• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 24

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
சந்துரு மற்றும் நிஷா காதல் வெற்றி அடைந்தது என்று சந்துரு கூறியதை கேட்ட அனைவரும் எவ்வாறு நிஷா ஒத்துக்கொண்டாள் என்று கேட்க ஆரம்பித்தனர். அதுக்கு சந்துருவும் கூற ஆரம்பித்தான்.


நிஷாவிற்கு சந்துருவை முதலிலிருந்தே பிடித்துதான் இருந்தது. ஆனால் அவளுடைய பயந்த சுபாவம் யாரிடமும் அதைச் சொல்லவும் விடாமல் சந்துருவின் காதலை ஏற்றுக் கொள்ளவும் விடாமல் வைத்திருந்தது. நிஷா ரித்விகா மற்றும் அக்ஷயா உடன் தோழியான போது அவளுக்கு புது நண்பர்களாக கிடைத்தவர்கள் தான் லக்ஷ்மணனின் நண்பர்கள்.


சீனியர்ஸ் என்றாலேயே ராகிங் செய்வார்கள் என்று பயந்தபடி இருந்த நிஷாவிற்கு இவர்கள் அனைவரும் மிகவும் தோழமையுடன் பழகியதால் வித்தியாசமாக தெரிந்தார்கள் அதிலும் லட்சுமணன் மற்றும் ரித்விகா பழகுவது யாருக்கும் எந்தவித சந்தேகமும் வந்தது இல்லை ஆனால் சில பல பிரச்சனைகள் வரும் போதும் அனைத்து நண்பர்களும் உடன் இருந்து அதை சரி செய்யும் போது இப்படி ஒரு நட்புகள் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ந்து போவாள் நிஷா.


ஏனென்றால் நிஷா மிகவும் பயந்த சுபாவத்துடன் வளர்ந்தவள் அதனால் அவளுக்கு உண்மையான நண்பர்கள் பள்ளிகளில் அமைந்ததில்லை அவளுக்கு அமைந்தவர்கள் அனைவரும் அவளை ஒரு பொம்மை போலவே உபயோகித்தனர். நிஷா நன்றாக படிக்கும் பழக்கம் இருந்ததால் ஹோம் ஒர்க் செய்வதற்கும் படிப்பில் உதவியாக இருப்பதற்காக மட்டுமே அவளுடன் நட்பாக இருந்தார்கள் கல்லூரியில் வந்து கிடைத்த உண்மையான நட்பு அவளுக்கு ஒரு புது தெம்பை கொடுத்திருந்தது.


அதிலும் சந்துரு முதலிலிருந்தே அவளை பார்க்கும் பார்வையில் இருந்த வித்தியாசத்தை நிஷா உணர்ந்தாள். ஆனால் அது உண்மையாக இருக்குமா என்று எண்ணி மிகவும் குழம்பிய நாட்கள் பல இப்படி இவள் குழம்பி கொண்டிருந்ததை ஒருநாள் அக்ஷயா கண்டு பிடித்து விட்டாள்.


அக்ஷயா "நிஷா நீ என்ன குழப்பத்தில் இருக்க எதுவாக இருந்தாலும் ஒழுங்கா சொல்லு என்னால முடிஞ்சதை நான் சொல்லுறேன் இப்படியே உனக்குள்ளே வச்சுக்கிட்டு இருந்தா கண்டிப்பா உனக்கு பைத்தியம்தான் பிடிக்கும்" என்று கூறினாள்.


தன் தோழியிடம் கூறினாள் ஏதாவது விடை கிடைக்கும் என்று எண்ணிய நிஷா அக்ஷயாவிடம் "நீ என்ன தப்பா நினைக்க கூடாது" என்று ஆரம்பித்தாள். அதற்கு அக்ஷயா "நான் உன்னை தப்பா நினைக்க மாட்டேன் எதுவாக இருந்தாலும் சொல்லு" என்று கூறினாள்.


