• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சசிகலா எத்திராஜ்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
9
நிழலின் யாத்திரை..




அத்தியாயம்.. 1


நாயகன் .. வினோதகன்


நாயகி.. மகிழினி


"இரவில் பூத்த நிலவொன்று

மென் தாரகையோடு

இருளின் ராணியாக

ஊரை வலம் வருவது

இயற்கையின் விதியோ!!!!"..



இருள் சூழந்த நடுநிசியில் அடர்ந்த மரத்தடியில் நின்று கொண்டிருந்த மகிழினிக்கு ஊதல் காற்றில் மேனி சிலிர்க்கவும், அணிந்திருந்த மெல்லிதான சேலையை தோளோடு இழுத்துப் போர்த்திக் கொண்டு நிமிர்ந்து வானத்தை உற்று நோக்கினாள்.


இரவு நேரத்து வாயிதழ்களோ கருநிறத்தைப் பூசிக் கொண்டிருக்க, மரத்தின் இலை சருகுகளின் சப்தமோ இசையாக உருமாறி ராகமிட வானில் உடைந்தக் கண்ணாடித் துண்டுகளைப்போல் நிலா

நிழல்காட்டிடும் வெளிச்சத்தில்

பாங்கனும் பாங்கியும் புலப்படாத காதலை அகழும் தருணத்தில் நட்சத்திர தூள்களில் வெளி வேசமிடும் நாடகத்தில் மின்மினி விளக்குகளாக ஒளி வீசுவதை மெய்மறந்து ரசித்தாள் மகிழினி.


இரவு எனும் இடுதிரையில் சௌகரியமாக களவு கொள்ளும் கால சர்ப்பமாக மாறி இதயத்ததை ஒரு நொடியில் எங்கயோ கொண்டு சென்று விடுகிறதே என்ற எண்ணமோ காற்றலையாக அவள் மனதில் ஊடுருவிப் பழைய நினைவு தட்டின் அடுக்குகளைத் தூசிகளைத் தட்டி எழுப்பியது.


என்றோ நடந்த நிகழ்வுகளின் தொகுப்பில் இரவு ஒன்றில் மாடியில் குடும்பத்தோடு அமர்ந்து பௌர்ணமியை ரசித்தப்படி அம்மாவின் கையில் நிலா சோறு வாங்கி உண்ட நினைவுகள் மனதின் ஒரு ஓரத்தில் பொக்கிஷ அறையில் புதையலாகப் புதைத்து வைத்து சாவியை தொலைத்த நிலை தானே இன்று நினைத்தவள்,


தானும் ஒரு காலத்தில் வீட்டில் ராணியாக

கோலச்சி நடந்த காலங்கள் எல்லாம் என்றோ கனவில் நடந்ததைப் போல இருக்க, மனதில் பதிந்து கண்களுக்குள் மறைந்துப் போன கதை தான் என்று நினைத்துப் பெருமூச்சு விட்டவள் அந்த இருட்டிலும் பயமின்றி தனியாக நிற்பது அவளுக்கொன்று புதியதல்ல.


தினமும் நடக்கும் வாழ்வியல் நாடகத்தின் விதவிதமான அரிதாரம் பூசிக் கொண்டு நடிக்கும் நாயகியாக தன் வாழ்க்கை திக்குச் திசையறியாமல் மாறியது கண்டு அச்சம் என்றுமில்லை.


அவளுக்கு எப்போதும் இரவை நினைத்து என்றுமே பயமில்லை. ஆனால் ஒரு காலத்தில் இரவில் எழும்போது அருகில் அம்மா இல்லை என்றால் ஊரே எழுந்து வருமளவுக்கு பயத்தோடு அலறிய கடந்த காலங்கள் எல்லாம் எங்கோ ஒடி மறைந்துப் போனது.


ஆனால் இப்போது இரவென்ற ஒரு தீயில் தவறி விழும் விட்டல் பூச்சியாக தினமும் விழுந்து கருகி மீண்டும் எழுந்தால் அடுத்த ஒவ்வொரு இரவிலும் ஒரு கதாபாத்திரங்களை உருவாக்கி விடும் மோகனத்தின் சாயலை கொண்ட இரவின் ராட்சதனிடம் தினமும் வதைப் பட்டாலும் மறு இரவை புதியாகப் பிரசவித்து விடுகிறானே என்று கோபமும் உண்டு மகிழினிக்கு.


