நதி - 58
“அம்மு…” என்ற கார்த்திக்கு பேச்சே வரவில்லை. அபியின் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் இருக்கும் என அவன் எதிர்பார்க்கவே இல்லையே.
“அம்மு.. அம்மு..” என மனைவி முகத்தை தாங்கி, அதை தவிப்புடன் பார்த்தான்.
“எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியல பாவா… எல்லாம் அந்த மேடம்தான் பாத்துக்கிட்டாங்க. என்னை அவங்க பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்டாங்க. நான் கூட அவங்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாதுன்னு, ‘என்னை ஏதாவது ஹோம்ல கூட விடுங்க மேடம், என்னை தேடி யாரும் வந்தால் அங்க வந்து பார்க்கட்டும்ன்னு’ சொன்னேன்.”
ஆனா மேடம், ‘அந்த பேச்சே வேண்டாம். உனக்கு எல்லாம் சரியாகும் வரை இங்கேயே இருந்தா போதும்னு’ சொல்லிட்டாங்க. முதல் மூணு மாசம் மசக்கைல கஷ்டப்பட்டேன். அதுக்கு பிறகு கொஞ்சம் பரவாயில்லாம இருந்துச்சு. அப்போ இருந்து என்னை அவங்க ஆபீஸ் கூப்பிட்டு போயிடுவாங்க. அவங்க கேஸ் எல்லாம் ஸ்டடி பண்ண சொல்லுவாங்க. என்கிட்ட அத பத்தி டிஸ்கஸ் பண்ணுவாங்க. அவங்க பிரண்ட்ஸ் பத்தி பேசுவாங்க.” என்றவளுக்கு காமேஸ்வரியை பற்றி பேசும்போதே உள்ளம் நிறைந்து தான் போயிருந்தது.
அதை உணர்ந்த கார்த்தி, அவளை மேலும் பேச வைக்கும் பொருட்டு, “அவங்க பேமிலி..? என கேள்வியாக நிறுத்த,
“மேடமோட ஹஸ்பண்ட் டெல்லி கோர்ட்ல அட்வகேட்டா இருக்கார். ரெண்டு பசங்க. ரெண்டு பேரும் கொடைக்கானல்ல, போர்டிங்ல படிக்கிறாங்க. சார் மாசம் ஒருமுறை வருவார். அவர் வரும்போது ரெண்டு பேரும் போய் பசங்களை பாத்துட்டு வருவாங்க..” என்றாள் மென்னகையோடு.
“அந்த சார் எப்படி உன்னை பத்தி கேட்கலையா.?” என்றான் கார்த்தி,
“எல்லாமே மேடம் தான் சொன்னாங்க. சார் என்கிட்ட அதிகமா பேசினது இல்ல. அதுக்கு நேரமும் இருந்ததில்லை. ஆனா அவர்தான் என்னை வேலைக்கு கண்டிப்பா போகணும்னு சொன்னார். எந்த காலத்திலும் பெண்கள் அவங்க படிச்ச படிப்பை வீணாக்க கூடாதுன்னு சொன்னார். அப்போ எனக்கு ஆறு மாசம் வீட்டில் ரொம்ப தனிமையா பீல் பண்ணேன்..”
“அதை மேடம் புரிஞ்சுகிட்டு என்னை டேலி கிளாஸ்ல சேர்த்து விட்டாங்க.. டைப்ரைட்டிங் போனேன்.. எல்லாமே மூணு மாசம் கோர்ஸ் தான். சிரமமா இருந்தால் வேண்டாம்ன்னு சொன்னார் சார். நான் தான் பாதியில விட வேண்டாம்ன்னு படித்தேன்.” என்றவள்,
“என்னோட அப்பாவும் இப்படித்தான் இருந்திருப்பாரோன்னு அப்ப எல்லாம் எனக்கு தோணிக்கிட்டே இருக்கும். ஆனா அது உண்மை இல்ல தானே..” என்றாள் வருத்தமாக.
“அம்மு ப்ளீஸ்… அதையெல்லாம் இனி பேசவே வேண்டாம்..” என மனைவியை சமாதானம் செய்தவன் “தம்பி பிறக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டியா.?” என பேச்சை மாற்றினான் கணவன்.
“ஆமாம் வலி வந்த பிறகு தான் ஹாஸ்பிடல் போனோம்.. வலி அதிகமாக, எனக்கு கொஞ்சம் கொஞ்சமா பழசு எல்லாம் ஞாபகம் வருது. நான் எப்படி இங்க? நீங்க எங்க? நம்ம வீட்டு ஆளுங்க எல்லாம் எங்கன்னு? ஒரே குழப்பம். யாரும் இல்லாமல் நான் மட்டும் எப்படி இங்க இருக்கேன்னு பயம். இதெல்லாம் சேர்ந்து மறுபடியும் பிட்ஸ் வந்திருச்சு.”
