• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 23

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
அஜித்தா மற்றும் ரூபன் இந்துவை சந்திக்க வேண்டிய தங்களுடைய பயணத்தை தொடர்ந்தனர். செல்லும் வழியில் ரூபனை பார்த்த அஜித்தா "உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா" என்று கேட்டாள்.


ரூபன் அவளுக்கு சரி என்று சம்பந்தமாக தலையசைத்தான். ஆனால் அவன் மனதில் "நம்ம செல்லம் என்ன கேட்க போகுதோ கண்டிப்பா நம்ம காதல் விஷயம் பத்தி கேக்காதே" என்று எண்ணிக் கொண்டிருந்தான்.


அஜிதா "இப்ப நாம போய் என்ன பண்ணப் போறோம் அந்த இந்து நம்ம சொன்னா உடனே கண்டிப்பா கேக்கற டைப் கிடையாது. அதே மாதிரி போலீஸ் கேஸ் கொடுத்து அந்த பொண்ணு மேல தப்பான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்த முடியாது. அப்படி பண்ணா கண்டிப்பா அந்த பொண்ணோட வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும். இப்ப என்ன பண்றது நீங்க ஏதாவது முடிவு வச்சிருக்கீங்களா" என்று கேட்டாள்.


ரூபன் மனதிற்குள் சிரித்துக்கொண்டு வெளியே "அது எல்லாத்துக்கும் ஒரு முடிவு எடுத்தாச்சு அந்த பொண்ணு நம்ம என்ன சொன்னாலும் கேட்க போறது கிடையாது அதனால வேற ஒரு வழி இருக்கு இப்ப நாம ஒருத்தரை சந்திக்கப் போகிறோம் அவரை வைத்து இந்த பிரச்சனையை சுமுகமாக முடித்து விடலாம்" என்று கூறினான்.


அஜித்தாவும் அதற்குமேல் எந்த வித கேள்விகளும் கேட்காமல் அமைதியாக அந்த பயணத்தை தொடர்ந்தாள். ஆனால் ரூபன் அமைதியாக இல்லாமல் அஜித்தாவிடம் "நீ யாரையாவது காதலிக்கிறாயா" என்று கேட்டான்.


ஏனோ அஜிதாவிற்கும் அவனிடம் தன் மனதில் இருப்பதை கூறினால் ஏதாவது தீர்வு கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டு கூற ஆரம்பித்தாள். "எனக்கு சின்ன வயசிலிருந்தே ஆதி மாமா ரொம்ப பிடிக்கும் சின்ன சின்ன விஷயத்துக்கும் பார்த்து பார்த்து செய்வாங்க யாரும் எங்களை திட்டக்கூடாது. அப்படிங்கறது காகவே எங்கள நல்ல வழியில் நடத்துவாங்க என்னோட அப்பா நான் ஆதி மாமா கூட க்ளோசா இருக்கிறதை பார்த்து நீதான் அவனுக்கு பொண்டாட்டி அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அது எனக்கு மனசுல பதிய ஆரம்பிச்சிடுச்சு அதிலிருந்து நான் அவரை காதலிக்க ஆரம்பித்தேன் அதனால்தான் அவர் திருமணம் செய்து வந்தபோது ரித்விகாவை முற்றிலுமாக வெறுத்தேன். அதன் பிறகு நடந்தது தான் உங்கள் அனைவருக்கும் தெரியுமே இப்போது நான் திருந்தி வாழ ஆரம்பித்து இருக்கிறேன். ஆனால் இப்போது என் மனதில் ஒரு கேள்வி உள்ளது" என்று கூறி நிறுத்தினாள்.


ரூபன் "சரி மீதி உள்ளதையும் சொல்லு கடைசியாக நான் உனக்கு ஒரு முடிவு சொல்கிறேன்" என்று கூறினான்.


அஜித்தா "நான் உண்மையாகவே ஆதி மாமாவை காதலித் தேனே என்று சந்தேகமாக உள்ளது. உண்மையாக நான் விரும்பி இருந்தால் அவர்களுக்கு பிரச்சனை வரவைக்க நினைக்க மாட்டேன். அவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்ற எண்ணம்தான் இருந்திருக்கும் ஆனால் நான் செய்த செயல் சரியல்ல" என்று கூறினாள்.


