• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
இதய வானில் உதய நிலவே!

நிலவு 02

ஷாப்பிங் மால் சென்று வந்த களைப்பில் ஷாலுவும் அதியும் உறங்கிப் போக வழக்கத்தை விட காலையில் சிறிது நேரம் கழித்தே கண் விழித்தாள் மாது.

"அச்சோ லேட் ஆச்சு. ஆபீஸ்க்கு வேற எய்ட்கு முன்னால போயாகணும். இல்லனா அந்த மொட்டத்தலை ஓவரா சீன் போடும்" துரித கதியில் வீட்டை சுத்தம் செய்து காலை உணவையும் சிம்பிளாக தயார் செய்து விட்டு ஷாலுவை எழுப்பச் செல்லும் போது காலிங் பெல் அலறியது.

நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் துடைத்தெறிந்து கதவைத் திறந்தவள் முன் பூங்கொத்துடன் நின்றிருந்தான் ஒரு சிறுவன்.

"யார் நீங்க?" என்று புரியாமல் ஏறிட்டவளின் கையில் பொக்கேவைத் திணித்து.விட்டு ஓடி மறைந்தான் அவன்.

"யாரு யாருக்கு கொடுத்து இருப்பாங்க?" என யோசித்துக் கொண்டே மஞ்சள் நிறப் பூக்கள் அடங்கிய கொத்தை உயர்த்தி பார்க்க அதில் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.

'உன் பாசம் எனும் ஒளி வெள்ளத்தில் என்னை ஒளிர வைப்பாயோ மஞ்சள் நிலவே' என்று இருந்தது. அந்த வாசகத்தில் புருவம் சுருக்கியவள் மஞ்சள் நிற சுடிதார் தான் அணிந்திருந்தாள்.

இது தனக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது புரிந்தாலும் அதை அனுப்பியது யார் என அறியும் மனம் அவளுக்கில்லை. அறிய வேண்டிய அவசியமும் இல்லை என்று நினைத்து தூக்கிப் போட்டுவிட்டு ஷாலுவை எழுப்பி ரெடியாகி சுமதியின் வீட்டில் விட்டுவிட்டு வேகமாக கிளம்பினாள்.

மாலை வீடு திரும்பி ஷாலுவுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது வேறோர் சிறுவன் அவள் அணிந்திருந்த சிவப்பு நிற சுடிதாருக்கு பொருத்தமான சிவப்பு ரோஜாக்கள் அடங்கிய பொக்கேவை அவளது கையில் திணித்து விட்டுச் சென்றான்.

'என் வாழ்வினில் காதல் வாசம் வீச வருவாயோ இதய ரோஜாவே?' என்று எழுதப்பட்ட டாக் அதில் தொங்கியது.

அடுத்த நாளும் அவள் அணிந்திருந்த ஊதா, இளம் ரோஜா வண்ண உடைகளை ஒத்த நிறத்தில் இருவரிக் கவிதையுடன் கூடிய போக்கே அவளைத் தேடி வந்தது.

ஷாலு தூங்கியதும் நான்கு பொக்கேவையும் ஒன்றாக வைத்து முறைத்துப் பார்த்தாள் அதியா.

"ஹேய் நோட்டி பொக்கேஸ்! உங்களை எனக்கு அனுப்பினது யாரு? இதைக் கொண்டு வருகிற குட்டீஸ் எதுவும் சொல்லாமலே போயிடுறாங்க. யாராயிருக்கும்னு யோசிச்சு என் மண்டை வெடிக்க போகுது" என்று அவற்றிடம் பேசியவளோ ஷாலுவை அணைத்துக் கொண்டு உறங்கினாள்.

காலையில் எழுந்து பம்பரமாகச் சுழன்று வேலைகளை முடித்து ஷாலுவை ரெடியாக்கி உணவு ஊட்டும் போது காலிங் பெல் தன் இருப்பை உணர்த்தியது.

