• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நின் மூச்சோடு குடியேறவா.? - 03

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
877
அத்தியாயம் 03

வாழ்கை என்னும் பயணத்தில் எங்கு எந்த இடத்தில் நாம் உடைந்து சரிவோம் என்று கூறவே முடியாது. மிக மிக கடினமான வேளைகளில் கூட தைரியமாக வெற்றிகரமாக கடந்துவிடும் மன தைரியம் இருந்தாலும், மிக மிக சாதாரணமான விஷயங்களில் உடைந்து போவோம். சாதாரணமான விஷயங்களில் கூட மிக மிக அழுத்தம் கொடுத்து மனதை உடைக்க வைக்கும் வல்லமை கொண்ட சுற்றம் இருக்கும் என்றால், அந்த மனிதனின் வாழ் அவ்வளவு தான். தூக்கி விடவும் தோள் கொடுக்கவும் இருக்கும் உறவுகளே தட்டிவிடும் பொழுதுகளை கடந்து மீண்டும் வெற்றியை எட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.

இங்கு வெற்றி என்பது மீண்டும் உறவுகளை இறுக்கி பிடித்து உடன் இருந்து, பணத்தை சம்பாரித்து, ஓடி ஓடி கலைத்து, அனைவர் முன்பும் அவர்கள் விருப்பபடி வாழ்ந்து காட்டுவது அல்ல. முன்னேறுவது என்பது அல்ல. அனைத்தையும் மறந்து ஒரு நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்கையை நமக்கு பிடித்தது போல் வாழ்வதே ஆகும். தன் வாழ்க்கையில் தனக்கான, தனக்கு பிடித்த வகையான, சந்தோசத்தை யார் துணையுமின்றி அடைந்து, அதில் இன்பமுறுவது என்பது கடினமே.

அதுவும் கிடைக்கும் அந்த நிம்மதியும் சந்தோசமும் அதனால் உண்டான வளர்ச்சியும் வாழ்க்கையில் முன்னேற்றமும் பகிர கூட ஆள் இல்லாத நாட்கள் வெறுமையை உணர்த்தும்போது, முன்னே கிட்டிய அனைத்தும் பின்னே போய்விடுமே! அனைத்தையும் மீறி தனக்கான முழுக்க முழுக்க தன்னை முன்னுறுத்தி வாழும் ஒரு வாழ்க்கை அமைவது கடினமே.

அந்த மாதிரியான ஒரு வாழ்க்கை இன்னும் கைக்கு கிட்டவில்லை என்றாலும், அதை அடையும் வழியில் தாம் சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்று நம்பிக்கொண்டு இருந்தாள், யக்ஷிணி. அவளுக்கு புரியவில்லை. மனித மனம் என்பது எப்போதுமே சார்ந்து இருந்து பழக்கப்பட்ட ஒன்று என்று. அதுக்கு துணை என்பது தேவை என்று. ஏதோ ஒன்றின் மேல், அது உயிருள்ள விஷயமோ, உயிரில்லாத விஷயமோ ஏதோ ஒன்றின் மேல் ஒரு பிடிப்பும், சார்ந்தலும், தேடலும் இருந்துக்கொண்டே இருக்கும் என்று.
தனக்கான ஒரு வாழ்க்கை, யாரின் விருப்பத்தையும் முன்னுருதி வாழாத ஒரு வாழ்கையை வாழ வெளியே வந்தவளின் வாழ்க்கை அவள் நினைத்தபடி தான் சென்றுக்கொண்டு இருக்கிறதா என்று கேட்டால், அது கேள்வி குறியே. வாழ்க்கையும் காலமும் தான் இதற்கெல்லாம் பதில் கூற வேண்டும்.

இப்போதைக்கு அவளின் நாட்கள் அமைதியாய் செல்வதே போதும் என்று நினைத்துக்கொண்டு இருப்பவளின் நாட்களில் புயலே அடிக்க ஆரம்பிக்க போகிறதை அறியவில்லை அவள்.