அவள் கூறியதைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்தான் ரூபன். பின்பு மெதுவாக "உண்மையாகவே நீ ஆதியை காதலிக்க வில்லை நீ கூறுவதிலிருந்தே அவனுக்கு உங்கள் அனைவர் மீதும் பாசம் இருந்து இருக்கிறது அதுமட்டுமல்லாமல் உங்கள் அனைவரையும் நினைத்து அவன் மிகவும் யோசித்து செயல் படுவான். நீயும் முதலில் அவனை ஒரு அண்ணன் ஆகவே நினைத்து பழகிக் கொண்டிருந்தாய் உன்னுடைய அப்பாவின் செயலால்தான் இவ்வாறு மாறினாய் ஆனால் அது எதையும் நினைத்து நீ கலங்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் இன்றும் நீ அவன் பாசத்திற்குரிய அன்புத்தங்கையே" என்று கூறினான்.


ரூபன் சிரித்தபோது கடுப்பான அஜித்தா பின்பு அவன் கூறிய ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து பார்த்தவள் தன்னுடைய சொந்தங்கள் தன் மேல் கோபமாக இல்லை என்பதை உணர்ந்து தன்னுடைய குற்ற உணர்ச்சியிலிருந்து வெளிவந்தால் அதற்கு உதவிய ரூபனுக்கு நன்றி கூறினாள்.


இப்படியே ஒரு தெளிவு பிறந்து இவர்களுடைய பயணம் இந்துவை வந்தடைந்தது. இவர்கள் வந்து சேர்ந்த நேரம் சரியாக அவர்களுக்கு கால் செய்தான் அதை அட்டன் செய்த ரூபன் "நாங்க வந்துட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க பார்க்க வேண்டிய ஆள் வந்துவிடும் அனைத்து காரியத்தையும் முடித்தபிறகு உனக்கு போன் செய்கிறேன் அதுவரை நீ எங்களுக்கு போன் செய்து எங்களை மாட்டி விட்டு விடாதே" என்று கூறினான்.


அதற்கு ஆதி "அட லூசு நான் சொல்றதை கொஞ்சம் கேளு உன் கூட ஒரு ஜீவன் அனுப்பிவிட்டு இருக்கோம் அதுக்கும் நேரத்துக்கு சரியா சாப்பாடு வாங்கி கொடு அதை சொல்ல தான் கூப்பிட்டேன் மற்றபடி பிரச்சனையை நீ முடித்துக் கொள்வாய் என்பது எனக்கு தெரியும்" என்று கூறினான்.


ரூபன் "என்னோட பொண்டாட்டியை பாத்துக்க எனக்கு தெரியும் நீ போய் மத்த எல்லாரையும் ஒழுங்கா பார்த்துக்கோ" என்று கூறி போனை வைத்தான்.


அவன் போனை வைத்த சமயம் சரியாக அவ்வளவு நேரம் தீபன் மற்றும் அஜிதா எதிர்பார்த்திருந்த சத்யா வந்து சேர்ந்தான். அஜிதா அவனை யார் என்று கேள்வியாக பார்க்க ரூபன் அவனிடம் கைகுலுக்கி ஹாய் என்றான் பதிலுக்கு சத்யாவும் ஹாய் என்று கூறினான்.


பின்பு ரூபன் அஜிதாவிடம் "இவர் பெயர் சத்யன் இவர்தான் நமக்கு மிகவும் உதவியாக இருக்க போகிறார்" என்று கூறினான். அதைக்கேட்ட ஆஜித்தா சத்யாவை பார்த்து ஒரு சிறு புன்னகையை சிந்திவிட்டு ஹாய் என்றதோடு நிறுத்திக்கொண்டால் பதிலுக்கு சத்யாவும் ஒரு புன்னகையை சிந்தினான்.


சத்யா இருவரையும் தங்குவதற்கு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றான். அங்கு சென்றவுடன் இருவரையும் பொதுவாக பார்த்து "பிரஸ் ஆயிட்டு ரெஸ்ட் எடுங்க ஈவ்னிங் எல்லாத்தையும் பேசிக் கொள்ளலாம்" என்று கூறினான். அதைக் கேட்ட இருவரும் சம்பந்தமாக தலையசைத்து தங்களுக்கு ஒதுக்கியிருந்த அறைகளுக்குச் சென்றனர்.


