• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 17

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
கல்லூரியில் வந்திறங்கிய லட்சுமணன் மற்றும் ரித்விகா முன் வந்து நின்றாள் ஊர்மிளா. அவளை திடீரென்று எதிர்பார்க்காத இருவரும் எதற்காக காலையிலேயே தங்களை சந்திக்க வந்திருக்கிறாள் என்ற ரீதியில் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.


இருவரையும் பார்த்து "தயவுசெஞ்சு என்ன மன்னிச்சிடுங்க நேற்று நான் தெரியாமல் அப்படி பேசிவிட்டேன் இதற்கு மேலே அந்த மாதிரி நடந்துக்கொள்ள மாட்டேன் நான் உங்கள விட சின்ன பொண்ணுதானே நீங்க எனக்கு நான் தப்பு பண்ணா சொல்லித் காட்டி என்னை திருத்தி நல்வழியில் படுத்துகிறீர்களா" என்று தலை குனிந்தபடியே கேட்டாள்.


அவளுடைய தலையை நிமிர்த்திய ரித்விகா "நீ தெரியாம செஞ்ச தப்புக்கு நீ மன்னிப்பு கேட்டது பெரிய விஷயம் அதனால இப்படி தலையை குனிந்து இருக்காதே. அதேபோல நீ ஏதாவது தப்பு பண்ணா நாங்க வந்து உனக்கு சொல்லனும்னு இல்ல எப்போ ஒரு விஷயம் நீ பண்ணும் போது அது அடுத்தவங்க மனச ரொம்ப கஷ்டப் படுத்துற மாதிரி இருந்தாலும் உன்னோட மனசு கஷ்டப்பட்டாலும் அவங்க கிட்ட மறக்காம மன்னிப்பு கேளு. அதே மாதிரி ஒரு விஷயம் செய்றதுக்கு முன்னாடி யோசித்து செயல்படு" என்று கூறினாள்.


ஊர்மிளா "கண்டிப்பா அக்கா நானும் என்னோட பிரண்டு ஜானகியும் உங்களோட குரூப்ல சேர்ந்து கொள்ளலாமா" என்று கேட்டாள்.


அதற்கு ரித்விகா பதில் கூறுமுன் லட்சுமணன் "இல்லை பரவால்ல எங்களோட குரூப்ல நாங்க மட்டும் இருந்தாலே போதும் நீ ஒரு ஜூனியர் ஆக என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்ட கேளு. ஆனா எங்களுடைய கூட்டத்துல நீ சேர்ந்தா கண்டிப்பா உனக்கு செட்டாகாது. அதனால வீணா உனக்கும் எங்களுக்கும் பிரச்சனை தான் வரும் அதனால நாம இப்படியே இருக்கலாம்" என்று கூறி முடித்தான்.


அவள் ஏதோ கூறுவதற்கு முன் இவர்கள் இருவரின் நண்பர் பட்டாளமும் அங்கு வந்து சேர்ந்தது. அதை பார்த்த ஜானகி லக்ஷ்மணனை பார்த்து "சரி அண்ணா எங்களுக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டால் கண்டிப்பா உங்க எல்லார்கிட்டயும் கேட்கிறோம். தேங்க்ஸ் அண்ணா" என்று கூறி ஊர்மிளாவையும் கூட்டிக் கொண்டு சென்றாள்.


இவர்கள் நண்பர் பட்டாளம் வந்து "என்ன மச்சி நேத்து வீட்ல புதுசா ஆள் சேர்ந்திருக்கு போல" என்று கேட்டான் ஹரிஷ்.


ரித்விகா "ஆமா புதுசா ஒரு ஆள் வந்திருக்கு சரண்யா அண்ணி படிக்கிற காலேஜ்ல தான் அவன் படிக்கப் போகிறான். அதனால புதுசா ஒரு ஆள் நம்ம கூட்டத்திலும் சேர்ந்திருக்கு" என்று கூறினாள்.


டிபன் லக்ஷ்மணனை பார்த்து "என்ன அண்ணா நடந்துச்சு நேத்து கொஞ்சம் விளக்கமா சொல்கிறீர்களா" என்று கேட்டான்.


லக்ஷ்மணனும் சதீஷ் பற்றி அனைத்தையும் கூறி "அவனும் நல்லவன் தான் ரொம்ப மோசம் இல்லை அதனாலதான் அண்ணா அவனை நம்பி தங்க வச்சி இருக்கான். எதுவா இருந்தாலும் எல்லாரும் கொஞ்சம் ஒற்றுமையா இருந்தா தான் எல்லாத்தையும் சரி பண்ண முடியும்" என்று கூறினான்.


