நதி - 22
“உன் அப்பன், ச்சு அவனை அப்படி சொல்லக்கூட பிடிக்கல,” என கோபமும் சலிப்புமாக சொன்னவன், “அவனைப்பத்தி தெரிஞ்சதும் எனக்குள்ள பயங்கர கோபம், அவனை கொன்னுடனும் போல ஒரு வெறி, அந்த கோபத்தோட தான் அவனை தேடி போனேன்.”
“‘அவனை கொன்னுட்டா வீட்டுல எல்லோருக்கும் மதியைப்பத்தி தெரியும், அவனோட பொண்ணு நீதான்னும் தெரியும். அதுக்கு பிறகு நீ? உன்னை என்ன செய்ய.? எனக்கு நீ வேணுமா வேண்டாமா? கதிரவனைப்பத்தின உண்மை எல்லாம் வீட்டுக்கு தெரிஞ்சா உன்னை என்ன சொல்வாங்க’ இப்படி ஏகப்பட்ட குழப்பம். என்ன செய்யலாம்னு நிறைய யோசிச்சேன்.”
“நீ வேண்டாம் வேண்டாம்னு நான் யோசிக்கும்போது தான், நீயில்லாம என் வாழ்க்கை கிடையாதுன்னு என் மூளைக்கும் மனசுக்கும் புரிஞ்சது.”
“உன்னையும் விடமுடியாது, அதே நேரம் உன் அப்பனையும் சும்மா விடமுடியாது.”
“அவனை எப்படி தூக்குறதுன்னு நான் யோசிக்கும் போதுதான், அவனே வந்து எங்கிட்ட வசமா சிக்கினான்.”
“மதியைப்பத்தி என்கிட்ட சொன்னதும் அவன்தான், அதைவைச்சு மிரட்டி எங்கிட்ட பணம் பறிக்க நினைச்சான்.” என்று பல்லைக் கடித்தவன்,
“உனக்கு ஒன்னு சொல்லனும், இதை நீ நம்புவியா என்னனு எனக்குத் தெரியல, நம்பலன்னாலும் எனக்கு வருத்தம் இருக்காது. உனக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கனும். அதுக்காக மட்டும்தான் சொல்றேன்.”
“அன்னைக்கு லாட்டரி சீட் தானா தொலையல. உன் அப்பன்தான் அதை என் கார்ல வச்சிருக்கான். தானா விழுந்துருந்தா கண்டிப்பா ஃபர்ஸ்ட் டைம் தேடும்போதே கிடைச்சிருக்கும். இது அவனா வச்சது, அதுதான் தேடத்தேட கிடைச்சிருக்கு. உன்னை எங்கிட்ட அனுப்பி, என்னையும் என் பலவீனத்தையும் சோதனை செஞ்சிருக்கான், ப்ளடி..” என அந்த அறையே அதிரும் அளவிற்கு கத்த,
மயக்கத்தில் இருந்த அபியின் உடல்கூட பயத்தில் ஒருமுறைத் தூக்கிப்போட்டது. ஆனால் அதை உணரும் நிலையில் கார்த்தி இல்லை.
“அவனோட லாட்டரி ப்ளான் வேலைக்கு ஆகலன்னதும், மதியை வச்சு எங்கிட்ட வந்தான். அவன் கேட்ட பணத்தை தரலன்னா எடுத்து வச்சிருக்குற வீடியோ எல்லாத்தையும் பாஸ் பண்ணிடுவேன்னு சொன்னான். அவன் சொல்றது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியாம கதிரவனை ஒன்னும் செய்யக்கூடாதுனு முடிவு பண்ணேன்.”
“அந்த லாட்டரி சீட்ல ஒரு கோடி பரிசு விழுந்துருக்கு, அந்த சீட் எங்கிட்டத்தான் இருக்குன்னு சொன்னேன். உடனே என் கால்ல விழுந்துட்டான்.”
“அவன் கைல இருந்த எல்லா வீடியோவையும் மொத்தமா எங்கிட்ட கொடுத்துட்டு லாட்டரி சீட்டை கேட்டான். என் கடைல பத்து நாள் வேலை செய்யனும்னு கண்டிசன் போட்டேன். முதல்ல யோசிச்சான். பணம் அவன் கண்ணை மறைச்சது. உடனே சரின்னு வந்து நின்னான்.”
“எல்லாம் என்னோட ப்ளான்லதான் நடந்தது. ஓவ்வொரு நிமிசமும் அவனை என் ஆள் வாட்ச் பண்ணிட்டுத்தான் இருந்தான். பத்தாவது நாள் நைட் கடை பணத்தையும், லாட்டரி சீட்டையும் கொடுத்து அனுப்பிட்டு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.”