ப்ரஷ் ஆகிய அஜித்தா ரூபன் இடம் சில கேள்விகள் கேட்க வேண்டியது இருந்ததால் அவனைத் தேடி சென்றாள் அவனுடைய அறையை தட்டிவிட்டு வெளியே காத்திருந்தாள். ரூபன் உள்ளே வாங்க என்று குரல் கொடுத்தவுடன் அஜிதா உள்ளே சென்றால் ஏற்கனவே அவள் வருவாள் என்று எதிர்பார்த்து இருந்ததால் அவருடைய வரவு அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை மாறாக "என்ன கேட்க வேண்டும் கேள்" என்றான்.


அஜித்தா "அந்த சத்யா யாரு அவனால் எப்படி நமக்கு உதவி செய்ய முடியும்" என்று கேட்டாள்.


ரூபன் "சத்யா வேறுயாருமல்ல இந்துவை உண்மையாக காதலிக்கும் ஒரு ஜீவன் ஆனால் இந்துவிற்கு இந்த விஷயம் தெரியாது. இவனும் பணக்காரன் தான் இந்துவிற்கு இருக்கும் திமிரை விட அதிகமாகவே இவனுக்கு இருக்கிறது சொல்லப்போனால் இந்துவை எந்த வழியிலும் அடக்க முடியாது அவளை அடக்க அவளுக்கு நிகர் உள்ளவர்களால் மட்டுமே முடியும் அதுவும் அவளை மிகவும் நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். நாம் ஏதாவது செய்தால் நிச்சயமாக பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று தான் முடிவெடுப்பா அதனால் ஏதேனும் இழப்பீடுகள் ஏற்பட்டால் யாராலும் தாங்கிக் கொள்ள இயலாது. இந்துவை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் சத்யா எங்களுக்கு அறிமுகம் ஆனான் இவை மிகவும் நேசிப்பதாகவும் அவளை திருமணம் செய்ய விரும்புவதாகவும் ஆனால் அவள் ஆதியின் வாழ்வில் செய்யும் பிரச்சினைகள் அனைத்தையும் தெரிந்துகொண்டு நமக்கு உதவுவதற்கு வந்திருப்பதாகவும் கூறினான்.


அவனை பற்றி தனியாக அனைத்தையும் விசாரித்து பார்த்ததில் அவர் கூறியது அனைத்தும் உண்மையே என்ற விஷயம் தெரியவந்தது. அதனால் தற்போது நாம் செய்யப்போவது என்னவென்றால் இந்து மற்றும் சத்யாவிற்கு நாளை மறுநாள் திருமணம். அதற்கு தான் நாம் உதவி செய்ய போகிறோம் திருமணம் முடிந்தவுடன் அவளுக்கு தெளிவாக அனைத்தையும் புரிய வைத்துவிட்டு நான் ஊருக்கு கிளம்பி விட வேண்டியதுதான். ஏனெனில் தவறு செய்பவர்கள் அனைவரும் தெரிந்தே செய்பவர்கள் அல்ல ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்பவர்களாக இருப்பார்கள் இல்லை என்றால் அவர்களை சுற்றியிருப்பவர்கள் பேச்சுகளில் நடவடிக்கைகளில் இவ்வாறு செய்ய வைத்திருப்பார்கள். இந்து அவளுடைய சிறுவயதிலிருந்து ஆசைப்பட்ட பொருள் அனைத்தும் கிடைத்ததால் அதையும் அவள் ஒரு பொருளாக நினைத்து விட்டாள் இதற்கு நாம் யார் மீதும் குறை சொல்ல இயலாது. அதனால்தான் இந்த முடிவை எடுத்தோம் இதனால் அவருடைய வாழ்வும் நல்லபடியாக அமையும் அதே சமயம் நம்முடைய பிரச்சனையும் முடிவுக்கு வரும்" என்று கூறினான்.


ரூபன் கூறியதைக் கேட்ட அஜித்தா மிகவும் மகிழ்ந்து போனாள். அதே மகிழ்ச்சியுடன் "முதலில் இந்து சத்யாவின் காதலை புரிந்து கொள்ளாவிட்டாலும் நாட்களாக அவருடைய உண்மையான காதலை புரிந்து கொண்டு அவருடன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது எப்படித்தான் இப்படி யார் வாழ்விற்கும் எந்தவித பிரச்சனையும் வராமல் முடிவு எடுக்கிறீர்கள் உங்கள் அனைவரையும் நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று கூறினாள்.


