• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-அத்தியாயம் 37

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
அத்தியாயம் 37

''ஹலோ மை டியர் பொண்டாட்டி!'' சொடக்கு போட்டு அவளை விழிக்கச் செய்தவனாக அவனே தொடர்ந்தான்.

''ச்சேச்சே! ஒரு நாள் மட்டும் என் கூட வாழ்ந்தவளை அப்படி கூப்பிடக் கூடாது!'' என்றான். அவளை மேலும் கீழும் பார்த்து ,

''ஏன் மேடம்..! என்ன நடக்குது இங்கே? உங்களை கொடுமைப் படுத்தினேனா ? யாரு? நானா? எப்படி? இங்குள்ளவன் போல பத்து பாத்திரத்தை தேய்ச்சுட்டு சமையல் கட்டில கிடடின்னு சொன்னேனா.? இல்லை தினமும் குடிச்சுட்டு வந்து உதைத்தேனா? இல்லைன்னா உங்க கண் முன்னாடியோ, பின்னாடியோ எவள் கூடவாவது கூத்தடிச்சேனா? அரை குறை டிரஸ்போட்டுகிட்டு ஆடுடின்னு சொன்னேனா?'' சீறியவனை, தாக்கிய அதிர்ச்சியுடன் விழிமூடாது பார்த்தபடி இருந்தாள் நிலா.

அவனோ தொடர்ந்து, ''இல்லைன்னா அந்த நாட்டில நடப்பது போல கண்டகண்டவனையும் அழைச்சுட்டு வந்து ஆக்கி போடு! அவனோடு போன்னு சொன்னேனா? இங்கிலீஸ் படத்தில வர்ற மாதிரி என்கூட நைட்டில இருன்னு டார்ச்சர் பண்ணேனா? இதில எதை செய்தேன்? என்ன கொடுமைடி செய்தேன் உனக்கு? எதுக்கு அப்படி ஒரு லெட்டரை எழுதி வைச்சுட்டு போனே? உன்னால நான் பட்டது கொஞ்சமா?'' ஆவேசமாக அவளிடம் எரிந்துவிட்டு, மாமானாரிடம் திரும்பினான்.

அவன் சந்தித்த வேதனைகள், துன்பங்கள், அவமானங்கள் எல்லாம் அவனுக்குள்ளே படையெடுக்க கோபம் கண்ணை மறைக்க,

''யோவ்...! என்னெண்னு விசாரிக்காம என் மேலேயா கை வைக்கிறே..?'' என அவரிடம் சொல்லிவிட்டு, ஆவேசமாக நிலா பக்கம் திரும்பினான்.

''இதோ பார்..நீ யாரையோ காதலிச்சுட்டேன்னு என்கிட்டே சொல்லியிருந்தா நானே சேர்த்து வைச்சிருப்பேன்..போன்னு சந்தோஷமா வழியனுப்பி வைச்சிருப்பேன்...இங்கே நீ சந்தோஷமா குழந்தை குட்டிகளோடு வாழுறே! ஆனா நான்? ஒரு நாள்! ஒரு நாள் உன் கூட வாழ்ந்த பாவத்துக்காக உன்னை தேடாத இடம் இல்லை! என் அந்தஸ்து, கௌரவம், புகழ், பேர் எல்லாத்தையும் இழந்துட்டேன். எதுக்குடி? எதுக்கு? உனக்கு என்ன பாவம் செய்தேன்? எதுக்கு என் வாழ்க்கையில புகுந்து பாழாக்கினே?'' மடைதிறந்த வெள்ளம் போல் வார்த்தைகள் வந்து விழுந்தன.

நிலாவோ அதிர்ச்சியின் விளிம்பில் பேச்சற்று நின்றிருந்தாள்.

''ஏன்டி! எதுக்கு கல்யாணம் என்கிற பெயரில என்னை சாகடிச்சே?. ஒரு நாளாவது உன்னை என் பொண்டாட்டி போல பார்த்திருப்பேனா? இல்லை நாந்தான் ஒரு சராசரி புருஷனா நடந்திருப்பேனா? பிரண்டு போல இருந்தேனேடி...உன்னைக் குழந்தையை போல பாத்துக்கொண்டேனே... என்னை ஏமாத்த எப்படி உனக்கு மனசு வந்தது?'' அக்ஷய் கத்த, ராமநாதன் உட்பட மற்றவர்கள் விக்கித்து போய் நிற்க..

ராமநாதன் தடுமாற்றத்துடன் தயங்கியவாறு,
''மா..மாப்பிளை'' என்றார். அவன் ஆவேசமாக கண்கள் சிவக்க அவர் பக்கம் உறுமலுடன் திரும்பினான்.

