• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 29

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ஆதி தன்னுடைய திட்டத்தை அனைவரிடமும் கூறினான் அந்தத் திட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் அனைத்தும் சரியாக நடக்கவேண்டும் என்ற வேண்டுதலும் இருக்கத்தான் செய்தது.


அங்கே ரித்திகா மறுநாள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். ராகவன் மற்றும் ஆனந்திற்கு ஆதி அலைபேசி வாயிலாக அனைத்தையும் கூறியிருந்தான். அதனால் அவர்களும் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அவளை தனியாக ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ராகவனை அவளுக்கு துணையாக விட்டுவிட்டு தங்களுடைய வீட்டுக்கு சென்ற ஆனந்த் அவளுக்கு தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு வந்தான்.


அவன் வீட்டில் இவளுடைய பொருட்களை எடுக்கும்போது வித்யா "என்னங்க எல்லாம் சரியா நடக்குமா பாவம் இதுக்கு மேல அவ ரொம்ப கஷ்டப் படக்கூடாது எல்லாத்தையும் சரியா செஞ்சு முடிச்சிடுங்க நீங்களும் அப்பப்ப போய் பார்த்துட்டு வாங்க" என்று கூறினாள்.


ஆனந்த் "எல்லாம் சரியா நடக்கும் ஆதி ஒரு விஷயத்துல இறங்கினான் என்றாள் அதை சரியாக முடிக்கும்வரை ஓய மாட்டான்" என்று நம்பிக்கையாக கூறினான்.


இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருந்த நேரத்தில் லட்சுமணன் மற்றும் ரூபன் வீட்டிற்கு வந்தனர். ரூபனை பார்த்த ஆனந்த் "எப்படி கரெக்டா ரிஷி மற்றும் கதிர கண்டுபிடிச்ச யார் உனக்கு உதவி செஞ்சா" என்று கேட்டான்.


அப்போதுதான் லட்சுமணனும் "ஆமா அண்ணா அந்த கேள்வியை உன் கிட்ட கேக்க மறந்துட்டேன் எப்படி கண்டுபிடிச்ச அதே மாதிரி அண்ணனுக்கு எப்படி தெரிஞ்சது இவங்க தான் பண்ணுதுன்னு" என்று அவனும் கேட்டான்.


ரூபன் "உங்க மூணு பேரையும் ஆக்சிடெண்ட் பண்ண உடனே நீங்க மூணு பேருமே மயக்கத்துக்கு போயிருக்க ஆனா ஆதி முழுசா மயக்கத்துக்கு போகலை. அப்போ உங்கள இடிச்சுட்டு போன லாரிக்கு பின்னாடி வந்த காரிலிருந்து கதிர் மற்றும் ரிஷி இறங்கி இருக்காங்க நீங்க மூணு பேருமே மயக்கத்திலே இருந்ததை பார்த்துட்டு கண்டிப்பா செத்து போயிடுவீங்க என முடிவு பண்ணியிருக்காங்க.


அதனால ரிஷி உங்க மூணு பேரையும் பார்த்து "எவ்வளவு பண்ணி இருப்பீங்க எங்களுக்கு இப்படியே துடிதுடித்து சாவுங்க யாரும் இந்த பக்கம் வர்றதுக்கு வாய்ப்பு இல்லை" என்று கூறி இருக்கிறான்.

கதிர் ரித்விகா மற்றும் ஆதியை பார்த்து "புருஷனும் பொண்டாட்டியும் ஒன்றுபோல சொர்க்கத்தில் போய் சந்தோஷமா இருங்க நீங்க ரெண்டு பேரும் இருந்தாலே பெரிய பிரச்சனை கண்டிப்பா உங்களுக்கு யார் உங்களை இப்படி பண்ணினால் என்று தெரிய வாய்ப்பே கிடையாது" என்று கூறியிருக்கிறான்.