“அப்படி கொடுத்து அனுப்ப நான் என்ன முட்டாளா.? யோசிக்கமாட்டானா? ஆனாலும் அவனை பாராட்டத்தான் வேனும். எங்க கேப் கிடைச்சாலும் சிக்ஸ் அடிச்சி ஸ்கோர் பன்றான்.” ஹாஹா என நக்கலாக சிரித்துவிட்டு,
“அந்த பணத்தை அடிக்க ஆள் செட் பண்ணி, லாட்டரி சீட்டோட, பணத்தையும் சுருட்டிட்டு தப்பிக்கலாம்னு நினைச்சிருக்கான். ஆனா அதுக்கு முன்னாடியே நான் செட் பண்ண ஆளுங்க பணத்தை எடுத்துட்டாங்க. இதுல என்ன காமெடி தெரியுமா.?”
“அவன் செட் பண்ண அதே ஆளுங்களதான் நானும் செட் பண்ணேண். என்ன பணம் கொஞ்சம் செலவாச்சு. அவன் ஆளுங்கதான் பணத்தை அடிச்சிட்டு, இவனை ஏமாத்திட்டு போயிட்டாங்கன்னு இன்னும் நினைச்சிட்டு இருக்கான். அவங்க பணத்தையும் எடுத்துட்டு இவனையும் அடிச்சிப்போட்டுட்டு ஏமாத்திட்டு போயிட்டதா நினைக்கிறான்.”
“பணத்துக்கு பணமும் போய், அந்த லாட்டரி சீட்டும் போய், இப்போ கைல இருந்த அந்த வீடியோவும் போய் ஒன்னுமே இல்லாம நிக்கும்போது போலிஸ் வந்து அரெஸ்ட் பண்ணா எப்படி இருக்கும்.”
“அப்படி ஒரு சூழலை உருவாக்கி அவனை ஒன்னும் இல்லாம ஆக்கி, எங்கிட்ட வந்து நிற்க வச்சேன்.” என்றவன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. இதுவரை தொடர்ந்து பேச முடிந்தவனால் அடுத்து பேச முடியவில்லை.
உண்மையில் அவர்களது குடும்பத்திற்கோ, அவனுக்கோ கதிரவன் எல்லாம் எதிரில் கூட நிற்க முடியாது.
அவனது கோபமே ஒரு சாமானியன், எந்த ஒரு பின்புலமும் இல்லாதவன் தன்னை இந்தளவிற்கு யோசிக்க வைத்துவிட்டானே என்பதும், அனைத்து திருட்டு வேலைகலையும் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் இருப்பதும்தான்..
எத்தனை புத்திசாலியாக இருந்தாலும் ஏதொரு இடத்தில் சருக்கல் வரத்தான் செய்யும். கார்த்தியின் விசயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.
ஒரு பெருமூச்சுவிட்டு அபியைப் பார்த்தான். விழிகளின் ஓரம் நீர் கசிந்து காதோரம் வழிந்திருந்தது.
அவள் அருகில் அமர்ந்தவன், அவள் விழிநீரைத் துடைத்துவிட்டு, முகத்தையே விழியெடுக்காமல் ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“உன்னை எங்கேயும் எப்போதும் யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியல அம்மு, நீ.. நீ வேணும் அம்மு.. நீ இல்லாம நான்… நான் எப்படி சொல்ல, நான் இல்லடி. வந்துடு அபி. நீ வந்து என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன். என்னை அடிச்சி கொடுமை படுத்தவாவது வந்துடுடி..” என குரல் கரகரக்க அவள் செவியருகே தலைசாய்த்து புலம்ப, இப்போது அபியின் மூடிய விழிகளில் இருந்து சரமாய் நீர் பெருக்கெடுத்தது.
அதை பார்த்தவன் “ஒன்னுமில்ல ஒன்னுமில்ல.. நான் ஒன்னும் சொல்லல.. நீ அழாதடி.. ப்ளீஸ்..” என அவளை சாமாதானம் செய்தவன், தன் முகத்தையும் அவள் முகத்தையும் அழுந்த துடைத்தான்.
இதுவரை அவன் செய்த செயலில் நியாயம் இருந்தது. தடையில்லாமல் கூறினான். ஆனால் இனி அப்படியில்லையே!
அன்று கதிரவனை மருத்துவமனையில் சந்தித்த நாளுக்கு சென்றான்.
“அட நம்ம கதிரவன் சார்தானே. சாருக்கு என்னாச்சு? எப்படி இருக்கீங்க?” என்ற கார்த்தியின் கிண்டல் குரலில் தான் விழித்தார் கதிரவன்.
தன் இருபக்கமும் காவலர்கள் நிற்க, ஒரு கையில் சலைன் ஏறிக்கொண்டிருக்க, தலையிலும், காலிலும் காயங்களுக்கு கட்டுப்போடப்பட்டிருக்க, உடலை அசைக்க முடியாமல் மலங்க மலங்க விழித்தபடி கார்த்தியை பார்த்தார் கதிரவன்.
