• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Nuha Maryam

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
128
சில வருடங்களுக்கு பின்


"பாட்டி......" என்ற கத்தலில் சமையலறையில் இருந்த ஈஷ்வரி, "இப்போ என்ன பண்ணி வெச்சி இருக்கானோ..." எனப் புலம்பியவர் ஹாலுக்கு வர அங்கு இடுப்பில் கையூன்றி ஈஷ்வரியைப் பார்த்து முறைத்தபடி நின்றிருந்தான் ஒரு குட்டி வாண்டு.


ஈஷ்வரி, "என்னாச்சுப்பா..." என்கவும், "என் திங்ஸ யாரும் என் கிட்ட கேக்காம எடுக்குறது எனக்கு பிடிக்காதுன்னு நான் சொல்லி இருக்கேன் இல்லையா... இந்த விரான் என் கலர் பாக்ஸ எடுத்து எல்லா கலர்ஸையும் வேஸ்ட் பண்ணிட்டான் பாருங்க..." எனக் கோவமாக தன் கையிலிருந்த உடைந்த பெட்டியைக் காட்டினான் ஐந்து வயதேயான வியான்.


"உன் அண்ணன் தானேப்பா எடுத்தான்... நாம தாத்தா கிட்ட சொல்லி வேற கலர் பாக்ஸ் வாங்கிக்கலாம்... ஐயோ பால்... அடுப்புல பால வெச்சிட்டு வந்துட்டேன்..." என அவசரமாக சமையலறைக்கு ஓடினார் ஈஷ்வரி.


ஈஷ்வரி சென்றதும் அவ்வளவு நேரம் தூணிற்கு பின்னே மறைந்து நின்று வேடிக்கை பார்த்த விரான் வெளியே வந்து தன் உடன் பிறந்தவனுக்கு பலிப்புக் காட்டி விட்டு ஓடினான்.


விரான் மற்றும் வியான் இருவரும் ஒத்த இரட்டையர்கள் (Identical Twins).


பார்ப்பதற்கு இருவருமே ஒருவரையொருவர் ஒத்திருந்தனர்.


அவர்களின் கண்களின் நிறத்தைக் கொண்டு தான் அவர்களை மற்றவர்களால் அடையாளம் காண முடியும்.


விரானின் கண்கள் கபில நிறத்திலும் வியானின் கண்கள் நீல நிறத்திலும் இருக்கும்.


அதே போன்று இருவரின் குணங்களுமே ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன.


மூத்தவனான விரான் குணத்தில் அப்படியே நித்ய யுவனியை ஒத்திருந்தான். குறும்புத்தனம் நிறைந்தவன். அனைவருடனுமே பழகுவான்.


ஆனால் இளையவனான வியானோ சஜீவ்வைப் போன்று அழுத்தமானவன். அவ்வளவு இலகுவில் யாருடனும் ஒன்ற மாட்டான்.


வியான் கோவமாக அங்கிருந்த சோஃபாவில் அமர அவன் அருகில் வந்து அமர்ந்த பிரபு, "என் பேராண்டி ஏன் கோவமா இருக்கான்... என்னாச்சு..." என்கவும் ஈஷ்வரியிடம் கூறியதையே பிரபுவிடமும் கூறினான் வியான்.


அதைக் கேட்டு பிரபு புன்னகைக்க கையில் பால் டம்ளருடன் அங்கு வந்த ஈஷ்வரி அதனை வியானிடம் கொடுத்து விட்டு பிரபுவிடம், "இவங்க அம்மாவுக்கு நான் பண்ணின தப்புக்கு பலி வாங்கவே இரண்டு பேரும் பிறந்து இருக்காங்க... முடியலங்க... காலைல எழுந்ததுல இருந்து நைட் தூங்கும் வரையும் இவங்க ரெண்டு பேரோட வம்ப தீர்க்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு... பாருங்க டைம் என்னாச்சுன்னு.. இன்னும் இவங்க அம்மா எழுந்திருச்சு கீழ வரல..." என்றார்.


ஈஷ்வரியின் திட்டலைக் கேட்க வேண்டியவளோ தன்னவனின் நெஞ்சத்தில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.


