• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் -69 (1)

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
194
199
43
Salem
கண்கள் இரண்டும் சிவந்திருக்க சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அகல்யா.. அவளருகில் பிள்ளைகள் இருவரும் ஆளுக்கொரு புறம் அமர்ந்திருக்க அதற்கடுத்து ரூபினியும் காயத்திரியும் அமர்ந்திருந்தனர்.. ஆதவனுன் ராபர்டும் பெண்ணவளுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்ற எண்ணத்தில் பார்த்திருந்தனர்.. அவர்களுக்கும் இது அதிர்ச்சி தானே.. யாரிடம் சென்று சொல்வது.. அவர்களும் வலியை அனுபவிக்கிறார்கள் தானே.. ஆனால் அவளோ வாய்விட்டு கதறி அழுதாலும் அடுத்ததை சமாளிக்கலாம் என்றாளோ அவள் வாய்விட்டு கதறாமல் பிடித்து வைத்த பிள்ளையாராய் அமர்ந்திருந்தது அனைவருக்கும் பயத்தை தானே கொடுத்தது.

யாரும் எதிர்பாராத சம்பவம்.. நடந்த நொடியிலிருந்து இப்போது வரை உயிர் உடலில் இல்லை.. இது தான் நேரமா இல்லை விதியின் சதியா என்ன சொல்வது என்று புரியவில்லை.. ஆனால் யாரும் எதிர்பாராத நிகழ்வை விதி அரங்கேற்றியிருக்கிறது.

அறையின் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தனர் ஆண்கள்.. அந்த நேரத்திற்கே தனசேகரனும் ராஜாவும் வந்திருந்தனர்.

ராஜா ஒரு மருத்துவர் என்பதால் உள்ளே மருத்துவர் குழுவுடன் அவரும் உடனிருந்தார்.. தங்கள் பெண்ணின் வாழ்க்கை இப்படியா மீண்டும் ஆக வேண்டும் என மனம் கலங்கி போயிருந்தனர்.. இந்த குறிபிட்ட காலத்திலே அகஸ்டினும் அவர்களுடன் ஒன்றாகினான்.

அவளருகே வந்த ஆதவன், "அகிம்மா.." என்று அவளை அழைத்தான்.

தன் பேரை சொல்லி அழைத்தவனை வெற்று பார்வை பார்த்தவள் மீண்டும் பழைய படி சுவற்று பக்கம் தன் பார்வையை திருப்பி கொண்டாள்.

கிட்ட திட்ட அவன் உள்ளே சென்று பத்து மணி நேரம் முடிந்திருந்தது.. அவனின் அறைக்குள் போன மருத்தவர் குழு இன்னும் முழுதாய் யாரிடமும் எந்த தகவலும் கூறவில்லை.. விடிந்து இன்னமும் கண் விழிக்காதவனை கண்டு மனம் வலித்தது பெண்ணவளுக்கு.

அங்கே வந்து அமர்ந்தவள் தான்.. இன்னும் அந்த இடத்தை விட்டு அசையவில்லை என்பதை விட மனம் மரத்து போய் அமர்ந்திருந்தாள் பாவை.

இரவு தன்னவன் வெகு நேரம் ஆகியும் வராமல் போனாதால் மனம் குழம்பியவள் ஆதவனுக்கு அழைத்து விட்டாள்.. அப்பொழுது தான் அவனுக்கே தெரிந்தது இன்னும் ஆதவன் வீடு போய் சேரவில்லை என்று .. மீட்டிங் அப்பொழுதே முடிந்திருக்குமே என்ற எண்ணத்தில் அகஸ்டினுக்கு கால் செய்தான்.. ஆனால் அவனுக்கு கால் சுத்தமாய் போகவில்லை.. மனம் ஏதோ உந்தி தள்ள அந்த ராத்திரி நேரத்தில் தன் மாமனாரை அழைத்துக் கொண்டு அகஸ்டினை தேடி சென்றான்.