பின்பு இருவரும் சந்தோஷமாக காரில் ஏறி சென்றுள்ளனர். ஆனால் காரின் வண்டி நம்பரை ஆதி கஷ்டப்பட்டு லேசாக கண் விழித்து பார்த்து குறித்துக்கொண்டான். அதன் பிறகு அவனும் முழு மயக்கத்திற்கு சென்றுவிட்டான். உங்களது நல்லநேரம் எப்படியோ காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விட்டீர்கள். ஆதி இவை அனைத்தையும் கூறியவுடன் என்னுடைய நண்பன் ஒருவனுக்கு தொடர்புகொண்டேன். அவன் இதுபோல் வேலைகள் செய்வதில் மிகவும் வல்லவன் அதனால் அரை மணி நேரத்தில் நமக்கு தேவையான அனைத்தும் கிடைத்துவிட்டது" என்று கூறினான்.


லட்சுமணன் ரூபனை பார்த்து "அவனுங்க யாரையும் சும்மா விடக்கூடாது அண்ணா அடுத்தவங்களுக்கு கஷ்டத்தை மட்டுமே கொடுக்க நினைக்கும் அவங்களுக்கு கஷ்டம்னா என்னன்னு ஒவ்வொரு நொடியும் புரிய வைக்கணும்" என்று கூறினான்.


அவன் கூறுவது அனைவருக்கும் புரிந்தாலும் ஆனந்த் லட்சுமணனை பார்த்து "நீ இப்போ வரவர ரொம்ப சீரியஸா இருக்கே அது உனக்கு செட்டாகவில்லை அதனால நீ பழைய மாதிரியே இரு" என்று கூறினான்.


லக்ஷ்மணனும் அவன் சூழ்நிலையை மாற்ற இவ்வாறு கூறுகிறான் என்பதை புரிந்து கொண்டு "ஆமா அண்ணா கோபம் என்றால் என்னன்னு தெரியாத என்னைப்போய் கோபப்பட வைத்துவிட்டார்கள் அதுதான் எனக்கும் கஷ்டமாக இருக்கிறது" என்று போலியாக கண்ணீர் வடித்தான்.


அப்போது சரியாக உள்ளே நுழைந்த சிவா "நீ இப்படி பேசுறத பாத்தா எங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு அதை கேக்குறதுக்கு சோ தயவுசெஞ்சு வருத்தப்படுகிறேன் அப்படிங்கற பேர்ல எதுவும் செய்யாத அண்ணா" என்று அழுது விடுபவன் போல கூறினான்.


அதைக்கேட்ட மற்றவர்கள் சிரிக்க ஆரம்பிக்க லட்சுமணன் "ஏன்டா ஒரு பெர்ஃபார்மன்ஸ் பண்ண விடுறியா உன்னை எல்லாம் வச்சிக்கிட்டு என்னதான் பண்ண போறேனோ" என்று சலித்துக் கொண்டே கூறினான்.


விட்டால் இப்படியே பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொண்ட வித்யா ஆனந்தை பார்த்து "நீங்க கெளம்புங்க ப்ளேட் ஆக போகுது அங்க எல்லாத்தையும் கரெக்டா செஞ்சு கொடுத்துட்டு வாங்க" என்று கூறினாள்.


லட்சுமணனும் ஆனந்தை பார்த்து "நாளை அண்ணன் வீட்டுக்கு வந்து விடுவான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனைத்தையும் செய்து முடித்து பேபியை வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம்" என்று கூறினான்.


ஆனந்தும் சரி என்று கூறிவிட்டு அனைவரிடமும் விடைபெற்று புதிதாக ரித்விகா தங்கியிருக்கும் இல்லம் நோக்கி சென்றான். அங்கு சென்று அவளுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்துவிட்டு அமைதியாக அங்குள்ள சோபாவில் ராகவன் அருகில் அமர்ந்தான். சரண்யா இருவருக்கும் குடிப்பதற்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.


ஆனந்த் சரண்யாவை பார்த்து "எங்கள் அனைவரையும் மன்னிச்சிடு மா இந்த மாதிரி நேரத்துல உன்னையும் போட்டு கஷ்டப்படுகிறோம்" என்று வருத்தமாக கூறினான்.


