அத்தியாயம் 15
தன் அணைப்பில் நின்ற தேன்மலர் அதில் இதம் கண்டிருக்க, சக்திவேல் மனநிலையோடு உடலுமே என அவளுக்குள் சேர்ந்துவிட வெம்மை சூழ்ந்தது.
நேரம் செல்ல செல்ல சக்திவேலிடம் ஒரு மாற்றம் உண்டாகவும் தேன்மலரை விட்டு பிரிய நினைக்கும் நேரம் அவள் கைகள் அவனை இறுக்கம் கொண்டிருக்க,
"ஓய்!" என்றான் சிரித்து.
"ஹ்ம்!" என்றவள் சத்தத்தில்,
"வேணும்னு பண்ற நீ! விடு!" என்றும் கிண்டல் தெளிவாய் தெரிய அவன் கூற,
"ப்ளீஸ் மாமா! என்னவோ பயமா இருக்கு! நீங்க இப்படி பேசாதீங்க!" என்றவள்,
"இல்ல இல்ல.. எதுவுமே பேசாதீங்க!" என்றாள் இன்னும் அவனை அணைத்து நின்று.
"நீ தேற மாட்ட!" என்றவன் செய்த சேட்டையில் துள்ளி குதித்து கட்டில் அருகே சென்று அவள் நின்றிருக்க,
"என்னை பார்த்தா அவ்ளோ நக்கலா இருக்கா உனக்கு?" என்று சொல்லி தான் அருகில் வந்தான்.
இன்னும் இடையில் அவன் விரல்கள் இருப்பது போன்ற குறுகுறுப்பில் தோள்களை உயர்த்தியவள் சிணுங்கி தலையை உலுக்கி என நடனமாட,
"இன்னுமா பயம் என்கிட்ட?" என்று கேட்டு அவள் முன் நிற்க, அது தேன்மலரின் அசாதாரண சூழ்நிலை.
"அன்னைக்கு என்கிட்ட பயமில்லைனு சொல்லிட்டு இன்னைக்கு இப்படி நடுங்குற" என்று சொல்லி அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அமர்ந்து அவளையும் அமர வைத்தான்.
சத்தமாய் சிணுங்கியவள் "ப்ளீஸ்!" என்று சொல்ல,
"எதுக்கு இந்த ப்ளீஸ்னு தெளிவா சொல்லு.. விட்டுடுறேன்!" என்றான் அந்த சிணுங்களில் தொலைந்து அவள் காதின் ஓரம் சுருண்டிருந்த முடிகளை விலக்கிவிட்டு.
"எதுக்குன்னு தெரியாமலேவா விட்டுடுறேன்னு சொல்றிங்க?" பதிலுக்கு வேகமாய் அவள் கேட்டுவிட்டு அவன் முகம் பார்க்க,
"ஓஹ்! அவ்ளோ விவரமா நீ?" என்றதில் தான்,
"அய்யோ!" என இரு கைகளையும் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டாள்.
"இந்த புடவையிலேயே தெரிஞ்சதே உன் விவரம்!" என்றவன் அவள் கழுத்தில் கைவைத்து தன் பக்கமாய் வளைக்க, அதிர்ந்து சட்டென கைகளைப் பிரித்தவள் இதழ்களை தன் இதழ்களால் நிறைத்திருந்தான் சக்திவேல்.
விழிகளை மூட கூட மூளை வேலை செய்யவில்லை தேன்மலரிடம். அத்தனைக்கு அதிர்ச்சியில் அவள் இருக்க, அந்த விழிகளைக் கண்டவன் இன்னுமே ஆழமும் சென்றான்.
எத்தனை நேரம் என்பதை மறந்திருந்தவன் தொடர்ந்த இதழ் ஊர்வலம் முகம் முழுதும் வலம் வர, இதயம் வெளிவந்துவிடும் அளவுக்கு துடித்துக் கொண்டிருந்தது தேன்மலருக்கு.
வெளிப்படையான அவள் உடல் நடுக்கத்தில் சக்திவேலின், "தேனு!" என்ற சொற்கள் அவன் மீசையோடு அவள் கழுத்தில் வலம் வர, மொத்தமாய் உணர்வுகளுக்குள் சிக்கிக் கொள்ள வைத்திருந்தான் அவளை.
