அத்தியாயம் .... 8
"கரு சுழந்த மேகம்
போல கொட்டித்
தீர்த்திட நினைக்கிறது மனம்
உந்தன் அருகாமையில்
பெருமழையாக.."!!!!!
வினோதகன் பேச்சில் அவன் இறந்தக் காலத்தில் இழந்த ஆசைகளை மீண்டும் புதுப்பித்திட இயலாத ஒன்றாக இருக்க, அதன் வலியை உணர்ந்தவளோ இதற்கு என்ன செய்யவது என்று அறியாமல் அமைதியாக அவனுடைய களையிழந்த முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மகிழினி.
அவனோ அவளிடம் கொட்டித் தீர்க்கும் பெருமழையாக மனதில் கடந்த காலத்தில் நடந்ததை மனத்தில் அடக்கி வைத்திருக்கும் அத்தனை நிகழ்வுகளையும் அவளிடம் அன்றே பேசிட வேண்டும் என்றும், மீண்டும் தான் சொல்வதைக் கேட்கும் செவிகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமோ என்னமோ .. வினோதனுக்கு.
ஒவ்வொரு முறையும் தான் இழந்த அன்பு பாசத்தை அவள் புரிந்துக் கொள்வாளா என்று தெரிய விருப்பமில்லை அவனுக்கு.
ஆனால் அதை அவளிடம் சொன்னால் அந்நொடி மனக்கிலாசமெல்லாம் பறந்து ஓடி விடும் என்ற எண்ணம் அதிகமானது வினோதனுக்கு.
''மகி, உன் வீட்டில் பிறந்த நாளில் எப்படி நடந்துருப்பார்களோ தெரியல, ஆனால் என் வீட்டில் ஒவ்வொரு பிறந்த நாளும் என் அம்மாவின் விருப்பமே முன் நிற்கும் .
எனக்குத் தெரிந்து என் பள்ளித் தோழர்கள் என்னிடம் நெருங்கியது இல்லை தான், ஆனால் அவர்கள் வீட்டில் பிறந்த நாளில் காலையில் எழும் போது அம்மா கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்சி வாழ்த்துச் சொல்வதும், மகனுக்குப் பிடித்த ஸ்வீட்ஸ்செய்து, புது டிரஸ் போட்டும், கோயிலுக்கு அம்மா அப்பாவோட டூ வீலரில் போவதைக் கூட அவ்வளவு என்ஜாயி பண்ணுவோம் சொல்லிப் பேசுவாங்க, அதைப் பார்க்கும்போது எல்லாம் இந்தப் பணம் தானே நம்மை பெற்றோரிடமிருந்து பிரிக்கும் அரக்கனாகத் தோன்றும்.
அவர்கள் விட்டிற்குக் கேக் வெட்டக் கூப்பிடாலும் என்னை அனுப்ப மாட்டார்கள் என் அம்மா.
ஏனென்றால் அவர்களின் அந்தஸ்து கௌரவம் குறைந்து விடும் என்கிற பயமா, இல்லை அகங்காரமா தெரியாது.
ஆனாலும் என்னுடைய பிறந்தநாளுக்கும் அவர்களைக் கூப்பிட முடியாமல் போகும். அதே காரணம் தான், அம்மாவின் இஷ்டப்படி யாரை கூப்பிடனும் கூப்பிடக் கூடாது டைம் டேபிள் மாதிரி அதற்கும் எழுதி கொடுப்பார்கள்.
அன்று வீட்டில் ஆரடம்பரமான அலங்காரமும், எனக்கு விலை உயர்ந்த ஆடை பெரிய கேக், வருகிற பெரிய மனிதர்கள் முன் எப்படி நடந்தக்கணும் அம்மாவின் அட்வைஸ் படி தான் அந்த நாள் தொடங்கும்.