“இன்னைக்கு ப்பா சொன்னா தாத்தா பாட்டி கூட நம்ம எல்லா ஒன்னா விளையாட போறோமா? நிறைய வெளிய போய் விளாடலாமா”

காரில் பள்ளிக்கு செல்லும்போது வழியில் தான் அவள் மகவு இப்படி வளவளத்துக்கொண்டு வந்தாள். நேற்றில் இருந்து இதே பாட்டு தான் பாடிக்கொண்டு இருக்கிறாள். அவளின் உறவினர்களுக்குண்டான ஆர்வத்தை பார்த்து இப்போதைக்கு எதையும் பேசிக்கொள்ளவில்லை யக்ஷிணி. தன் எண்ணங்களை தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டாள்.

எவ்வளவு பேசியும் அன்னையிடம் பதிலில்லை என்று சிறிது நேரம் அமைதியானவள், பின் மீண்டும் தொடங்கிவிட்டாள். “சின்னு பாட்டி, கிச்சு தாத்தா என்னை பாக்கவே மாட்டா... இப்போ வராங்களாம் எனக்காக” என்றாள்.

இனி இந்த வாரம் முடிந்து அவர்களை காணும் வரை இதே பாட்டை தான் பாடிக்கொண்டு இருக்க போகிறாள் போல. நினைத்தாலும் யக்ஷிணி முகத்தில் கடுகடுப்பு இல்லை. தான் ஏன் எல்லாரையும் போல் ‘வாழ்கையை எளிதாக எடுத்துக்கொண்டு போகாமல் போனோம்’ என்ற எண்ணம் தான்.

மற்றவர்களை போல் பெற்றவர்கள் சொல் கேட்டு, உற்றவர்கள் சொல் கேட்டு, மற்றவர்கள் சொல் கேட்டு, வாழ்கையை அவர்கள் சொல்கிற படியெல்லாம் திசை திருப்பி, பயணித்து இருந்தால்...!

இருந்தால்! அதுவரை மட்டுமே அவளால் எண்ண முடிந்தது. அவளுக்கு அதற்குமேல் யோசிக்க முடியவில்லை. அப்படி வாழ்ந்து இருந்தால்... வாழ்க்கை வெறுத்து போயிருக்கும் என்று மட்டும் உணர முடிந்தது.

எண்ணங்களின் நெருக்கடியில் ‘பெண் இப்படி தனியாக இருப்பதால் ஏங்கி போய் இருக்கிறாளோ’ என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. உறவுகளின் பாசத்தை என் சுயத்திற்காக அவளுக்கு கிட்ட விடாமல் செய்கிறோமோ என்றும் தோன்ற ஆரம்பித்து இருந்தது.

பள்ளி வந்துவிட, இறங்கி அவளின் பையை கொடுத்தவள், “உனக்கு பிடிச்ச நெய் சாதமும், பன்னீர் ரோஸ்டும் தான் வைச்சிருக்கேன். மீதி வைக்காம சாப்பிடனும், சரியா?” என்று பெயருக்கு எப்போதும் போல் சொல்லி வைத்தாள்.

அவளுக்கு தெரியும் தினம் உணவு வேளையில் அவன் வந்து மகவுக்கு உணவு ஊட்டிவிட்டு தான் செல்வான். அவளின் வேலை பளு காரணமாக அவள் வர முடியாத சூழலை ஈடு கட்டுவான். அதேப்போல் மாலையிலும் ஒரு பதினைந்து நிமிடம் வந்து இருந்துவிட்டு செல்வான். அவர்களுக்கான நேரத்தை கொடுக்கவே, பல சமயம் அவளுக்கு நேரம் கிட்டினாலும் செல்ல மாட்டாள். மாலை வேளையிலும் சரியான நேரத்திற்கு சென்று நிற்க மாட்டாள்.

