• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Nuha Maryam

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
110
சஜீவ் சர்வேஷ், நித்ய யுவனி இருவருமே மற்றவரின் அணைப்பை கண்களை மூடி அனுபவித்துக் கொண்டிருக்க, "ஐ லவ் யூ சஜு... லவ் யூ அ லாட்..." என்றாள் நித்ய யுவனி.


கண்கள் கலங்க அவளை விட்டு விலகிய சஜீவ், "இதை உன் வாயால கேக்கனும்னு எவ்வளவு நாள் காத்திருந்தேன் தெரியுமா யுவி... திரும்ப நீ என்னை பழையபடி சஜுன்னு கூப்பிட மாட்டியான்னு ஏங்கி இருக்கேன்... லவ் யூ டூ யுவி... ஐ லவ் யூன்னு சொல்றது ரொம்ப சின்ன வார்த்தை... உன்ன எந்தளவுக்கு காதலிக்கிறேன்னு வார்த்தையால சொல்ல தெரியல டி... உன்ன இனிமே யாருக்காகவும் எந்த இடத்துலயும் விட்டு குடுக்க மாட்டேன் யுவி... ஐ ப்ராமிஸ் யூ... நாம இழந்த ஒவ்வொரு நொடியையும் நான் உனக்கு மீட்டு தருவேன் யுவி..." என்றவன் தன்னையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் நித்ய யுவனியின் முகத்தை கைகளில் ஏந்தி அவள் இதழ்களை சிறை செய்தான்.


ஆனால் இம்முறை நித்ய யுவனி அவனைத் தடுக்கவில்லை.


இத்தனை நாள் பிரிவையும் போக்குவது போல் இருந்தது அந்த இதழ் முத்தம்.


சற்று நேரத்தில் நித்ய யுவனி மூச்சு விட சிரமப்படவும் அவள் இதழ்களை விடுவித்து விட்டு அவளை அணைத்துக் கொண்டான் சஜீவ்.


நித்ய யுவனி, "சஜு... உனக்கு கதை சொல்லி நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன்... கல்யாணத்துல சாப்பிட்டது எல்லாத்தையும் வீட்டுக்கு வந்ததும் வாமிட் பண்ணிட்டேன்... ரொம்ப பசிக்கிது இப்போ..." என உதட்டைப் பிதுக்கினாள்.


"அச்சோ... சாரி யுவி... நீ இப்போ நல்லா சாப்பிடனும்... அப்போ தான் நம்ம குழந்தை நல்லா வளரும்... ஆரோக்கியமா இருக்கும்... நீ இரு.. நான் கீழ போய் உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்..." என சஜீவ் அவளை விலக்கி விட்டு எழுந்து கொள்ள அவனை இயன்ற அளவு முறைத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் நித்ய யுவனி.


சஜீவ், "என்னாச்சு யுவி... ஏன் கோவமா இருக்க... நீ தானே பசிக்கிதுன்னு சொன்ன... அதான் எழுந்திரிச்சேன்... அதுக்கு ஏன் முகத்தை திருப்பிட்டு இருக்க..." எனப் புரியாமல் கேட்க,


"ஆமா.. நான் எனக்கு தான் பசிக்கிதுன்னு சொன்னேன்... பட் நீ என்னடான்னா உன் குழந்தைய பத்தி பேசுற... உனக்கு கொஞ்சம் கூட என் மேல லவ்வே இல்ல... குழந்தைக்காக தான் எல்லாம் பண்ற... இப்போவே குழந்தைய பத்தி மட்டும் தான் யோசிக்குற... குழந்தையும் பொறந்துட்டா என்னைக் கண்டுக்கவே மாட்ட போல..." என்றாள் நித்ய யுவனி முறைப்புடன்.