‘தப்பித்துகூட ஓட முடியாதே’ என மனதுக்குள் அரண்டு போயிருந்தார்.
“என்ன கதிரவன், வழக்கமான ‘நான் எங்க இருக்கேன், இங்க எப்படி வந்தேன், நீங்க எல்லாம் யாருன்னு?’ சொல்ற டைலாக் எல்லாம் கேட்பீங்கந்னு பார்த்தா மலங்க மலங்க முழிக்கிறீங்க..” என கிண்டலாக கேட்டபடி அவருக்கு எதிரில் நிற்க,
‘அய்யோ இதை எப்படி மறந்தேன், ஞாபகம் வந்திருந்தா அப்படியே சமாளிச்சு தப்பிச்சிருக்கலாம். இப்போ எப்படி இவன்கிட்ட இருந்து தப்பிக்க. பணத்தை எடுத்தவனுங்க என்னை இப்படி ஏமாத்திட்டு போயிட்டானுங்களே’ என மனதுக்குள் புலம்பியபடியே பரிதாபமாக கார்த்தியை பார்த்தார்.
“என்ன கதிரவன் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன், அதை யூஸ் பண்ணி தப்பிச்சிருக்கலாம்ல, இப்போ பாரு என் பணத்தை அடிச்சி எங்கிட்டயே மாட்டிக்கிட்ட” என நக்கல் எதுவுமின்றி இறுகிய குரலில் கேட்க,
“நான் நான் எதுவும் பண்ணல தம்பி? அது எப்படி நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது? என தன் நடிப்புத் திறமையை ஆரம்பிக்க,
“அடிங்க்..” என கெட்ட வார்த்தையில் திட்டியபடி வேகமாக அருகில் வந்தவன், “இன்னும் உன்னை நம்புறதுக்கு நான் என்ன முட்டாளாடா? நான் சொன்னா உனக்கு புரியாது, உனக்கு பின்னாடி ரெண்டு பேர் நிக்கிறாங்க பார் அவங்க சொன்னா புரியும்னு நினைக்கிறேன்.” என பின்னாடி இருந்தவர்களைப் பார்க்க, கதிரவனுக்கு உடலே நடுங்கிவிட்டது.
“தம்பி.. தம்பி என்னை விட்டுடுங்க.. நான் நான்தான் தெரியாம? என்னை மன்னிச்சிடுங்க தம்பி?” என கதறி அழ, அவனுக்கு பின்னே இருந்த காவலர்களுக்கு கண் காட்டி வெளியே அனுப்பிய கார்த்தி “உன்னை எப்படி சும்மா விடமுடியும். நீ எனக்கும் என் குடும்பத்தும் எவ்வளவு பெரிய துரோகத்தை செய்திருக்கன்னு உனக்கு தெரிய வேண்டாமா?” என்றதும், கதிரவனின் விழிகள் பயத்தில் தெறித்து விழுவது போல் விரிந்து போனது.
“ஓக்கே இப்போ நாம ஒரு பிசினஸ் பேசலாமா.?” எனக் கேட்டபடியே அவனுக்கு அருகில் இருந்த ஸ்டூலில் அமர,
பிசினஸ் என்றதும் கதிரவனின் விழிகளில் ஒரு ஒளி படர்ந்தது. அதைக் கவனித்த கார்த்திக்கு கோபம் சுள்ளென ஏற, ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த கையில் பட்டென்று அந்த ஊசியின் மேலே அடித்துவிட்டான்.
“அய்யோ அம்மா..” என கதிரவன் அலற,
“அச்சோ என்னாச்சு கதிர், சாரி சாரி நான் கவனிக்கல..” என அந்த வார்த்தைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாமல் சிரித்துக்கொண்டே கூற, கதிரவனுக்கு பயம் முகமெல்லாம் வியாபித்தது.
“ஓக்கே ஓக்கே கூல்.. இப்போ நாம பிசினஸ் பேசுவோம். நீ எனக்கு ஹெல்ப் பண்ணா, இந்த பிரச்சினையிலிருந்து உன்னை சேஃப் ஜோனுக்கு கொண்டு போயிடுவேன்..” என்றதும்,
என்ன எதுவென்று ஒன்றையும் கேட்காமல், “கண்டிப்பா கண்டிப்பா செய்றேன் தம்பி, நீங்க என்ன சொன்னாலும், கேட்டாலும் பண்றேன். என்ன பண்ணனும் சொல்லுங்க தம்பி. எப்படியாவது இந்த கேஸ்ல இருந்து என்னை காப்பாத்தி விட்டுடுங்க. நான் இந்த ஊர்லயே இருக்கமாட்டேன்..” என அதிர்ச்சியிலு பயத்திலும் கார்த்தியின் கையைப் பிடித்துக்கொண்டு கதற,
“ச்சே ச்சே அவ்ளோ கொடுமை எல்லாம் பண்ணமாட்டேன். எனக்கு ஒன்னு மட்டும் கிளியர் பண்ணு. பணத்துக்காக நீ என்ன வேணும்னாலும் செய்வியா.? பணம்தான் உனக்கு முக்கியமா.?” என்று கைச்சட்டையை மடக்கி விட்டபடியே தீர்க்கமாக கேட்டான்.
