நதி - 59
அபிராமி பேசி முடித்த பிறகும் கூட கார்த்தி மிகவும் அமைதியாகவே இருந்தான்.
மனைவிக்கு கணவனுடைய உணர்வுகள் புரியாமல் இல்லை, அன்றைய அவன் பேச்சை தவிர்த்து, மற்றபடி அவனிடம் தவறு என்று எதையும் கூறிவிட முடியாதே!
அன்றைய பேச்சும் கூட கதிரவனை பற்றி வீட்டில் தெரிந்து விடும் என்பதால் தானே, இப்போது கணவனை எப்படி சமாதானம் செய்வது என்று அவளுக்கு புரியவில்லை.
அவன் பேசட்டும் என இவள் அமைதியாக இருக்க, அவனோ தலையை பின்னுக்கு சாய்ந்து கண்களை மூடி இருந்தான்.
அவன் முகத்தில் தெரிந்த அலைப்புறுதலே கணவனின் நிலையை சொல்ல, பெண்ணவளுக்குள் பெரும் குற்ற உணர்ச்சி.
“பாவா..” என தயக்கமாகவும், பயமாகவும் அழைக்க
“ம்ம்” என தன் தலையை உலுக்கி கொண்டவன் மனைவியின் முகத்தில் தெரிந்த பயத்தில், “ஒன்னுமில்ல! விடு.. இதெல்லாம் நமக்கு நடக்கணும்னு இருக்கு, நடந்திருக்கு..” என்றான் மிகவும் வருத்தமான குரலில்.
அந்தக் குரல் பெண்ணவளை தாக்க, “பாவா..” என்றாள் இப்போது விசும்பாலோடு.
“அதுதான் ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல, அப்புறம் ஏன் அழுதுட்டே இருக்க, தம்பி எழுந்துக்க போறான்..” என எந்த உணர்வும் காட்டாத குரலில் கூற, உடைந்து அழ ஆரம்பித்தாள் அபிராமி.
“நான்.. நான்தான் தப்பு.. உங்களை விட்டுப் போயிருக்கக்கூடாது. ஆனால் அப்போ எனக்கு வேறவழி தெரியல பாவா.. என்னை மீறி நடந்ததுக்கு நான் என்ன பண்ணட்டும். யாருமே என்னை வேற யோசிக்கவிடல..” என்றாள் கதறலாக.
மனைவியை அனைத்து இருந்தாலும், அவளை சமாதானம் செய்யவும் இல்லை, அவளுக்கு பதில் கொடுக்கவும் இல்லை, அவனின் இறுகிய உடலும் தளரவில்லை.
அதை உணர்ந்த அபிராமி “பாவா ப்ளீஸ்.. இப்படி இருக்காதீங்க, எனக்கு பயமாயிருக்கு. நான் செஞ்சது தப்பு தான். அதுக்குதான் இந்த மூன்று வருஷம் தண்டனை அனுபவிச்சிட்டு வந்திருக்கேன். இப்போ நீங்களும் எனக்கு தண்டனை கொடுத்துடாதீங்க, பாவா. ப்ளீஸ் பாவா..” என்றாள் கெஞ்சலாக.
“நீ எங்கேயும் தப்பு இல்ல.. எல்லா தப்பும் என்னோடது மட்டும்தான்..” என்றான் கார்த்தி அமைதியாக.
கணவனின் குரலில் விழுக்கென நிமிர்ந்தவள், அவனை புரியாமல் பார்க்க
அந்தப் பார்வையை உள்வாங்கியபடியே “ஆமாம் நீயோ, இல்ல நம்ம வீட்டாளுங்களோ, யாருமே தப்பு கிடையாது. நான்தான் தப்பு. நான் மட்டும்தான் தப்பு..” என்றவனின் குரல் மெல்ல மெல்ல உயர்ந்தது.
அதிர்ச்சியாக பார்த்த மனைவியை நேராக பார்த்தவன் “உன்னை பார்த்த நொடியில் இருந்து விரும்பினேன். அதை உன்கிட்ட சொல்லாம, உன்னை மிரட்டி கல்யாணம் செஞ்சேன். அதுக்கு பிறகாவது எல்லாமே வெளிப்படையா பேசி இருக்கணும், அதையும் செய்யல. என் மனசுல அந்த கதிரவன் முள்ளா உருத்திக்கிட்டே இருந்தான்.”