சஜீவ், "யுவி... லேட் ஆகிடுச்சு... எழுந்திருடா... ஹாஸ்பிடல் போக வேணாமா.." எனத் தன்னவளின் உறக்கத்தைக் கலைக்க முயற்சிக்க,


"ம்ஹ்ம்... விடு சஜு... ப்ளீஸ்... எனக்கு தூக்கம் வருது... விடிஞ்சு தான் நீ என்னைத் தூங்கவே விட்ட..." என சிணுங்கியபடி மீண்டும் தன் உறக்கத்தைத் தொடர்ந்தாள் நித்ய யுவனி.


தன் மேல் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவளைப் புரட்டி தனக்கு கீழ் கொண்டு வந்த சஜீவ் நித்ய யுவனியின் கண்கள் கன்னங்கள் என முத்தமிடவும் நித்ய யுவனியின் இதழ் புன்னகையில் விரிந்தன.


அவள் இதழில் முத்தமிட்ட சஜீவ் இரவு விட்டதை மீண்டும் தொடரப் பார்க்க அவசரமாக அவனைத் தள்ளி விட்டு எழுந்தமர்ந்தாள் நித்ய யுவனி.


சஜீவ் அவளைப் பார்த்து புன்னகைக்க நித்ய யுவனி, "உன் பேச்சக் கேட்டு பசங்கள தனியா வேற ரூம்ல தூங்கப் போட்டது தப்பாப் போச்சு..." என்றாள்.


சஜீவ் இன்னும் நித்ய யுவனியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்க அவனை முறைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்தாள் நித்ய யுவனி.


சற்று நேரத்தில் இருவரும் வேலைக்குச் செல்லத் தயாராகி கீழே வர வியான் ஓடி வந்து நித்ய யுவனியை அணைத்துக் கொள்ள விரானும் எங்கிருந்தோ ஓடி வந்து சஜீவ்வை அணைத்துக் கொண்டான்.


வியானுக்கு எப்போதும் நித்ய யுவனி வேண்டும். தன் தாய்க்கு ஒன்றென்றால் யாருடனும் சண்டை இடுவான். அதற்காக சஜீவ்வுடன் பாசம் இல்லாமல் இல்லை. ஆனால் நித்ய யுவனியை தன் அண்ணனுக்கு கூட விட்டுக் கொடுக்க மாட்டான்.


அதே போல தான் விரானுக்கு சஜீவ். வியான் எப்போதும் நித்ய யுவனியை ஒட்டிக் கொண்டிருப்பதால் விரான் சஜீவ்வைப் பிடித்துக் கொள்வான். விரான் சஜீவ்வை தன் தாயிடம் கூட விட்டுக் கொடுக்க மாட்டான். நித்ய யுவனி அடிக்கடி விரானுடன் செல்லச் சண்டை இடுவாள் தன்னவனுக்கு உரிமை கோரி.


சஜீவ்வை அணைத்திருந்த விரான் எட்டி வியானைப் பார்த்து பலிப்புக் காட்ட வியான் அவனை முறைத்து விட்டு தாயிடம் குற்றப் பத்திரிகை வாசித்தான்.


நித்ய யுவனி விரானைப் பார்த்து, "ஏன்‌ விரு அப்படி பண்ண... தம்பி பாவம் தானே... உனக்குன்னு கலர் பாக்ஸ் அப்பா வாங்கி தந்து இருக்காருல்ல.." என்கவும் சஜீவ்வும் விரானைப் பார்த்து கண்களால் என்ன எனக் கேட்டான்.


விரான், "நான் வேணும்னு பண்ணல அப்பு... என் கலர் பாக்ஸக் காணோம்... அதான் வியான் பாக்ஸ எடுத்தேன்... ஆனா அவன் என் கிட்ட இருந்து அதை பறிக்க ட்ரை பண்ணான்... நானும் ட்ரை பண்ணேன்... அதான் உடஞ்சிடுச்சு..." என்றான் முகத்தைத் தொங்கப் போட்டபடி.


