• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Nuha Maryam

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
110
விடிந்தும் விடியாததுமாக கையில் பையுடன் வாசலில் வந்து நின்ற மகளைக் கண்டு அதிர்ந்தார் வசந்தி.


வசந்தி, "என்னடி இது பேக்கும் கையுமா வந்து நிக்கிற.." எனப் பதறியவாறு கேட்க,


நித்ய யுவனி, "ஏன்... இதுல என்ன இருக்கு... என் வீட்டுக்கு நான் வரக் கூடாதா..." என்க,


வசந்தி ஏதோ கூற வரவும் சரியாக அங்கு வந்த ராஜாராம், "என்ன வசு நீ... புள்ளய வெளிய நிப்பாட்டி வெச்சி விசாரிச்சிட்டு இருக்க... முதல்ல அவளுக்கு உள்ள வர வழிய விடு..." என்றார்.


மூவரும் உள்ளே நுழைந்ததும் மீண்டும் தன் விசாரணைப் படலத்தை ஆரம்பித்தார் வசந்தி.


வசந்தி, "மாப்பிள்ளை கூட சண்டை போட்டுக்கிட்டு வீட்ட விட்டு வந்தியா யுவனி..." எனக் கோவமாக கேட்க,


"எனக்கு வேற வேலை இல்ல பாரு... நீ தான் அவன மெச்சிக்கனும்... உன் மாப்பிள்ளைக்கு மூளை கொழம்பி போய் இருக்கு... பேசாதே அவன பத்தி என் கிட்ட..." என எரிச்சலாகக் கூறினாள் நித்ய யுவனி.


வசந்தி, "என்னடி நீ...‌ மாப்பிள்ளைன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம அவன் இவன்னு பேசிட்டு இருக்க... உனக்கு ரொம்ப இடம் தந்துட்டோம்... அதான் இப்படி எல்லாம் பேசுற..." என்க,


நித்ய யுவனி, "சும்மா எப்பப் பாரு என்னையே குறை சொல்லிட்டு இருக்காதமா... ஆல்ரெடி அவன் மேல செம்ம கடுப்புல இருக்கேன்... நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசி இரிட்டேட் பண்ணாதே... உனக்கு நான் இங்க இருக்குறது பிடிக்கலன்னா சொல்லு... முன்ன மாதிரியே எங்கயாவது போய் தனியா இருந்துக்குறேன்... நான் இருக்குறது தான் உங்க எல்லாருக்கும் பிரச்சினையே.. இன்னொரு விஷயம்... நான் இங்க இருக்கும் வரை யாராவது இங்க நடக்குறது இல்ல என்னைப் பத்தி அவன் கிட்டயோ அந்த வீட்டுல இருக்குறவங்க கிட்டயோ தகவல் குடுக்குறது தெரிஞ்சது யாரு கிட்டயும் சொல்லாம தூரமா போய்டுவேன்... திரும்ப வரவே மாட்டேன்..." எனக் கோவமாகக் கூறியவள் எழுந்து தன் அறைக்குச் சென்றாள்.


வசந்தி, "பாருங்கங்க எப்படி பேசிட்டு போறான்னு... சண்டை போட்டுட்டு வீட்ட விட்டு வர அளவுக்கு அவளுக்கு அப்படி என்ன வீம்பு..." என்க,


"போதும் வசு... எதுக்கு நம்ம பொண்ணையே குத்தம் சொல்ற... அவ உன் கிட்ட சொன்னாளா சண்டை போட்டுட்டு வந்தேன்னு... இல்லல்ல... அப்போ நீயே எதுக்கு ஒன்ன கற்பனை பண்ணி அவள திட்ற... எனக்கு என் வளர்ப்பு மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு... சின்ன விஷயத்துக்காக எல்லாம் வீட்ட விட்டு வர பொண்ணு கிடையாது என் யுவனி... நான் மாப்பிள்ளை கூட பேசி என்னன்னு கேட்குறேன்... நீ அவள கொஞ்சம் தனியா விடு.." என்று விட்டு மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார்.


_______________________________________________


நித்ய யுவனி சென்றதும் மடிந்து அமர்ந்தவன் தான்.


தன்னவளின் நினைவில் அறையிலே அடைந்து கிடந்தான்.


ஈஷ்வரி, பிரபு என மாறி மாறி வந்து பேசியும் கதவைத் திறக்கவில்லை.


காவ்யா மற்றும் நித்ய யுவனியுடன் அன்று வெளியே சென்ற போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தான் சஜீவ்.