“எங்க ஆரம்பிச்சாலும் அவன்கிட்ட தான் வந்து முடியும். எனக்கு அவனைப் பத்தி உன்கிட்ட பேச விருப்பமே இல்ல. அவன் என்ன ஆனான்? என்ன செஞ்சீங்கன்னு? நீ என்கிட்ட கேட்டுரிவியோனு ஒரு பயம் இருந்தது.”
“அதனாலதான் இதை நான் பேசவே இல்ல. ஆனா நம்ம கல்யாணத்துக்கு அப்புறம், உன்கிட்ட நான் பழைய கார்த்தியா நடந்துக்கல. அதுவே என்னை உனக்கு புரிய வைத்திருக்கும் என்று நினைத்தேன். ஆனா அது தப்புன்னு நீ எனக்கு புரிய வச்சிட்ட..” என்றான் விரக்தியாக.
“பாவா..” என்றாள் அபிராமி பரிதாபமாக
“ஆமாம் நான்தான் நீ என்னை புரிஞ்சுகிட்டேன்னு தப்பா நினைச்சு, நான் ஒரு உலகத்துல நிம்மதியா இருந்துட்டேன். அது தப்புன்னு எனக்கு புரிய வச்சிட்ட..” என்றவன்,
“அன்னைக்கு நடந்த என்னோட பேச்சை நான் சரின்னு சொல்லவே மாட்டேன். தப்பு! ரொம்ப ரொம்ப தப்பு! நீ அந்த வீட்டுக்கு போறேன்னு சொல்லவும், வந்த கோபம். அங்க போனா கதிரவனை பற்றி, நம்ம வீட்டுல எல்லாருக்கும்ம் தெரியும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மனவோட அம்மா உன்னை நல்லா பாத்துக்க மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். அங்க போய் தனியா நீ ஏன் கஷ்டப்படணும்னுதான், நான் அப்படி பேசினேன்.”
“ஆனால் பேசின விதம் ரொம்பவே தப்புதான். மன்னிக்கவே முடியாத தப்புதான். அந்த தப்பை நான் அன்னைக்கே உணர்ந்துட்டேன். ஒரு வார்த்தை வாழவைக்கும், ஒரு வார்த்தை உயிரோடு கொல்ல வைக்கும்னு நான் நல்லா புரிஞ்சுகிட்டேன். எந்த ஒரு இக்கட்டான சூழலளையும் தப்பான வார்த்தைகளை பேசக்கூடாதுன்னு, எனக்கு ரொம்ப தாமதமா புரிஞ்சிருக்கு..” என்றான் வேதனையாக.
“என்னோட ஒரே தப்பால, நான் இழந்தது எவ்வளவுன்னு உனக்கு புரிஞ்சிருக்கும். நம்மளோட மூணு வருஷம் வாழ்க்கை. தம்பியோட என் இரண்டு வருஷ வாழ்க்கை. இதையெல்லாம் நான் என் வார்த்தைகளால் கெடுத்துக்கிட்டேன்..” என்றான் வேதனை ததும்ப.
அம்மா பேசுனதுக்காகவும், அவங்க நடந்துக்கிட்டதற்காகவும் கண்டிப்பா அவங்களுக்கு தண்டனை கிடைக்கணும்.”
“அந்த தண்டனை அவங்களை ஒவ்வொரு நிமிஷமும் வருந்த வைக்கணும். அதனாலதான் நான் வீட்டை விட்டு வந்தேன். இனி இந்த கார்த்தியோ, அவன் குடும்பமோ அவங்களுக்கு இல்ல..”
“என் குழந்தையை அழிக்க நினைச்ச அவங்களை, எப்பவும் என்னால மன்னிக்கவே முடியாது. அவங்களுக்கான நியாயங்கள் என்ன வேணும்னாலும் இருக்கட்டும், அதுக்காக என் குழந்தையை அழிப்பாங்களா? என் மனைவிக்கு மரண பயத்தை கொடுத்து, வீட்டை விட்டு ஓட வச்ச, அவங்களை சும்மா விட்டு வச்சிருக்க, இந்த கையாலாகாததனத்தை நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்கு.”
“இந்த உயிர் ஏன் இன்னும் இருக்குன்னு என் மனசாட்சி என்னை கேவலமா காரித் துப்புது. நீ எல்லாம் எதுக்கு மீசைய முறுக்கிட்டு ஆம்பளன்னு வெளியே சொல்லிக்கிறேன்னு என் மனசாட்சி என்னை அவமானப்படுத்துது..” என்றான் உச்சகட்ட கோபத்தில்.