சிவா "எதுக்கும் கவலைப்படாதீங்க அண்ணா நம்ம எல்லாரும் எப்பவும் ஒன்னாவே இருக்கலாம்" என்று கூறினான். அதற்கு அனைவரும் ஆமாம் என்பது போல் தலையை அசைத்தனர்.


அப்போது சுஜிதா அனைவரையும் பார்த்து "உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் அதாவது என்னன்னா என்னோட அக்காவை வர சண்டே பொண்ணு பாக்க வராங்களாம் அதனால முடிஞ்சா எல்லாரும் வீட்டுக்கு வா" என்று அழைப்பு விடுத்தாள்.


ஞாயிறு என்று கூறியதைக் கேட்ட லட்சுமணன் "மாப்பிள்ளை பெயர் என்ன" என்று கேட்டான்.


சுஜி "மாப்பிள்ளை பெயர் ஆனந்த் அவங்க வீட்ல பெரியவங்க எல்லாரும் வந்து பாத்துட்டு போய்விட்டார்கள். மாப்பிள்ளையும் அவங்களோட தங்கச்சி அவங்க ஃபேமிலி அப்புறம் தம்பி பிரண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க போல மாப்பிள்ளை விட அவங்க தங்கச்சிக்கு தான் பிடிக்கணுமாம். அவங்களை பற்றி விசாரிச்சா அவங்க ரொம்ப லூசு மாதிரி என்று சொல்கிறார்கள். அதனால் தான் கொஞ்சம் பயமாக உள்ளது அந்த பொண்ணு வந்து என்ன சொல்ல போகுதோ எங்க வீட்ல எல்லாருக்கும் மாப்பிள்ளை பிடிச்சிருக்காம். நான் போட்டோ கேட்டதுக்கு நேரில் பார்த்துக்கொள் என்று கூறிவிட்டார்கள்" என்று கூறி முடித்தாள்.


சுஜி கூறியதைக் கேட்ட லட்சுமணன் தனக்குள் சிரித்துக் கொள்ள ரித்விகா சுஜியை முறைத்துக் கொண்டிருந்தாள்.


இவர்கள் இருவரையும் சுற்றியிருந்த அனைவரும் ஏன் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். தாரா "ரித்விகாவை பார்த்து என்னாச்சு இப்ப எதுக்கு சுஜியை பார்த்து முறைக்கிறாய்" என்று கேட்டாள்.


சந்துரு "உனக்கு ஒருவேளை அந்த மாப்பிள்ளையோட தங்கச்சியை பற்றி தெரியுமா" என்று அவன் கேட்டான்.


சந்துரு அவளுக்கு மாப்பிளையின் தங்கையை தெரியுமா என்று கேட்டதை பார்த்த லட்சுமணன் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான். அதனால் இன்னும் கோபமடைந்த ரித்விகா லக்ஷ்மணன் தலையிலேயே நன்றாக நான்கு கொட்டுகள் வைத்தாள். ஆனால் அதற்கும் அசராமல் தலையை தேய்த்துக்கொண்டே சிரித்துக் கொண்டிருந்தான் லட்சுமணன்.


அவன் சிரிப்பில் கடுப்பு அடைந்த சுஜி "ஏன்டா சிரிக்கிற சொல்லிக்கிட்டு சிரி எல்லாருக்கும் ஒண்ணுமே புரியல நீ சிரிக்கிற இவள் முறைக்கிறாள்" என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள்.


சிரித்து முடித்து கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த லட்சுமணன் ரித்விகாவை பிடித்து அருகில் இழுத்து அவளுடைய தோளில் கை போட்டுக்கொண்டு சுஜியை பார்த்து "நீ இவ்வளவு நேரம் மாப்பிள்ளைக்கு தங்கச்சின்னு ரொம்ப பெருமையா பேசிக்கிட்டு இருந்தியே அது வேற யாரும் இல்ல என்னோட செல்ல பேபி தான். அவளோட அண்ணன் ஆனந்திற்கு தான் உன்னுடைய அக்காவை பேசி முடிக்கப் போகிறார்கள்" என்று கூறினான்.


அவன் கூறியதை கேட்டு மற்ற அனைவரும் சிரிக்க ஆரம்பிக்க சுஜி ரித்திகாவை பார்த்து அசடு வழிந்த வாரே "சாரி பேபி எனக்கு அது நீனு தெரியாது நான் சொன்னதை எல்லாம் மனசில் வெச்சுகாதே" என்று கூறினாள்.