அதனாலே அவளைப் பொறுத்த வரை மரத்துப் போன மனதிற்குள் எதுவும் இனி சாத்தியப்படாது அறிந்தும் என்றும் கிடைக்காத யாருமற்ற இந்தத் தனிமையில் மௌனமாக அந்த நிசப்தமான இரவை புணரும் காற்றின் மெல்லிய ராகங்களை செவிகளில் உணர்ந்து தன்னை மறந்து நின்றாள் மகிழினி.


ஆனாலும் இரவிலும் ஒளிரும் வெண்மை பஞ்சில் கருவண்டாக இங்குமிங்கும் அலைபாயும் நீண்ட விழிகளோ வண்டிகளின் சத்தமின்றி இருக்கும் நீள் பாதையில் எதாவது வாகனம் வருகிறதா என்று ஓர விழியால் பார்த்தபடி நின்றவள், தூரத்தில் எங்கோ வரும் சிறு ஓசையில் சாலை நோக்கி மெதுவாக நடந்தவள் அது வாகனமாகக் கூட இருக்கலாம் என்று எண்ணி அத்திசையை நோக்கி தன் கட்டை விரலை உயர்த்தி லிப்ட் கேட்டபடி நின்றுகொண்டாள் மகிழினி.


அவள் நினைத்தபடி ஒரு உயர்தரமான கார் சற்றே வேகமாக வர இவளோ கார் நிற்குமோ இல்லை கடந்துப் போய்விடுமோ என்று எண்ணத்தில் சிறு பதட்டமோ அச்சமோ எதுவுமின்றி நின்றவளுக்கு கார் நிற்கவில்லை என்றால் அடுத்த வாகனத்திற்காக காத்திருக்கும் நேரத்தில் இத்தனிமையின் ருசியை இன்னும் கொஞ்சம் அனுபவிக்கலாம் என்ற எண்ணம் தான் மகிழினிக்கு.


தூரத்திலே அவள் விரல் காட்டியதைக் கவனித்து வேகத்தைக் குறைத்து மெதுவாக ஊர்ந்து வந்தக் கார் அவளருகே நிற்க, காரிலிருந்து ஒரு உருவம் எட்டிப் பார்த்தது.


யாரியவள், யாருமற்ற இடத்தில் தனியாக நின்று கொண்டு கைகளை சமிக்ஷிசை காமிக்கிறாள், என்று எண்ணமிருக்க காரின் சன்னல்களைக் கீழே இறக்கி பதிலின்றி அவளைப் பார்த்தது அவ்வுருவம்.


தன்னைப் பார்த்ததும் யாராக இருந்தாலும் ஒரு நொடியில் மாயமாக நிகழும் விழி வீச்சில் ஆசையும் வெறித்தப் பார்வையும் தினமும் கண்டவளுக்கு, காரிலிருந்து பார்த்த உருவமோ வெறுமையாக இருப்பதைக் கண்டு அவளுக்கு உள்ளூர ஆச்சரியம் தான்.


ஆனாலும் அதைக் கண்டு கொள்ளாமல், அவளே பேச்சைத் தொடங்கினாள்.


''சார், என்று அழைத்தவள், ''என்னைப் போகிற வழியில் இறக்கி விட முடியுமா'', என்று கேட்டாள் மகிழினி.


முன்னே பின்னே அறிமுகமில்லாத ஒருவரிடம் கேட்கிறோமே என்ற எண்ணம் எதுவுமில்லை அவளுக்கு,


அவளைப் பொறுத்தவரை இதுயெல்லாம் தினமும் நிகழும் வாடிக்கையான நிகழ்வு தானே.


அதனால் அவளுக்குப் புதியதாக எதுவுமில்லாமல் சகஜமாக உரையாடினாள் மகிழினி.


காரினுள் அமர்ந்திருந்தவனோ அவளின் பேச்சும் அவளின் மெல்லியதான சேலையும் சிறு டிசைன் வைத்து தைத்த பப்பு கை பிளவுஸூம், இடை வரை தொங்கிய மயிலின் தோகையாக விரிந்த கூந்தலில் மேல் தூக்கிக் கட்டிருந்த பாங்கும் , அதில் லேசாக வாடித் தொங்கிய ஜாதி மல்லியும், இதழ்களில் வரைந்த லிப்ஸ்டிக்கும், முக ஒப்பனையும் அப்பட்டமாக யாராக இருக்கும் என்பதை துல்லியமாக உணர்ந்தவன், அதுக்கான ஆள் தானில்லை என்பதை அவளிடம் சொல்லாமா எனறு தோன்ற அதுக்குள்ள அவளே பேசிக் கொண்டிருந்தைக் கவனித்தவன்,


''சார், இன்று முக்கியமான ஒருத்தரைப் பார்க்க வந்தேன், வரும்போது கூட்டி வந்தவர் ஏதோ அவசர வேலையில் சென்று விட்டார். இங்கே எந்த வண்டியும் இந்த நேரத்தில் கிடைக்கவில்லை, உங்கள் வண்டி வரும் சத்தம் கேட்கவும் தான் கையை காமித்து நிறுத்தினேன்.