''யாரு..? யாரு மாப்பிளை..? வேணாம்! எனக்கு எந்த உறவும் தேவை இல்லை! எல்லாத்தையும் அறுத்துக்கொண்டு போகத்தான் வந்தேன்..! நான் மனுஷத்தன்மையை இழந்துட்டேன்...! இல்லை இழக்க வைச்சுட்டா உங்க பொண்ணு! என்னை அழிச்சே போயிட்டா! ஆமா! என்ன சொன்னீங்க கேவலமனவனா? யாரு? நான்? கேடு கெட்டவனா? ஃபோன் செய்யும் போது நிலா இங்கே இருக்கா மாப்பிளை, என்ன நடந்ததுன்னு நீங்க என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டீங்களா? உங்க பொண்ணு சொன்னது உங்களுக்கு உசத்தியாப்போச்சு.. என்னை நிக்க வைச்சு கேள்வி கேட்குறீங்க இல்லே?'' நெருப்புத்துண்டுகளாக விழுந்தது அவன் வார்த்தைகள்.

ராமநாதன் அதிர்ந்து போய் பார்த்தார்.

''உங்க பொண்ணு எனக்கு வாழப்பிடிக்கலை நான் போறேன்னு, இதோ இதில எழுதிவைச்சுட்டு போனா..கல்யாணம் ஆகி ஒரு வாரத்திலே பொண்டாட்டியை காணவில்லை..! இப்படி எழுதி வைச்சுட்டுப்போனா எந்த ஆம்பிளை நிம்மதியா இருப்பான்? எனக்கு என்ன செய்வது என்றே தெரியலை.. எத்தனை பேருக்கு பதில் சொல்லணும்! உங்க பொண்ணை காணலைன்னு நான் சொன்னா நீங்க என்னை சந்தேகப்படுவீங்களா? இல்லையா? என்னை பெத்தவங்கிட்டே எப்படி சொல்வது? நான் வாழ்ந்திட்டிருந்த நாட்டில அவங்களுக்கு எப்படி பதில்? தெரியலையே! நீ அதுக்கு பதில் எழுதிவைச்சுட்டு போகலையே! குழம்பிப்போனேன்.'' நிலா எழுதிய தாளை நீட்டிபடி கூறினான் அக்ஷய்.

நிஜம் புரிய ராமநாதன் எதுவும் பேசமுடியாது அவனையே பார்த்தார்.

அவனோ கண்கள் கலங்கத் தொடர்ந்தான், ''எப்போ கடைசியா சாப்பிட்டேன்? தெரியாது! என்னைக்கு கடைசியா தூங்கினேன்? தெரியாது! வேலைக்கு எப்போ போனேன்? தெரியாது! பொண்டாட்டி ஒரு புருசனை விட்டுட்டு போனா அதுக்கு அவன் கையாலாகாதவன் என்று பத்திரிகையில் எழுதித் தள்ளினாங்க..! என் எதிரே நிற்க பயந்தவங்க எல்லோரும் நீ சேலையைக் கட்டிக்கோ என்றாங்க..! பலபேர் மத்தியில் நிற்க வைச்சு பச்சை பச்சையாக் கேட்டாங்க..! வெறி பிடிச்சவன் போல தேடிகிட்டிருந்தேன்டி உன்னை..! குளிரில் பைத்தியக்காரன் போல! கோட் கூட போடாமல் விரைச்சுப் போய் மரத்துப்போய் நின்றேன்..போற வர்ற பொண்ணுங்களையெல்லாம் நிலா, நிலா, நீயா? என கத்தியபடி அவங்களை இழுத்து நடுரோட்டில பொம்பளை கையால அடி வாங்கினேன்...! எங்கு பார்த்தாலும் உன்னைப்போல இருந்திச்சு! யார் குரல் கேட்டாலும் உன் குரல் போல இருந்திச்சு...எதிர்ல வர்றவங்களையெல்லாம் கொலை பண்ணினா என்னெண்ணு ஒரு வெறி...ஓடுற ரயிலுக்கு அடியில போய் தலையை வைச்சா என்னெண்ணு ஒரு வெறுப்பு... உன் அப்பா ஃபோன் பண்ணும் பொதெல்லாம் எத்தனை பொய்யாக அடுக்கிக்கொண்டே போவது?'' அத்தனை நாள் அவன் பட்ட துன்பங்கள், அவனுடைய வேதனைகள், எண்ணங்கள் அனைத்தும் அவன் வார்த்தைகளில் நர்த்தனமாடின.

நிலாவோ கையில் ஒரு குழந்தையை அணைத்தபடி அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் அவனையே பார்த்தபடி இருந்தாள்.

