• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-அத்தியாயம் -24

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
அத்தியாயம் 24

''இந்தா..'' என்றாள் நிலா எதிரே இருந்த நீரஜாவிடம்.

''என்னடி?''

''பிரிச்சுப்பாரேன்'' அவள் சொல்ல. தோழி தந்த கவரை பிரித்துப் பார்த்தாள். அதில் நிலாவின் முதல் மாதச் சம்பளம் இருந்தது.

''என்னடி இது? சம்பளத்தை என்கிட்டே தர்றே?''

''ஆமா..வீட்டு வாடகை, சாப்பாட்டுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மிச்சத்தை நீ என்னவேணா பண்ணிக்கோ! உன் இஷ்டம்'' என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த வார இதழை எடுத்து விரித்தாள். நீரஜா வியப்போடு தோழிக்கு அருகே வந்தமர்ந்தாள்.

''நிலா! விளையாடாதே! என்னோட சம்பளம் போதும் வாடகைக்கும், சாப்பாட்டுக்கும். உன்னோடதை நீதான் வைச்சுக்கணும் அவள் கொடுத்த கவரைத்திருப்பிக் கொடுத்தபடி கூறினாள்.

''ம்ஹூம்...! எனக்கு தேவை இல்லை! உன்னோடது போதும் என்றால் இது உன் பேங்கில், உன் கால்யாணத்துக்கு என்னோட பரிசாக போட்டுக் கொண்டு வா'' என்றாள் வார இதழை விட்டு பார்வையை எடுக்காமல். நீரஜா நெகிழ்ந்து போனவளாக,

''நி...நிலா...எப்பவோ நடக்கப்போகும் என் கல்யாணத்தை பத்தி சிந்திக்குறே..! நடந்து முடிந்த உன் கல்யாண வாழ்க்கையை பத்தி, உன்னைப்பத்தி நினைச்சு பாரு.''

''என்னை பத்தி நினைக்க என்ன இருக்கு?'' என்றபடி மீண்டும் அந்த வார இதழிலேயே ஆழ்ந்தாள்.

''உன்னோட வாழ்க்கை எப்படி...?''

''அதைப்பத்தி பேசமாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கே'' என்றாள் அடுத்த பக்கத்தை புரட்டியவாறே.

''சரி..அப்படீன்னா இதுக்கு முடிவு?''

''முடிவு? ம்...இதபார் நான் வாழ்ந்து முடிச்சுட்டேன். இனி புதுசா எதுவும் இல்லை வாழ்க்கையில நான் பார்க்குறதுக்கு..! என்னால உனக்கு ஏதும் பிரயோசனமாக இருக்கணும். உன்னோட சுமையில பங்கு ஏற்கிறேன்னு தான் நான் இங்கே வந்ததே அவ்வளவு தான்.''

''நிலா ஏற்கனவே உன்கிட்டே நிறைய கடன் பட்டிருக்கேன் இனியுமா? எப்படி? எப்படித் திருப்பிக்கொடுக்குறது?''

''ம்..நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கொண்டு சந்தோஷமா வாழ்ந்து காட்டு போதும்."

''ஆமா பெரிய கிழவி சொல்றா போடி...!'' என முறைத்தவளைப் பார்த்துச் சிரித்தாள் நிலா.

''இன்னிக்குத்தான் நீ சிரிச்சு பார்க்குறேன்..'' என்றாள் நீரஜா தோழியின் கைகளை எடுத்து வாஞ்சையுடன் தடவியவாறே.

''ம்..மனசு இப்பதான் நிம்மதியா இருக்கு..யாருக்கும் துரோகம் இழைக்கலை! தீங்கு நினைக்கலை...! வீணாக இந்த உலகத்திலே பாரமா இருக்குறதை விட எதுக்காக வாழ்கிறேன் என்று ஒரு பிடிப்பு வந்துடுத்து. அப்புறம் என்ன?'' மகிழ்ச்சியுடன் கூறினாள் நிலா.

''அதுசரி! நீ படிச்சது என்னமோ? செய்வது என்னமோ? பேசாமல் ஆசிரமம் தொடங்கேன். உன்னோட சேவைமனப்பான்மைக்கு அதுதான் லாயக்கு'' நீரஜா ஆசிரமம் என்றதும் நிலாவின் முகம் மாறியது.

''சாரிடி...நான் ஏதோ விளையாட்டா சொன்னேன்.''

''இட்ஸ் ஓகே..படிச்ச படிப்போடு நிறுத்தியிருந்தேன்னா என் வாழ்க்கை தடம் மாறி இருக்காது'' என்றாள் பெருமூச்சுடன்.
''அதை விடு..! ஹோட்டல் வேலை எப்படி இருக்கு? முதல் மாதச் சம்பளம் வாங்கியிருக்கே, வேலையைப்பத்தி சொல்லலை.''

''மனசுக்கு பிடித்தமான வேலை! எல்லோரும் இதமாக பழகுறாங்க..வேற்று நாட்டவர் என்ற பாகுபாடு இல்லாம நிறைவா இருக்கு. என்ன மலாய் மொழிதான் கொஞ்சம் படுத்துது. மற்றபடி ஓகே''

''அதுக்குக்கென்ன? நான் உனக்கு மலாய் சொல்லித்தர்றேன். தமிழ் மூலம் மலாய் கற்றுகொள்ள இங்கே நிறைய புக்ஸ் இருக்கு.''

''எப்படி? முப்பது நாள் இந்தி போல முப்பது நாள் மலாயா?'' என்றாள் நிலா கிண்டலாக சிரித்தபடி.

''முப்பது நாளிலே எப்படி படிச்சு மூவ் பண்றது? அப்புறம் அரை குறையாக தெரிஞ்சுகிட்டு...அதைவிடு! நான் வாங்கி வைச்சிருக்குற புக்சை படிச்சுக்கோ. டிக்சனரி உதவி பண்ணும்.''

''ம்....''

''நாளைக்கு சண்டே...எங்காவது வெளியே போவோமா? இல்லை சினிமாவுக்கு போவோமா நிலா..?''

''''உன் இஷ்டம்..நீரு''

''அப்பாடா! ரெண்டு பேரும் காலேஜ் கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போனதுக்கு அப்புறம் இப்பதான் சேர்ந்து போகப்போறோம்..'' என்றாள் நீரஜா. ஃபிளாஷ் பேக்கை நினைத்தபடி.

''ஒண்ணை மறந்துட்ட நீரு....''

''என்ன?''

''ஆம்பிளை வேஷத்திலே போய் நைட்ஷோ பார்த்துட்டு ஹாஸ்டலில் சுவர் ஏறிக்குதித்து, வாட்ச்மேன்கிட்டே பிரம்பால அடிவாங்கியது...''

''நீ அதை மறக்கலையா?'' என்றாள் நீரஜா ஆச்சர்யத்துடன்.

''எப்படி? பொண்ணா போனா நைட்டில திரும்ப முடியாது என்று ஆண் வேஷத்திலே போய் அதிலும் ஒட்டமுடியாத மீசையை வைச்சுகிட்டு நீ ஒட்டவைக்க பட்ட அவஸ்தையையும்..அப்புறம் வாட்ச்மேன் டேய் பையா மீசை கூட சரியா ஒட்டத் தெரியலைன்னு சொல்ல....நீ தாங்ஸ் மாமுன்னு சொல்ல... அவன் குரலை வைச்சு உன்னை கண்டுபிடிச்சு...'' நிலா சொல்ல நீரஜாவுக்கு சிரிப்பு பொங்கியது.
(Coming)
 
Top