“தம்பி பிறக்கும் முன்னாடியே பிட்ஸ் வந்ததுனால டெலிவரி கிரிட்டிக்கல் ஆயிடுச்சு. பிட்ஸ் வந்ததுக்கு இன்ஜெக்ஷன் போட, வலியையும் மீறி நான் மயங்கிட்டேன். எல்லாரும் ரொம்பவே பயந்துட்டாங்க. குழந்தையும் உள்ளயே அதிகமா தண்ணி குடிச்சுருச்சு. சிசேரியன் பண்ணாத்தான் யாராவது ஒருத்தரையாச்சும் காப்பாத்த முடியும்னு சொன்னாங்களாம்..”
“மேடம் எனக்காக, என்னை நினைச்சு அவ்வளவு அழுதாங்க. சிசேரியன் பண்ணி தான் தம்பியை எடுத்தாங்க. அதுக்கு பிறகும் எனக்கு அடிக்கடி பிட்ஸ் வர ஆரம்பிச்சது. ஞாபகம் வந்தது மறுபடியும் மறந்து போயிடுச்சு. சின்ன வயசிலேயே இந்த நோயைப் பார்க்காமல் விட்டதுனால வந்த பிரச்சனை, கர்ப்பமாய் இருக்கும் போதும் அதுக்கான மாத்திரைகளை எடுக்காமல் விட்டதுன்னு நிறைய பிரச்சனைகளை சொல்லி, இனி தொடர்ந்து மாத்திரை எடுத்து ஆகணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க.”
“ஒரு மாசம் ஹாஸ்பிடல்ல தான் இருந்தேன். தம்பியை ஃபீட் பண்ண மட்டுமே என்கிட்ட கொடுப்பாங்க. எனக்கு பிட்ஸ் வந்ததுனால தம்பிக்கும், இது வந்துடுமோனு பயம். அதை டாக்டர்கிட்ட சொன்னப்போ, வாய்ப்பு இருக்கு அதற்கான மெடிசின்ஸ் எடுத்துக்கலாம். எல்லாமே மூணு வயசுக்கு பிறகுதான் பார்க்கணும்னு சொன்னாங்க. வீட்டுக்கு வந்தேன். மேடம் என்னை பார்த்துக்க ஆள் வச்சாங்க. ஹாஸ்பிடல், செக் அப்ன்னு ஒரு ஆறு மாசம் போயிடுச்சு.”
“நானும் தனியா தம்பியை பாத்துக்குற அளவுக்கு நார்மல் ஆனேன். இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய யோசனை. ஏன் யாருமே என்னை தேடி வரல்லன்னு, ஒருவேளை நான் தப்பான பொண்ணா? இந்த குழந்தையும் அப்படியா? இப்படி எனக்குள்ள நிறைய குழப்பம்.”
“மேடம் தான் ‘அதெல்லாம் கிடையாது. உன்ன பத்தி நான் தீவிரமா விசாரிக்க ஆரம்பிக்கல. நான் உன்னை முதல் டைம் கோவில்ல பார்க்கும் போதே நீ ரொம்ப வருத்தத்தில் இருந்த. அப்பவே உன்னை என்கூட கூட்டிட்டு போயிடலாம்னு தான் நினைச்சேன். ஆனா உன் கழுத்துல இருந்த புது தாலியை பார்த்து, அந்த எண்ணத்தை விட்டுட்டேன். உன்னை ரோட்ல பார்த்ததும் கொஞ்சம் பயம்.”
“கோவில்ல உன்னை எப்படி பார்த்தேனோ, அதைவிட இரண்டு மடங்கு உன் முகத்தில் வேதனை இருந்தது. நீ வீட்டை விட்டு வந்துட்டியோன்னு ஒரு கெஸ் எனக்கு. உன்னை பிடிச்சவங்க உனக்காக, உன்னை தேடுறவங்க இருந்தா, கண்டிப்பா உன்னை தேடி வருவாங்கன்னு நினைச்சேன். அதனாலதான் நான் வேற எந்த முயற்சியும் எடுக்கல. உனக்கு அவங்கள பத்தி தெரிஞ்சுக்க விருப்பம் இருந்தா சொல்லு, உடனே கண்டுபிடிக்கலாம்னு சொன்னாங்க..’ எனக்கும் இந்த குழப்பம் தீர்ந்த போதும் சரின்னு சொல்லிட்டேன்.”