"நிஜமா இந்த புடவையை நான் எதிர்பார்க்கல தேனம்மா! கொல்றியேடி!" என்றவன் தவிப்புகள் கூட கூட அவன் மென்மைகள் குறைய,
"மாமா!" என்றவள் சத்தத்தில் சட்டென்று நிதானத்திற்கு வந்திருந்தான்.
"ஓகே ரிலாக்ஸ்!" என்றவன் அத்தனை எளிதில் அவளை இயல்பாகிவிடவும் விடவில்லை.
"தேனு! என்னைப் பாரு!" என்றவனை அவ்வளவு எளிதில் அவளால் பார்த்திட முடியவில்லை. கன்னங்கள் சிவந்து கண்களை மூடிக் கொண்டிருந்தவளிடம் அவன் ஏக்கங்களை கூட்டிச் சென்றிருக்க, பார்த்து ரசித்து முத்தமிட்டு என அவளை ஆராதித்திருந்தான்.
உயிர்வரை தேடல்கள் தவிப்புகளாய் அவளில் எழுந்தோட, அத்தனைக்கும் காரணமாய் கொண்டாடியவன் கைகளின் புஜங்களில் அவள் நகக்கீறல்கள் சுவடுகளாய்.
"என்னவோ சொன்னியே தேனம்மா! நான் பேச்சுல மட்டும் தான் தேனுன்னு! எங்க இப்ப சொல்லு!" சக்திவேல் கேட்க, அவனுள்ளேயே புதைந்து கொண்டாள் தேன்மலர்.
"இவ்வளவு வெட்கம் உன்கிட்ட எதிர்பார்க்கல!" என்றவன் அவள் நெற்றி முட்டிட, இன்னுமே அவனுள் தான் சென்று ஒளிந்து கொள்ள இடம் தேடினாள்.
நடுஇரவு வரையுமே அவ்ளோடான தன் நேரத்தினை மிச்சமில்லாமல் சக்திவேல் சேகரித்துக் கொண்டிருக்க, இருவருமே தளர்ந்த நேரமும் அது தான்.
"இங்க என்னைப் பாரு தேனு!" என்றான் அவள் முகம் நிமிர்த்தி தன் அருகில் அவளை மலர்த்தி.
"ப்ளீஸ் மாமா!" என்றவள் இன்னும் தன்னைக் குறுகிக் கொள்ள,
"தேனு! இங்க பாரு மா! கஷ்டப்படுத்திட்டேனா என்ன?" என்றவனுக்கு நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது தன்னவளின் எண்ணமும்.
"ம்ம்ஹ்ம்ம்! நான் தூங்கணும்!" என்றவள் அவன் நெஞ்சத்தில் முகம் வைத்து அணைத்துக் கொண்டவள் கண்களை மூடிக் கொள்ள, மிருதுவாய் புன்னகைத்தவன்,
"ஓகே! தூங்கு!" என்று சொல்லி தலைகோதிட, தலையணையை கட்டிக் கொள்ளும் பதுமையாய் அவனை கட்டிக் கொண்டு தூக்கத்திற்கு சென்றாள் தேன்மலர்.
தன்னிடம் இருந்து தளர்ந்த தேன்மலர் உடல்மொழியில் அவள் முழு உறக்கத்திற்கு சென்றுவிட்டது புரிய, தன் அருகில் அவளை நிறைத்தவனுக்கு சுத்தமாய் உறக்கம் என்பது இல்லை.
புதிதாய் உணர்ந்தான் ஒன்றை. அதையே நினைத்து சிரித்து அருகில் மலர்ந்திருந்த மலரை ரசித்து என அவன் நேரங்கள் முழுதும் அவளோடு மட்டும்.
"என்ன டி பண்ணின?" சொல்லிக் கொண்டு சிரித்தவனுக்கு அவளை அள்ளிக் கொள்ள தான் மீண்டும் மீண்டும் மனம் ஏங்க, அவளின் சோர்ந்த முகமும் ஆழ்ந்த தூக்கமும் என அவனை நிறுத்திக் கொண்டான் எண்ணங்களோடு.
காலை சக்திவேல் கண் விழித்த போதும் கூட அவள் கண் விழிக்கவில்லை. அத்தனை இறுக்கமாய் அவள் கைகளுக்குள் போர்வையை பிடித்திருக்க, பார்த்ததும் சிரிப்பு தாளவில்லை சக்திவேலிடம்.
