• வைகையின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நவீன ஆதாமும் ஏவாளும்

பிரியபாரதீ

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 28, 2022
Messages
9
அங்குமிங்குமாக எண்ணிலடங்கா பறவைகள் சிறகடித்துகொண்டிருக்க, சில பறவைகள் "உன்னினத்தை பரவச்செய்வேன், உன்னடியிலோ அல்லது வெகு தொலைவிலோ" என மரங்களோடு பேரம் பேசி கனிகளை பெற்றுகொண்டிருக்க. மரங்களும் செடிகொடிகளும் புல்பூண்டுகளும் காற்றின் வேகத்திற்கு ஒத்துபோய்கொண்டிருக்க, பாய்ந்தோடும் நதி நீரின் ஓசை இவ் அனைத்தையும் சமரசம் செய்துகொண்டிருந்தது.கால்கள் வேக வேகமாக அடி எடுத்து வைத்துச் செல்ல, நதி கரையில் முட்டிகளை மடித்து பெண்குயின் போல் அமர்ந்து நீரை அள்ளி
எடுத்து வாய் பிளந்து ஊற்றிகொண்டு "அப்படா..." என்றாள்.


" என்ன நீரை கண்டதும் பருகிவிட்டாய்? இது பருகும் பொருளென்று உனக்கு தெரியுமா ? "


"இல்லை ஏலியன்ஸ், எனக்கு இதை பார்த்ததும் பருகவேண்டும் போல இருந்தது. உனக்கொன்று தெரியுமா? இதை பருகியதும் உற்சாகமாக என்னை உணர்கிறேன். நீயும் பருகிக்கொள் ஏலியன்ஸ்" என்க,


" தலையை வலது இடது என மாறி மாறி ஆட்டிக்கொண்டே இருக்கையில் எதையோ புரிந்துகொண்டவளாய்,

"சரி சரி, உன்னை ஏலியன்ஸ் என்று சொல்ல கூடாது அப்படிதானே....," என்று கண்களை சிமிட்டி சிமிட்டி பார்க்க ,

" ஆமாம் புவிலியா, நா ஒன்னு ம் ஏலியன்ஸ் கிடையாது. எனக்கான தனி பெயர் சொல்லியே அழை புவிலியா " என்று இரு பக்கமாய் ஆட்டிக்கொண்டிருந்த தலையை ஒரு நிலையில் நிறுத்தி சொல்ல,


"ம்...ம்...சரி சரி , சோஜி என்றே சொல்கிறேன் சோஜி. இதை நீயும் பருகிபாரேன் சோஜி. " என அந்த பெயரையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே நீரை அள்ளி சோஜி மேல் வீசி சிரித்தாள். "புவிலியா.

இது ஒரு வகை திரவம். இதற்கு நீர் என்று தான் உன் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு உயிரினங்களின் தாகம் தீர்க்கு சக்தி உள்ளது. வெகு தூரம் நடந்தே வந்ததால் நீ களைத்துவிட்டாய். அதனால்தான் இந்த திரவத்தை பார்தததும் பருகிவிட்டாய். உனக்குள் இருந்த தாகம் தீர்ந்து களைப்பும் நீங்கிவிட்டது. " என்று கூறிக்கொண்டே தன்பாட்டில் நடக்க புவிலியாவும் பின்தொடர்ந்தாள்.


அடி எடுத்து வைக்க வைக்க பயணம் தொடர்ந்துகோண்டே சென்றது.

புவிலியாவின் நடை சத்தம் சற்றென்று நிற்க, சோஜி திரும்பி பார்க்கையில் அவள் பார்வையோ ஒரு திசையில் ஈரடி தூரத்தில் குத்தி நின்றது.

மஞ்சள் நிறமும் நீல நிறமும் ஆங்காங்கே சிதறிகிடப்பது போன்றதொரு உயிரினம். மர அணில் போன்ற உடலமைப்பு கொண்ட அந்த உயிரணம் ஒரு பழத்தினை கொத்திகொண்டிருக்க இவள் உணர்வு குழையத் தொடங்கியது . அவள் உயிர் அங்கிருந்து அசைய மறுப்பதை உணர்ந்த சோஜி , தொங்கிக்கொண்டிருந்த ஒரு கட்டு வேறினை பிடித்து இழுத்து ஒரு கூடை போல் செய்துகொண்டு, தன் மணிகட்டில் கட்டியிருந்த கடிகாரம் போன்ற இயந்திரத்தில் சில மாற்றங்களை செய்ததும், உடல் நிறை குறைந்து ,நிலைகுத்தாக காற்றில் மிதந்து அவ்விடத்திடத்திலிருந்து காணாமல் போய், கூடை நிறைய பழங்களோடு திரும்பி வந்து, அவள் முன் நீட்ட அதை பிடுங்கி ஒவ்வொரு பழங்களாக கடித்து விழுங்கினாள் புவிலியா."புவிலியா.....," என்க, அவள் சோஜி பக்கம் திரும்ப...,

" சற்று முன் உனக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது அல்லவா?"