சஜீவ், "சாரி யுவி... சாரி‌ யுவி... நான் போன்னு சொன்னா நீ போய்டுவியா... உன் கூட தான் இருப்பேன்னு சொல்லலாம்ல..." என அழ,


அவன் மனசாட்சி, "அப்போ ஊரே அவள மலடியா பார்க்குமே... அது உனக்கு சந்தோஷமா..." என்க,


"இல்ல இல்ல.. என் யுவிய யாரும் எதுவுமே சொல்லக் கூடாது... என் யுவிய விட்டு நான் பிரிஞ்சி இருக்குறது தான் அவளுக்கு நல்லதுன்னா நான் இருப்பேன்.." என்றான் சஜீவ்.


நித்ய யுவனி தலையணையின் கீழ் வைத்து விட்டுச் சென்ற ஃபைலையும் அவன் கவனிக்கவில்லை.


ஒருவேளை அதனை சஜீவ் பார்த்து இருந்தாலாவது பிரச்சினைக்கு உடனே தீர்வு கிடைத்திருக்கும்.


_______________________________________________


ராஜாராம் சஜீவ்விற்கு பல முறை அழைத்தும் அவன் அழைப்பை ஏற்காததால் பிரபுவிற்கு அழைத்து என்னவென்று கேட்க,


"எனக்கும் தெரியல சம்மந்தி... சர்வா ஒரு மாசமா வீட்டுக்கு டைமுக்கு வரவே இல்ல... இன்னெக்கி காலைல திடீர்னு நித்யா பேக்க தூக்கிட்டு கிளம்பிட்டா... என்னன்னு நான் கேட்டதுக்கு மைன்ட் டிஸ்டர்பா இருக்கு... கொஞ்சம் நாள் அம்மா வீட்டுல இருந்துட்டு வரேன்னு சொன்னா... அவ போனதுல இருந்து இந்தப் பையன் வேற வெளிய வரவே இல்ல... எதுவும் புரியல எனக்கு..." என மறுபக்கம் பிரபு கலங்க,


"விடுங்க சம்மந்தி... நான் யுவனி கூட பேசி பார்க்குறேன்... அதான் அவ உங்க கிட்ட சொல்லி இருக்காளே கொஞ்சம் நாள் இருந்துட்டு வரேன்னு... பார்க்கலாம்... எந்தப் பிரச்சினையும் இல்லன்னு நம்புவோம்..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தார் ராஜாராம்.


ராஜாராம் வசந்தியிடம் பிரபு கூறியதைக் கூற அதன் பின் அவரும் நித்ய யுவனியை எதுவும் கூறவில்லை.


ஆனால் உள்ளுக்குள் மகளின் வாழ்க்கையை நினைத்து கலக்கமாக இருந்தது.


நித்ய யுவனியோ எந்தப் பிரச்சினையும் இல்லாதது போல் சாதாரணமாக இருந்தாள்.


சொல்லப் போனால் முன்பை விட நன்றாக இருந்தாள்.


மறுநாள் காலையில் சற்று தாமதமாகவே எழுந்தாள் நித்ய யுவனி.


தன் அறையிலிருந்து வெளியே வர நண்பர் பட்டாளமே ஹாலில் அவளுக்காகக் காத்திருந்தது.


நித்ய யுவனி வரும் போது அனைவரும் அவளை முறைக்க அங்கு நின்று அவர்களை உபசரித்துக் கொண்டிருந்த வசந்தியைப் பார்த்து,


"எல்லாம் உன் வேலை தானாம்மா... சர்வேஷ் கிட்ட சொல்ல வேணான்னு சொன்னதும் உடனே இவங்க கிட்ட சொல்லிட்டியா.." எனக் கேட்டாள் நித்ய யுவனி.


ஜனனி, "ஆன்ட்டி ஒன்னும் எங்க கிட்ட எதுவும் சொல்லல... பிரபுப்பா தான் கால் பண்ணி விஷயத்த சொன்னாரு... எதுக்கு நீ இப்போ இங்க வந்து குந்திட்டு இருக்க.." எனக் கோவமாகக் கேட்க,


பிரியா, "ஆமா நித்து... நீயும் கொஞ்சம் விட்டு குடுத்து போனா தான் என்ன... ஆரம்பத்துல இருந்தே நாங்க எல்லாரும் உனக்கு தான் சப்போர்ட்டா இருந்திருக்கோம்... இப்பவாவது சர்வாண்ணா பக்கம் கொஞ்சம் யோசி..." என்றாள்.


ஹரிஷ், "நான் உனக்கு அன்னைக்கே சொன்னேன்மா... உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை வரும் போது நான் கூட இருக்கல தான்.. ஆனா இவங்க சொல்லி விஷயம் தெரிஞ்ச எனக்கே சஜீவ் பக்கம் இருந்த நியாயத்த புரிஞ்சிக்க முடிஞ்சது... அவ்வளவு லவ் பண்ண உனக்கு அவன் மேல நம்பிக்கை இல்லையா..." என்க,


"இங்க பாரு யுவனி... ஆல்ரெடி யாரோ‌ பண்ண தப்பால தான் ரெண்டு பேரும் பிரிஞ்சி இருந்தீங்க... இனியாவது சேர்ந்து சந்தோஷமா வாழுற வழியைப் பாரும்மா.." என்றான் ஆரவ்.