நிஷா "சந்துரு முதலிலிருந்தே என்னை பார்க்கும் பார்வையில் ஒரு வித்தியாசம் தெரிகிறது எனக்கும் அந்த பார்வை பிடித்திருக்கிறது ஆனால் அது காதல் பார்வையா இல்லை சகோதரத்துவம் சம்பந்தமான பார்வையா என்று எனக்கு புரியவில்லை ஆனால் அவனை நினைக்க நினைக்க அவனுடன் காலம் முழுவதும் பயணித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வருகிறது" என்று கூறினாள்.


அக்ஷயா சந்துரு உன்னை நேசிக்கிறான் அதை நான் முதலிலேயே கண்டுபிடித்து விட்டேன் ஆனால் அவன் உன்னிடம் வந்து காதலை கூறினாலும் நீ எதுவும் பதில் பேசாதே என்றால் அவன் எவ்வாறு தன்னுடைய காதலை உன்னிடம் நிரூபித்து அதை அடைகிறான் என்று பார்ப்போம். இந்த சமுதாயத்தில் ஒரு சில ஆண்கள் இருக்கிறார்கள் தான் காதலை கூறியவுடன் தான் காதலித்த பெண் அவர்களை காதலிக்க வேண்டும். இல்லை என்றால் மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பார்கள் அதுவும் முடியவில்லை என்றால் விபரீதமான விஷயங்களை செய்கிறார்கள். அதனால் பொறுமையாக இரு அவன் உன்னை உண்மையாக காதலித்தால் நாங்கள் அனைவரும் சேர்ந்தே உனக்கு உதவி செய்கிறோம்" என்று கூறினாள்.


அக்ஷயா கொடுத்த விளக்கத்தை கேட்ட நிஷா தெளிந்து போனாள் அதனால் மிகவும் மகிழ்ச்சியாக "நீ சொல்வது மிகவும் சரி அதனால் நீ சொல்வது அப்படியே நான் செய்கிறேன்" என்று கூறினாள்.


அதே மாதிரி சந்துரு வந்த அவனுடைய காதலை கூறியபோது எதுவும் கூறாமல் சென்று விட்டாள் நிஷா. ஆனால் அதன்பிறகு சந்துரு அவளை எந்த இடத்திலும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக தன்னுடைய காதலை வளர்த்துக் கொண்டிருந்தான். அதை பார்க்கும் போதெல்லாம் நிஷாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.


ஆனால் சந்துருவின் ஏக்க பார்வையை பார்க்கும் போதெல்லாம் நிஷாவிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க இஷா தன்னுடைய காதலை சந்துருவிடம் கூற நினைத்தாள்.


ஆனால் அக்ஷயா அவன் இந்த கல்லூரியில் படித்து முடித்து பிராக்டிஸ் போகும்வரை அமைதியாக இருக்கும்படி நிஷாவிடம் கேட்டுக்கொண்டாள். தன் தோழி கூறினாள் ஏதாவது விஷயம் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட நிஷா அமைதியாக இருந்துவிட்டாள். இறுதியில் அவனுடைய காதல் உண்மை என்பதை அக்ஷயாவும் உணர்ந்து கொண்டாள்.


அதனால் நிஷாவிடம் "நீ விருப்ப பட்டால் உன்னுடைய காதலை அவனிடம் கூறி விடு ஆனால் உனக்கு எப்போது அவனை பிடிக்க ஆரம்பித்தது மற்றும் நாம் இருவரும் பேசியது முதல் அனைத்தையும் தெளிவாக கூறி விடு இல்லை என்றால் இதனால் பின்னால் பிரச்சினைகள் வரலாம்" என்று கூறினாள்.


நிஷாவும் அவனுடைய காதலை கூறுவதற்கு எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் ரித்விகா பிறந்தநாள்க்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்தனர் நண்பர்கள் கூட்டம் அதை பற்றி அனைவரும் ஒன்றாக ஒரு பார்க்கில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர் ஆனால் வந்ததிலிருந்து நிஷா சந்துருவை பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்த மற்ற அனைவரும் அவர்கள் இருவரிடமும் "நீங்கள் இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருங்கள் நாங்கள் இப்போது வந்து விடுகிறோம்" என்று நழுவினார்கள்.