இருவரும் வெகுநேரமாக தேடியும் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.. அலுவலகத்தின் பக்கத்தில் சென்று பார்த்தவர்களுக்கு தூரத்தில் ஏதோ வாகனம் கவிழ்ந்து கிடப்பதை கண்டவர்கள் மனம் படபடக்க அங்கே சென்றனர்.

அங்கே அகஸ்டின் இருந்த நிலையை கண்டவர்களுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.. அருகில் சென்று அவனின் நாசியில் விரல் வைத்து பார்த்தார் ராபர்ட்.. இன்னும் உயிர் இருந்தது.. உடனே த மருமகனிடம் திரும்பியவர்,

"மாப்பிள்ளை வாங்க சீக்கிரம் பிடிங்க உயிர் இருக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடலாம்.." என்று அவசரபடுத்தினார்.

தன் நண்பனை அந்த நிலையில் காண முடியாதவன் உயிரை கையில் பிடித்து அகஸ்டினை தன் தோளில் சுமந்து வண்டியில் கிடத்தினான்.. அடுத்த நொடி அந்த இடி மழையிலும் ஆதவனின் வண்டி பறந்தது அவர்களின் மருத்துவமனையை நோக்கி.

கண்கள் இரண்டும் கண்ணீரை பொழிய அகஸ்டினை திரும்பி திரும்பி பார்த்தபடி வண்டியை செலுத்தினான் ஆதவன்.

தன் மருமகனை கண்ட ராப்ர்ட்டுக்கு அவனின் மனநிலை புரிந்தது.. இத்தனை நாள் பழக்கத்தில் தன்னாலே இதை தாங்க முடியவில்லையே.. சிறு வயதில் இருந்து ஒன்றாய் இருந்த தன் மருமகனின் நிலை புரிந்தது.. அவனின் தோளில் கை வைத்து அழுத்தியவர், "சரியாயிடும் பா.." என்றான ஆறுதலாய்.


அகஸ்டினை விநாயகத்திடம் ஒப்படைத்தவன் கிளம்பி சென்று அகல்யாவையும் பிள்ளைகளையும் அழைத்து வந்தான்.. அகஸ்டினை விநாயகத்திடம் சேர்க்கும் போதே நிறைய ரத்தம் வெளியேறி இருந்தது.. காப்பாற்றுவது மிகவும் கடினம் தான் என்று கூறினார் விநாயகம்.

அதை கேட்ட நொடியிலிருந்து அகல்யா அழவில்லை.. கண்களில் துளியும் கண்ணீர் வரவில்லை.. பார்வை சுவற்றையே வெறித்திருந்தது.. யாரலும் அவள் நிலையை காண முடியவில்லை மனம் வலிக்க நின்றனர்.

இதோ சூரியன் உதித்து கொழுந்து விட்டு எரிந்தான்.. இன்னமும் உள்ளே இருப்பவன் கண் திறக்கவில்லை.. எல்லோரும் மன பாரத்துடன் நின்றிருந்தனர்.

சற்று நேரத்தில் விநாயகமும் ஜேன்ஸிம் வந்தனர்.. அவர்களை கொண்ட ஆதவன் அவர்ளருகில் சென்றான் வேகமாய்.

" டாக்டர்.." என்றான் இருவரின் முகத்தை பார்த்தபடி.

அப்பொழுதும் அகல்யா எழவில்லை.. அவர்களருகில் செல்லவில்லை.. ஆனால் தன் செவிகளை கூர்மையாக்கினாள்.

" சார் அவருக்கு உடனே ஹார்ட் பிளான் சர்ஜரி பண்ணனும் சார்.. அப்போ தான் அவரை எங்களால காப்பாத்த முடியும்.. அதுவும் எங்களால டுவென்டி பர்சன்டேஜ் தான் சொல்ல முடியும்.. பட் இப்பவே அவருக்கு ஹார்ட் கிடைக்கிறதுல தான் சார் சிக்கலே.. ஒன்னு செயற்கை கிடைக்கனும் இல்லை இயற்கை ஹார்ட் கிடைக்கனும்.. ஆனா இது ரெண்டுக்குமே வாய்ப்பு ரொம்ப குறைவு சார்.." என்றார் தயங்கியபடி.