"ஆமாம் சோஜி, ஆனால் இப்போது இல்லை. அது ஏன் அப்படி"


"அது தான் பசியுணர்வு. உடல் உறுப்புக்கள் இயங்குவதற்கு ஒரு சக்தி தேவை. இது போன்ற பழங்களை சாப்பிட்டால் அந்த சக்தி கிடைத்துவிடும். புரிகிறதா புவிலியா?"

"மறுபடியும் இப்படி நடக்குமா? "

"ஆமாம்.வாழும்வரை இந்த சக்தி தேவை"

"வாழும்வரையா....? வாழும் வரை என்றால்?"


"உன் எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. சந்தர்ப்பங்கள் அமையும்போது நீயே தெரிந்துகொள்வாய். இப்போது எழும்பு நடக்கலாம் " என்று கூறி சோஜி நடக்க, மீண்டும் பின் தொடர்கிறாள் புவிலியா. இருவரும் அடர்ந்த காட்டினை விளக்கி உள்ளே நுழைந்த்துகொண்டிருந்தார்கள்.


அங்கிருந்து சில மைல் கிலோமீட்டர் தூரத்தில் ஒரு காலத்தில் மனிதர்கள் இங்கு வாழ்ந்திருப்பதற்கான தடயங்களோடு ஒரு கிராமம்.

தனியொருவனாக நின்று கண்தெரியும் தூரம் வரையும் சுற்றி சுற்றி பார்க்கையில் எல்லாமே சூனியமாக இருக்க,

"எனக்கென்று யாராவது வானிலிருந்து குதித்துவிடமாட்டார்களா .....?" என்பது போல் தரையில் அமர்ந்து கைகளை மணிகட்டோடு மடித்து தன் இடுப்புக்கு பின்னால் நிறுத்தி அண்ணார்ந்து வான் பார்த்துக்கொண்டிருந்தான் இந்த புவியின் கடைசி ஆண்மகனான புவியாண்.

வாண் பார்த்துக்கொண்டிருந்த இந்த ஆண்மகனின் கண்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த ஒரே ஒரு மனிதனான தன் தந்தையின் முகம் வந்து போனது.

அவன் தந்தையோடு இருந்த அந்த கடைசி நாள்.....,

ஒரு புத்தகத்தின் ஏடுகளை புரட்டி புரட்டி அரைகுறை வார்த்தைகளால் ஒவ்வொன்றாக விளக்கிக்கொண்டிருக்கையிலேயே, விரலசைவோடு கையசைவும் நின்றுவிட ,மூச்சை பரிசோதித்து பின் பார்த்தபோது வெற்றுடல் என்பதை புரிந்துகொள்கிறான் புவியாண்.


அந்த உடலை இறுக அணைத்து ,
"ஓ...ஹா....... " என அடிதொண்டையில் வாண் கிழிய கத்தி ஓய்ந்து, பின் எதையோ உணர்ந்தவனாய் எழுந்து சடலத்தை நீரினால் கழுவி விட்டு, பல்லாண்டு காலமாக மடித்து வைக்கப்பட்டிருந்த ஆடையொன்றினை அணிவித்துவிட்டு சக்கரநாற்காலியிலிருந்து தூக்கி இயந்திர கட்டிலில் படுக்கவைத்துவிட்டு , விடியும் வரை காத்துக்கொண்டிருந்து , விடிந்ததும் இறுதி கிரிகைகள் அனைத்தையும் நேர்த்தியாக செய்துவிட்டு, குழி பறித்து தந்தையின் உடலை மண்ணுக்குள் புதைத்துவிட்டான்.

அன்றிலிருந்து இன்று வரையும் தன்னந்தனியாக வாழும் இந்த ஆண்மகனான புவியாண் இதுவரை ஒரு மனிதப்பிறவியைக்கூட கண்டதில்லை.

இப்படியே வாண் பார்த்து யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு தந்தை இறுதி நாளன்று கொடுத்த புத்தகம் நினைவிற்கு வர....எழுந்து ஓடியவன் ஒரு நீண்ட அறைக்குள் நுழைந்தான்.