அனைவரும் சென்று விட்டதை உணர்ந்த சந்துரு நிஷாவை பார்த்து "உன் கிட்ட கொஞ்சம் பேசலாமா" என்று கேட்டான். அதற்கு நிஷா சம்மதமாக தலையசைக்க சந்துரு தன்னுடைய பேச்சை ஆரம்பித்தான் "எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் அது உன்னோட அமைதியா இல்ல எப்பவும் உன்னோட முகத்தில் இருக்கும் ஒரு சிரிப்பா இல்ல நீ பயப்படாத குணமும் எனக்கு தெரியல ஆனா நீ என்னோட லைஃப் பார்ட்னர் வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். அதே மாதிரி உனக்கு எப்பவுமே ஒரு பாதுகாப்பா உன் கூடவே இருப்பேன் என்னால முடிஞ்ச அன்பை உனக்கு கொடுத்து அந்த நல்லபடியா பார்த்துக்கொள்வேன் நீ உன்னுடைய மனதில் என்ன இருந்தாலும் அதை தெளிவாக சொல்லு உனக்கு என்னை பிடிக்கவில்லை என்றாலும் நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்" என்று கூறினான்.


நிஷா மெதுவாக அவனுடைய முகத்தை பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தாள். "எனக்கு உங்களை முதலிலிருந்தே மிகவும் பிடிக்கும் நான் உங்களை காதலிக்கிறேன்" என்று கூற ஆரம்பித்தது எனக்கும் அக்ஷயாவிற்கும் நடந்த உரையாடல் இன்றைய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்து அவனுடைய முகத்தை பார்த்தாள்.


அவள் தன்னுடைய காதலை சொன்ன அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்த சந்துரு அவள் தன்னுடைய பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதை சிறிது நேரத்திற்கு பிறகு உணர்ந்தவன் மகிழ்ச்சியோடு "இப்போ உங்க ரெண்டு பேருக்கும் என் மேல இருந்த சந்தேகம் நீ சந்தோஷமா லவ் பண்ணிட்டு வீட்ல பேசி கல்யாணம் பண்ணிக்கலாமா" என்று கேட்டான்.


அதற்கு நிஷா வெட்கப்பட்டுக் கொண்டே மகிழ்ச்சியாக தலையசைக்க சந்துரு மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றான் அப்போது சரியாக அவர்களுடைய நண்பர்கள் பட்டாளம் வர அதன் பிறகு பிறந்தநாள் சர்ப்ரைஸ் காக ஏற்பாடு செய்தனர். இதுதான் நடந்தது என்று அனைவரிடமும் கூறினான்.


அவன் கூறியதைக் கேட்ட லட்சுமணன் சந்ருவின் முகத்தை அந்த பக்கம் இந்த பக்கம் திரும்பி பார்த்துவிட்டு "இந்த முகர கட்டையில அப்படி என்ன இருக்குனு உன்னை பார்த்தவுடன் அந்த பொண்ணுக்கு பிடிச்சு போச்சு" என்று கேட்டான்.


லட்சுமணன் கூறியதைக் கேட்டு அவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். ஆனால் அதற்கு சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் "உன்னுடைய ஆளுக்கு உன் முகர கட்டையில் என்ன பிடித்ததோ அதேதான் நிஷாவிற்கு என் முகர கட்டையில் பிடித்திருக்கிறது" என்று கூறினான்.


அதைக்கேட்ட ஆதி லக்ஷ்மணனை பார்த்து "உனக்கு இது தேவையா ஒழுங்கா மூடியிருக்க வேண்டியதானே" என்று கூறினான். அதற்கு லட்சுமணன் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா" என்று கூறிவிட்டு சதீசை இழுத்துக்கொண்டு இடத்தை காலி செய்தான்.


இப்படியே இவர்களுக்கு அன்றைய நாள் போக அங்கே அஜிதா மற்றும் ரூபனுக்கு அன்றைய நாள் காலை முதல் மதியம்வரை எந்தவித வித்தியாசமும் இல்லாமல் தங்களுடைய அறைகளில் இருந்தனர் மதியத்திற்கு மேல் சத்யா மற்றும் ரூபன் அஜிதாவின் அறை நோக்கி வந்தனர்.