"ஐயோ..." என தலையில் கை வைத்த சஜீவ், "நான் எப்போ டி எனக்கு நீ முக்கியம் இல்லன்னு சொன்னேன்... நீ ஆரோக்கியமா இருந்தா தான் குழந்தையும் ஆரோக்கியமா இருக்கும்னு தானே டி சொன்னேன்... நமக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் நீ தான் என்னோட முதல் குழந்தை... நான் தான் உன்னோட முதல் குழந்தை... உனக்கு அப்புறம் தான்‌ எனக்கு எல்லாருமே... நம்ம காதலுக்கு கெடச்ச பரிசு தான் நம்ம குழந்தை... என் அன்பு மொத்தத்தையும் நான் உனக்கு தரேன்... உன் அன்பு மொத்தத்தையும் நீ எனக்கு தா... நம்ம ரெண்டு பேரோட அன்பையும் சேர்த்து நம்ம குழந்தைக்கு குடுக்கலாம்... ஓக்கேயா... நான் இப்போ போய் என் யுவிக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரவா.." எனப் புன்னகையுடன் கேட்டான்.


நித்ய யுவனி மறுப்பாகத் தலையசைக்கவும், "இன்னும் என்ன டி..." என்றான் சஜீவ்.


நித்ய யுவனி புன்னகையுடன் சஜீவ்வை நோக்கி தன் கரங்களை நீட்ட அவளைப் பொய்யாக முறைத்த சஜீவ் தன்னவளைப் பூக் குவியலைத் தூக்குவது போல் தன் கரங்களில் ஏந்தவும் அவன் கழுத்தை சுற்றி மாலையாக கரங்களைக் கோர்த்துக் கொண்டாள் நித்ய யுவனி.


சஜீவ் நித்ய யுவனியைத் தூக்கிக் கொண்டு சமையலறை சென்றவன் அவளை சமையலறை மேடை மீது அமர வைத்தான்.


நித்ய யுவனி, "வாயெல்லாம் என்னவோ போல இருக்கு சஜு... ஏதாவது ருசியா நல்ல காரமா பண்ணிக் கொடு... இல்ல இல்ல புளிப்பா பண்ணு... அது தான் நல்லா இருக்கும்.... ஹா இல்ல சஜு... இனிப்...." எனக் கூறிக் கொண்டு வந்தவளின் பேச்சு தடைப்பட்டது சஜீவ்வின் முறைப்பில்.


அவனைப் பார்த்து இளித்து வைத்த நித்ய யுவனி, "ஈஈஈஈ... நீ என்ன பண்ணி தந்தாலும் ஓக்கே சஜு... நான் சாப்பிடுவேன்..." என நல்ல பிள்ளை போல் கூறவும் உதட்டைக் கடித்து தனக்கு வந்த சிரிப்பை அடக்கிய சஜீவ் குளிரூட்டியில் இருந்த தோசை மாவை எடுத்து வெளியே வைத்தான்.


நித்ய யுவனி, "ஆமா சஜு... கேக்கவே மறந்துட்டேன்... நீ எப்படி இந்த டைம் எங்க வீட்டுக்கு வந்த... அப்பா அம்மா கூட ஏர்லியா தூங்கிட்டாங்களே..." என்க,


"மண்டபத்துல உன்ன காணாம நேரா பீச்சுக்கு தான் போனேன்... உன்ன பத்தியே யோசிச்சிட்டு இருந்தேன்... சரி என்ன நடந்தாலும் பரவாயில்லை.. இனிமே உன்ன விட்டு பிரிஞ்சி இருக்க முடியாதுன்னு டைம கூட பார்க்காம இங்க கிளம்பி வந்துட்டேன்... நான் வரும் போது அத்தையும் மாமாவும் தூங்கி இருக்கல போல... நான் வந்து கதவைத் தட்டவும் அத்தை தான் வந்து திறந்தாங்க... நான் இருந்த கோலத்த கண்டு ரொம்ப பயந்துட்டாங்க... மாமாவும் வந்துட்டாரு சரியா... அத்தை என்னாச்சு மாப்பிள்ளைன்னு அதிர்ச்சியா கேட்டாங்க... நான் இருந்த நிலமைல அது ஒன்னுக்கும் பதில் சொல்லத் தோணல... யுவின்னு மட்டும் தான் சொன்னேன்... மாமா தான் நீ மேல ரூம்ல இருக்கிறதா சொன்னாரு... உடனே எதுவும் பேசாம மேல வந்துட்டேன்... பாவம் அவங்க என்ன நெனச்சாங்களோ தெரியல..." எனச் சட்னியை அறைத்தபடி கூறினான் சஜீவ்.


