• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Nuha Maryam

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
110
வீடு முழுவதும் வண்ண விளக்குகளாலும் மாவிலைத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க ஈஷ்வரி அங்குமிங்கும் ஓடியபடி வேலையாட்களை வேலை ஏவிக் கொண்டிருந்தார்.


அஞ்சலி, "பப்புக் குட்டி... ஏன் அழுறீங்க... அம்மா வேணுமா செல்லத்துக்கு..." என தன் குட்டிக் கால்களையும் கைகளையும் ஆட்டி வீறிட்டு அழும் இரண்டு மாத கைக் குழந்தையை சமாதானப்படுத்த,


குழந்தையின் தாயோ தன்னவனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.


ஜனனி, "என்ன பிரேம் நீங்க... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்கீங்க... இப்படியா கிஃப்ட மறந்து வெச்சிட்டு வருவீங்க..." எனத் திட்ட,


பிரேம், "தெரியாம மறந்து வெச்சிட்டு வந்துட்டேன்டி... நான் என்ன வேணும்னா பண்ணேன்... இப்பவே போய் எடுத்துட்டு வரேன்..." என்றான் கூலாக.


அதில் இன்னும் கடுப்பான ஜனனி, "என்ன ஜோக்கா... இன்னும் கொஞ்சம் நேரத்துல ஃபங்ஷன் ஆரம்பிக்க போகுது... இப்போ போய் எடுத்துட்டு வரேன்னு சொல்ற..." என்றாள் கோவமாக.


"கூல் கூல் ஜனனிமா... உன் புருஷன அவ்வளவு தானா புரிஞ்சி வெச்சி இருக்க... என் தங்கச்சோட லைஃப்ல ரொம்ப இம்பார்ட்டன்டான நாள் இன்னைக்கு... அதுல போய் நான் ஏதாவது தப்பு பண்ணுவேனா... எல்லாம் எடுத்துட்டு வந்து தான் இருக்கேன்... சும்மா உன்ன கலாய்க்க தான் பொய் சொன்னேன்..." எனப் புன்னகையுடன் கூறினான் பிரேம்.


இடுப்பில் கையூன்றி அவனை முறைத்த ஜனனி, "இதை முன்னாடியே சொல்லி இருந்தா வீணா உங்க கிட்ட கத்தி என் எனர்ஜிய வேஸ்ட் பண்ணாம இருந்திருப்பேன் தானே..." என அதற்கும் பிரேமை கடிந்து கொள்ள,


பிரேம் ஏதோ பதில் கூற வர அதற்குள் கையில் குழந்தையுடன் அங்கு வந்த அஞ்சலி, "இங்க என்ன பண்ணிட்டு இருக்க ஜனனி... பாப்பா ரொம்ப நேரமா அழுதுட்டு இருக்கா... பசிக்குது போல... போ போய் குழந்தைய பாரு... நான் நித்திய போய் பார்த்துட்டு வரேன்.." என ஜனனியின் கையில் குழந்தையை ஒப்படைத்தாள்.


பின் அஞ்சலி நித்ய யுவனி இருந்த அறைக்குச் சென்றவள் பாதி வழியிலேயே தலையில் கை வைத்து நின்று விட்டாள்.


அஞ்சலி, "அடக் கருமமே... இதெல்லாம் பார்க்கனும்னு தலையெழுத்து எனக்கு... புதுசா கல்யாணம் ஆனவங்கள ஹனிமூன் அனுப்பி வைக்காம இங்கெல்லாம் கூட்டிட்டு வந்தா இது தான் நிலமை போல... ஒரு பச்ச மண் முன்னாடி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குறத பாரு... ஏய் திவி... அண்ணா..." என சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட தெரியாது ஒருவருக்கொருவர் கண்களாலே காதல் வசனம் பேசிக் கொண்டிருந்த திவ்யாவையும் ஹரிஷையும் திட்டினாள்.


ஒரு மாதத்திற்கு முன் தான் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திவ்யா மற்றும் ஹரிஷின் திருமணம் நடந்து முடிந்து இருந்தது.