சுதாவின் அறைக் கதவை தட்டிவிட்டு இருவரும் காத்திருந்தனர். அஜிதா வந்து கதவைத் திறந்த இருவரையும் உள்ளே அழைத்துச்சென்றாள். சத்யா அஜிதாவை பார்த்து "இப்போ உங்க அப்பாக்கு போன் பண்ணி நான் ப்ராஜக்ட் பண்ண வந்த இடத்துல உங்களுக்கு தெரிந்த ஏதாவது பெண் இருந்தால் கூறுங்கள் எனக்கு சில உதவிகள் தேவைப்படுகிறது என்று கூறு அதற்கு அவர் கண்டிப்பாக இந்துவின் அலைபேசி எண் மற்றும் விவரத்தை தருவார் அதை வைத்து நாம் அவளிடம் பேசலாம்" என்று கூறினான்.


அஜிதா அவனிடம் "இப்ப எங்க அப்பாகிட்ட இதைக் கேட்க வேண்டிய அவசியம் என்ன அவருக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் நம்முடைய பிரச்சனை இன்னும் பெரிதாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது" என்று கேட்டாள்.


அதற்கு ரூபன் "நீ நேரடியாக இந்து'விடம் பேசினார் உன்னை யார் என்று கண்டிப்பாக விசாரிப்பார் அப்படி அவள் விசாரிக்கும் பொழுது உன்னுடைய தந்தையின் பெயர் வந்தால் அவர்கள் இருவரும் ஏற்கனவே கூட்டு களவாணிகள் அதனால் உன் மேல் சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது உனக்கும் அதனால் பிரச்சினை எழும் நீ உன் தந்தையிடம் முன்பே கூறி விட்டால் அவள் கேட்டாலும் உன் தந்தை நீ ப்ராஜக்ட் செய்ய வந்திருப்பதாகக் கூறி விடுவார் அதனால் உனக்கு பிரச்சனை வராது" என்று கூறினான்.


அஜிதா ரூபன் மற்றும் சத்யா கூறியபடி தன்னுடைய தந்தைக்கு போன் செய்து "அப்பா எனக்கு ப்ராஜெக்ட் விஷயமாக கொஞ்சம் உதவி தேவைப்படுகிறது நான் தங்கியிருக்கும் இடத்தில் உங்களுக்குத் தெரிந்தவர் யாராவது இருக்கிறார்களா இருந்தால் கூறுங்கள்" என்று கேட்டாள்.


அதற்கு சிதம்பரம் "ஆமா எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கு அந்த பொண்ணோட போன் நம்பர் அட்ரஸ் உனக்கு தருகிறேன் நீ அவகிட்ட உதவி கேட்டுக்கோ அது மட்டுமில்லாமல் அதை உனக்கு திருமணம் செய்து வைப்பதில் அந்த பெண் தான் மிகப்பெரிய பங்கு வகிக்கிறா அதனால அவ கிட்ட நல்ல தோழமையோடு பழகு" என்று கூறினார்.


அவர் கூறியதை கேட்டு கடுப்பான அஜித்தா ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "சரிப்பா நான் அவகிட்ட நல்ல தோழமையோடு பழகுகிறேன்" என்று கூறி போனை கட் செய்தாள்.


அதன்பிறகு அவர் தந்தை அனுப்பிய போன் நம்பரை வைத்து இந்துவிற்கு கால் செய்தாள். இந்து விற்கும் தந்தை போன் செய்து அனைத்தையும் கூறி இருந்ததால் இவள் போன் செய்தவுடன் "ஹலோ அஜிதா" என்று கேட்டாள்.


அவ்வளவுதான் என்று கேட்டதை வைத்தேன் சிதம்பரம் அனைத்தையும் கூறியுள்ளார் என்பதை புரிந்து கொண்டவர்கள் அஜித்தாவை மேலே பேசுமாறு சைகை செய்தனர். அஜிதா "ஹாய் இந்து எனக்கு என்னோட ப்ராஜெக்ட் விசயமா கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா" என்று கேட்டாள்.


