்.

"என்ன சிஸ்டர்! இப்படி சொல்லாம கொள்ளாம ஊர்ல போய் இருந்துட்டிங்க? நான் ஐஷுவோட வேற எங்க போவேன்? உங்களை காரணம் காட்டி தான் நாங்க பொழைச்சுட்டு இருந்தோம்.. அது பொறுக்கலையா உங்களுக்கு?" என்றான் எடுத்ததும் விஷ்வா.

"விச்சு! ஏற்கனவே உனக்கு நான் திருப்பி குடுக்க பாக்கி இருக்கு.. என் வீடு என்ன உனக்கு பார்க்கா? நான் வந்ததும் அவளோட வீட்டுக்கு வா.. அப்ப இருக்கு உனக்கு" என்றவள்,

"ஆமா எங்க உங்களுக்கு பாஸ்ஸு?" என்றாள் கோபமாய்.

"உங்களை விட்டா எங்களுக்கு யார் இருக்கா? கல்யாணத்தை தள்ளி போட்ட உங்க புருஷர் பாவத்தை நீங்க தானே இந்த மாதிரி போக்கணும்?" அவள் கேள்விக்கு பதில் கூறாமல் விஷ்வா இப்படி கூற,

"அடிங்க.. டேய் என்ன பேச வைக்காத! அந்த ஆளை எங்கன்னு சொல்ல முடியுமா முடியாதா?" என்றாள்.

"என்ன பேட் வர்ட்ஸ் எல்லாம் வருது?" என்ற விஷ்வா,

"நீங்க மூட் சரி இல்லை நினைக்குறேன்.. அப்புறம் பேசலாம்.. நீங்க அந்த ஆள்னு சொன்ன என்னோட பாஸ் மீட்டிங்ல இருக்கார்.. ஏதாச்சும் இம்போர்ட்டண்ட்டா?" என்று கேட்க,

"ஆமான்னா என்ன செய்வியாம்?" என்பதில் திருதிருத்தான் அவன்.

"சிஸ்டர்! செம்ம காண்டுல இருக்கீங்கனு இப்ப தான் கண்டுபிடிச்சேன்.. ஆனாலும் நான் பாவம்.. ஏன்னா உள்ள இம்போர்ட்டண்ட் மீட்டிங் போய்ட்டு இருக்கு.. நான் போனேன்னா எதைக் கொண்டு அடிப்பாரோ!" என்று பாவமாய் அவன் கூற,

"பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிட்டு நிம்மதியா வேலையையும் பார்க்க ஆரம்பிச்சாச்சு.. நீ தான் டி லூசாகிட்ட!" விஷ்வா லைனில் இருக்கும் பொழுதே திக்ஷிதா பேசிக் கொள்ள,

"நான் இன்னும் இங்க தான் இருக்கேன் சிஸ்டர்!" என்றான் மெதுவாய் விஷ்வா.

"நீ இன்னும் வைக்கலையா?" என அவனிடமும் காய, அலைபேசி நின்றுவிட்ட சத்தம் திக்ஷிதாவிற்கு.

அன்னை தந்தையிடம் எதையும் அவள் காண்பித்து கொள்ளவில்லை. எப்படியும் அழைப்பான் என்ற எண்ணம் நேரம் ஆக ஆக கோபமாய் மாறிக் கொண்டு வந்தது.

இரவு சாப்பிட்டு முடித்து திக்ஷிதா அன்னை அருகே அமர்ந்திருக்க,

"சந்தோசமா இருக்கியா அம்மு?" என்றார் அன்னை.

"பார்த்தா தெரியலையா ம்மா?" என்றபடி அவர் மடியினில் தலை சாய, மென்மையாய் தலைகோதினார் மகளுக்கு.

"ஏன் தெரியாம? உன் வீட்டுக்காரர் முகத்துல தான் எதையும் தெரிஞ்சுக்க முடியல.. ஆனா உன்னை கேர் பன்றார்னு புரிஞ்சுக்க முடிஞ்சது.." அன்னை கூறவும் அவர் முகம் பார்த்து திக்ஷிதா புன்னகைக்க,

"உன்கிட்ட கூட சொல்லாம தான் பிளான் பண்ணி இருக்கார் இல்ல?" என்று கேட்க, ஆமாம் என்று தலையசைத்தாள்.

"எது யாருக்கு எப்ப கிடைக்கனும்னு எழுதி இருக்கோ அது அது அந்த நேரத்துக்கு வேண்டியவங்களுக்கு வந்து சேர்ந்திடும்.. எவ்வளவு உண்மை இல்ல?" என்று உமா கூற,

"இப்ப எதுக்கு ம்மா?" என்றாள்.

"உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் இப்படி சந்தோசமா இருக்கணும்னு தான் எனக்கும் உன் அப்பாக்கும் ஆசை அம்மு.. உன்னை பார்த்துட்டோம்.." என்றவர் பெருமூச்சு விட, அவர் கூற வருவது புரிந்தது மகளுக்கு.

"அப்பா இன்னும் அக்கா மேல கோபமா தான் இருக்காங்களா ம்மா?" திக்ஷிதா கேட்க,

"தெரியலை திக்ஷி! கேட்கவும் யோசனையா இருக்கு.. அதைவிட எனக்கு இப்ப பயமெல்லாம் எங்க அவ பேச்சு வந்து அது உன் வாழ்க்கைக்கு கஷ்டமாகிடுமோனு தான்" என்றதும் திக்ஷிதா எழுந்து அன்னையைப் பார்த்தாள்.

"நிஜமா தான் அம்மு! ஒ
உன் வீட்டுக்காரர் அதை எப்படி எடுத்துப்பார்னு தெரியலையே!" என்று கூற, அன்னை மனது மகளுக்கு புரிந்தது.

"ஆக மொத்தம் உங்களுக்கு அக்காவை தேடுது.. அதுக்கு தான் இவ்வளவு சுத்தி வளைக்குறிங்க.. இல்லை ம்மா?" என்று கிண்டலாய் கேட்டாள்.

"அப்படினு இல்லை திக்ஷி.. என்ன இருந்தாலும் பொண்ணுனு வரும் போது மனசு தானா தவிக்குது.. நேர்ல பார்த்ததும் கோபத்துல கண்ணாபின்னானு பேசி அனுப்பியாச்சு!.. இங்க தான் இப்படி தான் இருக்கானு தெரிஞ்சா போதும்.. நிம்மதியாவாச்சும் இருப்பேன் போல!"

"ம்மா! அதெல்லாம் அக்கா நல்லா தான் இருப்பா.. சும்மா கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதிங்க" என்ற திக்ஷிதா சகோதரி பற்றிய தன் கணவனின் எண்ணம் கேட்ட அன்னைக்கு பதில் கூறவே இல்லை. இப்போதைக்கு இது வேண்டாம் என்று மட்டும் நினைத்துக் கொண்டாள்.

புரிந்ததோ என்னவோ அதற்கு மேல் தோண்டி துருவவும் இல்லை அன்னை.

"சரி டா.. நீ போய் படுத்துக்கோ.. பால் வேணுமா?" என்று கேட்க, அதை மறுத்துவிட்டு அறைக்கு வந்தவள் கணவன் அழைத்தானா என பார்க்க இப்போதும் ஏமாற்றம் தான்.

"என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா டோய்னு மகிழ்ச்சியா இருக்கார் போலயே!" நினைத்தவபடி கட்டிலில் சாய்ந்தவள் ஒருகட்டத்தில் உறங்கியும் போயிருந்தாள்.

தொடரும்..
 
Top