அங்கு அழகாக காட்சிபடுத்தப்பட்டிருந்த மனிதன் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய பொருட்கள், இலத்திரனியல் உபகரணங்கள், இயந்திரங்கள், அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே நகர்ந்து , புத்தக இராக்கைக்குள் அந்த புத்தகத்தை தேடினான்.

இந்த புவியாணின் தந்தையின் அறைதான் அது. இந்த பூமியில் மனிதன் வாழ்ந்தற்கான ஆதாரங்களை சேர்த்து வைத்துவிட்டு சென்றிருந்தார்.

மீண்டும் மனிதன் இவ் பூமியில் உதித்தால் அழகான இந்த இயற்கை பூமியை எவ்வாறு வணங்கி வாழ வேண்டும் என்பதை புத்தகங்களாக எழுதி அடுக்கியிருந்தார்.

இறுதி நாளன்று தந்தை தந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்து ஏடுகளை புரட்டியவனின் கண்களில் முதல் முறையாக ஓர் அழகான பெண் .

ஆம், முதல் ஏட்டிலேயே ஒரு அழகிய பெண்ணுருவம் ஓவியமாக்கப்பட்டிருந்தது. "நான் உன் தாய். இந்த மலை பள்ளத்தாக்கின் இளவரசி" என்று அந்த ஓவியத்தின் கீழ் எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த ஏடுகளை புரட்ட...,

"என் மொழியை உன் தந்தையின் மூலம் கற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். அதி நவீனமயமான நகரத்தில் பிறந்து வாளர்ந்தவர்தான் உன் தந்தை. ஆய்வொன்றிற்காக மலைகளை கடந்து இங்கு வந்தார். என்னைச் சந்தித்து காதல் கொண்டார். திருமணமும் முடித்துக்கொண்டார். எங்கள் மொழியைக் கற்றுக்கொண்டார். பிறகு இங்குள்ள மக்களுக்கெள்ளாம் தொழில்நுட்ப கல்வியை கற்றுக்கொடுத்தார். வேகம், வசதி, இலகு என நவீனமயத்தின் மீது ஆசையை ஏற்படுத்தினார். உன் பாட்டி சொல்லையும் மீறி மெது மெதுவாக மக்கள் எல்லோரும் நவீனத்தை நாடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். சிலகாலம் கழித்து என் அம்மா இராணி இறந்துவிட இக்கிராமத்தில் நான் தனியானேன்.


சிலகாலங்கள் இப்படியே கழிந்தது.

ஒரு நாள் மனிதர்களாலேயே உருவாக்கப்பட்ட வைரஸ் மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவி மனித உயிர்களை கொன்றுகுவிக்கிறது என்று அந்த வைரஸிடமிருந்து தப்பித்துகொள்வதற்காக உன் அப்பா இங்கு மீண்டும் என்னை நாடி வந்தார்.

பிறகு அவர் என்னோடு அதீத அன்போடு இருந்தார். பத்தொன்பது குழந்தைகளை பெற்றெடுத்தேன். பத்தொன்பதும் ஆண்குழந்தைகள். எல்லா குழந்தைகளும் இறந்தே பிறந்தன. இருபதாவது குழந்தையாக நீ பிறக்கபோகிறாய். நீ ஆண் குழந்தையா? பெண் குழந்தையா என்பது எனக்கு தெரியாது. நீ பிறக்கையில் நான் உயிருடன் இருக்கமாட்டேன். மனித இனம் மீண்டும் இந்த பூமியில் தவழ்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டால் இந்த பூமியை சேதபடுத்தாமல், அதனோடு இணைந்து வாழ பழகிக்கொள் மகனே...மகளே.... இதுவே என் ஆசை.என் செல்லமே"


படித்து முடித்தவன் கண்ணில் கண்ணீர் வலிந்தது.

அடுத்தடுத்த ஏடுகளில் தந்தை வரைந்த நவீன உலகம் ஓவியங்களாக இருந்தன. அதில் தந்தை தனக்காக அவர் செய்துகொண்ட சக்கர நாற்காலியும் இயந்திர கட்டிலும் படமாக இருந்தது. புத்தகத்தை மூடி விட்டு , மீண்டும் அந்த வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் புவியாண்.