இந்து "கண்டிப்பா என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்" என்று கூறினாள். அதன் பிறகு சிறிது நேரம் ப்ராஜெக்ட் பத்தி மட்டும் டிஸ்கஸ் செய்துவிட்டு அமைதியாக இருந்தனர். அதன்பிறகு அஜிதா "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு நான் சொல்ற கோயிலுக்கு வர முடியுமா" என்று கேட்டாள்.


இந்து "எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு அதனால கண்டிப்பா வருகிறேன்" என்று கூறினாள்.


அதன்பிறகு இருவரும் போனை வைத்து விட்டனர் சத்யா மற்றும் ரூபன் இவ்வளவு எளிதாக இந்து வர சம்மதிப்பாள் என்று எதிர்பார்க்க வில்லை ஆனால் அனைத்தும் நன்மைக்கே என்று நினைத்து அமைதியாக இருந்தனர்.


ஆனால் அஜித்தா இருவரையும் பார்த்து "எது செய்தாலும் கொஞ்சம் கவனமாக செய்யுங்கள் யாருக்கும் எந்தவித பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினாள். அவர்கள் இருவரும் அதை ஆமோதித்து தலையசைத்தனர்.


அதன் பிறகு அன்றைய நாள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்றது மறுநாள் காலையில் கதிரவன் யாருக்கும் காத்திராமல் தன்னுடைய பணியை செய்ய வந்தான். ரூபன் அஜித்தா அறையின் கதவைத் தட்டி ஒரு புடவையை கொடுத்தான் அவள் அவனை கேள்வியாக பார்க்க :நாம் இன்று போகப்போவது திருமணத்திற்கு அதனால் நீ புடவை கட்டினால் நன்றாக இருக்கும் என்று நினைத்து கொடுத்தேன் பிடித்திருந்தால் கட்டிக் கொண்டு வா பிடிக்கவில்லை என்றால் பிரச்சினை இல்லை" என்று கூறினான்.


அவளுக்கு ஏனோ அவன் கூறியதற்கு மறுத்து பேச மனமில்லாமல் அவன் கொடுத்த பொழுது கட்டிக்கொண்டு அவனுடன் சத்யா சொன்ன கோயிலுக்கு கிளம்பி சென்றனர் ரூபன் அஜிதா புடவையில் பார்த்ததும் சிலை ஆனான். பிறகு தன்னை கையில் படுத்துக் கொண்டு அவளுக்கு தெரியாமல் அவளுடைய புகைப்படத்தை தன்னுடைய போனில் சேமித்து கொண்டு அமைதியாக அவள் உடன் சென்றான்.


இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்ற நேரம் சத்யா திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்திருந்தான் அஜித்தா இருவரையும் பார்த்து "எல்லாம் ரெடியா வைத்திருக்கிறீர்களா ஏதாவது பிரச்சனை வந்தால் சமாளிக்க முடியுமா" என்று கேட்டாள்.


சத்யா "அனைத்தும் தயாராக உள்ளது இந்து வந்தால் நீங்கள் அவளை அந்த கோவில் சன்னதிக்கு அழைத்து வாருங்கள் அதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறினான்.


சரியாக ஒன்பது மணி அளவில் இந்து கோவிலுக்கு வந்து சேர்ந்தாள் நேற்று அஜித்தா கோவிலுக்கு வரச் சொன்னதால் புடவையில் வந்திருந்தாள். அவளைப் பார்த்த மூவரும் "அழகாக இருக்கிறாள் ஆனால் என்ன திமிர் மட்டும் கொஞ்சம் அதிகம்" என்று எண்ணிக் கொண்டனர். இந்துவை பார்த்த ரூபன் மற்றும் சத்யா அஜிதா இருந்த இடத்தை விட்டுவிட்டு நகர்ந்து சென்றனர்.


அஜித்தா இந்துவை பார்த்து கையசைக்க அவளும் பதிலுக்கு கையசைத்து அவளை நோக்கி வந்தாள். அஜிதா இந்துவை பார்த்து "உங்களுக்கு ஆதி மாமா மேல காதல் இருக்கிறதா அவர்கள் இருவரையும் பிரிப்பதற்காக தான் அனைத்து வேலைகளையும் செய்கிறீர்களா" என்று நடந்து கொண்டே கேட்டாள்.