வியான், "ஆனா விரான் என் கிட்ட பர்மிஷன் கேக்கல அம்மு... அதனால தான் நான் போய் பறிச்சேன்..." என்கவும்,


"ரெண்டு பேரும் குட் பாய்ஸ் தானே... ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து போறது தானே நல்ல பழக்கம்... நீங்களே சண்டை போட்டுக்கிட்டா ஈஸியா யாராவது வந்து உங்கள பிரிச்சு விட்டுருவாங்க... அதனால லைஃப்ல என்ன சிச்சுவேஷன் வந்தாலும் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தொருக்கொருத்தர் பாசமா சேர்ந்து ஒத்துமையா இருக்கனும்... புரிஞ்சதா..." என நித்ய யுவனி கேட்டாள்.


இருவருமே சற்று நேரம் அமைதியாக இருக்க வியான் விரானிடம் சென்று, "சாரி அண்ணா..." என்றான் தலை குனிந்தபடி.


சஜீவ்விடமிருந்து விலகிய விரான், "நானும் சாரி... இனிமே அப்படி பண்ண மாட்டேன்..." என்றவன் வியானை அணைத்துக் கொண்டான்.


சில நொடி சிறுவர்கள் இருவரும் அதே நிலையில் இருக்க திடீரென வியானை விட்டு விலகிய விரான் சஜீவ்வை அணைத்துக் கொண்டு, "ஆனா என் அப்புவ நான் உனக்கு விட்டுத் தர மாட்டேன்..." என்றான்.


வியானும் நித்ய யுவனியை அணைத்துக் கொண்டு, "என் அம்முவையும் நான் உனக்கு விட்டுத் தர மாட்டேன்..." என்றான் விரானை முறைத்தபடி.


சஜீவ் அவர்கள் முன் மண்டியிட்டு இருவரையும் சேர்த்து அணைத்தவன், "அம்முவுக்கும் அப்புவுக்கும் நீங்க ரெண்டு பேருமே ஒன்னு தான் கண்ணா... ரெண்டு பேருக்குமே எங்க மேல முழு உரிமை இருக்கு... அப்புவுக்கு விருவைப் போலவே வியுவையும் ரொம்ப பிடிக்கும்... அதே போல அம்முவுக்கும் விருவ ரொம்ப பிடிக்கும்... யாருக்காகவும் உங்க ரெண்டு பேருக்கும் இடைல சண்ட வராம பார்த்துக்கோங்க..." என்கவும் இருவரும் சம்மதமாக தலையாட்டினர்.


நித்ய யுவனி அவர்கள் மூவரையும் சோகமாகப் பார்த்துக் கொண்டிருக்க விரானும் வியானும் புன்னகையுடன் நித்ய யுவனியை நோக்கி கையை நீட்ட நித்ய யுவனியும் அவர்களுக்குள் ஐக்கியமாகினாள்.


_______________________________________________


ஊட்டி


பிரேம், "ரொம்ப நாள் ஆச்சுல்ல நாம இப்படி ஒன்னா வெளிய வந்து..." என்க,


"ஹ்ம்ம்... எல்லாருமே அவங்கவங்க வர்க்ல பிஸி ஆகிட்டோம்... பசங்க வேற இருக்காங்க..." என்றான் ஆரவ்.


நண்பர் கூட்டம் அனைவரும் தம் குழந்தைகளுடன் ஓய்வுக்காக வேண்டி ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தனர்.


அங்கிருந்த ஒரு பூங்காவில் தான் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.


"அனு... ஓடாதே... கீழ விழுந்திடுவ...." என ஜனனி இங்கிருந்து தன் ஆறு வயது மகள் அனுராதாவைப் பார்த்து கத்த,


நித்ய யுவனி, "விடு ஜெனி... பசங்க இப்போ விளையாடாம வேற எப்போ இதெல்லாம் பண்ண முடியும்... இது லைஃப என்ஜாய் பண்ண வேண்டிய ஏஜ்... கீழ விழுந்தாலும் திரும்ப எழுந்து போராடுற பக்குவம் அவங்களுக்கு வர வேணும்..." என்கவும் அமைதியாகினாள் ஜனனி.