கார்த்தி கேட்ட தோரனையும், குரலில் இருந்த இறுக்கமும் கடினமும் கதிரவனை “ஆமாம்” என தன்னாலே தலையாட்ட வைத்தது.
“ஓ..” என்றவன் “அப்போ என்கிட்ட இருந்து அடிச்ச பணத்துக்கு ஈடா நீ என்ன செய்யப்போற.?” என்றான் அமைதியாக.
குரல்தான் அமைதியாக வந்ததே தவிர, அவன் கேட்ட தொனியில் கதிரவனுக்கு பயத்தில் முகமே வெளுத்துவிட்டது.
“ம்ம் சொல்லு கதிரவா..” என மேலும் தோரனையாக கேட்க,
“அது அது நான்.. எங்கிட்ட இல்லையே தம்பி.. நான் எப்படி.? எனத் தினறியவர், கார்த்தியின் கூர்மையான பார்வையில் “என்ன செய்யனும் தம்பி..” என்றார் கதிரவன்.
“வெரி சிம்பிள்.. உன் பொண்ணை என்கிட்ட அனுப்பிடு போதும். பிசினஸ் ஓவர்..” என்றதும், கதிரவனுக்கு அதிர்ச்சியில் இதயமே நின்றுவிடும் போல் இருந்தது.
“என்ன என்ன சொல்றீங்க தம்பி. அது அதெல்லாம் முடியாது? என் பொண்ணு ஒத்துக்கமாட்டா? என் பையன் என்னை கொன்னுடுவான் தம்பி.” என பதபதைக்க,
“ஆஹான்.. ஆனால் அனுப்பலன்னா போலிஸ் உன்னை கொன்னுடும் பரவாயில்லையா.? நான் கண்ணை காட்டினா போதும் உன்னை அள்ளிட்டு போக வெளிய ரெடியா இருக்காங்க.” என்றதும் கதிரவன் அரண்டு பார்க்க,
“என்ன பணமோசடி கேஸ் மட்டும்தான் உன்மேல ஃபைலாகிருக்குன்னு நினைச்சிருக்கியா? ஹான் இல்லையே! அதுமட்டும் இல்லையே கதிரவா. ட்ரக் சப்ளையர். அண்ட் வுமன் சப்ளையர், வுமன் ஹராஸ்மென்ட்ன்னு கிட்டத்தட்ட எட்டு கேஸ் உன்மேல இருக்கு. இன்னும் போடலாம்தான். ஆனா அதுக்கெல்லாம் நீ செட்டாகனும்ல. அதான் விட்டு வச்சிருக்கேன். இப்போ நீ இதை செய்யலன்னா, போட்டுட வேண்டியதுதான்..” என நக்கலாக சிரிக்க,
“என்ன.. என்ன..?” என கதிரவன் பயத்தில் மிரண்டு எழ,
“அட உன்னை போட்டுடுவேன்னு நினைச்சியா? இல்ல. இப்போதைக்கு ஐடியா இல்ல. பட் எப்போ வேனும்னாலும் வரலாம்.” என்றவன், “இப்போ போட்டுடலாம்னு சொன்னது கேஸ்.. பொய் கேஸ்..” என இழுக்க…
“வேண்டாம்.. வேண்டாம் தம்பி.. நான் நான் என் பொண்ணுக்கிட்ட, பொண்ணை அனுப்பறேன்.. என்னை விட்டுடுங்க தம்பி.. என்னை எப்படியாவது காப்பாத்தி விட்டுடுங்க தம்பி.. நான் எங்கேயாவது போய் பொழச்சுக்கிறேன்..” என கதற,
‘என் பொண்ணை அனுப்பறேன்’ என்ற வார்த்தையில் கார்த்தியின் உடல் தானாக இறுகியது. இப்போதே அவனை உயிரோடு கொழுத்திவிடும் அளவிற்கு கோபம் கொழுந்து விட்டெரிந்தது.
கார்த்தி வாய்மொழியாக கூறியதி கேட்டுக் கொண்டிருந்த அபியின் உடல் வேக வேகமாக தூக்கிப்போட்டது. அதைப் பார்த்தவன், தான் சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு “டாக்டர்” என அந்த அறையே அதிரும் அளவிற்கு கத்தியபடி, அவளைத் தூக்கி தன்னோடு அனைத்திருந்தான்.