அதற்கு சரண்யா "எதுக்கு வருத்தப்படுவீங்க கொஞ்ச நாள் தானே எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை பழைய மாதிரி நாம எல்லாரும் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்" என்று மகிழ்ச்சியாக கூறினாள். ராகவன் அவள் கையில் இருந்த மற்றொரு ஜூசை வாங்கிக்கொண்டு "நான் போய் இருக்கு அவளுக்கு கொடுத்து வருகிறேன் நீ ரொம்ப மேல கீழ அலைய வேண்டாம்" என்று கூறி எடுத்து சென்றான்.


ஆனால் ரூமில் இருந்த ரித்விகா மனதில் "என்னால் அனைவரையும் விட்டு பிரிந்து இருக்க முடியுமா இவ்வளவு வருடம் அனைவரும் காட்டிய பாசத்தையும் அன்பையும் அனைவரும் சேர்ந்து செய்யும் சின்னச் சின்ன சேட்டைகளையும் விட்டு என்னால் இருக்க இயலுமா தவறாக முடிவு எடுத்துவிட்டு வந்து பிரிந்த வர நினைத்து இருக்கிறேனோ" என்று எண்ணி கலங்கி போய் அமர்ந்து இருந்தாள்.


அவளுக்கு ஜூஸ் கொடுக்க வந்த ராகவன் அவள் ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்து நிச்சயமாக வீட்டில் உள்ள அனைவரையும் நினைத்து தான் வருந்திக் கொண்டிருப்பாள் என்பதை புரிந்து கொண்டான். அதனால் எதுவும் பேசாமல் அமைதியாக கீழே இறங்கி சென்றுவிட்டான்.


அவன் அவளுக்கு ஜூஸ் கொடுக்காமல் வருவதை பார்த்த இருவரும் கேள்வியாக அவனைப் பார்த்தனர். அதை புரிந்து கொண்ட ராகவன் "மேடம் வீட்ல இருக்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணி பீல் பண்ணிட்டு இருக்காங்க அவள் அப்படியே விடுவதுதான் நல்லது அவளாகவே புரிந்து கொள்ளனும் அவர்கள் இல்லாமல் வாழ முடியாது என்பதை அதனால் நாம் நம்முடைய வேலையை பார்ப்போம்" என்று கூறினான்.


அன்றைய நாள் இவ்வாறு முடிந்தது. மறுநாள் ஆதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தான். அவன் வீட்டிற்கு வந்தபோது அவனுடைய தாத்தா மற்றும் மாமா தவிர அனைவரும் அந்த வீட்டில் இருந்தனர். ரித்விகாவிற்கு சரண்யாவை துணையாக வைத்துவிட்டு ராகவனும் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.


வீட்டிற்குள் வந்து சோபாவில் அமர்ந்த ஆதியை அவனுடைய அம்மா அத்தை சித்தி மட்டும் பாட்டி கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அனைவரையும் பார்த்து ஒரு புன்னகை சிந்திய ஆதி பொதுவாக "நான் அனைவரிடமும் ஒரு விஷயம் கூற வேண்டும் நான் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும் என்று நீங்கள் நம்பினால் நான் கூறுவதற்கு ஒத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினான்.


வயதில் மூத்தவரான சரஸ்வதி பாட்டி ஆதியை பார்த்து "நீ எடுக்கும் முடிவுகள் எதுவும் இதுவரை தவறாக போனதில்லை அதனால் இந்த முறையும் தவறாக போக வாய்ப்பு இல்லை ஆகையால் நீ எடுக்கும் முடிவுக்கு நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.


ஆதி அவரைப்பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு மற்ற அனைவரையும் பார்த்தான் அனைவரும் கூறியதை ஏற்றுக் கொள்வது போல் தலையசைத்தனர். அதைப் பார்த்தவன் அஜய் ரூபன் மற்றும் அஜித்தாவை அழைத்து பெரியவர்களின் முன்பு நிறுத்தினான். இவர்களை ஏன் தங்கள் முன்னாள் நிறுத்துகிறான் என்று புரியாமல் பார்த்த பெரியவர்கள் ஆதியை கேள்வியாக பார்த்தார்கள்.