“பாவா… ஏன் இப்படி? ப்ளீஸ் அமைதியா இருங்க.. தம்பி எழுந்துப்பான்.. இங்க பாருங்க… நீங்க சொன்ன மாதிரி இதெல்லாம் நம்ம வாழ்க்கையில நடக்கணும்னு இருக்கு. நடந்துடுச்சு. நானும் அவசரப்பட்டு ஒரு முடிவு எடுத்திருக்கக் கூடாது.. அதனால தான் இவ்வளவு கஷ்டமும்.. என்னை மன்னிச்சிடுங்க பாவா ப்ளீஸ்… இப்படி உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்காதீங்க.. என் தப்பை நீங்க நியாயப்படுத்தாதீங்க..” என அவனை அணைத்துக் கொண்டு அழுதவளை, தானும் அணைத்துக் கொண்டான் கார்த்தி.
தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தவளைப் பார்த்தவனுக்கு இப்போது அவளை தேற்றியே ஆகவேண்டும். அவனை சற்று நேரம் தள்ளி வைத்தான். அவன் உணர்வுகளையும், கோபத்தையும் தள்ளி வைத்தான். மனைவியை அணைத்து, வருடி, உச்சி முத்தமிட்டு கொண்டே இருந்தான், தொடர்ந்து சில நிமிடங்கள்.
அவள் தன்னிலைக்கு வந்து விட்டாள் என்ற பிறகே அவளை விட்டு எழுந்து, குடிக்க தண்ணீர் கொடுத்தான்.
குடித்தவள் அவனுக்கும் கொடுக்க, அவனும் குடித்து ரெஸ்ட் ரூம் சென்று வந்தான்.
“உனக்கும் போகணுமா..?” எனவும் “இல்ல ஆனா முகம் கழுவினா பரவாயில்லாம இருக்கும்..” என்றாள் முகத்தை துடைத்தபடி,
“இரு..” என்றவன் டவளை தண்ணீரில் நனைத்து வந்து, அவள் முகத்தை துடைத்து, “சாப்பிடுறியா, பசிக்குதா.?” என மனைவியின் காதோரம் முடியை ஒதுக்கி கேட்க,
அழுததில் முகமெல்லாம் சிவந்து, மிகவும் சோர்ந்து போய் இருந்தாள் அபிராமி.
“எனக்கு சாப்பிட முடியல, வேண்டாம்..” என்றாள் பாவமாக..
தனக்காக கூறுகிறாள், என புரிந்தவன் “சாப்பிடலாம்..” என அவளை விட்டு நகர
“இல்லை… இல்லை.. இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருங்க..” என அவன் வயிற்றில் முகத்தை புதைத்து இடுப்பை சுற்றி கட்டி கொண்டாள்.
கார்த்தி அவளை அப்படியே அனைத்து தட்டிக் கொடுத்து, “காமேஸ்வரி மேடம் கொடுத்த தைரியம் எல்லாம் எங்க போச்சு, இன்னும் இப்படி சின்ன புள்ள மாதிரி அழுதுட்டே இருக்க..” என்றான்.
“அதெல்லாம் அப்படியேதான் இருக்கு, ஆனா உங்ககிட்ட நான் இப்படித்தான்..” என்றாள் வயிற்றில் உதடசைத்து.
மனைவியின் உதடசைவு அவனுக்குள் குறுகுறுப்பை ஏற்படுத்த, “ம்ச் சல்லியம் பண்ணாம இருடி..” என்ற நேரம், மகன் அசைந்து மறுபக்கம் திரும்பி படுக்க, அதில் இருவரும் ஒரே போல மகனை திரும்பிப் பார்த்தனர்.
அப்போதுதான் கார்த்தி மகனைபபற்றி, தன்னிடம் எதையும் கேட்கவில்லை என பெண்ணவளுக்கு புரிந்தது.
அதில் அபிராமிக்கு தன்னால் முகத்தில் ஒரு பயம் வந்து விட, “பாவா.. அது தம்பி… தம்பியைப்பத்தி நீங்க ஒண்ணுமே கேட்கல..” என பதட்டமாக கேட்க, சட்டென ஒரு பெருமூச்சு வந்தது கார்த்தி இடம்
“பாவா..” என்றாள் மீண்டும்,
“உன்னை மறுபடியும் ஆபீஸ்ல பார்த்தபோது எனக்கு அப்படி ஒரு கோபம், நான் உனக்காக பைத்தியம் மாதிரி, காடு மேடுன்னு சுத்தி, உன்னை தேடி அலைய, எதுவுமே நடக்காத மாதிரி நீ அமைதியா வந்து என் முன்னாடி நிக்கிற. அந்த நேரம் உன்னை கொன்னுட்டா கூட என்னன்னு தான் தோணுச்சு.. ஏன்னா என்னோட வலியும், தவிப்பும், பயமும் அப்படிப்பட்டது.