"இன்னைக்கு மட்டும் அவன் அனுப்பின பையன் வரட்டும்! அவனைப் பிடிச்சு கண்ணாமூச்சி ஆடுற அந்தக் காதல் மன்னனை கண்டுபிடிக்கிறேன்" என கடுப்புடன் கதவைத் திறக்க அவள் நினைத்தது போல் வந்தது ஒரு சிறுவன் அல்ல. பத்து சிறுவர்கள் கையில் பலூன்களுடன் "ஹாப்பி பர்த்டே டூ யூ நிலா அக்கா" என்னை புன்னகையுடன் மொழிந்தனர்.

"வாவ்...!! சூப்பர் டூப்பர் அத்து" சிட்டுக்களின் சத்தத்தில் ஓடி வந்த ஷாலு துள்ளிக் குதித்தாள்.

"இந்த வாண்டுகளுக்கு என் பர்த்டே எப்படித் தெரியும்?" என்று நினைத்தாலும் அவர்களை "உள்ளே வாங்க குட்டீஸ்" என அழைத்தாள் இன்முகத்துடன்.

முதல் நாள் பொக்கே கொடுத்த பையன் "ஹேப்பி பர்த்டே டி நிலு" என்று கூற "அ... அண்ணா" என்றாள் கண்கள் கலங்க.

அவளை நிலு என்று அழைப்பது அவளது அண்ணன் ரமேஷ் மட்டுமே. அதில் ஒரு சிறுமி "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதி கண்ணு" என கேசரியை அவள் வாயருகே நீட்ட தனது அம்மாவே வாழ்த்துவது போலிருக்க வாயைத் திறந்து வாங்கிக் கொண்டாள் அதியநிலா.

ஒரு பையன் அவளது தந்தை போல் வாழ்த்தி நாவல் ஒன்றை பரிசளித்தான். "நாத்தனாரே! ஹாப்பி பர்த்டே" என்று அவள் கூந்தலில் மல்லிகை சரம் சூட்டிய சிறுமியைப் பார்க்கையில் தனது அண்ணி சுபாஷினியே உண்மையாக வந்து நிற்பது போலிருக்க அவளைக் கட்டிக் கொண்டாள்.

ஷாலு சிறுவர்களுடன் ஐக்கியமாக இருக்க அவர்களுக்கு பிஸ்கட் பகிர்ந்து கொடுத்தாள் அதி "உங்களை எல்லாம் அனுப்பினது யாரு? உங்களுக்கு எப்படி என் பர்த்டே தெரியும்?" என்று கேட்டாள்.

"அது இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிரும். குட் பாய் அக்கா" என்று விடை பெற்று அனைவரும் சென்றனர்.

"இன்னிக்கு போக்கே வரலையே? அதை அனுப்பினவன் தான் இதையும் பண்ணுறான்னு நினைக்கிறேன். அவன் என் டிரஸ்க்கு மேட்ச்சா ஃப்ளவர்ஸ் அனுப்புறதால இன்னைக்கு ப்ளாக் அண்ட் வைட் சுடி போட்டு இருக்கேன். இப்போ என்ன பண்ணுறான்னு பார்க்கிறேன் "என்று நினைக்கும் போது,

"வெர்ரி ஹாப்பி பர்த்டே மை டியர் பெண்டா பேபி" என்று கூறியவாறு வாயிலில் நின்ற ஆடவனை அதிர்ந்து நோக்கினாள் அதியா.

"காட்! இவனா?" என்ற கேள்வியுடன் ஏறிட்டவளைக் குறும்பாய் நோக்கி "எஸ் இட்ஸ் மீ உதய வர்ஷன்! உள்ளே வரலாமா?" என வினவினான்.

"ஹய் அங்கிள்" என்று ஓடி வந்த ஷாலுவை அலேக்காக தூக்கிக் கொண்டான் உதய வர்ஷன்.

"உள்ளே வாங்க" என்று வேறு வழியில்லாமல் அழைத்தவள் முன் சொடக்கிட்டு "இன்னைக்கு ப்ளாக் அண்ட் வைட் சுடி போட்டா என்னால அந்த கலர் பொக்கே அனுப்ப முடியாதுன்னு நினைச்சிட்டல்ல. ஓகே உன் நினைப்பு வீணா போக வேண்டாம். சோ டுடே நோ போக்கே. ஒன்லி திஸ் வன்" என்று எதையோ கையில் வைத்தான்.