அஞ்சலியின் கத்தலில் இருவரும் தன்னிலை அடைய ஹரிஷ் அஞ்சலியைப் பார்த்து இளித்து வைக்க திவ்யாவோ வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள்.


அஞ்சலி, "ச்சே... சகிக்கல... தள்ளி போய் ரொமான்ஸ் பண்ணுங்க..." என்று விட்டு சென்றாள்.


ஹரிஷ், "தியா..." என அழைத்துக் கொண்டு மீண்டும் திவ்யாவை நெருங்க,


"போங்க ரிஷி... உங்களால என் மானமே போகுது... நான் நித்திய பார்த்துட்டு வரேன்..." என்று விட்டு ஓடினாள் திவ்யா.


திவ்யா செல்லும் திசையைப் பார்த்து தனியே புன்னகைத்துக் கொண்டிருந்த ஹரிஷின் தலையில் குட்டி விட்டு அவனை இழுத்துச் சென்றான் ஆரவ்.


_______________________________________________


நிறைமாத வயிற்றுடன் பல மடங்கு அழகு கூடி நித்ய யுவனி தன் அறையில் கண்ணாடி முன் நின்று சேலையில் ப்ளீட்ஸ் வைக்கத் திணறிக் கொண்டிருக்க,


சத்தம் வராமல் அறைக் கதவைப் பூட்டி விட்டு அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டான் சஜீவ்.


அவன் கைகளைத் தட்டி விட்ட நித்ய யுவனி, "நானே ப்ளீட்ஸ் வைக்க முடியாம கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்... நீ வேற வந்து தொந்தரவு பண்ற..." என்றாள் கோவமாக.


மீண்டும் நித்ய யுவனியைப் பின்னிருந்து அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்த சஜீவ், "புருஷன் நான் இருக்கும் போது என் பொண்டாட்டிக்கு என்ன கவலை..." என்றவன் அவள் முன் மண்டியிட்டு சேலை மடிப்புகளைச் சரி செய்து விட்டான்.


பின் லேசாக சேலையை விலக்கி விட்டு நித்ய யுவனியின் வயிற்றில் முத்தம் வைத்து விட்டு எழுந்தான்.


நித்ய யுவனி தன்னவனைப் பார்த்து புன்னகைக்க அவர்களின் அறைக் கதவு தட்டப்பட்டது.


சஜீவ் சென்று கதவைத் திறக்க அஞ்சலியும் திவ்யாவும் வெளியே நின்றிருந்தனர்.


திவ்யா, "நீங்களும் இங்க தான் இருக்கீங்களாண்ணா... ஆன்ட்டி நித்திய கூட்டிட்டு வர சொன்னாங்க.. அதான் வந்தோம்ணா.." என்க,


சஜீவ், "நீங்க போங்கமா.. நான்‌ கூட்டிட்டு வரேன்.." என அவர்களை அனுப்பி வைத்தான்.


நித்ய யுவனியைப் பின்னிருந்து அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்தவன், "ரொம்ப அழகா இருக்க யுவி இன்னைக்கு..." என்றான் சஜீவ்.


நித்ய யுவனி, "ஆஹா... அப்படிங்களா சார்.. ஆனா நீ தினமும் இதை தான் சொல்ற... கேட்டு கேட்டு எனக்கே சலிச்சு போச்சு..." என்றாள் கேலியாக.


சஜீவ், "என் கண்ணுக்கு தினமும் உன் அழகு கூடிட்டே போகுது போல தான் தெரியுது... யுவி... இன்னைக்கு நீ போகவே வேணுமா... இங்கயே இருந்துறேன்... ஐ வில் மிஸ் யூ.." எனக் கெஞ்ச,


"ம்ஹ்ம்... இப்படி மிஸ் பண்றேன்னு சொல்லி சொல்லியே எங்க வீட்டுல போய் தங்க விடல... குழந்தை பிறக்கும் வரை அங்க தான் இருக்க போறேன்..." என நித்ய யுவனி முடிவாகக் கூற முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான் சஜீவ்.