ரூபன் "இதில் நீ செய்ய வேண்டியது என்னவென்றால் உன்னுடைய தந்தையின் மகளாக நீ இந்து'விடம் அறிமுகமாக வேண்டும். ஏனென்றால் அவளுக்கும் உன் தந்தைக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கிறது முதலில் அவளிடம் அறிமுகமாகி அவளை நாங்கள் சொல்லும் கோவிலுக்கு அழைத்து வர வேண்டும். அங்கு அவள் வந்து விட்டால் மற்றதை சத்யா பார்த்துக் கொள்வான்" என்று கூறினான்.


அஜிதா கண்டிப்பாக நீங்கள் சொல்வதுபோல் செய்கிறேன் என்று கூறினாள் அதன் பிறகு இருவருமாக சென்று சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். மாலை இவர்களை தேடி சத்யா வந்தான்.


சத்யா அஜிதாவை பார்த்து "நீங்க நாளைக்கு இந்துவிற்கு போன் பண்ணி நீங்க யாரு அப்படின்னு சொல்லுங்க அதுக்கு பிறகு ஆதி அப்புறம் ரித்விகா பத்தி ஒரு சில விஷயங்கள் பேசணும்னு சொல்லி நாளை மறுநாள் அந்த கோவிலுக்கு காலை 9 மணிக்கு வர சொல்லுங்கள். அப்போது கண்டிப்பாக ஏன் எதற்கு என்று கேட்பாள். அதற்கு நீங்கள் இனி அதையே எனக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை ஆனால் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்வதை நான் விரும்பவில்லை அதனால் அவர்களைப் பிரிக்க வேண்டும் உன்னால் உதவ முடியுமா என்று பேசுங்கள். இவ்வாறு பேசினார் கண்டிப்பாக இந்து நாளை மறு நாள் கோவிலுக்கு வருவாள் அவள் கோவிலுக்கு வந்து விட்டால் மற்றதை நான் பார்த்துக் கொள்வேன்" என்று கூறினான்.


அஜித்தா "நீங்கள் சொல்வது படி நான் செய்கிறேன் ஆனால் இந்து பற்றி அனைத்து விஷயங்கள் தெரிந்த பிறகும் நீங்கள் அவளை உண்மையாக விரும்புகிறீர்களா" என்று கேட்டாள்.


அதற்கு ரூபன் மற்றும் சத்யா மென்மையாக சிரித்தனர். பிறகு சத்யா "காதல் என்பது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவது அதேபோல் நாம் விரும்பும் பெண் தவறு செய்தால் அவளை நம் காதலால் திருத்த வேண்டும். அது மென்மையாகவும் இருக்கலாம் இல்லை அதிரடி ஆகவும் இருக்கலாம் நான் இந்து'விடம் கையாள போவது அதிரடி காதல் என்னுடைய காதலில் என்றுமே நான் குறை வைக்க மாட்டேன்" என்று கூறினான்.


அதைக்கேட்ட அஜித்தா இப்படியும் காதல் செய்வார்களா என்று எண்ணிக்கொண்டு சிரித்தாள் பிறகு தாங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் மூவரும் திட்டம் போட்டு முடித்துவிட்டு அன்றைய இரவு உணவை ஒன்றாக அமர்ந்து உண்டனர் அதன் பிறகு தங்களது அறைக்கு சென்ற ரூபன் மற்றும் அஜித்தா தூங்கினர். சத்யா தன்னுடைய இல்லத்திற்கு கிளம்பி சென்றான்.


தனக்கு எதிராக இப்படி ஒரு திட்டம் தீட்டப்படுகிறது என்பதை அறியாமல் இன்னும் ஒரு வாரத்தில் ஆதியின் இல்லத்திற்கு தான் செல்லப் போவதை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் இந்து. அங்கு இருந்த ஆதி மற்றும் ரித்விகா போட்டோவை பார்த்து "ரெண்டு பேரும் தயாரா இருங்க இன்னும் ஒரு வாரத்துல உங்களை சந்திக்க வருகிறேன். நான் வந்த பிறகு நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்க வாய்ப்பு இருக்கப்போவதில்லை ஏனெனில் நான் உங்கள் வீட்டிற்கு வருகிற நாள் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது" என்று பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு தெரியவில்லை ஆதி மற்றும் அவனது நண்பர்கள் அவளுக்கு ஏற்கனவே இன்னும் இரண்டு நாளில் அதிர்ச்சி வைத்தியம் தர காத்திருக்கிறான் என்று.