அவன் தந்த பென்டா பொம்மையைக் கண்டு உறைந்து நிற்கலானாள் அவள். இரு தினங்களாக பொக்கே அனுப்பியது, இன்று சிறுவர்களை வாழ்த்த வைத்தது எல்லாம் இவனது வேலை என்பது புரிந்தது.

"நீங்க எ.. எதுக்கு இப்படி எல்லாம் பண்ணுறீங்க?" என்று திக்கித் திணறினாள் அவள்.

"எனக்கு உங்களோட நிலைமை புரியுது இதயா. கண்டு மூணு நாள் ஆகுது, நான் யாருன்னே உங்களுக்கு தெரியாது. அதுக்குள்ள ஏன் இப்படி பண்ணுறானு தோணுறது எனக்குத் தெரியுது. எனக்கே என்னை நினைச்சு ஆச்சரியமா இருக்கு. நான் நிறைய பொண்ணுங்களை சந்தித்து இருக்கேன். ஆனால் எந்த பொண்ணுமே என்னைப் பாதிச்சது இல்ல. உங்கள பார்த்த அந்த நொடியே எனக்குப் பிடிச்சு போச்சு. ஷாலு கிட்ட காட்டுன பாசம் எனக்கும் கிடைக்கனும்னு ஆசையா இருந்தது.

உங்க மடியில சாஞ்சு தாய்ப்பாசத்தைத் தேடனும்னு துடிக்கிறேன். கண்டதும் காதலான்னு கேட்டா எஸ்! எனக்கே தெரியாம இந்த உதய்யோட இதயத்துல வந்துட்டீங்க அதியா. ஐ லவ் யூ சோ மச்" என்று காதலுடன் புன்னகைத்தான்.

மெல்லியவளுக்கு எல்லாம் கனவில் நடப்பது போல் இருந்தது. சட்டென அதிலிருந்து மீண்டவள் "வாட் லவ்வா? இது வெறும் அட்ரக்ஷனா கூட இருக்கலாம் மிஸ்டர் உதய்! உங்கள மாதிரி பசங்களுக்கு இதெல்லாம் வெறும் டைம் பாஸ். அப்பா சம்பாதிக்குற பணத்தை ஜாலியா பிரண்ட்ஸ் பார்டினு வீணாக்குவீங்க. பப்புக்கு போய் கூத்தடிப்பீங்க. நீங்க இந்த மாதிரி ப்ரபோஸ் பண்ணுனா உருகிப் போய் லவ் யூ டூ சொல்லுவேனு மட்டும் நினைச்சுறாதீங்க.

நான் ரொம்ப டீசன்ட்டான பேமிலி. தனியா இருந்தாலும் மரியாதையா வாழ்ந்துட்டு இருக்கேன். இந்த மாதிரி எங்க வீட்டுக்கு வந்து போய் ஊருல என் பெயர நாறடிக்காதீங்க ப்ளீஸ்" மேல் மூச்சுக்கு கீழ் மூச்சு வாங்கப் பேசினாள் மங்கை.

அவளது இந்த எதிர்ப்பை எதிர்பார்த்து தானே வந்திருந்தான்?

"கூல் அதி! இன்னைக்கு உங்க பர்த்டே. இப்படி கோபப்படாதீங்க. நீங்க ஹேப்பியா இருக்கணும்னு நான் விரும்புறேன்" என்று சாதாரணமாக கூறினாலும் அவளது வார்த்தைகள் தந்த வலி அவனைத் தாக்கியது என்பதே உண்மை. என்றாலும் அவன் அனாதை என்பதை அவளிடம் கூற விரும்பவில்லை.

"அங்கிள் பாவம் அத்து! அவரை திட்ட வேண்டாம். உன் மேல பாசமா இருக்கிறதால தானே விஷ் பண்ணுனார்" என்ற ஷாலு உதய்யிடம் இருப்பதை அப்பொழுது உணர்ந்து அவனிடம் இருந்து அவளைப் பிரித்தெடுத்தாள்.