பின் சஜீவ் நித்ய யுவனியின் கைப் பிடித்து கீழே அழைத்துச் செல்ல,


தம்பதி சகிதம் கீழே இறங்கி வரும் இருவரையும் பார்த்து இருவரின் பெற்றோரினதும் கண்கள் சந்தோஷத்தில் கலங்கின.


நித்ய யுவனியை நடுக் கூடத்தில் அமர வைத்து அவளுக்கு அருகில் சஜீவ்வையும் அமர வைத்தனர்.


சஜீவ், "யுவி... உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு..." எனப் புன்னகையுடன் கூற,


நித்ய யுவனி புரியாமல் சஜீவ்வைப் பார்த்தாள்.


சஜீவ் ஆரவ்விற்கு ஏதோ கண்களால் காட்ட அவனுக்கு சரி எனத் தலையசைத்து விட்டு வாசல் பக்கம் சென்றான் ஆரவ்.


நித்ய யுவனி வீட்டு வாசலில் பார்வையை பதிக்க அவள் கண்கள் ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் விரிந்தன.


நித்ய யுவனி, "கோபு.. கனி..." என்றவாறு எழுந்து நின்றாள்.


வாசலில் ஆரவ்வுடன் நித்ய யுவனியின் சித்தப்பாவும் சித்தியும் நின்றிருந்தனர்.


அவர்களுக்கு பின்னே அவர்களின் மகள் மாலதி, அவள் கணவன் ராஜேஷ், அவர்களது மூன்று வயது மகள், மாலதியின் தம்பி நவீன், ராஜாராமின் தங்கை சுபத்ரா, அவர் கணவர் கணேஷ், அவர்களின் மகன் அஜய் மற்றும் காவ்யா வந்தனர்.


நித்ய யுவனியிடம் வந்த ராஜகோபாலும் கலைவாணியும் அவளை அணைத்து விடுவித்தனர்.


பல வருடங்கள் கழித்து தன் சித்தி, சித்தப்பாவைக் கண்டதில் நித்ய யுவனிக்கு மகிழ்ச்சியில் வார்த்தைகள் வர மறுத்தன.


"நித்து..." என வந்து அஜய் அணைத்துக் கொள்ள நித்ய யுவனி, "அஜு... இப்போ தான் உனக்கு என் நினைவு வந்ததா.." எனப் பொய் கோபத்துடன் கேட்க,


"நான் எப்போ உன்ன மறந்தேன்.. நீ தான் என் கிட்ட கூட சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்ட... ஜஸ்ட் மிஸ்.. இல்லன்னா நானே உன்ன கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன்..." என்கவும் நித்ய யுவனியுடன் சேர்ந்து அனைவரும் சிரிக்க சஜீவ் அஜய்யை முறைத்துப் பார்த்தான்.


நித்ய யுவனி சஜீவ்வின் காதில் மெதுவாக, "அவன் ஆல்ரெடி கமிடட்... சும்மா உன்ன சீண்டி பார்க்குறான்.." என்கவும் சஜீவ் இளித்து வைத்தான்.


மாலதி, "இந்த அக்காவ கூட மறந்துட்டேல்ல நித்து..." என முகத்தைத் திருப்பிக் கொள்ள,


"மாலு... சாரி..." எனக் காதைப் பிடித்துக் கொண்டாள் நித்யா.


ராஜேஷ், "என்ன மதி நீ.. இப்போ போய் இதையெல்லாம் பேசிக்கிட்டு.." என்கவும் நித்ய யுவனியைப் பார்த்து புன்னகைத்தாள் மாலதி.


பல வருடங்கள் கழித்து தன் சொந்தங்களை சந்தித்ததில் நித்ய யுவனி அவர்களுடன் பேசிக் கொண்டிருக்க அங்கிருந்து வயதான ஒரு பெண்மணி, "நாழியாகுது.. சீக்கிரம் சடங்க ஆரம்பிங்கப்பா..." என்கவும் வளைகாப்பு சடங்குகள் ஆரம்பமாகின.


