• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Nuha Maryam

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
110
மண்டபத்திலிருந்து அவசரமாக வெளியேறிய சஜீவ் நேரே சென்று நின்ற இடம் கடற்கரை தான்.

கால் போகின்ற போக்கில் கடற்கரை மணலில் நடந்தவனின் மனம் முழுவதையும் நித்ய யுவனியே ஆக்கிரமித்திருந்தாள்.

நித்ய யுவனியுடனான ஒவ்வொரு பொழுதுகளும் அவனுக்கு நினைவு வந்தன.

ஊட்டியில் வைத்து முதன் முதலாக அவளை சந்தித்த போது பாவாடை தாவணியில் இரட்டைப் பிண்ணலிட்டு குழந்தையோடு குழந்தையாய் விளையாடியவளின் பால் முகம் சஜீவ்வின் மனதில் அன்றே ஆழப் பதிந்தது.

அதன் பின் நீர்வீழ்ச்சியின் அருகே இருந்த பாறையில் நித்ய யுவனி கால் வழுக்கி விழப் போன போது அவளைத் தன் கைகளில் தாங்கிப் பிடித்தது...

அன்று நித்ய யுவனி அங்கு வரும் முன்னே சஜீவ் ராஜேஷுடன் வந்து விட்டான்.

நித்ய யுவனி வந்ததிலிருந்து அவளின் ஒவ்வொரு செயல்களையும் ஏனென்றே தெரியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் சஜீவ்.

அதனால் தான் அவள் விழப் போனது தெரிந்ததும் ஓடிச் சென்று அவளைத் தாங்கினான்.

நித்ய யுவனி ஊட்டியில் இருக்கும் வரை அவளே அறியாது அவள் செல்லுமிடம் எல்லாம் சஜீவ் பின் தொடர்ந்தான்.

அப்போது நித்ய யுவனியின் மீது வெறும் ஈர்ப்பு மட்டுமே இருப்பதாக சஜீவ் நினைத்துக் கொண்டிருந்தான்.

அன்றே தனக்கு அவள் மீதிருந்த உணர்வைப் புரிந்து கொண்டிருந்தால் இருவருக்கும் இடையில் இவ்வளவு பிரச்சினைகளோ பிரிவோ இருந்திருக்காதென காலம் கணிந்தே உணர்ந்தான் சஜீவ்.

சிறு பெண்ணின் மனதைக் கெடுக்க விரும்பாது தான் நித்ய யுவனியை விட்டுப் பிரிய நினைத்தான் சஜீவ்.

ஆனால் நித்ய யுவனி அதற்கு வாய்ப்பளிக்கவே இல்லை.

நித்ய யுவனியின் வெளிப்படையான பேச்சு, குழந்தை மனம், சிறிய சிறிய குறும்புகள் என அனைத்துமே சஜீவ்வை மேலும் மேலும் நித்ய யுவனியின் பக்கம் ஈர்த்தன.

சஜீவ்வின் மனம் நித்ய யுவனியுடன் பழகுவதா அல்லது அவளை விட்டு தள்ளி இருப்பதா என இரு கொள்ளி எறும்பாய் தவிக்க விதி சுசித்ரா மூலம் தன் ஆட்டத்தை ஆரம்பித்தது.

நித்ய யுவனியை விட்டுப் பிரிந்து இருந்த காலத்தில் தான் புரிந்து கொண்டான் நித்ய யுவனி போலவே சுசித்ரா ஆரம்பத்தில் நடந்தது (நடித்தது) தான் சஜீவ் அவளைக் காதலிப்பதாக அவனை எண்ண வைத்தது என.

சஜீவ்வின் மனம் உண்மையிலேயே ஆரம்பத்திலிருந்து நித்ய யுவனியைத் தான் விரும்பியது.

சுசித்ரா ஆரம்பத்தில் குழந்தைத்தனமாக நடித்த போது நித்ய யுவனியின் செயல்களையே சஜீவ்விற்கு நினைவூட்ட அதனால் சுசித்ராவை காதலித்தான்.

இல்லை இல்லை காதலிப்பதாக எண்ணிக் கொண்டான்.

ஆனால் எவ்வளவு நாள் தான் நடிப்பும் நாடகமும் நிலைக்கும்.

அதன் பின் சுசித்ராவின் சுயரூபம் சஜீவ்விற்கு வெளிப்பட பெண்களின் காதல் மீதிருந்த நம்பிக்கையே அவனுக்கு இல்லாமல் போனது.

அதே நேரம் சரியாக நித்ய யுவனியும் காதல் என்று கூறிக் கொண்டு வர எதுவுமே சிந்திக்காமல் தன் வலியை மறக்க அவளைக் காயப்படுத்த நினைத்தான் சஜீவ்.

