• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 22

வேலைகள் அனைத்தையும் முடித்து பதினோரு மணி அளவில் வீடு திரும்பிய வாசு வாசற்கதவை திறக்கும் பொழுதே மொபைலை எடுத்து மனைவி எண்ணைப் பார்த்தவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

"பரவாயில்லை என்னையும் நீயாபகம் இருக்கு போல!" அவளின் அழைப்பு எண்ணிக்கையில் நினைத்து சிரித்தவன், மணியைப் பார்த்துவிட்டு அழைக்க, ஒரே அழைப்பில் எடுத்துவிட்டாள் திக்ஷிதா.

"ஹேய்! நீ இன்னும் தூங்கலையா திக்ஷி!" எடுத்ததும் வாசு அவள் முகம் பார்த்து கேட்க,

"ரொம்ப முக்கியம்!" என்றவள் அப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாய் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்று கொண்டிருக்க, அலைபேசி அழைப்பில் திடுதிப்பென விழித்து கையில் இருந்த மொபைலை அழுத்தியும் இருந்தாள்.

"பின்ன! நான் முக்கியம் இல்லையா?" என்றவன் புத்துணர்ச்சியில் திக்ஷிதா மனது ஓரளவு சமன்பட,

"அதெப்படி காலையில் இருந்து இவ்வளவு நேரமும் என்னை தடவே இல்லாம இப்ப மட்டும் அதுவும் இந்த நேரத்துல இவ்ளோ பிரிஸ்க்நெஸ் உங்க பேச்சுல?" என்றாள்.

"நான் தேடலைன்னு உனக்கு யார் சொன்னது? வந்ததும் டயர்டுல தூங்கிட்டேன்.. எழுந்ததுமே பக்கத்துல நீ இருக்குற நீயாபகத்துல.." என்றவன் கண்களை சுருக்கி புருவத்தை ஏற்றி என பாவனை செய்ய, அவன் பேச்சிலேயே புரிந்து கொண்டவளும் நொடியில் முகம் சிவந்தாள்.

அவன் மட்டுமே அறிவான் அவனின் அவள் மீதான தேடலை, நியாபகத்தை, காதலையும்.

காலை எழுந்தது முதல் அவன் ஒவ்வொரு அசைவிற்கும் மனைவியின் நியாபகங்கள் தான்.

வீட்டினுள் எங்கே சென்றாலும் அவள் வாசம் பின் தொடர்வதாய் இருக்க, அதன் தாக்கத்தில் இருந்து வெளிவரவும் விருப்பமில்லை.

"இப்படியே விட்டா ஊருக்கே கிளம்பி போய்டுவேன் போல!" என நினைக்க வைத்துவிட்டவளை எண்ணியபடியே கிளம்பிவிட்டு மொபைலை கையில் எடுத்தான் மனைவிக்கு அழைக்க.

"ம்ம்ஹும்ம்! வேண்டாம்!" நொடியில் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அலுவலகம் கிளம்பி வர, வழியில் மட்டும் அல்லாது அலுவலகத்திலும் ஒன்ற முடியாத நியாபக பிம்பங்களாய் தொடர்ந்து கொண்டிருந்தாள் திக்ஷிதா.

"என்ன பண்ணிட்டு இருக்க டா வாசு?" என புலம்பும் அளவுக்கு அவன் நிலை இருந்ததை அறிவார் யாரும் இல்லை.

காலையில் எதிர்பார்த்த மனைவியின் அழைப்பு பன்னிரண்டு மணி அளவில் வந்து சேர, பார்த்தும் சிரித்துமாய் அலைபேசியை நகர்த்தி வைத்துவிட்டான் விளையாட்டாய்.

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு அழைப்பு என வரவும் எடுக்கலாமா என நினைப்பவன் அவள் நியாபகத்தில் அவள் அழைப்பின் எதிர்பார்ப்பில் என அவன் உழன்று கொண்டிருக்க, மூன்று மணிக்கு ப்ரீத்தா வந்து நியாபகப்படுத்திய பின் தான் மீட்டிங் என்ற ஒன்றின் எண்ணமே வந்தது.