காட்டு பக்கமிருந்து ஏதோ நடை சத்தம் கேட்க திடுகிட்டு எழுந்த புவியாண் , அந்த சத்தம் வந்த திசை நோக்கி தன் கவனத்தை கூர்மையாக்கியவன் அந்த சத்தம் அருகில் வருவதை உணர்ந்து படக்கென எழுந்துச் சென்று வில்லினையும் அம்புகளையும், நீண்ட அரிவாள் ஒன்றினையும் எடுத்து ஓடி வந்தான்.வில்லில் அம்பினை தொடுத்து உருவம் கண்ணில் பட்டதும் அம்பினை எய்துவிடுவதற்காக அந்த திசையில் மட்டும் முழு கவனத்தையும் குவித்து குறி தப்பிட கூடாது என்று துல்லியமாக சத்தத்தினை செவிமடுத்துக்கொண்டிருந்தான்.சத்தம் நெறுங்கிக்கொண்டே இருக்க...அடுத்த அடி காடு தாண்டி தன் கிராமத்திற்குள் தான் என்பதை உணர்ந்வன் மரங்களுக்கு நடுவே உருவ அசைவும் தெரிய அம்பினை வில்லிலிருந்து விடுத்தான்.அது அந்த உருவத்தில் பட்டு சற்று பின்னோக்கி விழ, அந்த உருவம் முழுமையாக அவன் கண் முன்னே வந்து நின்றது.

அலங்கார வேலைபாடுகளுடன் கூடிய , முகம் மூடிய தலைகவசம். கண்களும் வாய்பகுதியும் திறந்த நிலையிலிருக்க கண்களோ மிக பிரகாசமாக இருந்தது. உடம்பு முழுவதும் ஏதோவொரு திண்ம பொருளினால் மூடப்பட்டிருந்தது. தோற்பட்டையும் கையும் செங்கோணவடிவில் கச்சிதமாக பொறுத்திருந்து.முழு உடம்பையும் கண்களால் நகலெடுத்த புவியாண் சிறு கூரிய கத்தியினை எடுத்து அந்த உருவத்தை நோக்கி வீச, அந்த உருவத்தின் கை வழியாக வந்த தீப்பொறிகள் பட்டு , உருகி வலிந்து மண்ணில் விழுந்தது."சிலவேளை ஒரு காலத்தில் மனித அறிவியலினால் உருவாக்கப்பட்ட ரோபோவாக இருக்குமோ, இப்போதும் இந்த மண்ணில் உலாவி வருகின்றனவோ...?" என தனக்குள் கேட்டுக்கொள்ள , தந்தையின் புத்தகத்தில் இதுபற்றி படித்த நியாபகம் அவன் சிந்தித்னையில் வர, " மனிதன் உருவாக்கிய ரோபோக்கள் மனிதனைவிட சக்திவாய்ந்ததாக மாறி, மனித குளத்திற்கே எதிராக உருவெடுக்கும்" என்ற வாசகம் அவனுள் அச்சத்தை தூண்டிவிட , "இங்கு மிஞ்சியிருப்பதே நான் ஒருவன்தான். நான் எப்படியாவது இந்த மண்ணில் உயிர் வாழ வேண்டும் " என்று கர்ச்சித்துக்கொண்டு ஆவேசமாக எழுந்தவன் வாளினை எடுத்து, உடல் உறுப்புகள் பொருந்தபட்டிருக்கும் மூட்டுகளை குறிபார்த்து தொடர்ச்சியாக வீசினான்.அத்தனை வீச்சிலும் அந்த உரு தன்னை காபாற்றிகொள்ள, அதிலொரு வீச்சி தன் மெல்லிய குரலில் "சோஜி....சோஜி..." என ஓடிவந்தவள் மீது பட்டதும், அவளின் கவச ஆடை இரண்டாக பிளந்து தரையில் விழ, இன்னொரு உருவத்தையும் கண்ட அதிர்ச்சியில் வாள்வீச்சை நிறுத்தி நின்று நிதானமானவன் கண்களில் அவள் மட்டுமே தெரிந்தாள்."சோஜி...சோஜி..." என தன்னை நோக்கி வந்த புவிலியாவின் கவச உடைகளை எடுத்து பொருத்திவிட்டு ," புவிலியா...அஞ்ச வேண்டாம். இதுவும் உன்னைபோல் ஒரு மனித பிறவிதான். " என்க ,அந்த ஆண்மகனை மேலும் கீழுமாக பார்த்து வியக்கிறாள் . ஆலம் விழுதுகளை ஒன்றாகச் சேர்த்து முறுக்கிச் செய்தது போல் இருந்தது அவன் உடம்பு, ஆந்தை முழி கண்கள், சுருள் சுருளான தலை மயிர், தனி தனி மயிர்களாக சுருண்டு குறிபிட்ட எல்லைக்குள் நின்று நிறைந்த தாடி, இறுக்கமான நீண்ட கரங்கள் என அந்த ஆண்மகனை விசித்திரமாய் இவள் கண்சிமிட்ட நேரமின்றி பார்த்துகொண்டே இருக்கையில் ," என் பெயர் சோஜி. இவள் புவிலியா. நாங்கள் சார்மினா கிரகத்திலிருந்து இந்த புவியை நோக்கி வந்துள்ளோம் . புவிலியாவின் முன்னோர்கள் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியை விட்டு வந்து எங்கள் கிரத்தில் குடியேறினார்கள். " என்று தன்னையும் புவிலியாவையும் பற்றி புவியாணிடம் கூற வந்த சோஜி, தன் மார்பு கவசத்தை கழற்றி நெஞ்சோடு பொருந்தியிருந்த ஒரு வட்டச் சக்கரத்தை சுழற்ற, கணணி போன்றதொரு திரையில் காட்சிகள் விரிந்தன...,ஓர் அரை வட்டத்தை கவிழ்க்க போட்டது போல இருந்தது அந்த பிரமாண்டமான ஆய்வுக்கூடம். வித விதமான இயந்திரங்களோடு மனித மூளைகள் விளையாடிக்கொண்டிருந்தன.அங்கு தான்
அண்டம் கடந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் ஸ்டீவன் ஹாக்கிங்.