“இரண்டு நாள் கழிச்சு, நானும் முரளியும் இருக்கிற போட்டோவை காட்டி, ‘இது உன்னோட அண்ணன் சிங்கப்பூர்ல இருக்கான், உன்னோட ஹஸ்பண்ட் இப்போ ஊர்ல இல்ல, அவங்க பேமிலி தேனியில் இருக்குன்னு சொன்னாங்க.’
“முரளியோட போட்டோவை பார்த்ததும், தலைவலி எடுக்க ஆரம்பிச்சது. வலி அதிகமாக எனக்கு மயக்கம் வந்துடுச்சு. மறுபடியும் ஹாஸ்பிடல் போய் செக் அப் செய்து பார்த்த பிறகு, எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் மெல்ல மெல்ல வர ஆரம்பிக்குதுனு டாக்டர் சொன்னார்.”
“உடனே போர்ஸ் பண்ணி வர வைக்க ட்ரை பண்ணாதீங்க, அது ரிஸ்க்! தானா வரட்டும்னு சொன்னார். எனக்கு முரளி, அம்மா, மனோ பத்தின ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பித்தது.”
“அப்படியே எல்லா நினைவும் வர மூணு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு. அதுக்குள்ள மேடம் உங்கள பத்தி எல்லாம் விசாரிச்சு வெச்சிருந்தாங்க. எனக்கு முழுசா நினைவு வரவும் சொல்லனும்னு வெயிட் பண்ணி இருப்பாங்க போல,”
“எனக்கு எல்லாம் நினைவும் வந்தது. கடைசியா மனோ பேசினது, அவ அம்மா பேசினது, நீங்க பேசினது எல்லாம் தான் மூளையில ஓடிட்டே இருந்தது.”
“நான் அங்க இருந்து வந்து ரெண்டு வருஷம் ஆயிடுச்சு, ஆனா என்னை யாரும் தேடின மாதிரி தெரியல. உங்களை பத்தி என்னால வேற எதையும் கெஸ் பண்ண முடியல. அப்போ என்னை வேண்டாம்னு தான் நீங்க விட்டுட்டீங்க போலனு நினைச்சுக்கிட்டேன். முரளிகிட்ட போனா போதும், வேற எதுவும் வேண்டாம்னு தோணுச்சு.”
“அதனால மேடம்கிட்ட இதை சொல்லவும், அவங்க உங்களை பத்தி எதையும் எங்கிட்ட சொல்லாம மறச்சிட்டாங்க. முரளிகிட்ட சார்தான் ரொம்ப பக்குவமா பேசினார். முரளியை இங்க வர வச்சு என்னையும் தம்பியையும் அவன் கூட அனுப்பி வச்சாங்க. எனக்கும் யார் முகத்தையும் பார்க்க பிடிக்கல. எல்லாரையும் விட்டு ரொம்ப தூரமா போனா போதும்னு மட்டும் தோணுச்சு.
“மேடம்தான் நீ பழைய அபிராமி இல்ல. இப்போ உனக்கு அனுபவம் இருக்கு. முதிர்ச்சி இருக்கு. எதையும் யோசிக்காமல், விசாரிக்காமல் முடிவெடுக்காத. பொறுமையா அலசி ஆராய்ந்து முடிவு எடுன்னு சொன்னாங்க.”
“ஏற்கனவே முரளிக்கும் மனோவுக்கும் என்னை வச்சுதான் பிரச்சனை போயிட்டு இருந்திருக்கும் போல. என்னை பார்த்ததும் ரொம்ப அழுதா மனோ. எனக்கு அவளை என் பழைய தோழியா பார்க்க முடியல. என் அண்ணியா பார்க்க ஆரம்பிச்சேன். நான் அங்கே போனதும் என்னை பற்றி யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு மனோக்கிட்ட முதலில் சொல்லி இருக்கான், அவளும் அடுத்து எதுவும் பேசல.
“ஆனா எனக்குத்தான் பயம் அதிகமாச்சு. என்னோட ஹெல்த் இஸ்ஸூ என் முன்னாடி பூதமா நின்னு பயமுறுத்துச்சு. நான் இல்லைன்னா என் பையனை யார் பார்த்துப்பாங்கன்னு, ஒரு பெரிய கேள்வி. எனக்கு அந்த கேள்விக்கு பதிலே தெரியல. உங்ககிட்ட தம்பியை பத்தி சொல்லாம விட்டது ஒரு தப்பு. உங்களுக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவீங்களோனு ஒரு பயம். அதோட…” என அதுவரை கோர்வையாக சொல்லிக்கொண்டே வந்தவள், பெரும் கலக்கத்துடன் நிமிர்ந்து கணவனை பார்க்க, உணர்ச்சி குவியலாய் மாறிப்போய் அமர்ந்திருந்தான் கார்த்தி.