ரித்விகா கண்கலங்க அனைவரையும் பார்த்து விட்டு சுஜி இடம் "உண்மையாகவே நான் சரின்னு சொன்னா தான் இந்த கல்யாணம் நடக்கும்னு சொன்னார்களா" என்று கேட்டாள்.


அவள் கண் கலங்கியது அனைவருக்கும் கஷ்டமாக இருந்தாலும் சுஜி "ஆமா அப்படி தான் சொன்னாங்க மாப்பிள்ளையும் அவங்க வீட்டில உள்ளவர்களும் என்றைக்குமே அந்த தங்கையை மனசு கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்பவர் தான் எங்கள் வீட்டு மருமகள் என்று கூறினார்கள்" என்று கூறினாள்.


சுஜி கூறியதைக் கேட்ட ரித்விகா லட்சுமணனை பார்த்து "எனக்கு என்னோட அம்மா அப்பா கூட இல்லனாலும் புதுசா உண்மையான பாசம் வைத்திருக்கிற நிறைய பேரை கொடுத்துட்டு போயிருக்காங்க" என்று கண்ணீருடன் மகிழ்ச்சியாக கூறினாள்.


இதைக் கேட்ட அனைவரும் அவளை அணைத்துக் கொண்டனர். நாங்க இருக்கும் நீ எதுக்கும் கவலைப் படக்கூடாது என்று கூறினார்கள்.


அதன் பிறகு தங்களுடைய வகுப்புகளுக்கு சென்று பாடத்தை கவனிக்க ஆரம்பித்தனர் அன்றைய நாள் அவ்வாறே முடிய அதன் பிறகு எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை காலையும் வந்தது.


அன்று ஞாயிறு என்பதால் ஆதி ராகவன் மற்றும் ஆனந்த் தவிர யாருமே எழும்பவில்லை. ஆனந்த் ஆதியை பார்த்து "மச்சான் இன்னைக்கு எனக்கு பொண்ணு பார்க்க போகணும். இத உன் பொண்டாட்டிகிட்டையும் உன் தம்பி ரெண்டு பேர் கிட்டயும் சொன்னியா மணி பத்து ஆகுது இன்னும் மூணு பெரும் எழும்பி வரவே இல்ல" என்று புலம்பினான்.


ராகவன் ஆனந்தை பார்த்து "மச்சான் நீ உன் அருமை தங்கச்சியையும் ஃப்ரெண்ட் அஜய் மறந்துட்ட" என்று ஞாபகப்படுத்தினான்.


ஆனந்த் "ஏன்டா எனக்குன்னு எல்லாம் வந்து சேருங்கள் ஏதாவது கொஞ்சம் என்ன பத்தி யோசிச்சியா ஏற்கனவே அப்பா ரெண்டு தடவ கால் பண்ணிட்டாங்க நான்தான் பயந்துபோய் இன்னும் அட்டென்ட் பண்ணாம இருக்கேன்" என்று பாவமாக கூறினான்.


அப்போது ஆதிக்கு சிவாவிடம் இருந்து போன் வந்தது அதை அட்டன் செய்த ஆதி "சொல்லுடா என்ன விஷயம் ஞாயிற்றுக்கிழமை காலைல போன் பண்ணி இருக்க" என்று கேட்டான்.


அதற்கு சிவா அது வந்து "அண்ணா நீங்க எல்லாரும் கிளம்பிட்டீங்களா" என்று கேட்டான். இவன் எதற்கு இவ்வாறு கேட்கிறான் என்று புரியாத ஆதி போனை ஸ்பீக்கரில் போட்டான். அப்போது அஜய் பரத் ஆர்த்தி மற்றும் கீர்த்தி வீட்டிற்குள் நுழைந்தனர். ஆதி போனை ஸ்பீக்கரில் போட்டு அதை பார்த்தவர்கள் அமைதியாக இருந்தனர். ஆதி சிவாவிடம் "நாங்க வெளிய போறது உனக்கு எப்படி தெரியும் அதுவும் கிளம்பிட்டியா என்று கேட்கிறாய் இப்ப நீ எங்க இருக்க" என்று எதிர் கேள்வி கேட்டான்.


தீபன் "ஐயோ அண்ணா உங்களுக்கு விஷயமே தெரியாதா ஆனந்த அண்ணாவுக்கு பார்த்து இருக்கிற பொண்ணு வேற யாரும் இல்ல லக்ஷ்மணா அண்ணாவோட ஃப்ரெண்ட் சுஜி இருக்காங்கல்ல அவங்களோட அக்காதான். இது உங்க வீட்ல இருக்க எங்களோட அருமை பிரிண்ட் ரெண்டு பேருக்கும் தெரியும் கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி வாருங்கள்" என்று கூறி போனை வைத்தான்.