அவர்களுடைய பார்வையைப் புரிந்துகொண்டு ஆதி வாயைத் திறப்பதற்கு முன் வாயை திறந்த லக்ஷ்மணன் ரூபன் மற்றும் அஜிதாவை ஒன்றாக நிற்க வைத்து "இவங்க இரண்டு பேரும் காதல் செய்கிறார்கள். அதுவும் நீங்கள் நினைக்கும் மாதிரி சாதாரண காதல் அல்ல ஒரு காவிய காதல் யாராலும் செய்ய முடியாத ஒரு அதிசய காதல் அதனால் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடுங்கள். அதேபோல் என்னுடைய மாமாவிற்கு சுட்டு போட்டாலும் காதல் என்பது வராது அதனால் நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கும் பெண்ணுடன் அவருக்கு திருமணம் முடித்து வைத்து விடுங்கள் இந்த இரண்டு திருமணமும் ஒரே நாளில் அதுவும் இன்னும் ஒரு மாதத்தில் நடக்க வேண்டும்" என்று கூறினான்.


அவன் கூறியது உண்மையா என்ற ரீதியில் பெரியவர்கள் ஆதியை பார்க்க அவன் "அவன் சொல்றதெல்லாம் உண்மைதான் நீங்க ஏற்கனவே அஜய்க்கு பொண்ணு பாத்து வைத்திருக்கிறீர்கள் என்று தெரியும். அதனால் மேற்கொண்டு பேசி இந்த திருமணத்தை முடித்து விடலாம் அதேபோல் இவர்கள் காதலுக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறி முடித்தான்.


இவர்கள் இப்படி இங்கே பேசிக் கொண்டிருக்க ரூபன் மற்றும் அஜய் லக்ஷ்மணனை கொலைவெறியில் முறைத்துக் கொண்டிருந்தனர் அதைப்பார்த்த லட்சுமணன் உண்மை சில நேரம் கசக்கத்தான் செய்யும் என்று கூறிக்கொண்டு அவர்கள் அடிக்க வருவதற்கு முன் தன்னுடைய இரண்டு தந்தைகளுக்கு நடுவில் சென்று அமர்ந்து விட்டான். அதைப் பார்த்து இவர்கள் இருவரும் சிரித்துவிட்டு பெரியவர்கள் பதிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.


ஸ்ரீ கிருஷ்ணன் அனைவரையும் பொதுவாக பார்த்துவிட்டு "நீ எடுக்கும் முடிவுக்கு நாங்கள் அனைவரும் ஒத்துக் கொள்கிறோம் ஆனால் எது செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் கவனமாக செய் நீ சொல்வது போல் நாங்கள் அஜய்க்கு பார்த்திருந்த பெண் வீட்டில் பேசி விடுகிறோம் அவர்களுக்கும் சம்மதம் என்றால் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.


ராகவன் மற்றும் ஆனந்த் சதீஷ் மூவரும் அனைத்தும் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தனர். லட்சுமணன் தந்தையிடமிருந்து தமயந்தியிடம் சென்று "அம்மா பொண்ணு பார்த்து இருக்கோம் பொண்ணு பார்த்து இருக்கோம் அப்படின்னு சொல்றீங்களே பெயர் கூட சொல்ல மாட்டேங்கறீங்க பாவம் பையன் ரொம்ப நேரமா அதை எப்படி கேட்க என்று தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கான் அதனால போட்டோ ஏதாவது இருந்தா கொஞ்சம் காட்டுங்க பார்ப்போம்" என்று கூறினான்.


அவளுடைய காதை செல்லமாக திருகிய ஜோதி "டேய் படவா அவன விட நீ ரொம்ப ஆர்வமா இருக்க போல" என்று கேட்டார்.
அதற்கு வலிப்பது போல் கத்திக்கொண்டே "ஆமா என்னோட மாமாக்கு கல்யாணம் யார் எனக்கு வரப்போற புது அக்கா என்று தெரிஞ்சுக்க வேண்டாமா" என்று கூறினான்.