"என்னம்மா இவ்ளோ கோபம்? என் மச்சான் பொண்ணைத் தூக்குற உரிமை எனக்கு இல்லையா?" என்று புருவம் உயர்த்தினான் அவன்.

"யார் யாருக்கு மச்சான்? ஓஹ்ஹோ அப்படின்னா நீ என்னோட டோட்டல் லைப் ஸ்டோரியை தெரிஞ்சுகிட்டு வந்திருக்கல்ல. ஷாலு என் அண்ணன் பொண்ணுங்கறதால ப்ரொபோஸ் பண்ணி இருக்க. இதே இவ என் பொண்ணா இருந்தா திரும்பியும் பார்த்திருக்க மாட்ட அப்படித்தானே?"

"ஷாலு உன் பொண்ணா இருந்தாலும் உன் மேல எனக்கு காதல் வந்திருந்தா இதே மாதிரி வந்திருப்பேன் இதயா" என குறுநகை பூத்தான் உதய்.

"டோன்ட் கால் மீ இதயா. நீ சின்ன பசங்கள அனுப்பி தந்த கிப்ட் எல்லாம் திருப்பித் தர மாட்டேன். ஏன்னா அது நீ சொன்னாலும் அவங்க சந்தோஷமா என் மேல் அன்பு வைத்து தந்தது. பட் இந்த பெண்டா எனக்கு வேண்டாம் கொண்டு போய்டு" அதனை அவனிடம் நீட்டினாள்.

"கொடுத்ததை திரும்பி வாங்குற பழக்கம் எனக்கு கிடையாது. அந்த குழந்தைங்க மாதிரியே நானும் உங்க மேல வச்ச அன்பால கொடுத்ததா நினைச்சுக்கோங்க தியா" அதியா தியாவாகவும் மாறினாள் காதல் கண்ணாளனின் மனதில்.

"அன்பை உதாசீனம் செய்கிற பழக்கம் எனக்கு கிடையாது. அதே சமயம் காதல்னு நீ வந்து நிற்கிறதை என்னால ஏத்துக்கவும் முடியாது. இந்த காதல் மேல எல்லாம் பெருசா நம்பிக்கை இல்ல. அதே சமயம் கல்யாணத்தில் கூட எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல" அவனுக்குப் புரிய வைக்க முயற்சித்தாள் பாவை.

"எனக்கு எல்லாமே தெரியும். சுமதி அக்கா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு உங்க கூட சும்மா ஃப்ரெண்ட்ஷிப் வச்சு காதலை மறைச்சு பழகி இருக்கலாம். ஆனால் எனக்கு மூடி மறைக்கிற பழக்கம் இல்ல. அதனால என் மனசுல இருக்கிற காதலை வெளிப்படையா சொல்லிட்டேன். உங்களுக்கு காதல் கல்யாணம் மேல இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொன்னீங்க. பட் எனக்கு உங்க மேல இருக்கிற இன்ட்ரெஸ்ட் அதிகமாயிட்டே போகுதே என்ன பண்ணுறது?

என் காதலை சொல்லிட்டேன் இப்போவே முடிவு சொல்லணும்னு இல்ல. டைம் எடுத்துக்கலாம் எத்தனை வருஷமானாலும் உங்க காதலுக்காக காத்திருப்பேன். ஆனா உங்க கிட்டிருந்து காதல் சிக்னல் கிடைச்சா காத்திருக்க மாட்டேன் கத்தியை எடுத்து மிரட்டி கட்டாயத் தாலி கட்டிடுவேன்"

"அடடா பயந்துட்டோம். கட்டாயத் தாலி கட்டுற மூஞ்சியப் பாரு. நீ தாலி கட்டும் வரைக்கும் என் கை பூ பறிக்குமாம். என் வாயி தாலியே தேவையில்ல நான் தான் உன் பொஞ்சாதி. சாப்பிடற சாப்பாட்டுல விஷத்தை வெச்சு உனக்குத் தருவேன் சரிபாதி'னு பாட்டு பாடுமாம். கத்தியைப் பிடுங்கி உன்னை ஒரே போடா போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்" என்று முறைத்தாள்.