அஜித்தை நேரடியாக விஷயத்திற்கு வருவாள் என்று எதிர்பார்க்காத இந்து ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி பின்பு தன்னுடைய பழைய நிலைமைக்கு திரும்பினாள். பின்பு அவளிடம் "ஆமா எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது உனக்கு மாடி மேல விருப்பம் இருக்குனு எனக்கு தெரியும். ஒழுங்கு மரியாதையா நீயே என்னோட வழியிலிருந்து விலகி இரு இல்லை என்றால் அதனுடைய பின்விளைவுகளை நீதான் சந்திக்க வேண்டிவரும்" என்று அவளுடன் நடந்து கொண்டே கூறினாள்.


அஜிதா சிரித்துக் கொண்டே "ஆண்டவன் போட்ட முடிச்சை யாராலும் அவிழ்க்கவும் முடியாது மாற்றி அமைக்க முடியாது அது நீ நினைத்தாலும் முடியாது நான் நினைத்தாலும் முடியாது. உண்மையில் நீ ஆதியை காதல் செய்தாயா இல்லை ஆதி மாமாவின் வெளி தோற்றத்தை பார்த்து இப்படிப் பட்டவன் தன்னுடன் இருந்தால் நமக்கு நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டாயா என்பதை தெளிவு கொள்" என்று கூறிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள்.


இந்து அவள் கூறியதை எதுவும் பெரிதுபடுத்தாமல் "எனக்கு அதெல்லாம் தெரியாது ஆதியை பார்த்தவுடன் எனக்கு பிடித்துவிட்டது அதனால் அவன் எனக்கு வேண்டும்" என்று கூறினாள்.


இப்படியே பேசி சத்யா சொன்ன இடத்திற்கு இவ்விருவரும் வந்து சேர்ந்திருந்தனர் அஜிதா இந்துவை பார்த்து சிரித்துக் கொண்டே "சரி அது உன்னுடைய எண்ணம் இதற்கு நான் ஒன்றும் கூற இயலாது அதனால் இப்போது பூஜைக்கு நேரம் ஆகிவிட்டது கண்ணை மூடி சாமியை தரிசனம் செய் அதன் பிறகு ஆண்டவன் நடக்க வேண்டியவற்றை பார்த்துக் கொள்வார்" என்று கூறி தன்னுடைய கண்களை மூடினாள்.


இந்துவும் "ஆண்டவனாக இருந்தாலும் நான் நினைத்ததை தான் செய்ய வேண்டும்" என்று கூறிக்கொண்டே கண்களை மூடினாள். ஆண்டவன் அனைவருக்கும் பொதுவானவன் யார் யாருக்கு என்னென்ன செய்யணுமோ அதை அந்த நேரத்தில் கண்டிப்பாக செய்வான் இதைப் புரிந்து கொள்ளாத அந்தப் பேதை கண்மூடி கை கூப்பினார்.


அப்போது சரியாக இந்துவின் அருகில் சத்யா வந்து கண்களை மூடி கடவுளை வணங்கினான் ஏற்கனவே ஐயரிடம் கூறி இருந்ததால் ஜோடிகள் வந்ததை பார்த்தவர். பூஜையை ஆரம்பித்து மாங்கல்யத்தையும் இரண்டு மாலைகளையும் கொண்டு வந்தார். மாங்கல்யத்தை சத்யா கையில் கொடுத்து மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார்.


சத்யா மகிழ்ச்சியோடு இந்துவின் கழுத்தில் அவளறியாமல் மூன்று முடிச்சுகளை போட்டான். அவள் கண் விழிப்பதற்குள் அவள் கழுத்தில் ஒரு மாலையைப் போட்டுவிட்டு தன்னுடைய கழுத்தில் மற்றொரு மாலையைப் போட்டுக் கொண்டு இந்துவின் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து மொத்தமாக தன் மனைவியாக மாற்றிக் கொண்டான்.