நித்ய யுவனி மீண்டும் ஏதோ கேட்க வாயைத் திறக்கவும் அவள் வாயில் கேரட்டை அடைத்த சஜீவ்,


"போதும் யுவி... ஆல்ரெடி நிறைய பேசிட்ட... கொஞ்சம் அந்த வாய்க்கு ரெஸ்ட்ட குடு... நான் சமைச்சி தரும் வர வாயவே திறக்கக் கூடாது.." எனக் கட்டளையிடவும் பூம் பூம் மாடு போல் தலை ஆட்டினாள் நித்ய யுவனி.


அதன் பின் நித்ய யுவனி தனக்காக முதல் முறை சமைக்கும் சஜீவ்வையே விழியகற்றாமல் ரசித்துக் கொண்டிருக்க சற்று நேரத்தில் அவள் முகத்தின் முன் சஜீவ் சொடக்கிடவும் தன்னிலை அடைந்தாள் நித்ய யுவனி.


நித்ய யுவனி அவனைக் கேள்வியாகப் பார்க்க அவள் முன் சூடாக ஆவி பறக்கும் நெய்த் தோசையை நீட்டினான் சஜீவ்.


அதனைக் கண்டதும் நித்ய யுவனியின் கண்கள் பளிச்சிட்டன.


ஏனென்றால் நித்ய யுவனி கேட்டது போலவே சஜீவ் காரமாக பூண்டுச் சட்னியும் புளிப்பாக புளிச் சட்னியும் இனிப்புக்கு தேனும் வைத்திருந்தான்.


அதனை எடுத்து சுவைத்த நித்ய யுவனி, "ம்ம்ம்ம்... வாவ் சஜு... செம்ம டேஸ்ட்டா இருக்குடா... பேசாம நீ செஃப் ஆகிடு..." என்றாள் சப்புக் கொட்டியபடி.


சஜீவ், "அப்படீங்களா மேடம்... நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்... நீங்களே பார்த்து ஏதாவது நல்ல ஹோட்டல்ல வேலை போட்டு தந்தா நல்லா இருக்கும்..." என்றான் கேலியாக.


நித்ய யுவனியும் சஜீவ்வும் மாறி மாறி ஊட்டி விட்டுக் கொள்ள இரண்டு தோசை சாப்பிட்டதுமே சஜீவ் தனக்குப் போதும் என்று விட்டான்.


நித்ய யுவனி ஒவ்வொன்றாக சாப்பிட சஜீவ் அவளுக்கு தோசை வார்த்துக் கொடுத்தான்.


நித்ய யுவனியோ ஐந்து தோசைக்கு மேல் சாப்பிட்டு விட்டு இன்னும் கேட்கவும் அதிர்ந்த சஜீவ்,


"என்ன யுவி... இன்னுமா உன் பசி போகல.." என்க,


"போ சஜு... இவ்வளவு நேரமா உன் புள்ள தான் எல்லாத்தையும் சாப்பிட்டுச்சு... இனிமே தான் நான் சாப்பிட போறேன்... ஒழுங்கா எனக்கு பண்ணிக் குடு.." எனக் கட்டளை இட்டாள் நித்ய யுவனி.


சஜீவ் புன்னகையுடன் சம்மதமாகத் தலையசைத்தவன் தன்னவள் போதும் என்று கூறும் வரையுமே சலிக்காமல் அவளுக்கு தோசை வார்த்து தானே ஊட்டியும் விட்டான்.


தங்கள் அறை வாசலில் நின்று ராஜாராமும் வசந்தியும் இருவரையும் கண்கள் கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


வசந்தி, "எனக்கு இப்போ தாங்க மனசுக்கு திருப்தியா இருக்கு... எங்க நம்ம பொண்ணு இப்படியே இருந்துடுவாளோன்னு பயமா இருந்தது... ஆனா மாப்பிள்ளை வந்ததும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு... இவங்க ரெண்டு பேருக்கும் யாரு கண்ணும் பட்டுடக் கூடாது... இனிமேலாவது எந்தப் பிரச்சினையும் இல்லாம சந்தோஷமா வாழனும்..." என்க,