அதை கேட்ட ஆதவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.. ஏன் யாருக்குமே புரியவில்லை.. எல்லோரும் குழம்பி கொண்டிருக்கும் சமயம் அகல்யா அந்த இடத்திலிருந்து எழுந்தவள், "அண்ணா நான் கோயிலுக்கு போறேன்.. யாரும் என்னோட வர வேணாம்.. அவரு கண் விழிச்சி கேட்டா மட்டும் பக்கத்துல இருக்கற துர்க்கை கோயிலுக்கு வாங்க.. அண்ணி பிள்ளைகளை பாத்துக்கோங்க.." என்றவள் மேலும் யாரிடமும் பேசாமல் விறுவிறுவென சென்று விட்டாள்.

அவளின் பின்னே செல்லவிருந்த ரூபினியை தடுத்து விட்டான்.. மற்றவர்களும் உள்ளிருப்போனை நினைத்து மருகினர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆதவனின் அருகே வந்த விநாயகம் அகஸ்டினுக்கு இதயம் கிடைத்து விட்டதாகவும் உடனே ஆப்ரேஷன் செய்ய போவதாகவும் தெரிவித்தவர் வேகமாய் அகஸ்டினை ஆப்ரேஷன் தியேட்டருக்கு மாற்றினார்கள்.

எல்லோருக்கும் மகிழ்ச்சியும் சந்தோஷமும்.. உடனே இதை அகல்யாவிடம் கூற வேண்டும் என்ற ரூபினியை ஆப்ரேஷன் முடிந்த பின் அழைத்துக் கொள்ளலாம் என்று விட்டான்.

கிட்டதட்ட நான்கு ஐந்து மணி நேர போராடடத்திற்கு பிறகு அகஸ்டினின் ஆப்ரேஷனை வெற்றிகரமாய் முடித்துவிட்டு வந்தனர் விநாயகம் ஜேன்ஸ் குழுவினர்.

ஆதவனை கண்ட விநாயகத்தின் முகத்தில் சந்தோஷம் மிளிர, "ஆதவன் சார் நம்ம அகஸ்டின் சாரை காப்பாத்தியாச்சு சார்.. உங்க சிஸ்டரோட வேண்டுதல் பலிச்சிடுச்சி சார்.. அவங்களோட பிரார்த்தனை வீண் போகலை.. நம்ம ஜோன்ஸ்க்கு தெரிஞ்சி பாரின் டாக்டர் ஒருவர் இந்த செயற்கை இதயத்தை சோதனை செய்து வைத்திருந்தார்.. அது இப்போ ஒரு மனித உடலுக்கு ஏற்றாற் போல் இயங்க ஆரம்பிச்சிது.. அகல்யா மேடம் தான் ஜோன்ஸ்கிட்ட பேசி அதை பத்தி விசாரிக்க சொன்னாங்க..

அப்படி விசாரிப்புல இருக்கும் போது தான் அகஸ்டின் சாருக்கு இப்படி ஏற்படவும் எங்களால எதுவும் செய்ய முடியலை.. நம்ம நேரமோ என்னமோ அந்த டாக்டர் ஒரு கான்பிரன்ஸ்க்காக இந்தியா வந்தாரு.. அப்பவே அதை எடுத்துட்டு வர சொன்னது நல்லதா போச்சி.. நாங்க அடுத்த வாரம் தான் ஆப்ரேஷன் பிக்ஸ் பண்ணோம்.. ஆனா இப்போ நடந்த இன்சிடெண்ட் காரணமா அவரை உடனே வர வச்சோம்.. அவரு வரதுக்கு டைம் ஆனதால தான் நாங்க கொஞ்சம் டென்சன் ஆயிட்டோம் சார்.. இன்னும் ரெண்டு மணி நேரத்துல சார் கண் விழிச்சிருவாரு சார்.. இப்போதைக்கு சார் உயிருக்கு ஆபத்து இல்லை சார்.." விநாயகத்தின் இந்த சந்தோஷ குரலில் அனைவரும் சந்தோஷமாய் அவரை பார்த்தனர்.