நித்ய யுவனியைச் சுற்றி பூக்கள், பல்வேறு வகையான பழவகைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், கண்ணாடி வளையல்கள், மேலும் பல்வேறு வகையான இனிப்பு வகைகள், சர்க்கரைப் பொங்கல், எழுமிச்சைச் சாதம், தேங்காய் சாதம் போன்ற பல்வேறு விதமான சாதவகைகளும் வைக்கப்பட்டிருந்தன‌.


சடங்கை ஆரம்பித்து வைக்க கணேஷ் தாய்மாமன் இடத்தில் நின்று தேங்காய் உடைத்தார்.


சஜீவ் நித்ய யுவனிக்கு மாலை அணிவித்து விட்டு அவள் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டான்.


பின் நித்ய யுவனியின் இரு கரங்களிலும் தங்க வளையல்களை அணிவித்து பன்னீர் தெளித்தவன் நித்ய யுவனியின் மீது அட்சதை தூவவும் அவள் கண்கள் கலங்கின‌.


அதனைத் துடைத்து விட்ட சஜீவ் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.


தொடர்ந்து வசந்தி, ஈஷ்வரி என உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் நித்ய யுவனிக்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து இனிப்பூட்டி சந்தனம், குங்குமம் வைத்து அட்சதை தூவி ஆசிர்வதித்தனர்.


இறுதியாக நித்ய யுவனிக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தனர்.


வளைகாப்பு சடங்கு நல்லபடியாக நிறைவு பெற ஈஷ்வரியும் வசந்தியும் இணைந்து வந்திருந்த அனைவருக்கும் மஞ்சள், குங்குமம் மற்றும் வளையல்கள் வழங்கி மரியாதை செலுத்தினர்.


வளைகாப்பிற்கு வந்திருந்த அனைவரும் சென்றதும் ராஜாராமும் வசந்தியும் நித்ய யுவனியை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லத் தயாராக சஜீவ் முகத்தைத் தொங்கப் போட்டபடி நித்ய யுவனியின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டு நின்றான்.


நித்ய யுவனி, "சஜு... நீ இப்படி முகத்தை வெச்சிட்டு இருந்தா நான் எப்படி வீட்டுக்கு போவேன்.." என்க,


சஜீவ், "அப்போ போகாதே..." என சிணுங்கினான்.


பின் வசந்தியிடம், "அத்த.. ப்ளீஸ்.. யுவி இங்கயே இருக்கட்டும்.. எனக்கு யுவிய விட்டு இருக்க முடியாது அத்த.." என்றான் சஜீவ்.


வசந்தி, "அது எப்படி முடியும் மாப்பிள்ளை... உங்க தங்கச்சியும் கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் குழந்தை பெத்துக்கிட்டு வந்திருக்கா... பச்சை உடம்புக்காரி வேற... உங்க அம்மாவால எப்படி ரெண்டு பேரையும் பார்த்துக்க முடியும்.. நீங்க யுவனிய விட்டு இருக்க முடியாதுன்னு சொன்னதால தான் ஏழாவது மாசத்துல வைக்க வேண்டிய வளைகாப்ப ஒன்பதாம் மாசத்துல வெச்சோம்... எங்களுக்கும் எங்க பொண்ணு கூட இருக்க ஆசை இருக்காதா மாப்பிள்ளை.." என்க,


நித்ய யுவனி சஜீவ்வைப் பார்த்து கண்களால் கெஞ்சினாள்.


ஆரவ், "என்னடா சின்னப் பையன் போல பண்ணிட்டு இருக்க... கொஞ்ச நாளைக்கு தானே... உனக்கு கூட போக சொன்னா ஆஃபீஸ், வேலை அது இதுன்னு காரணம் சொல்ற... ஒழுங்கா யுவனிய போக விடு.." என்றான்.


