• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-அத்தியாயம் -23

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
அத்தியாயம் 23

ஒரு மூன்று மணி நேரம் டிரைவிங்கின் பின் அந்த சர்ச்சை அடைந்தார்கள்.

கிறிஸ்மஸ் வரப்போகிறது என்பதை அதன் முகப்பும் வெளியே நின்ற மரங்களும் பறை சாற்றிக்கொண்டிருந்தன. பனி என்றும் இல்லாதவாறு கொட்டோ கொட்டு என கொட்டிக் கொண்டிருந்தது. முழங்கால் புதையும் அளவுக்கு பனி நிறைந்து போய்க் காணப்பட்டது.

அக்ஷய் பார்க்கிங் பண்ண இடம் இல்லாத காரணத்தால், பார்க்கிங்க்குக்கு கட்டணம் செலுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு சில நாணயங்களை போட்டு டிக்கெட் எடுத்து காருக்குள்ளே வைத்தான்.

உள்ளே பலதரப்பட்ட மனிதர்கள் ஒவ்வொருத்தரும் பிரார்த்தனையில் இருந்தனர். பாதிரியாரின் அருகில் வந்து முழங்காலிட்டு அமர்ந்தான்.

''வணக்கம் ஃபாதர். கொஞ்ச நாளைக்கு முன்பு புதுசா இந்தியர்கள் யாராவது இந்த சர்ச்சில் அடைக்கலம் தேடி வந்தாங்களா?''

''இந்தியர்களா? இல்லை மை சன்..''

''இல்லை ஃபாதர்..ஒரு பெண்..அவங்களை பார்த்தா இந்தியன் போலத் தோற்றம் அளிக்காது. ஆனா அணிந்திருந்த ஆடைகள் வைத்து'' கீர்த்தி
அவசரமாகச் சொன்னான்.

''சாரி மை சன்..! அப்படி யாரும் வரவில்லை...எதுக்கும் பக்கத்தில் உள்ள விடுதிக்கு போய் பாருங்க. அங்கு தான் எல்லோரும் கூடி இருப்பார்கள்...காட் பிளஷ் யூ..'' என வாழ்த்த, ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வெளியேறினார்கள்.

விடுதியில் விசாரித்தும் இல்லை என்றதும், அக்ஷய் ஏமாற்றத்தோடு காருக்குள்ளே நுழைந்தான். கைகள் ஸ்டியரிங்கை இறுக்க, முகம் யோசனையில் இருந்தது.

''விடு..! வேற வழி பார்க்கலாம்." என்றான் கீர்த்தி, தான் சொல்லும் சமாதானம் நண்பனை சாந்தப்படுத்தாது என்று தெரிந்தும்.

கார் தன்பாட்டுக்கு போய்க் கொண்டிருக்க, காரினுள் கனத்த மௌனம் நிலவியது. அக்ஷய் கார் ஓட்டியபடி வெளியே பார்வையை எறிந்தான்.

தீடிரென்று கார் கிரீச்சுட்டு நின்றது. அக்ஷய் சடாரென்று "நிலா" என கத்தியபடி இறங்கி ஓடினான். கீர்த்தி திகைத்து, திணறி, பின் சுதாகரித்து அவனும் இறங்கி ஓடினான்.

''நிலா....!'' அக்ஷய் கொட்டும் ஸ்நோவை பொருட்படுத்தாது பாதங்கள் பனிக்குவியலுக்குள் புதைந்து வழுக்கியதை கவனியாது தரையில் நிறைந்து வழிந்த ஸ்நோவுக்குள் விழுந்து எழுந்தபடி ஓடினான்.

''அக்ஷய்...நில்லுடா...!'' கீர்த்தி பின்னாலிருந்து கத்தியது அவன் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

நிலா என கத்தியபடி ஓடிவந்தவன் ஒரு பெண் பின்னால் ஓடி வந்து ஒரே இழுவையில் அவளை தன்பக்கம் திருப்பினான். அந்தப்பெண் அதிர்ச்சி தாக்க கோபத்துடன் அவன் சட்டையை பிடித்து ஆங்கிலத்தில் விளாசித்தள்ள, கீர்த்தி வந்து சேர்ந்தான்.

''சாரி மேடம்..எ..எனக்கு தெரிந்தவங்க போல இருந்திச்சு'' என்றான் அக்ஷய் அவசரமாக.

''இடியட்..! தெரிந்தவங்களை கூட இப்படித்தான் நடுரோட்டில இழுத்து டார்ச்சர் பண்ணுவியா?'' கோபத்தில் கத்தினாள் அந்தப் பெண்.