போனில் கூறியதை கேட்ட அனைவரும் 'அடப்பாவிங்களா இப்படி எல்லாம் தெரிஞ்ச பிறகும் இன்னும் தூங்கி எழும்பாமல் இருக்கிறார்களா' என்று எண்ணிக்கொண்டு பரத் லக்ஷ்மணன் அறைக்கு சென்றான் கீர்த்தி மற்றும் ஆர்த்தி ரித்விகா இருக்கும் இடம் சென்றனர்.


பரத் லக்ஷ்மணன் அறைக்கு சென்று ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த இருவரின் மேலும் ஊற்றினான். அதில் பதறி எழுந்த லட்சுமணன் மற்றும் சதீஷ் தங்கள் முன்னால் நிற்கும் பரத்தை கேள்வியாக பார்த்தனர்.


அவர்களின் பார்வையை புரிந்துகொண்ட பரத் "லூசு ரெண்டு பேரும் சீக்கிரம் போய் குளிச்சிட்டு கிளம்பி வா லேட் ஆச்சு ஆனந்த் அண்ணா அழுதிடுவான் போல" என்று கூறி லட்சுமணனை பாத்ரூமில் தள்ளினான் இதை பார்த்த சதீஷ் இதற்கு மேல் இங்கு இருந்தால் குளிப்பாட்டி விடுவான் என்று எண்ணிக்கொண்டு விருந்தினர் அறைக்குச் சென்று தயாராகி வந்தான்.


அங்கேயே ரித்விகா அறைக்கு சென்றபோது ரித்விகா மற்றும் சரண்யா தயாராகிக் கொண்டிருந்தனர். அதை பார்த்த ஆர்த்தி மற்றும் கீர்த்தி அவர்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்து அவர்களை முழுவதுமாக தயார் செய்து அழைத்து வந்தனர்.


அனைவரும் தயாராகி வந்தவுடன் கிளம்புவதற்கு ரெடியாக அனைவரும் எழும்ப அவசரமாக ஆதியை பார்த்த லட்சுமணன் "அண்ணா பசிக்குது சாப்பிட்டுட்டு எங்க வேணாலும் போகலாம்" என்று கூறி அவசரமாக சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தான். அவனது துணைக்கு சதீஷ் சாப்பிட அமர்ந்தான் இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன் அனைவரும் கிளம்பி சுஜிதா வீட்டிற்கு சென்றனர்.


அங்கு இருந்த மொத்த பட்டாளத்தையும் பார்த்த ஆதி "இன்னைக்கு என்ன என்ன பண்ண போறாங்களோ தெரியலையே ஆண்டவா நீதான் உன் பிள்ளைகளை காப்பாத்தணும்" என்று வேண்டிக் கொண்டிருந்தான்.


இவர்கள் அனைவரும் வந்தவுடன் தேவையான சிற்றுண்டிகளை கொடுத்து உபசரித்தனர். லட்சுமணன் அவர்களை பார்த்து "சீக்கிரம் பெண்ணை வர சொல்லுங்க எங்க அண்ணா ரொம்ப நேரமா காத்துக் கொண்டிருக்கிறான்" என்று கூறினான்.


அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர் ஆனந்த் லட்சுமணனை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாகி விட்டான்.


இவர்களின் பேச்சை கேட்டேன் சுஜிதா தன்னுடைய அக்காவான வித்யாவை அழைத்து வந்தாள். அவளை பார்த்தவுடன் ஆனந்து மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்து விட்டது அதனால் யாரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவருடன் வந்த அக்ஷயா சதீஷை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சியானாள் சதீஷும் அதே நிலையில்தான் இருந்தான் ஆனால் சிறிது நேரத்தில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தனர்.


ஆனந்த் பொதுவாக அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான் அதில் அனைவரும் தங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்று கூறினர் உடனே ஆனந்த் சுஜாதாவின் தந்தையான அசோக்கிடம் "எங்க எல்லாருக்குமே உங்கள் பெண்ணை மிகவும் பிடித்திருக்கிறது என்னுடைய நண்பன் ராகவனுக்கும் எனக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதனால் இரு வீட்டார் பெற்றோரிடமும் கலந்து ஆலோசித்து விட்டு உங்களிடம் கூறுகிறேன் நீங்களும் பேசிவிட்டு கூறுங்கள்" என்று கூறினான்.


அசோக் "நாங்க ஏற்கனவே பேசிட்டோம் இன்னும் சரியாக ஒரு மாதத்தில் நிச்சயம் வைத்துக் கொள்வதாகவும் அடுத்த 2 மாதத்தில் அதாவது இவர்களின் விடுமுறையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் மூன்று குடும்பமும் சேர்ந்து முடிவெடுத்து விட்டோம்" என்று கூறினார்.