அனைவரும் ஒவ்வொரு விதமாகக் கூறவும் சஜீவ் சற்று சமாதானம் அடைந்து நித்ய யுவனியின் முகத்தைப் பார்த்தான்.


நித்ய யுவனியும் சஜீவ்வின் பதிலுக்காக அவன் முகத்தையே நோக்கிக் கொண்டிருக்க கண்களை மூடித் திறந்து சம்மதமாகத் தலையசைத்தான் சஜீவ்.


சஜீவ்வை அணைத்துக் கொண்ட நித்ய யுவனி, "விட்டு போறேன்னு கோவமா இருக்கியா சஜு.." என்க,


"இல்லடா... என் யுவி மேல நான் எப்படி கோவப்பட முடியும்... பட் ஐ வில் மிஸ் யூ.. டெய்லி நைட் நம்ம பாப்பா கூட பேசுறதெல்லாம் மிஸ் பண்ணுவேன்..." என்றான் சஜீவ்.


நித்ய யுவனி, "நானும் உன்ன நிறைய மிஸ் பண்ணுவேன் சஜு... கொஞ்ச நாளைக்கு அம்மா, அப்பா கூட இருக்க ஆசையா இருக்கு... அதான் போகணும்னு சொல்றேன்... உனக்கும் என் கூடவே வர சொன்னா கேக்க மாட்டேங்குற.." எனக் குறைப்பட்டாள்.


"என்ன பண்ண யுவி... ஆஃபீஸ்ல வர்க் ஜாஸ்திடா... உங்க வீட்டுல இருந்து வர்க் போய்ட்டு வரது கஷ்டம்டா... இல்லன்னா நீ கூப்பிடவே தேவை இல்ல... நானே வந்திருப்பேன்... நீ என்னைப் பத்தி கவலைப்படாதே யுவி... டெய்லி வர்க் முடிஞ்சி உன்ன வந்து பார்க்குறேன்... இப்போ சந்தோஷமா போய்ட்டு வா..." என நித்ய யுவனியை சமாதானப்படுத்தினான் சஜீவ்.


நித்ய யுவனி, "நிஜமா தான் சொல்றியா சஜு... நீ ஓக்கே தானே.." என்க,


அவளைச் செல்லமாக முறைத்த சஜீவ், "நீ இப்படியே கேட்டுட்டு இருந்தா திரும்ப உன்ன போக வேண்டாம்னு சொல்லிருவேன்..." என்கவும் புன்னகைத்தாள் நித்ய யுவனி.


பின் நித்ய யுவனியை அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட சஜீவ் தன் அறையில் நித்ய யுவனியின் புகைப்படத்தை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.


_______________________________________________


தன் பிறந்த வீட்டுக்கு வந்த நித்ய யுவனி கை முழுவதும் இருந்த வளையல்களையே ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தாள்.


கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டவள் தன் மேடிட்ட வயிற்றில் கை வைத்து, "அப்பாவ மிஸ் பண்றியாடா.." என்கவும் குழந்தை எட்டி உதைத்தது.


"ஆஹ்.." எனக் கத்தியவள், "ஓஹ்.. உங்க அப்பா மேல அவ்வளவு பாசமா..." என்கவும் மீண்டும் ஒரு உதை.


புன்னகைத்த நித்ய யுவனி, "இப்பவே எனக்கு போட்டியா வரீங்களா... அவன் என் சஜு... எனக்கு அப்புறம் தான் உங்களுக்கு அப்பா..." என்றாள்.


திடீரென பால்கனி பக்கம் ஏதோ விழும் சத்தம் கேட்கவும் அதிர்ந்தாள் நித்ய யுவனி.


அவசரமாக கட்டிலை விட்டு இறங்கிய நித்ய யுவனி, "யா..யாரு..." என்றவாறு பால்கனி பக்கம் செல்ல அவள் முன் குதித்தான் சஜீவ்.


நித்ய யுவனி பயந்து கத்தப் பார்க்க அவள் வாயைப் பொத்திய சஜீவ், "ஷ்ஷ்ஷ்... யுவி... நான் தான்... உன் சஜு... கத்தி என் மானத்த வாங்கிடாதே..." என்கவும் அமைதியாகினாள் நித்ய யுவனி.