அதுவும் மற்றவர்கள் முன் அம்மா அப்படியே பாசத்தில் உருகும் போது தோன்றும் இது இன்று மட்டும் தானே, நிதமும் நிகழும் நிகழாக நிஜமாக மாறாதா என்று தோன்றும்.
ஆனால் அதுயெல்லாம் தூரத்தில் தெரியும் கானல் நீர் தான் என்று அறியவதற்கு பல வருசம் ஆயிற்று'', என்று வருத்தமாகக் கூறி நகைத்தான் வினோதகன்.
அவனின் சிரிப்பில் இருந்த வலியை உணர்ந்தவளுக்குத் தனக்கு வாழ்வியலில் இந்த மாதிரி நிகழ்வுகளை எல்லாம் குழந்தை பருவத்தில் கஷ்டப்பட விட்டதில்லை. அது ஒரு கனா காலம் மாதிரி அவ்வளவு அழகான நாட்கள். காலையில் எழும்போதே அம்மா தனக்குப் பிடித்த ஸ்வீட்ஸ் இருந்து ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள் . அதுவும் பாட்டி இரண்டு நாட்கள் முன்னே எதாவது செய்து வைத்து விடும். அப்பா புது டிரஸ் பத்து நாளைக்கு முன்னரே எடுத்து விடுவார், அக்கம்பக்கம் குட்டீஸ் எல்லாரும் வீட்டுக்கு வர ஆட்டம்பாட்டம் அந்நாள் களை கட்டும்.
சின்ன சின்ன சந்தோஷம் நிறைந்தது தானே வாழ்க்கை. எதுவுமில்லாத பாலைவனத்தில் வளரும் கள்ளிச் செடியாக்கிக் கொண்டு தன்னுடைய பிடிவாதமும் அகங்காரமும் என்ற எண்ணம் மகிழினி மனத்தில் ஓங்காரமிட்டது.
அவனின் வாழ்க்கையிலிருந்து மாறுபட்ட வாழ்க்கை தான். பணத்தை விட அங்கே அன்பு பாசம் தான் அதீதம்.
அன்பும் அதீதம் ஆனால் ஆலகால விசமாகும் போல, எனக்கு அது தொண்டையை கவ்விப் பிடித்தால் அதிலிருந்து விடுப்பட்டு ஓடி வந்தேன்.. ஆனால் அவன் அதற்காக ஏங்கும் சவலை பிள்ளையாக வாழ்ந்திருப்பதுக் கண்டு மனம் வருந்தினாள் மகிழினி.
அவனின் வார்த்தைகளிலே இவ்வளவு துயரின் சாயல் இருக்கும்போது அதை அனுபவித்தவனுக்கு எவ்வளவு வலிகளை கொடுத்திருக்கும், என்று அவனைப் பரிதாபமாக நோக்கினாள் மகிழினி.
அவளின் பார்வையிலிருக்கும் பச்சாதாபத்தின் சாயலைக் கண்டு வெறுத்தவன், ''இப்படி பார்க்காதே மகி, என்றவன், உனக்கு என்னை விட நல்லதா கிடைத்திருக்கும் பாசம் அன்பெல்லாம், அதைத் தூக்கி எறிந்துவிட்டு வந்தவள் தானே நீ'',, என்று பேச்சால் சாடினான்.
அவள் அதைப் பற்றி முழுவதாகச் சொல்லவில்லை என்றாலும், இவனே ஒரு கற்பனையில் சொல்லிவிட, ஆனால் அது தானே உண்மை. அவனை விட குழந்தை பருவத்தில் அவ்வளவு அழகாக அனுபவித்து வாழ்ந்தவள் தானே, ஆனால் அதைப் பற்றி நினைக்கும்போது எல்லாம் குழந்தையாகவோ இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
இப்படி வளர்ந்து தான் போக்கில் இஷ்டப்படி வாழ்ந்தால் என்ன சுகம் கிடைத்தது, மனதில் சுமை தான் பாறங்கல்லாகக் கனக்கிறது என்று நினைத்தவள், ''உன்னைப் பரிதாபமாக எல்லாம் பார்க்கல, விகன், எனக்கு உன்னை விட பெட்டராக தான் குழந்தை பருவம், ஒவ்வொன்றையும் ரசித்து வாழ்ந்தாகத் தான் இருந்தேன்.