மென்நிறுவனம் ஒன்றில் வேலை செய்துக்கொண்டு இருப்பவனுக்கு இது சற்று சரமம் தான் என்றாலும், மகவுக்காகவும், தினம் ஒருமுறையாவது அவனவளை பார்த்துவிட முடியுமே என்ற எண்ணத்தில் முதலில் இருந்தே இதனை கடைப்பிடித்து வருகிறான்.

பெண்ணை பள்ளியில் விட்டுவிட்டு அவளின் உணவகத்திற்கு சென்று சேர்ந்தால், அங்கே காலையிலேயே கூட்டம் கூடி இருந்தது. மணி ஒன்பதை தான் தொட்டுக்கொண்டு இருந்தது. அவர்கள் தினமும் எட்டு மணிக்கே வந்து காலை நேர வேலைகளை முடித்து ஒன்பதரை மணி போல் ஓபன் போர்ட் வைத்து கடையை திறந்துவிட்டாலும், மக்கள் வர எப்படியும் பத்தரை மணிக்கு மேல் ஆகிவிடும்.

தினம் காலையில் வந்து அன்றைய தினத்திற்கு தேவையான பொருட்களை தயார் படுத்தி வைத்துவிட்டு, முதல் நாள் கணக்கை பார்த்து முடித்தால், மக்கள் வர ஆரம்பிக்க சரியாக இருக்கும். அதன்பின் நடுவே மாற்றி மாற்றி இருவர் இருவராக அவர்களின் மதிய உணவை முடித்தால், மீண்டும் இரவு பத்து மணி வரை வாடிக்கையாளர்கள் வந்து சென்றுக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் நால்வரும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே இடையில் ஜெனியும் வந்து இணைந்துக்கொள்வாள். அப்படியும் இரவில் வேலைகள் இழுத்துவிடும். எனவே, அனைத்தையும் ஒதுக்கி வைத்தாலும் மீண்டும் மறுநாள் காலை தான் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி சுத்தம் செய்வார்கள்.

இன்று அதற்கான நேரம் கூட கிடைக்காது, கூட்டம் வந்திருந்தது ஆச்சர்யத்தை கொடுத்தாலும், எதுவோ சரியில்லை என்று தோன்ற வேகமாக காரை அவர்கள் கடையின் பார்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.

அர்ஜுன் மற்றும் சீரா ஒரு பக்கம் அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு இருக்க, மற்றொரு பக்கம் ஜோஷ்வா வேகமாக அனைத்தையும் சரி படுத்திக்கொண்டு இருப்பது உள்ளே நுழையும் முன்னேயே தெரிந்தது. அந்த கண்ணாடி கதவை தள்ளி திறந்துக்கொண்டு இவள் உள்ளே செல்ல,

“என்ன நீங்க இதெல்லாம் சகஜமான விஷயம் இதுக்கெலாம் அலோவ் பண்ண முடியாதுனு வர கஸ்டமரை இழக்கறிங்க. நான் தான் டபுள் ட்ரிபிள் தி அமௌன்ட் (Double-Triple The Amount) கொடுக்குறேன் அப்படின்னு சொல்லுறேனே”

“உங்களுக்கு இப்படி ஏதாவது தேவை இருந்தா நீங்க முன்கூட்டியே புக் பண்ணிருக்கணும் சார். அதுவும் மாடியில் நாங்க ஒதுக்கி கொடுத்து இருப்போம். அதுக்கும், சில வரை முறை இருக்கு. இப்படி கண்டதை கொண்டு வந்து இங்கே கொண்டாட முடியாது.” சீரா சீற்றலாக பேசிக்கொண்டு இருக்க,

“முதல உங்க பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வெளியே போங்க, நாங்க இன்னும் ஓபன் போர்டு கூட வைக்கலை. நேரத்துக்கு முன்னாடியே வந்து தேவை இல்லாத வம்பு பண்ணுறிங்க, இதுக்கெல்லாம் இங்கே அலோவ்ட் இல்லை” அர்ஜுனும் அவர்களுக்கு புரிய வைத்துக்கொண்டு இருந்தான்.