“நீ போய் திரும்பி வந்த இந்த இரண்டரை வருஷத்துல, நான் நாயை விட கேவலமா, உன்னை தேடி தெருவுல சுத்தி இருக்கேன். அவளுக்கு ஒன்னும் தெரியாதே, எங்க போனாளோ? எப்படி கஷ்டப்படுறாளோ? அந்த கதிரவனோட எதிரிங்க கைல சிக்கிட்டாளோ..? இல்ல தப்பான எந்த முடிவும் எடுத்துட்டாளோன்னு பயந்து, பயந்து தேடி அலைஞ்சிருக்கேன்.”
“ஒரு கட்டத்துல அம்மா பேசினது தெரிஞ்ச பிறகு, நீ என்கிட்ட வரலனாலும் எங்கேயோ ஒரு மூலையில, நிம்மதியா இருந்தா போதும்னு தான் வேண்டிகிட்டேன். கட்டின பொண்டாட்டியை பாத்துக்க துப்பு இல்லன்னு, எனக்கு நானே சொல்லி, குடிச்சு குடிச்சு எனக்கு நானே தண்டனை கொடுத்துட்டேன்.”
“என் மனசு முழுக்க உன்னை பத்தின நினைவுகளும், யோசனைகளும் மட்டும்தான். இதுல நான் தம்பியை பத்தி எங்க யோசிக்க, யோசிக்கவே இல்ல என்றவனுக்கு, அதுவரை உடலில் இருந்த இறுக்கம் மெல்ல மெல்ல குறைந்து மொத்தமாக தளர்ந்தது.
“கவி அண்ணி குழந்தைக்காக கஷ்டப்படுறதை பார்த்ததினால், எனக்கு குழந்தை பத்தின எண்ணமே இல்லை. நமக்கும் அவங்களை மாதிரி லேட்டா கூட ஆகலாம் என்றுதான் நினைச்சேன்..”
“அதனாலதான் உன்கிட்ட கூட குழந்தையை பத்தி நான் பேசினதே இல்லை. எங்க நான் பேசி உனக்கும் ஆசை வந்து, அப்புறம் லேட்டாகிட்டா என்ன செய்யன்னு ஒரு பயம். அதனாலதான் நாம இருந்த அந்த மூணு மாசத்துல இதை யோசிக்கவே இல்லை நான்..” என்றான் சிறு சிரிப்புடன்.
கணவனின் சிரிப்பை பார்த்தவள், குழப்பத்துடன் “என்ன?” எனப் புருவம் உயர்த்தி கேட்க,
“இல்ல இதுவும் என் தப்புதான்.. மூணு மாசம் கடின உழைப்பை போட்டுட்டு, அதுக்கான பலனை எதிர்பார்க்காமல் விட்டது என் தப்புதான்..” என்றான் மலர்ந்து சிரித்து.
“போங்க நீங்க..” என்ற அபிராமிக்கும் கணவனின் பேச்சில் முகம் சிவந்துவிட்டது.
நிஜமாவே நான் ஒரு முட்டாள் தான் இல்லையா? பாட்டி என்கிட்ட ஜாடையா சொன்னாங்க. ஆனா என்னனு நான் கேட்கும்போது உறுதியா சொல்லல. அவங்களுக்கு பயம் இருந்திருக்கும். ஒருவேளை இப்ப குழந்தை இல்லன்னா நான் எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு நினைச்சிருப்பாங்க போல.”
“அதனால தம்பி இருக்கிறது தெரியாம, உறுதியா என்கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைச்சிருப்பாங்க. நானும் அதுக்கு பிறகு அதை கவனிக்கல. ஆனா மனோ எனக்கு கூப்பிட்டு சொன்ன பிறகு, என் கோபத்தை என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல. அப்போ நீ இங்க வந்து ரெண்டு மாசம் ஆகி இருந்தது. நீயே வந்து என்கிட்ட சொல்லுவேன்னு ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துட்டே இருந்தேன்.”