அவரே தொடர்ந்து, "சார் அகல்யா மேடம் எங்க.. முதல்ல அவங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லனும் சார்.." என்றார் புன்னகையுடன்.

ஆதவனோ சந்தோஷத்தில் தன் அருகில் இருந்த மனைவியிடம், "ரூபி போய் அகல்யாவை கூட்டிட்டு வா.." என்று மனைவியை அனுப்பியவன் சந்தோஷத்துடன் பிள்ளைகளை கட்டிக் கொண்டான்.

ஏன் அங்கிருந்த எல்லோருக்குமே சந்தோஷம் தான் அகஸ்டின் மீண்டு வந்தது.

யாராலும் சந்தோஷத்தில் எதுவும் பேச முடியவில்லை.. எல்லோரின் மனமும் நிறைந்து போனது.

இப்போதைக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று தான் விநாயகம் கூறினாரே தவிர நிரந்தர தீர்வு என்று கூறவில்லை.. ஆனாலும் இதை தாண்டி வர முடியும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உண்டு.

இங்கே கோவிலுக்கு வந்த ரூபினி அகல்யாவை தேடிக் கொண்டிருந்தாள்.. அவளை துர்க்கை சன்னிதானத்தில் பார்த்து விட்டு வேகமாய் அவளருகில் சென்றவள் அவளை பார்த்து திகைத்து நின்று விட்டாள்.

ஆம் அங்கே அகல்யா தன் கைகளில் பெரிய கற்பூரத்தை ஏற்றி அதில் அந்த துர்க்கையின் முன்னே காட்டினாள் தீபாரதனையாய்.

ரூபினி ஓடி வந்து அகல்யாவின் கையிலிருந்து கற்பூரத்தை வேகமாய் தட்டி விட்டவள், "அகல்யா என்ன பன்ற நீ.. இதெல்லாம் என்ன இது.. இப்படி செஞ்சா தான் உன் புருஷனை கடவுள் காப்பாத்தி கொடுப்பாரா... கையை பாரு எவ்வளவு புன்னாகியிருக்கு.. இந்த நிலையில உன் கையை அண்ணாவும் அவரும் பார்த்தா என்ன நடக்கும் தெரியுமா.." என்று கோபமாய் கத்தினாள்.

அவளை பார்த்து வெறுமையாய் புன்னகைத்த அகல்யா, "இதை விட அதிகமான வலிகளை தாங்கியிருக்கேன் அண்ணி.. அதுல இது ஒரு பாதி கூட இல்லை.. எனக்கு அவரு மீண்டு வரனும் அண்ணி.. இந்த துர்க்கை தாய் தான் எனக்கு திரும்பவும் பூவையும் பொட்டையும் கொடுத்தாள்.. அதை திரும்பவும் பறிக்க கூடாதுன்னு தான் அண்ணி இவ்வளவு நேரம் இதை செஞ்சேன்.. அவரு பிழைச்சி வந்தா அதுவே எனக்கு போதும் அண்ணி.." என்றாள் கண்ணீருடன்.

"அகல்யா அண்ணா பிழைச்சிட்டாரு மா.. அதை உன்கிட்ட சொல்லி கூட்டிட்டு போகத்தான் வந்தேன்.. வாடா போகலாம்.." என்றாள் அழுகையுடன்.

"அண்ணி என்ன சொல்றீங்க.. அவருக்கு ஒன்னுமில்லை இல்லை.." என்றாள் தவிப்பாய்.

அழுகையுடனே இல்லை என்று தலையசைத்தவள், "உன்னோட பிரார்த்தனையை அந்த துர்க்கை தாய் ஏத்துகிட்டா அகி மா.. உன் புருஷனை உனக்கே திருப்பி கொடுத்துட்டாரு மா.." என்றாள் அழுகை குரலில்.