அன்பான அம்மா, அப்பா, அதட்டினாலும் சேலை முந்தானையில் மிட்டாயை முடிந்து வைத்துக் கொடுக்கும் அப்பத்தா ஜாலியாகத் தான் இருந்தது.
அதுவும் என் அப்பத்தாவிற்கு ஒரே செல்லப் பேத்தி நானாகப் போனதால் கண்கொத்திப் பாம்பு போல எந்த நேரமும் அதன் பார்வை செயல் எல்லாம் என்னைச் சுற்றியே இருக்கும். சின்ன சின்ன விஷயத்திற்கும் ஆயிரம் கதை சொல்லி சொலவாந்திரம் சொல்லும், என் கூட விளையாடுவது என்ன? எனக்குத் துணையாகப் படுத்துக் கொண்டு பழங்கதைகளைப் பேசுவது என்னா.. ம்ஹ்ம், அதுதெல்லாம் மீண்டும் வராத பொற்காலம் தான், ஆனால் அது கூட ஒருநிலையில் சிறையாகத் தெரிய அதிலிருந்து விடுப்பட்டு ஓடி வரத் தோனியது.
அன்பு கூட ஒரு வேளை அதீத சிறை தண்டனையாகத் தோன்றிய விடுகிறது மனதில், எனக்கு அப்படி தான் தோன்றி விட்டது எனக்கு'', என்று சொல்லியவள், அவன் ரொம்பவும் சென்சிட்டிவாக இருப்பதைக் கண்டவள், இயல்பு நிலைக்குத் திரும்பி வரவழைக்கக் கிண்டலாகப் பேசினாள் மகிழினி.
''அட என்ன கோபால், இத்தனை வருஷமா பணத்தில் பிறந்து பணத்தாலே குளித்து தங்க ஸ்பூனால் சாப்பிட்டு ஒரு சாம்ராஜ்யத்தின் மஹாராஜா போல வாழ்ந்திருக்கீங்க, இதுக்குப் போய் புலம்பலாமா'' , என்று கேட்டுச் சிரித்தாள் மகிழினி.
அவள் பேச்சிலிருந்த மாடுலேஷனில் சிரித்தவனோ, ''அப்படியா ,அந்தப் பணமும் அதீதமானால் அசுத்தம் நிறைந்த குப்பையாகத் தோன்றும் தெரியுமா '' என்று கசந்தக் குரலில் கூறினான் வினோதகன்.
''வாழ்க்கையில் எத்தனையோ பார்த்தாச்சு, பணத்திற்கு இருக்கும் பகட்டும் மதிப்பும்
மரியாதையும் மனிதனுக்குக் கிடையாது, இது நான் அனுபவித்த உண்மை .. எங்க வீட்டில் வேலை செய்யும் வாட்ச்மேன் கூட மனைவி குழந்தை எங்கள் வீட்டின் பின்புறம் கட்டிருக்கும் வேலைகாரர்களுக்கு என்று கட்டிருக்கும் வீட்டில் குடியிருக்கிறார்.
ஆனால் அவரும் அவருடைய மனைவி குழந்தைகள் எல்லாம் மாலை ஆனதும் வாசலில் அமர்ந்து உணவு உண்பதும் ஒருத்தருக்கு ஒருத்தர் கிண்டலும் கேலியுமாக இருப்பதும், அப்பா மடியில் அமரப் போட்டிப் போடுவதும், அவர் ஓரக்கண்ணால் தன் மனைவியை காதலோடு பார்ப்பதைக் கண்டால் எனக்கு பெரும் ஏக்கமாக இருக்கும் தெரியுமா..