இதில் கண்களை திறந்த இந்து தன்னை திருமணம் செய்தவனை கொலை வெறியோடு பார்த்து கன்னத்தில் ஒரு அறை கொடுத்தாள். அடித்துவிட்டு கழுத்திலிருந்த மாங்கல்யத்தை கழற்ற முயற்சித்தாள் அவள அடிக்கும்போது சிரித்துக்கொண்டே வாங்கியவன் அவள் அதைக் கழற்ற முயற்சி செய்வதை பார்த்து பதிலுக்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்தான். அந்த அடியில் சுயநினைவு இறந்து மயங்கி அவன் கைகளில் விழுந்தாள் இந்து.


அவை மயங்கியதை பார்த்து பதறிய அஜிதாவை பார்த்த சத்யா ரூபன் ஐயும் பார்த்து "உங்கள் இருவருக்கும் மிகவும் நன்றி இனி என் மனைவியை நான் பார்த்துக் கொள்கிறேன். இது அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் இதற்குமேல் இந்துவால் உங்கள் யாருக்கும் எந்தவித பிரச்சினையும் வராது. அதற்கு நான் முழு பொறுப்பு இனி இவளை பற்றி மறந்துவிட்டு உங்களுடைய வாழ்க்கையை நிம்மதியாக வாழுங்கள். கண்டிப்பாக இந்துவை உங்களிடம் ஒரு நாள் அழைத்து வருவேன். ஆனால் அன்று அவள் முழுமையாக மாறி உங்கள் அனைவரையும் ஒரு தோழமையோடு பார்க்கும் எண்ணத்தோடு தான் உங்கள் முன் வருவாள் அதனால் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் உங்கள் ஊருக்கு சென்று வாருங்கள்" என்று கூறினான்.


அஜித்தா "நிச்சயமாக அவள் கண் விழிக்கும்போது கோபப்படுவாள் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினாள்.


சத்யா "நீங்கள் கவலைப்பட வேண்டாம் இனி அவளை நான் அடிக்க மாட்டேன் அவளை எப்படி மாற்ற வேண்டும் என்று எனக்கு தெரியும் என்னுடைய காதலை வைத்து அவளை நிச்சயமாக மாற்றுவேன் அதனால் நீ ரொம்ப கவலை கொள்ளாதே உன்னால் இங்கு எதுவும் நடக்கவில்லை நீ அதை நினைத்துக் குற்ற உணர்ச்சியோடு இருக்கவும் செய்யாதே" என்று கூறினான்.


ரூபன் மற்றும் சத்யா இருவரும் மகிழ்ச்சியாக புன்னகைத்துக் கொண்டனர். பின்பு ரூபன் சத்யாவிடம் "சரி நாங்க நாளைக்கு கிளம்புறோம் இனி உன்னுடைய காதல் மனைவியை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய ரிசப்ஷனுக்கு எங்களால் வர முடியுமா என்று தெரியவில்லை ஆனால் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இரு நான் ஆதி அஜய் அனைவருமே உன்னுடைய நண்பர்களாக எப்பொழுதும் துணை இருப்போம்" என்று கூறி அஜிதாவை அழைத்துக்கொண்டு விடைபெற்றான்.


சத்யாவும் தன் கைகளில் இருந்த இந்துவை பார்த்து "இனிதான் என்னுடைய காதலின் அளவை நீ பார்க்க போகிறாய்" என்று எண்ணி சிரித்துக்கொண்டே அவளை தூக்கிக்கொண்டு தன்னுடைய இல்லத்திற்கு கிளம்பினான்.


இனி அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி வர ஆண்டவனை வேண்டுவோம் இந்து விரைவில் அவனுடைய காதலை புரிந்து கொண்டேன் அவனுடன் ஒன்றாக வாழ்வாள் என்ற நம்பிக்கையில் அவர்களை வாழ்த்துவோம்.


அஜித்தாவை அழைத்து வந்த ரூபன் மதிய உணவை சாப்பிட வைத்துவிட்டு "எதைப் பற்றியும் யோசிக்காதே நாளை நாம் வீட்டிற்கு கிளம்பி விடலாம் இன்று ஒரு நாள் இங்கே தங்கி விட்டு செல்லலாம். எனக்கு ஒரு சின்ன வேலை உள்ளது அதை முடித்துவிட்டு இரண்டு பேரும் நாளை காலை கிளம்பி விடலாம்" என்று கூறினான்.