" நீங்கள் நினைப்பது சாத்தியமா? பூமியில் மனித சமூகம் அழிந்தொழியுமா? அப்படியே அழிந்தாலும் மனிதர்கள் இன்னொரு கிரகத்தில் குடியேறுவது தான் சாத்தியமா? " என்று நகைச்சுவையாக சிரிக்கிறான் ஸ்டீவனின் மாணவனொருவன்."அதே பாணியில் இவரும் சிரித்துவிட்டு, உனக்கே இந்த சந்தேகம் என்றால் என் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு எல்லாம் உருபட்ட மாதிரிதான்..."" ம்ம்......நீங்க ஆராய்ந்து இன்னொரு கிரகத்த கண்டுபிடிச்சி.....அங்க மனிதன் வாழ்றதுக்கு ஏற்ற வசதியெல்லாம் செய்து......குடியேர்றதுக்குள்ள கிழவனாகிடுவிங்க...."வார்த்தைகளை இழுத்து இழுத்து கைதட்டி மீண்டும் அந்த மாணவன் சிரிக்க ,"என் உடலே செயலிழந்து போனாலும் என் மூளை இயங்கிக்கொண்டுதான் இருக்கும் என் மாணவனே! நீ இன்னும் மாணவன்தான் "என அவன் உணரும்படியாக சொல்லி அவன் வாயயை அடைத்து விட்டு, அறிவியல் மாநாட்டிற்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும்," என்று பிரமாண்டமான அந்த ஆய்வுகூடத்தை விட்டு வெளியேறி, நான்கு சக்கர வாகனமொன்றில் ஏற...அது புறப்படுகிறது.அந்த மாநாட்டில் மாபெரும் விஞ்ஞானிகளில் ஒருவரான " ஸ்டீவன் ஹாக்கிங்" அழைக்கப்படுகிறார். அவர் தன் பேச்சை தொடங்குகிறார்."அண்டவியலுக்கும் பொதுவியலுக்கும் இடையிலான தொடர்பினை ஆராய்ந்துகொண்டிருக்கிறேன்.வேற்று கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியகூறுகளை தேடிகொண்டிருக்கிறேன். ஒரு நாள் மனித செயற்பாடுகள் காரணமாகவே இந்த புவியில் ஒட்டுமொத்த மனித இனமும் அழிந்தேபோகும்.
நம் பேராசையினாலும் முட்டாள்தனத்தினாலும் புவியை சேதபடுத்தி வருகிறோம். மக்கள் தொகை மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக நூறு ஆண்டுகளுக்கு மேல் பூமி நிலைக்காது. சுமார் முப்பது ஆண்டுகளுக்குள் மனித இனத்தின் இருப்புக்காக வேற்று கிரகங்கள் புவியின் காலணிகளாக மாற்றபடவில்லை எனில் மனித இனமே அடியோடு இல்லாமல் போகும். அதனால் மனித இனம் மாற்று கிரகத்தை தேடி நகர வேண்டும். மனித இனத்திற்காக என் ஆராய்சியில் வெல்வேன். மனித இனம் அழிவதை தடுத்து இந்த பிரபஞ்சத்தில் மனித இனம் தொடர்வதற்காக வழிவகுப்பேன். இது வரையான என் ஆராய்ச்சிகளை இங்கு சமர்பிக்கிறேன். நன்றி"


என விடை பெறுகிறார் ஸ்டீவன் ஹாக்கிங். இந்த உரையினை ஆற்றி சில வருடங்களுக்கு பிறகு......