"நிது... உன் எல்லா நல்லது கெட்டதுலயும் இந்த கொஞ்சம் வருஷமா நான் உன் கூடவே இருந்திருக்கேன்... ஆனா இந்த விஷயத்துல நான் நிச்சயம் சஜீவ்வுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்..." என சித்தார்த் கூற,


திவ்யா, "வர வர உன் பிடிவாதத்துக்கு அளவே இல்லாம போயிடுச்சு நித்தி... இன்னும் சின்ன புள்ள மாதிரி சண்டை போட்டுட்டு வீட்ட விட்டு வர..." என்றாள்.


பிரேம், "சர்வாக்கு ஒரேயொரு சான்ஸ் குடுமா... ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்..." என்க,


"நாங்க இவ்வளவு பேரும் பேசுறது உன் காதுல விழலையா நித்தி... பதிலே சொல்லாம அமைதியா இருக்க.." எனத் திட்டினாள் அஞ்சலி.


அனைவரும் பேசி முடிக்கும் வரை கை கட்டி அவர்களை வேடிக்கை பார்த்த நித்ய யுவனி,


"எல்லாரும் பேசி முடிஞ்சிட்டீங்களா... இல்ல இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா... " என்க ஜனனி ஏதோ கூற வரவும், "வெய்ட் ஜெனி... நான் பேசுறேன் இப்போ..." எனக் கை நீட்டி‌ அவளைத் தடுத்தாள்.


நித்ய யுவனி, "இப்போ என்ன நடந்துச்சின்னு ஆளாளுக்கு வந்து அட்வைஸ் பண்ணுறீங்க... நான் சொன்னேனா நான் சர்வேஷ் கூட சண்டை போட்டுட்டு வீட்ட விட்டு வந்தேன்னு... நீங்களா ஒன்னு புரிஞ்சிக்கிட்டு பேசுறீங்க... நான் அவன் பக்க நியாயத்த கேக்காம இருந்தது உண்மை தான்... ஆனா அதுக்கப்புறம் அன்னைக்கு ஜெனி சொன்னதும் நான் அவனுக்கு அந்த சந்தர்ப்பத்த குடுத்தேன்... எனக்கு சர்வேஷ் மேல கோவமோ வெறுப்போ இல்ல... நான் இதை அன்னைக்கே ஜெனி கிட்ட சொல்லிட்டேன்... நான் ஒன்னும் அந்த வீட்ட விட்டு நிரந்தரமா வரல... நெஜமா எனக்கு கொஞ்சம் மைன்ட் டிஸ்டர்பா இருந்தது... அதனால தான் கொஞ்சம் நாள் இங்க வந்து இருக்கலாம்னு வந்தேன்..." என்றவள் நேற்று காலை சஜீவ் பேசியதைக் கூறினாள்.


அனைவருமே நித்ய யுவனி கூறியதில் அதிர, "சர்வேஷுக்கு முன்னாடி இருந்தே மண்டைல மசாலா இல்ல..." என நித்ய யுவனி கூறவும் அங்கு ஓரமாக நின்று நித்ய யுவனி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வசந்தி அவளை முறைத்தார்.


அவரைக் கண்டு வாயை மூடி சிரித்த நித்ய யுவனி, "இதான் நடந்தது... நான் இன்னும் அங்கயே இருந்தேன்னா கோவத்துல அவன ஏதாவது சொல்லி எங்க ரெண்டு பேருக்கும் இடைல அந்த சுசித்ரா ஆசைப்படுறது போலவே பிரச்சினை வந்திருக்கும்... சர்வேஷ் சின்ன மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்ல இருக்கான்... அதான் நான் அதை இன்க்ரீஸ் பண்ணாம இருக்க இங்க வந்தேன்... இனியாவது கொஞ்சம் தனியா யோசிப்பான் தானே..." என்றாள்.


திவ்யா, "பட் சுசித்ரா இன்னுமே அந்த வீட்டுல இருக்காளே... ஏதாவது பண்ணி உங்க ரெண்டு பேருக்கும் இடைல பிரச்சினைய பெரிசாக்கிட்டான்னா என்ன பண்றது..." என்க சிரித்த நித்ய யுவனி,


"அவள் ஒரு வேஸ்ட் ஃபெலோவ்... ஆள் தான் பார்க்க அப்படி இருக்கா... எதுவுமே அவளால உறுப்படியா பண்ண முடியாது... ஒரே ஃபேமிலியே... அதான் சர்வேஷுக்கும் கொஞ்சமா அந்தக் குணம் ஒட்டிக்குச்சு..." என்க இப்போது அனைவருமே சிரித்தனர்.


