• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சசிகலா எத்திராஜ்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
9
அத்தியாயம் ..2

இரவின் நிழலில்
கந்தர்வனின் வடிவமோ
வரியாக உதிக்க கண்ட
கன்னிகையின் மதிமுகமோ
செந்நிறமாக ஜொலிக்க
இருளிலும் அவனின் விழி வீச்சோ
விநோதமாக மாறியது ..


''சாரிம்மா, அப்படி உடனே உன்னைக் கேட்டு இருக்க கூடாது தான்:', என்று சொல்லியவன், ''நிஜமா உனக்குப் பசிக்கதா சொல்லு, பின்னால் டிக்கியில் உணவு இருக்கு எடுத்துத் தருகிறேன்'', என்று கேட்டான்.

மகிழினி வினோதகனின் பேச்சில் இருக்கும் கடுமை சிறு அளவில் குறைந்திருக்க அவனே மீண்டும் பேசத் தொடங்கினான்.


ஆனாலும் அவன் கேள்வியில் உள்ளம் அடிப்பட்டு இருந்தால் அவனிடம் எந்த மறுமொழியும் கூறாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள்.

அவள் கூனி குறுகி அமர்ந்திருந்தத் தோற்றத்தைப் பார்த்தவன் காரை ஒரு மரத்தடியின் ஓரமாக நிறுத்தினான்.

அவளை நோக்கி திரும்பி அமர்ந்தவன், அவளின் முகம் வாடிருப்பதைக் கண்டு மேலே எதுவும் பேசாமல், ''மகிழினி கீழே இறங்கு, சாப்பிட்டு அப்பறம் கிளம்பலாம்'', என்று சொல்லிவிட்டு மறுபுறம் இறங்கினான் வினோதகன்.

அவன் இறங்கியதும் தானும் மெதுவாக இறங்கியவள், சுற்றும் இருள் சூழ்ந்த இடத்தில் அவன் காரின் லைட்களை எரியவிட்டு உணவுகளை டிக்கியிலிருந்து எடுப்பதைக் கண்டவள், அவன் அருகில் போகலாமா வேண்டாமா என்று மனம் இரு கூறுகளாக ஆராய்ந்து கொண்டிருந்தது.

அவள் காரின் கதவின் அருகே நிற்பதைக் கண்டவன், எதுவும் பேசாமல் ஹோட்டலில் வாங்கிய உணவுகளின் டப்பாக்களை எடுத்துக் கொண்டு அவளருகே வந்தான் வினோதகன்.

தன்னை நோக்கி நெருங்கியவனைக் கண்டவள், உடல் நடுக்கத்துடன் அவனை உற்றுப் பார்த்தாள் மகிழினி.

அருகே வந்தவனோ ''வா மகிழினி சாப்பிடலாம்'', காரினுள் சுற்றி வந்து ஏறி அமர, அவளும் தன் இறங்கிய பக்கமே தானும் ஏறி அமர்ந்தாள் மகிழினி.

''பகலாக இருந்தால் வெளியே அமர்ந்துச் சாப்பிடலாம், இப்ப இருட்டில் வெளியே சாப்பிட முடியாது'', என்று பேசியபடி அவளுக்கான உணவை தன் உணவிலிருந்து பாதியாகப் பிரித்துக் கொடுத்தான் வினோதகன்.

அவனுக்கு வாங்கிய உணவை தனக்கும் கொடுக்கும் மனசைக் கண்டவள் எதுவும் பேசாமல் அவள் கொடுத்த உணவை வாங்கிக் கொண்டு கொறித்தாள்.

அவள் உணவை அள்ளி திங்காமல் கொறிப்பதைக் கண்டு சிறு கோபம் உண்டானாலும் , ''என்னாச்சு மகிழினி அணில் பழத்தைக் கொறிப்பதுப் போல கொறிக்கிற'', என்று கேட்டான் வினோதகன் .

''ம் ஒன்றுமில்லை'', என்றவளை உற்று நோக்கிய வினோதகன், ''நான் பேசியது உன்னை ஹர்ட் பண்ணிருந்தால் மறுபடியும் சாரி கேட்டுக்கிறேன் , என்று சொல்லியவன் , ''சாப்பிடு முதல மீதியை அப்பறம் பேசிக்கலாம் '',என்றவன் தன் உணவை எடுத்து உண்ண தொடங்கினான்.

அவன் சாப்பிடுவதைக் கண்டவள் தன் கையிலிருந்த உணவை வேகமாக உண்றவள் காரினுள் இருந்து இறங்கியவள் தண்ணீர் பாட்டிலில் கையை கழுவிக் கொண்டு சிறிது அருந்த அந்தப் பக்கத்தில் அமர்ந்திருந்த வினோதகன் கீழே இறங்கி அவளருகில் வந்தான்.