அதுதான் சம்மதமாக தலையசைத்துவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றாள் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு எழும்பும் போது தான் அவளுக்கு மாதவிடாய் வந்திருப்பது தெரிந்தது. அந்த நேரத்தில் முதல் இரு நாட்கள் அவர் மிகவும் சிரமப் படுவாள். வீட்டில் இருந்தாள் யாராவது பார்த்துக் கொள்வார்கள் இங்கே யாரிடம் என்ன கேட்பது என்று புரியாமல் சுருண்டு படுத்து இருந்தாள்.


ரூபன் மனதிற்கு ஏதோ தோன்ற அஜிதா அறைக்கு வந்தான் அவன் கதவை தட்டியது உதவி கேட்கவில்லை தன்னிடமிருந்த இன்னோர் சாவியை வைத்து கதவை திறந்து உள்ளே சென்றான். அவன் இந்த இடத்தில் தங்கும்போது சத்யா அஜிதாவின் அறையின் இன்னொரு சாவியை ரூபா கொடுத்திருந்தான். ஏதாவது பிரச்சினை என்றால் உதவியாக இருக்கும் என்று அது இன்று உதவியது.


உள்ளே சுருண்டு படுத்திருந்த அஜிதாவை பார்த்தவுடன் நிலைமை புரிந்துவிட்டது. அதனால் உடனடியாக செயல்பட்டான். வெளியே வந்து கடைக்கு சென்று அவளுக்கு தேவையானதை வாங்கி வந்து அவளை மெதுவாக எழுப்பினான். அவள் தன்னால் முடியவில்லை என்பதை கண்ணீரோடு முகத்தில் காட்டினாள். அவளை மெதுவாக தூக்கி குளியலறையில் விட்டு விட்டு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொடுத்தான். பின்பு தன் தாயிடம் கசாயத்தை கேட்டு தெரிந்து கொண்டு அதையும் செய்து கொடுத்தான்.


கசாயத்தை குடிக்க சிரமப்பட்ட அவளிடம் "ப்ளீஸ் கொஞ்சம் குடிச்சிடு அப்பதான் கொஞ்சம் சரியாகும் இன்னைக்கும் நாளைக்கும் இங்கேயே இருந்துட்டு அதன் பிறகு வீட்டிற்கு செல்லலாம்" என்று கூறினான்.


அஜிதாவிற்கு அவன் தன்னிடம் காட்டும் பாசம் புதிதாக இருந்தது ஆனால் அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. தனக்காக அவன் படும் அக்கறையை நினைத்து மிகவும் மகிழ்ந்து போனாள். ரூபன் ஆதி இடம் நடந்த அனைத்தையும் கூறி விட்டு போன் பண்ணி நடந்த அனைத்தையும் கூறி விட்டு அவனுக்கு கொஞ்சம் வேலை இருப்பதால் இரண்டு நாட்கள் கழித்து தான் வர முடியும் என்று கூறினான் அதற்கு ஆதியும் பத்திரமாக இருங்கள் இருவரும் என்று கூறிவிட்டு வைத்துவிட்டான். அந்த இரண்டு நாட்களும் அவளை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொண்டான்.


அப்போதுதான் அஜிதா உண்மையான காதலை உணர்ந்தாள். ஏனென்றால் ரூபன் இடம் அவளுக்கு எந்தவித தயக்கமும் இருக்கவில்லை ஆனால் தன்னுடைய காதலை சொல்வதற்கு மிகவும் தயங்கினாள்.


ரூபன் அஜிதா தன்னை காதலிக்க தொடங்கி விட்டாள் என்பதை உணர்ந்து கொண்டான்.


அதனால் வீட்டிற்கு செல்லும் வழியில் அவளை விரும்ப ஆரம்பித்த அனைத்தையும் முதலில் இருந்து கடைசிவரை கூறிவிட வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தான்.


இப்படியாக 2 நாட்கள் அங்கே இருந்து விட்டு மறுநாள் காலை அவர்கள் ஊருக்கு கிளம்புவதற்கு ஆயத்தமானார்கள்.
 
Top