அவர்களிடம் பணம் கொட்டிக் கிடக்க வில்லை, ஆனால் அன்பும் பாசமும் அள்ளக் அள்ளக் குறையாமல் இருப்பதைப் பார்க்கப் பார்க்க, நான் ஏன் இந்த மாதிரி இருக்குமிடத்தில் பிறக்காமல் போனேன் என்று வருத்தம் அதிகமாகும் …..
அதற்காக வீட்டில் பிடிவாதமாக ஒருநாள் என் அம்மாவின் மடியில் அமர்ந்து கன்னத்தில் முத்தமிட்டேன், அதற்குப் பின் என்ன நடந்தது உனக்குப் புரியுமா என்று தெரியவில்லை '', என்றவனின் விழிகளோ இருளை வெறித்துக் கொண்டிருந்தது.
அவளோ என்ன நடந்திருக்கும் என்ற யோசனையோடு அவன் முகத்தைப் பார்க்க, அவனின் முகமோ கசங்கிப் போய் கிடக்க,அவனோ வெறுத்தக் குரலில் ''என்னை சட்டென்று கீழே தள்ளி இறக்கி விட்டவர்கள், இப்படி தான் மேலே ஏறி உட்காருவீயா, இங்கே பாரு உன்னாலே பட்டு சேலை கசங்கிப் போய்ருச்சு, லேடீஸ் கிளப் வேற நேரமாச்சு காச்மூச் கத்தியவர் ஒரு தள்ளு தள்ளிவிட்டு விடுவிடுவென்று போனது இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு'', என்றவன், ''அறியாத வயதில் அம்மாவின் மடி தேடி ஓடும மழலை வாரி அணைப்பாள் என்று புத்தகத்திலும், பல நண்பர்களின் வீட்டிலும் சொல்வதைக் கேட்டு இருக்கேன். ஆனால் என் வாழ்வில் அது எதிர்மறையாகவே நடந்தது என்றவன், இப்ப வளர்ந்து தடிமாடு மாதிரி இருக்கும்போதும், பல தொழில்களை நிர்வாகம் செய்தாலும் என் மேலே செல்லுத்தும் அதிகாரத்தின் பிடி இன்னும் என் அம்மாவின் விரல் நுனியில் இருக்கிறது .. ஆனால் இன்று நடந்த நிகழ்வால் என் வாழ்க்கையை சுழற்றி அடிக்கும் ஆழிக் காற்றாய் புரட்டிப் போட்டது, அதை முறியடிக்க வேண்டும் என்று எண்ணம் என்னுள் அலைமோத அவர்களின் பிடியிலிருந்து விடுபட யாரும் அறியாமல் காரில் ஏறி வந்துவிட்டேன்'', ..என்று சொல்லிப் பெருமூச்சு விட்டவன்,
அவர்கள் நினைத்தை நடத்தியே தீரனும் என்று வெறிக் கொண்டவர்கள்..
இதையெல்லாம் தகர்த்து என் வாழ்க்கையின் திசையை மாற்றி அமைக்கணும் என்று அங்கே இருந்து வந்துவிட்டேன்'', என்று மரத்தக் குரலில் கூறினான் வினோதகன்.
அவனின் பேச்சைக் கேட்டவளுக்கு அவனின் உள் மனம் காயத்திற்கு என்ன மருந்து தருவது என்று புரியாமல் அவனைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தாள் மகிழினி.
அவனின் வாழ்க்கை பாதையை மாற்றி அமைக்க அவனின் அம்மா என்ன முடிவெடுத்தார்களோ ஊகிக்க முடியவில்லை… ஆனால் என் வாழ்க்கையை என்னாலே சிதைத்துக் கொள்ள முடிந்தது என்று அவனிடம் எப்படி சொல்ல முடியும், அப்படியே சொன்னாலும் அவனால் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்வான் தெரியாமல் சிறிது நேரம் இருவரிடம் ஒரு மௌனம் ஆட்க் கொண்டது.
தொடரும்