சஜீவ் கையை விலக்கியதும், "இங்க என்ன பண்ற சஜு... அதுவும் எதுக்காக இப்படி திருட்டுத்தனமா வந்திருக்க..." எனக் கேட்டாள் நித்ய யுவனி.


சஜீவ், "அங்க என்னவோ பெரிய மனசு பண்ணி உன்ன அனுப்பி வெச்சிட்டு கொஞ்ச நேரத்துலயே உன் பின்னாடி வந்து நின்னா அத்தையும் மாமாவும் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க..." என்க,


நித்ய யுவனி, "பொண்டாட்டி மேல மாப்பிள்ளைக்கு அவ்வளவு பாசம்னு நினைப்பாங்க..‌ வேறென்ன.." என்றாள்.


பின் நித்ய யுவனி, "சரி... ஏன் திடீர்னு வந்த.. இதுக்கு அப்போவே என் கூட வந்து இருக்கலாமே.." என்க,


"ஹ்ம்ம்ம்ம்... எல்லாரும் சொன்னதுக்காக தான் உன்ன அனுப்பி வெச்சேன்... ஆனா கொஞ்சம் நேரம் கூட நீ இல்லாம இருக்க முடியல... ரொம்ப நேரமா என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்... சரி வரது வரட்டும்னு பேசாம வந்துட்டேன்... உன் வீட்டுக்கு வந்ததும் தான் அத்தை, மாமா கிட்ட என்ன சொல்லன்னு தெரியாம யோசிச்சேன்... அதான் பால்கனி வழியா குதிச்சு வந்தேன்..." என்ற சஜீவ் நித்ய யுவனியை கட்டிலில் படுக்க வைத்து அவள் வயிற்றில் தலை வைத்து அணைத்துக் கொண்டான்.


நித்ய யுவனி சஜீவ்வின் தலையை வருட, "யுவி... நான் ரொம்ப நாளா கேக்கனும்னு இருந்தேன்... ஏன் உன் வயிறு மட்டும் இவ்வளவு பெரிசா இருக்கு... ஜீவி, ஜனனி ரெண்டு பேருக்குமே இப்படி இருக்கலயே.." என்க,


"ஆஹ்.. அது ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமா இருக்கும் சஜு... சில பேருக்கு வயிறே தெரியாது..." என நித்ய யுவனி கூறவும் புரிந்தது போல் தலையாட்டினான் சஜீவ்.


சஜீவ், "பாப்பா அப்பாவ மிஸ் பண்ணீங்களா.." என நித்ய யுவனியின் வயிற்றில் முத்தமிட்டபடி கேட்க குழந்தை உதைத்தது.


"பார்த்தியா... அப்பா மேல தான் ரொம்ப பாசம் போல... அப்பாவ மிஸ் பண்றியான்னு கேட்டேன்... உடனே உதைச்சிடுச்சு... ஆனா சஜு... பாப்பா வந்ததுக்கு அப்புறம் நீ பாப்பா கூட சேர்ந்துட்டு என்னை டீல்ல விட்டுறக் கூடாது..." என்றாள் நித்ய யுவனி.


சஜீவ் நித்ய யுவனியின் முகத்தை புன்னகையுடன் நோக்கியவன், "நமக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் நீ தான் என் முதல் குழந்தை... உனக்கு அடுத்து தான் எல்லாருமே... நான் உன் மேல வெச்சிருக்குற அளவு பாசம் வேற யாரு மேலயும் கிடையாது.." என்கவும் அவன் இதழில் லேசாக தன் இதழ் பதித்து விட்டு எடுத்தாள் நித்ய யுவனி.


இரவு முழுவதும் சஜீவ்வும் நித்ய யுவனியும் உறங்காமல் பேசிக் கொண்டிருந்தனர்.


❤️❤️❤️❤️❤️


- Nuha Maryam -
 
Top