“அன்னைக்கு பாட்டி மட்டும் அந்த சூப்பை குடிக்காம விட்டிருந்தால், இப்போ நம்ம தம்பி நம்மகிட்ட இல்ல..” என மகனை பார்வையால் வெறித்தபடி, உணர்வுகளற்ற குரலில் கூற, கார்த்தியின் உடலும் இரும்பாக இறுகிப்போனது.
“அத்தைக்கு நான் உங்க வாழ்க்கையில் இருந்து போகணும்னு தான் இவ்வளவும் பண்ணாங்க. கருவையே கலைக்க பார்த்தவங்க, குழந்தையை கொல்லக்கூட துனிவாங்களோன்னு ஒரு பயம் வந்துருச்சு. அந்த பயம் தான் என்னை உங்ககிட்ட வரவிடாம பண்ணுச்சு..” என குரல் அடைக்க கூற, பயத்தில் ஏறி இறங்கிய அவள் மார்பை நீவி விட்டவன் “இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்..” என்று கார்த்தி இறுகிய குரலில் கூற,
“ப்ளீஸ் பாவா.. இன்னைக்கே எல்லாம் முடிச்சிடலாம்.. எனக்கு இதெல்லாம் நெஞ்சுக்குள்ள வச்சு, அடைச்சு மூச்சு முட்டுது. இந்த அழுத்தமே என்னை ஏதாவது செஞ்சுடும் போல..” என இறைஞ்சும் குரலில் கூற, கணவன் என்ற மனிதன், அந்த குரலில் மரித்துப் போயிருந்தான்.
“மனோகிட்ட நான் அதிகம் பேசுறதை விட்டேன். அவளுக்கும் குழந்தை பிறந்தது. அவளுக்கு எல்லாம் நானேதான் பார்த்தேன். அவங்க அம்மா அங்க வந்தாங்க, நான் இருக்குறதை ஏன் சொல்லலன்னு, என்னை பார்த்து மறுபடியும் பிரச்சனை. முரளி மனோ கூட பேசறது நிறுத்த, எனக்கும் அங்க இருக்க முடியல. தினம் தினம் ஒரு பிரச்சனை. நானும் தம்பியும் தனியா போயிடலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அப்படி ஒரு நாள் நானும் முரளியும் வீட்டில இருக்கும்போது தான், தாத்தா வந்தார்.” என நிறுத்தி, கணவனை பார்க்க அவன் வெறித்த பார்வையில் மாற்றமே இல்லை.
“உங்களைப் பத்தியும் வீட்ட பத்தியும் சொன்னார். என் பேரனையும், அவன் சந்தோஷத்தையும் உன்னால தான் திருப்பிக் கொடுக்க முடியும். என் பேரனை எங்கிட்ட திருப்பிக் கொடுத்துடுமான்னு கேட்டார்.”
“முரளி ஒத்துக்கவே இல்ல. இனி அங்க போகவே கூடாதுன்னு சொன்னான். ஆனா எனக்கு உங்ககிட்ட வந்தே ஆகணும்னு ஒரு வெறி. எனக்கு பிறகு சபரியை நீங்கதான் பார்த்துக்கணும்னு, அவனை உங்ககிட்ட காட்டணும்னு பேராசை. அவனைப் பார்த்தா நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க. இப்படி நிறைய நிறைய ஆசையும் கனவும் சேரத்தான் நான் இங்க வந்தேன்.”
“எங்க வீட்டிலதான் இருக்கணும்னு முரளி ஸ்டிரிக்டா சொல்லிட்டான். எனக்கும் வேற வழி இல்ல, அப்புறம் தான் தாத்தா கடையில அக்கவுண்ட்ஸ் பார்க்க வர சொன்னார். நீங்க அங்க இருப்பீங்கன்னு ரொம்ப ஆசையா வந்தேன். தாத்தா தான் ஒரு வாரம் போகட்டும், அவனை கூப்பிட்டு வரேன். அதுக்குள்ள நீ வேலையை கத்துக்கோன்னு சொன்னார். நானும் நீங்க வர நாளுக்காக ரொம்ப ஆசையா காத்துட்டு இருந்தேன்..” என முடித்து அவன் முகத்தை பார்க்க, கார்த்தியின் விழிகள் கலங்கி சிவந்திருந்தது.