அவனுடைய பேச்சில் சற்று இறுக்கம் தளர்ந்து அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். ஹரிகிருஷ்ணன் சிரித்துக்கொண்டே தன்னுடைய அலைபேசியில் இருந்த பெண்ணின் புகைப்படத்தை காட்டினார். அந்தப் புகைப்படத்தில் இருந்தது வேறு யாருமில்லை அஜிதாவின் உற்ற தோழி அனிதா. இருவரும் பள்ளி காலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். ஆனால் அனிதாவின் தந்தைக்கு வேலை மாற்றலாகி வேறு ஊருக்கு சென்றதால் அவர்களுடைய நட்பு பாதியிலேயே நின்றுவிட்டது ஆனால் என்றுமே அஜித்தா மனதில் பெரிதும் இடம்பிடித்த உண்மையான தோழி என்றால் அது அனிதாதான்.


அனிதா வீட்டிற்கு ஒரே பெண் அவளுக்கு சிறுவயது முதலே அஜய் என்றால் ஒரு பிரியம் இருந்து தான் இருந்தது வளர வளர அது என்ன என்று வரையறுக்க முடியாத பாசமாக மாறியது அதனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் அஜய் போட்டோவை காண்பித்து மாப்பிள்ளை என்று கூறியவுடன் மறைக்காமல் ஒத்துக் கொண்டாள்.


அனிதாவின் போட்டோவை பார்த்த அனைவருக்கும் ஒரு நிம்மதி இருந்தது ஏனென்றால் இனி தாங்கள் போட்டுவைத்து திட்டம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெறும் என்று உறுதியாக நம்பினார்கள். அஜிதா மிகவும் மகிழ்ந்து போனாள் பல வருடம் கழித்து தன்னுடைய தோழியே தன்னுடைய அண்ணியாக வரப் போகிறாள் என்று எண்ணி பூரித்துப் போனாள்.


ஆதி அனைத்தையும் கேட்டுவிட்டு தன்னுடைய தந்தையைப் பார்த்து "அப்பா அப்ப இன்னைக்கே போன் பண்ணி கேட்டு விடுங்கள் மற்றதை ஒவ்வொன்றாக பார்த்துக் கொள்ளலாம் தாத்தா மற்றும் மாமா ஏதாவது கேட்டார்கள் என்றால் நீங்கள்தான் சமாளித்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினான்.


அனைவரும் அவன் கூறியதற்கு சம்மதமாக தலையசைத்தனர் அஜிதா அனிதாவின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள். அங்கு சென்றவள் உடனடியாக அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள். அங்கிதா புதிதாக ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வரவே அதை அட்டன் செய்து காதில் வைத்தாள் அஜித்தா அனிதா என்று கத்தவே தன்னுடைய தோழி என்பதை புரிந்துகொண்ட அனிதா மகிழ்ச்சியாக அஜித்தா என்று கூறினாள்.


பின்பு இருவரும் தங்களுடைய பள்ளி காலம் முதல் கல்லூரியில் நடந்தவற்றை ஒவ்வொன்றாக கூறினார்கள். அஜிதா அனிதாவிடம் எதையும் மறைக்காமல் தான் செய்த வேலைகள் முதல் தற்போது அவர்கள் இவள் மேல் காட்டும் பாசம் மற்றும் ரூபன் உடனான காதல் வரை அனைத்தையும் கூறினாள். அஜிதா கூறியதைக் கேட்டு அனிதா தான் தன் தோழியுடன் இருந்திருந்தால் அவர் தவறான பாதையில் சென்று இருக்க மாட்டாள் என்று எண்ணி கலக்கம் அடைந்தாள். பின்பு தன்னை சரி செய்து கொண்டு இப்ப சந்தோஷமாக இருக்கிறாயா என்று கேட்டாள்.


பின்பு அஜித்தா "அனிதா நீதான் என் அண்ணன கல்யாணம் பண்ணிக்க போற அப்படி நீ இப்ப தான் தெரிஞ்சுது எங்களுக்கு ஒரு உதவி வேண்டும் அதை உன்னால் செய்ய முடியுமா" என்று கேட்டாள்.


அவள் என்ன கேட்கப் போகிறாள் என்று ஒரு நிமிடம் அனிதாவிற்கு தயக்கமாக இருந்தாலும் கண்டிப்பாக தன்னுடைய தோழி தவறாக ஏதும் கேட்க மாட்டாள் என்று எண்ணி "சரி என்ன ஹெல்ப் பண்ணனும் சொல்லு" என்று கூறினாள்.