இதில் யார் ஜெயிக்க போகிறார்கள் ஆதி மற்றும் அவனுடைய நண்பர்களின் அதிர்ச்சியிலிருந்து இந்து தப்பித்து ஆதிக்கு அதிர்ச்சி கொடுப்பாளா இல்லை சத்யாவுடன் அமைதியாக செல்வாளா?


இங்கே ஆதியின் இல்லத்தில் அனைவரும் உறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். மறுநாள் ரித்விகாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவளுடைய நண்பர்கள் மற்றும் லக்ஷ்மணனின் நண்பர்கள் இறகு 12 மணிக்கு சர்ப்ரைஸ் ஏற்பாடு செய்து இருந்தனர் ஆனால் அவர்கள் அதை ஆதி ராகவன் ஆனந்த் மற்றும் அஜய்க்கு தெரியப்படுத்தவில்லை.


இதனால் வழக்கம்போல் அஜய் அவன் வீட்டிற்கு சென்றுவிட இங்கு வீட்டிலுள்ள மற்ற அனைவரும் சாப்பிட்டுவிட்டு தங்களுடைய அறைகளில் தூங்கினார் சரியாக 12 மணியளவில் ஆதி மற்றும் ரித்விகா அறைக்குள் நுழைந்தனர் அவளுடைய நண்பர்கள் சத்தமில்லாமல் அவளை தட்டி எழுப்பினர். முதலில் கையை தட்டி விட்டு ஆதியின் கைகளுக்குள் நன்றாக சென்று படுத்துவிட்டாள். இதனால் கடுப்பான அக்ஷயா அவள் முதுகில் ஒன்று வைத்தாள் அதனால் அடித்துப்பிடித்து எழுந்த ரித்விகா சுற்றி இருந்த அனைவரையும் இருட்டில் பார்த்து பயந்து போய் "ஆதி பேய் வந்திருக்கு காப்பாத்து" என்று கத்திக்கொண்டே ஆதியை இறுக அணைத்தாள்.


அவள் திடுக்கிட்டு எழுந்ததிலேயே எழுந்து அமர்ந்த ஆதி அவள் பயத்துடன் கத்தியதை பார்த்து பக்கத்திலிருந்த லைட்டை ஆன்செய்ய சென்றான் ஆனால் அதற்குள் அவளுடைய சத்தம் கேட்டு ஓடிவந்த லட்சுமணன் மற்றும் சதீஷ் கால் தவறி ஆதியின் மேல் விழுந்தனர். இதனால் கடுப்பான ஆதி அவர்கள் இருவர் முதுகிலும் இரண்டு வைத்துவிட்டு அவர்கள் இருவரையும் தள்ளிவிட்டு ஒரு கைக்குள் ரித்விகாவை வைத்துக்கொண்டு இன்னொரு கையால் லைட்டை ஆன் செய்தான்.


அவன் லைட்டை ஆன் செய்தவுடன் ரித்விகாவின் முகத்தைப் பார்த்து லட்சுமணன் ஐயோ அண்ணா பேய் என்று அவனுடைய இன்னொரு கைக்குள் புகுந்து கொண்டான். லட்சுமணன் கத்தியதில் இன்னும் பயந்து போன ரித்விகா கண்களைத் திறக்காமலேயே "பேபி அந்த பேயை எல்லாத்தையும் போக சொல்லு பயமா இருக்கு" என்று கூறினாள்.


அவளுடைய பேச்சைக் கேட்ட பிறகுதான் அது அவனுடைய செல்ல பேபி என்பதை உணர்ந்த லட்சுமணன் மெதுவாக ஆதியின் கைக்குள் இருந்து வெளியே வந்து ரித்விகா அருகில் சென்று "பேபி மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே இதை சொல்வதற்கு தான் அனைவரும் வந்திருக்கிறார்கள் அவர்கள் யாரும் பேய் போல் இல்லை உன்னை பார்ப்பதற்குத்தான் நிஜமான பேய் போல் உள்ளாய்" என்று கூறினான்.


லக்ஷ்மணன் பிறந்தநாள் வாழ்த்து கூறியதை கேட்ட ரித்விகா இதற்குத்தான் இவ்வளவு அளப்பறையா என்று எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டு கண்களைத் திறந்தாள். ஆனால் அதற்குள் அவளை பேய் என்று லட்சுமணன் கூறியதை கேட்டு நிஜமான பேய்போல் அவனுடைய முடியை பிடித்து ஆட்ட ஆரம்பித்துவிட்டாள் "பேபி யாரை கேட்டு என்னை பேய் என்று கூறினாய் என்னை பார்த்தால் பேய் போல தெரிகிறது" என்று கேட்டாள்.