அவர் கூறியதைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். அதன்பின்பு வித்யாவின் தொலைபேசி எண்ணை வாங்கிய ஆனந்திடம் கொடுத்துவிட்டு ஆனந்தன் தொலைபேசி எண்ணையும் வித்யாவிடம் கொடுத்துவிட்டு தங்களது இல்லம் நோக்கி சென்றனர்.


வீட்டிற்கு வந்த ஆனந்த் வித்யாவின் அலைபேசிக்கு தாங்கள் பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விட்டதாக அனுப்பிவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்றான்.


அதன் பிறகு நாட்கள் வழக்கம்போல் யாருக்கும் காத்திராமல் சென்று கொண்டிருந்தது ஒரு வாரம் சென்ற நிலையில் ஆதியின் வீட்டிற்கு வந்த சாரதா ராகவன் மற்றும் சரண்யாவை பார்த்து "உங்களுக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது அதனால் கொஞ்சம் கவனமாக இருங்கள்" என்று கூறினார்.


ராகவன் "ஏன்மா எங்கள பார்த்தா அவ்வளவு மோசமாக தெரியுது எல்லாம் எங்களுக்கு தெரியும் நீ சும்மா பயமுறுத்தாமல் போ போய் வேலையை பாரு" என்று கூறினான்.

சாரதா ராகவனே ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் சரண்யா மற்றும் ரித்விகா அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். ராகவன் தான் மனதில் 'வர வர இந்த அம்மா போற போக்கே சரி இல்லை கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும்' என்று எண்ணி கொண்டு இருந்தான்.


இதற்கிடையே ஒரு நாள் அஜய் அஜிதாவை அவனது தாய் மற்றும் அத்தை முன்னிலையில் ஒரு அறை கொடுத்தான். அதைப் பார்த்து தமயந்தி மற்றும் சந்திரா பதற ஜோதி அமைதியாக இருந்தார். சந்திரா தான் "எதுக்குடா பொம்பள பிள்ளை அடிக்கிற" என்று அவனைக் கடிந்து கொண்டு அவளை அவனிடமிருந்து தன் கைக்குள் கொண்டு வந்தார்.


ஜோதி அவளை அவரிடமிருந்து பிரித்து தனியே நிறுத்தி அவர் அறைந்தார். தன் தாய் மற்றும் அண்ணன் அடித்ததில் வலியில் அழுதுகொண்டிருந்த அஜித்தா தாயைப் பார்த்து "எதுக்குமா என்ன அடிக்கிற உன் பிள்ளையும் இப்பதான அடிச்சான் அடுத்த நீயும் அடிக்கிற உங்களுக்கு என்ன பாத்தா எப்படி தெரியுது" என்று கேட்டாள்.


தமயந்தி இருவரையும் பார்த்து "என்னதான் பிரச்சனை இருந்தாலும் பொம்பள பிள்ளைய அடிக்கிறது தப்பு சொல்லி புரிய வை அதை விட்டுட்டு கை நீட்டும் பழக்கம் வைக்காதே" என்று கூறினார்.


அதை பார்த்து இன்னும் கோபம் அடைந்த ஜோதி அஜித்தாவை பார்த்து "கேட்டாயா நீ இவர்கள் இருவருக்கும் எவ்வளவு தீங்கு செய்து இருந்தாலும் அதை எல்லாம் தெரிந்தும் தெரியாமலும் உனக்காக எவ்வளவு சப்போர்ட் செய்கிறார்கள். இவர்கள் குழந்தைகளுக்கு போய் நீ என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறாய் நீ எல்லாம் வாழவே தகுதி இல்லாதவள். உன்னைப் போய் என்னை பெற்றெடுக்க வைத்த அந்த ஆண்டவனை தான் கூற வேண்டும். நான் என்ன பாவம் செய்தேனோ அதற்கான பலனாக தான் உன்னை பெற்று இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.


ஜோதி கூறியதை கேட்டு புரியாமல் முழித்துக் கொண்டிருந்த சந்திரா மற்றும் தமயந்தி அஜய்யை பார்த்து "உங்க அம்மா என்ன தான் சொல்றா நீயாவது ஒழுங்கா புரியிற மாதிரி சொல்லு" என்று கேட்டார்கள்.


அஜய் அஜித்தா செய்த தவறுகளை ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தான். அதை கேட்டவர்கள் தன் வீட்டு பெண்ணா இவ்வாறெல்லாம் செய்வது என்ற ரீதியில் பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
Top