"பூமியில் (இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு) ஓரு கொடிய வைரசினால் மனிதர்கள் மூச்சு திணறி இறக்கிறார்கள். இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக விஞ்ஞானிகள் ஒரு பக்கமும் சித்த மருத்துவர்கள் இன்னொரு பக்கமும் போரடியும் பயனளிக்காமல் போக, மனிதர்கள் கொத்து கொத்தாக புதைக்கப்படுகிறார்கள். இது ஒரு பக்கம் நிகழ்ந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் அதிகமான வெப்பநிலை காரணமாக பனி பிரதேசகங்களில் பனி உருகி உருகி மொத்தமாக கரைந்து, பூமியை நீர் விழுங்கிக்கொண்டிருக்கிறது....,


இன்னொரு பக்கம் விண்ணிலிருந்து விண்கற்கள் விழுவதால் ஏற்படுகின்ற நில நடுக்கத்தினால் மனித உயிர்கள் கதறுகிறது....,


இன்னொரு இடத்தில் விண்கற்கள் கடலில் விழுந்ததினால் சுனாமி பேரலை உருவாகி சில இடங்கள் கடலால் சூழபடுகிறது...,ஒரு கோடி மக்கள் வரை உயிரை இழக்கிறார்கள். இப்படியான அழிவுகள் பத்தாண்டு காலமாகவும் தொடர, பூமி முழுதும் மனித இனம் கதறிகொண்டிருக்கையில்தான், உடனடியாக வேற்று கிரகத்தில் மனிதன் குடியேற வேண்டும் என ஸ்டீவன் ஹாக்கிங் ஒரு முடிவெடுக்கிறார்."கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ கோடி மக்கள் இறந்துவிட்டார்கள்.இந்த சந்தர்ப்பத்தில் நாம் வேற்று கிரகத்தில் குடியேறினால் என்ன..."
என ஸ்டீவன் ஹாக்கிங் தன் கருத்தினை சக பணியார்களிடம் முன் வைக்கிறார்."அது எப்படி சாத்தியமாகும்? இது வரை ஆராய்ந்த கிரகங்களில் மனிதன் வாழ்வதற்கான ஒரு சில விடயங்களையே கண்டுபிடித்திருக்கிறோம். " என்று ஒருவர் சொல்ல," பூமியின் தொடக்கத்திலும் சில குறைபாடுகள் இருந்திருக்கவேசெய்கிறது. காலபோக்கில் தான் மாற்றமடைந்ததுள்ளது..." என இன்னொருவர் தன் கருத்தை சொல்ல,"புவியிலிருந்தாலும் ஓரிரு ஆண்டுகளில் செத்துதான் போகப்போகிறோம். இந்த முயற்சியை செய்துவிட்டு செத்தால் என்ன? நம் எண்ணம் சாத்தியமானால் நமக்கு பின் பல ஆண்டுகள் கழித்தாவது மனித இனம் மீண்டும் இந்த பூமியில் வாழும் அல்லவா" என ஸ்டீவன் ஹாக்கிங் சொல்ல," சரி அப்படியென்றால் எந்த கிரகத்தை நோக்கிச் செல்வது?" என்ற கேள்வி எழ....

"சார்மினா, கெப்லர் சிக்ஸ் டூ எப், ப்ரொக்சிமா பி(B) " என ஒவ்வொருதரும் ஒவ்வொரு பெயரை முன்மொழிந்தார்கள்.

"குறைந்த வெப்பத்தை உடைய சார்மினா கிரகத்தில் குடிபெயர்வோம் " என ஸ்டீவன் ஹாக்கிங் முடிவு செய்கிறார்.


மனிதர்கள் உயிர் வாழ தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஒரு குழுவினை முன்கூட்டியே அனுப்பிவைக்கிறார்.

பின் ஸ்டீவன் ஹாக்கிங்கும் அவர் குடும்பமும், இன்னும் சிலரும் சற்று பெரிய ஏவுகனையில் புறப்பட்டுச்சென்று சில ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தரை இறங்குகிறார்கள்.அங்கு மனிதருக்கு ஒப்பான உருவமுடைய உயிரின குழுவொன்றை கண்டுபிடிக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து வாழ பழகிக்கொள்கிறார்கள். ஆனால் அங்கு நெடுங்காலம் உயிர் வாழ முடியாது என்பதை உணர்ந்த ஸ்டீவன் ஹாக்கிங் சார்மினா கிரக வாசியான சோஜியை அழைத்து ,


"மனித இனம் பூமியில் மீண்டும் உயிர்பெற வேண்டும். அதற்கு நீ உதவ வேண்டும் "என்று கேட்கொள்ள சோஜியும் "சரி" என்று ஒப்புகொள்கிறது.