அவனிடம் தண்ணீரைக் கொடுத்தவள், அடர் இருளிலும் நிழல் உருவ ராட்சத மரங்கள் தன்னை வாரி சுருட்டி கொள்ளுவதுப் போல கற்பனை எண்ணங்கள் மனதிற்குள் தறிக் கெட்டு ஓடியது.

ஒவ்வொரு இரவும் இப்படி தானே பல ராட்சத மலைகளோடு முட்டி மோத வேண்டிருக்கிறது என்று நினைத்தவள் பெருமூச்சுடன் இருளை வெறித்தபடி நின்றாள் மகிழினி.

கையை கழுவியவன், மீதி இருக்கும் தண்ணீரை அருந்திவிட்டு வாட்டர் பாட்டிலை காரினுள் வைத்துவிட்டு அவள் இருக்கும் இடத்திற்கு அருகே வந்து நின்றவனோ அவள் முகத்தை உற்று நோக்க, விழிகளில் கண்ணீர் குளம் கட்டித் தேங்கி நிற்க எங்கோ வெறித்துக் கொண்டு நிற்பவளின் மனப் போராட்டம் பழைய நினைவுகளை கிளறி விட்டு இருக்கும் என்று எண்ணி தன் குரலை செருமியவன் ''அங்கே என்ன தெரிது அப்படி உற்றுப் பார்க்கிற, எதாவது பேய், பிசாசு தெரிதா'', என்று சிறு கேலி நகையுடன் பேச்சை தொடங்கினான் வினோதகன்.

அவனின் பேச்சில் சட்டென்று சிரித்தவளின் இதழ் விரித்து வெண்பற்கள் டாலடிக்க கள்ளமில்லாத புன்னகையாக அது இருந்தது.

''சார், இரவு நேரத்தில் பேய் பிசாசு வருதோ இல்லையோ மோகினி நடமாட்டம் தான் அதிகமாக இருக்கும் என்றவள், அவனைத் திரும்பிப் பார்த்து நின்றவள்,என்னைப் போல பல மோகினிகளின் நடமாட்டம் இரவில் தான் தொடங்கும் சார்'', என்று சொல்லியவள், வானத்தை நிமிர்ந்துப் பார்த்தாள்...

''மேலே மிதக்கும் நிலவை பாருங்கள், சார், இரவு மட்டும் வந்து உலகிற்கு வெள்ளி பாவையாக உலா வந்துவிட்டு செல்கிறது. ஆனால் அதில் பாதி நாட்கள் மறைந்தும் சிறிது சிறிதாக வளர்ந்தும் மாசத்தில் ஒரு நாள் வட்டமாக வடிவம் கொடுக்க அது எவ்வளவு மெனக் கிடக்கிறது தெரியுமா..

உண்டியிலே போடுகிற வெள்ளியாக நானும் இரவுக்குள் நுழைந்து எடுப்பார் கைப் பிள்ளையாக இழுத்தப் பக்கம் எல்லாம் மாற்றி மாற்றி சென்று விட்டு விடியலில் அதை நினைத்து மறுகிக் கொண்டிருக்கும் நரக வேதனைகளை அறிந்தவர்கள் யாருமில்லை.

சட்டென்று உங்களை மாதிரி பேசி விடுகிற நிறைய பேருக்குத் தெரியாது.. என்னைப் போன்றவர்கள் எல்லாம் இரவில் பூக்கும் பாரி ஜாதம் மலர் இறைவனுக்கு மட்டுமே படைக்கவில்லை. பாதி விடியலுக்கு முன்னே வாடி வதங்கி மிதிப்பட்டு இடிப்பட்டு நசுங்கிப் போன மலர்களும் உண்டு அறிய மாட்டார்கள்'',. என்று மகிழினி பேச்சின் முதிர்ச்சியைக் கண்டவன் வாயடைத்து நின்றான் வினோதகன்.

''பார்த்தவுடனே எந்த ஒரு பெண்ணையும் தப்பான கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்து விடுகிறது இந்த உலகம். ஆனால் அந்த மாதிரி வாழ்கிற சூழ்நிலையை உருவாக்கித் தந்ததை மட்டும் காலத்தின் கையிலும் விதியின் பெயரிலும் போட்டு விடுகிறது'', என்று சொல்லியவளின் வார்த்தைகளின் உண்மையை அறிந்து மனம் வெதும்பினான் வினோதகன்.

தானும் பார்த்தவுடனே அவளை இந்த மாதிரி பெண் தான் உருவம் கொடுத்து விட்டோமே என்ற எண்ணமும், அவளும் தான் ஒரு கால் கேர்ள் தான் என்று ஒத்துக் கொண்டாலும் ஒருத்தரை பார்த்தவுடனே விமர்சனம் செய்யும் மனதிற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் , என்று தோன்றியது வினோதகனுக்கு.

பேசயற்று நின்ற படி அவளின் பேச்சை உள்ளுக்குள் ஆராய்ச்சி கூடம் அமைத்து ஆராய்ந்தாலும் அவளின் வலிகள் கொண்ட பேச்சு மனக்குமறலின் வலிதனை காட்டிக் கொடுக்க அவன் மௌனமாகவே நின்றான்.