என்னை போகிற வழியில் விட்டு விட முடியுமா'', என்று மீண்டும் கேட்டாள் மகிழினி.


அவள் பேச்சில் மெய் இருக்கோ இல்லையோ, அவளுடைய நீள் விழிகளில் கருமை பூசி பறவையின் இறகுகளை ஒட்டிய இமைச் சிறகில் விரிந்து பரந்து முகத்தின் மொத்த அழகையும் அவள் விழிகளே விழுங்கிக் கொண்டு போல இருந்தாலும் அதில் பொய்யமை இல்லாமல் இருப்பதைக் கண்டவன், காரின் கதவைத் திறந்து, ''கெட் இன்'', ஒற்றை சொல்லுடன் தன் பேச்சை முடித்துக் கொண்டான்.


அவனின் இறுக்கமான உதடுகளில் உதிர்ந்த ஒற்றை சொல்லிலே அவனுடைய மறு முகத்தைக் கண்டவள் வேகமாகக் காரினுள் ஏறி அமர்ந்தாள் மகிழினி.


காரின் உள்ளே அமர்ந்தவளுக்கு ஏசியின் குளுமை உடலைத் தாக்க ''இஸ்'', ஒலி எழுப்பியபடி தன் கரங்களை இறுக்கிக் கட்டிக் கொண்டவள் காரினுள் வேறு யாரும் இருக்காங்களா என்று பின்னால் திரும்பிப் பார்த்த மகிழினிக்கு அங்கே யாருமில்லாமல் இருக்க அவன் ஒருவனே தனிமையில் ஓட்டி வந்திருக்கிறான் என்று புரிந்தது.


காரின் கசிந்துக் கொண்டிருந்த இளையராஜாவின் என்பதுகளில் உருவான பாடல் ஒலிகள் மென்மையாக இசை எழுப்ப, அதை ரசித்தபடி காரின் ஸ்ரேரிங்கில் தாள மிட்டபடி இருந்த கரங்களின் திண்மையைக் கண்டு இவன் தினமும் ஜிம்க்கு போவானா இருக்கும், என்று எண்ணியவள் அவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டாள்.


அவனின் பரந்து விரிந்த நெற்றியில் விழுந்த மயிர்கற்றைகளை ஸ்டைலாக தலையின் சிறு அசைவில் மேலே எழுப்பி மீண்டும் சிலிர்த்து விழுவதில் அரியின் கம்பீரமும், கூர்மையான விழிகளில் ஆளை ஊடுருவிச் சென்று ஆழ் மனத்தின் ஆழ்த்தில் புதைந்துக் கிடக்கும் ரகசியங்களை அறிந்து கொள்ளும் லாவகமான பார்வையும், நீண்ட நாசியில் சுவாசிக்கும் காற்றின் சுவையில் கூட சிறு காரமாக இருப்பதைப் போல சீறலான மூச்சும், இறுகிய உதடுகளில் மறைந்து கிடக்கும் வார்த்தைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டும் ,இரண்டு நாட்கள் மழிக்காத தாடி அவனின் கம்பீரத்தை பறைசாற்ற, காரை ஓட்டிய போதும் அவனின் காலின் நீளத்திலே அவனின் உயரத்திற்கேற்ப உடலும் புஜங்களும் கண்டவளுக்கு இவன் எஃகு போல இறுகியவன் என்று நினைத்தவளுக்கு உள்ளூர குளிர் பரப்பியது.


காரினுள் இருவருக்கிடையே மௌனமாக ஒரு நாடகம் நடந்தேறியது போல இருவரும் அவரவர் அடுத்தவர்களை ஓரக்கண்ணால் பார்த்து எடைப் போட்டனர்.


ஆனாலும் பேச்சின்றி அங்கே இருவரிடமும் மௌனம் மட்டும் ஆட்சி செலுத்த, காரினுள் கசிந்த பாடல்களின் வரிகள் மட்டுமே செவிகளில் தேனாகப் பாய்ந்தது இருவருக்கும்.