அதிர்ந்து போய் அவளை பார்த்தான்.

''என்ன இப்பதான் காட்டுக்குள்ளேருந்து வர்றியா?" அவள் அடிக்க கை ஓங்க அக்ஷய் வேர்த்து வெல வெலத்துப்போனான். முதல் தடவையாக ஒரு பெண்ணிடம் கேவலாமன பேச்சு வாங்கியதோடு, அவள் அடிக்கவே வந்துவிட்ட நிலைமை. அவமானத்தால் அவன் முகம் சிவந்து போனது.

''சாரி..மேடம் தப்பான எண்ணத்தில அவன் உங்களை தொடலை'' என்றவாறு கீர்த்தி அவனை பிடித்து கொண்டு வந்தான்.

''என்னடாச்சு? ஏன் இப்படி ஃபிகேவ் பண்றே?'' அவனை உலுக்கியபடி கேட்டவனிடம்,

''நி...நிலா..மாதிரி தெரிஞ்சுதடா...'' கண்கலங்கக் கூறினான் அக்ஷய்.

''எந்நேரமும் அவளைப்பத்தித்தான் நீ நினைச்சுகிட்டிருக்கறதால பார்க்கிற பொண்ணு எல்லாம் நிலா போல தோணுது உனக்கு...''வேதனையுடன் நண்பனைப் பார்த்தான்.

''அய்யோ...கீர்த்தி! எனக்கு பைத்தியம் புடிச்சுடுத்தா? எங்கு டிரெயினைப் பார்த்தாலும் தலையை வைச்சுடலாம் போல இருக்கு...அமைதியாக இருக்கும் வீட்டை பார்த்தா கொளுத்தணும் போல தோணுது! யாராவது கேள்வி கேட்டால் கொலை செய்துடலாம் போல இருக்கு...'' மண்டியிட்டு பனிக்குவியலுக்குள்ளே இருந்தபடி முகத்தை மூடியபடி கதறினான். கண்கள் கலங்க பார்த்தான் கீர்த்தி.

''அக்ஷய் எழுந்திரு முதல்லே...'' என அவனை எழுப்பி காருக்கு அழைத்து வந்தான்.

''இதோ பார்..! நடுரோட்டில இப்படி காரை நிறுத்திவிட்டு ஓடினதும், ஆக்சிடிடெண்ட் ஏதாவது ஆகியிருந்தா.. கொஞ்சம் நிதானமாக இருடா... எப்பவும் நிதானம் தவறக்கூடாதுன்னு சொல்ற நீயா? கொஞ்ச நாள் பொறுத்திரு..! அது வரை மனதை வேலையில் செலுத்து. உனக்கு கல்யாணமே ஆகவில்லை என்று நினைத்துக் கொண்டிரு.. ஒரு வேளை நிலாவே உன்னை காண்டாக்ட் பண்ணலாம்.''

''..............''

''நீ இரு...நான் டிரைவிங் பண்றேன்..நான் கூட வந்தது நல்லாதாப்போச்சு. இல்லைன்னா என்ன ஆகியிருக்குமோ?''

''அப்படியாவது நிம்மதியாக போய்ச்சேர்ந்திருப்பேன்.'' விரக்தியுடன் கூறினான் அக்ஷய்.

''ச்சே..அடி வாங்காதே'' கீர்த்தி கண்டிக்க அக்ஷய் முகத்தை திருப்பினான். வாழ்க்கையை ஒவ்வொரு நிமிஷமும் ரசிச்சு, அழகு பார்த்து , ஓவியம் போல தீட்டி இன்பமாக வாழ்ந்து கொண்டிருந்தவன், வெறுத்துப்போய் என்ன வார்த்தை பேசுறோம் என்று தெரியாமல் பேசுகிறானே காரணம் ஒரு பெண். ஒரு பெண் அழுதால் அதற்கு பின் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு ஆண் அழுதால் நிச்சயமாக அதற்கு பின்னால் ஒரு பெண்தான் காரணமாக இருக்க முடியும். எவ்வளவு நிதர்சனமான கூற்று.? எவ்வளவு தைரியசாலியான இவனைக்கூட எப்படியெல்லாம் சிந்திக்க வைச்சிட்டாள்? " கீர்த்தி சிந்தனைகள் ஓட பக்கத்தில் இருந்த அக்ஷயை பார்த்தான்.

அவன் கண்களை மூடியபடி இருந்தான். கீர்த்தி ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.
(Coming)
 
Top