அங்கேயே பிரித்து வைக்க பட்டு இருந்த மூன்றடுக்கு கேக்கும், சுற்றி இருந்த சில பொத்தல்கள் மற்றும் பொட்டலங்கள், வந்திருந்த எட்டு பேரில் நான்கு பேர் கையில் இருந்த கலர் பேப்பர் மற்றும் நுரை வெடியும், விஷயத்தை சற்று அவளுக்கு உணர்த்தினாலும், பேசும் தோரணையில் எதுவோ சரியில்லை என்று அவளுக்கு நன்கு உணர்த்த அழுத்தமாக அர்ஜுன் மற்றும் சீராவின் பக்கம் சென்று நின்றவள்,

“என்ன ஆச்சு? காலையிலேயே என்ன விஷயம்?” என்று கேட்டுக்கொண்டே வந்தவர்களை எடை போட்டாள். மொத்தம் ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் என்று வந்திருந்தனர். பார்த்தாலே தெரிந்தது அனைவரும் பணக்கார வீட்டு பிள்ளைகள் என்று.

அவளின் தோரனையை வைத்தே அவள் அங்கு முக்கியமான ஆள் என்று புரிந்துக்கொண்ட அந்த குழு, “நீங்க இந்த ரெஸ்டாரெண்ட் ஓட மனேஜர் இல்லை ஓனரா?” என்று கேட்டான், ஒருவன்.

“நான் ஒன் ஆப் தி ஓனர் தான், சொல்லுங்க” என்று அமைதியாக கேட்டவளை பார்த்து,

“ஒரு சின்ன சிளேபிரேசன் கூட இங்கே அனுமதி இல்லையா? இதெல்லாம் சகஜம் தானே. இவங்க என்ன இப்போவே வெளிய போக சொல்லி பேசுறாங்க? இப்படி தான் வர வாடிக்கையாளர்களை ட்ரீட் பண்ணுவிங்களா?” என்றனர்.

“ஜஸ்ட் எ மினிட், நீங்க முதலிலியே முன் அனுமதி வாங்கி இருக்கிங்களா? இங்கே மேலே இடம் இருக்கு, அங்கே தான் மோஸ்ட்லி இதெல்லாம் ஆலோவ் பண்ணுவோம், அதுவும் இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே முன் பதிவு பண்ணிருந்தா மட்டும் தான். அப்புறம் இது எங்க ஒபெனிங் டைம் கூட இல்லையே?” என்றாள் நிதானமாக, அனால், அழுத்தமாக.

“நான் அப்போவே இந்த மாதிரி வந்து நிக்க வேண்டாம் சொன்னேன். வாங்க போகலாம். ஊரில் இல்லாத ரெஸ்டாரெண்ட் வைத்திருக்க மாதிரி பேச்சு.” ஒருவன் திமிராக பேச,

“அஷ் ப்ளீஸ்... யு நோ திஸ் இஸ் அவர் மொமென்டபிள் பிளேஸ்!?” (Ash please, You know, this is our momentable place!?) அதில் ஒரு பெண் மென்மையாக பொறுமையாக எடுத்துரைக்க, அதில் சற்று அடங்கினான்.

“ஒரு மணி நேரமாது விட்டா தான் உங்களுக்கு ஏதாவது அரேன்ஜ் பண்ணி தர முடியும்” இறுதியாக யக்ஷிணி கூற,

“லெட்ஸ் வெயிட்...” என்றாள் மீண்டும் அந்த பெண்.

“என்னவோ பண்ணு, இதெல்லாம் தேவையா? நம்ம தகுதிக்கு ஸ்டார் ஓட்டலேயே எல்லாம் பண்ணலாம். பழைசை பிடிச்சிட்டு தொங்கிட்டு கண்டவங்க பேச்சை கேக்குறதா இருக்கு” அவன் கத்தி விட்டு சென்றான்.