பாட்டின் இனிமையை ரசித்தாலும் மகிழினிக்கு அவனிடம் ஏதாவது பேசேன் மனம் உந்தித் தள்ள, :'சார்:' என்று மீண்டும் கூப்பிட்டாள் .


அவளை நோக்கித் திரும்பியவன் ஒரு நொடியில் அவளைப் பார்த்துவிட்டு வழியில் பார்வையை செலுத்திய படி, ''எஸ்'' என்ற ஒற்றை சொல்லை உதிர்த்தான்.


அந்த ஒற்றைச் சொல்லில் திகைத்த மகிழினி, ஏன் இவன் பேச்சினால் முத்து உதிர்ந்து அள்ளி எடுத்துச் சென்று விடுவமா என்ன?.., பேசுவதற்குக் கூலி கேட்பான் போல, நாம் தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரிடம் கூலி வாங்கிச் செல்வது வாடிக்கை என்றாலும் இவன் பேசுவதற்கே கூலி கேட்பான் போல என்று எண்ணி மெல்லிதாகத் தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.


அவளின் சிறு இதழ்களின் புன்னகையை கண்டவன், '' என்ன, எதாவது வேண்டுமா, இல்லை எதாவது கொடுக்கணுமா'', என்று கேள்வியை எழுப்பினான் அவன்.


அவனின் பேச்சில் திகைத்தவள், ''என்ன சொல்லறீங்க'', எனறு புரிந்தும் புரியாமல் சிறு தயக்கத்துடன் கேட்டவளைக் கண்டவன்,


''ஏதோ என்னிடம் கேட்க வந்தாயே, என்ன வேண்டும் என்று கேட்டேன், என்று சொல்லியவன், ஏன் கூப்பிட்டாய், உனக்குப் பசிக்கதா ?..என்று கேட்டவுடனே அவளின் விழிகளில் கண்ணீர் சுரந்து கடகடவென்று கன்னக்கதுப்புகளில் வழிந்தது.


அதைக் கண்டவன்,'' ஏய், என்னாச்சு எதுக்கு இப்ப அழுகிற '',எனறு சிறு பதட்டமான குரலில் கேட்டான்.


அவளோ தன் குரலை செருமிக் கொண்டே, ''ரொம்ப நாளாச்சு சார், இப்படி பசிக்கதா என்ற வார்த்தையைக் காதில் கேட்டு'', என்று சொல்லியவள், அவன் தனக்கு முற்றிலும் அறிமுகமில்லாதவன் என்பது மறந்து சகஜமாகப் பேச முயன்றாள்.


அவள் பேச முயல்வதைத் தடுத்த

அவனோ ''இவ்வளவு நேரமாக என்னை நோட்டமிட்டுக் கொண்டு இருந்தே, என்னை எப்படி பேசிக் கவிழக்கலாம் என்று எண்ணம் ஏதும் இருந்தால் அதை உடனே அழித்து விடு'', என்றவன், ''வழியில் நின்று உதவிக் கேட்டாய், நடுஇரவில் தனியாக நிற்கிறாயே, என்று உதவும் எண்ணத்தில் போகிற வழியில் இறக்கி விடப் போகிறேன், அவ்வளவு தான்'', என்று சிறு கடுமையாக இழிவான குரலில் இயம்பியவனைக் கண்ட மகிழினியின் உடலில் குளிர் ஜீரம் பரப்பியது போல ஆனது.


'பசிக்கதா', என்று பதட்டதுடன் கேட்டவனா சட்டென்று இப்படி மாறிப் பேசுவதைக் கண்டு அதிர்ந்தவள், ''காரை ஓட்டிக் கொண்டு வருகிறீர்கள், எதாவது பேசிக் கொண்டே வரலாம்'', என்று தான் கேட்டேன்.


:'ஆனால் நீங்கள் பசிக்கதா என்று கேட்டதும் இந்த மாதிரி வார்த்தைகள் காதில் விழுந்தது பல ஜென்மத்தின் முன் போல தோன்றவும் சட்டென்று கண்ணீர் வந்து விட்டது'', என்று சொல்லியவளைக் கண்டு மனம் இரங்கினான் அவன்.