அழுத்தமாய் மீசையை அவள் கன்னத்தில் உறவாடவிட்டு முத்தத்தை பதிக்க, சிறு அசைவோடே மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தவளைக் கண்டவன் கண்கள் கனிந்தது.
"குழந்தை புள்ளை டி நீ!" என மெல்ல கிள்ளியவன் எழுந்துகொண்டு,
"இவ என்னனு அப்பத்தாவை சமாளிப்பா? எழுப்பிடுவோமா?" என நினைத்தாலும் அவள் முகம் பார்க்கும் பொழுது எழுப்பிடவே மனம் வரவில்லை.
வெற்றி அனுப்பி இருந்த செய்தியையும் அப்பொழுது தான் கண்டான் சக்திவேல்.
"கோவிலுக்கு போய்ட்டாங்களா? அப்போ வீட்டுல யாரும் இல்லையா?" என நினைத்தவன் ஜன்னல் வழி எதிர்வீட்டைப் பார்க்க, தங்கதுரை வீடுமே பூட்டி தான் இருந்தது.
"சுத்தம்!" நினைத்துக் கொண்டவன்,
"தேனு!" என்ற சத்தத்தோடு அவளருகில் செல்ல, அசைவு கூட இல்லை அவளிடம்.
"அடியேய் தேனம்மா! எழுந்துக்கோ!" என காதுக்குள் அவன் கத்திட, மெல்ல விழி திறந்தவளுக்கு சுத்தமாய் நினைவில் இல்லாத அனைத்தையும் அவன் முகம் நியாபகத்தில் கொண்டு வர செய்ய,
"மாமா!" என்றவள் போர்வைக்குள் ஒளிந்து கொள்ள,
"உன்னை அப்புறமா கவனிச்சுக்குறேன்! போய் குளிச்சுட்டு வா! எல்லாம் கோவிலுக்கு போயாச்சாம்!" என்றதில்,
"என்ன?" என எட்டிப் பார்த்தாள்.
"இந்த ரியாக்சன்க்கு நான் என்னனு இப்ப பதிலாக?" என்றவன் தாங்கவே முடியாது என்ற நிலையில் ஒரு முத்தத்தை கவிதையாய் எழுதி,
"வெளில போனாப்புல தான்! எழுந்து குளிக்க போயேன் டி!" என்று தன்னால் முடியாததை அவளை செய்ய சொல்ல,
"நீங்க வெளில போனா தான் நான் போவேன்!" என்றாள் அவனைப் பாராமல்.
"ஓஹ்!" என்றவனுக்கு அப்பொழுது தான் புரியவே செய்தது அவள் நாணம்.
"ப்ச்!" என தலையில் தட்டிக் கொண்டு எழுந்தவன்,
"நான் இங்க தான் இருப்பேன்ன்னு சொல்லி அடம் பண்ண ஆசை தான்! அங்க கோவிலுக்கு எல்லாம் போய்ட்டாங்க! அதனால இன்னைக்கு உன்னை விடுறேன்!" என்றவன் தனக்கு வேறொரு உடையை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் அறைக்கு செல்ல, மெதுவாய் எழுந்தவள் ஓட்டமாய் தான் ஓடினாள் குளியல் அறைக்குள் தனக்கான வேறு உடைகளை எடுத்துக் கொண்டு.
இருவரும் கோவிலை வந்தடையும் நேரம் மணி பத்தை தாண்டி இருந்தது.
கோவில் சென்றதும் அங்கே சந்திரா ஜெகதீஸனைக் கண்ட தேன்மலர் சந்தோசத்தில் ஓடி சென்று அவர்களுடன் நின்றுவிட, வெற்றிவேல் தங்கதுரை அருகே வந்து நின்றான் மெதுவாய் சக்திவேல்.
"இன்னுமாட்டுக்கா வராம இருக்காக?" புஷ்பம் அப்பொழுது தான் கோவிலின் பின்பக்கம் இருந்து வந்து கோமளத்திடம் கேட்க,
"அங்க பாருங்க த்தை! மலரு தான் அரிசியை போட்டுட்டு இருக்கா!" என்ற பின் தான் பேத்தியை கண்டவர் கண்கள் நிறைந்தது.