அதனை ஆமோதித்த ராஜாராம், "ஆமா வசு... பல வருஷம் கழிச்சி என் பொண்ணு முகத்துல அந்த சந்தோஷத்தைப் பார்க்குறேன்... நீ மாப்பிள்ளை மேல நம்பிக்கை வெச்சி சொன்னங்குறதுக்காக தான் யுவனி அவ்வளவு மறுத்தும் அவள மாப்பிள்ளை கூட அனுப்பி வெச்சேன்... ஆனா அவ திரும்ப வீட்டுக்கு வந்து நிற்கவும் எங்க நம்ம பொண்ணு மனச புரிஞ்சிக்காம தப்பு பண்ணிட்டோமோன்னு குற்றவுணர்ச்சியா இருந்தது... ஆனா இனிமே எனக்கு அந்த கவலை இல்ல... என் பொண்ணு எந்தளவு கஷ்டப்பட்டாளோ அதை விட பல மடங்கு சந்தோஷமா மாப்பிள்ளை கூட வாழ போறா... அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு..." என்றார் கண்களைத் துடைத்தபடி.


_______________________________________________


அன்று பிரபு வீட்டுக்கு வரும் போது வீடே அமைதியாக இருந்தது.


சுசித்ரா ஹாலில் மொபைல் நோண்டிக் கொண்டிருக்க பிரபு அவளிடம், "ஈஷ்வரி எங்க சுச்சி... எப்பவும் உன் கூட தானே இருப்பா..." என்க,


பிரபு வேண்டுமென்றே அவ்வாறு கூறுவதைப் புரிந்து கொண்ட சுசித்ரா அவரை முறைத்தவாறு, "தெரியல...‌ரூம்ல தான் இருக்காங்கன்னு நெனக்கிறேன்.." என்று விட்டு எழுந்து சென்றாள்.


பிரபு தன் அறைக்குச் செல்லும் போது ஈஸ்வரி தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தார்.


பிரபு, "என்னாச்சு ஈஷ்வரி... ஏன் தலைல கைய வெச்சி உக்காந்துட்டு இருக்க... தலைவலியா... வழமையா நீ தானே யாருக்காவது தலைவலிய உண்டு பண்ணுவ.." என்றார் கேலியாக.


பிரபுவின் குரலில் தலையை நிமிர்த்திய ஈஷ்வரியைக் கண்டு அதிர்ந்தார் பிரபு.


எப்போதும் ஒரு நிமிர்வுடன் சுற்றுபவர் இன்றோ கண்கள் கலங்கி சோகமே உருவாக அமர்ந்து இருந்தார்.


ஈஷ்வரியை இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட இந்தளவு உடைந்து போய் பார்த்திராத பிரபுவிற்கு மனைவியின் நிலை கவலையைத் தந்தது.


பிரபு, "ஈஷ்வரி... என்னாச்சு... ஏன் அழுதுட்டு இருக்க..." எனப் பதட்டமாக வினவ,


"என்... என்னங்க... சுச்... சுச்சி... என் சர்வாவோட குழந்தைய அழிக்க பாக்குறா..." என அழுதார் ஈஷ்வரி.


அதனைக் கேட்டு முதலில் அதிர்ந்த பிரபு பின் தன் மனைவியைப் பற்றித் தெரிந்து, "என்ன... புதுசா இன்னொரு நாடகம் ஆரம்பிக்கிறியா... இங்க பாரு ஈஷ்வரி... திரும்ப அந்த சுசித்ரா கூட சேர்ந்து என் பையன் வாழ்க்கைய அழிக்க நெனச்ச நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்..." என்று மிரட்டினார்.


ஈஷ்வரி, "ஐயோ... நம்புங்கங்க... சத்தியமா சொல்றேன்... நான் சொல்றது நெஜம்..." என்று விட்டு சுசித்ரா யாருடனோ நித்ய யுவனியை ஆக்ஸிடன்ட் பண்ண சொன்னதைக் கூறினார்.


ஈஷ்வரி தான் சுசித்ரா பேசும் போது மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தது.