அவள் கேட்டவுடன் அஜித்தா ஆதி மற்றும் ரித்விகா பிரிந்திருப்பது அவர்கள் சேர்த்து வைப்பதற்காக இந்த கல்யாணத்தில் தாங்கள் போடப்பட்டிருக்கும் திட்டம் என்று அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள் அதற்கு அவளுடைய உதவியும் வேண்டும் என்றாள்.


இப்படிப்பட்ட குடும்பத்தில் தான் வாழ போவதை நினைத்து மிகவும் மகிழ்ந்து போன அனிதா "கண்டிப்பாக உங்களுடைய திட்டத்திற்கு நான் உதவி செய்கிறேன் அதனால் கவலை படாதே நிச்சயமாக அவர்களை சேர்த்து வைத்து விடலாம்" என்று கூறினாள். அதன் பிறகு சிறிது நேரம் தோழிகள் தங்களுடைய கதைகளை விட்டுவிட்டு அலைபேசியை அணைத்தனர்.


பேசி முடித்து அஜித்தா கீழே இறங்கி வரும் நேரத்தில் ஹரிகிருஷ்ணன் ரூபன் வீட்டிலும் ஸ்ரீ கிருஷ்ணன் அனிதா வீட்டிலும் பேசி முடித்து இருந்தனர். அவர்களுடைய முகத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த சிறியவர்களிடம் இரண்டு பேர் வீட்டிலும் எந்தவித பிரச்சினையும் இல்லை அவர்கள் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். நீங்கள் நினைப்பது போல் சரியாக ஒரு மாதத்தில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் திருமணத்திற்கு முந்திய தினம் நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.


இதைக் கேட்ட அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள் ராகவனை பார்த்த ஆதி "நீ வீட்டுக்கு போய் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் அதற்கு முந்தைய நாள் நிச்சயம் எல்லாரும் கலந்துக்க போறாங்க அப்படின்னு சொல்லு ரித்விகா பொண்ணு யாரு என்னன்னு கேட்டா அதற்கு பதில் சொல் மற்றபடி அவள் கேட்காமல் எந்தவித பதிலையும் கூறாதே. அதேபோல் அவள் என்னை பற்றி கேட்க வாய்ப்பு இல்லை ஆனால் நீயாக ஏதாவது கூறுவாயா என்று எதிர்பார்ப்பாள் என்னை பற்றிய எந்த விஷயத்தையும் அவள் தெரிந்துகொள்ள அனுமதிக்காதே நான் நலமாக உள்ளேன் என்று அவளுக்கு தெரிந்தால் நிச்சயமாக நம்முடன் வந்து சேர அவள் விரும்பமாட்டாள். அவளுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாம் அனைவரும் குடும்பமாக அவளுக்காக இருக்கிறோம் என்பதை அவள் உணர வேண்டும். அவளும் நம் குடும்பத்தில் ஒருத்தி என்பதை அவள் மனதில் பதிய வைக்க வேண்டும். அதற்கு இந்த ஒருமாத காலம் அவசியம்" என்று கூறினான்.


ஆதி கூறியது அனைவருக்கும் சரியென படவே அனைவரும் சம்மதமாக தலையசைத்தனர். அடுத்து நடக்க வேண்டிய வேலைகளில் அனைவரும் மும்முரமாக இறங்க ஆரம்பித்தனர். அஜய் இடம் தொலைபேசி எண் வேண்டுமா என்று கேட்டதற்கு நான் திருமணத்திற்கு பிறகு பேசிக் கொள்கிறேன் என்று முடித்து விட்டான் அவன் இவ்வாறுதான் கூறுவான் என்பதை உணர்ந்த அனைவரும் எதுவும் பேசாமல் தங்களுடைய வேலைகளை பார்க்க சென்றனர்.