ஹரிஷ், "பேச்சோட பேச்சா எங்க ஃப்ரெண்ட ரொம்ப இன்சல்ட் பண்றமா நீ..." என்க,


நித்ய யுவனி, "என் புருஷன்... நான் என்ன வேணாலும் சொல்லுவேன் அவன... நான் மட்டும் தான் சொல்லுவேன்... வேற யாருக்கும் என் சஜுவ இன்சல்ட் பண்ண விட மாட்டேன்..." என்றாள் புன்னகையுடன்.


பின் அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பப் பார்க்க நித்ய யுவனி, "ஹா... சொல்ல மறந்துட்டேன்... நான் சொன்னது எதுவும் சர்வேஷுக்கு தெரிய வேணாம்... என்னைப் பத்தின எந்த இன்ஃபார்மேஷனும் அவனுக்கு குடுக்க வேணாம்... உங்க யாருக்கும் எதுவும் தெரியாதது போலவே இருங்க... எனக்கு நம்பிக்கை இருக்கு... கூடிய சீக்கிரம் அவனே என்னைத் தேடி வருவான்... அது வரை நான் இங்க தான் இருப்பேன்... ப்ளீஸ் இதை மட்டும் பண்ணுங்க.." என்க அனைவரும் சம்மதித்தனர்.


_______________________________________________


நித்யா சென்ற பின் அவளின் நினைவு தன்னைத் தாக்கும் போதெல்லாம் வேலையில் தன்னை மூழ்கடித்திடுவான் சஜீவ்.


எப்போதும் ஆஃபீஸே கதியெனக் கிடந்தான்.


இதனால் அவனுக்கு ஆஃபீஸில் பதவி உயர்வு கிடைத்தது.


அதன் பின் வீட்டுக்கு கூட வருவது அரிதானது.


சஜீவ் வீட்டுக்கு வராததால் சுசித்ராவுக்கு தன் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை.


ஆனால் முடிந்த மட்டும் சஜீவ் விரைவில் தன்னை திருமணம் செய்ய வைத்திட வேண்டும் என ஈஷ்வரியை மூளைச் சலவை செய்து கொண்டிருந்தாள்.


சஜீவ் நித்ய யுவனியைப் பற்றி யாரிடமும் கேட்டு அறியக் கூட முயற்சிக்கவில்லை.


தன்னை விட்டுப் பிரிந்திருந்தால் மட்டுமே தன்னவளுக்கு நல்லது என அடிக்கடி தனக்கே சொல்லிக் கொண்டான்.


நித்ய யுவனி கேட்டுக் கொண்டதற்காக நண்பர்கள் அமைதியாக இருந்தாலும் சஜீவ் ஒரு வார்த்தை கூட நித்ய யுவனியைப் பற்றி விசாரிக்காதது அவர்களுக்கு பயமாக இருந்தது.


ஆனால் நித்ய யுவனியின் பேச்சைத் தட்டக் கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தனர்.


நாட்கள் மாதங்களாக வேகமாக உருண்டோட அன்று வழமை போல தன்னவளின் நினைவில் கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்தான் சஜீவ்.


நித்ய யுவனி சஜீவ்வைத் தன் மடுயில் ஏந்தி காதலுடன் தன் தலை கோதுவது போல் கற்பனை செய்து கொண்டிருந்தவனை மொபைல் ஒலி எழுப்பி நிஜ உலகுக்கு கொண்டு வந்தது.


சஜீவ் அழைப்பை ஏற்று காதில் வைக்க மறுபக்கம் ஆரவ், "டேய் ஏன் டா இப்படி பண்ற... நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்பவோ வந்துட்டாங்க... நீ மட்டும் தான் இன்னும் இல்ல... யாரோ போல டைமுக்கு வந்துட்டு போக போறியா..." என எடுத்ததும் சஜீவ்வைத் திட்ட,


சஜீவ், "ப்ச்... வரேன்டா... மறந்துட்டேன்..." என ஏனோ தானோவென பதல் அளித்தான்.


கடுப்பான ஆரவ், "நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்லடா... ஒழுங்கா சீக்கிரம் வந்து சேருர வழிய பாரு... மவனே ஏதாவது சாக்கு போக்கு சொல்லி வராம மட்டும் இருந்து பாரு.. அதுக்கப்புறம் இருக்கு உனக்கு.." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.


ஆரவ் இணைப்பைத் துண்டிக்கவும் பெருமூச்சு விட்டபடி எழுந்தமர்ந்தான் சஜீவ் சர்வேஷ்.


❤️❤️❤️❤️❤️





- Nuha Maryam -
 
Top