பிரபு ஈஷ்வரி கூறிய விடயத்தில் யோசனை வயப்பட ஈஷ்வரி, "எனக்கு நித்யாவ பிடிக்காம எல்லாம் இல்லைங்க... ஆனா சர்வா முதல் தடவ நம்ம கிட்ட நித்யாவ பத்தி சொல்ல முன்னாடியே நான் அவங்க ரெண்டு பேரையும் ஒன்னா பார்த்துட்டேன்... எனக்கு சுச்சிய என் மருமகளாக்க பசங்க சின்ன வயசுல இருந்தே ஆசை... எனக்கு இருக்குற ஒரே உறவு எங்க அண்ணன்... சுச்சி எங்க வீட்டு மருமகள் ஆகினா நாம எப்பவும் ஒன்னா இருப்போம்னு நெனச்சேன்... சர்வா காதலிக்கிறது தெரிஞ்சும் நான் அமைதியா இருந்தேன்... நான் வேணாம்னு சொன்னா அவனுக்கு அது தான் வேணும்னு தோணும்... அதனால தான் அமைதியா இருந்தேன்... சர்வா மனச எப்படியாவது மாத்த தான் ஹார்ட் அட்டேக் வந்தது போல நாடகம் ஆடினேன்... நித்யாவுக்கும் அப்போ பெரிசா வயசாகல... இது வயசுக் கோளாறுல வந்த காதல்... சோ சீக்கிரம் அவளும் சர்வாவ மறந்துடுவான்னு நெனச்சேன்... சுச்சி சொல்லி தான் நான் நித்யா கிட்ட அப்படி எல்லாம் பேசினேன் அன்னைக்கு... சர்வா எனக்காக எப்படியும் சுச்சிய கல்யாணம் பண்ணிக்குவான்னு நெனச்சேன்... ஆனா அதுக்குள்ள அவனுக்கு உண்மை தெரிஞ்சு என் கூட பேசுறதையே விட்டுட்டான்... ஆனா திடீர்னு அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பாங்கன்னு நான் எதிர்ப்பார்க்கல... கல்யாணம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் இனி என்ன பண்ண முடியும்னு நெனச்சேன்... ஆனா சுச்சி நித்யா சர்வாவ நிச்சயம் மன்னிக்க மாட்டா... அவ சர்வாவ விட படிச்சிருக்கா... டாக்டர் வேற... அதை வெச்சி சர்வாவ இன்சல்ட் பண்ணுவா... நிச்சயம் சேர்ந்து வாழ மாட்டாங்கன்னு சொன்னா... அதை நம்பி தான் நான் சர்வாவையும் நித்யாவையும் பிரிக்க நெனச்சேன்... சுசித்ரா சொன்னது போலவே நித்யா வந்ததுல இருந்து ரொம்ப திமிரா பேசவும் சர்வா கூடவும் அவ இப்படி தான் நடந்துக்குறான்னு தான் நான் அவ மேல கோவப்பட்டேன்... நித்யா நிச்சயமா சர்வா கூட சேர்ந்து வாழ மாட்டான்னு தான் நானும் சுச்சிக்கு ஹெல்ப் பண்ணேன்.. ஆனா அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்றது தெரிஞ்சிருந்தா சத்தியமா நான் அப்படி பண்ணி இருக்க மாட்டேங்க... இப்போ நித்யா எங்க வீட்டு வாரிச சுமக்குறா... அதை சுச்சி அழிக்க பாக்குறாங்க... தயவு செஞ்சி ஏதாவது பண்ணுங்க... நித்யாவுக்கும் குழந்தைக்கும் ஏதாவது நடந்தா என்னை என்னாலயே மன்னிக்கவே முடியாதுங்க... அதுக்கப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..." எனக் கதறி அழுதார்.


ஈஷ்வரியின் வார்த்தையில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்ட பிரபு, "சரி சரி... நீ அழாதே... நான் ஏதாவது பண்ணுறேன்... சர்வா கூடவும் பேசுறேன்... ஆனா உனக்கு சுச்சியோட ப்ளேன் தெரியும்னு அவளுக்கு காட்டிக்காதே... எப்பவும் போல சாதாரணமா இரு..." என்றார் பிரபு.


❤️❤️❤️❤️❤️


- Nuha Maryam -
 
Top