அலைபேசியைப் பார்க்க கூட முடியாத அளவிற்கு அவன் கவனம் அங்கே இருக்க கிடைத்த சிறிய இடைவேளையில் மட்டும் பேசிவிட்டு வைக்கும் அளவுக்கு கொஞ்சமாய் பேச முடியாதே என நினைத்து இன்னும் இன்னுமாய் தள்ளிக் கொண்டு வந்து நின்றது தான் இந்த இரவு பதினோரு மணி.

"அப்ப வேணும்னு தான் கூப்பிடவும் இல்ல.. நான் கூப்பிட்டும் எடுக்கலை இல்ல நீங்க?" திக்ஷிதா கேட்க,

"திக்ஷி! அம்மா அப்பான்னு உனக்கு அங்கே பேச மைண்ட் டைவர்ட் பண்ணணு எவ்ளோ ஈஸி? என்னை நினைச்சு பாரேன்.. தனியா இங்க வந்த அப்புறம் இந்த நாலஞ்சு வருஷத்துல அம்மா வேணா ஒரு ரெண்டு மூணு நாள் தங்கி இருப்பாங்க.. இப்ப இந்த வீட்டுல நீ நான்னு மட்டும் இருந்துட்டு.. ஹப்பா இன்னைக்கு எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?" என்றவன் பேச்சில் திக்ஷிதாவிற்கு தான் மூச்சு முட்டியது.

"தப்பு பண்ணிடேன்னோனு தோணுது.. உன்னை விட்டுட்டு வந்திருக்கவே கூடாது.." என்று கூற,

"பருத்தி மூட்ட குடோன்லயே இருந்துருக்கலாம் இல்ல?" என்றவள் சொல்லில் மெல்லிய புன்னகை சிந்தியவன்,

"ஹ்ம்ம்!" என்றான்.

"இப்ப மட்டும் நீங்க கால் பண்ணாம இருந்திருந்தால் நாளைக்கே நான் கிளம்பி இருப்பேன்!" என்றாள் அவ்வளவு பேச்சையும் கேட்ட பின்பு.

"அப்ப நான் இவ்வளவு பேசியும் நீ கிளம்பி வர்ற பிளான் இல்ல? அப்படி தானே?" என்ற கேள்வியில்,

"ம்ம்ஹ்ம்ம் இல்லவே இல்லை.. இந்த தேடல், காதல், முக்கியமா இந்த பீல்ஸ் இதெல்லாம் நல்லாருக்கு இல்ல? அதை கொஞ்சம் தேடிக்கலாம்னு தோணுது" என்ற திக்ஷியிடம்,

"சுத்தம்!" என்றான் சத்தமாய்.

"திக்ஷி! முடியலம்மா!" என்றவன் கெஞ்சல் கூட இன்னும் பிடித்தது.

"நானா உங்களை விட்டுட்டு போக சொன்னேன்?" என்ற ஒரே கேள்வியில்,

"அடிப்பாவி!" என்றான் வாசு.

"உனக்காக தான் பண்ணினேன்.. எனக்கே திரும்ப வருது.. தெரியும் தான்.. உன்னை தேடுவேன் மிஸ் பண்ணுவேன்னு நினச்சேன் தான்.. ஆனாலும் வாசு டா நீனு என்னை நானே சமாதானம் பண்ணி வந்துட்டேன்.. இப்ப தான் ரொம்ப அனுபவிக்குறேன்" என்றான் மாறிவிட்ட குரலில்.

"இதுக்கு தான் பிளான் பண்ணி பண்ணனும்ன்றது.. இப்ப யாருக்கு கஷ்டமாம்?" திக்ஷி வம்பு செய்ய,

"ஹேய்! பொய் சொல்லாத திக்ஷி!.. அங்க கஷ்டம் இல்லாம தான் இத்தனை மிஸ்ட் கால் ஆக்கும்?" என்றான்.