ஹாக்கிங் தன் விந்தனுக்களையும் தன் மனைவியின் உயிரணுக்களையும் எடுத்து ஒரு குழந்தையை உருவாக்கி அக்குழந்தையை பூமியில் சேர்க்க வேண்டும்" என்று கூறி, ஸ்டீீ்ீ்்ீ்ீீ. ஸ்டீவன் ஹாக்கின் விந்தணுவும் அவர் மனைவியின் உயிரணுவும் அடைக்கப்பட்ட ஒரு குழாயை சோஜியிடம் கொடுத்துவிட்டு ,பின் இருவரும் அவ்விடமே கருகி மடிகிறார்கள்.


மனிதனை விடவும் சக்தி வாய்ந்த சோஜியால் ஸ்டீவன் ஹாக்கிங்கின் ஆசை நிறைவேறியது.

" ஸ்டீவன் ஹாக்கிங் சொன்னது போலவே ஏவுகனையில் க்லோனிங் முறைக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொண்ட பின் பூமியை நோக்கி அந்த ஏவுகனை புறப்படுகிறது. அந்த ஏவுகனையிலேயே க்லோனிங் முறையில் கருவாகி உருவாகி வளர்ந்தவள் தான் புவிலியா. பல ஆண்டுகளுக்கு பின் இந்த பூமியை வந்துச் சேர்ந்திருக்கிறோம் " என்று கூறி தன் நெஞ்சோடு பொருந்தியிருந்த சக்கரத்தை திருகிவிட, திரை மறைந்தது.சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு... அந்த இடத்தில் காணமல் போய்யிருந்தாள் புவிலியா.


"இந்த புவிலியா எங்கே போனாள்..." என புவிலியாவை தேட ஆரம்பித்தது சோஜி.

"ம்....ம்....ம்...."

என எங்கோ அவள் அழும் சத்தம் கேட்க,

பித்துபோல் அமர்ந்திருந்த புவிய்ண் துடித்துப்போய் எழுந்தான்.

அழும் குரலை தேடி தேடி ஓடினான்.

அந்த கிராமத்தின் எல்லையில் மலை உச்சியிலிருந்து விழுந்து சமதரை நோக்கி ஓடும் நதிகரை இருந்தது.


அங்கு நின்றே அழுதுக்கொண்டிருநாதாள் புவிலியா. நீண்ட நேர தேடலில் கலைத்து ஓய்ந்தான் அவளைக் கண்ட புவியாண்.

கையிலும் காலிலும் இரத்தம் வடித்துகொண்டிருக்கவே அவள் அழுதுகொண்டுருந்தாள்.


உடனே பாய்ந்து தாவி ஓடி ஏதோ ஒரு வகை இலைகளை தேடி பிடுங்கி கசித்து கொண்டுவந்தவன் அவளை அமரச்செய்து காயங்களுக்கு பூசிவிடுகையில் அவள் எரிச்சலால் துடி துடித்த்துப் போனாள்.


அவள் துடிப்பதை பொறுக்க முடியாமல் போக, அவள் அருகில் சென்று வாயால் ஊதி அவள் காயத்தைக் குளிரச்செய்தான். காயத்தோடு அவளும்தான் குளிர்ந்தாள்.

அவள் முகத்தைப் பார்க்க தன் தலையை நிமிர்த்தியவன், அவள் கழுத்தோரத்திலும் இரத்தம் கசிவதை கண்டான்.

கசக்கிய இலைகளை கழுத்தோரமும் பூசி அவள் பதறும் முன்பே தன் வாயால் அவன் ஊதிவிட அவள் நெகிழ்ந்து போனாள். உடம்பெல்லாம் கூசிபோக கை உரோமங்கள் சிலிர்த்து குட்டி குட்டி ரோமங்கள் நிமிர்ந்துநின்றன.

அவளை மீண்டும் நிமிர்ந்து பார்த்து ,

" நீ என் அம்மாவை போல் இருக்கிறாய். இதுவரை உன்னை போல் ஒருத்தியை பார்த்ததேயில்லை. உன்னை கொஞ்சம தொட்டு பார்க்கவா" என்றான்.

அவன் பாடுகின்றான் என்றோ அல்லது கத்துகின்றான் என்றோ அல்லது கூவுகின்றான் என்றோ நினைத்து அவள் அமைதியாய் இருக்கவும் , அவ்விடம் வந்த சோஜி,

"அவளுக்கு உங்கள் மொழி புரியாது. அவளுக்கு பேசவும் தெரியாது. " என்றது.