அவனைப் பார்த்தபடி நின்ற மகிழினி, அவனின் கடின முகம் சற்று இறுக்கம் தொலைத்து சற்றே கனிந்துக் கொண்டே இருப்பதைக் கண்டவளுக்கு சிறு புன்னகை பிறையாக உதயமானது.

அவளின் லேசான சிரிப்பைக் கண்டு ''என்ன சிரிக்கிற, என்னைப் பார்த்தால் சர்க்கஸ் கோமாளி மாதிரி தெரிகிறதா'', என்று சம்பந்தமில்லாத வினாவை எழுப்பி பேச்சை மடை மாற்றினான் வினோதகன்.

''சர்க்கஸ் கோமாளியா'', என்று கேட்டவளோ அவனை மேலே கீழே என்று பார்த்துவிட்டு'' உங்களைப் பார்த்தால் சர்க்கஸ் கோமாளியாக தெரியவில்லை சார், ஆஜானுபாகுவான மல்யுத்தம் புரிகிற போர் வீரனாகத் தெரிது'', என்று கூறியவள் தான் அதிகப்படியான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விட்டோமோ என்று எண்ணத்தில் அச்சத்துடன் அவனைப் பார்த்தாள் மகிழினி.

அவனோ இறுக்கங்கள் முற்றிலும் களைய வாய் விட்டுச் சிரித்தான்.

அவனின் கம்பீரமான சிரிப்பைக் கண்டவளோ அவனை வாய் பிளந்துப் பார்த்தாள்.

அவளின் பாவனையில் ''குளோஸ் யுவர் மௌத்'', என்றவன் ''அப்பறம் எதாவது பூச்சி பறந்து உள்ளே போய்விடப் போகிறது '',என்று இலகுவான கேலிக் குரலில் சொல்லியவன், ''உனக்கு எப்படி தெரியும் , நான் வீரன் என்று ,ஈரான் உக்ரைன் போரில் தூப்பாக்கியை ஏந்திக் கொண்டு போகும் வீரனா டிவியில் காமிச்சாங்களே அதைப் பார்த்துக் கேட்கிறீயா'', என்று கலாய்ப்புக் குரலில் பேசினான் வினோதகன்.

அவன் பேச்சில் சற்று அசடு வழிந்தவள், ''அதைத் தான் உலகமே பார்த்தே சார், அப்ப நான் பார்க்காமல் இருப்பனா'', என்று பேச்சில் தானும் கலாய்த்தாள் மகிழினி.


இருவருக்கிடைய இருந்த பேச்சின் தடை அகன்றதது போல ஒருவரை ஒருவர் பேச்சில் கலாய்த்தபடி ஊதல் காற்றின் சிலிர்ப்புடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

மனதிற்குள் பாழுடைந்துக் கிடந்த நினைவலைகளை தூசித் தட்டி அவனிடம் பறிமாறிக் கொண்டாள்.

எத்தனையோ வாழ்வியல் பயணங்களை அவனிடம் இலகுவாகச் சொல்ல எப்படி அவளால் முடிந்தது என்று தெரியவில்லை. பார்த்த சிறு மணி துளிகளிலே தன் வாழ்க்கையில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் அவனிடம் பகிர வேண்டும் என்று எண்ணம் எதனால் உதயமானது என்று கேட்டால் தெரியாது என்று தான் சொல்வாள் மகிழினி.

வினோதகனுக்கோ, அவளின் வாயிலிருந்து உதிர்க்கும் முத்துக்களைக் அள்ளவா கோர்க்கவா என்ற மனநிலையில் தான் போகுமிடத்தை மறந்து அவளின் பேச்சின் ஆழ்ந்துப் போனான்.

ஆம் இருவரும் அவரவர் நிலையில் நின்றுபடி இருக்க வினோதகனோ மனதிற்குள் எழும் கேள்விக்குப் பதில் கொடுக்காமல் அவளின் பேச்சில் எல்லாம் மெய் இருப்பதைக் கண்டு தான் இடையில் பேசாமல் அவள் பேச்சு மட்டும் செவியில் விழ யாருமற்ற சூழ்நிலையிலும் எங்கும் மௌனம் சூழ்ந்திருக்க, அவளின் தேன் குரலில் பேசுவது அவனுக்குத் தாலாட்டு பாடியாதா, இல்லை உள்ளத்தில் வலியின் ஒப்பாரியாக அழுதா என்று தெரியாமல் நின்றான் வினோதகன்.

அவளின் உணர்வு குவியலின் சில பல மெல்லிய உணர்ச்சிகளை அவள் விழிகளில் வழியே வெளியேறியதைக் கண்டு அவன் சிறு தடுமாற்றம் அடைந்தான் வினோதகன்.


தொடரும்..
20221015_180243.jpg
 
Top