"என் செல்ல ராங்கி. நீங்க கூடிய சீக்கிரமே என் லவ்வ அக்ஸப்ட் பண்ணிக்கோங்க. அப்புறம் கத்தி எடுக்கவும் தேவை இல்லை என்னை போட்டுத் தள்ளிட்டு போகவும் தேவையில்லை. ஜாலியா குஜாலா ரொமான்ஸ் பண்ணிட்டே இருக்கலாம்" வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டான் காதலன்.

"அடேய் மலமாடு! மரியாதையா ஓடிரு. லவ்வு ரொமான்ஸ்னு கடுப்பேத்தாத" என்று கத்தினாள்.

"நான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நீங்க பிளாட் ஆயிடுவீங்கன்னு பயம்மா இருக்கா?" ரகசிய குரலில் வினவினான் அவன்.

"பிளாட் ஆகமாட்டேன் கொலைகாரி ஆயிடுவேன்" கண்களில் அனல் பறந்தது அவளுக்கு.

"என்னைக் கொலை பண்ணாலும் ஆவியா வந்து லவ் டாச்சர் பண்ணுவேன் செல்லமே" என்றவன் "உன் முறைக்கும் அனல் பார்வையிலும் என் உள்ளுக்குள் குளிராய் காதல் சாரல் அடிக்குதே இதய நிலவே" என நெஞ்சைக் காட்டி கண்ணடித்தான் கள்வன்.

"டேய் ரோமியோ! என் ஹாட் பீட்டை எகிற வைக்காமல் கிளம்புடா" என சோபாவில் தொப்பென அமர்ந்து கொண்டாள் அதி.

அவன் இங்கு வந்ததை யாராவது பார்த்து தவறாகப் பேசுவார்களோ என்ற அச்சம் அவளுக்கு. மற்றவர் பேச்சுக்களை கண்டும் காணாதது போல் இருப்பவள் தான் அவள். இத்தனைக்கும் ஷாலு அவளது குழந்தை என நினைத்து வந்த புதிதில் புருஷனோட வாழத் தெரியாதவள், சிறுக்கி, கூத்தடிக்கிறவ என்று பலவாறு பேசினார்கள்.

அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல் தூசு போல தட்டி விட்டவள் இவள். ஆனால் தானாக மெல்லும் வாய்களில் அவல் போடவும் அதியா விரும்பவில்லை.

"உன் ஹாட் பீட் என்னால எகிறுதுனு சொன்னேல. எனக்கு இப்போதைக்கு இது போதும்! இதே சந்தோஷத்தோட போறேன். டாட்டா வரட்டா கன்னுக்குட்டி" சல்யூட் வைத்து விட்டுச் சென்றான் வர்ஷன்.

"இவன பெத்தாங்களா இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களான்னே தெரியல. அப்பப்பா வந்த கொஞ்ச நேரத்துல பதற வச்சுட்டு போயிட்டான்" என்று நெஞ்சில் கை வைத்தவள் ஷாலுவின் திகைத்த முகத்தைப் பார்த்து,

"என்ன பாப்ஸ்! என் முகத்தை அப்படி பார்க்கிறே?" கேட்டு அவளை மடியில் வைத்துக் கொண்டாள்.

"உனக்கு இவ்ளோ பேச வருமா அத்து? யார் கூட அதிகமா பேசாம பேசுவ. நீ இப்படி கலகலன்னு பேசுறது எனக்கு புடிச்சிருக்கு" அத்தையின் மார்பில் தலை வைத்தாள் சின்னவள்.

"உனக்கு பிடிச்சிருக்குனா அப்படியே பேசுறேன் அம்மு" என்றவள் அறியவில்லை பழைய அதியாக மாறும் முதல் கட்டத்தை தாண்டி விட்டாள் , அதுவும் உதய்யால் என்று!

நிலவு தோன்றும்....!

✒️ஷம்லா பஸ்லி🤍
 
Top