"ஆமா! நான் தான் சொன்னேனே எனக்கு இது புடிச்சிருக்குன்னு.. நான் இருந்துப்பேன்" வாய் கொள்ளா புன்னகையை மறைத்து கள்ளப்புன்னகையுடன் திக்ஷிதா கூற,

"வாசு பாவம் டி" என்றவன் முகத்தை அப்பொழுதே நேரில் பார்க்கும் ஆவல் பெண்ணிடம்.

"நீ ஜாலியா தான் இருக்குற இல்ல?" என்றவன் குரலில் இருந்தது என்ன?

"இருந்துக்கோ.. எவ்வளவு நாள் வேணும்னாலும் இருந்துக்கோ.. ஆனா அதுக்கும் சேர்த்து தான் அனுபவிக்க போற!" வாசுவின் பேச்சுக்கள் அதிகரிக்க,

"ம்ம்ஹும்ம்! இதுக்கு மேல பேசினா ஆபத்து திக்ஷி.. நீயே போனும்னு உளறிடுவ.." என நினைத்தவள்,

"கிரேட் வாசு சார்! ப்ளீஸ் மெயிண்டைன் தி டெரர் மூஞ்சி!.. நேரமாச்சு.. தூங்குங்க.." என்று கூற,

"தூக்கம் வந்தா நான் ஏன் உனக்கு இந்நேரத்துல கால் பண்ணி உளறிட்டு இருக்க போறேன்.. சரி நான் வேணா நாளைக்கு கிளம்பி வரவா?" சட்டென்று வாசு கேட்டுவிட, கேட்டது வாசு என்பதை தான் நம்ப தத்தளித்து போனாள் உணர்ச்சிகளின் பிடியில் திக்ஷி.

"ஆனா முடியாது.. நாளைக்கு டீலர்ஷிப் இருக்கு" கவலையாய் கூறியவனை பார்த்து சிரிப்பு தான் வந்தது.

"ப்ச்! நீ கட் பண்ணு.." திக்ஷிதாவை பேச விடாமல் வாசுவே பேசிக் கொண்டிருக்க,

"நீங்களே கட் பண்ணுங்க!" என்றாள்.

"திக்ஷி!" என்றவன் தலையைப் பிடித்தபடி சாய்ந்தமர,

"ரிலாக்ஸ் தேவ் பாய்! இப்ப என்ன? இதோ நீங்க, நான், நமக்கான நேரம்.. இதையும் தான் தெரிஞ்சிக்குவோமே!.." வாசுவிற்கு கூறுவதாய் தனக்குமாய் திக்ஷிதா கூறிக் கொண்டாள்.

வாசுவின் அமைதி கூட பெண் அவளுக்கு விளங்கும் இந்த மாயம் தான் புரியவில்லை. ஆனால் இனித்தது. இந்த தேடலுடன் ஆன தவிப்புகள்..

நீண்டப் பேச்சுக்கள் முடிவுக்கு வரும் நேரம் திக்ஷிதா இந்த இனிய நினைவுகளை நெஞ்சில் தேக்கி உறங்கி இருக்க, தொடுதிரையில் தெரிந்த அவளின் முகத்தை பார்த்தபடி தனதறையில் படுத்திருந்தான் வாசு.

உடனிருந்து சண்டையிட்டு சமாதானம் செய்து என அனுபவித்த பொழுதுகளுக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல பிரிவு உணர்த்தும் உணர்வுகளும் வலிகளும்.

ஆக மொத்தம் பேசுபவன் பேச்சில் மட்டுமே கெட்டிக்காரனாய் இருக்க, திக்ஷி அடுத்த இரண்டாம் நாள் காலை கிளம்பி மாலை அவன் இடம் வந்து சேர்ந்திருந்தாள்.

தொடரும்..
 
Top