“நீ சொல்லல. நானும் என்கிட்ட எதையாவது மறைக்கிறியான்னு கேட்டு பார்த்தேன். நீ சொல்லல, பிறகு தான் என்னோட கோபம் அதிகமானது. நீ என் முன்னாடி சாதாரணமா என்னை கடந்து போறது, என்னோட கோபத்தை அதிகமாக்கிடுச்சு. அதோட விளைவுகள் தான் நான் உன்கிட்ட நடந்துக்கிட்ட முறை. அதையும் சரின்னு நான் வாதாடமாட்டேன். ஆனால் அது தப்பும் கிடையாது. என்னுடைய நிலையில் நீ இருந்திருந்தால் இப்படித்தான் ரியாக்ட் பண்ணிருப்ப..” என்றான் மெல்ல தன்னை நிதானப்படுத்தி.
“கணவனின் பேச்சைக் கேட்ட பிறகு அபிராமியால், அடுத்து பேச முடியவில்லை. இனி என்ன காரணம் சொன்னாலும் அது ஏற்புடையதாக இருக்காதே.!
“மச்..” என்றான் சலிப்பாக. மனைவியின் அமைதி அவனை சலிப்படையச் செய்தது. இன்னும் தன்னிடம் மறைக்க என்னதான் காரணமாக இருக்கும், என எரிச்சல் கூட வந்தது கார்த்திக்கு.
அதை உணர்ந்து கொண்ட அபிராமி வேக்மாக “பாவா நான் இங்க இருந்து போகும்போது, என்கிட்ட நீங்க எப்படி கோபமா நடந்துக்கிட்டீங்களோ? அதைவிட இரண்டு மடங்கு நான் வந்த பிறகு நடந்துகிட்டீங்க.”
“இப்போ நான் என்ன காரணம் சொன்னாலும், அதை உங்களால ஏத்துக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். ஆனா உங்க மேல இருந்த பயம் தான், என்னை உங்ககிட்ட நெருங்க விடாமல் பண்ணுச்சு. குழந்தையை பத்தி நான் பேசலாம்னு நினைக்கும் போதெல்லாம், என்னை ஏதாவது பேசி காயப்படுத்திக்கிட்டே இருப்பீங்க. அதோட தாத்தாகிட்டையும் வேற பொண்ண பாருங்க, டைவர்ஸ் பண்றேன்னு எல்லாம் சொல்லிக்கிட்டே இருப்பீங்க. அது எல்லாம் யோசிச்சு, ஒருவேளை உங்களுக்கு அப்படி விருப்பம் இருந்தா, நானோ தம்பியோ உங்க வாழ்க்கைக்கு இடைஞ்சலா இருக்கக்கூடாதுன்னு நினைச்சுதான் பேசல..” என்றாள் வேதனையாக.
தன்னுடைய முட்டாள்தனமான கோபம், தங்கள் வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என கார்த்தியால், காலதாமதமாகத்தான் உணர்ந்து கொள்ள முடிந்தது.
“தம்பி இருக்கிறது தாத்தாவுக்கும் தெரியாதா.?” என்றான் நெடுநாளைய சந்தேகமாக.
“இல்ல இங்க என்ன சூழ்நிலைன்னு தெரியாம, தம்பியை பத்தி சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். தம்பிய பத்தி தெரிஞ்சு இருந்தா, கண்டிப்பா என்னை அங்க வீட்டுக்கு தான் கூப்பிட்டு வந்திருப்பாங்க. நீங்க இல்லாம அங்க போக எனக்கு பயம். தம்பியை ஏதாவது தப்பா பேசிடுவாங்களோன்னு பயம்..” என நிறுத்தி அவனை பார்க்க,
“ம்ம்ம்..” என்றவன் “மனோ கொண்டு வந்து, சபரியை என்கிட்ட விட்டதும், அவன் என்னை எப்படி பார்ப்பான்னு ஒரு பயம் இருந்தது. என்னை யாருன்னு கேட்டுடுவானோனு ஒரு வேற ஒரு பதட்டம்.”
“ஆனா அப்படி எதுவும் நடக்கல. என்னை பார்த்ததும் அப்பான்னு பாய்ஞ்சு என்கிட்ட வந்துட்டான். அந்த ஒரு செயலுக்காகவே உன்னை நான் மன்னிச்சிட்டேன். என் மேல எவ்வளவு கோபம் இருந்தாலும், எவ்வளவு வருத்தம் இருந்தாலும், என் மகனை என் மகனாகவே வளர்த்த, உன்னை அந்த நொடியே இறுக்கி கட்டிக்கணும் போல, ஒரு வெறி இருந்தது. இதுக்கு மேல என்ன வேணும்… போதும்.! இந்த வாழ்க்கையே போதும்னு தோணுச்சு..!” என்றவனுக்கு மகனை கைகளில் வாங்கிய அந்த நாள் கண் முன் ஓடியது.