சஜீவ், "அடிக்கடி இப்படி எல்லாரும் சேர்ந்து எங்கயாவது போகணும்... மனசுக்கு ரிலாக்ஸா இருக்கு..." என்கவும் அதனை ஆமோதித்த திவ்யா,


"ஆமாண்ணா... மனசுக்கு ரிலாக்ஸா இருக்குறது உண்மை தான்... எல்லாத்தையும் விட பெரிய விஷயம் எங்களுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கிறது தான்... இந்த அபி இருக்கானே... அப்பன தப்பாம பொறந்திருக்கான்... இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற அலப்பறைல என் உசுரு தான் போகுது... அபி தான் சின்ன பையன்... இந்த ரிஷி அவன் கூட ஸ்னேக்ஸுக்காக சண்டை போடுறான்..." என தன்னவனையும் அவர்களின் நான்கு வயது மகனான அபிமன்யுவையும் கடிந்து கொள்ள அனைவரும் ஹரிஷைப் பார்த்து சிரிக்கவும் அவன் எல்லாரையும் பார்த்து இளித்து வைத்தான்.


திடீரென சித்தார்த்தின் கழுத்தில் வந்து தொங்கிய அவனின் மூன்று வயது மகன் அர்ஜுன், "ப்பா... அவ்னி பாப்புவ நம்ம வீத்துக்கு எத்துட்டு போலாம்..." என்றான் தன் மழலைக் குரலில்.


ஆரவ் மற்றும் பிரியாவின் மகளே அவ்னி.


அவ்னியும் அர்ஜுனும் ஒரே வயதினர்.


அனைவரும் சிரிக்க பிரியா, "பாப்பாவை உன் கூட அனுப்பி வெச்சா நீ பார்த்துப்பியா அர்ஜுன்.." எனப் புன்னகையுடன் கேட்க சித்தார்த்தை விட்டு விலகிய அர்ஜுன்,


"நான் பாத்துப்பேன்.. பாப்புவ அழ விட மாத்தேன்..." என்கவும் அவனைத் தூக்கிய ஆரவ்,


"உனக்கு இல்லாததா கண்ணா... தாராளமா அவ்னி பாப்பாவ உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போலாம்.." என்கவும் தன் வெண்பற்கள் தெரிய சிரித்தான் அர்ஜுன்.


சித்தார்த், அஞ்சலியின் மூத்த மகளான நான்கு வயது தீக்ஷா வேகமாக ஓடி வந்து ஆரவ்வின் சட்டையை இழுத்து, "மாமா... தம்பிய கீழ விடுங்க... அவ்னி பாப்பா அர்ஜுன தேடி அழுதுட்டு இருக்கா... இவன் பாப்பா கூட விளையாடிட்டு இருந்துட்டு பாதில இங்க ஓடி வந்துட்டான்..." என்கவும் ஆரவ் அர்ஜுனை இறக்கி விட அவன் கை பிடித்து அழைத்துச் சென்றாள் தீக்ஷா.


ஹரிஷ், "இந்த சின்ன வயசுலயே தீக்ஷா ரொம்ப மெச்சூர்டா பிஹேவ் பண்றாள்ல... எல்லாரையும் கவனமா பார்த்துக்குறா..." என்கவும் சித்தார்த்தும் அஞ்சலியும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர்.


திடீரென எழுந்த சஜீவ், "நீங்க எல்லாரும் இருங்க... நான் யுவிய கூட்டிட்டு இங்க பக்கத்துல ஒரு இடத்துக்கு போய்ட்டு சீக்கிரம் வரோம்..." என்கவும் நித்ய யுவனி கண்களாலே என்னவெனக் கேட்டாள்.


பிரேம், "ஓஹ்.... நாங்க எல்லாரும் இருக்குறது உங்களுக்கு டிஸ்டர்பா இருக்கா... அதனால தான் தனியா ரொமான்ஸ் பண்ண போறீங்களா..." எனக் கேலி செய்ய அனைவரும் கூக்குரலிட்டனர்.


அதில் நித்ய யுவனி வெட்கப்பட சஜீவ் யாரையும் கண்டு கொள்ளாது தன்னவளின் கைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.


அனைவரையும் விட்டு சற்று தள்ளி வந்ததும், "எங்க போறோம் சஜு... எல்லாரும் கிண்டல் பண்றாங்க..." என்ற நித்ய யுவனியிடம்,


"போனதும் உனக்கே தெரிஞ்சிடும் யுவி... அமைதியா வா..." என்ற சஜீவ் ஒரு டாக்ஸி பிடித்து நித்ய யுவனியை அழைத்துச் சென்றான்.