சந்தோஷத்தில் அந்த அம்மனை மீண்டும் ஒரு முறை வணங்கியவள் உடனே ரூபினியிடம் திரும்பி, "அண்ணி வாங்க போலாம்.. எனக்கு அவரை பாக்கனும் அண்ணி.." கண்ணீருடன் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை நோக்கி இருவரும் சந்தோஷமாக சென்றனர்.


அடுத்த இரண்டு மணி நேரம் எல்லோரையும் தவிக்க விட்டு கண் விழித்தான் அகஸ்டின்.

எல்லோரும் சந்தோஷத்துடன் அவனை உள்ளே சென்று பார்த்து வந்தனர்.. ஆதவன் பிள்ளைகளையும் அழைத்து சென்று பார்த்துவிட்டு வந்தான்.

ஆக்ஸிடெண்ட் ஆன வலி இப்போது ஆப்ரேஷன் என பெரிதாய் அவன் எல்லோரிடமும் பேசவில்லை என்றாலும் அவனின் கண்கள் அவனவளை தேடியதை கண்ட ஆதவன் அவளை கடைசியாக அனுப்பி வைத்தான்.


உள்ளே சென்றவளுக்கு அங்கே உடலில் ஆங்காங்கே கட்டுகளுடன் படுக்கையில் படுத்திருக்கும் தன்னவனை நினைத்து கலங்கி போனாள்.. ஆனால் தான் கலங்கி நின்றாள் தன்னவன் தாங்க மாட்டான் என்று அறிந்த பெண்மை தன் வலியை உள்ளுக்குள்ளே மறைத்து அவனின் அருகில் சென்று அவன் படுத்திருக்கும் படுக்கையின் ஓரத்தில் அமர்ந்தாள்.

தன் நடுங்கும் கரத்தால் அவனின் தலையை மென்மையாய் கோதி விட்டாள்.. தன்னவளின் ஸ்பரிசம் பட்டதும் ஆடவனின் இமைகள் மெதுவாய் திறந்தது.

தன்னவளை பார்த்ததும் அவனின் கண்கள் சிரித்தது.. அவனால் அதிகம் பேச முடியவில்லை என்றாலும் தன்னவளின் வதனத்தை கண்டதும் கலங்கியதை பெண்ணவள் உணர்ந்து கொண்டாள்.

அவனின் கைகளில் தன் கைகளை வைத்து அழுத்தம் கொடுத்தாள்.. அந்த அழுத்தமே சொன்னது கடைசி வரை உன்னுடன் நான் இருப்பேன் என்று.. தன் அடிபட்ட கையை அவளின் கரத்துடன் இணைத்துக் கொண்டான் ஆடவன் அவனின் தீராக் காதலுடன்.


அன்பின் இருப்பிடம் தாய்மை..
அன்பின் மற்றொரு பரிமாணம் மனையாள்..
காதலின் ஆழம் அவளின் நேசப் பூ..
காதலின் அழுத்தம் அவனின் அன்பு..
அவனின் ஒவ்வொரு வரியும் அவள் தான்..
அவளின் சுவாசம் என்றும் அவன் தான்..


தன் இணையின் மேல் வைத்த பாசம் என்றும் மாறாது.. எந்த சூழ்நிலையிலும் மறையாதது.. உங்கள் காதலில் நம்பிக்கை வேண்டும்.. உங்கள் நேசத்திற்கு உருவம் கொடுத்திட வேண்டும்.. இதோ இந்த அகல்யாவைப் போல்.. காதலித்த பின்பு எந்த சூழ்நிலையிலும் தன் காதலை விட்டு கொடுக்காமல் அவள் காதல் மேல் வைத்த நம்பிக்கை தான் அவளின் கணவனை காப்பாற்றி தந்தது.

பேதையவள் அவனின் நிழலை வருடும் நிஜமாய் அவனுடன் கைகோர்த்து எமனையும் விரட்டி விட்டாள் பெதும்பை.


நிழலை நிஜம் வருடியது ஆத்மார்த்தமான காதலால்..🌹🌹🌹


போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி பா.

அடுத்த குட்டியா ஒரு எபிலாக் மட்டும்.. இது அகஸ்டின் அகல்யாவுக்காக மட்டுமே