நாட்கள் செல்ல நித்ய யுவனியின் கள்ளங்கபடமில்லாத மனம் சஜீவ்வை அவள் மீது காதல் கொள்ள வைத்தது.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் அவனுக்கு மனம் இடமளிக்கவில்லை.

எங்கே நித்ய யுவனியும் தன்னை ஏமாற்றி விடுவாளோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் தான் யூ.எஸ்ஸிலிருந்து திரும்பிய போது நித்ய யுவனியின் கண்களில் தனக்கென தெரிந்த காதலில் தன் காதலை உணர்ந்தான் சஜீவ்.

அதன் பின் எந்தப் பிரச்சினையும் இன்றி இருவரது வாழ்வும் அழகாக செல்ல மீண்டும் சஜீவ் பெற்ற தாயாலே ஏமாற்றப்பட்டான்.

அதை நினைக்க இப்போது கூட தன் மடத்தனத்தை நொந்து கொண்டான்.

ஒவ்வொரு முறையும் தான் ஏமாற்றப்பட அதன் வலியை அனுபவித்தது என்னவோ நித்ய யுவனி தான்.

இந்த ஐந்து வருடத்தில் எவ்வளவு வலிகள், வேதனைகளைக் கடந்து விட்டனர்.

சஜீவ்விற்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

தற்போது கூட குடும்ப மருத்துவர் சொன்னதை உண்மை என நம்பி தன்னவளுக்கு நன்மை செய்வதாக எண்ணி அவளைக் கஷ்டப்படுத்தி விட்டான்.

நித்ய யுவனிக்கு தான் பொருத்தமானவன் இல்லையா என்று தான் சஜீவ்விற்கு தோன்றியது.

_______________________________________________

சுசித்ரா, "என்ன சொல்ற... நிஜமாத்தான் சொல்றியா... நீ பார்த்தியா.." என மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

மறுபக்கம், "ஆமா சுச்சி... நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்... அவ ப்ரெக்னன்ட்டா இருக்கா..." என்க,

"இல்ல... இது எப்படி நடக்கலாம்... அவ தான் சர்வா கூட கோவமா இருந்தாளே..." என்றாள் சுசித்ரா.

மறுபக்கம், "நீ என்ன இருபத்தி நாழு மணி நேரமும் அவங்க ரூம வாட்ச் பண்ணிட்டு இருந்தியா... உள்ள என்ன நடந்து இருக்கும்னு உனக்கு எப்படி தெரியும்..." என்கவும்,

சுசித்ரா, "நான் அவள அந்த குழந்தைய பெத்துக்க விட மாட்டேன்... சர்வாவோட சொத்து மொத்தமும் எனக்கு வேணும்... அதை அடைய எது தடையா இருந்தாலும் நான் அதை அழிச்சே தீருவேன்..." என்றாள் வெறியுடன்.

"ஏய்... பைத்தியமா நீ... ஜெயிலுக்கு போக போறியா... நான் இதை உன் கிட்ட சொன்னதே இனி மேலாவது நீ அந்த சர்வா கிட்ட இருந்து விலகி இருக்கனும்னு தான்... நீ என்னன்னா ஏதேதோ சொல்ற..." என மறுபக்கம் இருந்தவர் கூறவும்,

"என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்... யாரும் எனக்கு அட்வைஸ் பண்ண அவசியமில்ல.." எனக் கோவமாகக் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தாள் சுசித்ரா.

பின் மீண்டும் யாருக்கோ அழைப்பு விடுத்த சுசித்ரா, "நான் சொல்றத கவனமா கேட்டுக்கோ... நாளைல இருந்து அந்த நித்யா எங்க போறாலோ அவள நீ ஃபாலோ பண்ணு... அவ தனியா மாட்டுற சமயம் அவ மேல வண்டிய ஏத்தி ஆக்ஸிடன்ட் பண்ணிரு... இப்பவே உன் அக்கவுன்ட்டுக்கு அட்வான்ஸ் மனிய ட்ரான்ஸர் பண்றேன்... வேலைய முடிச்சதும் இதை விட அதிகமா தரேன்... நாளைக்கு தான் அந்த நித்யா உயிரோட இருக்குற கடைசி நாளா இருக்கனும்..." என்று கட்டளை இட்டு விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அவ்வளவு நேரமும் சுசித்ரா பேசுவதை மறைந்திருந்து கேட்ட ஜீவன் சத்தமில்லாமல் அவ் இடத்தை விட்டு அகன்றது.

நாட்கள் - அத்தியாயம் 37 (2)

 
Top