''சரி விடு, இப்படி ராத்திரியில் நடு ரோட்டில் நிற்கிறாய், நீ அணிந்து இருக்கும் ஆடைகளின் தரமோ ரொம்ப தரம் தாழ்ந்துக் கிடக்கவும் சுள்ளென்று கோபம் ஒன்று மனதில் ஜ்வாலையாக எரியவும் அப்படி பேசிட்டேன்'',.. என்று சொல்லியவன்,


''உன் பெயர் என்ன? நான் வினோதகன்'', என்று தன் பெயரைச் சொல்லியவனைக் கண்டவள்,


இவன் பெயரைப் போல ஆளும் வினோதமானவன் போல என்று நினைத்து விட்டு, ''என் பெயர் மகிழினி சார்,'', என்று சொல்லியவள், ''நீங்கள் என்ன நினைத்து என்னிடம் கோபப்பட்டிங்க தெரியல ஆனால் நீங்கள் நினைக்கிற மாதிரி நான் செக்ஸ் ஒர்க்கர் தான் சார்.


அதைக் கேட்ட வினோதகனுக்கு பெரிதாக அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை, ஆனால் மனதிற்குள் ஏதோ பிசைந்தது. எவ்வளவு தைரியமாக நான் விபசாரி என்பதை சொல்கிறாள் என்றால் அவள் தினமும் எத்தனை வித வலிகளை உணர்ந்து இப்ப மரத்துப் போய் கிடப்பாள்,என்று நினைத்தவன், மேலே அவள் சொல்ல வருவதைச் செவி வழியாக உள் நுழைந்து இதயத்தினுள் ஆக்ரமித்துச் சென்றது அவளின் பேச்சு.


அவளோ அவன் என்ன நினைக்கிறானோ என்று கவலையின்றி தன்போக்கில் பேசினாள் மகிழினி.


.''தினமும் இப்படி வண்டிக்கு முன்னால் கையைக் காமித்து வாடிக்கையாளார்களை கூப்பிடும் சைகை மொழியாக இருந்தாலும், இன்று நான் அப்படி எண்ணி உங்கள் காரை நிறுத்தவில்லை.


ரொம்ப நேரமாக நின்று கொண்டே இருந்தேன், எந்த வாகனமும் கிடைக்காதால் தான் உங்கள் காரின் முன் கையை காமிக்கவும் நீங்கள் உடனே நிறுத்தியவுடன் ஏறி உட்கார்ந்து விட்டேன்',' என்று சிறு குரலில் சொல்லிய மகிழினின் தலை குனிந்திருந்தது.


அவளின் குனிந்த தலையும் பேச்சின் உண்மையை உணர்ந்தவன், மனதினுள் ஏதோ ஒன்று தன்னை நோக்கி நகர்ந்து வருவதுப் போல வினோதமான உணர்வுகள் ஆட்டிப் படைத்தது வினோதகனின் மனதில்.


விலைமாது என்ற போர்டு அவள் முகத்தில் அச்சிடப்பட்டு மாட்டி உள்ளதா, அதனால்தான் பார்த்தவுடனே எனக்கு அப்படி தோன்றினால் தன் புத்தி எவ்வளவு கீழ் தரமாக இருக்கிறது என்று நினைத்து வேதனையுடன் அவள் முகத்தைப் பார்த்தான்.


ஒரு பெண்ணை முதல் முறையாகப் பார்க்கும்போது அவளின் செய்கை உடை அலங்காரமும் சட்டென்று மனதில் உதித்தது தான், ஆனால் அதை அவள் வாய் மூலமாகக் கேட்கும்போது வினோதகனின் மனமோ வலித்தது.


''சாரி '',சட்டென்று அப்படி கேட்டு விட்டேன் என்று,அவனின் மன்னிப்புக் கேட்ட விதத்தில் மகிழினி மனத்தில் மயிலிறகால் தீ காயமிட்ட இடத்திற்கு ஒத்தடமிட்டது.


''அதனால் என்ன சார் இருக்கு, இது எல்லாம் பழகிய ஒன்று தான்.. மற்றவர்களின் பார்வையில் எப்பவும் கீழ்தரமாகத் தோன்றும் உணர்வுகளை கண்டவளுக்கு , இந்தப் பேச்சு எல்லா புதுசு இல்லை சார்'', என்று சொல்லிய மகிழினி மெல்லியதாகச் சிரித்துவிட்டு பார்வையை வெளியே திருப்பினாள்.


அவளின் பேச்சைக் கேட்டவனுக்கு மனதிற்குள் இனம் பிரியாத ஏதொன்று உள்ளத்தை அழுத்தியது.


தொடரும்..
 

Attachments

  • 20221015_180243.jpg
    20221015_180243.jpg
    46.7 KB · Views: 24
Top