சஜீவ் அழைத்து வந்த இடத்தைப் பார்த்து கண்களை விரித்த நித்ய யுவனி, "இங்க தான் சஜு நான் உன்ன ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன்..." என்கவும்,


சஜீவ், "பட் நான் செக்கன்ட் டைம் பார்த்தேன்..." என்றான் புன்னகையுடன்.


நித்ய யுவனி சஜீவ்வை முதன் முதலாக சந்தித்த நீர்வீழ்ச்சிக்கு தான் சஜீவ் அவளை அழைத்து வந்திருந்தான்.


நித்ய யுவனி சஜீவ்வின் தோளில் சாய்ந்தவள் அன்று தன்னவன் தன்னை வழுக்கி விழாமல் தாங்கிப் பிடித்ததை நினைத்துப் பார்த்தாள்.


சஜீவ், "காலம் எவ்வளவு வேகமா போயிடுச்சுல்ல யுவி... இப்போ தான் உன்ன பாவாடை தாவணில ஃபர்ஸ்ட் டைம் பார்த்தது போல இருக்கு... ஆனா இப்போ நமக்குன்னு ரெண்டு பசங்க வேற இருக்காங்க..." என்க,


நித்ய யுவனி, "ஆமா சஜு... இங்க உன்ன முதல் தடவ பார்த்தப்போ நீ தான் என்னோட எல்லாமுமா இருப்பாய்னு நான் நெனச்சி கூட பார்க்கல... அன்னைக்கு நான் கீழ விழாம இருக்க என்னைத் தாங்கிப் பிடிச்சாய்... இன்னெக்கி வரை என் சந்தோஷம், துக்கம் எல்லாத்துலையும் என் கூடவே வர..." என்றாள்.


சஜீவ், "எத்தனை பிரச்சினைகள், சவால்கள், சந்தோஷம், துக்கம் எல்லாத்தையும் தாண்டி நாம இந்த இடத்துல இருக்கோம்... என் வாழ்க்கை இவ்வளவு அர்த்தமுள்ளதா மாற நீ தான் காரணம் யுவி... ஐம் பிளஸ்ட் டு ஹேவ் யூ..." என்றவன் நித்ய யுவனியின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.


கண்களை மூடி அதனை அனுபவித்த நித்ய யுவனி, "சஜு... நான் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்..." என்கவும் நித்ய யுவனியைத் திருப்பி அவள் கழுத்தில் முகம் புதைத்த சஜீவ் கண்களை மூடிக் கொண்டு, "சொல்லு யுவி..." என்றான்.


சஜீவ்வின் கரத்தை எடுத்து தன் வயிற்றில் வைத்த நித்ய யுவனி, "நான் கர்ப்பமா இருக்கும் போது ஆரம்பத்துல என் கூட இருக்க முடியலன்னு ரொம்ப ஃபீல் பண்ணியே... இந்த தடவ ஒவ்வொரு செக்கனும் என் கூடவே இருக்க முடியும்..." என்றாள் புன்னகையுடன்.


அவளை வேகமாகத் தன் பக்கம் திருப்பிய சஜீவ்வின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.


சஜீவ், "யுவி..." என்க ஆம் என தலையாட்டினாள் நித்ய யுவனி.


அடுத்த நொடியே நித்ய யுவனியின் இதழ்கள் சஜீவ்வின் இதழ்களுக்கு இடையில் சிறைப்பட்டன.


சற்று நேரத்தில் இருவரும் மூச்சு விட சிரமப்பட்டு விலக சஜீவ், "இந்த தடவ நமக்கு பொண்ணு தான் பொறப்பா யுவி..." என்கவும் நித்ய யுவனி புன்னகைக்க அவளை அணைத்துக் கொண்டான் சஜீவ் சர்வேஷ்.


சரியாக எட்டு மாதங்களில் சஜீவ்வின் கரங்களில் தவழ்ந்தாள் சஜீவ் மற்றும் நித்ய யுவனியின் செல்ல மகள் ஆத்யா.


❤️❤️❤️சுபம்❤️❤️❤️


- Nuha Maryam -
 
Top