அனைவரும் அந்த இடத்தை விட்டு அகல, சற்று அசுவாஸ்யமாக அமர்ந்தவள், மற்றவர்களை பார்த்து, “வேலையை ஆரம்பிக்கலாம்” என்று கூறிவிட்டு, தானும் முந்தைய நாள் கணக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

மேலும் சில நேரம் கழித்து, இவர்கள் ஓபன் போர்ட் வைத்த நிமிடங்கள் கழித்து, அந்த குழு மீண்டும் உள்ளே வந்தது. ‘அஷ்’ என்று அழைக்கப்பட்டவன், இவளையே முறைக்க, அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது, அவர்கள் கேட்டபடி செய்து கொடுக்க, அர்ஜுனிடம் பணிந்துவிட்டு தன் வேலையை மீண்டும் தொடர்ந்தாள்.

“திமிர் பிடிச்சது” அவன் வார்த்தைகளை கடிக்க, இவள் காதில் சப்ஷ்டமாக விழுந்தாலும், அவனை ஒரு கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாது இருந்தவளை சீரா பார்த்து, தானும் அமைதியாக நின்றாள்.

அவர்கள் நகர்ந்ததும், “என்ன யக்ஷ் அமைதியா விட்டுட்ட? அவங்க வந்ததுல இருந்து பேச்சே சரி இல்லை.” என்க,

“நான் ரொம்ப நல்லா புரிஞ்சி வைச்சிருக்க ஒரு விஷயம் என்ன தெரியுமா? இந்த உலகம் சொல்லுற படி நாம நடக்காதப்போ, அது பேசுற பேச்சையும் காதுல போட்டுக்கவே கூடாது. அப்படி தேவை இல்லாததுலாம் கேட்டுட்டு மனசை குழப்பிக்கிட்டா நம்ம நம்மளா இருக்கவே முடியாது. ஒரு கட்டதுல நம்மளையே நம்மள பத்தி தப்பா நினைக்க வைச்சிடும் இப்படிபட்டவங்களோட பேச்சுலாம்”

“என்னவோ போ... எனக்குலாம் பதிலுக்கு பதில் கொடுத்தா தான் மனசு திருப்தி ஆகுமே”

‘நானும் ஒரு காலத்துல அப்படி தான் இருந்தேன். ஆனா...’ மனதிற்குள் நினைத்தாலும் வெளியில் சொல்லவில்லை அவள்.

“போ... போய் வேலையை கவனி. எனக்கு இந்த கணக்கு நேர்படவே இல்லை. பார்த்துட்டு வரேன்” என்றாள்.

மேலே சத்தம் காதை பிளந்தது. இருந்தும் கண்டுக்கொள்ளவில்லை. இப்படி கொண்டாட வருபவர்கள் செய்யும் சேட்டைகள் தான். அவர்களின் விதமான சந்தோசத்தை பகிர்ந்தல் அப்படி. ஒன்னரை மணி நேரத்திற்கு மேல் இருந்த அந்த குழு கிளம்ப,

அனைவரும் ஒவ்வொருவராக வெளியே செல்ல, “ரொம்ப தேங்க்ஸ் அண்ட் சாரி” என்று கூறிவிட்டு நகர்ந்தாள், இறுதியாக அந்த பெண்.

நகர்ந்ததும், “இவங்களுக்கு அது ஒன்னு தான் குறை. கொடுத்த காசுக்கு அவங்க வேலையை அவங்க செய்யுறாங்க. அமைதியா வர மாட்டியா நீ” அந்த அஷ் கண்டித்தபடி செல்வது தெரிந்தது.

ஏதோ தோன்ற நிமிர்ந்து அவர்களை பார்த்தவளின் பார்வையில் இறுதியில் அந்த பெண்ணின் உடை கண்ணில் பட, ஒரு நொடி நிலைமையை உணர்ந்தாள். உணர்ந்தவள், சட்டென செயல் பட்டாள்.
 
Top