"இவனை எங்க?" என சக்திவேலை தேட, அவன் என்னவோ பேசிக் கொண்டிருந்தான் சக்திவேலிடம்.
"எதாவது கேட்டியா டி?" புஷ்பம் கோமளம் காதை கடிக்க,
"இப்ப தான் வந்திருக்குங்க. கொஞ்சம் சும்மா இருங்க த்தை!" என்று அடக்கி வைத்தார் கோமளம் தான்.
"மலரு! படையல்ல பொங்கலை முதல்ல நீ வை'த்தா!" என புஷ்பம் சொல்லவும் அதை தேன்மலர் செய்ய,
"நீ கூட போய் நில்லு சக்தி!" என்று அனுப்பி வைத்தார் தங்கதுரை.
படையல் செய்து சாமிக்கு வைத்து, அங்கே கூடி இருந்தவர்கள் எல்லாம் அங்கேயே சாப்பிட அமர, அனைவர்க்கும் சக்திவேல், வெற்றி, ஜெகதீஸன் என பரிமாறிவிட்டு தங்களுக்கும் எடுத்துக் கொள்ள,
தேன்மலர் அருகே இருந்த இடத்தில் வந்து பொங்கலுடன் அமர்ந்தான் சக்திவேல்.
"அண்ணே! நேத்து தான் ஊட்ட மாட்டேன்னு சொல்லிட்டீக. இன்னைக்கு எல்லாரும் அந்த பக்கமா தான இருக்காக? இப்ப ஊட்டி விடுங்களேன்! ஒரே ஒரு போட்டோ எடுத்துக்குறேன்!" வெற்றி சொல்ல ஆரம்பிக்கவுமே புரையேற ஆரம்பித்துவிட்டது தேன்மலருக்கு.
"ப்ச்! அவன் சொல்றான்னு..." என்ற சக்திவேல் தண்ணீரை எடுத்து மனைவிக்கு கொடுக்கவும் தேன்மலர் கணவனை ஓரப்பார்வை பார்க்க, அத்தனைக்கு சிரித்தது சக்திவேல் கண்கள்.
"அண்ணி! நீங்களே நேத்து கேட்டீங்க இல்ல? இன்னைக்கும் கேளுங்க!" என்றுவேறு வெற்றி சொல்ல,
'அடேய்! பேசாம போயேன் டா!' நினைத்தவளால் அதை சொல்லிட முடியவில்லை.
"அண்ணிக்காக இது கூட பண்ண மாட்டிங்களா?" என்று மீண்டும் விடமாட்டேன் என்பதாய் வெற்றி கேட்கவும்,
"உன்னைய! நீ தான் டா விஷமே! உன்னால தான்.. பேசாம போயிரு!" தேன்மலர் அதற்குமேல் முடியாமல் எழுந்தவள் விரல் நீட்டி சொல்லியே விட, வெற்றி 'என்னையா?' என அதிர்ந்த பார்வை பார்க்க, சட்டென்று வெடித்து சிரித்துவிட்டான் சக்திவேல்.
"ஹே உக்காரு தேனு!" என்று கைபிடித்து இழுத்து அமர வைத்தவன் இன்னும் இன்னும் அவள் முகம் பார்த்து சிரிக்க,
"மாமா!" என்றவளுக்கு சிரிப்புடன் முகமும் சிவந்தது அவன் பார்வையோடு சிரிப்பிலுமாய்.
"ஆத்தே! கண்ணு பட்டுருமே புள்ளைங்களுக்கு! சக்தியாலே இப்படி சிரிக்கது" என புஷ்பம் முதல் அனைவருமே சக்திவேல் சிரிப்புடன் தேன்மலர் கைகளை இழுத்து அமர வைத்ததை பார்த்திருக்க, மனமெல்லாம் நிறைந்து போனது தேன்மலர் பெற்றோருக்கு.
"அங்க என்ன வெற்றி பண்ணுத நீ? இங்க வந்து சாப்பிடு!" என தங்கதுரை வெற்றியை அழைக்க,
அண்ணி பேசியதில் அரண்ட பார்வை பார்த்தவன் திருட்டு விழியுடன் மற்றவர்கள் முன் சென்று அமர்ந்திருந்தான்.
தொடரும்..