" ஆனால் நீங்கள் எப்படி...?" என்று அந்த ஆண்மகன் சந்தேக பார்வைகளால் வினவ ,

" நான் அவள் உடையில் ஒரு கருவியை பொருத்தியிருந்தேன். அது நான் பேசும் மொழியை ஒலி அலைகளாக மாற்றி அவளை உணரச்செய்யும். அதுபோல் அவள் உணர்வலைகள் மொழியாக மாறி எனக்கு கேட்கும். " என்று சோஜி கூறிய பிறகுதான் ,புவிலியா நிர்வானமாய் இருப்பதை கவனிக்கிறான் அந்த ஆண்மகன் புவியான்.

தன் கவச ஆடையை கழற்றிவிட்டு மலை உச்சியிலிருந்து விழுந்து ஓடும் நதி நீரில் மூழ்கி எழும்பியிருக்கிறாள் அந்த புவி தேவதை.


உருண்டு திரண்ட அவள் மேனி, ரோஜா பூவில் பனி போல் நீர் துளிகள் அவள் உடம்பு முழுதும். சிவந்த அவள் இதழ்கழ்களிலும்தான்.

நீர் சொட்டிக்கொண்டிருக்கும் கூந்தல், அந்த மலை தொடர் போல் மேடும் பள்ளமுமாயிருந்த அவள் உடம்பு அவனை ஏதோச் செய்ய , ஓவியத்தை தீட்ட அளவெடுக்கும் ஓவியனை போல் மெய் மறந்து பார்த்துக்கொண்டு நின்றான் இது வரை பெண்ணுருவத்தையே கண்டிராத புவியின் கடைசி மைந்தனான புவியான்.


தன்னவளை இந்த இயற்கையின் கண்படாமல் பார்த்து கொள்ள தூண்டியது அவன் உள்ளுர்ணர்வு. ஒரு ஆண் ஒருத்தியை தனது என்று சொந்தம் கொண்டாடிவிட்டாள் அவள் உடலை இயற்கை கூட பார்க்க அனுமதிக்கமாட்டானே.


ஓடிச்சென்று மரபலகைகளால் நேர்த்தியாக செய்யப்பட்டிருந்த தன் வீட்டிற்குள் நுழைந்தான்.

புவியாணுக்காக அவன் தாய் எழுதியிருந்த அந்த புத்தகத்தில் இருந்த தன் தாயின் படத்தினை எடுத்து வந்து , அவள் கையில் கொடுத்துவிட்டு ,

"இவள் தான் என் அம்மா" என்றான். பிறகு.... கையோடு கொண்டு வந்திருந்த தாயின் உடைகளை காட்டினான்.

தன் தாயைபோல் அவளுக்கும் உடுத்திவிட்டு அழகுபார்த்தான்.

அவள் அழகு இன்னும் கூடிட, அவளை விட்டு நீங்கமுடியாதவனாய் தடுமாறிப் போனான். பின் நிதானமாக முயன்றும் , அது முடியாமல் போக, அவன் உதடுகள் அவள் உதடுகளை கவ்விக்கொள்வதை தடுக்கமுடியாமல் போனது.
சிறு இடைவேளை விட்டபோது ,விலக மனமில்லாதவனாய் மீண்டும் கவ்விக்கொண்டான் அந்த திராட்சை இதழ்களை.


"நான் வந்த வேலை முடிந்தது. நான் புறபடுகிறேன் புவியான் புவிலியா.உன் தந்தையின் கனவை நிஜமாக்கிவிட்டேன். இயற்கையை நேசித்து வாழும் மனித குழம் உங்களால் இந்த புவியில் மீண்டும் உருவாகட்டும் " என்று கூறி முடிக்க,


மணிகட்டில் பொருத்தியிருந்த இயந்திரத்தில் சில மாற்றங்கள் செய்திட்ட சில நிமிடங்களில் , தட்டான் போன்றதொரு அமைப்பில் விமானம் ஒன்று தரையிறங்க அதில் சோஜி ஏறிட, பறந்தது அந்த விமானம்.


சோஜிக்கு நன்றி உணர்வோடு கைகாட்டி விட்டு களங்கி நின்றவளின் கண்களை துடைத்துவிட்டு அவளை மார்போடு சாய்த்து இறுக அணைத்துக்கொள்கிறான்..

பழைமையா புதிய பூமியின் முதல் தாயாகிறாள் புவிலியா.


.... பிரியமான தீ....
....பிரியபாரதீ.....
 
Last edited:
Top