இப்படி இவர்கள் இங்கே இருக்க அங்கே ரித்விகா வெளியே சகஜமாக காட்டிக்கொண்டாலும் ஆதி இல்லாமல் மிகவும் துவண்டு போனாள். லக்ஷ்மணன் அவளை அழைக்கும் பேபி என்ற வார்த்தையை கேட்காமல் நொந்து கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு ஒரு விஷயம் புரிய ஆரம்பித்தது அவர்கள் அனைவரும் எவ்வளவு தூரத்திற்கு தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் இடம் பெற்றுள்ளார்கள் என்பதை உணர்ந்து கொண்டாள். ஆனால் பாலகிருஷ்ணன் தாத்தா கூறியது ஒருபுறம் அவளை குழப்பி விட்டது.


அவளுடைய குழப்பமான முகத்தை பார்த்த சரண்யா அது என்ன என்பதை உணர்ந்து கொண்டாலும் அவளாக கேட்கும்வரை எதுவும் கூற கூடாது என்று அனைவரும் கூறியிருந்ததால் அமைதியாக இருந்தாள்.


தாத்தா மிகவும் கோபமாக தன்னுடைய வீட்டில் அமர்ந்து இருந்தார் ஏனென்றால் அவரை லட்சுமணன் வெளியே போக சொல்லும்போது அவருடைய பிள்ளைகள் யாருமே எதிர்த்து பேசவில்லை என்பதை உணர்ந்து மிகவும் கோபமாக அமர்ந்து இருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த சிதம்பரத்திற்கு அவருடைய கோபமான முகத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது அவரிடம் பேச வாய் திறந்த நேரம் ஆதி வீட்டிற்கு சென்ற அனைவரும் வந்து சேர்ந்தனர்.


சரஸ்வதி பொதுவாக இருவரையும் பார்த்துவிட்டு "என்னுடைய பேரனுக்கும் பேத்திக்கும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் அதில் கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளலாம் இல்லை என்னை யாரும் மதிக்கவில்லை அதனால் நான் வர மாட்டேன் என்று எண்ணினால் வராமல் இருந்து விடுங்கள்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.


யாருக்கு திருமணம் என்று இருவரும் குழம்பி இருந்த நிலையில் ஜோதி "அஜய் மற்றும் ஆகிய இருவருக்கும் திருமணம் அஜய்க்கு பார்த்திருக்கும் பெண் அனிதா அஜிதா விற்கு ஆதியின் நண்பன் ரூபனை பேசி முடித்து விட்டோம். அதனால் இதற்குமேல் நீங்கள் எதுவும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் விருப்பமிருந்தால் திருமணம் அன்று வந்து வாழ்த்திவிட்டு செல்லுங்கள்" என்று கூறிவிட்டு தமயந்தி மற்றும் சந்திராவை அழைத்து கொண்டு சென்றுவிட்டார்.


பாலகிருஷ்ணன் தன்னிடம் ஒரு வார்த்தை கேட்காமல் இவர்கள் முடிவெடுப்பது ஒருபுறம் கோபம் என்றாலும் தன்னை அனைவரும் ஒதுக்கி வைக்கிறார்கள் என்று எண்ணி கவலையில் அமர்ந்தார். ஆனால் சிதம்பரம் தன்னுடைய பிள்ளைகளுக்கு தன்னிடம் எந்த ஒரு சம்பந்தமும் கேட்காமல் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று கொதிநிலைக்கு சென்றார். ஆனால் இப்போது ஏதாவது செய்தால் கண்டிப்பாக அது விபரீதமாக முடியும் என்பதை உணர்ந்து கொண்டவர். பொறுமையாக ஏதாவது செய்ய நினைத்தார்.


ஆனால் அவருக்கு ஒரு விஷயம் தெரியவில்லை ஆதியின் கண்பார்வையில் ஏற்கனவே அவர் வந்துவிட்டார் இனி அவர் ஏதாவது செய்ய நினைத்தாலே அதற்கான பலனை அவர் அனுபவிப்பார் என்பதை அறியாமல் போனது விதியின் செயல்.


அதன் பிறகு சிதம்பரம் தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார் தாத்தாவும் யாரிடமும் எதுவும் பேசாமல் தன்னுடைய அறைக்கு சென்று அமர்ந்துவிட்டார் மற்றவர்கள் இருவரையும் ஒரு பொருட்டாக எடுக்காமல் தங்களுடைய வேலைகளில் கவனமாக இருந்தனர்.
 
Top