இவர்களுடைய சண்டையை நடுவில் அமர்ந்து சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார் ஆதி விட்டால் இன்று முழுவதும் சண்டையிடுவார்கள் என்று எண்ணிய மற்றவர்கள் அவர்கள் இருவரையும் பிரித்து ரித்விகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர்.


அதை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாள் ரித்விகா.


அதன் பிறகு அனைவரும் அவர்கள் அங்கு வந்தால் எங்கு தங்குவார்கள் அங்கு சென்று தூங்கினர் அனைவரும் சென்ற பிறகு ஆதி அவளுக்கென்று வாங்கி வைத்திருந்த பரிசை கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து கூறினான் அவளும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு தூங்கினாள்.


மறுநாள் காலை அனைவரும் ஒன்றாக கிளம்பி கோயில் சென்றனர் அங்கு ஆதியின் அப்பா அம்மா சித்தப்பா சித்தி மற்றும் அத்தை வந்திருந்தனர் அவர்கள் அனைவரும் இவர்களைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ந்து போயினர். அவர்கள் அனைவரையும் பார்த்து ரித்விகா ஆதியுடன் சென்று அவர்கள் அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு இன்று எனக்கு பிறந்தநாள் என்று அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாள். அவர்களும் மிகவும் மகிழ்ச்சியாக அவர்களை ஆசீர்வதித்து விட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர்.


அதன்பிறகு அன்றைய நாள் முழுவதும் அனைவரும் ஒன்றாக சுற்றிவிட்டு மாலை வீடு வந்து சேர்ந்தனர். அப்போது லட்சுமணன் ஆதியை பார்த்து "அண்ணா உண்மையா அஜிதா அப்புறம் ரூபன் அண்ணா எங்கே போயிருக்காங்க அதை நீ சொல்லித்தான் ஆகணும்" என்று கேட்டான்.


ஆதி ஏதோ கூறுவதற்கு வாய் திறந்தான் நேரம் ஆனந்த் மற்றும் ராகவன் தங்கள் மனைவிகளோடு வந்து ரித்விகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பரிசுகள் கொடுத்தனர் ஏனென்றால் அவர்கள் இருவரும் தங்களுடைய வீட்டிற்கு இரண்டு நாட்கள் சென்றிருந்தனர். அதனால் தான் அவர்களால் முந்திய தினம் நடந்த அலப்பறைகள் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க முடிந்தது.


ஆதி அனைவரையும் பார்த்து "லட்சுமணன் கேட்ட கேள்விக்கான பதில் நாளை மாலை தெரிந்துவிடும் அதுவரை கொஞ்சம் அமைதியாக இருங்கள் அதுமட்டுமல்லாமல் நீங்கள் அனைவரும் உங்களுடைய வேலைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறினான்.


ராகவன் மற்றும் ஆனந்த் கேள்வியாக ஆதியை நோக்கினர் அதற்கு அவன் "அஜிதா மற்றும் ரூபன் சென்ற விஷயம் பற்றிக் கேட்கிறான்" என்று மட்டும் கூறினான். அதற்குமேல் அவர்களும் எந்தவித கேள்வியும் கேட்கவில்லை.


இப்படியே சிறிது நேரம் அமைதியாகச் சென்றது அந்த அமைதியை கலைக்க லக்ஷ்மணன் சந்துருவின் முகத்தை பார்த்து "என்னடா சந்து உன் முகத்தில் ஒரு ஒளிவட்டம் தெரியுது என்ன விஷயம் ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லிடு இல்லை என்றால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்" என்று கூறினான்.


அப்போதுதான் அனைவரும் சந்திர முகத்தை பார்த்த அவன் முகத்தில் ஒரு நிறைவான மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது அதனால் அனைவரும் அவன் கூறும் பதிலுக்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.


அனைவரையும் பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டே "என்னுடைய காதல் சக்சஸ் ஆயிடுச்சு எனக்கு ஓகே சொல்லிட்டா" என்று கூறினான்.


இதைக்கேட்டு அதிர்ச்சியான லட்சுமணன் "என்னடா சொல்ற அந்தப் இல்ல உனக்கு ஓகே சொல்லிட்டா அது எப்படி நடந்துச்சு" என்று கேட்டான்.

அவனும் நடந்ததைக் கூற ஆரம்பித்தான்.
 
Top