''காசு பணம் இல்லாதவன் எல்லாம் பிளாட்பாரத்தில் நிம்மதியாகத் தூங்கும் போது.. எனக்கு மட்டும் ஏன் நிம்மதி, தூக்கம் தொலைந்து போனது என புலம்பினேன்...! எனக்கு தூக்கம் வேண்டும்! நிம்மதி வேண்டும்! அதுக்கு நான் உன்னை பத்தி சிந்திக்காமல் இருக்க வேண்டும்! என் மூளை உன்னைப்பத்தி யோசிச்சே களைத்துப்போனது! கால்கள் உன்னைத் தேடி சோர்ந்து போனது! மனது மரத்துப்போனது! குடிப்பதையே பாவமாக நினைப்பவன், மருந்துக்கு கூடத் தொட்டுப்பார்க்கமாட்டேன்னு உனக்குச் சொன்னவன்...உன்னாலதாண்டி நிறைய குடிச்சேன். என் வாழ்க்கையில நான் செய்த ரெண்டாவது தப்பு. வயிறு மட்டுமல்ல மூளையும் மங்கிப்போற அளவுக்கு குடிச்சேன். அப்புறம் காரில் எப்படி போனேன்? ம்ஹூம்..!'' விரக்தியோடு தொடர்ந்தவனை,

கோதை மற்றொரு குழந்தையை அணைத்தபடி கண்ணளில் கண்ணீர் வடிய வயிறு கலங்க அவன் சொல்வதை அதிர்ச்சியோடு கேட்டபடி இருந்தார்.

''தப்புன்னு தெரிந்தும் போனேன். நான் இருந்த நிலையில் எனக்கு வேறு எதுவும் பெரிசா தோணலை.! படுத்தவுடன் தூங்கவேண்டும் என்கிற எண்ணத்தாலும்..எதையும் என் மூளை யோசிக்க கூடாதுங்குறதாலும். ஹைவேயில ஆக்சிடெண்டாகி என் கதை முடிந்தது என நினைத்து எலும்புகளை பொறுக்கிக் கொண்டு போன டாக்டர்ஸ் எப்படியோ பொருத்தி திருப்பி அனுப்பினாங்க! மிச்ச மீதியிருந்த மானமும் போனது! லைசன்சும் போனது! கம்பெனியும் போனது...! என்னை பெத்தவங்களுக்கு இதுவரை ஒரு விஷயம் தெரியாது.! உன்னால நான் பட்டது போதும். எனக்கு வெறுத்துவிட்டது. என் வாழ்க்கையை பாழாக்கிய உன்மேலே எனக்கு ஆத்திரம் இல்லடி வெறி..கொலை வெறி! இதோ உன்னைக் காணலைன்னு எத்தனை விளம்பரங்கள் கொடுத்திருக்கேன்னு பார்...எவ்வளவு சன்மானம் வேண்டுமானாலும் தருவேன்னு போட்டிருக்கேன்..பாருடி.'' கையோடு கொண்டு வந்த அனைத்து பேப்பர்களையும் அவள் முன்னே நீட்டினான்.

நிலாவோ அவன் கூறிய அனைத்தையும் கேட்டபடி எதையும் சிந்திக்கும் திறனற்று வேரூன்றிய மரம் போல் நின்றிருந்தாள்.

''எப்படி மனசு வந்தது என்னை ஏமாத்த? ஒரு கல்யாணத்தால் நான் பட்டது போதும்! வேண்டாம் சாமி...! இனி என்கிட்டே இழக்க ஒண்ணும் இல்லை! பாதி உயிர்தான்! மறு ஜென்மம் எடுத்து வந்திருக்கேன். என்னை பெத்தவங்கிட்டே கூடப் போகாமல் இங்கே வர்றேன். வந்து உங்ககிட்டே நல்ல பெயர் வாங்கியாச்சு.'' என ராமநாதனைப் பார்த்து கூறியவன்,

நிலாவைப் பார்த்து, ''உன்கிட்டே என்னை பிடிச்சிருக்கான்னு அன்னைக்கு கேட்ட போது நீ மௌனமாக போனபோதே உணர்ந்திருக்கணும்....! புரியாமல் விட்டேன் பாரு அது தான் நான் செய்த முதல் தப்பு....! இது எல்லாத்தையும் விட உன்னை கட்டிகிட்டேன் பாரு அது தான் மிகப்பெரிய தப்பு..! ஆனாலும் நான் உன்னை நேசிச்சேன்..! மனமார நேசிச்சேன்..! களங்கமில்லா என் அன்பை நீ புரிஞ்சுக்கலை! உன் மனசில என்ன இருந்தது என்று அறியாமல் விட்டுட்டேன்...''

''...............''

''உன்னைக் கண்டு பிடிச்சதும் முதல்லே உன்னை அறைந்து எதுக்கு இப்படி செய்தேன்னு கேட்கணும்னு துடிச்சுகிட்டிருந்தேன். ஆனா நீ இப்படி இன்னொருத்தனுக்கு மனைவியாகி, இரு குழந்தைகளுக்கும் தாயாகி இருப்பேன்னோ? நான் உன்னை அடிக்குற உரிமையையும் பறிப்பேன்னோ நினைக்கலை..! இட்ஸ் ஓகே! நீதான் எனக்கு நிறைய விஷயங்களை கத்துக் கொடுத்திட்டியே... சந்தோஷமா இரு! டைவோர்ஸ் நோட்டீஸ் அனுப்புறேன் சைன் பண்ணிடு! உனக்கு புண்ணியமாகப் போகும்.'' என்று சொல்லி விட்டு அவன் கொண்டு வந்த அத்தனை விளம்பர பத்திரிகையையும் சுழட்டி அடித்துவிட்டுப் போனான்.
(Coming)
 
Top